விஜய் ஒருவித மோனநிலையில் இருந்தான்.மனது அவனையும் அறியாமல் மிருணாளினியின் பக்கம் அவனை இழுத்துக் கொண்டு சென்றது.அவளை முதல் முறையில் கண்ட நாளை மனதில் நினைத்தவனுக்கு தன் போல் தன் கைகள் அவனது இதயத்தை வருடி விட்டது.இது அடிக்கடி நடக்கும் ஒன்று தான்.எப்போதெல்லாம் அவன் மனது அவளின் பால் சாய்கிறதோ அப்போதெல்லாம் அவள் தன் நெஞ்சில் சாய்ந்து நின்ற அந்த இரண்டு நிமிடங்களை தான் மனது நினைக்கும்.
“ப்ச்…எல்லாம் இந்த ராட்சசி பண்றவேலை…இவளால தூக்கம் கெட்டது தான் மிச்சம்…..ஆனா அவ அங்க நல்ல தூங்கிட்டு இருப்பா….”என்று தன் மனதில் திட்டியவன்,நா வறட்சியாக இருக்க நீர் அருந்த சமையல் அறைக்கு வந்தான்.
சமையல் அறையில் நீர் அருந்திவிட்டு வெளியில் வரும் போது தான் மிருணாளினியின் அறையில் இருந்து ஒரு உருவம் வெளியில் வந்தது.சமையல் அறையில் இருந்து வெளி வந்தவன் பாதியிலேயே நின்றுவிட்டான்.வெளியில் வந்த உருவம் மெதுவாக வெளிக் கதவை கை வைக்கும் நேரம்,
“ஏய் யார் நீ….இங்க என்ன பண்ணுற….”என்று கேட்ட விஜய் அந்த உருவத்தை பின்பக்கமாக தூக்கியிருந்தான்.கால்கள் இரண்டும் அந்திரத்தில் பறக்க அந்த உருவத்திற்கு மயக்கம் வரும் போல் இருந்தது.
“ஏய் கேக்குறேன்ல….உன்னை….”என்று அந்த உருவத்தின் முகத்தை காண முன்பக்கம் கையை கொண்டு போன போது தான் அவனுக்கு ஒன்று விளங்கியது தான் தூக்கி இருப்பது ஒரு பெண் என்று.மிருணாவின் அறையில் இருந்து யாரோ வெளியில் வரவும் முதலில் பயந்தவன் வேகமாக சென்று அவளின் அறையின் கதவை திறந்து பார்க்க அங்கு கீர்த்தனா நல்ல உறக்கத்தில் இருந்தாள்,ஆனால் அவளின் அருகில் மிருணாளினியை காணவில்லை.
அதனால் அவளுக்கு ஏதோ என்று பதறியவன் வேகமாக அந்த உருவத்தை பிடித்து தூக்கி இருந்தான்.ஆனால் வந்தது ஆண்ணில்லை பெண் என்று தெரியவும் வேகமாக உதறி கீழே விட்டான்.கீழே விழுந்த உருவம் தான் போர்த்தி வந்த போர்வையால் தன் முகத்தை மேலும் மூடிக் கொள்ள முயல வேகமாக தடுத்த விஜய் போர்வையை விலக்க,அவனைக் கண்டு பல்லை கடித்தபடி திருதிருவென முழித்தபடி இருந்தாள் மிருணாளினி.
“ஏய் நீநீ….”என்று விஜய் சத்தம் போட வேகமாக எழுந்து அவனின் வாயை மூடியிருந்தாள் மிருணாளினி.
“ஷ்…ஷ்….கத்தாத விஜய்….”என்று மிரட்டலாக கூறினாள்.
ஏற்கனவே அவளின் மீது மோகத்தில் இருந்தவனுக்கு இப்போது அவள் தன் மீது கிடக்கும் நிலை மேலும் பித்தனாக்க செய்ததது.தன் மீது விழுந்து கிடப்பவளை எழுப்பவும் தோன்றாது சித்தம் கலங்கி தான் போனது ஆண்மகனுக்கு.மிருணாளினி அணிந்திருந்தது இரவு உடை பனியன்,முக்கால் பேண்ட் என்று பார்பதற்கே சிறிய பெண்ணை போல் இருந்தாள்.இதில் அவள் விஜயின் மேல் விழுந்ததில் அவளது பனியன் சற்று தூக்கி அவளது வெண்ணிற இடுப்பு விஜயின் கண்களை கவர்ந்தது.
“விஜய்…விஜய்…”என்று மிருணாளினி அவனது கவனத்தை திருப்பினாள்.அவனது முகத்திற்கு மிக அருகில் மிருணாளினியின் முகம் இருந்ததது.
“எஎஎ என்ன…”என்று திக்கிதிக்கி விஜய் கேட்க,
“ஓய்…என்ன இப்படி பேசுற…என்ன ஆச்சு…”என்று சத்தமாக கேட்க,இப்போது வாயை அடைப்பது அவனின் முறையானது.
“ஏய் ராட்சசி என்னை கத்தாதனு சொல்லிட்டு இப்ப நீ என்ன செய்யுற….”என்றான்.இன்னும் இருவரும் ஒருவரின் மேல் ஒருவர் தான் கிடந்தனர்.மிருணாளினி்க்கு தான் என்ன செய்கிறோம் என்ற யோசனையெல்லாம் இல்லை அவளுக்கு எங்கே விஜய் கத்தி அனைவரையும் எழுப்பி விடுவானோ என்ற பயம் மட்டுமே.ஆனால் விஜய்க்கு அவ்வாறு அல்லவே அவனது மூளையும்,மனதும் விழித்தே இருந்தது.
ஆனால் என்ன அவனால் அவளை விலக்க தான் முடியவில்லை.மூளை நீ செய்வது தவறு என்று உரைக்க,மனதோ அவளுடனான நிமிடங்களை ரசிக்கத் தூண்டியது.இவ்வாறு இரண்டில் எதை கேட்பது என்று அவன் வாதிட்டுக் கொண்டிருந்தான்.ஆனால் அவனை இன்று விடுவதில்லை என்று அவனின் ராட்சசி முடிவு செய்துவிட்டாள் போலும் அதனால்,மூடியிருந்த அவனின் கைகளில் தன் உதடுகளை அசைக்க அது மேலும் அவனுக்கு அவஸ்தயை தான் தந்தது.
“ஏய்…என்னடி பண்ற….”என்றுவிட்டு அவளின் உதடுகளில் இருந்து கைகளை எடுத்தவன் கேட்க,
“ம்ம்…நீ வாயை போத்தினா நன் எப்படி பேச…”என்று உதடு பிதுக்கி அவள் குறை பட அவளது குழந்தை முகமும் அவளது செம்பவள இதழ்களும் அவனை வா வென்று அழைப்பதை போலவே இருந்தது.
“நான் சும்மா இருந்தாலும் இவ சும்மா இருக்க மாட்டா போல…கடவுளே….”என்று மனதில் வேண்டியவன்,
“ஏய் முதல்ல நீ இந்த ராத்திரி நேரத்தில எங்க போற…அதுவும் இப்படி முகமுடி கொல்லகாரன் வேஷத்தில…”என்று விஜய் கேட்க,
“அது நான் நான்….என்னோட பிவரட் பிளேஸ்க்கு போறேன்….”என்று கூற,விஜயோ,
“அதுக்கு இது தான் நேரமா…ஏன் காலையில போனா என்ன…”என்று எதிர் கேள்வி கேட்டான்.
“அது பகல் நேரத்தில போக முடியாது…அதுமட்டும் இல்லாம அங்க நான் மட்டும் தான் போவேன்…வேற யாரையும் அழைச்சிக்கிட்டு போனது இல்லை…அதான்…”என்று கூற,விஜயோ அவளை முடிந்தமட்டும் முறைத்தான்.அவனைக் கண்டு அசடு வழிந்தவள்,
“ப்ச்…விஜய்….நான் போகனும்….ப்ளீஸ்…ப்ளீஸ்….”என்று சிறு குழந்தையாகவே மாறி அவனின் இரு கன்னங்களையும் பிடித்துக் கொண்டு கெஞ்ச தொடங்க,விஜய்க்கு அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள கைகள் பரபரப்பரத்தது முயன்று தன்னை அடக்கியவன்,
“ஏய்..ஏய்…போதும் விடுடி….”என்று திணறலாகவே வந்தது விஜயின் குரல்,அவனது முகம் முழுவதும் வேர்த்து கொட்டியது.
“உனக்கு ஏன் இப்படி வேர்க்குது ஜெய்….”என்று கேட்டுவிட்டு அவனது நெற்றியில் கை வைக்கபோக,
“அடியே போதும்டி…..என்னால முடியலை…”என்று கத்தியேவன் எழ முற்பட எங்கே முடிந்தது,அவனது ராட்ச்சி தான் அவனின் மேல் இருக்கிறாளே,
“ஏய் என் மேல இருந்து எழுந்திரிடி…முடியலை….”என்று கூற,அப்போது தான் மிருணாளினிக்கும் தான் இருக்கும் நிலை புரிய வேகமாக எழுந்தவளுக்கு விஜயின் முகத்தைக் காணவே கூச்சமாகி போனது தலை குனிந்தவாறே,
“சாரி…நான் தெரியாம….அது….”என்று திக்கிதிணற,வேகமாக அவளின் தோள்களை தொட்டு தன்னை பார்க்க செய்தவன் அவளின் அலைபுரியும் கண்களை பார்த்தவாறே,
“ஓய் நீ எதுவும் தப்பு செய்யல…புரியுதா…”என்றவன் அவளது கண்களில் நான் உனக்கானவன் என்று பார்வையாலே உணர்த்த முயன்றான்.அவளும் அந்த பார்வையின் தாக்கத்தில் விரும்பியே துளைய நினைத்தாள்.விஜயின் கைகள் மெல்ல அவளின் பட்டு கன்னங்களை மென்னைமயாக தடவ பெண்ணவளின் ரோமங்கள் அனைத்தும் நின்று அடங்கியது உடலில் ஏற்படும் மாற்றம் உள்ளத்திலும் ஏற்பட தடுமாறி தான் நின்றாள் பெண்.அவளின் தடுமாற்றத்தை கண்டுகொண்டவன் அவளின் கன்னங்களில் இருந்து கைகளை எடுத்துவிட்டு,
“அது என்ன உன்னோட பிவரட் பிளேஸ்…..அங்க நீ மட்டும் தான் போவியா….”என்று கேட்க,மிருணாளினி முதலில் தன்னை சமன் செய்தவள்,
“அது…அது…நான் வேற யாரையும் ரொம்ப அங்க அழைச்சிட்டு போக மாட்டேன்…அதான்….”என்றவளை மற்றவர்களும் நானும் உனக்கு ஒன்றா என்ற விஜயின் பார்வையில் தன் உதடு கடித்தவள்,அவனின் கைகளை பற்றி வீட்டின் வெளியில் இழுத்துக் கொண்டு வர விஜய்,
“ஏய் எங்க என்னை இழுத்துட்டு போற….”என்று கேட்க,அவளோ அவனின் வார்த்தைகள் எதுவும் காதில் வாங்காமல் அந்த அப்பார்மெண்டின் மேல் தளத்திற்கு அழைத்து சென்றாள்.
“ஓய் மொட்டை மாடி தான் உன்னோட பிவரட் பிளேஸா….”என்று விஜய் கிண்டலாக கேட்க திரும்பி அவனை முறைத்தவள் அவனின் கைகளை விடாது அழைத்து சென்றாள்.அது ஒரு சிறிய சன் ஷெட் அதில் சிறிய கம்பலி போடப்பட்டு இருந்தது.அந்த சன் ஷெட்டில் சுற்றியிருந்த கிரில் கம்பியில் சிறிய கலர் கலர் துணிகள் கட்டப்பட்டு இருந்தது.மிருணாளினி அந்த சன் ஷெட்டில் அமர்ந்து தனது கால்களை கிரில் கம்பிகளுக்கு வெளியில் விட்டு அமர்ந்தவள்,
“நீயும் உட்காரு விஜய்…”என்று அவனையும் அழைக்க அவனும் அவளைப் போலவே அமர்ந்தான்.
மிருணாளினியோ அந்த கிரிலில் தன் தலையை வைத்து படுத்து எதிரில் தெரிந்த டெல்லியின் அழகை ரசிக்க தொடங்கிவிட்டாள்.நகரம் முழுவதும் கண்ணை பறிக்கும் மின்விளக்குளால் நிறைந்து ஏதோ சொர்க்க லோகம் போல் தெரிந்தது அந்த இரவு வேளையில்.விஜயும் அவளை போல அமர்ந்து,
“ம்ம்…சோ இது தான் மேடத்தோட பிவரட் பிளேஸா….நான் கூட ஏதோ பெரிய ஓட்டலா இருக்கும்னு நினைச்சேன்….”என்று கிண்டல் போல கூற,படுத்த வாக்கிலேயே தலையை மட்டும் திருப்பியவள்,
“நான் ரொம்ப வெளியில போனது கிடையாது விஜய்….”என்று கூறிவிட்டு திரும்பிக் கொண்டாள்.விஜய்க்கு அதுவரை இருந்த ஒரு இதமான மனநிலை தடைப்பட்டது போலானது.விஜய்க்கு தானும் அவளைக் காயப்படுத்திவிட்டோம் என்று நினைத்தவன்,
“ஏய் நான் சும்மா…விளையாட்டுக்கு தான் சொன்னேன்….”என்று அவளை சமாதானபடுத்த முயல,அவளோ
“விடு விஜய்….நான் அப்ஸெட்லாம் ஆகல….”என்றவள்,
“சின்ன வயசுலேந்து இந்த தனிமை எனக்கு பழகின ஒண்ணுதான்….ஆனா இப்ப கொஞ்ச நாளா தான் எனக்குனு நீங்க எல்லாம் இருக்கீங்கனு தெரிஞ்சுது…ஆனா இது கூட பயமா இருக்கு விஜய்….”என்று கலக்கமாக கூற,விஜயோ வேகமாக அவளை இழுத்து அணைத்துக் கொண்டு,
“ஏய் இப்படி எல்லாம் பேசுற….என்ன பயம் உனக்கு….”என்று அவளின் மதி முகத்தை கையில் ஏந்தியவாறு கேட்க,
“இது….இந்த நட்பு,பாசம் எல்லாம் எல்லாம் எனக்கு நிலைக்குமா….எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் இருந்து என்கிட்ட அன்பு காட்டுறவங்க யாரும்….”என்று கூற முடியாமல் விஜயின் தோளிலேயே கதறி அழுதுவிட்டாள்.விஜய்க்கு அவளை எவ்வாறு தேற்றுவது என்றே புரியவில்லை வெறும் வார்த்தைகளால் நான் இருக்கிறேன் என்று கூறுவது மட்டும் போதாது என்பது மட்டும் புரிந்தது.
வார்த்தைகளை விட சில நேரங்களில் அனுசரனையான சில செயல்கள் பலரின் வேதனைகளுக்கு வடிகாலாக இருக்கும் அதே போல் தான் இருக்க வேண்டும் என்று விஜய் தனக்குள் நினைத்துக் கொண்டான்.
விஜயும்,மிருணாளினியும் ஒருவருக்கொருவர் மனதால் நெருங்கிக் கொண்டிருக்க.விஸ்வநாதன் விலாஸில் தனது அலுவலக அறையில் தனது கைபேசியை வெறித்தபடி இருந்தார் விஸ்வநாதன்.அவரின் எதிரே அமர்ந்திருந்தவனோ,
“என்ன அங்கிள் நீங்க அமைதயா இருக்கீங்க…பார்த்தீங்கலா உங்க செல்ல பேத்தி என்ன வேலை பண்ணிக்கிட்டு இருக்கானு…நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன்….என்னைக்கு இருந்தாலும் எனக்கு மனைவியா வரப்போறவ அதனால இப்பவே கண்டிச்சு வைங்க….நான் வரேன் அங்கிள்….”என்றவன் அவரின் அருகில் நின்றிருந்த நிரஞ்சனாவிடமும் ஒரு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு சென்றான் ஹர்ஷவர்தன்.