சித்திரை செல்வியே உணவை பரிமாறிட பொன்னுசாமியும் மரகதமும் செண்பகவல்லி ஆச்சியுடன் வந்தனர். 

“ஏன்யா வரேன்னு சொல்லவே இல்லை…. இப்படி திடுதிப்பென்று வந்து நிற்கிறிங்க… அண்ணி.. இதுல நாட்டுக் கோழி கொழம்பும், எறால் தொக்கும், கறிரசமும் இருக்கு அதுல வறுவல் இருக்கு எடுத்து வைங்க… தினகர் நல்லா இருக்கானாப்பா… இந்த கடுத்தம்  (முறை) லீவு கெடைக்கலைன்னுட்டான்”என்றார்.  

“இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு லீவு தான் அத்தை, மச்சான் வந்திடுவாரு…. எப்படி பாக்யாவுக்கும் மச்சானுக்கும் கல்யாணம் முடிச்சிடுறிங்களா ….??” என்று சூட்சுமமாக தினகரன் மனதில் இருக்கும் எண்ணத்தையும் கேட்டு வைத்தான் சிவா. 

“யப்பா உங்களுக்கு லீவு இருக்காதுல்ல… அது மட்டுமில்லாமல் பாக்யா இப்ப தானே படிக்குது… முடிச்சதும் பண்ணிக்கலாம்… நீங்களும் இங்க வந்திடுவீங்க , என்ன இருந்தாலும் அண்ணனுக இருந்து கல்யாணம் பண்ற மாதிரி வராதுல்ல…. அதுக்காவ சொன்னேன் என்ன அண்ணி சொல்றீங்க… அண்ணே சரி தானே” என்று கருப்பசாமியிடமும் கேட்டிட “அவரும் சரி தான் மா”என்றார். 

பேசியபடியே உணவை உண்டு முடித்ததும் “பனி… அப்படியே அவர் வீட்டுக்கு போயிட்டு தகவல் சொல்லிட்டு வந்திடலாம் நான் இருக்கும் போதே வீட்டை உன் பேர்ல மாத்தணும்…. சேலையை மாத்திட்டு வா…ப்பா நீங்க பணத்தை எடுத்து வைங்க “என்று சொல்ல… 

சித்திரை செல்வியோ., “ஏன் யா இப்பவே போகணுமா…. காலையில போயிட்டு வாங்க…. மலரு நீயும் சாப்பிட்டு செத்தோடம் படுங்க… நானும் மாமனும் வயலுக்கு போயிட்டு வர்றோம்… ஏன் மாமா நீங்களும் வார்றிகளா…  போர் போடுறவன் கெணத்தை தூர் வாரி தரேன்னு சொன்னான்… இன்னும் நூறு அடி சேர்த்து தோண்டிட்டா தண்ணி ஊறிக்குமாம்… கையில பணம் இருக்கையிலையே தண்ணி வர ஏதாவது ஏற்பாடு பண்ணிடனும்…”என்க 

வேலுத்தம்பியும் சரி என்று அவர்களோடு கிளம்பினார். 

இரு இளம் தம்பதியர் மட்டுமே வீட்டில் இருந்தனர். 

“டேய் சிவா…. நானும் சூர்யாவும் உனக்கு வேலை வாங்கி தந்தாங்களே அந்த அண்ணன் வீட்டுக்கு போயிட்டு வர்றோம்… அவர் மகளுக்கு சடங்காம்… பாவம் அவர் இங்க இல்லயில்ல…”என்று விட்டு இருவரும் கிளம்பினர். 

மலர் பாத்திரங்கள் எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.

“டீச்சரம்மா இதெல்லாம் அப்புறம் எடுத்து வைக்க கூடாதா…!!” என்று விட்டு அவளை பிடித்தவன் தூக்கி கொண்டு அறைக்கு சென்று விட்டான்.

“ப்ப்ச்… பகல் நேரத்தில் என்ன பண்ற…. விடு சக்தி… நீ போ எனக்கு வேலை இருக்கு…” என்று கீழிறங்கினாள். 

“சரி போ நானும் இப்படியே ஊருக்கு கிளம்புறேன் “என்று முகத்தை திருப்பி கொள்ள “மிரட்டுறிங்களா சமூக சேவகரே… ம்ம்ம் உனக்கு அவ்வளவு தைரியம் இருந்தால் நீ போ… அப்புறம் பார்த்துக்க நான் பாட்டுக்கு தூத்துக்குடி போயிடுவேன்”என்றாள் சற்று மிரட்டலாக

“சரி போ எல்லா வேலையும் பார்த்துட்டு அந்த ஆடு, மாடு இன்னும் வேற ஏதாவது இருந்தால் அதையும் கவனிச்சுட்டு வேலையைப் பாரு”என்றவன் படுத்து விட்டான். 

அவனது செய்கையில் மெலிதாய் புன்னகைத்து விட்டு சக்தி கோவமா இருக்கியா…. “சக்தி…. ரொம்ப கோவமோ…. ??”என்று அருகில் செல்ல 

“ஆமாடி இப்போ என்ன அதுக்கு போ”என்று மீண்டும் கண்களை மூடிக் கொள்ள .,”மாமா… கோவம் வந்திடுச்சா…??” என்று கேட்கவும் சிரிப்பு வர அதை சிரமம் கொண்டு அடக்கினான். 

“இதோ இந்தா அந்த பக்கம் இருக்க உதடு மட்டும் லைட்டா சிரிக்குது… இதோ இதோ”என்றவளை இழுத்தணைத்தவன் “டீச்சர் வர வர ரொம்ப சேட்டை பண்றாங்க… அவங்களை “என்றவன் தன் மனம் கவர்ந்தவளோடு கூடலில் இணைந்து விட துடிக்க அவளோ பகல் பொழுது என்று காரணம் காட்டினாள். 

காதலுக்கு ஏதடி பொழுதெல்லாம் என்றவனின் விரல்களோ மஞ்சள் நிற மேனியாளின் இடையில் வீணை மீட்ட பெதும்பை அவளுக்கு அங்கமெல்லாம் சிலிர்த்தது.  

சிறு தீண்டலும் இல்லாமல் வளர்த்த காதலில் அவ்வபோது அதரம் பதித்து விளையாட்டு காட்டி இருந்தாலும்  உரிமையானவளை உதிரம் வரை தீண்டி இருந்தான்  முழுக் காதலோடு 

அருகில் வந்தாலே  கண்ணியம் காப்பவள் இன்று கந்தரம் தீண்டி காது மடலில் காதலை உரைத்து  காதலும் காமமும் இணைந்து வேண்டும் என்று விரல் தீண்டா பாகங்களில் இதழ் ஒற்றல் பரிசளித்து  இப்போதும்  மனங்கவர்ந்தவளின் அனுமதி வேண்டி நின்றான் நாயகனவன். 

கைபேசியில் கொடுத்த முத்தமெல்லாம்  இன்று அவனின் முகம் முழுக்க கொடுத்து அனுமதி வழங்கி விட்டாள்  நாயகியவள். 

மிகிரனும் மேகத்தில் மறைந்து கொள்ள பகல் பொழுது ராப்பொழுதாய் மாறி இருந்தது தம்பதியருக்கு.  இனிமையான கூடல் அங்கு நிகழ்ந்து பனிமலர் சிவசக்திபாலன் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று இருந்தது. 

மாலை வந்து அவர்களின் மயக்கம் தீர்த்து விட கலைந்த ஆடைகளை உடுத்தி அமர்ந்தவளோ சக்தியின் முகத்தை  பார்த்தபடியே அமர்ந்திருக்க கண் விழித்தான் சக்தி. 

“டீச்சரம்மா என்ன சைட் அடிக்கிறியா… ??”என்றவன் அமர்ந்திருந்தவளின் மடியில் படுத்து கொள்ள அவனது தலைக் கோதினாள். 

“அப்படி தான் பார்ப்பேன் என்ன பண்ணுவ…?”

“மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிப்பேன்…!!” என்றவனை முடியைப் பிடித்து ஆட்டி “உன்னை” என்று முறைத்தாள். 

“ஸ்ஸ்ஸ் ஆஆஆ வலிக்குது டி சரி கிளம்பு வார்டு மெம்பர் வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்” என்றான்.

“எதுக்கு இந்த நேரத்தில்… ??”

“பத்திரபதிவுக்கு வரச் சொல்லுவோம் நாளைக்கு பணத்தை கொடுத்து பத்திரத்தை வாங்கிப்போம்” என்று சொல்ல ,மலர் யோசித்து விட்டு “காலையிலேயே போய் கையோட அழைச்சுட்டு பத்திர ஆபிஸ் போகலாம் இப்போ வேணாம்” என்றாள். 

“சரிங்க டீச்சர் …!!”என்றவனோ இடையை இறுக்கியபடி சேட்டையைத் துவங்க அவனை மீண்டும் வலித்திடாமல் அடித்தவளோ  பொழுது போயிடுச்சு அத்தை மாமா வந்திடுவாங்க ,விளக்கு வைக்கனும் எழுந்துக்கோ “என விலகி சென்றாள் பின்பக்கம் குளிப்பதற்கு. 

சிரித்தவனோ மீண்டும் உறக்கத்தை தொடர போக ,”சக்தி எழுந்திரு தூங்க கூடாது “என்று சத்தமிட உடனே எழுந்து கொண்டான். 

பொறுப்பான மருமகளாய் வீட்டு வேலை அனைத்தையும் முடித்து  விளக்கேற்றி இரவு உணவை சமைக்க துவங்க  சக்தி நண்பர்களை பார்த்து வருகிறேன் என்று கிளம்பினான். 

நைட் சாப்பாடு என்ன செய்யட்டும் …

“ஹான்  தூத்துக்குடியில் வச்சு தந்தியே  சாம்பாரும் காரமான வரமிளகாய் தொக்கும் அதே பண்ணிடு அப்படியே வேற ஏதோ செஞ்சியே… ??”

“வத்தல் குழம்பு… “

“ஹான் அதுவும் பண்ணி தா…  இரு இரு நானும் உதவி பண்றேன்” என்று உள்ளே வர ,சித்திரை செல்வி முகம் கழுவி வந்தவர்,”  நீ போய் பார்த்துட்டு வாய்யா நான் உதவி பண்ணிக்கிறேன்” என்று அனுப்பி வைத்தார். 

அவனோ மலரைப் பார்க்க அவளும் கண்ணசைத்து விட சிட்டாக பறந்து விட்டான். 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சூர்யா தனஞ்செயனோடு விஷேஷத்திற்கு சென்று வந்தவள்,  வீட்டிற்கு வந்ததும் புத்தகத்தை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து விட தனஞ்செயன் தான் ஏகத்திற்கும் கடுப்பானான். 

“அடியேய் படிப்பாளி இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல… “என்று கேட்க ,அவளோ பாவமாக மாமா “இன்னும் மூணு நாள் ல யூனிட் டெஸ்ட் இருக்கு “என்றாள். 

“அட என் படிப்பாளி இது வெறும் யூனிட் டெஸ்ட் தான் செமஸ்டர் இல்ல… மாமா இப்ப லீவு முடிஞ்சா இனிமே அடுத்த வருஷம் தான் வருவேன் பரவாயில்லையா … “என்றான். 

“நீங்க தானே சொன்னீங்க படிப்பு முடியற வரை எதுவும் வேண்டாம் னு… “என்று இழுக்க 

இரு கைகளையும் மேலே உயர்த்தி கும்பிட்டவன் .,”அம்மாடி சூரியகாந்தி உங்களை கொஞ்ச நேரம் பேச தான் கூப்பிட்டேன் வேற எதுக்கும் இல்ல… வந்து உட்காருங்க”என்றான். 

சிரித்தபடியே வந்தமர்ந்தாள். 

“நாளைக்கும் கொஞ்சம் லீவ் போட்டுடு… ஒரு இடம் விலைக்கு வந்திருக்கு , அதை அப்பா உன் பேர்ல வாங்க சொன்னாரு… அதுக்கு தான் போகணும் உன்னோட போட்டோ ஆதார் கார்டு எல்லாம் எடுத்து வை”என்றான். 

“எதுக்கு மாமா என் பேர்ல… உங்க பேர்ல இல்ல அத்தை மாமா பேரில் எழுத வேண்டிய தானே.. “என்றாள். 

“ப்ப்ச்… சிவா நாளைக்கு மலர் வீட்டை அது பேர்ல எழுதப் போறான்… அதனால தான் உனக்கும் ஏதாவது செய்யணும் னு கேட்டேன் அவங்களும் சரி னு சொல்லிட்டாங்க… “என்றவன் இயல்பாய் அணைக்க…. அணைப்பு இறுகி அன்பான தாம்பத்தியத்தில் இணைந்தது இவர்கள் உறவு. 

“இது தான் பேசுற லட்சணமா போ மாமா” என்று சிணுங்கியவளை,”  சாரி டி நானும் பேசத்தான் நினைச்சேன் ஆனா …” என்று இழுக்க.,”  உங்களை…, போங்க நீங்க…  நாளைக்கே பாப்பா எதுவும் வந்துட்டா காலேஜ் எல்லாம் போக மாட்டேன் சொல்லிட்டேன்” என்று சிறு கோபத்துடன் கூறியவளை அணைத்தவனோ., “ஒரே நாளில் வர்றதுக்கு நான் என்ன மந்திரவாதியா இல்ல முனிவரா…  லூசு பொண்ணே…!!” என்று நெற்றி முட்டினான். 

“அப்போ வராதா …!!”என்று தீவிரமான சிந்தனையில் கேட்டவளைப் பார்த்து, தலையிலடித்துக் கொண்டான் தனஞ்செயன். 

“மாமா தெரியாமல் தானே கேட்கிறேன்… போ நான் மலரக்கா கிட்டயே கேட்டுக்கிறேன்” என்று எழுந்தவளை விடாது பிடித்தவனோ அதை எல்லாம் நான் தான் சொல்லித் தரனும்…  உங்க அக்கா இல்ல , அது சிவாவுக்கு சொல்லி தரும் “என்றவன் மீண்டும் மையலில் இறங்கி விட்டான். 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

        

மறுநாள் காலையிலேயே சிவா மலரை அழைத்து கொண்டு சங்கரன் வீட்டிற்கு சென்றிருந்தான். கூடவே சில பெரியவர்களையும் அழைத்து சென்றான் எப்படியும் முத்துலெட்சுமி பிரச்சினை செய்வார் என்று எண்ணியபடி. 

“வாம்மா வா வா… வாங்க மாப்பிள்ளை… எல்லோரும் வாங்க “என பவ்யமாக அழைத்த சங்கரனிடம் “நாங்க ஒண்ணும் விருந்துக்கு வரலை…. உங்க வீட்டம்மா சொன்ன மாதிரியே பணம் ரெடி பண்ணியாச்சு …..ரெண்டு வருஷம் டைம் கேட்டோம் அதுக்குள்ளயே கடவுள் புண்ணியத்துல சம்பளம் அதிகமா கிடைச்சு பணத்தை ரெடி பண்ணியாச்சு…. எப்போ வீட்டை பேர் மாத்தி தரப் போறிங்க…??”என்றான் நேரடியாக. 

ஆமா சங்கரு அதுக்காக தான் சிவா எங்களையும் வரச் சொன்னாப்ள…  அந்த பொண்ணு இதுவரை உங்க வீட்டில் எதுவும் கேட்டதில்லை இப்ப அது அம்மா வீட்டைக் கேட்குது உரிமையானதை கூட பணம் குடுத்து வாங்க வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டீங்க… சரி அது உங்க சொந்த விஷயம்… இப்ப சொன்ன மாதிரியே பணத்தை ரெடி பண்ணியாச்சு வீட்டை எழுதி தர்றது தான் நல்லது என்று ஊர் பட்டயதாரர் பேசினார்.

மாமா அது மலரோட வீடு நான் எழுதி கொடுத்திடுறேன் பணம் எல்லாம் வேண்டாம் ஏற்கனவே மாப்ள சீர்வரிசை வேண்டாம் னு திருப்பி அனுப்பி வச்சுட்டாப்ள அது எங்களுக்குள்ள மனஸ்தாபம் அதை நாங்க பேசிக்கிறோம் இப்ப வீடு எழுதி தர்ற நாளைக்கே வரேன் பணம் எல்லாம் எதுவும் வேண்டாம் என்று சொன்ன சங்கரனோ மலரின் முன்னால் சென்று நின்றவர்  ஆயா  அப்பன் செஞ்சது தப்பு தான் தப்பு என்ன உனக்கு பெரிய துரோகம் பண்ணிப்புட்டேன் உன்னை பெத்ததோட சரி வளர்க்கல படிக்க வைக்கலை நீ நல்ல சோறு சாப்டியானு கேட்கலை எதுவும் பண்ணலை நான் நல்ல அப்பனா இல்லைனு மட்டும் புரியுது…  ஒரு கண்ணுல சுண்ணாம்பும் ஒரு கண்ணுல வெண்ணையும் வச்சுட்டேன்…  எனக்கு நல்ல கதி வராதும்மா…  மன்னிச்சிடு மா… என்று கையெடுத்துக் கும்பிட்டு கதறி அழுதார். மலர் கல்சிலை போல் நின்றிருந்தாள். 

முத்துலெட்சுமிக்கு உள்ளூர பற்றி எரிந்தது. 

சிவா எங்கோ வெறித்தபடி நின்றிருந்தான். 

“மாப்ள நீயும் முடிஞ்சா மன்னிச்சிடுய்யா என்றவர் மகளின் அருகில் நின்றபடி “மாப்ள மொதல்ல வீட்டுக்குள்ள வாங்க”எனும் போதே முத்து

லெட்சுமி வெளியே வந்தவர்., “நாளைக்கே வந்து கையெழுத்து போட்டு தரேன்… ஆனா பத்து லட்சம் வேணும் “என்றார் தடாலடியாக. 

மலருக்கு கண்ணீர் வந்து விட்டது. சிவாவின் முகம் ரத்தமென சிவந்தது. 

…. தொடரும்.