Advertisement

நஞ்சினாலான அமுதன்!

3

சற்று நேரத்தில் தாத்தா மாமா வந்துவிட்டனர். வக்கீல் அப்படியே கிளம்பிவிட்டார்.

தாத்தா வந்தவர், ஏதும் யாரிடமும் பேசவில்லை.

ஷண்முகம் நேராக அறைக்கு சென்றுவிட்டார்.. “மீனாட்சி கிளம்பு மணியாச்சு” என கிளப்பினார்.

வீட்டில் எல்லோருக்கும் என்னவென புரியவில்லை. 

ஷண்முகமும் மீனாட்சியும் உண்பதற்காக வந்தனர். கோக்கிலா “ஏன் அண்ணா, இப்போவே கிளம்புற.. நைட் தான் போறேன்னு சொன்ன..” என்றார்.

ஷண்முகத்திற்கு கோவம்.. வருத்தம் எல்லாம் சேர்ந்து நின்றது “ம்.. நான் இல்ல ம்மா.. கிளம்புகிறேன். எனக்கு எல்லாவற்றையும் பார்க்கனும்ன்னு அவசியமில்லை. நான் நிறைய பார்த்துட்டேன். என்னால் இதுக்கு மேல முடியாது. நீ சாப்பாடு போடு.. டைம் ஆச்சு.. என் குடும்பத்தை நான்தானே பார்க்கணும்” என்றார், ஆவேசமாக.

அருணாசலம் “டேய் என்ன டா பேச்சு.. நீ கிளம்பரதாக இருந்தால் கிளம்பு. நீ சொல்லுவது போல என் குடும்பத்தை நான்தானே பார்க்கணும். பார்த்துக்கிறேன். நீ உன் குடும்பத்தை பாரு..” என்றார் ஒரே வார்த்தையில்.

கோக்கிலாவிற்கு என்னமோ போலானது “என்ன ப்பா, இப்படி எல்லாம் பேசுறீங்க. என்ன ஆச்சு.” என்றாள். சிவகாமியும் அப்படியே பார்த்தார் தன் கணவனை.

கோக்கிலா “என்ன ஆச்சு சண்முகம்.” என்றார்.

ஷண்முகம் “ம்.. என்ன என்னமோ சொல்றான் அந்த பைய, அவனோட நிலைக்கு நாமதான் காரணம்.. எப்படி நீங்க மட்டும் நிம்மதியா இருக்கலாம். நாங்கபடும் அவஸ்த்தை நீங்களும் படுனும்.. கோர்ட்டுக்கு வாங்க பேசிக்கலாம்ன்னு சொல்றான். அவன் சொத்துகளை கேட்க்கலை.. நம்ம நிம்மதியை கேட்க்கிறான். அதான் உண்மை.” என்றவர் இரண்டு வாய் உண்டார். பின் “அவன் கஷ்ட்டபட்டால்.. நானும் கஷ்ட்டபடனுமா.. கோக்கி. உன் அப்பாவும், வீட்டுக்கு வா.. பேசிக்கலாம்.. உன் அப்பா எப்படி இருக்கான்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கார். கட்டிக்கிட்டு போனவங்க இறந்துட்டாங்க போல.. நாம என்ன செய்ய முடியும்” என பேசிவிட்டு, மீண்டும் உண்டார்.

சிவகாமி பாட்டிக்கு அதிர்ச்சி “டேய்.. என்ன டா சொல்ற.” என்றார்.

ஷண்முகம் “அப்பாக்கும் ஒன்னும் புரியலை.. உனக்கும் ஒன்னும் புரியலை. அவனவன் செய்தது அவனவன் அனுபவிக்கிறான்” என பேச..

பாட்டிக்கு, தலையும் புரியலை வாலும் புரியலை, ஆனால், கணவனை பேசவும்.. கோவமானார் “டேய், நீ சாப்பிடு” என்றவர்.. மகன் அருகில் அமர்ந்திருந்தவர், இப்போது கணவரின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார். “என்னாச்சுங்க.. சொல்லுங்க” என்றார்.

அருணாசலம் மனையாளை கண்களால் அமைதிபடுத்தினார்.

அதன்பின் யாரும் பேசவில்லை. அவர்கள் உண்டு முடித்தனர்.

தாத்தா பாட்டி.. கிருபா மூவரும் உண்டனர்.

ஷண்முகம் “நாங்க கிளம்புகிறோம் அப்பா, நீங்க பார்த்துகோங்க” என்றவர்.. அம்மாவிடம் வந்தார் “ம்.. எல்லோரும் என்னை தனியாக்குறீங்க..” என்றார்.

சிவகாமி “டேய் என்ன ப்பா.. பொறுமையாக இரு. அப்பாகிட்ட பேசுறேன். நீ அவசரபடாத டா.. என்ன ஏதுன்னு எனக்கு புரியலை டா.. பேசிட்டு சொல்றேன். கோவமா இருக்காத.. குழந்தையை பார்த்துக்கோ” என்றார்.

மீனாட்சியும் விடைபெற்றார். தம்பதி கிளம்பினர்.

உண்டு முடித்த அருணாசலம் தாத்தா.. அறைக்கு சென்று படுத்துக் கொண்டார்.

என்னமோ ஒருமணி நேரத்தில் வீடு மீண்டும் 30வருடத்திற்கு முன் இருந்த நிலைக்கு போனது. என்னமோ கலவரமானது. அப்படிதான் சிவகாமிக்கு தோன்றியது. படுக்க முடியவில்லை அந்த வயதான பெண்மணியால்.

கிருபா பாட்டிக்கு கால் பிடித்து விட்டுக் கொண்டு.. பட்டாசாலையிலேயே அமர்ந்திருந்தாள்.

மாலையில் கிருபா கடைக்கு செல்லாமல்.. அமைதியாக தாத்தாவின் அருகே அமர்ந்தாள் “என்ன தாத்தா நடந்தது..” என்றாள்.

தாத்தா “காலையில்.. வந்தான் ம்மா ஈசன். பெயரை பாரேன்.. ஈசன்.” என்றார் ஒருநிமிடம் அமைதியாக.

மீண்டும் தாத்தாவே “எல்லோரும் நல்லா இல்லை.. நிம்மதியாகவும்  இல்லை. சங்கருக்கு உடம்பு முடியலை ம்மா.. லங்க்ஸ் கேன்சர்.”
என்றவர் அமைதியானார், பேசமுடியவில்லை தந்தையால்.

சிவகாமி பேத்தியிடம் என்ன என கேட்டு தெரிந்துக் கொண்டார். அன்னைக்கு மகனின் நிலை கேட்டதும் சற்று உடைந்துதான் போனார். அழுகையும் ஏமாற்றமும் வருத்தம் எல்லாம் சேர்ந்த நிலை.. பேச முடியவில்லை தொண்டையை அடைத்துக் கொண்டது. தண்ணீர் வாங்கி குடித்தார்.

தாத்தா “சிவா.. சிவகாமி.. தைரியமா இரு.. உன் பேரன் இதெல்லாம் சொல்லலை. அவன் வீட்டை கொடுங்கன்னு மட்டும்தாம் கேட்டான். வேறு பேசவேயில்லை.” என்றார்.

பின் அவரே தொடர்ந்தார் “அவன் கூடவே வந்த வக்கீல் சொன்னார். இப்போது, சங்கர்க்கு, யாரையும் அடையாளம் தெரியலையாம்.. அப்போ அப்போ.. அப்பா என்னை மன்னிச்சிடுங்க..ன்னு புல்ம்புகிறானாம். இன்னொரு விஷயம்.. சங்கரோடு பொண்டாட்டி இப்போ உயிரோட இல்லையாம்.. கொரொனோவில் இறந்துட்டாங்களாம்” என்றார்.

கோக்கிலா “கேட்கவே கொடுமையா இருக்கே அப்பா.. எங்கையோ சந்தோஷமா இருக்கான்னு நாம்மெல்லாம் நினைச்சிடிருந்தால்.. இப்படி அவஸ்த்தப்பட்டிருக்கான்.” என்றார்.

பாட்டி “ம்.. எல்லாத்திலும் அவசரம் அவனுக்கு.. எல்லோருக்கும் முன்னாடி வேலைக்கு போனான்… கிருபா பார்க்கிற கடையை அவன்தான் பார்ப்பான். எல்லோருக்கும் முன்னாடியே கல்யாணம் செய்துக் கொண்டான்.. இப்பவும் என்னமோ.. ஆண்டவா” என புலம்பினார்.

தாத்தா “சிவா.. நீ அமைதியா இரு..” என்றார்.

தாத்தா “இப்போதான் தெரிந்ததாம். ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டுதான் இருக்காங்கலாம். அஆ..னாலும் அவன் உடல்நிலை.. கொஞ்சம் கஷ்ட்டமாம்..” என்றார், தளர்ந்த குரலில்.

சிவகாமி அதிர்ந்து பேசமுடியாமல் அமர்ந்திருந்தார். 

தாத்தா “சங்கர், கடைசிக்காலத்தை.. நம்ம கூட.. இல்லை, ம்.. அவனை நாம மன்னிக்கலைன்னு புலம்புகிரானாம். அதாவது, சுயநினைவு இல்லாத போது.. அவனின் புலம்பல்கள் எல்லாம் இப்படிதான் இருக்காம். அப்போதான் ஷண்முகத்திற்கு போன் செய்து பேசியிருக்கானாம். ஆனால், சண்முகம் சரியாக பதில் சொல்லலையாம். அதான், எங்க அப்பா.. எதுக்கு கஷ்ட்டபடுனும்.. போகும் வேளையிலாவது நிம்மதியாக இருக்கட்டும்ன்னு, கேஸ் அப்படின்னு போட்டால்.. அவருக்கு உண்டான பாகம் கிடைக்கட்டும். ஏதாவது எப்போவது நினைவு வரும்போது.. இது உங்க ஊருப்பான்னு அவர்கிட்ட சொல்லனும்ன்னு.. ஆசை அவனுக்கு. அதான், அவன் பையனுக்கு ஆசையாம்.” என்றார். தளர்ந்த குரலில் எல்லாம் சொல்லி முடித்தார்.

கோக்கிலா “என்னப்பா.. அவனோடது.. நம்மோடதுன்னு சொல்லிகிட்டு,  இவ்வளவு நடக்குது.. முன்னமே தெரிந்திருந்தால்.. நாம போய் நின்னிருக்க போறோம். வாடான்னு சொல்லியிருக்க போறோம்” என்றார்.

தாத்தா “அதுதான் பிரச்சனை, சங்கர் பையனுக்கு.. அவனின் கஷ்ட்டத்தை சொல்ல இஷ்ட்டமில்லையாம். எங்களோட பாகத்தை கொடுங்க போதும்ன்னு கேட்க்கிறான். அதுக்குதான் கேஸ். அவன் அப்பாவின் மேல் நம்ம அனுதாபம் தேவையில்லாம். எங்களுக்கு உரிமையானதை கொடுங்க போதும்.. என்கிறான்” என்றார் தளர்ந்த குரலில்.

சிவகாமி ஏதும் பேசவில்லை புலம்பவில்லை.

தாத்தாவே “பேரனை வர சொல்லியிருக்கேன் வீட்டுக்கு. அவன் முடியான்னு கிளம்பிட்டான். வக்கீலிடம் நம்பர் வாங்கி வீட்டு விலாசம் அனுப்ப சொன்னேன் அதற்குதான் கோவம் பெரியவனுக்கு.” என்றார்.

மனதெல்லாம் ஓய்ந்து போனது எல்லோருக்கும். அடுத்து அடுத்து என சங்கரின் பேச்சுதான் வீட்டில்.. சிவகாமி மீண்டும் மீண்டும் எல்லாவற்றையும் நினைவு கூர்ந்தார். ‘நம்மகிட்ட வேலை செய்த பெண்.. வேறு ஆட்கள்.. உங்க தாத்தா அப்போ இருந்த மிடுக்கில்.. வீட்டுக்குள் சேர்க்கமாட்டேன்னு சொல்லிட்டார். அப்போ, யாருக்கும் கல்யாணம் ஆகலை.. உங்க அம்மாக்கூட.. கல்யாணம் ஆகலை. அவன் கல்யாணம் செய்துகிட்டு வந்து நின்னான். அதான் கோவம். எதோ கோவத்தில் பேச்சு.. வார்த்தையில்.. வெளியே போயிட்டான். நாங்களும் எதற்கும் கூப்பிடலை அவனை. அவனும் வந்து நிற்க்கலை.. சொந்தம் வேண்டும்ன்னு. என்னமோ வைராக்கியம் பாரேன்.. இருந்துட்டான். தனியா எவ்வளோ பெரிய பசங்க.. நல்லா இருந்திருக்கலாம்” என பேசி பேசி தீர்த்தார்.

மேலும் “ஏங்க, நாம.. பையனை பார்க்கணும்ங்க..” என்றார் சட்டென நினைவு வந்தனராக.

கோகிலா அன்னையை சமாதானம் செய்தார்.

ஆனாலும் சிவகாமி “இல்ல கோக்கிலா.. உங்க சொத்து சண்டையை நீங்க பார்த்துக்கோங்க.. நான் பையனை பார்க்கணும். என்ன அவஸ்த்தை படுகிறானோ.. நான் பார்க்கணும். நீங்க வரலைன்னாலும் பரவாயில்லை.. நான் போறேன். என் பையனை பார்க்கணும்” என்றார்.

தாத்தா “ம்.. பார்க்கணும் சிவா. போலாம். இப்படி முடியலைன்னு இருக்கும் போது.. நான் இருந்து என்ன உபயோகம் சொல்லு.. கிருபா கொஞ்சம் அந்த வக்கீல்கிட்ட பேசு டா.. நாம சென்னை வரணும்ன்னு பேசு. பையனை பார்த்துட்டு வந்திடுவோம்” என்றார்.

கோக்கிலா “அப்பா, ஷண்முகம் அப்பா” என்றார்.

அருணாசலம் “அவன்கிட்ட அப்புறம்தான் ம்மா.. பேசனும். முதலில் இவனைதானே நாம பார்க்கணும்.” என்றார்.

கிருபா “தாத்தா அவங்க வருவாங்கல்ல தாத்தா” என்றாள்.

தாத்தா “எங்க ம்மா.. மணி ஏழு, எங்க வர போறான். அவன் என் முகத்தை பார்க்கவே இல்லை. எங்க வரபோறான். நீ போன் செய்து பாருடா.” என்றார்.

சிவகாமியும் “கேளு கிருபா.. வந்துட்டு போக சொல்லும்மா..” என்றார்.

Advertisement