விக்ரம், ரசிகா, சுவாதி கீர்த்தனாவை பார்க்க, சிம்மாவும் உதிரனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
இங்க பாரு ரம்யா. நீ படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. பயன்படுத்திக்கோ. “வேற எங்க போவ? உனக்கு யாரை தெரியும்?” தெரியாத இடத்துல்ல கஷ்டப்படுறத விட உன்னோட பள்ளியில் இருந்து நீ முதலாவதாக வந்தால் கல்லூரி படிக்க தானாக வாய்ப்பு கிடைக்கும் என்று மகிழன் சொல்ல, ஆனால் சீனியர் திலீப் பணம் நான் எப்படி? அவள் கேட்க, கிருபாகரன் அவளை பார்த்து, எங்க குடும்பத்துல்ல படிக்க கஷ்டப்படுற பிள்ளைகளுக்கு நிறைய உதவி செய்திருக்கோம். அது போல தான் எங்க பையன் திலீப்பும் செய்திருக்கான் என்றார்.
“நீங்க தான் திலீப் அப்பாவா?” என்று கிருபாகரனிடம் கேட்க, சுருதி அவளிடம் வந்து எல்லாரையும் அறிமுகப்படுத்தினாள்.
“அதென்னடி திலீப்? அவனுக்கு நீயா பேர் வச்ச?” சுவாதி அம்மா கேட்க, “அம்மா” என்று சுவாதி அவரை முறைத்தாள்.
“என்னடி தப்பா கேட்டுட்டேன்?” சுவாதி அம்மா கேட்க, நீ தாராளமா கேளும்மா. அதுக்கான நேரம் இதுவில்லை பாட்டியும் சினத்துடன் சுவாதி அம்மாவை முறைத்தார்.
ஆமா, நான் மட்டும் பேசிறவே கூடாது என்று அவர் பொறும, ரம்யா முகத்தில் சிறு மலர்ச்சி. அவங்க கேட்கிறதுல்ல எந்த தவறும் எனக்கு தெரியல என்ற ரம்யா, அவரை பார்த்து..என்னோட அம்மா வயசு இருக்கிறவங்கல்ல பெயருடன் அம்மான்னு சேர்த்து அழைப்பேன். அப்பா வயதிருப்பவரை அப்பான்னு அழைப்பேன். தெரிந்த பசங்களை அண்ணா, தம்பின்னு அழைப்பேன். மத்தவங்க அக்கா, பெயர் கூறி அழைப்பேன்.
திலீப் எனக்கு யாருன்னு தெரியாதுல்ல. அதான் பெயர் சொல்லி அழைத்தேன். இனி வேணும்ன்னா அண்ணன்னு அழைக்கிறேன் என்றாள்.
இல்ல..இல்லம்மா..நீ அவனை பெயர் சொல்லி அழை என்றார் சுருதி அப்பா.
இல்லப்பா, நான் திலீப்பை அண்ணான்னே அழைக்கிறேன் என்றாள்.
நீ எப்படியும் கூப்பிடு. “முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு?” திலீப் சொல்ல, அவனருகே வந்த ரம்யா, “எனக்கு இன்னொரு உதவியும் வேணும்?” என்று கேட்டாள்.
“உதவியா?” எனக்கு உதவி செய்ய ரொம்ப பிடிக்கும். அதான் அண்ணா ஒன்று செய்துட்டான்ல்ல. நான் இதை செய்கிறேனே! என்று விகாஸ் வாயில் ஜொல்லூற்ற ரம்யா அருகே வர, அவன் முன் வந்த சுவாதி, நீ அவங்களுக்கு ஏதும் செய்ய வேண்டாம். எனக்கு உன்னிடம் உதவி வேண்டும். அவங்க பிரச்சனையை திலீப் அண்ணா பார்த்துப்பான் என்றாள்.
இவ பேச்ச விடு. நான் நல்லா உதவி செய்வேன் என்று விகாஸ் சொல்ல, வீ..என்று அவனது அப்பாக்கள் அனைவரும் கோரசாக சத்தமிட்டனர்.
“என்னடா இது? என்னை தடுக்க மட்டும் இப்படி சத்தம் வருது?” விகாஸ் கேட்க, மகிழன் அவனருகே காதில் வந்து, “வாயை வச்சிட்டு சும்மா இருந்தீங்கன்னா நல்லா இருக்கும்” என்று புன்னகையுடன் அவன் காலை மிதித்து சென்றான்.
அய்யோ அம்மா..கீழ பார்த்து போடா ப்ளட்டி இடியட்.
“மாப்பிள்ள என்ன சொன்னீங்க?” சுருதி அப்பா கேட்க, மாமா..நல்லா கால மிதிச்சீங்கன்னு சொன்னேன் என்று இருவரையும் பார்த்தான்.
“சொல்லு? என்ன வேணும்?” திலீப் கேட்க, நான் இப்பொழுதே விடுதிக்கு போகணும் என்று அவனிடம் ரம்யா கேட்க, “இப்ப எதுக்கு ரம்யா?” சிம்மா கேட்டான்.
அண்ணா, எனக்கு இங்க இருக்க முடியல. மூச்சு முட்டுற மாதிரி இருக்கு என்று கண்ணீர் வந்தது ரம்யாவிற்கு.
“இன்று ஒரு நாளைக்காக தானம்மா?” பாட்டி கேட்க, ரம்யா யோசனையுடன் அனைவரையும் பார்க்க, அன்னம் உள்ளே ஓடி வந்தார்.
அன்னம்மா, “என்னாச்சு?” ரம்யா கேட்க, அத்த..அம்மா..என ஒவ்வொருவராக அன்னத்தை பார்க்க, வீட்டிற்கு வெளியே இருந்து துளசி அப்பா சத்தமிட்டார்.
அம்மாடி ரம்யா..அழைக்க, அவள் அமைதியாக நின்றாள். எல்லாரும் வெளியே எட்டி பார்த்து அதிர்ந்தனர்.
“ரம்யா” பாரு தயக்கமுடன் அவளை பார்க்க, “என்ன?” என்று அவளும் திலீப்பும் வெளியே வந்தனர்.
துளசி கழுத்தில் இருந்த தாலியை பார்த்து அதிர்ந்தாலும் ரம்யா புன்னகையுடன் இருவரையும் பார்த்தான்.
என்னம்மா, “வேடிக்கை பாக்குற?” ஆலம் எடுத்து வந்து உன்னோட அண்ணா- அண்ணிக்கு சுத்தி போடு என்றார் துளசி அப்பா.
மாமா..இல்ல, சாரி..சாரி.. என்னால யாருக்கும் ஏதும் செய்ய முடியாது. வேற யாரையாவது செய்ய சொல்லுங்க என்றாள் ரம்யா.
“நீ தான இந்த மூணு வருசமா இவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டுட்டே இருந்த?” இப்ப பண்ணிட்டேன். இனி நீ இங்கிருந்து போகக்கூடாது என்று மருது சொல்ல, துளசி கோபமாக அவனை முறைத்தாள்.
“நீ என்னிடம் செய்த அதே தப்ப இப்ப மறுபடியும் செய்ற?” உங்கள் இருவருக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள் என்று மருதுவிடம் வந்து, அவன் கையை அவள் தலையில் வைத்து, நீ அண்ணியை சந்தோசமா பார்த்துக்கோ. என்னால உங்களுக்கு இடையில சின்ன பிரச்சனை கூட வரக் கூடாது. நான் பள்ளிவிடுதியில் தங்கி தான் படிக்கப் போகிறேன். அதுக்காக என்னை பார்க்க வரலாம்ன்னு எண்ணாதீங்க. யாரும் என்னை பார்க்க வர வேண்டாம். என்னை நானே பார்த்துப்பேன் என்று அவள் கையெடுத்து கும்பிட, அவள் கையை பிடித்த மருது, “இந்த அண்ணனை ஒரு முறை மன்னிக்கலாமேம்மா?” அவன் கெஞ்ச, எல்லாருக்கும் பாவமாகி போனது.
கண்ணீரை கட்டுப்படுத்தி உள்ளிழுத்த ரம்யா, அவன் கையை எடுக்க, அவனால் விட முடியவில்லை. பாப்பா, “உன்னை பார்க்காமல் நான் எப்படி இருப்பேன்?” ஒருநாள் கூட உன்னை பார்க்காமல் நான் இருந்ததில்லை என்று மருது அழுதான்.
ரம்யாவும் கண்ணீருடன் நகர, அவளை ரகசியன் தடுத்தான்.
நீ போ. ஆனால் தங்கை முறைக்கு செய்ய வேண்டியதை செஞ்சிட்டு போ என்றான். அவள் முடியாது என கண்ணீருடன் தலையசைக்க, எனக்கு புரியுதும்மா. ஆனால் நீ தான் செய்யணும் என்ற பாட்டி, யாராவது ஆலம் கரைச்சு எடுத்துட்டு வாங்க என்று அழைக்க, அன்னம் சென்று எடுத்து வந்தார்.
புகழேந்தி மருது தோளில் கை வைக்க, அவன் கண்ணீருடன் அவரை பார்த்து, “பாருங்கய்யா, எப்படி பேசுறா?” என்று அழுதான். அவர் அவனை அணைக்க, அவன் விலகினான்.
“பரவாயில்லைடா” என்று அவர் அவனை அணைக்க, அவனும் அவரை அணைத்து அழுதான். ரம்யா திரும்பி நின்று கொண்டாள்.
ஆலத்தை ரம்யா கையில் கொடுத்து எடுக்க சொல்ல, புன்னகையுடன் இருவரையும் பார்த்து ஆலம் சுற்றினாள். ஆனால் அவள் மனதிலோ..நான் என் அண்ணா திருமணத்தை எப்படி எதிர்பார்த்தேன். ஆனால் அவனே எனக்கென இல்லாமல் போவான் என்று எண்ணவில்லை என்று சிறுகண்ணீர் துளிகள் எட்டி பார்த்தது. அதை சமாளித்து எடுத்து பாட்டி கையில் கொடுத்தவாறு மயங்கினாள்.
“பாப்பா” என்று மருது அவளை தூக்க வர, அவன் கையை பிடித்தாள் துளசி. அவன் அவள் கையை உதறி விட்டு அவளை முறைத்தான்.
திலீப் அவளை முறைத்துக் கொண்டே ரம்யாவை தூக்கினான். அவளுக்கு ஒன்றுமில்லை. கொஞ்சம் வீக்கா இருக்கா. இன்று முழுவதும் அவள் ஓய்வெடுத்திருக்கணும். ஆனால் அவள் ஓய்வெடுக்கல. அதான்..வேற ஒன்றுமில்லை. உங்க வேலைய நீங்க பாருங்க என்று சொல்லி விட்டு சிம்மாவை அழைத்தான்.
ஏம்மா, “என்ன பொண்ணு நீ? அண்ணன் தங்கச்சிய பிரித்ததில்லாமல் இப்ப அவள் மயங்கும் போது என்னன்னு அந்த பையன பார்க்க கூட விடமாட்டேங்கிற? நீயெல்லாம் எப்படி உன் குடும்பத்தை சமாளிப்ப?” அந்த சின்னப் பொண்ணுக்கு இருக்கும் சாமர்த்தியம் கூட உனக்கில்லை என்று பாட்டி துளசியை திட்டி விட்டு சென்றார். அவர் பின்னே அனைவரும் சென்று விட்டனர். துளசி அம்மா, அப்பா மட்டும் அங்கே இருந்தனர்.
மருது, “நாங்க கிளம்புறோம்” என்று அவர்கள் சொல்ல, “சரிங்க மாமா” என்றான் அவன்.
“அம்மா” துளசி அழைக்க, ச்சீ அப்படி கூப்பிடாதடி. என்னோட வீட்டுக்கு நீ வந்த கால ஓடச்சிருவேன் என்று துளசி அம்மா சொல்ல, “அப்பா” அவள் அழைக்க, அவர் மனம் நொந்து என் மேல தான்ம்மா தப்பு. நீ பெரிய பொண்ணு புரிஞ்சுப்பன்னு தான் ரம்யாவை உன்னுடன் சாதாரணமாக பழக விட்டேன். இப்படி அவ மனச மட்டுமல்லம்மா எல்லார் மனசையும் கொன்னுட்ட. இனி எங்க வீட்டுக்கு வராதம்மா..என்று அவர் சொல்ல, துளசி அங்கேயே அமர்ந்து கதறி அழுதாள்.
மருது அவளை ஒரு பொருட்டாய் கூட மதிக்காமல் வீட்டினுள் சென்று அவனது அலைபேசியில் ரம்யாவை பார்த்துக் கொண்டே சோர்வுடன் படுத்துக் கொண்டான்.
சற்று நேரத்தில் துளசி உள்ளே வந்து, மாமா..என்னை மன்னிச்சிருங்க. நான் வேணும்ன்னே எதுவும் பேசலை என்றாள். அவன் எதுவுமே அவளிடம் பேசவேயில்லை. அவனருகே செல்லவே பயமாக இருந்தது துளசிக்கு.
சிம்மா வீட்டிற்கு அனைவரும் செல்ல, ரம்யாவை எழுப்பி அவளுக்கு மருந்து, ஊசி என போட்டு விட்டு அவளை ஆழ்ந்த உறக்கத்திற்குள் தள்ளினான் திலீப்.
ஆன்ட்டி, அவள் எழவும் சாப்பிட ஏதாவது கொடுங்க. எல்லாரும் வாங்க. அவள் விழிக்க நேரமாகும் என்று திலீப் கூற, “புகழேந்தி அவனை பார்த்து வேறெதுவும் பிரச்சனை இல்லைல்லப்பா?” என்று கேட்டார். அவன் சிந்தனையுடன் அவள் இருக்கும் அறையை பார்த்தான்.
அது அவள் விழித்த பின் தான் தெரியும். அவள் உடம்பிற்கு ஒன்றுமில்லை. மனசு தான் என்று அவனையும் மீறி வந்த கண்ணீரை தொட்டு பார்த்து சமாளித்து பேசி விட்டு அவன் குடும்பத்துடன் புகழேந்தியின் பண்ணை வீட்டிற்கு சென்றான்.
விக்ரம், மகிழன், கீர்த்தனா, ரசிகா மட்டும் அன்னம் வீட்டில் புதுமண ஜோடிகளுடன் தங்கினர்.
பண்ணை வீட்டிற்கு வந்த கிருபாகரனின் மொத்த குடும்பமும் ரம்யாவை பற்றிய எண்ணங்களுடனே இருந்தனர். தெரியாத பொண்ணாக இருந்தாலும் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அந்த பொண்ணுக்கு இப்படியொரு பிரச்சனையா? என எல்லார் மனதிற்கும் கஷ்டமாக இருந்தது.
பாட்டியும் தாத்தாவும் திலீப்பை பார்க்க வந்தனர். அவன் தன் அம்மா மடியில் வருத்தமாக படுத்திருந்தான். அவர் தன் மகனின் தலையை வருடியவாறு, “அந்த பொண்ணை உனக்கு பிடிக்குமாடா?” திலீப் அம்மா கேட்க, “ம்மா..என்ன பேசுறீங்க?” அவ ஸ்கூல் கூட முடிக்கலை. “வயது வித்தியாசம் உங்களுக்கு தெரியலையா? நீங்களும் மத்தவங்க மாதிரி பேசுறீங்க?” கொந்தளித்தான் திலீப்.
அதுக்கில்லைப்பா. “காதல்ல ஏது வயது வித்தியாசமெல்லாம்?” அப்படி என்ன உனக்கு வயதாகி விட்டது. எழெட்டு வருடம் தான வித்தியாசம் இருக்கும் என்று அவன் அப்பா பேச, அப்பா ஒன்பது வருடம் இருக்கும்.
சோ..”நீ கணக்கு பார்த்திருக்கல்ல?” அவன் அம்மா கேட்க, ஓ..காட், “உங்களுக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறது?”
வேண்டாம்ப்பா. நீ புரிய வைக்க வேண்டாம். ஏன் கேட்கிறோம்ன்னா…இன்னும் ஒரு வருடத்தில் நம்ம ரகசியன்- ரசிகா திருமணம் முடிந்த பின் உனக்கு தான் பார்க்கணும்.
பாருங்கப்பா. எனக்கு பிரச்சனையில்லை என்றான் அவன்.
உன்னை எனக்கு நல்லா தெரியும் திலீப். நீ என் மகன் என மனதினுள் அவன் அம்மா புன்னகைத்தார். பாட்டியும் தாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, வாயிலை பார்த்த திலீப்..”வாங்க தாத்தா, பாட்டி” என்று எழுந்து வந்து அவர்களை அழைத்தான். அவன் அம்மா அப்பா அவர்களை பார்த்தனர்.
சும்மா தான்ப்பா வந்தோம் என்றார் பாட்டி.
உள்ள வாங்கத்த, வாங்க மாமா என்று அவன் அம்மா அழைக்க, இருவரும் உள்ளே வந்து அமர்ந்தனர். தாத்தா சிந்தனையுடன் இருக்க, “என்னதுப்பா கேட்கணும்?” கேளுங்க என்றார் திலீப்பின் அப்பா.
அந்த சின்னப் பொண்ணை நம்ம சென்னையில படிக்க சேர்க்கலாம்ல்ல. அவ அண்ணியை பார்த்தா சரியா படல. அந்த பொண்ணை கஷ்டப்படுத்துவாங்களோன்னு தோணுது தாத்தா சொன்னார்.
இல்ல தாத்தா, இந்த வருசம் முடித்த பின் அவளிடம் அதை பத்தி பேசிக்கலாம். “அவள யாராவது பார்த்துப்பாங்க? அவளை பத்தி பேசவா வந்தீங்க?” திலீப் கேட்க, ஆமாப்பா..அந்த பொண்ணு ரொம்ப கஷ்டத்துல்ல இருக்குல்ல. மனசு கேக்கலைப்பா தாத்தா சொல்ல, திலீப் தன் பெற்றோரை பார்த்தான்.
பாட்டி, தாத்தா, நான் உதவி மட்டும் தான் செய்தேன். அந்த பொண்ணு இடத்துல்ல யாரு இருந்தாலும் அப்படி தான் செய்திருப்பேன் திலீப் கூற, ம்ம்..சரிப்பா. தாத்தாவுக்கு புரியுது. ஆனாலும் அந்த பொண்ணு அவர் கேட்க, இப்படி அவள பத்தியே பேசுறதா இருந்தா என்னிடம் யாரும் பேச வேண்டாம் என கோபமாக அவன் அமர்ந்தான்.
வேண்டாம்ன்னா சரிப்பா. நல்ல விசயம் பண்ணி இருக்கப்பா என்று தாத்தா எழ, பாட்டி திலீப்பின் சிந்தனையை பார்த்து மற்றவர்களிடம் காட்ட, “எதுவும் பேச வேண்டாம்” என்று அவர்கள் சைகை செய்ய, அவனிடம் சொல்லி விட்டு அனைவரும் நகர்ந்தனர்.
இரவு ஏழு மணியளவு வெளியே வந்த திலீப் யாரையும் காணாது அனைவர் அறையையும் எட்டிப் பார்த்து விட்டு அவன் அம்மாவிற்கு அழைத்தான்.
அம்மா, “எங்க இருக்கீங்க?”
“நீ தான் பேசக்கூடாதுன்னு சொன்ன?” நான் பேசலைப்பா என்று அலைபேசியை அணைத்தார்.
என்ன பேசுறாங்க? திலீப் குழப்பமுடன் சுவாதியை அழைக்க, அவளோ..நாங்க உனக்கு பிடிக்காதவங்கல்ல பார்க்க வந்திருக்கோம். அவங்க முழிச்சுட்டாங்க என்றாள்.
“என்ன? பிடிக்காதவங்கல்லா? யார் அது?” திலீப் கேட்க, “நீ தான பெரியப்பாகிட்ட ரம்யாவை பிடிக்காதுன்னு சொன்ன?” என்று சொல்ல,
“வாட்? ஏய்..பிடிக்காதுன்னு நான் எங்கே சொன்னேன்?”
“அப்ப பிடிக்குமா?” சுவாதி கேட்க, சுவா..கடுப்பாக்காத. “இரு வாரேன்” என்று வெளியே வந்தான். ஒரு கார் கூட வெளியே இல்லை. அவ்விடமும் புதியது. இரவு நேரம் வழி தெரியாமல் விசாரித்து வந்து கொண்டிருந்தான்.
இடையே ஓரிடத்தில் மருது தனியாக கவலையுடன் அமர்ந்திருப்பதை பார்த்தான். அவனிடம் சென்று திலீப் நிற்க, கண்கலங்க அவனை பார்த்த மருது, ரம்யாவை பற்றி அனைத்தையும் சொல்லி அழுதான்.
என் மேல தான் தவறு. நான் தான் கவனித்து இருந்திருக்கணும். இங்க இருக்கும் வரை அவள எப்படியாவது தினமும் பார்த்திடுவேன். ஆனால் படித்து மருத்துவ படிப்பிற்காக சென்னை வந்தான்னா என்னால அவளை பார்க்க முடியாது. “எனக்கு அப்ப உதவுவீங்கலா?” என்று கேட்டான்.
“நா நானா?” திலீப் கேட்க,
“ஏன்? சென்னைக்கு அவ வந்தா. பார்க்க கூட போக மாட்டீங்கலா?” என்று மருது கேட்க, “நான் எப்படி?” எனக்கும் வேலை அதிகமா இருக்கும் என்று திலீப் தயங்க, ம்ம்..பரவாயில்லை என்று மருது எழுந்து நகர்ந்தான்.
நான் சிம்மா வீட்டுக்கு போகணும். “அழைச்சிட்டு போறீங்களா?” திலீப் கேட்க, இல்ல வேண்டாம். நீங்க யாரையாவது வரச் சொல்லி போங்க என்று சொல்லி அவன் செல்ல, திலீப் சிம்மா வீட்டிற்கு சென்றான்.
ரம்யாவை சுற்றி திலீப் அண்ணன்களும் தங்கை, அத்தை பொண்ணுங்களும் அமர்ந்து அவள் மனதை திசை திருப்பி சிரிக்க வைக்க முயன்று கொண்டிருந்தனர். அவளும் புன்னகைத்தாள். மனதினுள் எதையும் மறக்காமல்..
“சுவா” திலீப் அவளை முறைத்துக் கொண்டு அழைக்க, அண்ணா..பிஸியா இருக்கேன். என்னை தொந்தரவு பண்ணாத.
“பாட்டி” அவன் அழைக்க, பேரான்டி பாட்டியும் பிஸியா இருக்கேன். “பேசிட்டு இருக்கும் போது இடையில் வர்ற?”
“ராஜா” நோ வே ப்ரோ என்றான். திலீப் கோபமாக அனைவரையும் பார்க்க, கீர்த்தனா புன்னகையுடன் எழுந்து, “என்ன மாமா வேணும்? பசிக்குதா?” அன்னம்மா, அப்புறம் எல்லாரும் உணவு தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவனது அப்பாக்கள் நியூஸ் சேனலை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருக்க, விக்ரமும் சிம்மாவும் அவன் அறையில் ஆர்வமாக எதையோ பேசிக் கொண்டிருந்தனர். தாத்தா மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தார்.
“தாத்தா” என அவரிடம் திலீப் வந்தான்.
“என்னப்பா?”
“இங்க என்ன நடக்குது? எல்லாரும் இப்படி செய்தால் நான் எப்படி ரம்யாவின் உடல்நிலையை கவனிப்பது?”
நீ பார்க்க வேண்டாம்ப்பா. “கஷ்டப்பட்டு எதுக்கு பாக்குற?” வேற டாக்டர் வருவார் என்று அவர் சொல்ல, ஒருவர் வந்தார். அவரை பார்த்து எல்லாரும் நகர்ந்து வழி விட்டனர்.
“யாரோ பார்க்கலாம்? நான் பார்க்கக்கூடாதா?” என பொறுமிக் கொண்டே வெளியே சென்று அமர்ந்தான்.
விக்ரமும் சிம்மாவும் அவனிடம் வந்து அமர்ந்தனர்.
ஆமா, “உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“அதான் தெரியலையே?”
“நன்றாக சிந்தித்து பாருங்க” என்று இருவரும் உள்ளே சென்றனர். ரம்யா டாக்டரை பார்த்து, “திலீப் வந்தான்ல்ல? அவன் செக் பண்ண மாட்டானா?” என ரம்யா கேட்க, அனைவரும் புன்னகைத்தனர்.
“வருவான்ம்மா” என்று திலீப் சார், “உங்க பேசன்ட்டை பார்க்க நீங்க தான் வரணுமாம். அவங்க ஆர்டர்” ராஜா கத்த, “ஆர்டரா? நான் கேட்க தான செய்தேன்” என்றாள் ரம்யா.
விடும்மா, அவன் பார்க்கட்டும். வாங்க நாம வெளிய இருப்போம் என்று பாட்டி எல்லாருடனும் வெளியே வந்தார்.
டாக்டராக உள்ளே வந்த ஒருவன் புன்னகையுடன் வெளியேறினான். “நீங்க?” திலீப் கேட்க, பேசண்ட் உங்ககிட்ட தான் சிகிச்சை எடுத்துக்கணும்ன்னு சொல்றாங்க. நீங்க பாருங்க டாக்டர். நான் கிளம்புகிறேன் என்று அவர் சென்றார்.
திலீப் ரம்யா இருக்கும் அறைக்கு வந்தான். அவள் காலில் கட்டிடப்பட்டிருந்தது.
ஏய், “என்னாச்சு? நீ ஆடாம இருக்கவே மாட்டாயா?” அவன் கேட்க, “ஆடவா? நான் எங்க போய் ஆடுறது?” நானே கொஞ்ச நேரத்துக்கு முன் தான் விழித்தேன். விழிக்கும் போதே இந்த கட்டு இருந்தது.
“எதுக்கு? யார் போட்டு விட்டா?” திலீப் கேட்க, நான் தான் என்றான் சிம்மா.
என்னாச்சு? திலீப் அவனை பார்க்க, பிரச்சனையில் ஓடும் போது காலில் கண்ணாடி துண்டு கிழித்திருக்கும் போல. யாருமே அதை கவனிக்கலை. வீட்டிற்கு வந்த பின் தான் தெரிந்தது. அப்பொழுதும் இரத்தம் இல்லை. மயங்கும் முன் எதிலோ மிதிச்சிட்டான்னு நினைக்கிறேன். நீங்க போன பிறகு தான் லேசான இரத்தம் அதிகமாகியது. அதான் கட்டு போட்டு விட்டேன் என்று அமர்ந்தான்.
அவனை பார்த்து விட்டு ரம்யாவிற்கு பரிசோதனை செய்தான்.
“ஏதாவது சாப்பிட்டாயா? இல்லையா?”
ம்ம்..ஜூஸ் குடித்தேன்.
என்ன சிம்மா, “சாப்பிட கொடுக்கவில்லையா?” திலீப் கேட்க, இரவு எல்லாருடனும் சேர்ந்து சாப்பிட்டுக்கிறேன் என்று ரம்யா சொல்ல, உனக்கு அடிபட்டிருக்கு. நீ வீக்கா இருக்க. “இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருந்திருக்க?” அவன் திட்ட, ரம்யா அவனை பார்த்து புன்னகைத்தாள்.
“எதுக்கு சிரிக்கிற?” நான் உன்னை திட்டிட்டு இருக்கேன் என்று அவன் முறைக்க, அவள் சிம்மாவை பார்த்து விட்டு மீண்டும் புன்னகைத்தாள்.
சிம்மா, “என்ன பண்றா?” திலீப் கேட்க, அவகிட்டவே கேட்டுக்கோங்க என்று அவன் எழுந்து வெளியே சென்றான்.
ஏய், “சொல்லு?” என்று திலீப் அவளிடம் நெருங்கி அமர, பதட்டமான ரம்யா வேகமாக கீழே இறங்கினாள். அவளது கட்டிட்ட கால் வலிக்க செய்தது.
ஷ்..என்று படுக்கையில் அமர்ந்தாள். ஏய், “பார்த்து” என்று அவனும் கட்டிலின் முன் வர, இருவரின் நெருக்கத்தில் இருவர் கண்களும் மோதிக் கொண்டு சஞ்சரித்தன.
சட்டென திலீப் விழித்து, உணவு முடிந்த பின் மருந்து சாப்பிடணும் என்று எழுந்தான்.
ம்ம்..என்று ரம்யா அவனை பார்த்து, “திலீப்” என அழைத்தாள்.
“என்ன?” அவன் கேட்டுக் கொண்டே அவளை பார்ப்பதை தவிர்த்து அலைபேசியை பார்த்தான்.
“தேங்க்ஸ்” என்றாள்.
“எதுக்கு?” அவன் பார்க்க, நான் எப்படி அவங்ககிட்ட இருந்து வர்றதுன்னு தெரியல. நீங்க தான் என்று அவள் நிறுத்த, “என்ன நீங்க தான்?”
நீங்க தான உதவுனீங்க. எல்லாரும் சொன்னாங்க என்றாள்.
“என்னது? சொன்னாங்களா? என்ன சொன்னாங்க?” அவன் கேட்க,
உள்ளே வந்த கீர்த்தனா, இந்தா ரம்யா..உன்னோட ப்ரெண்டு கால் பண்றாங்க என்று சிம்மா அலைபேசியை கொடுத்தாள்.
அலைபேசியை வாங்கி காதில் வைத்த ரம்யா முகத்தில் புன்னகை. சரா..போதும். நான் நல்லா இருக்கேன். “நீ ஓ.கே தான? பாருகிட்ட பேசுனியா?” சோர்வாக அவள் கேட்க, நாங்க எங்க காதலை தள்ளி வச்சுட்டு முதல்ல படிக்கப் போறோம்.
வாவ்..குட்..உற்சாகமானாள்.
அந்த ஜெகா தான் உனக்கு பதில் ஸ்பீச் கொடுத்தான். ம்ம்..என்று வருத்தமானாள்.
அச்சச்சோ, “எங்க ரம்யா வருத்தப்படுறாளா?”
அவன் கிடக்கான். அவன் உன்னிடம் இன்று பேசணும்ன்னு சொன்னான்.
“என்னது? அவன் என்னிடம் எதுக்கு?”
வேற எதுக்காக இருக்கும். இன்று அவன் உன்னை பீட் பண்ணதை சொல்லவா இருக்கும்.
சரி, நாளைக்கு பார்த்துக்கிறேன்.
நோ..ரம்யா. அவனுக்கு விசயம் எல்லாமே தெரிஞ்சு போச்சு. உன்னை பார்க்க கிளம்பிட்டான். அதுக்கு தான் கால் பண்ணேன்.
சரா, “என்ன சொல்ற? நான் என்ன என் வீட்டிலா இருக்கேன்?” இங்க நிறைய பேர் இருக்காங்க. அவன் சும்மாவே ராங்கா பேசுவான். அய்யோ..டேய் அவனை வர வேண்டாம்ன்னு சொல்லுடா..
“என்னாச்சு? தேவையில்லாத பிரச்சனையோ?” திலீப் கேட்க, அவள் அவன் கேட்டதை கூட காதில் வாங்கவில்லை. கீழே இறங்க சென்றவள் கையை பிடித்த திலீப் அவளை முறைத்தான்.
சிம்மாவும் அங்கே வர, மற்றவர்களும் வந்தனர்.
“என்ன ரம்யா?”
அண்ணா, அந்த ஜெகா இப்ப இங்க வாரானாம் என்று அவள் சொல்ல, “இந்த நேரத்துல்ல எதுக்கு வர்றானாம்?” சிம்மா கேட்க, கார் சத்தம் கேட்டது.
காரிலிருந்து கோர்ட் சட்டையுடன் கையில் பூச்செண்டுடன் இறங்கி உள்ளே வந்தான். பொண்ணுங்க எல்லாரும் ஆவென பார்க்க, “யாருடா இவன்? என் அளவுக்கு இல்லைன்னாலும் அழகா இருக்கானே! ஆனால் மீசையில்லையே?” விகாஸ் பேச, அவனை பார்த்து..”ரம்யா டார்லிங் எங்க?” என்று கேட்டான்.
“என்னது டார்லிங்கா? அய்யய்யோ..திலீப்புக்கு ஆப்பா?” ராஜா கேட்க, “வாய மூடுடா” என்றாள் சுவாதி.
விகாஸ் அறையை காட்ட, சிம்மா அவனை பார்த்து அதிர்ந்து நின்றான்.
உள்ளே வந்த ஜெகாவை தன் குட்டி மீன்குஞ்சு இதழ்கள் விரிய பார்த்தாள் ரம்யா. திலீப் அவனை குழப்பமாக பார்த்தான்.
“யாரு நீங்க?” திலீப் கேட்க, அவனை பார்த்து..என்னோட டார்லிங்கிற்கு உதவியதற்கு தேங்க்ஸ் என்று கட்டிலில் அமர்ந்திருந்த ரம்யா அருகே சென்று மண்டியிட்டு பூச்சென்ட்டை நீட்டி, “ஐ லவ் யூ ரம்மி செல்லம்” என்றான்.
அவளோ வாயில் கை வைத்து, “இவனா அவன்?” என்று ஜெகனை பார்த்தாள்.
இருவரையும் பார்த்த திலீப்பிற்கோ சினம் ஏறியது.
காதலை சொன்ன ஜெகன் அப்படியே விடாமல் ரம்யா கையை இழுத்து முத்தமிட்டான். எல்லாரும் ஆவென அவனை பார்த்தனர். பின் திலீப் முகம் போன போக்கை பார்த்து, “அய்யோ என்ன நடக்கப் போகுதோ?” என பார்த்தனர்.
இன்று காய்ச்சலால் விடுப்பு எடுத்தேன். அதான் நான் செய்ய வேண்டிய ஸ்பீச் உனக்கு கிடைச்சது. இல்லை நான் உனக்கு விட்டு கொடுத்திருக்க மாட்டேன். தெரியும்ல்ல?
“தெரியும் டார்லிங்” என்று அவன் கண்ணடிக்க, திலீப் இங்க வாயேன் ரம்யா அழைக்க, அவனே சீற்றத்தின் உச்சியில் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்திருப்பான்.
திலீப் முறைத்தவாறு அவளிடம் வர, ரம்யா அவன் தோளில் கையை போட்டு அடிபட்ட காலை தூக்கிக் கொண்டே, ஜெகா..நீ அப்படியே இரு. அசையாத என்று அவன் தலையை களைத்து அடிப்பட்டிருக்கோ. திலீப் கெல்ப் பண்ணுப்பா என்று ஜெகன் தலையை ஆராய்ந்தாள்.
ஜெகா, “அடி ஏதும் படலையே?”
அடியா எனக்கா? நெவர் டார்லிங். வா..நாம நம்ம வீட்டுக்கு போகலாம் அவன் அழைக்க, “என்னது வீட்டுக்கா?” விக்ரம் கேட்க, “வீட்டுக்கா?” என்று அருகே இருந்த துடப்பத்தை எடுத்து அவனை அடித்தாள்.
அய்யோ..வலிக்குதே..அவன் போலியாக கத்த, “என்னோட அண்ணனுக்கு தெரிஞ்சா நீ செத்தடா” அவள் எப்பொழுதும் போல் பேச, அண்ணனா..”ஸ்டாப் ரம்மு” என்று அவன் கத்த, “என்ன?” என்று அடிப்பதை நிறுத்தி அவனை பார்த்தாள்.
“அண்ணாவுடன் தான் இனி நீ பேச மாட்டேல்ல?” அவன் கேட்க, ரம்யா கண்கள் கலங்கியது.
ஓ..”சாரி ரம்மு” என்று அவளை கொஞ்சுவது போல் அவன் அவளை நெருங்க, திலீப் வேண்டுமென்றே அவனை தெரியாதது போல் வேகமாக இடித்தான்.
டாக்டர் சார், “உங்களுக்கு என்ன என்னோட ரம்மு அறையில வேலை? செக் அப் முடிஞ்சா வெளிய போங்க. தனியா ரொமான்ஸ் பண்ண விடுறீங்களா?” அவன் கேட்க, “என்னடா சொன்ன?” அன்னம் கோபமாக உள்ளே வந்தார்.
ஆன்ட்டி..சும்மா..சும்மா..தான் என்று கட்டிலை சுற்றி ஓடினான்.
“ஒரு நிமிசம்” என்று திலீப் சொல்ல, “என்னப்பா?” அன்னம் கேட்டார்.
ஏன்டா, “ஸ்கூல் பையன் மாதிரியா நடந்துக்கிற? மீசை கூட வளரல்ல உனக்கெல்லாம் காதலா?” என்று ஜெகன் சட்டையை திலீப் கோபமாக பிடித்தான்.
“நாங்க காதலிச்சா உங்களுக்கென்ன? நான் யார் தெரியுமா?”
நீ யாராக வேணும்ன்னாலும் இரு. எனக்கு அது தேவையில்லை. “அவள் அண்ணாவை எதுக்கு அவளுக்கு நினைவு படுத்தின?” அவ மூஞ்சிய பாரு திலீப் சொல்ல, அவளை பார்த்த ஜெகன்..”ரம்மு” அழைக்க, நோ..ஜெகா, இப்ப எதுவும் பேசாத.
இல்ல ரம்மு, “அண்ணாகிட்ட பர்மிசன் வாங்கிட்டு சொல்லவா?” அவன் கேட்க, நோ..ஜெகா என்று கோபமான ரம்யா, ப்ளீஸ் இப்ப கிளம்பு. நாளைக்கு பார்த்துக்கலாம் என்று சொல்ல, அவன் யோசனையுடன் எல்லாரையும் பார்த்து செல்ல, அவன் தோளில் கையை போட்ட விக்ரம். அவளுக்கு இப்ப மூணு அண்ணனுக இருக்கோம். பார்த்து தம்பி. அவளுக்கு உன் மேல விருப்பமில்லை.
இல்ல, அவ நாளை பேசலாம்ன்னு சொல்லி இருக்கா. நாளைக்கு வருவேன் என்றான். சிம்மா அவனை பார்த்து புன்னகைத்தான். ஆனால் திலீப் கோபமாக என்ன பேசுகிறோம்ன்னு எண்ணாமல் வாய்க்கு வந்ததை பேசினான்.
“அது என்ன ரம்மு, உன்னோட அண்ணி சொன்னது போல தான் நடக்குது? காதல் இவன் மீது மட்டுமா? இல்லை எத்தனை பேர் இருக்கானுக?” என்று வார்த்தையை கடித்து துப்பினான் திலீப். அனைவரும் திலீப்பின் பேச்சில் அவனை அதிர்ந்து பார்த்தனர். அவன் அம்மா அவனை ஓங்கி அறைந்து, “அந்த பொண்ணுகிட்ட என்ன பேசிட்ட?” என்று திட்டினார். அவன் கோபத்தில் வெளியே சென்று விட்டான்.
ரம்யா கண்ணீருடன் அமர்ந்திருந்தாள். திலீப்பை விட்டு விலகி இருக்க முடுவெடுத்தாள் ரம்யா.
“அவன் ஏதோ கோபகத்தில் தான் பேசிட்டான்ம்மா” திலீப் அம்மா சொல்ல, இத்தனை வருடமான துளசி அண்ணி வீட்ல தான வளர்ந்தேன். அவங்களே என்னை புரிஞ்சுக்கலை. “திலீப்புக்கு என்னை பற்றி என்ன தெரியும் ஆன்ட்டி?” பரவாயில்லை.
அப்புறம் ஆன்ட்டி, எனக்கு ரொம்ப பசிக்குது என்றாள்.
“இதோ தயாராகிடுச்சுடா” என்று சுவாதி அம்மா பாசமாக சொல்ல, எல்லாரும் அவரை அதிர்ந்து பார்த்தனர்.
மாம், “ஆர் யூ ஓ.கே?” விகாஸ் கேட்க, “ஏன்டா” என்று அவனை முறைத்த சுவாதி அம்மா, வாம்மா…சாப்பிடலாம் என்று அழைத்தார்.
எல்லாரும் அவளை கவலையுடன் பார்த்தனர். இவனுக்கெல்லாம் ஆகாது..சுவாதி கோபமாக நகர்ந்தாள்.
அவள் சாப்பிட்ட பின் திலீப் தானாக வந்து அவளுக்கு மருந்தை கொடுத்தான். அவள் ஏதும் பேசாமல் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டாள்.
திலீப் வெளியே வர அனைவரும் அவளை பற்றி தான் பெருமையாக பேசிக் கொண்டிருந்தனர்.
சரி..சரி..இனி யாரும் திலீப்பிடம் அந்த பொண்ணை பற்றி பேச வேண்டாம் என்று திலீப் அப்பா சொல்ல, “என்னங்க?” வருத்தமாக கேட்டார் அவன் அம்மா.
இல்லம்மா, “அந்த பொண்ணு இதுக்கு மேல உன் பையன் பக்கம் வருவான்னு உனக்கு தோணுதா?” எனக்கும் அந்த பொண்ணை பிடிச்சிருக்கு. ஆனால் நம்ம பையன் யாரிடமும் இப்படி எடுத்தெறிந்து பேசவே மாட்டான். ஏற்கனவே கஷ்டத்தில் இருந்த பொண்ணு நம்ம பையனால் மேலும் கஷ்டப்படுவா.
இதை இப்படியே விட்ருங்க. நம்ம திலீப்பிற்கு வேற பொண்ணை பார்த்துக்கலாம் என்று அவர் சொல்ல, இதுவும் சரிதான். அந்த பொண்ணிடம் எல்லாரும் எப்பொழுதும் போல் பேசிக்கலாம். ஆனால் திலீப்பை கோர்த்து விடுவது போல் யாரும் ஏதும் செய்யக்கூடாது. புரியுதா? தாத்தா சுவாதியை பார்த்து கேட்க, எல்லாரும் தலையசைக்க அவள் மட்டும் அமைதியாக இருந்தாள்.
நீங்க கவலைப்படாதீங்க தாத்தா. நான் பார்த்துக்கிறேன் என்று சுவாதி அருகே வந்து விக்ரம் கூறினான்.
ஓ…இது எல்லாரின் கூட்டு சதியா? இனி எந்த தொந்தரவும் இருக்காது என்று திலீப் ரம்யாவை பார்க்க, அவள் அழகாக குழந்தை போல அவன் கண்ணுக்கு தெரிந்தாள். அவளை பார்த்து புன்னகைத்து விட்டு அவர்களிடம் வந்து அமர்ந்தான். அவன் காதலை அவன் உணரவில்லை. அவன் காதலை உணரும் போது ரம்யா அவனருகே இருப்பாளா? பார்க்கலாம்.
இரவு மணி ஏழாக, காரை நிறுத்தி வேகமாக கீழே இறங்கினாள் தியா சினமுடன்.
தியா நில்லு..அஜய் அவள் பின் வர, அவனிடம் சென்று கார்ச்சாவியை அவன் கையில் திணித்து விட்டு அவள நகர, அவன் அவளது அலைபேசியை பிடுங்கி அவன் வீட்டிற்கு வேகமாக நடந்தான்.
அஜய்..நில்லுங்க என்று அவன் பின் ஓடி வந்தாள் தியா. வீட்டினருகே சென்ற அவன் நின்று விட்டான். அதை கவனிக்காமல் வந்த தியா அவன் மீது முட்டி நின்றாள். அஜய் அவளையே பார்த்துக் கொண்டு நிற்க, அவன் கையிலிருந்த அலைபேசியை பிடுங்கி ஓட முயன்றாள்.
சட்டென அவள் கையை பிடித்து தன் பக்கமாக இழுத்து அவளது இடையை அழுத்தமாக பிடித்தான். அவள் அதிர்ந்து, “அஜய் சார் விடுங்க” என்று சுற்றும் முற்றும் பதட்டமுடன் பார்த்தாள்.
அந்நேரம் அவன் அம்மா வெளியே வந்து, “ஏய்..என் பிள்ளையை என்னடி செய்ற?” என்று அவளை அடிக்க வந்தார்.
“மாம்” என்று அஜய் அவன் அம்மாவை முறைத்து தியாவை அவன் பின்னே நிற்க வைத்தான். அவன் அப்பாவும் அங்கு வந்தார்.
அஜய், அவ உன்னை மயக்க பார்க்கிறாள் என்று அவன் அம்மா சொல்ல, அவன் கையை உதறி விட்டு, அவன் அம்மாவிடம் வந்து, உங்க பையனை மயக்க நான் வரல. ஒரு வேலை அஜய் சாரை பிடித்திருந்தால் நானே உங்கள் முன் வந்து உங்க மகனை காதலிக்கிறேன்னு சொல்லுவேன். புரியுதா? இந்த மயக்குறது, பின்னாடி சுத்த வைக்கிறது எதுவும் என் வேலையில்லை என்று அஜய்யையும் சேர்த்து தியா முறைத்து செல்ல,
தியா, நீ எனக்கும் சேர்த்து இரவு உணவை தயார் செய்து தான் ஆகணும். நான் ப்ரெஷ் ஆகிட்டு வாரேன்.
“உங்க வீட்லயே கொட்டிக்கோங்க சார்” என்று அவள் சொல்ல, அஜய் புன்னகைத்து, நீ மட்டும் தயார் செய்யலைன்னா நான் உன் வீட்டிற்கு வெளியே தான் தூங்குவேன் என்றான்.
அஜய், “என்ன பேசுற?” அவன் அப்பா கேட்க, நான் இனி காலை மட்டும் தான் நம்ம வீட்ல சாப்பிடுவேன். மற்ற நேரம் தியாவுடன் தான். அவளோட சாப்பாடு எனக்கு பிடிச்சிருக்கு.
சொன்னா கேளு அஜய். அவ மந்திரக்காரி. உன்னை வசியம் செய்து கட்டுக்குள் வச்சுப்பா என்றார் அவன் அம்மா.
“வசியமா?” மாம்..அது எப்படி செய்யணும் தெரிந்தால் சொல்லுங்க. செக்ரட்டரின்னு தான் பேரு. நான் சொல்றதை கேட்கவே மாட்டேங்கிறா.
அஜய், தியாகிட்ட விளையாட்டா பழகாத. அவ ரொம்ப சென்சிட்டிவ் அவன் அப்பா திட்டினார்.
எனக்கு எல்லாம் தெரியும் டாட் என்றான்.
சென்சிட்டிவ்வாம்..சென்சிட்டிவ்..நம்மை சொத்துக்காக அவ எதுவும் செய்வா அஜய். உடனே உனக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறேன். திவ்யாவை வர வைக்கப் போகிறேன் அவன் அம்மா சொல்ல, காமெடி செய்தது போல் கலகலவென சிரித்தான் அவன்.
அவ வந்தான்னா..எப்படி ஓட விடணும்ன்னு எனக்கு தெரியும் மாம் என்று புன்னகையுடன் சென்றான் அஜய். அஜய் அப்பா அவன் அம்மாவை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றார்.