“கருப்பசாமி மாமோய். வெளியே வாங்க உங்க சம்மந்தி மலருக்கு சீர்வரிசை குடுத்து விட்டு இருக்காரு “என்றதும் சிவா லுங்கியை மடித்து கட்டியவன் வெளியே வந்தான். 

 

 

 

“என்ன மருதண்ணே. பாத்திரகடை வைக்கப் போறியா.? இல்ல வியாபாரம் பண்ணப் போறியா. மொத போனி எங்க கிட்ட தானா!?”என்றான் நக்கலாக 

 

 

 

“வெளையாடாத சிவனேசு உன் மாமனார் சீர் குடுத்து விட்டு இருக்காரு”என்றபடி மருது பாத்திரங்களை இறக்க  

 

 

 

 

“ஆமா நீ என் மொறைப் பொண்ணு பாரு. உன் கூட வெளையாட.. இரு இரு அதை எல்லாம் எதுக்கு இங்க எறக்குற. அப்படியே வண்டியை திருப்பிக்கிட்டு கிளம்பிக்கிட்டே இரு. இங்க அவர் மக எல்லாம் இல்லை. என் பொண்டாட்டி பனிமலர் தான் இருக்கா.. நான் சொல்றது பத்தலைனா நான் அவளையே கூப்பிடுறேன் கேளு “என்றவன் .,”பனி பனி கொஞ்சம் வெளியே வா!!”என்று உரக்க அழைத்தான் .

 

 

“என்னங்க ??”என்று கரண்டியுடன் வந்தவளை பார்த்து புன்னகைத்தவன் . “வார்டு மெம்பர் சங்கரன் சீர் கொடுத்து விட்டு இருக்காரு.. நான் சொன்னேன் இங்க இருக்கிறது என் பொண்டாட்டி மலர் தான் னு.. நீ என்ன சொல்ற..??. சரியா தானே சொல்லி இருக்கேன்”என்றான்.

 

 

 

 

“சரியா தான் சொல்லி இருக்கீங்க அவர் எதுக்கு எனக்கு சீர் கொடுத்து விட்டாரு.? எனக்கு அப்படி யாரையும் தெரியாது. நீங்க வீடு மாறி வந்துட்டிங்க போல “என்று கூறி விட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டாள்.  

 

 

 

 

சித்திரை செல்வியோ.,”ஏன் யா அதான் அவரு சீர் அனுப்பி இருக்காரே ஏன் வேண்டாங்கிற ??”என்று கேட்க

 

 அவனோ.,”ம்மா பேசாம இரு. இத்தனை நாளும் இல்லாமல் இப்ப தான் மக பாசம் பொத்துக்கிட்டு வருதோ அந்த மனுசனுக்கு. பேசாம போ ஆமா. உனக்கு என்ன பாத்திரம் பண்டம் தானே வேணும் நான் சம்பாதிச்சு வாங்கி தரேன் “என்று கடுப்படித்தவன் .,”நீ இன்னும் போகலையா ??”என்று மருதுவை முறைக்க அவனும் வேறு வழியின்றி கிளம்பினான். சிவா முருகனை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றான். 

 

 

சற்று நேரத்தில் பொன்னர் பொன்னுசாமியுடன் வந்து இறங்கினார். பின்னாலேயே மரகதமும் செண்பகவல்லி ஆச்சியும் வந்தனர். 

 

 

“வாங்க வாங்க.” என வரவேற்க. நால்வரும் உள்ளே சென்றனர். 

பரஸ்பரமான உபசரிப்பு முடிந்ததும்.. பொன்னர் தன் பையில் இருந்த பணத்தையும் சில நகைகளையும் எடுத்து வைத்தார். 

 

 

 

“இதோப் பாரு வேலு இது எல்லாம் என் மூத்த மருமக வேதாவோடது அதாவது மலரு அம்மாவோடது. அப்புறம் இந்த பணம் என் சொந்த உழைப்பு. ரெண்டு லட்ச ரூபாய் இருக்கு. இதை வச்சு தேவையான பாத்திர பண்டங்களை வாங்கிக்கங்க. வேணாம் னு சொல்லக் கூடாது.. ஏன் னா இது மலருக்கு மொறைப்படி கிடைக்க வேண்டியது அதை தான் நான் தரேன். அப்புறம் இதுல இருக்க நகையும் பணமும் சூரியாவுக்கு. ஏலே பொன்னு நீயும் எதுவும் சொல்லக் கூடாது சொல்லிபுட்டேன் “என்று எல்லாவற்றையும் எடுத்து வைத்தார்.  

 

 

 

“இதெல்லாம் தேவையே இல்லை ஆனாலும் பெரிய மனுசர் சொல்றதால இதை வாங்கிக்கறேன்.. செல்வி எல்லாம் கொண்டு போய் உள்ள வை அப்புறம் சாப்பாடு தயார் பண்ணியாச்சா?, சீக்கிரம் எடுத்து வைமா”என்றார் வேலுத்தம்பி. 

 

 

 

தனஞ்செயன் தயார் ஆகி கைபேசியில் பேசியபடியே வெளியே வந்தான்.  

 

 

 

“சரிண்ணே. ம்ம்ம் எல்லாம் தயாரா வச்சிருக்கான்.. டிக்கெட் மட்டும் அனுப்பு உடனே கிளம்பிடுவான்.. நீ செய்றது பெரிய உதவி ண்ணே. உன்னை என்னைக்கும் மறக்க மாட்டோம் சரிண்ணே நான் அங்க வந்துட்டு உன்னை வந்து பார்க்கிறேன் ண்ணே”என கூறி விட்டு இணைப்பை துண்டித்தான். 

 

 

 

 

“வாங்க வாங்க எல்லோரும் வாங்க. நல்ல விஷயம் வந்திருக்கு தாத்தா.. சிவாவுக்கு வேலை ரெடி ஆயிடுச்சு .நான் எதிர் பார்க்கவே இல்லை இவ்வளவு சீக்கிரம் வேலை ரெடி ஆகும்னு. என் கூடவே அவனும் கிளம்பணும்.. இன்னைக்கு மதியம் டிக்கெட் கொண்டு வந்து குடுப்பாங்கனு சொன்னாரு அந்த மதுரைக்கார அண்ணன் “என்றான் பரவசத்துடன். 

 

 

“நல்ல சேதி தான். மலரு புள்ள நீ சொன்ன மாதிரியே வீட்டை திருப்பிடலாம். “என்று பொன்னர் கூறவும் மலர் மென்மையாக புன்னகைத்தாள்.

 

 

 

“மலரு. அவன் துணிமணி எல்லாம் எடுத்து வை. நான் அவன் கிட்ட பேசிக்கிறேன் “என்றான் தனஞ்செயன். 

 

 

“சரிங்க மாமா “என்றவள் காலை உணவை எடுத்து வைத்தாள். அனைவரும் உணவருந்தி முடிக்க சிவா உள்ளே நுழைந்தான். 

 

 

 

எல்லோரையும் வரவேற்று விட்டு சாப்பிட அமர, தனஞ்செயன் வேலை கிடைத்த விஷயத்தை கூறினான்.  

 

 

“சூப்பர் டா. கிளம்பலாம்.. “என்றவன்.,” நான் பசங்க கிட்ட சொல்லிட்டு வரேன்”என்றான். 

 

மலர் சட்டென்று அவனைப் பார்த்தாள் .

 

 

மனதிலோ,’ என்னை விட்டு போக அவ்வளவு அவசரமா சக்தி உனக்கு?’என்று நினைக்க வேலுத்தம்பி அதை கேட்டே விட்டார்.

 

 

“ஏன் டா புதுசா கல்யாணம் ஆனவன் பேசுற பேச்சா இது புதுப் பொண்டாட்டியை விட்டுப் போறேங்கிற?” என்றார்.

 

 

“ஏன் அது உன் மூத்தப் பேரனை பார்த்து கேட்க வேண்டியது தானே?அவனும் தானே துபாய் கிளம்புறான்” என்றான் சிவா. 

 

 

“ஏன் டா அவன் வீட்டில் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டான் நீ அப்படியா பொழுதோட அந்தப் புள்ளை முந்தானியை பிடிச்சுக்கிட்டே திரிஞ்சியே அதுக்கு கஷ்டமா இருக்காது அதுக்கு தான் கேட்டேன்..” என்றார். 

 

 

“வேற வழி இல்லை பாட்டா. வீட்டை மீட்டு எவ்வளவு சீக்கிரம் தர்றேனோ அவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு நிம்மதி.” என்றதும் வேலுத்தம்பி அமைதியாகி விட்டார். 

 

 

 

மலருக்கு அவனது அவசரம் புரிந்தது. 

 

 

 

“அப்புறம் உன் தாத்தன் சீர் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தார் டா”என்றதும் முகம் இறுகியது அவனுக்கு. 

 

 

 

மலர் இன்னொரு இட்லியை வைக்கப் போக கையமர்த்தி தடுத்தவன். 

 

 

 

“என்ன எல்லாம் வாங்கி வச்சாச்சா??” என்றான் பல்லை கடித்தபடி. 

 

 

“அடேய் மலரு அப்பன் குடுத்தா தான் வாங்கக் கூடாது னு சொன்ன, இது பாட்டன் தானே குடுத்தாரு “என சித்திரை செல்வி சொல்ல, பொன்னரும் சிவா என்ன சொல்லப் போகிறானோ என்று பார்த்துக் கொண்டிருந்தார். 

 

 

 

“தாத்தா நீங்க உங்க பேத்திக்கு செய்றது எல்லாம் சரி தான். ஆனா எனக்கு இப்ப இதெல்லாம் வேண்டாம். நான் வீட்டை மீட்டுட்டு அப்புறம் வாங்கிக்கிறேன் “என்றான். 

 

 

 

“அதுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்? “என்று எரிச்சலுடன் கேட்டார் கருப்பசாமி. 

 

 

 

“சம்மந்தம் எல்லாம் நிறைய இருக்குப்பா. இப்ப இந்த பணத்தையும், சீரையும், நான் வாங்கி வச்சேன்னு வச்சுக்க , உடனே இந்த பணத்தை வச்சு தான் நான் வீட்டை மீட்டதா அந்த பொம்பளை சொல்லும். பனியை பார்க்கும் போதெல்லாம் அசிங்கப்படுத்தும் இது தேவையா அவளுக்கு. ?? நான் வாங்கிக்க மாட்டேன் னு சொல்லலை ஆனால் எனக்கு இப்ப இது வேணாம்னு தான் சொல்றேன் “என்றான் அழுத்தந்திருத்தமாக. 

 

 

 

 

பொன்னுசாமி புன்னகைத்தபடி “மாப்ள உன்னை நான் என்னம்மோன்னு நினைச்சேன்யா. வெட்டியா சுத்துற. எப்படி தான் கல்யாணம் காட்சி பண்ணி குடும்பம் நடத்தப் போறியோன்னு, ஆனா நீ நினைச்சதை சாதிக்க நினைக்கிற பாத்தியா, அது ஒண்ணு போதும்யா. என் மவ இங்க நல்லபடியா வாழும்.” என்றார் சிலாகிப்பாக. 

 

 

 

“சரி டா நான் எல்லாம் திருப்பி கொடுத்திடுறேன் நீ வீட்டை மீட்டு கொடுத்துட்டே வாங்கிக்க “என்றார் கருப்பசாமி. 

 

 

 

சிவா எழுந்து அறைக்கு சென்றவன் பாஸ்போர்ட் மற்ற ஆவணங்கள் எல்லாம் எடுத்து வைத்தான். 

 

 

துணிகளை எடுத்து பெட்டியில் வைக்க மலர் வந்து வாங்கி எடுத்து வைத்தாள். 

 

 

 

“தோட்டம் வரைக்கும் போயிட்டு வரலாம் சக்தி ஒரு சின்ன வேலை இருக்கு”என்றாள். 

 

 

 

“போகலாம் பனி. ரெடியா இரு சாப்டியா. சாப்பிட்டதும் கிளம்பலாம் “என்றவன் அவளை பார்த்திடாமல் தன் வேலையை கவனிக்க மலருக்கு ஏதோ தவறாக தோன்றியது. 

 

 

 

தோட்டத்தில் இறக்கி விட்டவன்., “வேலையை முடிச்சிட்டு சொல்லு வந்து அழைச்சுட்டு போறேன்”என அவள் முகம் பார்க்காமலேயே சொல்ல பனி அவன் முன்பு போய் நின்றவள் .,”ஏன் என்னை பார்க்க மாட்டேங்கிற என் முகத்தை பாரு சக்தி”என்க 

 

 

“வேணாம் பனி நீ சொன்னதை செஞ்சுட்டு நான் பார்த்துக்கிறேன்.” என்றான் வேகமாக 

 

 

“என் மேல இருக்க கோபம் போகலையா சக்தி. .”சற்று தளர்வுடன் கேட்டாள். 

 

 

 

 

“உன் மேல கோவம் எல்லாம் இல்லை. கண்ட ஆளுகளும் தேவை இல்லாம பேசுறாங்க. ஏன் அவங்க பேசுறது எல்லாம் கேட்கிற மாதிரி வச்சுக்கணும்.. நான் சொல்றது புரியும் னு நினைக்கிறேன் “என்று சொல்ல பனிமலருக்கு நன்றாக புரிந்தது முத்துலெட்சுமி மறுபடியும் அவனிடம் ஏதோ வம்பு வளர்த்து உள்ளார் என்று. 

 

 

“சரி நீ பார்க்க வேணாம். இங்க வந்து இந்த விதைக்கிழங்கை எல்லாம் நட்டு விடு”என்று கையில் கொடுத்தாள். 

 

 

 

“இது என்னது .??”

 

 

 

“செங்காந்தள் பூ. இது எனக்கு பிடிக்கும். விதைச்சு விடு..” என்றாள். 

 

 

 

“எல்லாம் ரோஜா மல்லிப்பூ வளர்ப்பாங்க. டீச்சருக்கு செங்காந்தள் தான் பிடிக்குமோ.. !!”என்று கிண்டல் செய்து கொண்டே குழிகளை பறிக்க ஆரம்பித்தான். 

 

 

 

“ஆமா இது தான் பிடிக்கும். ஸ்பெஷலான பூ.. நம்ம நாட்டு தேசிய மலர். சிவந்த நிறத்தில் பார்க்கவே நெருப்பு கங்குங்கள் போல ஜொலிக்கும். ரொம்ப நேரம் பார்த்தா கண்வலி வந்திடும்னு சொல்வாங்க. இதுக்கு கண்வலிபூ ன்னு கூட சொல்வாங்க. இதோட பூ விதை கிழங்கு எல்லாம் மருத்துவ குணம் வாய்ந்தது.. புற்றுநோயை குணப்படுத்துற அளவுக்கு சக்தி இருக்கு. குறைஞ்ச அளவு தண்ணீர் இருந்தா போதும், வேலி ஓரத்தில் வச்சோம்னா பார்க்கவே அழகா இருக்கும். இந்த செந்நிற பூமியில் சிவந்த மலரை பார்க்கும் போது அப்படியே பார்த்துக்கிட்டே இருக்கலாம்.”என்றாள் சிலாகிப்பாக 

 

 

“இந்தப் பூவை பார்த்து மயங்கி புலவர்கள் எல்லாம் பாட்டு எழுதி இருக்காங்க தெரியுமா.?? ஏன் நம்ம கண்ணதாசன் கூட பாட்டு எழுதி இருக்காரு. அவ்வளவு சிறப்பு இந்த பூவுக்கு. அதை விட பெரிய சிறப்பு வண்டு வந்து இந்த பூ பக்கத்தில் வட்டமிட்டா தான் இதழே அவிழுமாம்.. “என்றாள் சிரிப்புடன்.

 

 

“அதாவது. இந்த பனிமலருக்கு என்னைப் பார்த்ததும் வெட்கம் வர்றதைப் போல னு சொல்லு “என்றான் பேச்சுவாக்கில்.. 

 

 

 

 

“நான் எப்போ உன்னை பார்த்து வெட்கப்பட்டேன். ” ஹாஷ்யமாக சிரித்தாள் .பனிமலர். 

 

 

 

“பார்த்தோம் பார்த்தோம் ஆளைப் பார்த்ததும் முறைக்க வேண்டியது. அப்புறம் நான் போன பிறகு பார்த்துக் கொண்டே வெட்கப்பட்டு சிரிக்க வேண்டியது.. அந்த வெட்கத்தை பார்த்து தானே அம்மணியை விடாம சுத்தி வந்தோம். “என்றான் அவனும் விடாது 

 

 

 

“திருட்டு பூனை இதெல்லாம் பார்த்திருக்க நீ “என்று முதுகில் ஒன்று போட்டாள் அவனுக்கு வலித்திடாமல் 

 

 

 

“ஸ்ஸ்ஸ் ஆஆஆ. இல்லாட்டி அந்த கண் கொள்ளா காட்சியை ரசிச்சிருக்க முடியுமா.!?” என்றவன் .,

 

 

“இப்போ ரைட் ராயலா பார்க்க உரிமை இருந்தும் பார்க்க முடியலை”என்றான் சற்று அழுத்தமாக.. 

 

 

 

“எனக்காக இது கூட செய்ய மாட்டியா சக்தி” என்று கேட்டபடி கையை கழுவினாள். 

 

 

“அந்த கேள்விக்கு பதில் எல்லாரை விட உனக்கு தான் நல்லா தெரியும். “என்று விட்டு.,” கிளம்பலாம்”என வண்டியை கிளப்பினான் .

 

 

 

இரு நாட்கள் கடந்த நிலையில் தனஞ்செயனுடன் சிவசக்தியும் கிளம்ப,கட்டிய மனைவியை கண் கொண்டு பார்த்திடாமல் கிளம்பி விட்டான் அழுத்தமாக. 

 

 

தனஞ்செயனோ சூரியாவிற்கு அழுத்தமான முத்தமொன்றை கொடுத்து விட்டு விடை பெற்றான். 

 

 

சித்திரை செல்வி வழக்கம் போல கண் கலங்க, அவரை சமாதானம் செய்து விட்டு தினகரன் ,தனஞ்செயன், சிவா மூவரும் கிளம்பி விட்டனர். 

 

 

 

மலர் அவன் கிளம்பும் வரையில் கண்ணீரை உள்ளே அடக்கியவள் , அவன் சென்றதும் தன் அறையினுள் மடை திறந்த வெள்ளமாய் கொட்டி தீர்த்தாள். லேமினேஷன் செய்யப்பட்ட சக்தியின் புகைப்படம் கண்ணீரில் தத்தளிக்க.. அவள் தான் அழுகையை விட்டபாடில்லை. 

 

 

அழுவாள் என்றறிந்த நாயகனோ அவளை அழைத்தான் அலைபேசி வழியாக. 

 

 

 

பொங்கி வந்த உவர் நீரை உள்ளிழுத்து அழுகையை அடக்கியவள், அலைபேசிக்கு உயிர் கொடுத்திட நேரில் தந்திடாத இதழ் ஒற்றல் எல்லாம் அலைபேசியின் வழியே வந்து சேர்ந்தது கணக்கில்லாமல். ஐந்து நிமிடம் நீண்ட ஒற்றலுக்கு விடுமுறை அளித்து தன் கண்ணீரையும் துடைத்து விட்டு பேசினான் சிவா. 

 

 

 

“அழாத பனி வந்திடுவேன். ப்ளீஸ் மா. !!”

 

 

 

“இப்ப கூட பார்க்க தோணலை இல்ல.. என் வார்த்தை உன்னை அவ்வளவு பாதிச்சிருச்சா சக்தி .??”

 

 

உருக்கமாய் கேட்டவளுக்கு மீண்டும் கிடைத்தது எண்ணிலடங்கா முத்தங்கள்.  

 

 

 

“நான் நல்லா இருக்கணும் னு நினைச்சவ நீ மட்டும் தானே டி. உன்னை அடுத்தவங்க முன்னாடி தலை குனிய விடுவேனா.. ம்ம்ம். கண நேரத்தில் ஓடிடும் நாட்கள் வந்திடுவேன்” என்று நம்பிக்கை அளித்தவன் , இணைப்பை துண்டித்து விட்டு விமான நிலையத்திற்குள் சென்றான். 

 

 

… தொடரும்.