எல்லாம் சுமூகமாக நடை பெரும் என்று நம்பி இருந்த முபாரக் ஹாஜராவே பிரச்சினை பண்ணுவாள் என்று எதிர் பார்த்திருக்கவில்லை. பிடிவாதம் பிடிப்பாள். அவனோடு சண்டை போடுவாள் ஆனால் கல்யாணத்தை மறுக்க மாட்டாள் என்று நினைத்திருக்க கல்யாணம் பண்ண மாட்டாள் என்று சொல்லி விட்டாளாம்.
“அவள் மனதில் என்னதான் நினைத்து கொண்டிருக்கிறாள். அவளே மெஸேஜ் செய்ஞ்சி லவ் பண்ணுறேன்னு சொல்லுவாளாம். இப்போ அவளே லவ் பண்ணலனும் சொல்லுவாளாம்” தனியாக புலம்ப ஆரம்பித்தவனின் மனதுக்கு ஏற்றது போல் பாடலும் ஒலிக்க ஆரம்பித்திருந்தது.
கண்ட கனவு பலித்து விடுமோ! ரஹ்மான் பிரச்சினை பண்ணுவானோ! அவனை எவ்வாறு சமாளிப்பது என்று மண்டையை குடைந்து கொண்டிருந்தவனை புரிந்து கொண்டு ஆறுதலாக பேசி தானே கல்யாணத்தை பேசி முடிப்பதாக கூறிய ரஹமான் பேகத்திடம் எப்படி பேச வேண்டும் என்றும் சொல்லி கொடுத்தான். அவனுக்கு இருக்கும் பக்குவமும் நிதானமும் தனக்கில்லை.
“எடுத்தோம் கவுத்தோம் என்று ஒரு விஷயத்தை பண்ண முடியாது அதுவும் கல்யாண விஷயத்தை பண்ணவே முடியாது. பெண்ணின் சம்மதம் ஆகா முக்கியம் அதனால் தான் பானுக்கு ப்ரொபோஸ் பண்ணவே முடிவு பண்ணேன் மச்சான். ஆனா பிரச்சினைலதான் முடிஞ்சிருச்சு. ஆனாலும் நீ அவளை அடிச்சிருக்க கூடாது” ரஹ்மான் முபாரக்கை முறைக்க
“பின்ன கொஞ்சுவாங்களா?” அன்று இருந்த கோபம் இன்று இல்லா விடினும் தான் செய்தது சரி என்று அடித்து கூறினான் முபாரக்.
தாடையை தடவிய ரஹ்மான் “பானு என்ன தப்பு பண்ணா? நான் தான் அவளை லவ் பண்ணேன். அது அவளுக்கே தெரியாது. அதுக்கே நீ இந்த அடி அடிச்சி இருக்கானா. ஹாஜி பண்ண தப்புக்கு நா வீட்டுக்கு போன உடனே அவ தோலை உரிக்கிறேன்” முகத்தை விறைப்பாய் வைத்துக்கொண்டு ரஹ்மான் கூற
எங்கே ரஹ்மான் ஹஜாராவை அடித்து விடுவானோ என்று முழித்தவன் “நீ எப்படி ஹாஜிய அடிக்கலாம்? என்ன இருந்தாலும் அவ உன் கூட பொறந்தவ இல்லையே! அவ உம்மா, வாப்பா இருக்காங்க” ரஹ்மானை மிரட்டுவதாக நினைத்து முபாரக் தனது வழமையான முகத்தை காட்டலானான்.
“ஓஹ் உனக்கு வந்தா ரெத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்டினி கதையா? இருடா உன்ன ஒரு வழி பண்ணுறேன்” உள்ளுக்கு பொறுமிய ரஹ்மான்
அமைதியாக தாடையை தடவி மீண்டும் யோசித்தவன் “நீ சொல்லுறதும் சரிதான் நான் அடிச்சா தானே தப்பு அவ வாப்பா ஊருல இருந்து வரட்டும் போட்டு கொடுக்குற விதத்துல கொடுக்குறேன். அவரு கையாள எல்லாம் அடிக்க மாட்டாரே! பெல்ட்டை கழட்டி சும்மா விளாசுவாரு பாரு. யா அல்லாஹ். செம்ம அடி. ஒவ்வொண்ணும் இடி மாதிரி இறங்கும். அவரு போடுற போடுல இவ தோல் கிழிஞ்சி ரெத்தம் வழியும் உன் கண்ணுல கண்ணீர் வழியும் எனக்கு பார்க்க ஜாலியா இருக்கும்” ரஹ்மான் சிரித்தவாறே சொல்ல
அவனை நன்றாக முறைத்த முபாரக் “அப்படி ஏதாவது ஆச்சு மச்சான்னு கூட பார்க்க மாட்டேன் வெட்டி கொலை பண்ணிடுவேன்” ஆவேசமானான்.
“தப்பே பண்ணாத என் பானு அடிவாங்குவாளாம். தப்பு பண்ண ஹாஜி உன்ன கல்யாணம் பண்ணி சந்தோசமா குடும்பம் நடத்துவாளாம் எந்த ஊரு நியாயம் டா இது?”
“இப்போ என்ன என்ன செய்ய சொல்லுற? பானுவ அடிச்சது போல அவளையும் அடிக்க சொல்லுறியா?” கோபமாக முபாரக் எகிற
உள்ளுக்குள் நகைத்த ரஹ்மான் “அது… இது நல்ல ஆம்பிளைக்கு அழகு. அவ பண்ணதுக்கும். நீ உன் தங்கச்சிக்கு பண்ணதுக்கும் சேர்த்து வச்சி நீ அவளை ரெண்டு அடி அடிச்சா தான் என் மனசு ஆரும். நீ அடிக்கிற” மிரட்டினான் ரஹ்மான்.
“கல்யாணம் நடக்கட்டும் டா. அடி பின்னி எடுக்குறேன்” வாய் வார்த்தையாக சொன்னவன் “நானாவது என் ஹாஜி குட்டிய அடிக்கிறதாவது என்று ரஹ்மானை பார்த்து இகழ்ச்சியாக சிரிக்க
“கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அவ அடிக்கிற அடில ஏன் டா இவளை கட்டினோம்னு நினைப்ப” உள்ளுக்குள் சிரித்தவன் “ஓகே கல்யாணம் நடக்கட்டும் என்று சிரித்தான்”
காதலில் வீட்டார் பிரச்சினை பண்ணலாம். காதலியே பிரச்சினை பண்ணினால்? என்ன செய்வது? பேசிய கல்யாணம் பேசி முடிக்காமலையே நிற்கிறது. ரஹ்மான் வேறு சுற்றுலா கிளம்பி விட்டான். மூன்று நாட்களாகியும் ஹாஜராவிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. பிடிவாதக்காரி நேரில் சென்று பேசிப் பார்த்தால் தான் அவள் என்ன நினைக்கிறாள் என்று கேட்டு அறிய முடியும். ரஹ்மான் மாதிரி பொறுமையாக இருக்க தன்னால் முடியாது. இரண்டு நாள் பொறுமை காத்தவன் பொறுத்தது போதும் என்று ஹாஜியை காண கிளம்பினான்.
காலேஜ் விட்டு வந்து கொண்டிருந்தாள் ஹாஜரா. அவளை காலேஜ் அழைத்து செல்வதும் வருவதும் பாஷீதின் பொறுப்பு. பைக்கில் அழைத்து செல்பவன் இன்று வர தாமதம் போலும் நடந்து வந்து கொண்டிருந்தவளை வழி மாறித்தான் முபாரக்.
“என்ன ஹாஜி தனியா போய் கிட்டு இருக்க உன் பாடிகார்ட காணோம்”
திடுமென வண்டியை குறுக்காக நிறுத்தி பேசுபவனை அதிர்ச்சியாக பார்த்தவள் யாரென்றே தெரியாதது போல் ஒரு பார்வையை பார்த்து விட்டு கண்டு கொள்ளாமல் வண்டியை சுற்றிக்கொண்டு நடக்கலானாள்.
“திமிரு புடிச்சவ. உடம்பு பூரா கொழுப்பு” பல்லைக் கடித்தவன் வண்டியை உருட்டியவாறு அவள் பின்னால் வர தூரத்தே இந்த காட்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த பாஷித்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“எப்படி இருந்த முபாரக் உன் நிலைமை இப்படியா ஆகணும். லவ் பண்ணா பசங்க நிலைமை பரிதாபம்தான். கவலைக்கிடம்தான். ஆனா பொண்ணுங்கதான் பாவம்னு சொல்லுறாங்க. அது ஏமாந்த பொண்ணுங்களுக்கு மட்டும் பொருந்தும் மகாஜனங்களே! நல்ல பசங்களுக்கு மாட்டுறதெல்லாம் ராட்சசிங்க. ஆனா முபாரக் உன் நிலைமை இப்படியா டா ஆகணும். இத அஸ்ரப் கிட்ட சொன்னா ஊர் பூரா சொல்லிடுவானே! சொல்ல கூடாதுனு நாநா வேற சொல்லிட்டானே! இப்போ என் நிலைமைதான் படு மோசம். சொல்லவும் முடியாம, சொல்லாம இருக்கவும் முடியாம. மண்டை வெடிச்சிடும் போல இருக்கே!” புலம்பினான் பாஷித்.
ஹாஜியின் முன்கோபத்தை பற்றி நன்கறிந்தவன் பாஷித். கோபம் வந்தால் கண்மண் தெரியாமல் ஏதாவது செய்வாள் அவள் முபாரக்கை காதலிப்பதாக ரஹ்மான் சொல்ல நம்ப மறுத்தான் பாஷித்.
“ரெண்டுமே சிடுமூஞ்சிக ரெண்டுக்கும் செட்டே ஆகாது. ஒரு கை அடிச்சா ஒரு கை அரவணைக்கணும். இதுங்க ரெண்டுமே சண்டை போட்டே சாக போறாங்க. இல்ல இல்ல எங்களை சாகடிக்க போகுதுங்க” சத்தமாகவே சிரிக்க
“முபாரக் மாதிரி ஒரு சிடுமூஞ்சிய சமாளிக்க ஏத்த சிடுமூஞ்சி நாம ஹாஜி தான்னு ஏன் நினைக்க மாட்டேங்குற?” ரஹ்மான் கண்சிமிட்டி சொல்ல
“ஓஹ்.. ஓஹ்.. காதலுக்கு சப்போர்ட் பண்ணுற மாறி பண்ணி மச்சானை பழிவாங்குறியா?” மீண்டும் சத்தமாக சிரித்தான் பாஷித்.
“இது எப்படி இருக்கு?”
“பங்கம். இது முபாரக்குக்கு தெரியுமா? தெரிஞ்சா துண்டை காணும் துணிய காணோம்னு ஓட மாட்டானா?” சிரிப்பை அடக்க முடியாமல் திமிறினான் பாஷித்.
“எல்லாம் விதி லவ் பண்ணா அனுபவிக்கணும்ல. அன்னைக்கி வார்த்தையை விட்டு வம்ப விலை கொடுத்து வாங்கி வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிட்டான்” ரஹ்மான் சிரிக்க
“ஹனா கூட பரவால்ல அனுசரிச்சு போவா.. இவ ராட்சசி.. முபாரக் நிலைமை நினச்சா தான் பாவமா இருக்கு. ஆனாலும் அவனுக்கு வேணும்” இன்னும் சிரித்துக்கொண்டுதான் இருந்தான் பாஷித்
“ஆமா டா தம்பி நீ யாரையும் லவ் பண்ணலயா? பண்ணுறதா இருந்தா சொல்லு நான் ஹெல்ப் பண்ணுறேன்” தம்பியோடு தோழனாக பழக்கூடியவன் ரஹ்மான் அப்படி ஏதாவது இருந்தால் மறைப்பானா? சொல்வானா? குடும்பத்தில் குழப்பம் வருமா என்றெண்ணியே கேட்டான்.
பாஷித்தின் சிரிப்பு பட்டென்று நின்று “எதுக்கு இருக்குற சந்தோஷமும் பறிபோகவா? உம்மா கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லுற வரைக்கும் சிங்களாத்தான் சுத்த போறேன். பொண்ணு பாக்குறேன்னு ஒருவருஷம் ஓடிடும். கல்யாணம்னு ஆறு மாசம். அப்பொறம் கல்யாணம் பண்ணிக்குவேன்”
“ஏன் டா… இப்படி இருக்க”
“பார்த்த உடனே எவளையும் பிடிக்கல. பார்க்க பார்க்க பிடிக்குமான்னு தெரியல பொறுத்திருந்து பார்க்கலாம்”
அன்று நாநாவிடம் பேசியது. அதன் பின் சுற்றுலா சென்றவன் அலைபேசியில் அழைத்து முபாரக் ஹாஜாராவை சந்தித்து பேச வருவான் ஒதுங்கி இரு என்று விட தூரத்திலிருந்து நடப்பதை கவனிக்கலானான்.
முபாரக் வண்டியை விட்டு வழி மறுத்ததும் சூப்பர் ஸீன் என்று நினைத்தவன் அவள் சுற்றிக்கொண்டு போகவும் சபாஷ் சரியான போட்டி என்று சிரித்தான்.
ஹாஜரா கோபமாக செல்வதும் முபாரக் அவள் பின்னால் வண்டியை உருட்டவவும் தானும் வண்டியை கிளப்ப முனைய அவன் வண்டியில் மோதி நின்றது ஒரு ஸ்கூட்டி.
“கண்ண எங்க வச்சி கிட்டு வண்டி ஓட்டுற? முன்னாடி பாத்து ஒட்டு” ஸ்கூட்டியில் பின்னால் அமர்ந்திருந்தவள் தான் குரல் கொடுத்தாள்.
முன்னால் அமர்ந்திருந்தவளோ “சாரி சார் நான் கவனிக்கல” என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள்
முன்னால் அமர்ந்திருந்தவள் பிரச்சினை வேண்டாம் என்று அவனிடம் மன்னிப்பு கேட்க பின்னால் இருந்தவள் அவளை ஒருமையில் அழைத்ததால் இன்னும் சூடாக்கி பாஷிதை கண்டபடி வசை பாட ஆரம்பித்தாள்.
காது கொடுத்து கேக்கவே முடியாதபடியான வார்த்தைகள் இருக்க பாஷித் முகம் சுளிக்க முன்னால் இருந்தவள் அழ ஆரம்பித்தாள்.
அவள் அழவும் பின்னால் இருந்தவள் துடித்தாளோ இல்லையோ! பாஷித்தின் மனம் துடித்தது.
கைக்குட்டையை சட்டென்று எடுத்து அவள் புறம் நீட்டியவன் “தப்பு என்னோடதுதான் நான் தான் கவனிக்காம வண்டிய எடுத்தேன். நீங்க போங்க” அவன் மேல் எந்த தப்பும் இல்லை என்றாலும் தானாகவே! இறங்கி வந்தான் பாஷித்.
ஆனாலும் பின்னால் இருந்தவள் விடுவதாக இல்லை. அவள் கத்திக்கொண்டே இருக்க, முன்னால் இருந்தவள் கண்களை துடைத்தவாறு வண்டியை எடுத்திருந்தாள்.
“அல்லாஹ் ஒரு பொண்ணோட கண்ணீர் மனச அசைக்குதுனா நல்லதுக்கில்ல காதல் வைரஸ் தாக்கிருச்சுனு நினைக்கிறேன். காப்பாத்து” தனக்குத்தானே கிண்டலாக சொல்லிக்கொண்டவன் முபாரக்கை பின்தொடர போக பின்னால் அமர்ந்திருந்தவள் இவனை திரும்பி பார்த்து முறைத்தது விட்டு முன்னால் இருந்தவளை வசை பாடுவது இவனுக்கு தெளிவாக கேட்டது.
தன்னை திட்டுவதை கூட விட்டவன் அவளை திட்டவும் கொதித்து இப்போதைக்கு அவர்களை பின் தொடர்வது சாத்தியமில்லை என்றதும் அலைபேசியை கையில் எடுத்தவன் வண்டியின் என்னை புகைப்படம் எடுத்துக்கொண்டான்.
முபாரக்கை கண்டதும் ஹாஜராவின் கோபம் உச்சத்துக்கு சென்றிருக்க, அவனை கண்டு கொள்ளாமல் நடக்க அவனும் விடாமல் பின் தொடரலானான்.
“ஒய் நில்லு டி. உன்னைத்தான். ஒய் ஹாஜி… பாடும் குயிலே! நில்லுடி” முபாரக் என்ன சொல்லியும் காது கேளாதவள் போல் கண்டு கொள்ளாமல் செல்பவளை என்ன செய்வதாம்.
“இது சரிவராது. இவள மடக்க பைக்கை உருட்டினா வேலைக்காகாது” என்றெண்ணியவன் வண்டியை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு சாவியை காற்சட்டை பையில் இட்டவாறே ஹாஜராவின் பின்னால் ஓடியிருந்தான். அதற்குள் சில அடிகளை வேகமாக எடுத்து வைத்திருந்தாள் ஹாஜரா.
அவள் தோள் உரச வந்து நின்றவன் “என்ன ஹாஜி ஒலிம்பிக்ல ஓட ஐடியா இருக்கா? என்ன இந்த ஓட்டம் ஓடுற? என்ன கண்டு பயமா?” புன்னகை மன்னனாகவே மாறி இருந்தான் முபாரக்.
அவன் புறம் திரும்பி முறைத்தவள் எதுவேமே பேசாமல் நடந்தாலும் அவள் எண்ணமெல்லாம் பாஷித் ஏன் இன்னும் வந்து சேரவில்லை என்றிருக்க அவன் வந்தால் முபாரக் அவளிடம் வம்பு பண்ணுவதாக கூறி இவனுக்கு ரெண்டு அடியாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்று பொருமினாள்.
“ஏய் நில்லு டி இப்படி ஓடிக்கிட்டே இருந்தா எப்படி பேசுறது”
“உம்மா, வாப்பா எனக்கு பேர் வச்சிருக்காங்க ஏய்யும் ஓய்யும் எண்டுகிட்டு” மனதால் அவனுக்கு பதில் சொல்லியவள் வாய் திறவாமலையே நடந்தாள்.
இப்படியே நடந்தாள் வீடும் வந்து விடும். பேச வேண்டியதும் பேச முடியாமல் போகும் என்று உணர்ந்த முபாரக் கிடைத்த சந்தர்ப்பத்தை விடமுடியாததால் ரோடு என்றும் பாராமல் ஹாஜராவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஒரு மரத்தடியை நோக்கி நகர்ந்தான்.
கையை விடாமல் “எங்க கத்திதான் பாரேன். நீ என் பொண்டாட்டி. வீட்டுல சண்டை போட்டுட்டு வந்துட்டான்னு சொல்லுவேன்”
“நீ சொன்ன நம்பிடுவாங்களா?”
“தாலியோ? மோதிரமோ? கேக்க மாட்டாங்க உன் முக்காடு இருக்கே நம்பிடுவாங்க” என்றவன் நகைக்க
“உன்ன யாரென்றே தெரியாதுன்னு சொல்லி உன் கன்னம் பழுக்க அறைஞ்சேன்னு வை நீ சொல்லுறது பொய்னு தெரிஞ்சிடும் அப்பொறம் அவங்களே நாலு சாத்து சாத்தி உன்ன போலிஸ்லதான் புடிச்சி கொடுப்பாங்க” முபாரக்குக்கே தண்ணி காட்டலானாள் ஹாஜரா.
“செஞ்சாலும் செய்வா ராட்சசி” முணுமுணுத்தவன் “கன்னத்துல அறைஞ்சி நீ பொய்னு நிரூபிக்க முனைஞ்சா… ஊர் முன்னாடி உன்ன கிஸ் பண்ணி நீ கோபத்துலதான் அறைஞ்சேன்னும், நீ என் பொண்டாட்டி தான் அதான் கிஸ் பண்ணேன்னு எப்படியாச்சும் என் கூட வீட்டுக்கு அனுப்பி வைங்கனுன்னு கெஞ்சுவேன்”
“செஞ்சாலும் செய்வான் ராட்சசன்” முணுமுணுத்தவள் “இப்போ உனக்கு என்னதான் வேணும்?” அவனை முறைத்தவாறே தான் கேட்டாள் ஹாஜரா.
“ஜோக்கு? இதுக்கு நான் சிரிக்கணும். சொல்ல ஒன்னும் இல்லனா நான் கிளம்புறேன்”
“உன்ன போல ஒருத்தி இந்த பிரபஞ்சத்திலேயே இருக்காது ஹாஜி” சிரியஸ்ஸா சொன்னவன் விசயத்துக்கு வந்தான் “சரி சொல்லு ஏன் என்ன கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்ன?”
“ஏன் பண்ணனும்? எதுக்கு பண்ணனும்”
“லவ் பண்ணுறில்ல”
“யாரு? யாரை?”
“நீதான். என்ன”
ஹாஜரா ஏடாகூடமாக பேசிக்கொண்டிருக்க முபாரக்கும் அதே போல் பேசலானான்.
கடுப்பானவள் “இங்க பாருங்க நா யாரையும் லவ் பண்ணல. பண்ணவும் மாட்டேன். உங்க கிட்ட உங்கள லவ் பண்ணுறேன்னு சொன்னேனா?” ஒருமையில் பேசுவதை கைவிட்டவள் மரியாதை பன்மைக்கு மாறி இருந்தாள்.
“அப்போ எதுக்கு எனக்கு மெஸேஜ் பண்ணி பேசின? பாட்டு படிச்சி ஆறுதல் சொன்ன? அது லவ் இல்லையா?”
“இல்ல”
“சரி இத மட்டும் சொல்லு எனக்கு மட்டும் தான் போன் பண்ணி பேசினியா இல்ல இன்னும் யாருக்காவது போன் பண்ணி பேசினியா?”
அந்த கேள்வி ஹாஜராவின் இரத்தத்தை கொதிக்க வைக்க “என்ன பத்தி என்ன நினைச்சி இந்த கேள்விய கேட்டீங்க?” என்றவள் எழுந்து கொள்ள
அவள் தோளை அழுத்தி அமரவைத்தவன் “கோபப்பட்டு ஒன்னும் ஆகா போறதில்ல பதில் சொல்லு” நீ சொல்லியே ஆகணும் என்றிருந்தது அவன் குரல்
ஹாஜராவுக்கு கோபம், ஆத்திரம், கொலை வெறி கூட வந்தது கூடவே கண்ணீரும். தான் முபாரக்கை வம்பிழுக்க மெஸேஜ் செய்து இன்று அது தன்னுடைய மானத்தையே விலைபேசி இருந்தது.
பல பசங்களோடு பேசுகிறாயா என்று கேட்டு மானபங்க படுத்தி விட்டதுமில்லாது பதில் சொல்லியே ஆகணுமாமே! ஹாஜராவின் தொண்டை அடைத்தது
“உங்க கூட மட்டும் தான் பேசினேன். நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டேனா நான் கிளம்புறேன்” கலங்கிய கண்களோடு சொல்லியவளை பாவமாக பார்த்தாலும்
“ஏன் என் கிட்ட மட்டும் அப்படி பேசின?”
முபாரக்கின் குரலில் என்ன இருந்தது என்று ஹாஜராவல் ஊகிக்க முடியவில்லை. அவன் என்ன பதிலை எதிர்பார்க்கிறான் என்றும் புரியவில்லை. ஆனால் அவள் உண்மையை சொல்லும் நேரம் வந்து விட்டது என்பதை மட்டும் உணர்ந்தவள்
“உங்கள பழிவாங்க” பட்டென்று சொல்லி விட்டாள்.
சத்தமாக சிரித்தவன் “பழிவாங்கவா” சந்தேகமாக அவளை பார்க்க அது அவளை ஏற்றி விட்டிருந்தது.
கண்களில் இருக்கும் கண்ணீர் எல்லாம் காற்றில் கரைந்து மறைந்திருக்க, அவன் சிரித்ததில் இரத்தம் சூடாக்கி கோபம் மட்டும் எட்டிப்பார்த்து முட்டி நின்றது.
“நீங்க மட்டும் என்ன லவ் பண்ணி இழுத்துட்டு போவேன்னு சொல்லலாமா? அதான் நான் நீங்க சொன்னதை செஞ்சேன்” என்றாள்.
பானுவை பெண் பார்க்க சென்ற பொழுது முபாரக் கூறியதை ஞாபகப் படுத்தியவள் அதற்காக பழிவாங்கத்தான் தான் அலைபேசியில் உரையாடியதாக கூறினாள்.
“அறைஞ்சேன்னு வை முப்பத்தி ரெண்டு பல்லும் கொட்டிடும். பழிவாங்குறாளாம். நான் என்ன கனவா கண்டேன் ரஹ்மானுக்கு உன்ன மாதிரி ஒரு தங்கச்சி இருப்பா. அதுவும் நான் அப்படி ஒரு வார்த்தையை சொல்லும் பொழுது என் கண்ணு முன்னாடி வந்து நிப்பானு. அந்த நேரத்துல ரஹ்மான் மேல கோபம். கோபத்துல சொன்னதை புடிச்சி தொங்கிக்கிட்டு” கண்கள் சிவந்து கைகளை மடக்கியவாறு அமர்ந்திருந்தான் முபாரக்.
இதைத்தான் ரஹ்மானும் சொன்னான். நாநா சொல்லும் பொழுது ஏற்க மறுத்த மனம் முபாரக் சொல்லும் பொழுது ஏற்றுக்கொண்டது. ஆனாலும் அவள் பிடிவாதம் அதற்கு இடம் தராமல்
“நீங்களும் ஒன்னும் என்ன லவ் பண்ணலையே என் அக்காவைத்தானே சைட் அடிச்சீங்க. இல்லனு சொன்னீங்க இந்த காப்பிய மூஞ்சிலயே ஊத்திடுவேன்” கோப மூச்சுக்கலை விட்டவாறு சொல்ல அவள் பிரச்சினையை கண்டு கொண்டான் முபாரக்.
தன்னோடு அலைபேசியில் உரையாடியவன். எதிர்கால ஆசைகள், கனவுகள் என்று எல்லாம் பகிர்ந்து கொண்டவன். தான் கண் முன்னாலையே இன்னொரு பெண்ணை சைட் அடித்தால் வரும் பொறாமை அவன் மீது இருக்கும் காதலால் அன்றி வேறென்ன?
“அப்போ மேடம் என்ன லவ் பண்ணுறாங்க. நான் ஹானாவை பாத்ததால் சொல்லாம இருக்காங்க. இல்ல இல்ல. சொல்லவே கூடாதுனு இருக்காங்க”
“நான் லவ் பண்ணது என் கூட போன்ல பேசின பொண்ண. அவ மூஞ்சும் தெரியாது. கருப்பா.. செவப்பானு கூட தெரியாது. ஏன் ஊனமான்னு கூட தெரியாது. அவ குரல் மட்டும்தான் தெரியும். பேர் கூட தெரியாது. குரலை மட்டும் வச்சி கிட்டு அவளை எப்படி கண்டு பிடிக்கிறது? நீயே சொல்லு?” அவளிடமே கேள்வியை முன் வைத்தவன்
“திடிரென்று பேசுறதையும் நிறுத்திட்டா. என்ன பிரச்சினைனும் தெரியல. ஒருவேளை அவ வீட்டுல கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்களோ என்னமோ” ஓரக்கண்ணால் ஹஜாராவை பார்த்தவன் தொடர்ந்தான்.
“அவளை எங்க போய் தேடுறது. என்ன பண்ணுறது ஒன்னும் தெரியாம பைத்தியம் பிடிக்காத குறையா? சுத்திக்கிட்டு இருந்தா… என் வீட்டிலையே அவ பாடுறா.. எனக்கு எப்பிடி இருந்திருக்கும். நீயே சொல்லு” மீண்டும் அவளிடமே கேட்க முழித்தாள் ஹாஜரா. அவளுக்கு தெரியும் பானுவுக்கு மருதாணி போட்ட அன்று அவள் பாடியதைத்தான் கூறுகிறான் என்று.
“அவளை பார்க்கணும்னு இருந்த அவசரத்துலையும், ஆசையிலையும் யோசிக்காம ஜன்னலை திறந்து பார்த்தா கிட்டத்தட்ட பதினஞ்சு பொண்ணுங்க. இதுல என் பாடும் குயிலை நான் எப்படி கண்டு பிடிக்கிறது? அவ பாடினாதானே கண்டு பிடிக்க முடியும். ஆனா ஹனா பேசினா அந்த குரல் உன் குரலை ஒத்திருந்ததால அது நீதான்னு நினைச்சி அவளை பார்க்க ஆரம்பிச்சேன்.
அப்போவாச்சும் சொல்லி தொலைக்க வேண்டியதுதானே நான்தான் உன் கூட போன்ல பேசினேன்னு அது என்ன என் அக்காக்கு கல்யாணம் நிச்சயமாக்கிருச்சுனு சொல்லுறது. நான் என்னமோ ஹனா கல்யாணம் நிச்சயமானதாலதான் போன் பேசுறத நிறுத்திட்டானு நெனச்சிட்டேன்” குற்றம் முழுவதும் ஹாஜராவின் மேல்தான் என்றான் முபாரக்.
அவனை ஒரு பார்வை பார்த்தவள் “ஏன் அப்போ அன்னைக்கி நான் மதில் கிட்ட இருந்து தானே அக்காக்கு நிச்சயமாக்கிருச்சுனு சொன்னேன் அப்போ தெரியலையா நான்தான் உங்க கூட போன் பேசினதினு” அப்பொழுதும் தான் செய்த தவறை உணராமலே பேசினால் ஹாஜரா.
“அன்னைக்கு உனக்கு சளி பிடிச்சிருந்துச்சே! குரல் வேற ஒரு மாதிரி இருந்துச்சு எனக்கு எப்படி தெரியும். கல்யாணம் அன்னைக்கி கூட மொளகா ஜூஸ் குடிச்சதுல நீ பேசியதும். உன் குரலும் கவனிக்கல” அவள் சொல்லும் முன்பே ஞாபகப்படுத்தினான் முபாரக்.
“எங்க கவனிப்பீங்க தான் ஹானாவை பாத்துட்டு இருந்தீங்களே” முணுமுணுத்தவள் “சரி இப்போ போன் பண்ணது நான் தான்னு தெரிஞ்சி போச்சு அதனால என்ன லவ் பண்ணுறீங்கன்னு சொல்ல வரீங்க. தெரியலைனா ஹானாவை லவ் பண்ணி அவ கிட்ட பேசி சம்மதம் வாங்கி அவ கல்யாணத்த நிறுத்தி, வீட்டுல பேசி அவளை கல்யாணம் பண்ணி இருப்பீங்க, வீட்டுல சம்மதிக்கலைனா அவளை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணி இருப்பீங்க அப்படித்தானே”
“ரொம்பதான் பண்ணுற ஹாஜி. கோபத்துலதான் டி சொன்னேன் தூக்கிட்டு போவேன்னு. அப்படியெல்லாம் பண்ண மாட்டேன். ஹனாகிட்ட பேசினாவே தெரிஞ்சிடுமே அவ என் கூட போன்ல பேசலானு அப்பொறம் எதுக்கு அவளை டிஸ்டர்ப் பண்ண போறேன். எதுக்கு புரிஞ்சிக்காம பேசுற?” முபாரக்கின் கோபம் கொஞ்சம் எட்டிப்பார்த்தது.
“இங்க பாருங்க நீங்க வர சொன்னீங்க வந்தேன். பேசணும்னு சொன்னீங்க பேசி முடிச்சிடீங்களா?”
“முடிவா என்ன சொல்லுற?”
“என்ன சொல்லணும்னு எதிர்பாக்குறீங்க?”
“என்ன லவ் பண்ணுறியா இல்லையா?”
“இல்ல”
“இதுதான் உன் முடிவா?”
“ஆமா”
“அப்போ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு லவ் பண்ணு” கூழாகவே பதில் சொன்னான் முபாரக்.