அத்தியாயம் 5
“அப்படி என்ன தான் உங்களுக்குள் பிரச்சனை?” சிம்மா கேட்டான்.
நட்சு, “எல்லாமே சுபியின் அண்ணனால் தான்” என்று மிருளாலினி சொல்ல, தெளிவா சொல்றீயா? சிம்மா சத்தமிட்டான்.
சிம்மா, நாங்க ஊரிலிருந்து கிளம்பி வந்தோம்ல்ல. எல்லாமே நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது. நட்சுவுக்கு குழந்தை பிறக்கும் தேதியும் மருத்துவர் கொடுத்தார். அந்த மாதம் முழுவதும் சுபி என்னுடன் பேச கூட இல்லை.
வீட்டு வேலை முடிந்தாலும் அத்தையும் ஏதாவது சொல்லி அவனுடன் பேச கூட விடலை. இரவு வேலையை முடித்து உறங்க செல்லும் போது அவன் தூங்கி இருப்பான். இப்படியே அந்த மாதம் சென்றது. ஆனால் சுபி நட்சுவிடம் மட்டும் நன்றாக பேசினான்.
“நான் என்ன நினைப்பது?” ஏற்கனவே இவளை காதலித்தவன் வேறு. என் அத்தையும், அக்காவும் ஒருமாதிரி இருவரையும் பேச என்னாலும் வெகுநாட்கள் பொறுக்க முடியவில்லை. பேசலாம் என்று அவன் ஆபிஸிற்கு சென்றேன்.
போகும் வழியிலே மயக்கம் வந்தது. அதனால் வீட்டிற்கு வந்து விட்டேன். வீட்டில் நான் பேச சென்றாலே என்னை விட்டு விலகி விலகி சென்றான். நட்சுவிற்கு குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் தான் நான் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இரவு அவன் வர நேரமாகுது என்று போன் செய்தேன். நட்சு வீட்டில் இருப்பதாக சொன்னான். அங்கு சென்றாவது விசயத்தை சொல்லலாம் என்று நினைத்து அங்கு சென்றேன். இருவரும் நெருக்கமாக இருந்தனர். எனக்கு கோபம் வந்து நட்சுவை வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டேன். பின் தான் அவளுக்கு வயிற்றில் வலி வந்து அவன் அவளை அமர வைக்க உதவினான் என்று தெரிந்தது.
மறுபடியும் இவளை பார்க்க வீட்டிற்கு சென்றேன். இவளும் வீட்டில் இல்லை. அவனும் நடந்ததை சொல்லி விட்டு கோபமாக வெளியே சென்று விட்டான். எனக்கு அப்பொழுதும் தவறாக தோன்றியது. வீட்டிற்கு வந்த அவனுடன் சண்டை போட்டேன்.
நீ இல்லை என்றதும் உன்னை தேடி வீட்டிற்கு சென்றான். உன் பொருட்களும் அங்கு இல்லை. அவன் கோபத்தில் என்னை அடித்து விட்டான். அப்பொழுது தான் நானும் வீட்டை விட்டு சென்று இப்படியாகி விட்டது. பின் தான் உங்களை சந்தேகப்பட்டது தவறு என்று புரிந்தது என்று அழுதாள்.
ஓ, “அந்த மகாராசி நீ தானா?” எள்ளலாக தமிழினியன் மிருளாலினியை பார்த்து கேட்டான்.
சார், “சும்மா இருங்க” என்று நட்சத்திரா அவனை பேச விடாமல் தடுத்தாள்.
ஸ்டார், நீ பேசாத. நான் மட்டும் அன்று உன்னை பார்க்கவில்லை என்றால் நீயும் அர்சுவும் உயிரோட இருந்திருக்க மாட்டீங்க என்று சொல்ல, மிருளாலினி பயத்துடன் “என்ன சொல்றீங்க?” என்று கேட்டாள்.
யாருமில்லா சாலையில் மயங்கி இருந்தாள். இரு நாட்களாக சாப்பிடாமல் இருந்திருக்கா. அவளை என்னோட ஹாஸ்பிட்டலுக்கே அழைத்து சென்றேன். அவள் விழித்தவுடனே மகப்பேறு வலி வந்திருச்சு. அவள் ரொம்ப வீக்கா இருந்தா. என்னோட ப்ரெண்டு ஒரு பொண்ணு தான் உதவினாள். ஒருவரை தான் காப்பாற்ற முடியும்ன்னு சொல்லீட்டா. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏதோ அந்த கடவுள் புண்ணியம். இருவருக்கும் ஏதும் ஆகலை என்றான்.
“சாரிடி” என்று மிருளாலினியும் நட்சத்திராவை அழைத்தாள்.
சாரி ரொம்ப ஈசியா சொல்லீட்டம்மா. நட்சத்திரா உடல் நிலை ஒரு வாரம் மிகவும் மோசமாக இருந்தது. அவள் இடையிடையே மட்டும் தான் விழித்தாள். அவள் உயிரோட இருப்பாலான்னு எங்களுக்கு சந்தேகமா இருந்தது. ஆனால் அதன் பின் நன்றாக பேச ஆரம்பித்தாள். அவள் மகனை பார்த்து அவள் உடல்நிலை தேறியது என்றார் வேல்விழி.
என்னால் தான் என் சுபியும் என்னை விட்டு போயிட்டான். நட்சுவின் நிலைக்கும் நான் தான் காரணம் என்று அழுதாள்.
மிரும்மா, “அப்ப உன்னோட குழந்தை?” என்று அன்னம் கேட்டார்.
குழந்தை..”அவனும் என்னை விட்டு போயிட்டான்”.
“என்னடி சொல்ற?”
ஆமா நட்சு, அத்தையும் அக்காவும் என்னோட மாத்திரையை மாத்தி வச்சிருக்காங்க. அது தெரியாமல் எப்பொழுதும் போல் நான் மாத்திரை சாப்பிட்டேன். கரு கலைந்து விட்டது என்று கண்ணீருடன் நின்றாள்.
“பைத்தியமாடி நீ?” அவன் இல்லை என்றதும் உன் அம்மா வீட்டிற்கு போயிருக்கலாம்ல்லடி. “எதுக்கு அங்க இருந்த?”
என்னால அங்கிருந்து செல்ல முடியலடி. எங்களுக்கான நினைவுகள் அங்க தான இருக்கு. நான் போகலை என்றாள்.
“அப்படின்னா இத்தனை வருடமா அவங்களோட தனியாவா இருந்த?”
ஆமாடி, அங்க தான் இருந்தேன். ஆனால் தனியா இல்லை என்றாள்.
“தனியா இல்லையா? என்ன சொல்றம்மா?” பரிதி கேட்டார்.
அங்கிள், “சுபி என்னுடன் என் பக்கத்தில் தான் இருக்கான்”.
அவன் இல்லைடி. செத்து போயிட்டான்டி நட்சத்திரா கத்தினாள்.
இல்ல, “அவன் என்னருகே இருப்பதால் தான் அவன் அண்ணனால் என் பக்கம் வர முடியலை” என்றாள் மிருளாலினி.
என்னடி சொல்ற? என்று கவலையுடன் நட்சத்திரா கேட்க, அவன் இறந்து இரு நாட்கள் தான் இருக்கும். அவன் அண்ணன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்தான். அவன் தூக்கி எறியப்பட்டான். எனக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது. ரொம்ப பயமா இருந்தது. ஆனால் அவனோ நான் தான் ஏதோ மேஜிக் பண்றேன்னு அத்தை, அக்காவிடம் புலம்பினான்.
இதே போல் அவன் என்னை தொட வரும் போதெல்லாம் அவனுக்கு தான் அடிபடும். என்னால சுபிதான்னு உணர முடியுது நட்சு என்றாள்.
சிம்மா யோசனையுடன், “அவன் இறந்த தேதி என்ன?” என்று கேட்டான். மிருளாலினி சொல்ல, உனக்கு முதலாவதாக உதவிய அதே நாள் இரவு எனக்கும் யாரோ பக்கம் இருந்தது போல் இருந்தது. அன்று மட்டும் இல்லை. இப்ப வரை அப்படி தான் இருக்கு. நான் கூட என்னோட எதிரிகள் யாராவது இருப்பாங்கன்னு நினைச்சேன் என்று சிம்மா சொல்ல, சிம்மா “அவன் எதுக்கு உன்னை தேடி வரணும்?” மிருளாலினி கேட்க, அனைவரும் இருவரையும் பயத்துடன் பார்த்தனர்.
அப்பொழுது ஓர் சிரிப்பலை வந்தது. தமிழினியன் பயங்கரமாக சிரித்தான்.
“எதுக்குடா சிரிக்குற?” சிம்மா அதட்ட, “இருவரும் நல்லாவே பேய்க்கதை சொல்றீங்க” என்று அவன் சிரித்தான்.
“பேயா? என்னோட சுபி ஒன்றும் பேயில்லை” என்று அவனை அடிக்க வந்தாள் மிருளாலினி.
“உனக்கு என்ன பைத்தியமாம்மா? செத்துப் போனவங்க எப்படி இவ்வுலகில் இருப்பாங்க?” ஒரு வேலை இருந்தாலும் அவங்க தீய குணமானவங்களாக தான் இருப்பாங்க என்று வேல்விழி சொல்ல, “என்னோட சுபி தீயவன் இல்லை” என்று கோபமாக வேல்விழியிடம் கத்தினாள் மிருளாலினி.
ஏய், “என்ன? என்னோட அம்மாவிடமே கத்துற?” என்று சினமுடன் தமிழினியன் மிருளாலினியை அடித்தான். சார்..என நட்சத்திராவும், ஏய்..என்று சிம்மாவும் கத்தினார்கள்.
அவன் அடித்ததில் கீழ விழ இருந்த மிருளாலினியை பிடித்திருந்தது சுபிதனின் ஆன்மா. அவள் முக்கோணத்தின் நீள்வாக்கில் அந்தரத்தில் நிற்க, ஆகாயம் இருண்டு பலத்த காற்று வீசியது. அனைவரும் திகைத்து நிற்க, அவள் நேராக நின்றாள். மறுநிமிடம் தமிழினியன் பறந்து கோவில் சுவற்றில் அடித்து தள்ளப்பட்டான்.
அர்சலன் அங்கே வந்து, “அங்கிள் எதுக்கு என்னோட ஸ்வீட்டாவ அடிச்சீங்க?” என்று மிருளாலினி அருகே வந்து யாருமில்லாத இடத்தை அடித்து பேசினான்.
உன்னோட ஸ்வீட்டா என்னோட டார்லிங்கை அடித்தான். சுபி ஆன்மா பேச, நான் தான உங்களோட டார்லிங். “இவங்கள டார்லிங்குன்னு சொல்ற?”
“இருவருமே என்னோட டார்லிங் தான்” என்று ஆன்மா கையை நீட்ட, அர்சு யாருமில்லா இடத்தில் யாரையோ அணைப்பது போல் நின்றான்.
“அர்சு” என்று பயத்துடன் வேகமாக நட்சத்திரா அவனை நகர்த்தி, “யார்கிட்ட பேசிட்டு இருக்க?” என்று அடிக்க கையை ஓங்கினாள். அவளால் கையை நகர்த்த முடியாது.
அம்மா, “உன்னால என்னை அடிக்க முடியாதே!” ஏஞ்சல் அங்கிள், “உன் கையை பிடிச்சிட்டு இருக்காங்க” என்றான். நட்சத்திரா வேகமாக விலகினாள்.
சுபி, “நீ இங்க தான இருக்க? இவனுக்கு மட்டும் தெரியுற? என் கண்ணுக்கு மட்டும் தெரிய மாட்டேங்கிற?” என்று அழுது கொண்டே கையை அனைத்து இடத்திலும் நீட்டினாள்.
வந்துரு சுபி இல்லைன்னா என்னையும் உன்னுடன் கூட்டிட்டு போயிரு. என்னால முடியல. “நீ என்னை சாக விட மாட்டேங்கிற?” ஆனால் அத்தை என்னை வாழ விட மாட்டேங்கிறாங்க என்று கதறி அழுதாள்.
டார்லிங், நீ உயிரோட இருக்கணும். உன் மேல யாரும் கை வைக்க முடியாது. விடவும் மாட்டேன் என்று அர்சு சொல்ல, சிம்மா அர்சுவை தூக்கி, “உனக்கு அங்கிள் தெரியுறாங்கல்லா?” என்று கேட்டான்.
ஆமா, தெரியுறாங்க.
“பேசுவாங்களா?”
பேசுவாங்க, விளையாடுவாங்க, எல்லாமே செய்வாங்க.
“எப்ப இருந்து அங்கிளை பார்க்குற?”
நான்..என்று அர்சு சிந்தித்துக் கொண்டே, சிம்மா அருகே வெற்றிடத்தை பார்த்தான். தமிழினியனை அவன் அம்மாவும் அப்பாவும் அழைத்து வந்தனர். சாரி..என்று அவன் மிருளாலினியிடம் சொல்ல, சிம்மா வெற்றிடத்தை பார்த்து விட்டு, “இங்க தான் இருக்காங்களா?” என்று கேட்டான்.
ஆமா, “ஸ்வீட்டாவை முறைச்சு பாக்குறாங்க?”
அவ என்னோட அம்மாகிட்ட சத்தம் போட்டா. அதான் எனக்கு கோபம் வந்துருச்சு என்றான்.
“உன்னோட அம்மாவுக்காக என்னோட மிருவை எதுக்கு அடிச்ச?” அர்சு கேட்க, சுபி..அமைதியா இரு. “எப்பொழுதிலிருந்து நீ அர்சுவை பார்க்கிற?” என்று சிம்மா கேட்டான்.
“அவன் பிறந்த நாளிலிருந்து” என்றான் அர்சு. அர்சு மூலமாக சுபிதன் ஆன்மா அனைவரிடமும் பேசியது.
“என்ன?” என்று நட்சத்திரா சிம்மா அருகே வந்து, “அன்று ரோட்டில் என்னை வம்பு செய்தவனை அடித்தது நீ தானா?” என்று கேட்டாள்.
அர்சு தலையை ஆட்டினான்.
மிரு அவர்களுடன் வந்து, “எதுக்குடா தனியா விட்டு போன?” நானும் உன்னுடன் வாரேன் என்றாள். அன்னம் அவளிடம் வந்து அணைத்துக் கொண்டு, “இப்படியெல்லாம் பேசாதம்மா. எல்லாத்துக்கும் கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்கும்” என்றார்.
பரிதி அன்னம் அருகே வந்து, “நீ எத்தனை நாள் இந்த பொண்ணுக்கு பாதுக்காப்பா இருக்க முடியும்?” என்று கேட்டார்.
அர்சு சிம்மாவிடமிருந்து இறங்கி, அவ்வெற்றிடத்தில் சென்று கைகளை மெதுவாக துடைத்து அணைத்தவாறு நின்றனர். அவன் கைக்கும் அணைத்ததிற்கும் இடையே வெற்றிடம் இருந்தது.
சுபி, “இப்ப கூட நீ நிம்மதியா இருக்க முடியலைல்ல?” என்று அழுதாள் மிரு.
இல்ல மிரு. என்னால நீ கஷ்டப்படுறத பார்க்கவே முடியலை. எனக்கு நேரமில்லை. நான் சீக்கிரம் போகணும் என்றது அர்சுவின் வழி.
அர்சு அருகே மண்டியிட்ட மிருளாலினி, இல்ல சுபி நீ போகக் கூடாது என்று மீண்டும் அழுதாள். அவள் தலையில் சுபியின் ஆன்மா கை வைக்க, உணர்ந்த மிருளாலினியும் கை வைத்தாள். சுபியின் கைகளை அனைவரும் பார்த்தனர்.
நட்சத்திரா அங்கேயே அமர்ந்து அழுதாள். சாரிடா, “நான் அன்று கோபத்தில் கிளம்பாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது” என்று அழுதாள். இல்ல நட்சு, என்னால தான். நான் அவனை நம்பி இருக்கணும் என்று மிருளாலினியும் அழுதாள்.
“என் சாவுக்கு நீங்க காரணமில்லை” என்று ஆன்மா சிம்மாவை பார்க்க, அர்சுவும் சிம்மாவை பார்த்தான்.
ஏஞ்சல் அங்கிள், “என்னை மாதிரியே இருக்கான் பாரேன்” என்று அர்சு சிம்மாவை பார்க்க, ம்ம்..உன்னை போல் அவன் இல்லை. அவன் போல தான் நீ இருக்கிறாய் என்று சுபியின் ஆன்மா சொல்ல, “ஆமா..அவன் பெரியவன்ல்ல” என்று அர்சு சிம்மாவை பார்த்து அவனிடம் வந்து திரும்பி சுபியின் ஆன்மாவை பார்த்தான்.
இவர்கள் பேசுவது யாருக்கும் முழுதாக புரியவில்லை. சிம்மா அருகே சென்ற அர்சு அவளை தூக்க சொன்னான். சிம்மா தூக்கவும் சிம்மாவிற்கு அர்சு முத்தமிட்டான். சிம்மா கண்ணீர் வழிந்தது. நட்சத்திரா மனதில் குற்றவுணர்ச்சி தலை தூக்கியது.
பயந்து கொண்டே தமிழினியன் சுபிதனின் ஆன்மா முன் வந்து, “அன்று ஸ்டாரை விபத்திலிருந்து காப்பாற்றியது நீ தானா?” என்று கேட்டான்.
“விபத்தா?” நட்சத்திரா கேட்க, “ஆமா ஸ்டார். அன்று மட்டும் விபத்து நடந்திருந்தால் அர்சுவும் நீயும் இருந்திருக்க மாட்டீங்க?” என்றான்.
“எப்ப நடந்தது?” நட்சத்திரா கேட்க, நாம் சந்திக்கும் முன்னே உன்னை பார்த்தேன். நீ அழுது கொண்டே ரோட்டை கவனிக்காமல் சென்ற போது தான்.
இனியா. நீ எங்களிடம் கூட சொல்லவில்லை அவன் அப்பா கிருபாகரன் கேட்டார்.
அப்பா. அன்று விநோதமாக இருந்தது. நான் எதுவும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றான்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த தேவதை மொத்தமாக எல்லாமே மாறிடுச்சே என்று மிருளாலினியை நினைத்து வருந்தினார். ஆனால் இனி எதையும் மாற்ற முடியாது. இந்த குட்டிப்பையன் கருவிலே கலைந்திருக்க வேண்டியது. சுபிதன் ஆன்மாவாக மாறியதால் அந்த குழந்தையை காப்பாற்றி விட்டான். எல்லாம் காலம் தாழ்ந்து நடக்கிறது.
“என்ன ஆகப் போகிறதோ இந்த நட்சத்திராவிற்கு?” அவளுக்கும் சிம்மாவும் இடையேயான முந்தைய வாழ்க்கை எப்பொழுது நினைவிற்கு வருவது? இருவரும் அவர்களது உயிரை எப்படி காப்பாற்றப் போகிறார்கள்? என பார்த்துக் கொண்டிருந்தார்.
ஸ்வீட்டா, அங்கிள் “தேங்க்ஸ்” சொல்ல சொன்னார் என்று அர்சு சொன்னான்.
நட்சத்திரா கண்ணீருடன், “எதுக்குடா இப்படி ஆகிடுச்சு? இப்ப மிருவை நான் எப்படி சமாதானப்படுத்துவது?” என்று அழுதாள். அவள் கையில் திடீரென ஓர் உணர்வு. சுபி என்னை மன்னிச்சிருடா. நீ என்ன சொன்னாலும் உனக்கு நடந்ததற்கு காரணம் நானும் தான் என்று அழுதாள்.
“இல்லை” என்று அர்சு சொல்ல, இல்லையா? என்று மிருளாலினி நிமிர்ந்தாள்.
இல்லை “விபத்து” என்பதை சொல்கிறான் என்று சிம்மா சொல்லி விட்டு மனதினுள் “ஏதோ காரணம் இருக்குமோ?” என்று நினைத்தான்.
சுபி, “நான் உன்னிடம் பேசணுமே?” என்று சிம்மா அர்சுவை பார்த்தான். அவன் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.
“அங்கிள் ஏதும் சொல்லலையா?” சிம்மா கேட்க, சிம்மா காதருகே வந்து நூலகத்தின் பெயரை சொன்னான்.
அர்சு, “சுபி ஏதாவது சொன்னானா?” நானும் அவனை பார்க்கணும். பேசணும் என்று மீண்டும் அழுது கொண்டே அர்சுவிடம் வந்தாள் மிருளாலினி.
தமிழினியன் இடையே வந்தான். மிருளாலினி மிரண்டு நின்றாள்.
நான் எதுவும் செய்யலை. “அவனோட நேம் என்ன?” என்று மிருளாலினியிடம் கேட்டான்.
சுபி..சுபிதன் என்றாள் கண்ணீருடன்.
சுபி..ம்ம்..இங்க பாரு. நீ பேச நினைப்பதை அவளிடம் பேசு. உன் குரலை நான் உன் மனைவியை கேட்க வைக்க உதகிறேன். முதலில் நீ என்னுடன் பேசு என்று தமிழினியன் கையை நீட்டி கண்ணை மூடினான்.
“உங்களால முடியுமா சார்?” மிருளாலினி கேட்டாள்.
அவளை பார்த்து, நான் உடலுக்கான மருத்துவன் இல்லை. மற்றவர் மனதை உணரும் தன்மை உடையவன். நான் சுபிதனின் மனதை அறிய முயற்சிக்கிறேன்.
அங்கிள், “எதுக்கு சிரிக்கிறீங்க?” அர்சு கேட்க, சிரிக்கிறானா? என்று மிருளாலினி கேட்டாள்.
ஆமா ஆன்ட்டி, “அங்கிள் க்யூட்டா ஸ்மைல் பண்றாங்க” என்றான்.
கண்ணை மூடி கையை நீட்டி, “சுபிதன் உங்க கையை என் கை மேல வையுங்க” என்றான் தமிழினியன். சுபிதனின் ஆன்மா புன்னகையுடன் தமிழினியன் கை மீது கையை வைக்க, தமிழினியனுக்கு இருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையும் இப்பொழுதுள்ள அவன் எண்ணமும் தெரிய வந்தது. பதட்டமுடன் மூச்சிறைக்க கையை எடுத்துக் கொண்டான் தமிழினியன்.
“என்னாச்சு சார்?” என்று மிருளாலினி தமிழினியனின் அருகே வந்தாள்.
இல்லை. ஒன்றுமில்லை. நீங்க தயாரா இருக்கீங்களா? என்று மிருளாலினியை பார்த்தான் தமிழினியன்.
யோசனையுடன் ம்ம்..என்றாள்.
சார், “நானும் அவனுடன் பேசலாமா?” நட்சத்திரா கேட்க, சிம்மா அவளை முறைத்தான்.
இல்ல ஸ்டார், உன்னால முடியாது. ஏன்னா..அவங்க ஒருவருக்குள் ஒருவராய் வாழ்ந்தவங்க. இப்ப தான் இவங்க அவனுக்காக இவ்வளவு கோபப்படுறாங்கன்னு புரிந்தது. இவங்களால மட்டும் தான் பேச முடியும்.
“நீங்க பேசுனீங்களா?” நட்சத்திரா கேட்க, பேசலை. பார்த்தேன். நான் படித்த பள்ளியில் இவன் என்னுடைய ஜூனியர் தான் என்றான் தமிழினியன்.
“நானும் அவனுடன் தான் படித்தேன் சார்” என்றாள் மிருளாலினி.
எனக்கு உங்களை தெரியலை. அவனை நன்றாக தெரியும். எங்களுக்கு எப்போதும் ஆகாது என்றான் தமிழினியன்.
“வாட்?” என்று மிருளாலினி நகர்ந்தாள்.
“நான் ஏதும் செய்திடுவேனோன்னு நினைக்கிறீங்களா?” தமிழினியன் கேட்க, அவள் அமைதியாக இருந்தாள்.
எங்களோட சந்திப்பு. பெயிண்ட்டிங் கிளாஸ்ல்ல தான் ஆரம்பித்தது. ஓவியப் போட்டியில் ஆரம்பித்தது தான் எங்க சண்டை. பின் நான் வேறொரு காரணத்தால் பள்ளியை மாற்றினேன். பின் இவனை பார்க்கவில்லை என்று தமிழினியன் சொன்னான்.
சுபிதன் “கையை என் கை மீது வை” என்று தமிழினியன் கையை நீட்டி கண்ணை மூடிக் கொண்டே “நீங்களும் கையை வையுங்க” என்றான் தமிழினியன்.
தமிழினியன் இருவரையும் பேச வைக்க முயன்றான். ஆனால் சுபிதனின் ஆன்மாவோ..பள்ளியில் இருந்து மிருவை பார்த்த நாளிலிருந்து நடந்து எல்லாவற்றிலும் சுபிதன் இருந்த இடத்தில் தமிழினியனை மாற்றியது. இருவரும் பதறி விலகினார்கள்.
டேய் சுபி, “இப்ப கூட உனக்கு விளையாட்டா?” இரு. நீ நினைக்கிறது நடக்காது என்று அங்கிருந்து வேகமாக ஓடி சென்று கார் ரோட்டில் வரும் போது இடைபுகுந்தாள் மிருளாலினி. அனைவரும் பதட்டமாக ஓடினர். தமிழினியனும் சிம்மாவும் அவளருகே சென்றனர். சிம்மா பதட்டமாக..மிரு என்று சத்தமிட்டான்.
தமிழினியன் நிற்காது அவளை நெருங்க, கார் முன் அவனும் வந்து விட்டான். அவர்களருகே வந்த சுபிதனின் ஆன்மா தமிழினியனை தள்ளி விட்டு, மிருளாலினியை தூக்கியது. அவள் அந்தரத்தில் மிதக்க, காரை ஓட்டி வந்தவன் பயத்தில் மயங்கி விட்டான்.
என்னை விடுடா, “சாகவே விட மாட்டேங்கிற” மிருளாலினி புலம்ப, நீ சாகக்கூடாது மிரு டார்லிங். உன்னை சாக விட்டால் நான் உன்னுடைய சுபி இல்லையே!
“அப்படியா? அப்புறம் எதுக்கு விட்டு போன?” என்று கோபமாக இறங்கினாள்.
அது என் விதி. நான் செத்தாலும் எனக்கான எல்லாரும் பாதுகாப்பா இருக்கீங்க என்றது சுபிதனின் ஆன்மா.
“லூசுப்பயலே!” என்று சினமுடன், “என் முன்னாடி வாடா” என்று தமிழினியன் கத்தினான்.
“என்னால வர முடியாதே!” பேச தானே முடியும் என்று சுபிதனின் ஆன்மா சொல்ல, தமிழினியனும் மிருளாலினியும் ஒருவரை ஒருவர் பார்த்து, நீ பேசுறது எனக்கு கேட்குது என்று ஒருவாறு அதிர்ச்சியுடன் சத்தமிட்டனர்.
“கேட்கிறதா?” ரொம்ப நல்லதா போச்சு. “தமிழ் சொல்லு?” என்றது சுபிதனின் ஆன்மா.
“என்ன சொல்லணும்?” தமிழினியன் கேட்க, “நீ மிருவிடம் சொல்ல வேண்டியதை சொல்லு” என்றான்.
மிரு, “சுபி பேசுறது கேட்குதா?” சிம்மா கேட்டான்.
“ஆமா சிம்மா” என்று மிருளாலினி தமிழினியனை பார்த்தாள்.
“சொல்லு.?” என்று சுபி பயங்கரமாக கத்தினான். மிருளாலினி, அர்சு, தமிழினியன் பயந்து காதை மூடினார்கள்.
“என்னதுடா சொல்லணும்? எதுக்கு இப்ப கத்துற?” மிருளாலினி சுபி ஆன்மாவிடம் கேட்டாள்.
மிரு, அவனை சொல்ல சொல்லு.
மிருளாலினி தமிழினியனை பார்த்து, “நீங்க என்னிடம் ஏதாவது சொல்லணுமா?” என்று கேட்டாள்.
இல்லை. “நான் கிளம்பணும் நேரமாகுது” என்று பதட்டமாக தமிழினியன் திரும்பினான்.
“ஒரு நிமிசம் சார்” என்று தமிழினியன் கையை பிடித்தாள் மிருளாலினி. அவன் கண்கள் கலங்கியது. “என்ன சொல்லணும்?” என்று மெதுவாக கேட்டாள்.
மிரு, ”என்ன பேசுறீங்க?” நட்சத்திரா கேட்க, “நட்சு கொஞ்ச நேரம் இரு” என்று மிருளாலினி அவனை பார்த்தாள். அவன் தலைகவிழ்ந்து நின்றான்.
டேய், “நீயாவது என்னன்னு சொல்லுடா” என்று தமிழினியனிடம் இருந்து கையை பிரிக்க, அவளால் பிரிக்க முடியவில்லை. அவன் பதட்டமாக கையை எடுக்க அவனாலும் முடியவில்லை.
“நீ தெரிஞ்சுக்க வேண்டியதை தெரிஞ்சுக்கோ மிரு” என்று சுபிதனின் ஆன்மா குரல் கம்மியது.
சுபி, நான் உன்னை பார்க்கணும். “நீ என்ன பண்ண நினைக்கிற? என்ன பேசுற?” எனக்கு ஒண்ணுமே புரியல. முதல்ல சார் கையிலிருந்து என் கையை பிரித்து எடுத்து விடு என்றாள்.
என்னால முடியாது மிரு. நான் உன் மீது வைத்திருந்த காதலை விட அவன் காதல் தான் உயர்ந்தது.
“காதலா?” என்று தமிழினியனை பார்த்தாள் மிருளாலினி.
ஆமா மிரு, நாம் சந்தித்து பழகும் முன்னே இவனுக்கும் எனக்கும் அடிக்கடி பிரச்சனை வரும். அந்நேரம் இவன் மூலமாக தான் உன்னை நான் பார்த்தேன் என்றான் சுபிதன்.
“என்னடா சொல்ற?”
ஆமா மிரு, அவன் பள்ளியில் இருந்தே உன்னை காதலித்தான். எங்களது கடைசி போட்டி உன்னை வைத்து தான் நடந்தது. விளையாட்டாக நடந்தது. ஆனால் வெற்றி எனக்கு கிடைத்தது. அவன் காதலை வைத்து நான் தான் அவனை வம்புக்கு இழுத்தேன். முதலில் முடியாது என்றவன் என் பேச்சின் வீரியத்தில் ஒரு கட்டத்தில் கோபமாக அவன் ஒத்துக் கொண்டான்.
என்னால முதலில் உன்னை காதலிக்க முடியவில்லை. அதனால் உன்னுடன் தோழனாக பழகினேன். பின் உன் காதலில் நானும் உன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அவனுக்கு நான் செய்தது எனக்கே முடிந்து விட்டது. ஆனால் மிரு என் காதல் நீ மட்டும் தான் என் கடைசி நொடியிலும்.
உன்னை மறக்க முடியாமல் இப்ப வரை திருமணமே பண்ணாமல் இருக்கான். இப்ப தான் அன்றைய அவனின் நிலை எனக்கு புரியுது என்று சுபிதனின் ஆன்மா அழ, தமிழினியனும் மண்டியிட்டு மனதில் இருந்த கஷ்டத்தில் அழுதான்.
“இனியா என்னாச்சுடா?” என்று அவன் அம்மா, அப்பா, நட்சத்திரா, சிம்மா என எல்லாரும் அவனருகே வந்தனர். மிருளாலினி கோபமானாள்.
“எழுந்திரு” என்று சத்தமிட்டாள். கைச்சட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டே எழுந்தான் தமிழினியன். “மிரு வேண்டாம்” என்று சுபிதனின் ஆன்மா சத்தமிட்டது.
தமிழினியன் கையையும் சேர்த்து இழுத்துக் கொண்டே வேகமாக ஓடினாள் மிருளாலினி.
“என்னடி பண்ற?” நட்சத்திரா சத்தமிட்டுக் கொண்டே அவள் பின் ஓட, மாமா..அவளை நிறுத்து என்று சிம்மாவிடம் நட்சத்திரா சொன்னாள்.
ஏம்மா, “எங்க பிள்ளைய இழுத்துட்டு எங்க போற?” அவன் எங்களுக்கு ஒரே பையன் என்று கிருபாகரனும் அவர்கள் பின் ஓடினார். தமிழினியன் மட்டும் அமைதியாக அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றான்.
கோவிலின் அருகே இருந்த ஓர் மலையின் உச்சிக்கு சென்ற மிருளாலினி, எங்க கையை பிரித்து விடு இல்ல உன்னோட சீனியரையும் சேர்த்து குதிக்க வச்சிருவேன் என்று அவள் மிரட்ட, சுபிதன் ஆன்மாவும் பிரித்து விட்டது. அவள் வேகமாக கீழிறங்கி வந்தாள்.
மிரு..நில்லு, நில்லு..என்று சுபியின் குரல் ஒலிக்க, அவள் அழுது கொண்டே ஓடினாள்.
நில்லு..என்று ஆன்மா கத்தி அவளை நகர விடாமல் செய்தது. எல்லாரும் அவ்விடம் வந்தனர்.
என் மேல கோபம்ன்னா காட்டு மிரு..
“நீ என் முன்னாலா நிக்குற?” உன்னிடம் கோபத்தை காட்ட. “நீங்க இருவரும் வைத்து விளையாட நான் என்ன பொருளாடா? நான் உன்னை எவ்வளவு காதலித்தேன். நல்ல வேலை பார்த்திருக்க?”
ஆமா மிரு. நான் செய்தது தப்பு தான். ஆனால் தமிழ் அப்படி இல்லை.
போதும். அவரும் சேர்ந்து தான் விளையாடி இருக்காங்க. “என்னை விடுங்க” என்று அவள் நகர, உன்னால அசைய கூட முடியாது மிரு. இப்ப நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ. என் காதல் பொய்யில்லை தான். ஆனால் நான் அவனுடையதை திருடிய உணர்வு எனக்கு அடிக்கடி தோன்றும். அதற்காக உன்னை விட்டு கொடுக்கலை மிரு.
மிரு இப்ப நான் உயிரோட இருந்து, தமிழை பார்த்தால் உன்னிடம் விசயத்தை சொல்லி விட்டு, அப்பொழுதும் உனக்காக தான் காத்திருப்பேன் என்றான்.
இப்ப நான் இல்லை. நான் உனக்கு புரிய வைக்க தேவையில்லை. இந்த உலகமே சரியில்லை. இங்கே உன்னை என்னால தனியா விட்டு போக முடியாது. என் அண்ணனுக்கு நான் தான் உன்னை காப்பாற்றியதுன்னு தெரிஞ்சு போச்சு. கண்டிப்பாக உன்னை அடைய அவன் என்னை அடைக்க பார்ப்பான். என்னால வீட்டிற்குள் வர முடியாது. எனக்கு இன்னொரு முக்கியமான வேலை இருக்கு. உனக்கு நம்ம குழந்தை வேணும்ன்னு நினைக்கிறேன் என்று அழுதது ஆன்மா. அவள் ஸ்தம்பித்து நின்றாள்.
“குழந்தையா? நம் குழந்தையா?” அவள் கேட்க, இல்லை நம் குழந்தை இல்லை. உங்க குழந்தை.
“புரியலை” என்றாள்.
நீ அவனுடன் வாழ வேண்டும் என்றான்.
“என்ன சொல்ற?” என்று மிருளாலினி கத்தினாள்.
மிரு, அமைதியா இரு. என்னை போல் அவன் உன்னை நல்லா பார்த்துப்பான். உனக்கு விருப்பமில்லைனாலும் அவனை தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்.
முடியாது.
சொல்றேன்ல்ல..என்னோட பப்ளிம்மால்ல..
போடா, “நீ என்னை விட்டுட்டு போய் இப்ப இவரை கல்யாணம் பண்ணிக்க சொல்ற?” என்று அவள் அழ, தமிழினியன் குடும்பம் அதிர்ந்தனர்.
மிருளாலினி விருப்பப்பட்டால் மட்டும் தான் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும் என்று தமிழினியன் நகர, “என்னடா இனியா சொல்ற?” அவன் அம்மா சத்தமிட்டார்.
அம்மா, சும்மா இருங்க.
சரி, இருவருமே போங்க. ஆனால் இனி என்னோட மிருவின் கற்பை பாதுகாக்க என்னால முடியாது. என்னோட அண்ணாவை பற்றி உனக்கு தெரியாது.
“என்னையே கொலை செய்தவன் அவன்” என்று சுபிதன் ஆன்மா சொல்ல, “என்னது கொலையா?” இருவரும் அதிர்ந்தனர்.
ஆமா, மிரு. என்னுடைய சாவு. விபத்தல்ல. என்னோட அண்ணாவுக்கும் எனக்கும் சிறுவயதிலிருந்தே பிரச்சனை தான். அதனால் தான் அவனிருக்கும் நேரம் நான் வீட்டில் இருக்கவே மாட்டேன். நாம் காதலிக்கும் போதே அவனுக்கு நம்மை பற்றி தெரிந்து அம்மாவிடம் எக்குதப்பாக சொல்லி இருக்கான். அதனால் அதான் அம்மா ஒத்துக்கலை. அதுக்காக அம்மா நல்லவங்கன்னு நான் சொல்லலை.
நம்மை குழந்தையை கொன்றது என் அம்மா தான். அவங்களை என்ன செய்யணும்ன்னு எனக்கு தெரியும். அன்று எனக்கு அடிப்பட்டு இரத்தத்தை பார்த்த உன்னால நடந்த எதையும் கவனிக்க தவறிட்ட. நமக்கு யாரும் உதவ முன் வரலை. அவன் அவர்களுக்கு விலை கொடுத்து விட்டான். இதை விடு. எனக்கு நீ சந்தோசமாக இருக்கணும்.
சத்தியமாக சொல்கிறேன். நீ என்னுடன் வாழ்ந்ததை விட தமிழிடன் மகிழ்வுடன் இருப்பாய். அவனை பார்க்க தான் முரட்டுத்தனமாக தெரிவான். ஆனால் மனதிலும் பேச்சிலும் ரொம்ப மென்மையானவன். ரொம்ப அமைதியாக இருப்பான். உன்னை நன்றாக பார்த்துப்பான்.
நீயே பார்த்தேல்ல. “அவனோட அம்மாவை எதிர்த்து பேசியதற்கே எப்படி கோபப்பட்டான்?” நீ அவனுடன் இருந்தால் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பாய். அவன் அம்மாவை போலவே உன்னையும் பார்த்துப்பான்.
இல்ல சுபி, என்னால முடியாது. எனக்கு நீ தான் வேணும் என்று அழுதாள். அனைவரும் அவளை பாவமாக பார்த்தனர்.
சத்தமில்லாமல் அவனிருக்க, “சுபி என்னாச்சு? ஏன் பேச மாட்டேங்கிற?” என்று பதறினாள் மிருளாலினி.
தமிழ் எல்லாரையும் உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க. சீக்கிரம் என்று கோபமாகவும் பயங்கரமாகவும் கத்தியது சுபிதனின் ஆன்மா.
சுபி, “என்னாச்சு?”
பேச நேரமில்லை. போ..சீக்கிரம், அவங்களை உன் வீட்டில் விட்டு மிருவும் நீயும் என்னோட வீட்டுக்கு போகணும்.
மிரு, நம் அறையில் இருக்கும் என்னுடைய, உன்னுடைய பொருட்கள் அனைத்தையும் எடுத்துட்டு போயிடு. இனி நீ அங்கிருப்பது ஆபத்து. தமிழ்..என் வீட்டில் என்னை அழிக்க பூஜை நடக்கப் போகிறது. உன்னால தான் அதை நிறுத்த முடியும். மிருவையும் பாதுகாப்பாக பார்த்துக்கோ..
மிரு, நான் மறுபடியும் வராமல் கூட இருக்கலாம். நீ தமிழ் அருகே தான் இருக்கணும். “உனக்கு புரியுதா?” கத்தினான்.
இல்ல சுபி, “போகாத” என்று அழுதாள்.
அர்சு, “நீயும் சிம்மாவும் நான் சொன்ன நூலகத்துக்கு போங்க” என்று கத்தியது.
“எல்லாரும் வாங்க” என்று தமிழ் அழைக்க, “என்னன்னு சொல்லு?” சிம்மா கேட்க, “நேரமில்லை” என்று தமிழ் சொல்ல, அர்சு..”நீ அம்மாவுடன் வா” என்று நட்சத்திரா அழைத்தாள்.
ஸ்டார், அவன் சிம்மாவுடன் தான் செல்லணும். அது தான் சுபியை காக்கும். சிம்மா கொஞ்சம் சீக்கிரம் போங்க. அவனை அழிக்க போறாங்க. அவன் சொல்வதை செய்யுங்க. நாங்க அவன் வீட்டுக்கு போய் பூஜையை தடுக்கிறோம் என்று தமிழினியன் காரை எடுத்தான்.
போலீஸ் வாகனத்தை எடுத்த சிம்மா, அர்சலனை தூக்க, மாமா..”அர்சுவை பார்த்துக்கோங்க” என்று கண்ணீருடன் இருவரையும் பார்த்தாள் நட்சத்திரா.
எல்லாரையும் வீட்டில் விட்டு மிருளாலினியும், தமிழினியனும் சுபிதன் வீட்டிற்கு சென்றனர். நூலகத்திற்கு சென்ற சிம்மா புரியாமல் அங்கிருந்தவருடன் பேச, ஒரு புத்தகம் கீழே விழுந்தது.
அர்சு சிம்மாவிடம் “நான் சொல்வதை சொல்லு” என்று சுபிதன் சொல்ல, பக்கம் 68 ல் இருக்கும் மந்திர வார்த்தைகளை வீட்டிற்கு சென்று கடவுளின் முன் வைத்து படிக்க சொல்லு. நான் அவனிடம் பேச வரும் வரை படிக்கணும் என்றான் சுபிதன்.
காவலர் குடியிருப்பில் சிம்மாவின் வாகனம் நுழைந்தது. வீட்டிற்குள் அர்சலனை அழைத்து சென்றான். அர்சு, “நீ இங்கேயே இரு” என்று சிம்மா பூஜை அறைக்குள் சென்று விளக்கேற்றி 68ம் பக்கம் எடுத்து வார்த்தைகளை படிக்க ஆரம்பித்தான். அவன் படித்துக் கொண்டிருக்க, சுபிதன் வீட்டிற்குள் மிருளாலினியும் தமிழினியனும் ஒன்றாக வந்து நின்றனர்.
அடுத்து நடக்கப் போவது என்ன? சுபிதனின் ஆன்மா அழிந்து விடுமா? நாளைய எபிசோடில் பார்க்கலாம்.