அத்தியாயம் 40

புடவையென விரிந்த மங்கலகரமான மஞ்சள் அதிகாலை பிறந்தது.

அம்மாடி, எழுந்திரும்மா என தியா முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பினார் கண்ணம்மா.

ப்பா..கொஞ்ச நேரம். ரொம்ப தலை வலிக்குது என திரும்பி படுத்தாள் தியா.

அம்மாடி, நீங்க தனராஜ் சார் வீட்ல இருக்கீங்க என்று கண்ணம்மா சொல்ல அடித்து பிடித்து எழுந்து தலையை பற்றி அறையை பார்த்தாள்.

நேற்றைய நினைவு வந்தது. அச்சோ! அந்த விது.. சொன்னானா? ம்ம்.. சொல்லீட்டான்.

“அஜய் சார் குடிச்சிருந்தாரே! அச்சோ அவரை ஏதும் அந்த லூசுபையன் செய்துட்டானா?” என பேசிக் கொண்டே தலையை விட்டு கண்ணம்மாவை பதட்டமாக பார்த்தாள் தியா.

அய்யாவுக்கு ஒன்றுமில்லைம்மா, “ஏதும் பிரச்சனையாம்மா?” அவர் கேட்க, ஆமா..ஆமா..என்று போர்வையை விலக்கி அவள் ஆடை மாறி இருப்பதை பார்த்து, என் ஆடை? அவர் என்னை..என பயந்தாள்.

அய்யோ அம்மா, அய்யாவை தப்பா நினைக்காதீங்க. நான் தான் உங்களுக்கு ஆடை மாற்றி விட்டேன். எங்களை பார்த்து பேசாமல் கடந்து சென்று விடுவார்ம்மா. உங்களுக்காக எங்க குடிலுக்கு வந்து உங்களை பார்த்துக்க அழைச்சிட்டு வந்தார். இரவு முழுவதும் உங்கள் பாதுகாப்பிற்காக நான் தான் உங்களுடன் இருந்தேன்.

“அவர்க்கு ஒன்றுமில்லையே? நாங்க எப்படி வீட்டுக்கு வந்தோம்? அவரும் குடிச்சிருந்தாரே! அவரா டிரைவ் பண்ணார்? நிஜமாக அவருக்கு ஒன்றுமில்லையே!” என தியா அடுக்க, எங்களுக்கு இதெல்லாம் தெரியாது. ஆனால் அவர் நல்லா இருக்கார் என்று இருவரும் ஒருவரை ஒருவர் அக்கறையுடன் நடந்து கொள்வதை எண்ணி புன்னகைத்தார்.

“எங்களுக்கா? வேற யாரும் இருக்காங்களா?” தியா கேட்க, என் புருசன் அய்யாவுக்கு காவலுக்காக இருக்கார் என்று தியாவை பார்த்து, அம்மாடி நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா, அஜய் அய்யாவுக்கு குளிக்க மட்டும் அனுமதி தந்து உடனே வீட்டுக்கு போக சொல்லுங்க. இல்லை அவங்க அம்மா உங்களை பற்றியும் தப்பா பேசுவாங்க. நான் அய்யோட வீட்டிற்கு போகணும்மா. பார்த்துக்கோங்க. முழுசா விடியுறதுக்குள்ள அவரை வீட்டுக்கு அனுப்பிடுங்க என்று சொல்லி விட்டு கண்ணம்மா நகர்ந்தார்.

உடனே அலைபேசியை எடுத்த தியா, வினித்தை அழைத்து விசயத்தை சொல்ல, அவன் அதிர்ந்து அவனுடைய ஆடையை எடுத்துக் கொண்டு அஜய் வீட்டினருக்கு தெரியாமல் தியா இருக்கும் இடத்தை விரைந்தான். தியா குளித்து வெளியே வந்து அஜய்யை பார்க்க ஆயத்தமானாள்.

தியா அஜய்யை பார்க்க மேற்சட்டையும் பாவடையுமாக கீழே வந்தாள். அஜய்யை தவிர கீழே யாருமில்லை. வந்தவள் அவனருகே வந்து அவனை உற்று பார்த்தாள். மது வாசனை தெரிந்தது. சோபாவை பார்த்தவாறு உறங்கிக் கொண்டிருந்த அஜய் சட்டென அவள் புறம் திரும்பினான். அவள் அவனை கவனிக்கவில்லை.

“இதையா குடிச்சேன்?” ச்சீ..ச்சீ..என்று உதட்டை துடைத்தாள். “அய்யோ! இந்த வாடை போக மாட்டேங்குதே!” என்று அவனை பார்த்தாள். அவன் தூங்கிக் கொண்டிருந்தாலும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் அவனை போல இவளும் அவனை நெருங்கி, “என்ன பேசுகிறான்?” என்று கேட்க முனைய, கனவில் தியாவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த அஜய், அவளை இதழ்களுடன் இதழ் கோர்த்தான். அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்து, அவன் இதழ்களில் இருந்து விடுபட்டு வேகமாக நகர்ந்து தரையில் அமர்ந்து வாயில் கை வைத்து அவனை பார்த்தான். அவனோ பேப்….என ஏதோ உலறிக் கொண்டிருந்தான்.

கண்ணம்மா கூறியது நினைவிற்கு வர, கீழிருந்த குளியலறையில் ஹீட்டரை போட்டு விட்டு அவன் மீது பக்கெட் தண்ணீரை ஊற்றினாள். அஜய் மூச்சு வாங்க பதறி எழுந்து அமர்ந்தான்.

அஜய் சார், எழுந்திருங்க. முதல்ல குளிச்சிட்டு வாங்க என்று தியா சொல்ல, “என்ன பண்ணீட்ட?” பயந்துட்டேன் என அஜய் சொல்ல, “நீயாடா பயப்படுவ?” என்று அவள் மனதில் எண்ணிக் கொண்டு, கண்ணம்மா அக்கா தான் சொன்னாங்க. உங்க அம்மா விழிக்கும் முன் கிளம்புங்க என்று அவனை குளியலறைக்கு தள்ளினாள்.

அவன் குளித்து விட்டு துவாலையை இடுப்பில் கட்டிக் கொண்டு வெளியே வந்து ஹாலில் அமர்ந்தான்.

“ராமா” என்று அவனை பார்த்து, “இப்படியா வருவாங்க?” என தியா கேட்டாள்.

“அப்புறம் எப்படி வரணும்? நீ எனக்கு ஆடை வச்சிருக்கியா?” அஜய் கேட்டான்.

“வினித் வந்தால் தப்பா நினைச்சிருவானோ!” என மனதில் எண்ணியவாறு, ஐந்தே நிமிடம் தான். ப்ளீஸ் இந்த அறைக்குள்ள போங்க என அவனை பார்ப்பதை தவிர்த்து பேசினாள்.

“எதுக்கு?” அஜய் புன்னகையுடன் கேட்க,

ப்ளீஸ்..ப்ளீஸ்..கெஞ்சினாள் தியா.

அஜய் அவளை ரசித்துக் கொண்டே, ஓ.கே என்று அறைப்பக்கம் செல்ல, ஒரு நிமிடம் என சமையலறைக்கு சென்று காபியை எடுத்து அவன் சென்ற அறைக்கு வெளியே இருந்து அவனை அழைத்து அவனிடம் கொடுக்க, ஒரு கையில் அதை வாங்கிய அஜய், மறு கையால் அவளை பிடித்து உள்ளே இழுத்தான்.

சார், “என்ன பண்றீங்க?” என தியா அவன் கையை எடுக்க முயல, காபியை அருகே இருந்த மேசையில் வைத்து விட்டு, இரு கையாலும் அவளை பிடித்து இழுத்தான். அவள் அவன் மீது இடித்து விட்டு, “சாரி சார்” என வெளியே செல்ல இருந்தவள் கையை இறுக பற்றிய அஜய் அறைக்கதவை தாழிட்டான்.

சார்..இப்ப வினித் வந்துருவான். அவனுக்கு மட்டும் இது தெரிந்தால் உங்களை சும்மா விட மாட்டான் என்றாள் தியா.

“அப்படியா?” என அவளை அவன் பக்கம் இழுக்க, அவள் கைகள் அவன் வெற்று மார்பில் பதிந்தது. அவள் அவனை பார்க்க முடியாமல் தலைகவிழ்ந்து நின்றாள். மெதுவாக அவள் கையை எடுக்க, அதை தடுத்த அஜய் அவள் கையை அவனது இதயதுடிப்பில் வைத்தான். அவள் நிமிர்ந்து அவனை பார்க்க, பேப்..நீ..என சொல்ல வந்தவன் நிறுத்தி அவளை தன் மார்ப்போடு அணைத்தான்.

அவள் பயந்து திணறி விலக முயற்சிக்க, உன்னோட அப்பா உன் அருகே தான் இருக்கார். நீ தனியாக இல்லை. நான் இருக்கேன். எதுக்கும் பயப்படாத. நீ அழுதால் ஏனோ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அவன் ஆறுதல் வார்த்தைகளை தெளிக்க, அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.

என்ன தான் அஜய் மீது தியாவிற்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அவள் அப்பாவின் வார்த்தை அவளை முன்பிருந்தே பாதித்து இருந்தது. வீட்டில் எப்போதுமே தியா அப்பா அஜய் பற்றியே சொல்லிக் கொண்டிருந்ததால் தியாவை மீறியும் அஜய்யை அவளுக்கு பிடிக்கும். ஆனால் அவள் அதை உணரவேயில்லை. அப்பா யாரையும் காயப்படுத்த மாட்டார். நானும் செய்ய மாட்டேன் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

இப்பொழுது அப்பா இல்லை. அவளுக்கென யாருமே இல்லை என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இதில் அஜய்யின் அக்கறையும் ஆறுதலான வார்த்தைகளும் அவளை கரைத்து அவனை அணைக்க வைத்தது.

அவன் அணைப்பை விடுவிக்க, சாரி..”நான் ஆறுதலுக்காக தான் சார்” என்று தியா கண்கலங்கினாள்.

“எதுக்கு சாரி?” என்று அவளை மேலிருந்து கீழாக பார்த்து, நீ உனக்கு பிடித்த மாதிரியே ஆடையை போட்டுக்கோ. யாருக்காகவும் உன்னை மாத்திக்க வேண்டாம்.

“நம்ம கம்பெனி?”

அதெல்லாம் பிரச்சனையே இல்லை. நீ உனக்கு பிடித்த ஆடையையே போட்டுக்கோ என்று அஜய் சொல்ல, தேங்க்யூ சார். வினித் உங்களுக்கு ஆடை தருவான். நீங்க மாத்திட்டு கிளம்புங்க என்று அவள் சொல்ல, ம்ம்..”தியா” என அஜய் அழைக்க, “சொல்லுங்க சார்” என்று அவனை ஏறிட்டாள்.

கண்ணை மூடேன். நான்..என அஜய் காதலை சொல்ல முடியாமல் திணற, “காபி ஆறிடும் சார்” என்றாள்.

உச்..என்றான் அவன்.

ஓ.கே சார் என்று அவள் கண்ணை மூட, அவளது இடையை பிடித்து அவன் உயரத்திற்கு அவளை துக்க, அவள் கண்களை திறந்தாள். அவன் பட்டென அவளது மென் இதழில் அவன் முரட்டு இதழை மென்மையாக பதித்தான்.

அவள் கண்கள் விரிந்து மனம் அடித்துக் கொள்ள, அஜய் அவள் கண்ணில் கண்ட பிரகாசத்தை பார்த்துக் கொண்டே அவளை இறக்கினான்.

எனக்கு அந்த காபியை விட இந்த எனர்ஜி போதும் என அஜய் சொல்ல, தியா விரைந்து வெளியேறி சமையற்கட்டுக்குள் சென்று தன் மார்பில் கை வைத்தாள். இதயம் துடிப்பை அதிகரிக்க, மனமோ மகிழ்ச்சி, பயம் இரண்டையும் கலந்து அவளுக்கு இனிய காதல் உணர்வை மலர வைத்தது.

அப்பொழுதும் அவள் அவனை எண்ணி, “இவன் இப்படி தானே என்றாலும் என்னுள் ஏதோ ஆகுதே?” என பதட்டமாக இருந்தாள். உள்ளே வந்த வினித், தியா..தியா..அழைத்தான்.

ம்ம்..என்று தன்னை சமாதானப்படுத்தி அஜய் இருக்கும் அறையை காட்டி விட்டு நகர்ந்தாள்.

அஜய்யோ..அவள் இதழ் ஸ்பரிசத்தில் காதல் உணர்வுகளில் ஏதேதோ எண்ணங்களில் சிரிப்புடன் படுத்திருந்தான்.

டேய், “என்ன பண்ணீட்டு இருக்க?” வினித் சத்தம் கேட்டு, அவனுக்கு தெரியக் கூடாது என அவன் உணர்வுகளை மனதினுள் புதைத்து சாதாரணமாக பேசி ஆடையை போட்டு வெளியே வந்தான்.

சமையலறை பக்கம் அஜய் எட்டி பார்க்க, ஏன்டா..வா என்று வினித் அஜய்யையும் அழைத்துக் கொண்டு சமையலறைக்கு சென்றனர். தியா தன் கூந்தலை ஊசிக் கொண்டையாக்கி உச்சியில் போட்டுக் கொண்டு, வினித் வாங்கி காய் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

தியா, “என்ன சமையல்?” என சமையற்கட்டின் மேலே ஏறி அமர்ந்தான் வினித்.

உன்னிடம் எத்தனை முறை சொல்லி இருக்கேன். இப்படி சமையல் செய்யும் இடத்தில் ஏறாதன்னு..அங்கிள் வரட்டும். சொல்கிறேன் என்றாள். சமையலறை வாசலில் நின்று அஜய் கையை கட்டிக் கொண்டு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான். தியா அஜய் கிளம்பி விட்டான் என நினைத்துக் கொண்டிருந்தாள்.

அதை விடு. “என்ன சமையல்?” எனக்கு சேர்த்து தயார் செய் என்று வினித் சொல்ல, “போடா முடியாது” என்றாள்.

“என்னம்மா?” நான் பாவம்ல்ல என்று வினித் அஜய்யை பார்த்தான்.

“பாவமா?” சும்மால்லாம் கொட்டிக்க முடியாது. நீயும் கெல்ப் பண்ணு என்று வினித்தை நெருங்கிய தியா, டேய், “நீ குளிக்கலையா?” என கேட்டாள். அவன் தோளை குலுக்கினாள்.

கொன்றுவேன். இறங்கு. குளிக்காம உள்ள வரக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல்ல? என்று அவன் கையை பிடித்து இழுத்தாள். அவன் இறங்கினான்.

ஹப்பா, “எத்தனை கண்டிசன்?” உன்னை கட்டிக்கப் போறவன் பாவம்மா. நான் தப்பித்தேன் என்றான்.

அதை அவன் பார்த்துப்பான். நீ கவலைப்படத் தேவையில்லை. போ..கிளம்பு. ஆபிஸ் போகணும்ல்ல. தயாராகிட்டு வா என்றாள்.

தியா,” நீ என்னையும் உன் மாமாவையும் ரிஜெக்ட் பண்ணிட்ட? உனக்கு எந்த மாதிரி பையனை பிடிக்கும்? எப்படி இருந்தால் கட்டிப்ப?” வினித் கேட்க, அவளுக்கு அஜய் கொடுத்த முத்தம் நினைவிற்கு வந்தது. அவள் கை தானாக அவளது இதழ்களை வருடியது. அஜய் அதை பார்த்து நிம்மதியானான்.

“என்ன? உதட்டுக்கு என்னாச்சு?” என்று வினித் அவனிடம் வர, “அஜய் சார் கிளம்பிட்டார்ல்ல?” என்று கேட்டாள்.

இல்லை. நான் இங்க தான் இருக்கேன் என்று அஜய் சத்தம் கேட்டு பயந்து திரும்பி அவனை பார்த்தாள்.

சார், “உங்களை போக சொன்னேன்ல்ல?” தியா கேட்க, “அவன் இருந்தால் என்ன?” அதான் நான் இருக்கேன்ல்ல வினித் சொல்ல, அவனை முறைத்த தியா..நீ தான் தனியா விட்டு போகப் போறேல்ல. நீ பேசாதடா என்று அஜய்யை பார்த்து, “கிளம்புங்க சார்” என்று அவள் அவனை நகர்த்தி கதவருகே செல்ல பயந்து பின்னே விலகினாள்.

அஜய் அம்மா அங்கே வந்திருந்தார்.

“என்னோட பிள்ளைய என்னடி செஞ்ச?” அவர் கேட்க, நான் எதுவும் செய்யலை என தியா கண்கள் கலங்கியது.

“கண்ணம்மா ஏற்கனவே சொல்லி இருப்பார்ல்ல?” வி..வி..வினித்தும் இருக்கான் என்று அவள் சொல்ல, “ஓ..அவனுமா? இன்னும் எத்தனை பேர வச்சிட்டு இருக்க?” அவர் கேட்க, அவள் மனம் பதறி போனது. குளம் கட்டிய கண்ணிலிருந்து அருவியாய் தியாவின் உவர் நீர்.

“அழுது ஏமாத்த பாக்காதடி” என்று அவர் அவளை அறைய, அவர் கையை பிடித்திருந்தான் அஜய்.

மாம், “என்ன செய்றீங்க?” அஜய் சத்தமிட, கண்ணா..வா, இந்த பொண்ணு உன்னை ஏதோ செஞ்சுட்டா என்று அவர் சொல்ல,

“வாட்? அவ என்னை என்ன செய்யப் போறா?” தியா அப்படியெல்லாம் இல்லை. நீங்க போங்க. நான் வாரேன் என்று அஜய் சொல்ல, அவர் தியாவை முறைத்து மனதினுள், “உன்னால தான் என் பிள்ளை அன்றும் என் பேச்சை கேட்கவில்லை. இன்றும் என்னையே எதிர்த்து பேசுகிறான்” என எண்ணியவாறு வா என்று அஜய் கையை பிடித்து அவன் அம்மா இழுத்து செல்ல, அவள் கண்ணீரில் அவளை விட்டு செல்ல முடியாமல் தவித்து அஜய் அவன் அம்மா கையை உதறினான்.

வினித் வெளியே ஓடி வந்து, அஜய் நீ போ. எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அவனை அனுப்ப, அஜய் மனதில்லாமல் தியாவை பார்த்துக் கொண்டே சென்றான். அவள் கண்ணீருடன் அவள் அறைக்கு ஓடினாள்.

வினித் அவள் பின் சென்று, தியா இதை தான் சொன்னேன். அஜய் அம்மா சும்மா இல்லை. அவங்க பேசியே எல்லார் மனதையும் நோகடிப்பாங்க. அதை கண்டும் கண்டு கொள்ளாமல் இருக்க பழகிக்கோ என்று அவள் தோளில் கையை வைத்தான். அவள் ஆறுதலுக்காக அவனை அணைக்க வந்து, அவளாகவே நின்று கொண்டாள்.

ப்ளீஸ் வினு, நீ கிளம்பு. நான் அழலை என மனதை அடக்கிக் கொண்டு அமைதியாக அவனை பார்த்தாள். ஆதரவிற்காக எனவும் மகிழ்ச்சியிலும் வினித்தை பல முறை அணைத்து இருக்காள் தியா. அஜய் அணைப்பின் பின் அவளால் இப்பொழுது வினித்தை அணைக்க முடியவில்லை. ஏன்? என அவள் மனம் கேட்டுக் கொண்டாலும் வினித்தை அனுப்பி விட்டு அழுது தீர்த்து, உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

அஜய் வீட்டிற்குள் சென்றவுடன் அவன் அம்மாவிடம் கத்தினான்.

பப்பிற்கு சென்று எத்தனை நாள் வராமல் இருந்திருக்கேன். ஒரு நாளாவது கேட்டிருப்பீங்களா? நேற்று நாங்க இருவருமே குடிச்சிட்டோம். அப்ப கூட அவள் என் பக்கம் வரல. கண்ணம்மாம்மா தான் இரவு அவளுக்கு துணைக்கு அவளுடன் இருந்தாங்க. அவள் பாதுகாப்பிற்காக தான் அழைச்சிட்டு வந்தோம். அதான் அங்கே அவளுடன் இருந்தேன். நான் கீழ தான் இருந்தேன்.

“அவள பத்தி என்ன பேச்சு பேசுறீங்க?” என்று சீற்றமுடன் கத்தி விட்டு அவன் அப்பாவை பார்த்தான்.

அவர் அதிர்ச்சியுடன் இருவரையும் பார்த்தார். “அப்பா” தியா கஷ்டப்படுற மாதிரி கேவலமா பேசிட்டாங்கப்பா. இப்பவாது அம்மாகிட்ட என்னன்னு பேசுங்க என்று அஜய் கேட்க, அவர் எப்போதும் போல் அமைதியாக இருந்தார்.

கண்ணம்மா, “நீ அங்க போனீயா?” அஜய் அம்மா கேட்க, “எதுக்கு அவங்க உங்ககிட்ட சொல்லணும்?” அவங்க இங்க சம்பளத்துக்கு வேலை தான் பாக்குறாங்க. உங்களுக்கு அடிமை இல்லை என்று அஜய் மேலும் கோபமாக கேட்டான்.

அஜய், “அதிகமாக பேசாத” அவன் அம்மா சினம் மேலிட கத்தினார்.

தெரிந்து தான் பேசுறேன்ம்மா. இனி அவங்க தியாவிற்கும் உதவியா இருப்பாங்க என்ற அஜய் சொல்லுங்கம்மா என்று கண்ணம்மாவை பார்த்தான்.

அவர் அவன் அம்மாவை பயத்துடன் பார்க்க, “உங்க பையன் மருத்துவ செலவு மொத்தமும் நான் பார்த்துக்கிறேன். நீங்க செய்வீங்கல்ல?” அஜய் கேட்க, பணத்துக்காக இல்லய்யா. எங்க வேலை போகாமல் இருக்கும்ன்னு நீங்க உத்திரவாதம் கொடுத்தால் நான் அந்த பொண்ணுக்கும் உதவியா இருக்கேன். செய்யும் வேலைக்கு பணம் கொடுத்தால் போதும்ய்யா என்றார் அவர்.

அஜய் புன்னகையுடன், “தியா இப்படி தான் பேசுவா? அப்படியே பேசுறீங்க?” என புன்னகைத்தான்.

என்னடா, “தியா..தியான்னுட்டு இருக்க?” அஜய் அம்மா கோபமாக கேட்டார்.

அவள் இனி என் பொறுப்பும் தான். அவளை பற்றி அறிந்ததை சொன்னேன். “இதுல்ல என்ன இருக்கு?” என அவன் அம்மாவை பார்த்து, இதுக்கு மேல அவள பத்தி ஏதாவது அவளிடமோ, வேறு யாரிடமோ பேசுனீங்க நான் மனுசனா இருக்க மாட்டேன். அப்பாவை மாதிரி அமைதியா இருப்பேன்னு எண்ணாதீங்க என அஜய் மிரட்டி விட்டு அவனறைக்கு சென்று படுக்கையில் விழுந்தான்.

“அய்யோ, என் பிள்ளைய வளைச்சுட்டாளே!” என அஜய் அம்மா கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்.

என்னய்யா எல்லாரும் வேடிக்கை பாக்குறீங்க? கண்ணம்மா வேலைய பாரு. போங்க வேலைய கவனிங்க என்ற மற்ற வேலை ஆட்களையும் அனுப்பி விட்டு அஜய் அப்பா, அவன் அம்மா அழுவதை பொருட்படுத்தாமல் நகர்ந்தார்.

புகழேந்தி வீட்டில் மகிழன் தயாராகி ஹாலுக்கு வந்தான். சுருதி அப்பா உதிரனிடம் பேசிக் கொண்டிருந்தார். சுருதி கையில் அலைபேசியை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

மான்விழி கையில் பலகாரத்தட்டை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து முகம் சுளித்த மகிழன், மாமா..”நான் அண்ணாவை பார்த்துட்டு வாரேன்” என்று உதிரன் அருகே வந்தான்.

மகிழ், “சாப்பிட்டு போ” அம்சவள்ளி சொல்ல, அத்தை..அவளுக்கு கொடுங்க. யாருக்கும் கொடுக்காமல் தனியா உட்கார்ந்து தின்னுட்டு இருக்கா என்று மகிழன் மான்விழியை பார்த்தான்.

“சாப்பிடுறத எதுக்கு மாமா கண்ணு வக்கிற?” என்று அவனருகே வந்து தோளில் கையை போட்டு, “இந்தா நீயும் சாப்பிடு” என்று அவள் கடித்த அதிரசத்தை நீட்டினாள் மான்விழி.

அவள் கையை தட்டி விட்ட மகிழன், “உனக்கு அறிவேயில்லையா?” என்று கடிந்தான்.

மகிழ், கொஞ்ச நேரம். சாப்பிட்டு போ என சமையற்கட்டிலிருந்து ரித்திகா குரல் கொடுக்க, அவன் வேகமாக உள்ளே சென்று, “நீ சமைக்கிறியா?” எனக் கேட்டான்.

ம்ம்..”நான் தான்” என்று ரித்திகா கண்ணை சிமிட்டினாள்.

புகழேந்தி அங்கே வந்து தொண்டையை செறும, “பெரிய மாமா” என ரித்திகா விழித்தாள்.

என்னாச்சு? மகிழன் கேட்க, “குடிக்க தண்ணீர் தாம்மா” என்றார் அவர். அம்சவள்ளி திகைத்து, “என்னிடமே கேட்டிருக்கலாமே!” என்று புகழேந்தியை பார்த்தார்.

“அண்ணி கையால குடிக்கணும்ன்னு பெரியப்பா நினைச்சுருப்பார்” என மான்விழி சொல்ல, அம்சவள்ளி முகம் வாடியது.

இந்தாங்க பெரிய மாமா ரித்திகா தண்ணீரை கொடுக்க, குடித்து விட்டு தன் மணையாளை பார்த்து விட்டு உதிரனிடம் சென்றார்.

“என்னவாம் அக்கா?” மகிழன் கேட்க, ரித்திகா புன்னகைத்தாள்.

“சாப்பாடு தயாரா?” நான் கிளம்பணும் மகிழன் சொல்ல, “ஏன் மாமா இவ்வளவு அவசரம்?” மான்விழி கேட்க, மாமான்னு சொல்லாத. எனக்கு பிடிக்கல என்றான் மகிழன்.

“அப்ப அத்தான்னு அழைக்கவா?” ஆனால் அப்படி அழைத்தால் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும் என்றாள். சுருதி கண்கள் அலைபேசியிலிருந்து இருவரிடமும் கோபமாக சென்றது.

“வாட்?” உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு பதில் தான் சிங்கிளாகவே இருந்திடுவேன் என்றான் மகிழன்.

மாப்பிள்ள, மானு நல்ல பொண்ணு. “உங்களுக்கு அவள பத்தி தெரியாதுல்ல?” அவளோட அப்பா உங்க பெரிய மாமா மாதிரி தான். நல்ல வசதி தான் அம்சவள்ளி சொன்னார்.

ம்ம்..நல்லது. வசதியா இருந்தா சீக்கிரமே ரோட்டுக்கு வந்திருவாங்க என்றான் மகிழன்.

மகிழ், உதிரன் சத்தமிட, இப்படி தின்னே அவங்க அப்பா சொத்தை இவ அழிச்சிருவா. இதுல ஊர்ப்பட்ட வாய் வேற. இவளை போய் கல்யாணம் பண்ணிக்கணுமாம் என்று மகிழன் சலிப்பாக சொல்ல,

மான்விழி கோபமாக, சாப்பிடுறது தப்பா. அண்ணா திருமணம் திடீர்ன்னு முடிவு செஞ்சுட்டாங்க. “எவ்வளவு வேலை பார்த்தேன் தெரியுமா? உனக்கு எப்படி தெரியும்?” சொகுசா பணமே செய்யாம உன்னோட அக்காவை என் அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்ட என்று அவள் பேசி விட அனைவரும் அதிர்ந்தனர்.

“என்ன சொன்ன?” என்று மகிழன் கோபமாக, “மாமா இவ இதுக்கு மேல பேசினா அவ்வளவு தான்” என உதிரனை பார்த்து கோபமானான் மகிழன்.

“அப்படி தான் பேசுவேன்? என்னோட அண்ணாவுக்கு என என்ன தான் செஞ்சீங்க? உன்னோட அக்கா சும்மா தான வந்திருக்காங்க?” என்று மான்விழி மேலும் மகிழனை கோபப்படுத்த, மகிழன் பொறுக்க மாட்டாமல் அவளது கழுத்தை பிடித்தான். அனைவரும் அதிர்ந்து அவனை தடுத்தார்கள்.

“என்னை விடுங்க” என்று மகிழன் கத்தி விட்டு, இதுக்கு தான் வேண்டாம்ன்னு நினைச்சேன். ஆனால்..என நிறுத்தி ரித்திகாவை பார்க்க, அவள் கண்ணீரை பார்த்த மகிழன் என்ன நினைத்தானோ, “ரித்து வா” என ரித்திகா கையை பிடித்து இழுத்து புகழேந்தி முன் வந்து, என் அக்கா தான் முதல்ல உங்க பையன் பின் சுற்றினாள். தப்பு தான். ஆனால் உதி மாமாவுக்கு என்னோட அக்காவை பிடித்ததால் தான் திருமணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.

இவங்க காதலித்தாலும் திருமணம் இவங்க காதலால் நடக்கலை. இருவரும் உயிரோட இருக்கணும்ன்னு தான் நடந்தது. என்னோட அக்காவை நான் அழைச்சிட்டு போறேன். அவளோட கல்யாணத்துக்காக செய்ய வேண்டிய எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டு நான் அவளை உங்க வீட்ல விட்டு போறேன் என்று உதிரனை சினமுடன் பார்த்தான்.

ஏன் மாமா, “அந்த பொண்ணு பேசுறத கேட்டுட்டு சும்மா தான இருக்கீங்க? அவளை பற்றி தெரிந்து யாராவது என்ன சொன்னாலும் இப்படி இதே போல சும்மா வேடிக்கை தான பார்ப்பீங்க?” அவ கஷ்டத்தை வெளிய சொல்லவே மாட்டாள்.” உங்களை நம்பி நான் எப்படி என்னோட அக்காவை விட்டு போறது?” நாங்க கிளம்புறோம் என்று மகிழன் ரித்திகாவை இழுத்து செல்ல, மகிழ்..நில்லு, ரித்து..உதிரன் அழைக்க, அவனை பார்த்த ரித்திகா, அவள் கழுத்து கையில் போட்டிருந்ததை கழற்றி அவன் முன்னிருந்த மேசையில் வைத்து விட்டு,

மாமா..கொஞ்ச நாள் தான். நான் எனக்கானதை எடுத்துட்டு வாரேன் என்று ரித்திகாவிற்கு உதிரன் ஆசையாக வாங்கிக் கொடுத்த கொலுசை கழற்றி, அவன் கையில் வைத்து விட்டு அவள் செல்ல, உதிரன் இருவரையும் முறைத்து பார்த்தான்.

“ஒரு நிமிசம்” என்று சுருதி ரித்திகா முன் வந்தாள்.

“உனக்கென்ன? நீ என்ன சொல்லப் போற?” மகிழன் அவளிடமும் கோபமாக கேட்டான்.

“சுருதிம்மா” அவள் அப்பா அழைக்க, கையை கட்டிக் கொண்டு மகிழனை முறைத்தாள் சுருதி.

ஏய், “என்ன முறைக்கிற?” மகிழன் கேட்க, நீங்க உண்மையிலே இவங்க தம்பி தானான்னு பார்க்கிறேன் என்றாள் கிண்டலாக.

“சுருதி” அவள் அப்பா அழைக்க, சும்மா இருங்கப்பா. உங்க அக்காவுக்கு திருமணம் முடிந்து விட்டது. “எப்படி? ஏன்? என்ன காரணம்?” என்று முக்கியமில்லை. தம்பியா அவங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு நினைக்கணும். அதை விட்டு இப்படியா எவளோ ஏதோ சொல்லீட்டான்னு அவங்க வீட்டை விட்டு இழுத்துட்டு போறது? என்று மான்விழியை முறைத்தாள் சுருதி.

“நான் சீர் செய்துட்டு என் அக்காவை விட்டு போறேன்னு தான சொல்றேன்?” மகிழன் கேட்க, ம்ம்..”அது எப்ப நடக்கும்?” என்னோட பாட்டி எப்பொழுதும் ஒன்று சொல்லுவாங்க. “கட்டியவனை விட்டு ஒரு நாள் பிரிந்தாலும் அந்நாள் அவர்களின் மொத்த வாழ்நாள் பிரிவை வழிவகுத்துவிடுமாம்”. நம்பிக்கை அற்று போகுமாம். அப்படி தான் நீங்க செய்றீங்க.

இவள் என்ன? இந்த உலகமே சொன்னாலும் உங்க அக்காவும் மாமாவும் சேர்ந்து வாழுறதை பார்த்து சந்தோசப்படணும். அதனால் தம்பி என்ற உறவுக்கு அழகு.

பணம் தான? சம்பாதித்து உங்களால என்று வேண்டுமானாலும் சீர் செய்யலாம். செய்யுங்க. ஆனால் இவங்க இங்க தான். உதி அண்ணாவுடன் தான் இருக்கணும்.

மற்றவர் பேசுவதை கேட்டு உங்க அக்கா கஷ்டப்படுவாங்க தான் இல்லைன்னு சொல்லலை. ஆனால் அவங்க கஷ்டப்பட்டா இந்த வீட்ல இருக்கிற எல்லாரும் தான் காரணம். சோ..அவங்கள இனி யாரும் ஏதும் சொல்லாமல் பார்த்துப்பாங்க. என்ன அண்ணா சொல்றீங்க? என சுருதி உதிரனை பார்க்க,

ம்ம்..ஆமா, மானு எந்த எண்ணத்தில் சொன்னான்னு எனக்கு தெரியல. மகிழ் நீ சண்டை போட்ட கோபத்தில் சொல்லி இருப்பாள். அது தப்பு தான். மானு “சாரி சொல்லு” உதிரன் சொல்ல, மகிழனை முறைத்த மான்விழி, “சாரி அண்ணி” என்று நகர்ந்து நின்றாள்.

முதல்ல ரித்திகா உன்னோட அக்கா. அவ இப்ப என்னோட மனைவி. அவளை யாரும் ஏதும் சொன்னால் என்னை சொன்னது போல தான். உனக்கு புரியுதுல்ல மகிழ் உதிரன் மகிழனை பார்க்க, சுருதி சொல்வது சரியானாலும் உதிரனிடம் அவனுக்கு பேச விருப்பமில்லை. அவன் அமைதியாக நின்றான்.

“தேங்க்ஸ் அண்ணா” என்ற சுருதி, நகருங்க என்று ரித்திகாவிடம் வந்து அவளது கண்ணை உற்று பார்த்தாள்.

கலங்கிய குரலில், “என்ன?” ரித்திகா கேட்க, எல்லாத்தையும் கழற்றி வச்சுட்டீங்க என்று அவளது தாலியை காட்டி, இதுவும் உதிரன் அண்ணா பணத்தில் வாங்கியது தான். “கழற்றி கொடுக்கலையா?” எனக் கேட்டாள்.

ரித்திகா கண்கலங்க, அவள் தாலியை இறுக பற்றி, “முடியாது” என தலையசைத்தாள்.

ஏன்? யாரும் ஏதும் சொல்லீடுவாங்கன்னா யோசிக்கிறீங்களா? சுருதி கேட்க, “இது என்னோட மாமா எனக்கு தான் சொந்தம்” என்றதன் சாட்சி. இதை நான் தரமாட்டேன் என அழுதாள்.

சுருதி புன்னகையுடன், “என்ன அண்ணா வேடிக்கை பாக்குறீங்க? அண்ணிக்கு சப்போர்ட் பண்ண மாட்டீங்களா?” என சுருதி உதிரனை பார்த்தாள். உதிரன் கண்ணீருடன் ரித்திகாவை அணைத்துக் கொண்டான்.

மகிழனை பார்த்த சுருதி, உயிரை காப்பாற்ற ஒருவருக்கு ஒருவர் கல்யாணம் செய்யணும்ன்னா வெறும் பச்சாதாபம் போதும். இப்படி உங்க அக்கா பேச வேண்டிய அவசியமில்லையே! இதிலிருந்தே தெரியணும். இருவரும் விருப்பத்துடன் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று.

“நீ எதுக்கு எங்க குடும்ப விசயத்துக்குள்ள வர்ற?” மான்விழி கோபமாக சுருதியிடம் வந்தாள்.

சில குள்ளநரிகள் கூட முட்டாளாக பேசுங்களாம். அதை சரி செய்ய தான் பேசினேன் என்றாள் சுருதி.

“யார பார்த்து குள்ளநரின்னு சொன்ன?” அடிக்க கையை ஓங்கி வந்தாள் மான்விழி. அவள் கையை பிடித்த சுருதி அப்பா, பெரியவங்க அமைதியா இருக்கும் போது சின்னவங்க பேசுறது அநாகரியம் என்றார்.

“உங்க பொண்ணுகிட்ட சொல்லுங்க” என்றாள் மான்விழி.

சொல்லலாம். ஆனால் என் பொண்ணு சரியா தான் சொன்னா. அதில் தவறில்லை என்ற சுருதி அப்பா, சுருதிம்மா..”கிளம்பலாமா?” எனக் கேட்டார்.

அப்பா, ஒரு நிமிசம். நோ..டென்சன் என்ற சுருதி, எனக்கு உங்க குடும்ப விசயத்துல்ல தலையிட உரிமையில்லை தான். ஆனால் அந்த உரிமையை தர வேண்டியவங்களே தந்துட்டாங்க என்று ரித்திகா அருகே வந்து, இவங்க போட்டிருக்கும் தாலியை உதிரன் அண்ணா சொல்லி நான் எடுத்தேன். பணம் அண்ணா கொடுத்தாலும் அவரின் தங்கையாக நான் தான் வாங்கினேன் என்று சொல்ல, உதி..அம்சவள்ளி அழைக்க, ஆமாம்மா, நீங்க என்னை வாங்கிட்டு வரச் சொன்னீங்க. எனக்கு எங்க நேரம் இருந்தது. நம்ம எல்லாருக்கும் ஆடை, அணிகலன், தாலி என இன்னும் முக்கியமான எல்லாமே சுருதி, சுருதி அப்பா, மகிழ் தான் வாங்கிட்டு வந்தாங்க என்றான்.

அண்ணா, “என்னோட உரிமையை இவளுக்கு கொடுத்துட்டீங்க?” மான்விழி கோபமாக கேட்க, நான் யாரிடமிருந்து எதையும் பிடுங்க மாட்டேன். உன் அண்ணா உரிமையை நீயே வச்சுக்கோ. எனக்கும் அண்ணன் இருக்கான். அவசரத்திற்கு நாங்கள் உதவினோம். அவ்வளவு தான்.

நீ இனி எதையும் யோசித்து பேசு இல்லை உறவுகள் உன்னுடன் இருக்க மாட்டாங்க. நீ தான் கஷ்டப்படணும் என்ற சுருதி ரித்திகாவை பார்த்து, நீங்கள் உங்க பிறந்த வீட்டிற்காக புகுந்த வீட்டை டீலில் விட்றாதீங்க என்றாள்.

அப்பொழுது அன்னம், பரிதி கண்கலங்க கீர்த்தனா, திலீப்பும் வந்தனர்.

“சுருதி” திலீப் புன்னகையுடன் அழைக்க, “மாமா” என்று சுருதி அவனை பார்த்தான்.

அட்டகாசமா பேசுற. மாமா, சுருதிய பாருங்களேன். பெரிய பொண்ணு மாதிரி பேசுறால்ல சுருதி அப்பாவிடம் ஆச்சர்யமாக கேட்டான். அவருக்கு பெருமையாக இருந்தது.

அதெல்லாம் ஒன்றுமில்லை. நம்ம பேமிலி டிரைனிங் என்று திலீப்பை பார்த்து ஒற்றை கண்ணடித்தாள் சுருதி.

அவளிடம் வந்து அவளது தலையில் திலீப் கையை வைக்கும் முன், மாமா தலைய தொட்ட அவ்வளவு தான் என்று எச்சரித்தாள் சுருதி.

இல்ல சுருதி. சுவா இப்படி பேசினால் எங்களுக்கு ஆச்சர்யம் இருக்காது. “எங்க அமைதியான செல்ல சுருதியா?” இரு முதல்ல நம்ம “வீ” கிட்ட சொல்லலாம் என்று திலீப் அலைபேசியை எடுக்க, மாமா..உங்க அண்ணன் தம்பிக்குள்ள என்னை இழுக்காத. அதுவும் வீ மாமாகிட்ட வேண்டமே வேண்டாம். என்னை கலாய்த்து எடுத்திருவான்.

அன்னம் பரிதி அவளிடம் வந்தனர்.

அம்மாடி நீ தான் தாலி பொண்ணுங்க இருவருக்கும் வாங்கினன்னு மாப்பிள்ள முன்னாடியே சொல்லீட்டார். ஆனால் உன்னால எப்படி எங்களோட பூர்வீக தாலி டிசைன் கிடைத்தது? பரிதி கேட்டார்.

சுருதி அன்னத்தை பார்த்து, இதோ ஆன்ட்டி போட்டிருக்காங்களே! அதை வைத்து தான் எடுத்தேன். மகிழ்கிட்ட ஆடை எடுக்க புகைப்படம் கேட்டேன். அதில் நீங்களும் உதிரன் அண்ணாவோட அம்மாவும் ஒரே போல் போட்டிருந்ததை பார்த்தேன்.

மகிழன் அவளிடம் வந்து, “நீ எப்ப தாலி வாங்கின?” என்று கேட்டாள்.

சார், அந்த வெள்ளிநிற வைர நெக்லஸை பார்த்துக் கொண்டிருந்தீர்களே! அப்பொழுது தான் வாங்கினேன்.

ஓ..என்று மகிழன் முகம் வாட, எல்லாரும் பேசிட்டு இருங்க என்று சுருதி அவள் இருந்த அறைக்கு சென்றாள்.

விருந்துக்கு அழைக்க வந்ததாக அன்னம் பரிதி பேச, சுருதி கையில் ஒரு பெட்டியுடன் வந்து மகிழன் கையில் கொடுத்தாள்.

“என்ன இது?” அவன் கேட்க, உங்க அக்காவுக்கு நீங்க கொடுக்க வேண்டியது என்றாள்.

“நான் கொடுக்க வேண்டியதை நீ எதுக்கு குடுக்கிற?” அவன் கேட்டுக் கொண்டே அதை திறந்து பார்த்து அதிர்ந்தான். உடன் அவனுக்கு கோபமும் வந்தது.

“என்னால வாங்கி கொடுக்க முடியாதுன்னு சொல்லி காட்டுறியா?” மகிழன் வார்த்தைகளின் கோபம் சுருதியை தாக்க, அவள் அதை மறைத்து, சும்மா..சும்மா.. கோபப்படாதீங்க. உங்க அக்காவுக்கு என்னால தான வாங்கிய புடவையை கொடுக்க முடியல. அதுக்கு பதில் வச்சுக்கோங்க. அதை விட இது ஆஃபர்ல்ல தான் போட்டிருந்தான். நீங்க தான் சரியாக கவனிக்கலை.

உங்களால முடியும் போது பணத்தை கொடுங்க. அவசரமில்லை என்று அவள் செல்ல, அவள் கையை பிடித்த மகிழன், “நீ வாங்கியதை நான் எப்படி கொடுப்பது?” நீயே கொடுத்திரு என்று அவள் கையில் அவன் வைக்க, அவள் கோபமாக, நான் உங்களிடம் கொடுத்துட்டேன். இனி அது உங்களுடையது. நீங்களே கொடுங்க என்றாள்.

இல்லை..இல்லை..என இருவரும் சண்டை போட, அய்யோ கடவுளே! என அம்சவள்ளி அமர்ந்தார்.

“என்னோட மாமா கூட என்னடி சண்ட போட்டிட்டு இருக்க?” மான்விழி சுருதியை பிடித்து தள்ளினாள். மகிழன் பதறி, ஏய்..லூசு என்று மான்விழியை அடிக்க கையை ஓங்கினான்.

மகிழ், “என்ன பொம்பள பிள்ளைய அடிக்க கையை ஓங்குற?” பரிதி சத்தமிட்டார்.

“பெரியப்பா அவ” என்று அவன் சுருதியை பார்த்தான். அவளை திலீப் பிடித்துக் கொண்டு மகிழனை முறைத்தான். மகிழனும் அவனை கோபமாக முறைத்தான்.

“அமைதியா இருங்க” என்ற அன்னம், சுருதிம்மா நீ வாங்கி என் பிள்ளைகிட்ட கொடுத்துட்ட. அவன் இன்னும் பணம் கொடுக்கலை. அதனால் இருவரும் சேர்ந்தே ரித்திக்கு அதை கொடுக்கட்டும் என்றார்.

“என்னது?” முடியாது என மான்விழி கத்த, மகிழன் அவளை பார்த்துக் கொண்டே, “சரிங்க பெரியம்மா” என்றான். திலீப் சுருதியை பார்த்தான்.

“தேங்க்ஸ் மாமா” என்று சுருதி மகிழனுடன் சேர்ந்து கொடுத்தாள். அன்னம் பரிதி காதில் ஏதோ சொல்ல, அவர் புன்னகைத்தார்.

“என்ன அண்ணே! சிரிக்கிறீங்க?” அம்சவள்ளி கேட்க, ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு என்றார் பரிதி.

“என்ன?” அனைவரும் அதிர, என் பொண்ணு ரித்திகாவையும் மாப்பிள்ளை உதிரனையும் சொன்னேன் என்று அவர் சமாளிக்க அன்னம் அவரை இடித்தார்.

“புதுசா காதலிக்கிறது மாதிரி இடிச்சிட்டு திரியுறா பாருடா” என்று அப்பத்தா புகழேந்தியிடம் சொல்லிக் கொண்டே சுருதி, மகிழனை பார்த்து, “ம்ம் இதுவும் நல்லா தான் இருக்கு” என மனதினுள் எண்ணினார்.

மகிழன் சிறு புன்னகையுடன் நகர்ந்தான். சுருதிக்கு அவர்கள் நம்மை தான் சொல்கிறார்கள் என புரிந்தது.

மாமா, “நாங்க விருந்துக்கு நாளை வாரோம்” என்று தன் பெற்றோரை உதிரன் பார்க்க, ஆமா..இன்று காலை இங்கு சாப்பாடு ஆரம்பித்தாயிற்று. நீங்க எங்க மாப்பிள்ளையை, நட்சத்திரா, உடன் பேரனையும் அனுப்பி விடுங்க என்றார் புகழேந்தி.

சரி..என்று பரிதி, அதற்கு மேல் ஏதும் பேசவில்லை. அன்னம் தான் பேசினார்.

“நாளை காலை பசங்க எல்லாரையும் நம்ம வீட்டுக்கு அனுப்பிடு அண்ணா” அன்னம் பேச, “சரிம்மா” என்றார் அவர். அண்ணனும் தங்கையும் சகஜமாக பேசினாலும் பரிதியால் ஏனோ சரியாக பேச முடியவில்லை.

கீர்த்து, “நீ ஓ.கே தான?” உதிரன் கேட்க, ம்ம்..மாமா என்றாள்.

“நீ எல்லாரையும் மாமான்னு சொல்ற?” சுருதி அவளிடம் கேட்க,

அதுவா..விக்ரம் அண்ணா..என்று அவள் ஆரம்பிக்க, ரித்திகா ஓடி வந்து அவள் கையை பிடித்து, இல்ல சிம்மா அண்ணாவை அண்ணான்னு சொல்லி பழகிட்டா. அதான் உதி மாமாவை மாமான்னு சொல்றா என்று ரித்திகா சமாளித்தாள். உதிரன் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

சரி, “என்னோட திலீப் மாமா?” சுருதி கேட்க, அது வந்து விக்ரம் அண்ணா சுவாதி அண்ணிய கட்டிக்கிட்டா இவரு எனக்கு மாமா தான? என்று கேட்டாள் கீர்த்தனா.

“ஓ நீயே சுவாதிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவ போல?” சுருதி கேட்க, ஆமா விக்ரம் அண்ணாவுக்கு அவங்கள தான பிடிக்கும்.

“அது யாரு விக்ரம்?” புகழேந்தி கேட்க, சிம்மா அண்ணாவோட உடன் வேலை செய்பவர் என்று ரித்திகா அன்னம் பரிதியை பார்த்தாள். அவர்கள் மௌனமாகி போனார்கள்.

அன்னம் பரிதி கிளம்ப, அவர்களுடன் மகிழன், திலீப், கீர்த்தனா, சுருதி அப்பா, சுருதி கிளம்பினார்கள்.

மாமா, “ரம்யாவை பார்த்துட்டு போகலாமா?” திலீப்பிடம் கீர்த்தனா கேட்க, அவன் பதில் கூறவேயில்லை. ஆமா..காய்ச்சல் எப்படி இருக்குன்னு தெரியல என்று அன்னம் போகலாம் என்றார்.

“என்னது? காய்ச்சலா?” குறைச்சு ஆடணும். மகிழன் ஏதும் அறியாமல் எப்பொழுதும் போல் அவளை திட்டினான். திலீப் அவனை முறைக்க, “ஆரம்பிச்சிடாதீங்கடா” என்ற பரிதி, “வாங்க பார்த்துட்டு போகலாம்” என்று சென்றனர்.