செவ்வானில் ஒரு முழு நிலவு 22

6245

நிலவு 22
பார்கவிக்காக காலேஜ் வாசலில் காத்திருந்தான் ஈகை. மாணவர்கள் தனித்தனியாகவும் கூட்டம் கூட்டமாகவும் வெளியேறிக் கொண்டிருந்தாலும் அவன் ஆசை மனைவியை மட்டும் காணவில்லை.
 
அவன் பார்கவிக்காக காத்திருப்பதை பார்த்து மாணவிகள் தங்களுக்குள் ஏதோ ரகசியமாக பேசி சிரித்தவாறு செல்ல ஈகையின் முகத்திலும் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
 
கொஞ்ச நாட்களேயானாலும் தினமும் ஈகை பார்கவியை காலேஜ் அழைத்து வருவதும், காலேஜிலிருந்து அழைத்து செல்வதும் அவர்கள் கண்ணில் விழுந்திருக்கும். வண்டியை நிறுத்தி அவள் இறங்குவதோடு இறங்கி ஆயிரம்முறை பத்திரம் சொல்லி அவள் பாதுகாப்பை உறுதி செய்து, கலைந்திருக்கும் அவள் கூந்தலை காதோரம் ஒதுக்கி விட்டு கொஞ்சம் காதல்மொழி பேசி வழியனுப்பி வைப்பவன் தானே! இவை எல்லாம் இந்த இளசுகளின் கண்ணில் விழாமலையா போய் இருக்கும். தூரத்தே! பார்கவி வரும் பொழுது அவளையே! ஆசையாக பார்த்திருக்கும் கண்களுக்கு இவர்களையெல்லாம் கவனிக்க எங்கே! நேரம் இருக்கின்றன. இன்று பார்கவி இல்லாததால் இவர்களின் பார்வைகளின் அர்த்தங்கள் புரிகின்றன.  
 
நேரம்தான் கடந்ததே! தவிர பார்கவி வெளியே! வந்த பாடில்லை. இறுதியாண்டு என்பதால் ஏதும் ப்ரொஜெக்ட் செய்ய வேண்டி இருக்குமோ! இருந்தால் சொல்லி இருப்பாளே! ஒரு அலைபேசியை வாங்கி அவள் கையில் கொடுக்காத தன்னை நொந்துகொண்டான் ஈகை.
 
எங்கே சென்றாலும் அவனுடனே! செல்வதால் அலைபேசி அவளுக்கு தேவைப்படாது என்று எண்ணினான். காலேஜில் இருந்து அழைத்திருக்க முடியும் தானே! அவள் மறுக்க மறுக்க “நல்லா வாங்கி சாப்பிடு வயித்த காய போடாதே! பட்டு” என்று தினமும் காசு கொடுத்துதான் காலேஜ் உள்ளேயே அனுப்புவான். அப்படியிருக்க அவள் அழைத்து பேசவில்லையென்றால் என்ன காரணம்? யோசிக்க இது நேரம் இல்லை உடனே காலேஜினுள் நுழைந்தான் ஈகை.
 
அவள் வகுப்பறை வெறிச்சோடி கிடக்க, வேக எட்டுக்களை முதல்வர் அறையை நோக்கி வைத்தான். இவனைக் கண்டு அவர் வரவேற்கும் விதமாக புன்னகைத்தவர் “பார்கவி அப்பொழுதே! வீட்டுக்கு போய்ட்டாங்களே!” என்று கூறினார்.
 
கல்யாணமான கையேடு பார்கவியை அழைத்துக்கொண்டு சென்று முதல்வரோடு அறிமுகப்படலத்தை நடத்திக்கொண்டிருந்தான் ஈகை. மருதநாயகத்தின் பேத்தி என்பதனால்
ஒன்றும் பார்கவி யாரோ ஒரு ஆடவனோடு போகிறாள், வருகிறாள் என்று கதை காட்டாமல் விட்டுவிடமாட்டார்கள். மாதேஷை அனைவருக்கும் தெரியும் அதானல் பிரச்சினை எழவில்லை. அவள் கணவன் ஈகை என்பதை சொல்ல வேண்டிய இடத்தில் சொன்னால் போதும் மொத்த காலேஜிக்கும் தெரிந்து விடும் என்று தான் இந்த சந்திப்பு. 
 
“எத்தனை மணிக்கு போனா?” உடம்புக்கு ஏதும் முடியவில்லையோ! தன்னை ஏன் அழைக்கவில்லை என்ற கோபம் வேறு எட்டிப்பார்த்தது.
 
“இப்போ ஒரு முக்கா மணித்தியாலம் இருக்கும். மிஸ்டர் மருதநாயகம் வேற வந்திருந்தார். பேத்தியை பார்க்கணும் பேசணும்னு சொன்னாரு அதுக்கு பிறகுதான் கிளம்பி போனாங்க” முதல்வர் சொல்ல சொல்ல புருவம் நீவினான் ஈகை.
 
மருதநாயகம் காலேஜினுள் வரமாட்டார் என்று எண்ணியது தப்பாகி விட்டது. வந்தவர் பார்கவியை மிரட்டி இருக்கக் கூடும் அதற்குப் பயந்தவள் வீட்டுக்கு சென்றிருப்பாள் என்றெண்ணியவனாக ஈகை உடனே! வீட்டுக்கு கிளம்பினான்.
 
 “பஸ்ஸில் சென்றாளோ! ஆட்டோ பிடித்து சென்றாளோ! என்ன மனநிலையில் வீடு போய் சேர்ந்தாளோ! ஓழுங்கா சாப்பிட்டிருக்கமாட்டாள். அழுது கரைந்து யாரிடமும் பேசாது ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள். தான் சென்றதும் அவளே! சமாதானமாகி காபி எடுத்துக்கொண்டு வருவாள்.
 
“போதும் பட்டு. எப்போ அந்த ஆள் இவ்வளவு தூரத்துக்கு போனானோ! இனி உன்கிட்ட உண்மைய மறைக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்லை. விசாலாட்சி அம்மா எப்போ கிடைப்பங்களோ! தெரியாது. கண்டிப்பா அவங்கள கண்டுபிடிப்பேன். இன்னைக்கி உன்கிட்ட உண்மைய சொல்லிடுறேன். நம்புறதும், நம்பாததும் உன் இஷ்டம். அவங்க சொல்லுறப்போ நீ நம்பித்தானே! ஆகணும்” மனதோடு பேசியவாறு வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான் ஈகை.
 
வண்டியை கிளப்பிக் கொண்டிருந்தவனுக்கு அலைபேசி அழைப்பு வரவும் பார்கவிதான் அழைகிறாளோ! என்ற எண்ணத்தில் வந்த எண்ணையும் கவனத்தில்கொள்ளாது இயக்கி காதில் வைக்க, மறுமுனையில் கூறப்பட்ட செய்தி சந்தோசத்தோடு நிம்மதியையும் சேர்த்துக் கொடுத்தது.
 
மருதநாயகத்தின் அலைபேசியை டேப் செய்ய சொல்லி இருக்க கடைசியாக அவர் அழைத்தது சென்னையில் உள்ள ஒரு அலைபேசிக்கு என்று வரவும் அதை பற்றி தேடிப்பார்த்ததில் அந்த வீட்டில் ஒரு செவிலிப் பெண்ணும், விசாலாட்சியும் இருப்பது உறுதியானதென்று ஜெய் தான் அழைத்துக் கூறி இருந்தான்.
 
 
விசாலட்சியை மீட்க போலீஸ் சென்றுள்ளதாகவும், அவரை ஒரு சிறந்த மருத்துவமனையில் சேர்த்து போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் மேலும் கூற தான் பார்கவியிடம் தற்பொழுது உண்மையை சொல்ல எடுத்த முடிவு சரிதான் என்ற மகிழ்ச்சியிலையே! வீடு நோக்கி வண்டியை வேகமாக செலுத்தினான் ஈகை.
 
வண்டியை நிறுத்தி இறங்கியவன் ஓடாத குறையாக வீட்டுக்குள் வர அவன் வேகம் கண்டு வேலையாள் ஒருவர் “அம்மணி மேல இருக்காங்க” என்று கூற படிகளில் தாவி ஏறலானான்.
 
ஆசை மனைவியை காண ஆசையாசையாக ஓடி வந்தவன் கண்டது அவள் எதையோ! அலுமாரியில் குடைந்து தேடிக்கொண்டிருப்பதைத்தான். காலேஜிலிருந்து வந்ததும் வராததுமாக அப்படி என்ன தேடிக்கிட்டு இருக்கிறாள் என்று யோசித்தவனின் மூளையில் பொறி தட்டியது.
 
அறையில் லாக்கர் ஏதும் இருக்குமா? என்று தேடியவள் இல்லாது போகவே! எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு தேடியதில் பொருட்கள் தாறுமாறாக சிதறிக்கிடந்தன. அதை பார்த்த பின்னும் அவள் பதட்டமாக தேடிக்கொண்டிருப்பது என்னவென்று அறியாமல் இருக்க ஈகை ஒன்றும் முட்டாளில்லையே!
 
மருதநாயகம் மிரட்டிய மிரட்டலில் நிலப்பத்திரத்தைத்தான் அவள் தேடிக்கொண்டு இருக்கிறாள் என்று அவனுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்தது. அவன் மீது அவளுக்கு கொஞ்சமேனும் நம்பிக்கை இல்லையா? என்ற ஆற்றாமை வேறு வந்தது. அவள் கவலையை துடைத்தெறிய அவள் நிழலுக்குப் பின்னால் இவன் வேலை பார்த்துக்கொண்டிருந்தால்
இவன் முதுகில் குத்தும் வேலையை இவள் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
 
ஈகை ஒன்றும் சாதாரணமானவன் இல்லையே! அவன் பண பலமும் ஆள் பலமும் அவள் கண்களில் தெரிவது தானே! கல்யாணம் செய்த நாள் முதல் மருதநாயகம் அவளை நெருங்க விடாமல் தானே! பார்த்துக்கொண்டான். ஒருநாள் அவன் கண்ணை மறைத்து மிரட்டியதும் கணவனுக்கு துரோகம் இளைக்க துணிந்து விட்டாளே! 
 
ஈகையால் கோபத்தைக் கட்டுப்படுத்தவே! முடியவில்லை. மருதநாயகம் என்ன சொல்லி மிரட்டி இருப்பார். என்ன செய்து இருப்பார் என்று யோசிக்க தவறினான்.
 
“நீ தேடுறது இந்த ரூம்ல இல்ல” திடுக்கிட்டு திரும்பினாள் பார்கவி. கதவை சாத்திவிட்டு அதன் மேல் சாய்ந்தும் சாயாதவாறும் ஒரு தோற்றம். கையை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு கால்களை அகல விரித்து அவன் நின்ற தோற்றமே! சொன்னது அவன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கின்றான் என்று.
 
“ஏன் இந்த வீட்டுலயே! இல்ல” குரல் என்னவோ! மெதுவாகத்தான் ஒலித்தது. ஆனால் பார்கவிக்கு அது அறை முழுவதும் எதிரொலித்து போல் ஒரு மாயை தோன்ற
 
பதட்டமடைந்தவள் “நான் என்ன தேடினேன்” என்று கணவனையே! கேட்டாள்.
 
“உனக்காக நான் காலேஜ் வாசலில் காத்திருந்தால் நீ நேரங்காலத்தோடு வீட்டுக்கு வந்திருக்க, அதுவும் எனக்கு சொல்லாம. ஏன் சொல்லாம வந்த? இது என் முதல் கேள்வி. வந்ததும் வராததுமா அலுமாரில என்ன தேடுற? இது என் ரெண்டாவது கேள்வி?” பேசியவாறே அவள் புறம் எட்டுக்களை எடுத்துவைக்க பார்கவியின் முதுகுத்தண்டு சில்லிட்டது.
 
ஈகை கோபத்தில் சிவந்திருந்தான். இரும்பு சூடானால் ஜொலிக்கும் தங்க நிறம் போல அவன் முகம் தகதகத்தது. நெருங்கினால்
அடித்திட்டுவிடுவான் போல் அவன் தோற்றம். பார்கவியின் கால்கள் தானாக பின்னடைய சுவற்றில் மோதி நின்றவளின் மேலண்ணம் ஒட்டிக்கொண்டு பேச்சு வருமா என்று அவளை படுத்தியது.
 
“ஏன் டி இப்படி பண்ணின? உனக்கு என்மேல அவ்வளவு நம்பிக்கை இல்லையா? அந்தாளு நிலப்பத்திரத்தை கேட்டான்னா என்கிட்ட வந்து சொல்லி இருக்கணுமா? இல்லையா?” ஈகையின் கடைசி வாக்கியத்தில் பார்கவி அதிர்ச்சியின் உச்சத்துக்கே செல்ல நா வறண்டு, உதடுகள் காய்ந்து போனதில் பதில் கூற முடியாமல் அவனையே! பாத்திருந்தாள்.
 
அவள் கன்னத்தை ஒற்றைக்கையால் இறுக்கிப் பிடித்தவன் “அந்த ஹரிஹரன் உன்னைக் கடத்திக் கல்யாணம் பண்ண பார்த்தானே! அப்போ உன்ன காப்பாத்தி மட்டும் விட்டிருக்கலாம். உன்ன கல்யாணம் பண்ணி அந்த மருதநாயகமும் அவன் பெத்த புத்திரர்களும் உன்ன நெருங்காம பார்த்துக்கிட்டதுக்கு இதுதான் நீ எனக்கு பண்ணுறதா?” அவன் கோபம் முழுவதையும் கையை இறுக்கி அவள் கன்னத்தில் காட்ட அவள் உப்பிய கன்னங்களில் உள்ள சதைபற்று அவன் விரல் தடங்களை ஆழமாக பதிந்துக்கொண்டிக்க வலியால் துடித்தாள் பார்கவி.
 
அவன் கையை பிடித்தவளின் சிந்தனை “நான் மருதநாயகத்தின் பேத்தி இல்லேனு இவருக்கு ஏற்கனவே! தெரியுமோ? எப்படித் தெரியும்? ஏன் சொல்லலே” வலியையும் மீறி நெஞ்சுக்குள் இதமாக நிம்மதி பரவ “ம்மா… ம்மா…” என்று முனக
 
அவள் கன்னத்திலிருந்து கையை எடுத்தவன் “உன் அம்மா நல்லா இருக்காங்க. அவங்கள காப்பாத்த போலீஸ் போய் இருக்கு” என்றதும்தான் தாமதம் பொலபொலவென அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. இத்தனை நாள் நெஞ்சில் இருந்த பாரமெல்லாம் நீங்கியவளாக கதறியழலானாள்.
 
பார்கவியின் வலது கன்னத்தில் ஈகையின் வலதுகை பெருவிரலின் தடமும் இடது கன்னத்தில் மற்ற நான்கு விரல்களின் தடங்கலும் அழகாக பதிந்திருக்க தன்னையே! நொந்துகொண்டவன் அவளை ஆறுதல் படுத்தவும் தோன்றாமல் பார்வையை மறுபுறம் திருப்பிக்கொண்டான்.
 
“என்ன மன்னிச்சிடுங்கோ! ரெண்டு நாள்ல நிலப்பத்திரத்தை கொண்டு வந்து தரலைனா… அம்மாவ கொன்னுடுறதா சொன்னார். நேக்கு வேறு வழி தெரியல. நான் உங்களுக்கு துரோகம் செஞ்சிட்டேன். நான் உங்களுக்கு வேணாம். என்ன விட்டுடுங்கோ. நா எங்க அம்மா கூடவே! போயிடுறேன்”
 
அதில் சட்டென்று திரும்பி அவளை தீர்க்கமாக பார்த்தவன் “அவ்வளவு சீக்கிரத்தில் உன்னை விட்டுவிடுவேனா? உன்னை இழக்கத்தான் உன்னை கல்யாணம் செய்துகொண்டேனா? என் கண்ணுக்குள்ளையே வச்சி பாத்துக்கிட்டேனா? என்னோட காதலை தக்க வைத்துக் கொள்ள எனக்குத் தெரியும் என்று அவளது கண்களுக்குள் ஊடுருவி ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தான்.
 
தான் எந்த துரோகத்தை தன் கணவனுக்கு செய்து விடக்கூடாதென்று பார்கவி அஞ்சினாளோ அதை செய்துவிட துணிந்து விட்டாள். அதை அவன் பார்த்தும் விட்டான் இனி அவன் தன்னை மன்னிக்கவே! மாட்டான் என்று அவ்வாறு பேச, அதுவரை அழுது கொண்டு இருந்தவளுக்கு அவனது இந்தப் பார்வை ஏன் என்று தெரியாத நடுக்கத்தை உண்டு செய்து, அவளது முதுகுத்தண்டில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது.
 
அவனது சீற்றம் மிகுந்த கண்களை பார்க்க அச்சம் கொண்டு பார்வையை விலக்க வேண்டும் என்று நினைத்தாள். அவளால் நினைக்க மட்டுமே! முடிந்தது. ஆனால் அவனது பார்வை அவளது கண்களை கட்டிப்போட்டு ஆழ்கடலில் அவளை தள்ளி மூச்சிற்கு தத்தளிக்கும் ஒரு உணர்வை அதிகமான ஒரு வித அச்சத்தையே! கொடுக்க, அவன் அவளை காதலிக்கிறான் என்று சொன்னது அவள் கருத்தில் பதியாமளையே! போனது.
 
ஒரு சில வினாடிகள் நீடித்த இந்த பார்வை பொய்யோ என்று நினைக்கும் அளவுக்கு சட்டென்று அவனது முகம் சாந்தமாக மாறி புன்னகையை தத்தெடுத்தது. இமை தட்டி விழித்தவளின் கண்ணீர் சுத்தமாக நின்று போய் இருக்க தன் விரல் தடங்கல் பதிந்த அவள் குண்டுக்கு கன்னங்களை வருடி விட்டவன் வன்மையாக அவள் இதழ்களை சுவைக்கலானான். 
 
மூச்சுக்கு காற்றுக்கு அவள் ஏங்கும் போது விடுவித்தவன் “என்ன விட்டு போக நினைப்பியா? பட்டு நான் இல்லாம இருந்திடுவியா?” என்று குழைந்து கேக்க 
 
“முடியாதே!” எனும் விதமாக தலையசைத்து மறுத்தவள் “நீங்க என்ன மன்னிச்சிட்டேளா?” என்று கண்ணில் சிறு பயத்தோடு கேட்டாள்.
 
தாடையை தடவி யோசித்தவன் “தண்டனை கொடுக்கலாம்னு இருக்கேன். இதோ இப்போ கொடுத்தேனே! அது மாதிரி”
 
அவன் என்ன சொல்கிறான் என்று பயந்தவள் அவன் இறுதியாக சொன்னதில் வெட்கம்வர அவன் நெஞ்சிலையே சாய்ந்து கொண்டாள். 
 
அவள் தலையில் தாடைப்பதித்து “சாரி பட்டு தப்பு என் மேலதான் உன் அம்மாவ கண்டு பிடிச்ச பிறகு உன்கிட்ட உண்மைய சொல்லலாம்னு இருந்துட்டேன். அப்போவே! நீ மருதநாயகத்தோட பேத்தி இல்லங்குற விஷயம் எனக்கு தெரியும்னு சொல்லி இருந்தா நீ அந்தாள் மிரட்டலுக்கெல்லாம் பயந்திருக்க மாட்டல்ல” கனிவான குரலில் கூற
 
“சொல்லி இருந்தா நானே! என்ன காட்டிக் கொடுத்தெருப்பேன். பயத்துல உளறி. அவருக்கு எல்லாம் தெரியும். இருங்கோ அவர்கிட்ட சொல்லிடுறேன்னு சொல்லி இருப்பேன். நல்ல வேல நீங்க சொல்லலே” கணவனின் முகம் பார்த்து சொன்னவள் சிரிக்க மறுகணம் வலியால் “ஆ” என்று கத்தினாள்.
 
“என்ன பட்டு என்னாச்சு? ஈகை பதற
 
அவனை முறைத்தவள் “இப்படியா? கன்னத்தை பிடிப்பீங்க வலிக்குது” தடவியவாறே சொல்ல
 
சத்தமாக சிரித்தவன் “கோபம் வந்திருச்சு பட்டு. இனிமேல் நீ என்ன பண்ணாலும் உன்மேல கோபப்பட மாட்டேன் சரியா?” என்றவன் உதடுகளால் வலியை போக்கலானான்.
 
சிணுங்கியவாறே “உங்களுக்கு எப்படி தெரியும்? எப்படி கண்டு பிடிச்சீங்க?”
 
“ஹாஹாஹா அத நான் உன்கிட்ட எப்படி சொல்லுவேன்” என்று இழுக்க…
 
“விளையாடம சொல்லுங்கோளேன்”
 
“அதுவாடி பட்டு” அவள் கன்னத்தில் உதடுகளால் கோலம் போட்டவாறே! “அவனுங்க அலப்பரைனால எனக்கு சந்தேகம் வந்தது. உடனே! டிடெக்டிவ் வச்சி விசாரிச்சேன். உன்ன பத்தி எல்லாம் கண்டு பிடிச்சேன். உங்கம்மாவ எங்க வச்சிருக்காங்கன்னு தெரியல. அதனால உன்கிட்ட சொல்லவும் முடியல. அவனுக உன்கிட்ட நெருங்காம பாத்துக்கிட்டேன்”
 
“நீங்க என்கிட்டே சொல்லியிருக்கலாமோ என்னோ!” என்றவள் விசாலாட்சியை அனுமதித்த மருத்துவமனையின் பெயரை கூற
 
“உன்ன அவங்க கைபிடில வச்சிக்க உங்கம்மாவ அந்த ஆஸ்பிடல்ல இருந்து டிஸ்டாஜ் பண்ணி, வீடெடுத்து தங்க வச்சி, ஒரு பொம்பளைய கூட வச்சி இருக்கானுங்க”
 
அதிர்ச்சியாக கணவன் முகம் பார்த்து நின்றவள் “அதான் இன்னைக்கி போன்ல பேசினது அந்த நர்ஸ் இல்லயோன்னு தோணிருத்து” 
 
“இப்போ உங்கம்மாவ மீட்டாச்சு. அந்த பொம்பளையையும் போலீஸ் கைது பண்ணி விசாரிப்பாங்க. பார்க்கலாம்”
 
“ஏங்க நான் ஒன்னு சொன்னா கேப்பீங்களா?”
 
“சொல்லு பட்டு”
 
“நாம இங்க இருக்க வேணாங்க. நம்ம வீட்டுக்கு போய்டலாம்”
 
இது மருதநாயகத்தின் வீடு ஈகை விருந்தாளியாக தங்கி இருப்பதாக நினைத்து பார்கவி பேச
 
அவள் நம்ம வீடு என்று சொன்னதில் புன்னகைத்தவன் “போக வேண்டியது நாம இல்ல பட்டு ரோஜா. அவனுங்கதான். இது உனக்கும் எனக்கும் சொந்தமான வீடு”
 
என்ன சொல்கிறார் இவர் என்று  பார்கவி பார்க்க,
 
“நீ எந்த நிலப்பத்திரத்தை எடுத்து அவனுங்களுக்கு கொடுக்கணும்னு நினைச்சியோ! அது உன் அம்மாவோடது. உனக்கு சேர வேண்டியது”
 
“அம்மா…. எப்படி….” பார்கவி புரியாது குழம்ப
 
 
“நான் சொல்லுறத கேட்டு ஷாக் ஆகாத “உன்ன பெத்தவங்க கண்டிப்பா விசாலாட்சி அம்மாவா இருக்க முடியாது. நீ என் அத்த ஜானகி பொண்ணு”
 
 
“என்ன உளறுறீங்க?”
 
“நான் உளறல பட்டு. என் அப்பாக்கூட பொறந்த அக்காதான் ஜானகி. அவங்க பொறந்து ஏழு வருஷம் கழிச்சுத்தான் அப்பா பொறந்திருக்காரு. அதுக்கு நடுவுல பாட்டிக்கு நிறைய அபார்சன் ஆகியிருக்கு, குழந்தைகள் இறந்தும் பிறந்திருக்கு. அந்த காலத்துல இதெல்லாம் சாதாரணம் என்று விட்டுட்டாங்க. ஆனா அவங்களுக்கு கற்பபைல கேன்சர் இருந்திருக்கும்னு தோணுது. அப்பா கிடைச்ச உடனே! பாட்டி இறந்துட்டாங்க”
 
பார்கவியின் மேனியில் மெலிதான நடுக்கம் தோன்ற அவளை அனைத்துக்கொண்டவன். “விதி எப்படியோ! அப்படித்தானே! பட்டு நடக்கும்”
 
“நான்… நான்…. உங்க அத்த பொண்ணுன்னு எப்படி சொல்லுறீங்க”
 
“எல்லாம் உன் கழுத்தடில இருக்குற மச்சத்தை வச்சுதான்” என்றவன் அவள் கூந்தலை ஒதுக்கி அந்த மச்சத்தை வருடியவாறே பேசலானான். உன்ன நான் பாத்தப்போ உனக்கு ரெண்டு வயசு இருக்கும். பொம்மை மாதிரி கொழுகொழுனு இருந்த. எனக்கு எட்டு வயசு. மதுரைல மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு போயிருந்தப்போதான் உங்க குடும்பத்தை சந்திச்சோம். அப்போ அப்பா யாரையோ அக்கானு அழைச்சி அழுத்துட்டாரு. என்ன பேசினாங்க ஒன்னும் எனக்கு சரியா நியாபகம் இல்ல. ஆனா உன்ன மட்டும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. ரெண்டு நாள் அங்க உன் வீட்டுலதான் இருந்தேன். உன் கூட விளையாடினேன். சோறூடினேன். பாட்டு பாடி தூங்க வச்சேன். ட்ரெஸ்ஸு கூட மாத்தி விட்டுருக்கேன்” கண்ணில் காட்சிகள் ஓட ஈகை அவர்களின் அந்த இரண்டு நாள் கதையை சுவாரசியமாக சொல்லிக்கொண்டிருந்தான்.
 
“ஐயோ…” அவன் நெஞ்சிலையே! முகம் புதைத்துக்கொண்டாள் பார்கவி.
 
“என்ன பட்டு வெக்கம் வருதா…” அவளை அணைத்துக்கொள்ள
 
“ஆமா மச்சத்தை வச்சிதான் என்ன கண்டு பிடிச்சேளா?”
 
 
“உன் மச்சம் மட்டுமில்ல உன் பேரும்தான். அப்பா அம்மா மட்டுமில்ல உனக்கு ஒரு அக்காவும் இருந்தாங்க. அவங்களுக்கு அப்போ பதிமூணு வயசு. அவங்கதான் உன்ன பாத்துகிட்டாங்க. எனக்கும் அவங்களும் அந்த ரெண்டு நாளா செம சண்டை. அவங்க என் தங்கச்சிய எதுக்கு நீ தூக்குற உன் அம்மாகிட்ட சொல்லி தங்கச்சி பாப்பா கொண்டுவர சொல்லுன்னு சொல்ல, நான் எனக்கு நீதான் வேணும்னு அழ, அப்போ அம்மா அவ பெரியவளானா எங்க வீட்டுக்கே கூட்டிட்டு போலாம்டா கண்ணானு சொன்னாங்க. அப்போ அந்த அர்த்தம் புரியல. நீ யார்னு தெரிஞ்சதும் உடனே! உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆல்ரெடி நாம நம்ம வீட்டுலதான் இருக்கோம்” என்றவன் அவளை இறுக அணைத்திருக்க, அந்த அணைப்பே சொன்னது அவள் கிடைத்தது அவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்று. 
 
“அப்பா அம்மா எல்லாம் எங்க? நா எப்படி இந்த அம்மா அப்பாகிட்ட வந்து சேர்ந்தேன்” என்னமோ ஈகைக்கு எல்லா பதிலும் தெரியும் போல் அவனையே கேள்வி கேட்கலானாள் பார்கவி.
 
சொல்லலாமா வேண்டாமா என்று ஒருகணம் யோசித்தவன் சொல்லித்தானே! ஆகணும் என்ற முடிவில் “நான் கொஞ்சம் வளர்ந்ததும் உங்க குடும்பத்தை தேட ஆரம்பிச்சேன். ஆனா…. உங்க குடும்பத்தையே! யாரோ படுகொலை செஞ்சதா தான் நியூஸ் கிடைச்சது. ரொம்ப மனசோடஞ்சி போய்ட்டேன் பட்டு” குரலில் வேதனை வழிந்தது.
 
கணவனின் கையை ஆறுதலாக பிடித்துக்கொண்டவள் நியாபக அடுக்கில் இல்லாத பெற்றோருக்காகவும், அக்காவுக்காகவும் வருந்தினாள்.
 
“நீ எப்படி? எப்போ? விசாலாட்சி அம்மாகிட்ட வந்து சேர்ந்தனு அவங்க சொன்னாதான் தெரியும். உன் பேர் பார்கவி அத விசாலாட்சி அம்மா மாத்தல அப்படினா… உங்க குடும்பத்தை தெரிஞ்சிருக்கணும்னு எனக்கு தோணுது. கண்டிப்பாக உன் குடும்பத்தை கொன்னதும் இவனுங்க வேலையாக இருக்கும்னு எனக்கு சந்தேகமாக இருக்கு பட்டு. போலீஸ் கம்பளைண்ட் கொடுத்திருக்கேன். அந்த நாளையோ! அதுக்கு முன்னதாகவோ! இவனுங்க ஊருல்ல இருந்தானுங்களானு விசாரிக்கணும். இவனுங்க மட்டும் அன்னைக்கி ஊருல இல்லாம இருக்கட்டும் அன்னை இருக்கு இவனுங்களுக்கு கச்சேரி” ஈகை கண்கள் சிவக்க கூற
 
“ஊருல இருந்துகிட்டே….” பார்கவி முடிக்கவில்லை.
 
 
“இல்ல. எது பண்ணாலும் இவனுங்களே! இறங்கித்தான் பண்ணுவானுங்க. அருவாளால வெட்டி இருக்குறதாலதான் சொல்லுறேன். என் குடும்பத்தை அப்படி கொல்ல முடியல. சந்தேகம் வரும்னு ஆக்சிடன் பண்ணி முடிச்சிட்டான்” பார்கவியின் உடல் வெளிப்படையாகவே! நடுங்க
 
“நீ அந்தாள் பேத்தி இல்லனு சொன்னா? உன்ன கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் என்னனு காரணம் கேப்ப? உண்மையான காரணத்தை கூற வேண்டி இருக்கும். விசாலாட்சி அம்மா கூட இருந்தாதான் நீ நம்பியோனு எனக்குள்ள ஒரு தடுமாற்றம்”
 
“அதான் சொன்னீங்களே! உங்களுக்கு என்ன பிடிச்சிருக்குனு. அது போதாதா?”
 
“அப்படியா?” என்று குறும்பாக சிரித்தான் ஈகை.
 
அந்த நேரம் காயத்திரி அழைக்கவும் மனைவியை அணைத்திருந்த கையை விலக்காது அலைபேசியை உயிர்ப்பிக்க மறுமுனையில் காயத்திரி அழுது கரையவும் தயாளனை தேடி ஓடினான் ஈகை.