தூறல் 9.2:

அடுத்த நாள் விடியற் காலையிலே, கண்மணி ஊருக்கு போகணும் என்று சிவமிடம் பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருந்தாள்.
அன்று, சித்து நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இருவருக்கும் பார்ட்டி கொடுப்பதாக இருந்தது .
நண்பர்கள் தரும் பார்ட்டிக்கு கண்டிப்பா போக வேண்டும். எப்படி என்று யோசித்தான் .
கண்மணி பிடிவாதம் அறிந்து அவளிடம் பேசினால் வேளைக்கு ஆகாது என்று சிவம் ,செல்லமா, கண்ணனை வற்புறுத்தி தங்க வைத்தான்.
தேவ், ஆனந்த் ,கிருஷ்ணனை விட்டு அவளை அழைக்க சொன்னான் . அவள் ஆசையாக அண்ணா என்று அழைக்கும் அவன் நண்பர்கள் பேச்சை தட்ட முடியாமல் கிளம்ப ஒத்துக் கொண்டாள்.
அதிதி மிகவும் ஆவலாக கிளம்பினாள் .
அவள் அப்பா, அம்மா பக்கத்தில் இருக்கும் உறவுக் காரங்களை பார்க்க சென்றதால் கண்ணனை மட்டும் இவர்கள் அழைத்து சென்றனர் .
கண்மணி மனதில் இப்ப இருக்கும் நிலைமையில் இது ஒன்று தான் குறைச்சல் என்று மனதில் புலம்பிய படி வெளியே இயல்பாக நடமாடிக் கொண்டு இருந்தாள்.
என்ன தான் சண்டை போட்டாலும் அவள் அப்பா ,அம்மாவிடம் எதையும் கேட்கவில்லை, சொல்லவில்லை என்று சித்து நிம்மதி அடைந்தான்.
அவள் அம்மாவிடமோ அப்பாவிடமோ கேட்கலாம். கோபம் தணிந்த பிறகு தான் எதையும் யோசிக்கணும் முடிவு செய்தாள்.
காரில் ஏறும் போது சித்து கண்மணியை முன்புறம் ஏற சொல்லி, அமர்ந்து இருந்த படியே கார் கதவை திறந்துவிட்டான் .
அவன் அருகில் அமர்வாள் என்று ஆசையாக இருந்தான். விடலை பையன் போல இதற்கு எல்லாம் எங்குறேனே?
அதை கண்டுகொள்ளாமல், கதவை சாற்றி அவள் பின்னால் ஏற போகும் போது அவசரமாக இறங்கி வந்து “என்ன தேனு, வண்டியில் அமர்ந்து கொண்டே கதவை திறந்துவிடறேன் கோபமா செல்லத்துக்கு! இப்ப ஏறுங்க” என்று முன்பக்க கதவை திறந்து நின்று கொண்டான்.

“கண்ணன், அதிதி பின்னால் அமர்ந்து கொள்ளட்டும், நீ இங்க வா ” என்று கண்களால் கெஞ்சினான் .

“ப்ளீஸ் தேனு!”
அதிதி, கண்ணன் முன்பு குறும்பாக “வேண்டும் என்றால் என் செல்லம் கோபம் போக கிஸ் தரட்டுமா? “

இவர்கள் முன்னாள் இப்படி மானத்தை வாங்கனுமா என்று இருந்தது.
எல்லார் முன்னால் இப்படி சித்து உயரத்திற்கு இறங்கி கெஞ்சுவதை பார்க்க கண்மணிக்கு ஒரு பக்கம் பாவமாக இருந்தது .
‘நினைத்ததை சாதிக்கிறானே’ என்று பல்லைக் கடித்தாள்.இவனை எல்லாம் என்ன தான் செய்வது ..
“பாபி , எங்க அண்ணாவை எப்படி மாற்றி வைத்து இருக்கீங்க !கதவை திறந்து சல்யுட் அடிக்காத குறையா கெஞ்சறாரு !கொடுத்து வெச்சவங்க பாபி”.
“ஆமாம் அக்கா. மாமா சோ ச்வீட்” என்று கண்ணனும் ஒத்து ஊதினான்.
“என்ன தேனு, உன் கோபத்தை போக்கிடலாமா” என்று சித்து மாய குரலில் கேட்டவுடன் எதாவது செய்திட போறான் பயந்து,வேற வழி இல்லாமல் முன்புறம் அமர்ந்து கொண்டாள். அதிதி, கண்ணன் முன்னால் எதையும் சொல்ல முடியாமல் கோபத்தை மறைத்து அவனிடம் ஏட்டிக்கு போட்டியா சண்டை போட்டு வந்தாள்.
ஏற்கனவே கண்ணன் மனதில் ஹீரோ போல தோன்றும் சித்தார்த் இப்போது சூப்பர் ஸ்டார் போல தோன்றினான் .
சித்தார்த், கண்ணனிடம் மிகவும் இயல்பாக பழகினான். அதை பார்த்து கண்மணி கோபம் அடைந்தாள். எதற்கு அவனிடம் இப்படி பேச வேண்டும் . இவன் நல்லவன் காண்பித்துக் கொள்ளவா?

வண்டியில் கோபமாக அமர்ந்து வந்த கண்மணி ஹோட்டலுக்குள் நுழைந்தவுடன், சித்தார்த்தை திரும்பி பார்க்க கூட முயற்சிக்கவில்லை .
கண்மணி அழகி தான், எளிமையான அலங்காரத்தில் கடல் நீல வண்ண புடவையில் கடல் கன்னிகை போல பேரழகியாக மின்னினாள். அனைவரும் இவர்கள் ஜோடி பொருத்தத்தை பார்த்து வியந்தனர் .சித்துக்கு கொஞ்சம் கர்வமா கூட இருந்தது.
அவள் அழகை கண்டு அவனே ப்ரம்மித்துவிட்டான். அவள் கவனத்தை கவர முயன்று தோற்றான். நேற்றில் இருந்து பேசணும் பார்க்கிறேன் . என் பக்கம் கொஞ்சமாவது திரும்பறாலா பாரு .அப்பவே, அந்த நிமிடமே அவளை அனைத்து முத்தம் கொடுக்கணும் என்ற எண்ணத்தை கட்டுபடுத்திக் கொண்டான் .
கண்மணி, உணவு உண்ணும் போது கண்ணன், அதிதி பக்கம் அமர்ந்து கொண்டு அவர்களுடனே பேசிக் கொண்டு இருந்தாள்.
அவர்கள் ஊடலை கண்டு கொண்ட ஆனந்த் “என்ன சிஸ்டர், கொஞ்சம் இந்த பக்கமும் திரும்புங்க. என் நண்பன் உங்க கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக் கொண்டு இருக்கான். பாவம் .கொஞ்சம் பார்த்து எப்படி இருக்கான் சொல்லுங்களேன்!”
சித்து சந்தோஷமாக “டேய், மானத்தை வாங்காதீங்க டா! அவ அப்பவே என்னிடம் யு லுக் ஸ்மார்ட், ஹன்ட்சம் யங் மேன் சொலிட்டா! சொன்னதும் இல்லாமல்….” என்று நிறுத்தி கண்மணியை பார்த்து கண்ணடித்தான்.
ஊஊஊஊஊ என்று அனைவரும் சத்தம் எழுப்பினர் .
நான் எப்ப அப்படி சொன்னேன்! ப்ராட் .பொய் பேசுவதை பாரு. இது எல்லாம் இவனுக்கு கை வந்த கலையாச்சே.
“சரி, நீ என்ன சொன்ன” என்ற தேவிடம் “போடா! எனக்கு வெட்கமா இருக்கு” என்றவுடன் அதற்கும் சத்தம் செய்தனர் .
“சொல்லு சித்து .. “
அந்த அறையில் இருக்கும் பியானோவில்
அவனுக்கு பிடித்த, கண்மணி அப்பப்ப முனுமுனுக்கும் ஹிந்தி பட பாட்டை இசைத்தான்.

“Hum tere bin
Ab reh nahi sakte
Tere bina kya wajood mera
Hum tere bin
Ab reh nahi sakte
Tere bina kya wajood mera
Tujh se juda agar ho jayenge
Toh khud se hi ho jayenge juda
Kyunki tum hi ho
Ab tum hi ho
Zindagi ab tum hi ho
Chain bhi mera dard bhi
Meri aashiqui ab tum hi ho”
அவன் ஆசையாக, கண்களில் காதலுடன் கண்மணியை பார்த்து இசைத்த பாடலை கேட்டு கண்மணி அழுதுவிட்டாள். என்ன என்று சொல்ல முடியாத நிலையில் இருந்தாள்.
சும்மா எல்லாருக்காக பாடும் பாட்டு இல்லை என்று நல்லாவே தெரியும். அவன் பாட்டை புகழாதவங்களே இல்லை. அத்தனை அருமையாக பாடி இசைத்தான்.ஓடி சென்று அவனை கட்டிக் கொள்ளனும் என்று தோன்றிய எண்ணத்தை கண்மணி கஷ்டப்பட்டு அடக்கினாள் .
இவன் என்னை மயக்குகிறான். மயங்க கூடாது என்று அவளை திட்டிக் கொண்டாள் .
அடுத்த நாள் காலையிலே கண்மணி அவள் அப்பாவுடன் ஊருக்கு கிளம்பனும் என்று பிடிவாதம் பிடிப்பதை கண்டு சிவம் மகளிடம் “ஏன் டா ராஜாத்தி, நாங்க இப்ப தான வந்திட்டு கிளம்பறோம் !மாப்பிள்ளையுடன் அப்புறம் பொறுமையா வா .கல்யாணம் ஆகி முதல் தடவை வரும் போது ஜோடியா வந்தாதான நல்லா இருக்கும் ! அப்படி ஊரில் என்ன வைத்து இருக்க டா .எதுக்கு பிடிவாதம்?”
“அப்பா எனக்கு இப்ப தான் லீவ்! இப்ப விட்டா என்னால் வர முடியாது .உங்க மாப்பிள்ளை தான் போயிடு வர சொன்னார் வேண்டும் என்றால் அவரையே கேளுங்க. அவர் எப்படி சொல்லராறோ அப்படி” .
கல்யாணத்தில் இருந்து முறைத்துக் கொள்ளும் சிவமும், சித்துவும் இன்னும் அப்படியே தான் இருக்கிறார்கள். சிவம் ஏதோ கேட்க போய், சித்து தப்பா எடுத்துக் கொண்டால் தேவை இல்லாத சண்டை வரும் பயந்து “அவர் சொன்னா சரி தான்” என்று சிவம் தணிந்தார் .
சிவம் நிலைமையை கண்மணி அறிவாள். அதனால் தான் அப்படி கூறினது. சித்துவிடம் கேட்டால் தடுத்து விடுவானே! அதுவும் இப்ப கண்டிப்பா கிளம்ப விட மாட்டான் உறுதியாக நம்பினாள்.

அவள் அறைக்கு பை எடுக்க வந்த நேரத்தில் கண்மணியை வழி மறித்து “கண்மணி, நான் சொல்வதை கொஞ்சமாவது காது கொடுத்து கேளு டீ! ப்ளீஸ்! என்ன விட்டு போகாதே” என்று அவள் கை பிடித்து, அவன் தன்மானத்தை விட்டு கேட்ட பிறகும் பிகு செய்பவளை என்ன செய்ய முடியும் .
அவன் பயந்தது போலவே அவன் கண்மணி அவனை விட்டு கிளம்புவதை எண்ணி வருத்தம் அடைந்தான்.
இதற்கு எல்லாம் பயந்து தான இப்ப கல்யாணம் வேண்டாம் சொன்னேன். யாராவது கேட்டாங்களா என்று நொந்து கொண்டு
“இங்க அம்மாக்கு , இப்ப தான் கொஞ்ச நாளா உடம்பு குணம் ஆகிக் கொண்டு வருது .இப்ப நாம,நீ இப்படி கிளம்பி போனால் ….”
இப்படி சொன்னாலாவது அவனுடனே இருப்பாள் என்று நம்பினான் . கண்மணிக்கு கண் மண் தெரியாமல் கோபம் வந்தது .
முகம் ,மூக்கு எல்லாம் சிவந்து “ஏன் யா! நான் கோபப்பட்டு கிளம்புவது உனக்கு கவலை இல்லை. உங்க அம்மா உடம்பை நினைத்து கவலை படற. உங்களை எல்லாம் ..எப்படியோ போங்க!”
கண்களில் நீருடன் “சீ போடா, என்னை இனி தயவு செய்து எதற்கும் தொந்தரவு செய்யாதீங்க” என்று அவனை தாண்டி வெளியே நகர

அவள் கைகளை பிடித்து இழுத்து உள்ளே தள்ளி “ஏன் டீ உன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்க. நானும் போனா போகுது பார்த்தா ரொம்ப தான் துள்ளற?” என்று கைகளை அழுந்த பற்றிக் கொண்டான்.
“விடு டா !நான் போகணும்” .
“டா வா !”
“ஆமாம். உனக்கு மரியாதை ஒன்று தான் குறைச்சல் .அப்படி தான் டா போடுவேன்! நான் போறேன் டா. நீ எப்படியோ போடா !” என்று வார்த்தைக்கு வார்த்தை சின்ன குழந்தை போல டா போட்டாள்.
தொண்டை அடைக்க “உன் மகனுடன் சந்தோஷமா இரு, நான் குறுக்கே வரபோவது இல்லை”.
என் செல்லத்துக்கு பொறாமை பாரு என்று கொஞ்சி கொண்டு “யார் இருந்தாலும் என் செல்ல தேனு இருப்பது போல வருமா? சொல்லு பார்போம்”.

கதவை தாழ் போட்டு “தாராளமா போய்க்கோ” என்று கதவு மீது சாயிந்த படி அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். கொஞ்ச நாள் முன்பு சித்து இப்படி என்று யாராவது சொல்லி இருந்தால் நம்பி இருக்க கூட மாட்டான் .
விட்டா அவ காலில் விழவும் தயார். ராட்ஷசி! கொஞ்சமாவது இறங்கி வராளா பாரு !
“இது வரை எங்க குடும்பத்தில் யாரும் ஆண்களை, கட்டிய கணவரை அடித்ததா கேள்வி பட்டது இல்லை. என்னை அந்த மாதிரி எதையும் செய்ய தூண்டாதீங்க.”
கண்மணி இப்படி பேசினால் என்று தெரிந்தாலே அவள் வீட்டில் உண்டு இல்லை செய்து விடுவார்கள். அவளாவது, அடிப்பதாவது!
என்னமோ கிஸ் செய்ய தூண்டுவது போல பேசுவதை பாரு !இவ எல்லாம் வளரவே மாட்டாளா?
“ நீ கொடுத்தா அதையும் வாங்க தயார்”.
கண்மணி, சின்ன குழந்தை போல மிரட்டினதை நினைத்து அவனுக்கு சிரிப்பு பீறிகிட்டு வந்தது. சிரித்தால் அதற்கு வேற பிராண்டுவாள் என்று சிரிப்பை அடக்க படாத பாடு பட்டன் .
சித்து கோபமாக, அன்பாக, செண்டிமெண்டா, மிரட்டி, கெஞ்சி பார்த்தான். என்ன சொன்னாலும் “நான் போகணும்” என்று கண்மணி அழுவதை பார்த்து, இப்ப இருக்கும் நிலையில் கண்மணி எதையும் கேட்க தயாரா இல்லை உணர்ந்து அவன் கண்களில் வலியுடன் வேகமாக வெளியேறினான் .
இதற்கு எல்லாம் காரணமானவனை சும்மா விட போறது இல்லை என்று சித்து கொலைவெறியில் இருந்தான்.