அத்தியாயம் 45

அஜய், “நீ என்ன நினைக்கிற?” என்று அவன் அறைக்கு வந்து கோபமாக கேட்டார் தனராஜ்.

நான் எதுவும் நினைக்கலை டாட்.

தியா விசயத்துல்ல விளையாடாத அஜய். அப்புறம் என்னை பொல்லாதவனாக தான் பார்ப்ப என்ற அவர் கர்ஜனையில் அதிர்ந்து அவரை பார்த்தான்.

“தியா மேல உங்களுக்கு இவ்வளவு அக்கறையா? ஏன்? எதற்கு?” அஜய் கோபமாக கேட்டான்.

ஏன்னா, அவ ரொம்ப நல்லப்பொண்ணு. உன்னால அவ கஷ்டப்படுவா என்றார்.

“என்ன டாட்? நீங்களும் வினித் மாதிரியே பேசுறீங்க?”

“வாட்? அவன் இப்படி தான் சொன்னானா?”

எஸ்..டாட். ஆனால் இன்று லீனா பிரச்சனையின் பின் தியாவிடம் நான் பேசும் போது இடையில் வரவில்லை என்றான்.

“நீ என்ன சொல்ல வர்ற?” தனராஜ் கோபமாக தன் மகனை பார்த்தார்.

“ஏன் டாட்? உங்களுக்கு தியாவை பிடிக்கும் தான?” நான் அவளை காதலிக்கிறேன். இன்னும் சொல்லவில்லை. சீக்கிரம் சொல்லி விடுவேன்.

அவர் வியர்த்து ஒழுக சோபாவில் பொத்தென அமர்ந்தார். அவர் மனம் கனத்து விட்டது.

தியா என்னருகே எப்பொழுதும் இருக்கணும். செக்ரட்டரியாக இல்லை மனைவியாக என்றான்.

அஜய்யை இழுத்து அணைத்த அவன் அப்பா மனதினுள், அவ உன் பக்கமே ரொம்ப நாள் இருக்க முடியாது அஜய். ஆனால் என் மகன் நல்லவனாக மாறிட்டான். திருந்திட்டான். இந்த இருநாளில் நான் ஆசைப்பட்ட என் மகனாக மாறி விட்டான். ஆனால் தியா மீதான காதல்..என கண்ணீர் வடித்தார்.

டாட், “யார் என்ன செய்தாலும் அவளை என்னால விட முடியாது” என்றான் உறுதியாக.

“இந்த உறுதி உன் வாழ்நாள் முழுக்க இருக்குமா?” நீ உன்னையும் தியாவையும் நன்றாக பார்த்துக் கொள்ளணும். முன் போல் நீ விளையாட்டாக இருந்தால் அவளை பாதுக்காக்க முடியாது என்றார் அவர்.

அஜய் மகிழ்வுடன் அவரை அணைக்க, முதல்ல எனக்கு சத்தியம் செய். அவளுக்கும் உனக்கும் எந்த நிலையிலும் ஏதும் ஆகாமல் பார்த்துக்கணும்.

நம்ம எதிராளிகள் யாரும் எங்களை நெருங்காமல் பார்த்துக்கிறேன் என்றான் அவன்.

“சரிப்பா” என்று அவர் எழுந்தார்.

டாட் என்று அஜய் தயக்கமாக, மாம்..”இதுக்கு முன் ஏதும் தவறு செய்திருக்கிறார்களா?” ஏன்னா..வினித் பெரியவங்க எல்லாருக்கும் மரியாதை கொடுப்பான். அம்மாவிடம் மட்டும் கோபமாக தான் இருக்கான். அம்மாவால் தியாவிற்கு ஆபத்துன்னு. அதுவும் கொலை செய்ய கூட தயங்க மாட்டான்னு சொன்னான் என்றவுடன் அவர் மனதிலும் அதிர்ந்தாலும், முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு, இல்லப்பா ஏதாவது கோபத்தில் சொல்லி இருப்பான்.

“நீ நிஜமாக தான தியாவை காதலிக்கிற? திருமணம் செய்யும் ஐடியா இருக்குல்ல? யார் என்ன சொன்னாலும் அவளை விட்ற மாட்டேல்ல?” என தீர்க்கமான குரலில் அவனிடம் கேட்க, அம்மா குறுக்கே வந்தாலும் தியா கழுத்துல்ல நான் தான் தாலி கட்டுவேன் என்றான் உறுதியாக அஜய்.

கம்பெனிய ரொம்ப கஷ்டப்பட்டு உருவாக்கி இந்த இடத்திற்கு வர நான் நிறைய இழந்து விட்டேன். இனி நீ இதையும் தியாவையும் பொறுப்பா பார்த்துக்கணும் என்றார்.

யா டாட். தேங்க்ஸ் டாட். லவ் யூ டாட் என்று அஜய் அவர் கன்னத்தில் முத்தமிட்டான். அவர் கண்ணீருடன், அவன் கன்னத்தை பிடித்து, நீ முதலாவதாக இன்று தான் முத்தம் கொடுத்திருக்க என்று ஆனந்தக்கண்ணீருடன் அவன் நெற்றியில் இதழ் பதித்து நகர்ந்தார்.

அஜய் தயாராகி வீட்டிலிருந்து வெளியே வர, அவன் அம்மா முன் வந்து, அவ வீட்டுக்கு நீ போவதாக இருந்தால் என் பிணத்தை தாண்டி தான் போகணும் என்றார்.

அவரை சுற்றி சுற்றி பார்த்து, மாம்..நீங்க ஸ்டேட்டஸ்க்காக தியாவை வேண்டாம்ன்னு சொல்றது போல இல்லை. அவள் உங்களோட ஜென்ம விரோதி போல நடந்துக்கிறீங்க. நீங்க என்னோட க்யூட் மாம்ல்ல..நான் சாப்பிட்டு வந்துருவேனாம் என்று அவன் அம்மாவை கொஞ்சி விட்டு வெளியேற, தியா வீட்டு அறைக்கதவு பூட்டி இருந்தது.

தியா..தி..யா..”கம் அன்ட் ஓபன்” அஜய் அழைக்க, அவள் சத்தமே இல்லை.

ஓர் அறையின் சன்னல் வழியே குதித்து வீட்டிற்குள் வந்த அஜய், சப்பாத்தி மணம் நாசியை துளைக்க, சமையற்கட்டுக்குள் சென்று தியாவை பார்த்து, அவளை பின்னிருந்து அணைத்தான்.

அவள் பயந்து, அஜய்..டிஸ்டர்ப் பண்ணாத என்றாள்.

அவன் விலகி ஆர்வமாக அவளை பார்க்க, அவள் சாதாரணமாக பாடலை முணுமுணுத்தபடி வேலை செய்து கொண்டிருந்தாள். அவன் மீண்டும் அவளை அணைக்க, அஜய் கண்ணா..க்யூட் பாய்ல்ல போ. சும்மா சும்மா முன் வராத, என்ன டார்ச்சர் பண்ற என்று புலம்பியபடி வேலையை கவனித்தாள்.

அடக்கள்ளி, “என்னை கற்பனையிலே காதலிக்கிறாயா?” இரு உன்னை என்று மறைந்து நின்றான்.

அவள் சப்பாத்தி குர்மாவை எடுத்து வந்து சாப்பிட அமர்ந்தாள்.

சோபாவில் அமர்ந்து டீவியை போட்டு, ஒரு காலை மடிக்கி ஒரு காலை தொங்கவிட்டு உணவுத்தட்டை மடியில் வைத்து காதல் பாடல்களை பார்த்தவாறு கவலையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

திடீரென குரங்கென மாறி அஜய் அவள் முன் வந்து குதிக்க, பயத்தில் அவள் கையிலிருந்த தட்டை பறக்க விட்டாள். அதை லாவகமாக பிடித்து மேசை மீது உணவுத்தட்டை வைத்தான்.

அவனை அதிர்ந்து அவள் பார்க்க, அவள் இதழ்களை தன் இதழ்களில் பொருத்திய அஜய், அவள் வாயில் ஒதுக்கி வைத்திருந்த சப்பாத்தியை தன் நாவால் தேடி எடுத்து அவன் வாய்க்கு கொண்டு வந்து அவள் இதழ்களை விடுவித்து, அதை மென்று, சோ..டேஸ்ட்டி என்றான்.

அதிர்ந்து மீண்ட தியா “அப்பா” என்று கத்த, அவன் பயந்து மேலும் அவள் சத்தம் வராதவாறு அவள் இதழ்களை அடைந்தான். அவள் அவனை அடித்தாள்.

சாரி தியா பேப். பசிக்குது. நீ எனக்கில்லாமல் சாப்பிடுற. அதான் இப்படி செய்தேன்.

“அதுக்காக இப்படியா?” என்று அவள் கை அவள் இதழ்களில் செல்ல, அவன் புன்னகையுடன். சரி சாப்பிடு. அப்ப தான நானும் சாப்பிட முடியும்.

“என்ன?” அதிர்ந்தாள் அவள்.

ம்ம்..நீ எனக்கு சாப்பிட கொடுக்கலைன்னா நான் பட்டினி தான். இடையில எனக்கு அல்சர் இருந்தது. சாப்பிடலைன்னா வயிறு பயங்கரமாக வலிக்கும் என்று வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.

இல்ல..இல்ல..நான் செய்து தாரேன் என்று வேகமாக எழுந்தாள். அவளை இழுத்து அவனருகே அமர வைத்த அஜய், “இது சூடு ஆறிடுமே!” என அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவை பார்த்தான்.

பரவாயில்லை. நான் சாப்பிட்டுக் கொள்வேன்.

உட்காரு. “எங்க போற?” என்று அவளுக்கு சாப்பாத்தியை எடுத்து குர்மாவில் தொட்டு அவளுக்கு வாயில் கொடுக்க, தியா கண்கள் நீரால் குளம் கட்டியது.

யாருமில்லாத பொண்ணு. இந்த நிலையில் அதுவும் தனக்கு பிடித்த அஜய்.

“அவளுக்கு எப்படி இருக்கும்?” அவளும் அவனுக்கு ஊட்டி விட சாப்பிட்டு விட்டு, மீண்டும் அவனுக்காக செய்தாள். அதையும் அவர்கள் மாறி மாறி ஊட்டி சாப்பிட்டுக் கொண்டனர்.

அஜய் சோபாவில் சாய்ந்து படுத்திருக்க, “அஜய் சார் கிளம்புங்க” என்றாள்.

இப்ப உனக்கு ஊட்டியெல்லாம் விட்டேன்.

உங்களை என் தாத்தா போல் நினைச்சுக்கிறேன். என்னை சந்தோசமாக சாப்பிட வைத்ததற்கு நன்றி என்றாள்.

“வாட்? தாத்தாவா?” அவன் கேட்க, ஆமா சார், அப்பா சொல்லுவாங்க. எங்க தாத்தாவுக்கு அப்பாவையும் என்னையும் ரொம்ப பிடிக்குமாம். எனக்கு முதல்ல அவர் தான் சக்கரை கொடுத்தாராம். ஆனால் நான் பிறந்து இரு வருடத்திலே அவர் இறந்துட்டாராம் என்றாள் வருத்தமாக.

அதான் நான் இருக்கேன்ல்ல பேப். “எதற்கு இந்த சோகம்?” அவன் கேட்க, “நீங்க இருக்கீங்க? நீங்க இங்க இருந்தா நான் இருக்க முடியாதே!” என்றாள் கேலியாக.

நோ பேப், நான் இங்கே தான் தூங்கப்போறேன்.

“வாட்? விளையாடுறீங்களா?” அவள் கோபமானாள்.

நிஜமாக தான். நான் நேற்று போல் கீழ இருந்துக்கிறேன். நீ உன் அறையில தூங்கு.

“முதல்ல வெளிய போங்க” அவள் கத்தினாள். அவளை நெருங்கிய அஜய், அவள் முன் மண்டியிட்டு, ஒரு கிப்டை நீட்டினான்.

“என்னது இது?” அவள் கேட்க, எழுந்த அஜய் இது நமக்கானது. அதை பிரி என்றான்.

“நமக்கா?” என்று அதை பிரித்தாள். அதில் கப்பிள் டாலர் இருந்தது. இதய வடியில் அதன் நடுவே “ஏ.டி” என எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. இரண்டு இருந்தது

“என்ன?” அவள் புரியாமல் அஜய்யை பார்க்க, அவளை இழுத்து அவன் கைக்குள் வைத்து, “ஐ லவ் யூ தியா பேப்” என்றான்.

அவள் வேகமாக அவனை விட்டு நகர்ந்தாள்.

தியா..அவன் அழைக்க, நோ..அஜய், நீங்க நினைக்கும் எதுவும் நடக்காது என்றாள்.

“ஆனால் இப்ப தான் நான் என்று நீயாக என்னிடம் பேசிட்டு இருந்த?” அஜய் கேட்க, அது..அது..என்று கலங்கினாள்.

தியா, ப்ளீஸ் அழாத. நீ ரொம்ப அழுதுட்ட.

இல்ல, என் பக்கம் வராத என்று தியா தரையில் அமர்ந்து அழுதாள்.

தியா..என அஜய் கலக்கமாக அழைக்க, என் அப்பா உன்னால் இறந்துட்டார்ன்னு நீ என்னை பரிதாபமாக பார்க்கிறேன்னு இப்படி அக்கறையா நடந்ததால தான் எல்லாமே! எனக்கே ஏன்னு தெரியல? என முகத்தை மூடி அழுதாள்.

தியா பேப், நோ..பரிதாபம் இல்லை. காதல் தான் என்றான்.

“நட்சத்திரா மேம்முடன் எத்தனை முறை பார்த்துருக்கீங்க? அப்ப இல்லாத காதல் இப்ப எப்படி?” அவள் கேட்க, உன்னை பார்த்திருக்கேன். ஆனால் பழகியதில்லையே!

நட்சத்திரா நல்லவங்களாக இருந்தாலும் அவங்களும் வொர்க்குக்காக தான் என்னிடம் பேசினாங்க. அது போல பல பொண்ணுங்க என் வாழ்க்கையில் பணத்துக்காகவோ இல்லை அவர்களது ஏதோ ஒரு தேவைக்காகவோ பழகி இருக்காங்க.

உன்னுடைய பழக்கம் அவ்வாறு இல்லை. நமக்குள் முன் பிரச்சனை என்றாலும் உன் வண்டிக்கான பணத்தை நீ தான அவனிடம் கொடுத்த. அன்றே எனக்கு நீ புதுசா தான் தெரிந்த. அதுமட்டுமல்ல நட்சத்திரா எங்க வீட்டுக்கு வந்து உன் அப்பா சாவுக்கு காரணம் நான் தான் சொன்னதுக்காக வரலை. உன்னை பார்க்க தான் வந்தேன். அதுமட்டுமல்ல உன் அப்பா அந்த குளிரில் கூட உனக்காக வெளியே அந்த இரவு காத்திருந்தாரே! அவரையும் எனக்கு பிடித்து விட்டது. உங்க பாசம் எனக்கு சிறுவயதிலிருந்து கிடைக்கலை.

எனக்கு அம்மா தான் எல்லாம். அம்மாவாக இருந்தாலும் அவங்க கஷ்ட நேரம் தான் என்னிடம் வருவாங்க. மற்ற நேரமெல்லாம் எனக்கு தனிமை தான். அப்பா என்னை கவனிக்க மாட்டார். ஆனால் இப்ப தான் அவரும் என் பாசத்திற்காக எவ்வளவு ஏங்கி இருக்கார்ன்னு தெரியுது? என்று கண்கலங்கினான். ஆனால் அவருக்கு என் மீது இவ்வளவு பாசமிருந்தும் ஏன் கவனிக்கலைன்னு தெரியல. அவர் கண்டித்து வளர்த்திருந்தால் நானும் நம் வினு போல் வளர்ந்திருப்பேன்.

எனக்கு அதை விட என்னுடைய சிறுவயது தோழன் வினித்தை உன்னுடன் பார்க்க தான் நம்பவே முடியல தியா. அதுக்காக பொறாமைன்னு இல்லை.

எனக்கு இந்த இரு நாட்களாக தான் உங்களை தெரியும். உன் குடும்பத்து ஆட்களை எனக்கு பெரியதாக பிடிக்கலை என்றாலும் உன் அப்பாவை பற்றி எல்லாரும் பேசியதை வைத்து மேலும் உன்னையும் அவரையும் பிடித்தது. அவர் இருக்கும் போது அவரை மிஸ் பண்ணிட்டேன் என்று அவன் கண்ணீர் உருண்டோடியது. அது போல் உன்னை எக்காலத்திலும் மிஸ் பண்ண மாட்டேன் தியா என்று அவளை அணைத்து, இந்த கம்பெனி பொறுப்பு கூட நீ சொல்லி தான் ஏத்துக்கிட்டேன்.

“நானா?” அவள் கேட்க, ஆமா..உன் அப்பா வருத்தப்பட்டார்ன்னு சொன்னேல்ல. அதான்..என்று கண்களை துடைத்து, இதுவரை நான் யாருமில்லாமல் பாசத்திற்காக ஏங்கி தவறான பாதைக்கு சென்றிருந்தேன். ஆனால் இப்ப என் நிலையில் இருக்கும் உன்னை பாசத்திற்காக ஏங்க வைக்காமல் நல்லா பார்த்துப்பேன் தியா. எனக்கு நீ மட்டும் போதும் தியா என்று அவன் அவளை இறுக்க, அவளும் மெதுவாக கையை கொண்டு வந்தாள்.

ஆனால் ஏதும் செய்யாமல், எனக்கு உன் மீது நம்பிக்கை இல்லை. பயமா இருக்கு என்று அவள் அழுதாள்.

சரி தியா, உனக்கு நம்பிக்கை வரும் போது இதை போட்டுக்கோ. ஆனால் நான் இப்பவே போட்டுக்கிறேன் என்று அவன் அதை எடுக்க, அதை தியா பிடுங்கினாள்.

“துக்கி எறிந்து விடுவாளோ?” அவன் பயப்பட, அதை அவன் கழுத்தில் அவளாகவே மாட்டி விட்டு, ஒரு செக்ரட்டரியாகவும் ப்ரெண்டாகவும் எப்போதும் இருப்பேன். காதலியாகன்னா..நான் யோசிக்கணும்.

“அப்ப மனைவின்னா ஓ.கே வா?” அஜய் ஒற்றை கண்ணடிக்க, அவள் முகம் சிவக்க…நோ என்று திரும்பினாள்.

சரி, பத்திரமா தூங்கு. நான் கிளம்புகிறேன் என்று அவன் செல்ல, அவனை பின்னிருந்து அணைத்த தியா, தேங்க்ஸ் எனக்கு யாரும் இல்லாதது போல் இருந்தது. எனக்கு உன் வார்த்தைகள் உயிர்ப்பை தந்து விட்டது. அதுக்காக ஓ.கே சொல்லுவேன்னு கனவு காணாத என புன்னகைத்தாள்.

அவனும் புன்னகையுடன், குட் நைட், ஸ்வீட் டிரீம்ஸ் என்று நகர்ந்தான். கதவை அடைத்த தியாவிற்கு ஏக நிம்மதி. ஏதோ குறைந்தது போல உணர்ந்து அவனை எண்ணி புன்னகையுடன் அறைக்கு சென்று விட்டாள்.

சிம்மாவின் வீட்டில் ரம்யா பள்ளிச்சீருடையுடன் தயாராகி ஹாலுக்கு வந்தாள்.

வீ..வீ..என அழைத்துக் கொண்டே சுஜி சிம்மா வீட்டிற்கு வர, முன்னிருந்த ரம்யாவிடம், “எங்க அவனை?” என்று கோபமாக கேட்டாள்.

“நீங்க யாரு? எதுக்கு சத்தம் போடுறீங்க?” ரம்யா கேட்க, நீ யாருடி புதுசா இருக்க? அவள் கேட்க, “நா..நானா” அவள் தயங்க விக்ரம், சிம்மா, பரிதி மற்றவர்களும் வந்தனர்.

“அண்ணா” என்று சிம்மாவிடம் ரம்யா செல்ல, சுஜி நீ இங்க எப்ப வந்த? நட்சத்திரா புன்னகையுடன் கேட்க, “எங்க அந்த குரங்கு பயல?” அவள் கேட்க, “ஆன்ட்டி இங்க குரங்கு யாருமே இல்லையே?” அர்சு சொன்னான்.

இருக்கான். “குரங்கு மாமா” என்று தீப்தி வந்தாள்.

ஏ..”தீபு அக்கா” என அர்சு அவளை பார்த்து குதித்தான். சுஜியின் கணவன் தேவாவும் வந்தார்.

வாங்க, உட்காருங்க என அவர்களுக்கு அன்னம், பரிதியின் ஏக மரியாதை.

“முதல்ல உட்காரு சுஜி” என்று தேவா சுஜியை அவர் அருகே அமர வைத்தார்.

“என்னாச்சு? யாரை தேடுனீங்க?” சிம்மா கேட்க, அதான் அந்த குரங்கு பயலை என்று சுஜி மேலும் பொறுமினாள்.

சிம்மா, வந்தவங்கல்ல முதல்ல கவனிக்கணும் என்று அன்னம் சத்தமிட, தேவா சுஜியை முறைக்க, அவள் அமைதியானாள்.

கீர்த்தனாவையும் ரம்யாவையும் பார்த்து விட்டு, “இவங்க யாரு?” என்று விக்ரமை பார்த்து புன்னகைத்தாள்.

அவனும் சிரித்து விட்டு, மூவரும் எங்களுடைய தங்கைகள் என்றான். மூவரும் ஒன்றாக அவனை பார்த்தனர். அவன் தோளை குலுக்கி விட்டு, அம்மா..டீ என்றான்.

“வந்துட்டேன்ப்பா” என்று அவர் அனைவருக்கும் கொடுத்து விட்டு, விக்ரமிற்கும் கொடுத்தார்.

அண்ணா, “என்னோட பொருட்கள்?” என ரம்யா சிம்மாவை பார்க்க, விக்ரம் எழுந்து அவனிருந்த அறைக்கு சென்று எடுத்து வந்தான்.

அவள் விடுதியில் சேரவென மருதுவிடமிருந்து விக்ரம் அவள் ஆடைகளை வாங்கி வந்திருப்பான். அதை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

அன்னம் அவளிடம் வந்து, ரம்யா..நீ இங்கேயே இருக்கலாம்ல்ல. எப்படியும் எல்லாரும் ஒரு வாரத்துல்ல கிளம்பிடுவாங்க. தனியா எனக்கும் கஷ்டமா தான இருக்கும்டா என்று எனக்காக கொஞ்சம் யோசியேன் என்று அன்னம் ரம்யாவை அவர் வீட்டில் தங்க வைக்க எண்ணினான்.

ரம்யா கண்கலங்க, வேண்டாம்மா என்றாள்.

அம்மா, “அவள கட்டாயப்படுத்தாதீங்க” சிம்மா சொல்ல, “நீ எங்க போகப் போற?” சுஜி அவளை பார்த்து கேட்டாள்.

“பள்ளியில் இருக்கும் விடுதிக்கு” என்று அவள் சொல்லி சிம்மாவை பார்த்தாள்.

பரிதி அவளிடம் வந்து, பாப்பா நீ வருத்தப்படாத. நாங்க வார வாரம் உன்னை பார்க்க வந்திருவோம். படிப்பில மட்டும் கவனத்தை செலுத்து என்று அவர் அவளை தேற்றும்படி பேசிக் கொண்டிருக்க, ஹம்..ஆமா..ஆமா..நானும் இருக்கேன். நான் பார்த்துக்கிறேன் என்று விகாஸ் குரல் கேட்க, தீபுவும் சுஜியும் தேவாவை இழுத்துக் கொண்டு மறைந்தனர்.

எல்லாரும் அவனை முறைக்க, வீ, சும்மா இரு பாட்டி, தாத்தா மற்ற எல்லாரும் உடன் திலீப்பும் வந்தான்.

பாட்டி, “பாப்ஸ்ஸை பார்த்துக்கக் கூடாதா?” விகாஸ் கேட்க, பெரியவங்க நாங்க பார்த்துப்போம் என்று அவர் சொல்ல, நோ..பாட்டி, “பாப்ஸ் இது உனக்காக?” ரொம்ப தேடி கண்டுபிடிச்சு வாங்கினேன் என்று லாலிபப் ஒன்றை நீட்டினான்.

அவள் அவனை முறைத்து பார்க்க, இது சாக்லெட் இல்லம்மா. இது எரேசர். உனக்காக தயாரிக்கப்பட்டது. “இது இந்த சின்ன மாமா உனக்காக கொடுப்பது” என்று அவன் அதை அவளிடம் கொடுக்க, “மாமாவா?” என்று ரம்யா சிம்மா, விக்ரமை பார்த்தாள்.

டேய் அண்ணா, “நீ ஓவரா போற?” சுவாதி சொல்ல, ஏய் குரங்கு மாமா..அது என்னுடையது. எங்க வீட்ல இருந்து ஆட்ய போட்டு இங்க என்னடா பண்ற? என்று தீப்தி கத்திக் கொண்டே ஓடி வந்தாள்.

தீபு குட்டி…சுவாதி கூற, அத்த..அவனை பிடி தீபு சொல்ல, ஓ..காட் மாட்டிக்கிட்டேனே! என்று வெளியே விகாஸ் ஓட, கதவை சாத்தி விட்டு புன்னகையுடன் சுருதி கையை கட்டிக் கொண்டு நின்றாள்.

அடிப்பாவி..கதவை திறடி சுருதியிடம் அவன் செல்ல, அவன் சட்டையை பிடித்து, “செல்லம் சீக்கிரம் ஓடி வா” என்று ராஜா விகாஸை பிடித்திருக்க, தேவாவை பார்த்த தாத்தா, “மாப்பிள்ள இங்க என்ன செய்றீங்க?” என்று கேட்டார்.

“அத அந்த குரங்கு பயட்ட கேளுங்க” என்று சுஜி கோபமாக, “டேய் பசங்களா?” அவனை பிடிங்க. அவன் செய்த வேலையால் இவர் மானமே போச்சு என்று சீறினாள் சுஜி.

வீ, “என்னடா செஞ்சு தொலைஞ்ச?” திலீப் கேட்க, ராஜா அருகே வந்த தீபு குட்டி வீ கையில் கடித்து வைத்தாள்.

ஆ,…வலிக்குடி..விடு..விடு..என்று அவன் அலறினான்.

தீபு என்று ரகசியன் அவளை பிடித்து இழுக்க, விடு மாமா..என்னோட எரேசரை திருடிட்டு வந்துட்டான் தீபு அழ, ரம்யா வீ கையிலிருந்து பிடுங்கி தீபுவிடம் வந்து அவள் உயரத்திற்கு அமர்ந்து, இந்தா வச்சுக்கோ. “இதுக்கெல்லாமா அழுறது?” நீ அவனோட அந்த கையில் கடிச்சிருக்க கூடாது. உன் எரேசனை திருடினானே! அந்த கையில் கடிச்சு வச்சிருக்கணும் என்று ரம்யா தீபுவிடம் சொல்ல,

உன்னை சிரிக்க வைக்க தான் செய்தேன். “நீ என்ன சொல்லித் தர்ற?” வீ கேட்க,

“சின்னப்பிள்ளைட்ட எடுத்துட்டு வந்துருக்க. அறிவிருக்கா?”

நீ உரிமையாக எடுத்துட்டு வந்திருக்கலாம். அந்த எரேசர் அவளுக்கு ஸ்பெசலா இருக்க கூட வாய்ப்பிருக்கு என்று ரம்யா சொல்ல, ஆமா..அது அவ மிஸ் கொடுத்தது என்று சுஜி சொன்னாள்.

ஏன்டா, அந்த பொண்ணு சொன்ன மாதிரி உனக்கு அறிவேயில்லை. போயும் போயும் நீ அவரோட அசிஸ்டன்ட்கிட்ட உன் வேலைய காட்டி இருக்க. நீ பேசிட்டு வந்துட்ட. ஆனால் இவர் தான் உன்னால அசிங்கப்பட்டார்.

மாமா..நான் அதிகமா பேசலை. சும்மா டேட்டிங்கிற்காக தான் அழைத்தேன் வீ சொல்ல, பொய் சொல்லாதடா. “உன்னோட நேம்ல்ல ஹோட்டலை புக் செய்து அவளை வர வச்சிருக்க?” ச்சீ உனக்கு அசிங்கமா இல்லை சுஜி காரமாக பேச,

இல்லக்கா. நான் எதுவும் செய்யலை என்று விகாஸ் சொல்வதை யாரும் காதில் வாங்கவேயில்லை.

சுவாதி அம்மா கோபமாக அவனை அடித்தார். மாம்..நிஜமாகவே நான் எதுவும் செய்யலை. மாமா..என்று அவன் தேவாவை பார்க்க அவரும் அவனை முறைத்துக் கொண்டிருந்தார்.

“ஏன் யாருமே என்னை நம்ப மாட்டேங்கிறீங்க?” விகாஸ் கத்தினான். எல்லாரும் அவனை முறைத்துக் கொண்டிருக்க, அவன் கோபமாக வெளியேறினான். ரம்யாவை பார்க்க பள்ளிச்சீருடையில் குட்டிப்பசங்க வந்தனர்.

அக்கா..அவர்கள் உள்ளே வர, மற்றவர்களின் மனநிலை மாறினாலும் விகாஸ் எல்லை மீறி சென்று விட்டான் என்று அனைவரும் கோபமாக இருந்தனர். தாத்தா, பாட்டி, விகாஸ் அம்மா, அப்பா தேவாவிடம் மன்னிப்பு கேட்க, அவர் அமைதியாக இருந்தார்.

“நான் கிளம்புகிறேன்” என்று எல்லாரையும் பார்த்து விட்டு ரம்யா தன் பையை தூக்க சிம்மாவும் விக்ரமும் அவளருகே வந்து, பையை எடுத்தனர். நானும் வாரேன் என்று திலீப்பும் வர, வேண்டாம் சார், நீங்க கொடுத்த பில் என்னிடம் பத்திரமா இருக்கு. அதை வச்சு சேர்ந்துப்பேன்.

“சின்னப்பசங்களா உன்னோட ப்ரெண்ட்ஸ்?” சுஜி கேட்க, ம்ம்..பெரிய பசங்க அவங்களா வந்து நம்மிடம் பேசினாலே சிலர் கேவலமா பேசுவாங்கல்ல. அதுக்கு இவங்க ப்ரெண்ஷிப் பரவாயில்லைல்ல என்று திலீப்பை பார்த்தாள்.

பாட்டி, தாத்தாவிடம் வந்து ஆசி வாங்கி அனைவரையும் பார்த்து விட்டு அவள் செல்ல, ரம்யா வார்த்தைகள் நேற்றைய அவனின் வீரிய பேச்சை காட்டியது. அவன் அதிர்ந்து நின்றான்.

யாருமில்லைன்னு நினைக்காதம்மா. நாங்க இருக்கோம் பாட்டி சொல்ல, அவரை அணைத்து விட்டு அவள் கிளம்பினாள்.

“சிம்மா” நானும் திலீப் சொல்ல, வேண்டாம் என்று கீர்த்தனா தடுத்தாள்.

கீர்த்து திலீப் அழைக்க, “ப்ளீஸ் மாமா” என்றாள் அவள். சிம்மாவுடன் அவள் சென்று விட்டாள்.

திலீப் முகம் மாறுவதை பார்த்த தாத்தா, “உன்னோட தப்பு புரிஞ்சதா திலீப்?” கேட்டார்.

தாத்தா, “நான் அவள கஷ்டப்படுத்திட்டேனா?” அவன் கேட்க, அதான் அண்ணா உன் மேல எல்லாருக்கும் கோபம். “அவளோட படிப்பவன் பிரப்போஸ் பண்ணா உனக்கென்ன?” அவனை அடித்ததில்லாமல் ரம்யாவையும் வாய்க்கு வந்தபடி பேசிட்ட. “அவளோட நிலை தெரிந்தும் அதிகமா பேசிட்ட?” என்று சுவாதி கோபமாக வெளியேறினாள்.

தாத்தா, “நான் அவகிட்ட பேசிட்டு வந்திடுறேன்” என்று திலீப் ஓட, விக்ரமும் கீர்த்தனாவும் வெளியே சென்றனர். சுஜி என்னவென்று கேட்க, அனைத்தையும் சுருதி கூறினாள்.

மகிழன் அவளை பார்த்துக் கொண்டே, பெரியம்மா..நான் வீட்டுக்கு போகணும். வேலை இருக்கு. ஈவ்னிங் சென்னை கிளம்புகிறேன்.

மகிழ், “அக்கா மாமா விருந்துக்கு வருவாங்க” பரிதி சொல்ல, “அதான் நீங்க இருக்கீங்கல்ல?” அவன் சொல்ல, ரித்து வருத்தப்படுவாடா என்றார் அவர்.

அவன் யோசனையுடன், நாளை சென்னை கிளம்பி விடுவேன். இதுக்கு மேல் தாமதிக்க முடியாது. இன்று மாலை என் வீட்டுக்கு போறேன் என்று அவன் சொல்ல, அன்னம் பரிதி முகம் மாறியது. அவர்கள் அமைதியாக இருந்தனர். அனைவரும் மூவரையும் கவனித்துக் கொண்டிருந்தனர். அதற்குள் இவனிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்று சுருதி எண்ணினான்.

“சுருதி” ஹரா அழைக்க, ஹா..என கனவில் இருந்து எழுவதை போல் விழித்து ஹரிணியை பார்த்தாள் சுருதி.

“இது நல்லதுக்கில்லடி” அவள் சொல்ல, சுருதி உதட்டை பிதுக்கிக் கொண்டு வெளியே சென்றாள்.

சுருதியும் ஹரிணியும் அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு மகிழன் முன் செல்ல, போ..சொல்லுடி. தனியா தான இருக்கான் என்று சுருதியை ஹரிணி ஊக்கினாள். மகிழனும் சுருதியை பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்திருப்பான்.

வெளியே வந்த அன்னமும் பரிதியும் இருவரையும் பார்த்தனர். சுருதி எழுந்து மகிழனை நோக்கி சென்றாள்.

ஹப்பாடா, “இனி இவ தொல்லை எனக்கிருக்காது” என்று சொல்லிக் கொண்டே ஹரிணி அலைபேசியில் ஒருவனிடம் பேச, ராஜாவும் தீபுவும் வெளியே வந்தனர்.

அத்த, “என்ன பண்ற?” தீபு அவளிடம் செல்ல, “பார்த்தா உனக்கு தெரியலையா?” பேசிட்டு இருக்கேன் என்று ராஜாவை பார்த்து விட்டு அவனை காணாதது போல் அவள் பேசிக் கொண்டிருந்தாள்.

தீபு, “இங்க உட்காரு” என்று அவளை ராஜா அவனருகே அமர வைத்து, அவன் அலைபேசியை எடுத்து பார்த்தான். அவன் மேனேஜர் கால் செய்திருக்க, அவனுக்கு அழைத்து அவன் வேலை விசயமாக பேசினான். பின் அலைபேசியை அணைத்து விட்டு ஹரிணியை பார்க்க அவள் அப்பொழுதும் பேசிக் கொண்டிருந்தாள்.

தீபு, உன்னோட அத்தை இன்றைக்குள் அலைபேசியை வைக்க மாட்டா போல ராஜா கேலியுடன் கூற, அவனை முறைத்தாள் ஹரிணி.

மூச்சிறைக்க ஓடி வந்த சுருதி ராஜாவை கவனிக்காமல், ஹரா..”லவ் யூ டி” என அவள் கன்னத்தில் முத்தமிட்டு குதியாய் குதித்தாள்.

ஏய்..ஹரா பேசும் முன், மகிழ் “ஓ.கே” என்பது போல் சொல்லீட்டான் என்று ஹரிணியை இறுக அணைத்தாள்.

விடுடி. ஏற்கனவே முடியல. நீ வேற..என்று ராஜாவிடம் கண்ணை காட்டினாள்.

அய்யய்யோ போச்சு..என்று ஹரிணியை பார்த்துக் கொண்டே நகர இருந்த சுருதியிடம், “என்ன சொன்ன சுருதி? மகிழ் எதுக்கு ஓ.கே சொன்னான்?” ராஜா கேட்க, மாமா..அது சும்மா தான்.

“நீ சொல்றீயா? இல்லை அத்தைகிட்ட சொல்லவா?” ராஜா கேட்க, அய்யோ மாமா வேண்டாம். எனக்கு மகிழை பிடிச்சிருக்கு. அவனிடம் காதலை சொன்னேன். அவன் காத்திருக்க சொல்லி இருக்கான்.

“காத்திருக்கணுமா? எத்தனை வருடங்கள்?” ஹரிணி கேட்க, தெரியல ஹரா..என்று சுருதி புன்னகைக்க,

“அறிவிருக்காடி உனக்கு? அவன் சரியாக வர மாட்டான்னு முதல்லவே சொன்னேன்.

“எதுக்கு இப்படி சொல்ற?” சுருதி கண்கலங்க, உன்னை பிடித்திருந்தால் பிடிச்சிருக்குன்னு சொல்லி இருக்கணும். “அதை விட்டு என்ன காத்திருக்கணும்?” அவனிடம் ஏமாந்து தான் நிக்க போற ஹரிணி சொல்ல, சுருதி அழுதாள்.

“சுருதி” அழுத்தமாக ராஜா ஹரிணியை முறைத்துக் கொண்டே அழைத்தான்.

மாமா, “அவன் என்னை ஏமாத்த மாட்டான்ல்ல?” ஹராகிட்ட சொல்லுங்க என்று சுருதி அழ, அவள விடு சுருதி. “உனக்கு என்ன தோணுது? அவன் உன்னை ஏமாற்றுவான்னு நினைக்கிறியா?” ராஜா கேட்க, இல்ல மாமா. ஆனால் அம்மாவுக்கு உங்களை தான பிடிக்கும் என்று மேலும் அழுதாள்.

எனக்கு கூட என்று ராஜா ஹரிணியை பார்த்து விட்டு, நமக்கு யாரை பிடிச்சிருக்குன்னு தான் பார்க்கணும்.

“அதை விட்டு எதுக்கு இந்த யோசனை? நானே உன் காதலுக்கு சப்போர்ட் பண்ணும் போது அத்தையால் என்ன செய்ய முடியும்?” ராஜா கேட்க, “தேங்க்ஸ் மாமா” என்று சுருதி அழ, “அழுறது நிறுத்து” ராஜா சொல்ல, நாளை மதியம் வந்திருவேன் சார். நாம ஈவ்னிங் மீட் பண்ணலாம் என்று மகிழன் சொல்லிக் கொண்டே சுருதி அழுவதை பார்த்து அவளிடம் வேகமாக வந்து, “எதுக்கு அழுற?” என்று கேட்டான்.

ஒன்றுமில்லை. தேவையில்லாதவங்க பேச்சை கேட்டு எல்லாத்துக்கும் பயப்படுறா. அதான் அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தேன் ராஜா சொல்ல, அலைபேசியை வைத்த ஹரிணி, “நான் தேவையில்லாதவலா?” எகிறினாள்.

சுருதி மகிழனை பார்க்க, “அப்படி இல்லையா?” என ராஜா அவளை பார்த்து புன்னகைக்க, “போடி நீ என்னமும் செய்” என்று அவள் கோபமாக உள்ளே சென்றாள்.

“ஹரா” சுருதி அழைக்க, அவ போகட்டும் விடு சுருதி.

மகிழ், “நீ எப்ப உங்க காதல் விசயத்தை உங்க குடும்பத்திடம் சொல்லப் போற?” ராஜா கேட்க, அவன் சுருதியை பார்த்தான்.

“நான் வேணும்ன்னு சொல்லலை” என்று மகிழனை பார்க்க, “அவ அழுததே உன்னால தான்” என்று ராஜா போட்டு விட, “மாமா” என்று காலை தரையில் உதைத்தாள் சுருதி.

நீ காதலை நேரடியாக சொல்லலையாம். அந்த வருத்தம் என்று கேலியாக ராஜா கூற, இப்ப நான் எதையும் சொல்லும் நிலையில் இல்லை. உன்னை மிஸ் பண்ணிறக் கூடாதுன்னு தான் உடனே ஓ.கே சொல்லீட்டேன். காதல் இல்லைன்னு சொல்ல முடியாது. எனக்கு கொஞ்சம் பிரச்சனை இருக்கு. படிப்பு இன்னும் முடியல. அதான் வெயிட் பண்ண சொன்னேன் என்று ஆதரவாக சுருதி கையை அழுத்தமாக மகிழன் பிடிக்க, சட்டென அவனை அணைத்த சுவாதி, ”சாரி பிடிக்காம எனக்காக சொல்லீட்டீங்கன்னு நினைச்சுட்டேன்” என்று அழுதாள்.

ஏய் சுருதி..ராஜா அழைக்க, மகிழை விட்டு விலகினாள் சுருதி. இரு குடும்பமும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுருதி அம்மா அவளை அடிக்க வந்தார். அவர் கையை பிடித்த ராஜா,

“அத்தை பொறுமையா இருங்க”. எனக்கும் சரி சுருதிக்கும் சரி அத்தை பொண்ணு, பையன் என்பதை தவிர பெரியதாக விருப்பமெல்லாம் இல்லை.

“மகிழுக்கு என்ன குறை?” அடுத்த வருடம் மருத்துவன் ஆகப் போகிறான் ராஜா அவனுக்கு சப்போர்ட் செய்ய, அன்னமும் பரிதியும் மகிழன் அருகே வந்து நின்றனர்.

இல்ல ராஜா, “எனக்கு விருப்பமில்லை “என்று சுருதி அம்மா மகிழனை பார்க்க, உனக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். எனக்கு அவரை பிடிச்சிருக்கு. “யார் என்ன செய்தாலும் அவர் தான் நம்ம வீட்டு மாப்பிள்ளை” என்று சுருதி அப்பா மகிழன் அருகே வந்து நின்று கொண்டார்.

“நான் தான் முன்னமே சொன்னேன்ல்ல?” சுருதி அப்பா சொல்ல, என்னால ஒத்துக்க முடியாது என்று சுருதி அம்மா மகிழனை முறைத்து பார்த்தார்.

நட்சத்திரா அவர்களிடம் வந்து, மகிழ், “நீ வா” என்று அவனை இழுக்க, அண்ணி இருங்க. “பேசுறவங்க பேசட்டும்” என்றான் மகிழன்.

“சுருதிக்கு தான் மகிழன் கோபம் தெரியுமே!” அவளுக்கு பயம் பிடித்துக் கொள்ள, அவனை நெருங்கி கண்கலங்க அவன் கையை அவள் இறுக பற்றினாள். மகிழன் அவளை பார்த்தான். அவள் தன் பக்கம் இருக்கிறால் என்று அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் அவன் காட்டிக் கொள்ளவில்லை.

சுருதி அம்மா கோபமாக வந்து அவள் கையை பிடித்து இழுக்க, ஆன்ட்டி..நீ என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு நல்லா புரியுது. ஆனால் என்னால எந்த நிலையிலும் சுருதியை விட முடியாது. அதே போல் என் நிலை உயரும் நாளும் வரும். அதுவரை காத்திருங்கள் என்றான்.

“எப்பொழுது? அதுக்குள்ள என்னோட பிள்ளைக்கு நாற்பது வயதாகிடும்” என்று அவர் சொல்ல, மகிழன் சிரித்தான்.

சுருதி, “அதுக்குள்ள உனக்கு நாற்பதாகப் போகுதா?” கேலியாக அவன் கேட்க, முறைத்த அவள் அப்ப நீங்களும் அதே நிலையில் தான் இருப்பீங்க என்றாள்  பதிலாக.

“ஓ..குச்சியை ஊன்றிக் கொண்டு கல்யாணம் பண்ணிக்கலாமா? மகிழன் கேட்க, அதுவரை உங்கள நான் விடுவேனா?” நீங்க மருத்துவனாகி இரு வருடம் தான். நாம கல்யாணம் பண்ணிக்கணும் என்றாள்.

ம்ம்..அதுக்குள்ள என்று தாடையை தடவி ஏதோ கணக்கு போட்டவன்.. ம்ம்..”சரியா இருக்குமே!” என்றான் புன்னகையுடன்.

சரிதான். அண்ணி, உங்க பொண்ணு இப்பவே எல்லார் முன்னாடியும் கல்யாணம் பண்ணிப்பா போல சுவாதி அம்மா கேட்க, “அம்மா உன்னிடம் கேட்டாங்களா?” என்று சுவாதி அவரை திட்டினாள்.

“என்ன பேச்சு?” எல்லாரும் இருக்கோம்ன்னு கொஞ்சமும் விவஸ்தை இல்லாமல் என்று சுருதி அம்மா முகத்தை சுளித்தார்.

“என்னது? அப்படி என்னம்மா செஞ்சுட்டோம்? மேரேஜ் எப்ப பண்ணிக்கலாம்ன்னு தான பேசினோம்” சுருதி சொல்ல, பாட்டியும் தாத்தாவும் அவர்களிடம் வந்து, அம்மாடி கொஞ்ச நாள் ஆகட்டும். “இதை பற்றி அப்புறம் பேசலாமா?” கேட்டார் தாத்தா.

“ஏன் தாத்தா? உங்களுக்கும் இவரை பிடிக்கலையா?” சுருதி கேட்க, அவள் தலையை கோதியவர்..”பிடிக்காமல் எப்படிம்மா இருக்கும்? உன்னோட அம்மா ஏத்துக்கணுமே!” முடிந்தால் அவர் உன் அம்மாவை ஒத்துக்கொள்ள வைக்கட்டும் என்று மகிழனை பார்த்தார் தாத்தா.

ம்ம்..என்னால முடியவே முடியாது அவர் சொல்ல, பரவாயில்லை ஆன்ட்டி. என்னை வெறுக்கவாது செய்யுங்க. அதுவும் இப்படியே? என்று மகிழன் ஏதும் பேசாமல் உள்ளே சென்றான்.

“என்ன இப்படி சொல்லீட்டு போறான்” என்று ராஜா அவன் கையை பிடித்து, “என்ன பேசுற?” கேட்டான்.

ஆமா, வெறுத்தாலும் அவங்க மனசுல இருப்பேன்ல்ல என்று என்னோட அம்மா எப்பொழுதும் இதை தான் சொல்லுவாங்க. “வெறுப்பு ஒரு நாள் விருப்பாகும். எதற்கும் பொறுமை அவசியம்” என்று. ஆனால் நான் அப்படி பொறுமையாக இருக்க மாட்டேன். ஆனால் இனி இருப்பேன் என்று கண்ணீரை துடைத்த மகிழன், சாரி சார்..என்று அலைபேசியை எடுத்து நாளை பார்க்கலாம் சார். என்னவெல்லாம் தேவைப்படும்ன்னு சொல்லுங்க. நான் எடுத்து வருகிறேன். நாம நாளை ஈவ்னிங் பார்க்கலாம் என்று அலைபேசியை வைத்தான்.

ராஜா அவனை அணைக்க, அவனை நகர்த்தினான் மகிழன்.

இன்று உன் வீட்டிற்கு போவதாக சொன்னேல்ல. “நாங்களும் வரவா?” மகிழன் கேட்க, அவன் கண்கலங்க பரிதி, அன்னத்தை பார்த்துக் கொண்டே, இனி அது முடியாது. இன்றோடு அவ்வளவு தான் என்று கீழ் இதழ்களை மடித்து அழுகையை கட்டுப்படுத்தி அறைக்கு வேகமாக நகர்ந்தான்.

அன்னம், பரிதி, நட்சத்திரா வேகமாக அவன் பின் ஓடி வந்தனர். மகிழன் சிம்மா அறையினுள் சென்று கதவை மூடிக் கொண்டு சத்தமில்லாது அழுதான்.