ரம்யா, “இந்த நேரத்துல்ல இங்க என்ன செய்ற?” சினமாக மருது கேட்க, எல்லாரும் இருவரையும் கவனித்தனர்.
நீ தான என்னை வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொன்ன. அதான் இங்க வந்துட்டேன் என ரம்யா அழுதாள்.
“என்னடா சொல்றா? எதுக்கு இப்படி சொன்ன?” உதிரன் எழுந்து கேட்க, அது வந்து சின்னய்யா..என மருது தயங்கினான்.
நானும் கேட்டேன். நீங்க பதில் சொல்லலை. “எதுக்கு மாலையில் ரம்யாவை அடிச்சீங்க?” திலீப் அவனை நோக்கி வந்தான்.
“உன்னால தான்” என்றான் மருது.
“என்னாலா? நான் என்ன செய்தேன்?” என திலீப் ரம்யாவை பார்த்தான்.
இல்ல, அண்ணா..ஏதோ புரியாம பேசுறான். வா அண்ணா..என்று ரம்யா மருதுவை இழுத்தாள்.
ரம்யா, கொஞ்ச நேரம் அமைதியா இரு என்ற திலீப், “என்னால அவள எதுக்கு அடிச்சீங்க? நான் என்ன செய்தேன்?” கோபமாக திலீப் கேட்க, அவ காலை பிடிச்சுட்டு இருந்தீங்க. இதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க? என் தங்கச்சி பேரு தான கெட்டு போகும்.
வாட்? நாங்க மூவருமே தண்ணீல்ல விழுந்துட்டோம். கீர்த்து குளிருக்கு கோர்ட்டை கொடுத்தேன். ரம்யா நடுங்கிக் கொண்டிருந்தாள். முதலுதவி தான் செய்தேன். அவளது உள்ளங்கை கால் தேய்த்து விட்டேன். அப்படி செய்யலைன்னா அவ குளிருல்ல கஷ்டப்பட்டிருப்பா என்றான் திலீப்.
இதுக்கு பதில், உதவிக்கு வேற யாரையாவது அழைச்சிருக்கலாமே? மருது சொல்ல, அங்க சுற்றி எந்த ஆட்களும் இல்லை. அதனால தான் செய்தேன். ஒரு மருத்துவராக நான் நல்லது தான் செய்தேன்.
“ரம்யா நீ சொல்லலையா? தேவையில்லாமல் அடி வாங்கிட்டு நிக்கிற? மத்த நேரம் மட்டும் வாய் கிழிய பேசுற?” என்று திலீப் பல்லை கடித்துக் கொண்டே கேட்டான்.
நான் என்ன சொன்னாலும் அவங்க புரிஞ்சுக்கல. நான் என்ன செய்றது? என்னை தான் யாருக்கும் பிடிக்காதுல்ல. அதான் என் மேல என் அண்ணனுக்கு நம்பிக்கையில்லை என அழுது கொண்டே வேகமாக நடந்தாள்.
ரம்யா, நில்லு..உதிரன் அழைக்க, அவள் நின்று அவனை கண்ணீருடன் பார்த்தாள். அவளருகே வந்த உதிரன் அவளது கழுத்து, நெற்றியை தொட்டு பார்த்து, பளாரென மருது கன்னத்தில் அறை விட்டான்.
சின்னய்யா..அவன் கன்னத்தை பிடிக்க, உன்னோட தங்கச்சிக்கு காய்ச்சலா இருக்கு. அது கூட தெரியாம அவள வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொல்லி இருக்க? தப்பா நடந்துக்கிறவங்க இப்படி தைரியமா பேச மாட்டாங்க.
அது என்ன? ஊர்க்காரன் ஏதாவது சொல்லீருவான்னு பயப்படுறீங்க? உங்க பிள்ளை நிலையை கவனிக்க கூட மறந்துடுறீங்க என்று ஆவேசமானான்.
காய்ச்சலா? என நட்சத்திரா அவளை தொட்டு பார்த்து, இப்படி கொதிக்குது. நீ என்ன செஞ்சு வச்சிருக்க? என அவளும் கோபப்பட்டாள்.
திலீப் அனைவரையும் பார்த்து விட்டு, ரம்யா கையை பிடித்து, யாரும் என்னமும் நினைச்சுக்கோங்க என்று தரதரவென இழுத்து அன்னம் வீட்டிற்கு சென்றான். மருது கண்ணீருடன் அங்கேயே நின்றான்.
சிம்மா வா..என்று உதிரன் மருதுவை பார்த்து முறைத்து விட்டு அவர்கள் அந்த டென்ட்டிற்குள் சென்றனர். மற்றவர்கள் முன் இருந்த இடத்தில் காவலுக்காக நின்றனர்.
ரம்யா திலீப்பை பார்த்துக் கொண்டே வந்தாள். அவன் கோபமாக அன்னம் வீட்டை தட்டினான்.
இருவரையும் பார்த்து, “என்னாச்சு?” அவர் கேட்க, “உள்ள போ வாரேன்” என்று திலீப் காருக்கு சென்று மருந்தை எடுத்து வந்தான்.
கீர்த்தனா ரம்யா கழுத்தை தொட்டு பார்த்துக் கொண்டிருக்க, உள்ளே வந்த திலீப் அவளுக்கு நல்லா தலையை துவட்டி விடுங்க என்று அன்னத்திடம் சொல்லி விட்டு ஊசியை செலுத்தினான்.
கீர்த்து, சாப்பிட ஏதாவது எடுத்து வா என்று சொல்ல, அவள் எடுத்து வரவும் “அவளுக்கு கொடு” என்று கீர்த்தனாவிடம் சொல்ல, ரம்யா சாப்பிட்டு முடிக்கவும் மாத்திரையை கொடுத்து தூங்க சொல்லி நகர்ந்தான் திலீப். அவளுடன் அன்னமும் கீர்த்துவும் இருந்தனர். நடப்பதை பரிதி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்று நேரத்தில் மருது அன்னம் வீட்டிற்கு வந்தான். திலீப் உறங்காமல் அமர்ந்திருந்தான். மருது அவனை பார்த்து, ரம்யா? என கேட்டான்.
என்னை பத்தி என்ன தான் நினைச்சீங்க? உங்க தங்கச்சி சின்ன பொண்ணு. அவளோட என்னை வச்சு இப்படி நீங்களே எண்ணினால் அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்? கொஞ்சமாவது யோசிச்சீங்களா? கோபமாக கேட்டு விட்டு திலீப் எழுந்து நகர்ந்தான்.
டாக்டர் தம்பி, யாராவது பார்த்தால் பல்லு போட்டு பேசுவாங்க. அதான் கோபப்பட்டுட்டேன். என்னோட தங்கச்சி நல்லா இருக்கால்ல? அவளுக்கு ஒன்றுமில்லைல்ல கண்கலங்கினான் மருது.
உள்ள தான் இருக்கா. போய் பாருங்க என்றான் திலீப்.
இவர்கள் பேசியதை கேட்டு படுத்திருந்த பரிதி, “என்னப்பா சொல்ற?” என்று மருதுவை முறைத்து பார்த்தார். திலீப் ஏதும் சொல்லாமல் நகர்ந்தான்.
“உன்னால தான் பிள்ளைக்கு காய்ச்சல் வந்துச்சுல்ல? என்ன கவனிக்கிற அவள?” என்று மருதுவிடம் சத்தம் போட்டார் பரிதி.
கோபத்துல்ல தான்ப்பா.
“அப்படி என்ன கோபம் உனக்கு? பிள்ளைய சந்தேகப்பட்டு பேசி இருக்க?” அதுவும் டாக்டர் தம்பியோட. “அவர் என்ன நினைப்பார்?” உங்களையெல்லாம்..என்று கடிந்து விட்டு, போ..பாரு என்றார்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ரம்யா மனம் கனத்து உறங்குவது போல் இறுக கண்களை மூடிக் கொண்டாள்.
“எவனோ ஒருத்தன் நினைப்பான்னு நம்ம பிள்ளைய கஷ்டப்படுத்திட்ட?” அன்னம் மருதுவை திட்டிக் கொண்டே அறைக்கு அழைத்து வந்தார்.
கீர்த்து ஏற்கனவே தூங்கி இருந்தாள். பிள்ள தூங்குறா தொந்தரவு பண்ணாம பாரு என்று அன்னம் அமர்ந்தார். ரம்யா கையை பிடித்து மருது அவன் கண்ணில் ஒற்றி கண்ணீர் விட்டான். சற்று நேரத்தில் அவன் கிளம்பினான். அசதியிலும் காய்ச்சலிலும் ரம்யா அயர்ந்து தூங்கி விட்டாள்.
தமிழினியன் மிருளாலினி கூடி களைத்து உறக்கத்தில் இருக்க, அவ்விடம் நெருப்பால் தகித்தது. இருவரும் பட்டென விழித்து ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
எழுந்து வெளியே பார்த்த இருவரும் அதிர்ந்தனர். சுபி சுபியுடனே சண்டையிட்டுக் கொண்டிருந்தான். குருக்கள் கண்ணை மூடி மந்திரத்தை ஓதிக் கொண்டே இருந்தனர்.
தமிழ், “இது எப்படி சாத்தியம்?” மிருளாலினி பயத்துடன் திகைத்து கேட்டாள்.
“தெரியலையே?” என தமிழும் பயத்துடன் பார்த்தான். தமிழின் தம்பிகள், மிளிரன், ரவி, விக்ரம் ஏதோ மந்திரத்தால் கட்டிடப்பட்டிருந்தனர். அவர்கள் அக்கட்டை அவிழ்க்க முயன்று கொண்டிருந்தனர்.
“என்னாச்சு?” என்று இருவரும் பதட்டமாக கதவை திறந்து வெளியே வந்தனர்.
“தமிழ் வெளிய வராதீங்க” என்று மிருளாலினி சண்டையிட்டு கொண்டிருப்பவர்களை தாண்டிச் செல்ல, “உள்ள போ” சுபிதனின் ஆன்மா கத்தியது. அது கத்தலில் உண்மையான சுபி ஆன்மாவின் உருவம் நீலநிறமாக பிரகாசித்தது.
சுபி..இது..என்று மற்றொன்றை பார்த்து மிருளாலினி நிற்க, அண்ணி “உள்ள போங்க” என்று ராஜா, விகாஸ் கத்தினார்கள்.
ஆமா, மிரு “உள்ள போ” விக்ரமும் கத்தினான். எல்லாரையும் பார்த்துக் கொண்டே அவள் உறைந்து நிற்க, தமிழினியனும் வந்தான்.
“அண்ணா” என்று விகாஸ் சத்தமிட, தமிழ் மீது சிவப்பு நிற சுவாலையை ஊதித் தள்ளியது சுபிதனின் உருவத்தில் இருக்கும் அந்த சாவான்.
சுபிதனின் ஆன்மா அவனிடம் சண்டையிடுவதை விட்டு தமிழ் முன் வந்து நின்றது. அது மேல் அச்சுவாலை பட அதன் நீலநிற ஒளி லேசான கருப்பாக தெரிந்தது. சுபியின் ஆன்மா ஓர் இடத்தில் மாட்டிக் கொண்டது.
தமிழ், மிருளாலினி கையை பிடித்து இழுத்து செல்ல, அவனை தன் சக்தியால் தள்ளியது. தமிழும் மிருளாலினியும் தள்ளிச் சென்று விழுந்தனர். தமிழால் எழ முடியவில்லை.
ஹா…என்று கத்திய விக்ரம், கட்டை அவிழ்க்க முடியாமல் சோர்ந்தான்.
“தமிழ்” என்று மிருளா அவனிடம் செல்ல, அவள் கால்களால் நகர முடியவில்லை. அந்த சுபிதனின் உடலில் இருக்கும் சாவான் மிருளாலினியை நெருங்கி அவளை தூக்கியது. அவளுக்கு அதை பார்க்க சுபிதனாக மட்டுமே தெரிந்தது.
சுபி, விடு..விடு..அவள் கத்த, மிரு..நான் இங்க இருக்கேன். அது நானில்லை என்று சுபிதனின் ஆன்மாவின் கதறல் அவளுக்கு கேட்கவேயில்லை. சுபிதனின் ஆன்மா சாவானை தடுக்க இருந்த இடத்திருந்தே முயன்றது. ஆனால் அதையெல்லாம் பார்வையிலே கடந்த சாவான் அறைக்கதவை பூட்டினான்.
“மிருளா” என்று தமிழினியன் அவன் காலை பலம் கொண்டு குத்தி கதறி அழுதான்.
சாமி, ஏதாவது செய்யுங்க என அனைவரும் கத்தினார்கள். ஆனால் குருக்களோ கண்ணை கூட திறக்கவில்லை. இப்பொழுது தன் மொத்த சக்தியையும் பயன்படுத்தியது சுபிதனின் ஆன்மா. தன் விசத்தை அந்த சாவானுக்கு செலுத்த ஆயத்தமானது சுபிதனின் ஆன்மா.
மிருளாலினியை படுக்கையில் தொப்பென போட்டு அவளை ஆழ்ந்து சுவாசித்து, “என் ஆசை சம்பூ” அடைவேன்..அடைவேன்..என மிருளாலினியை அடைய முற்பட்டது. அவள் கதறி அழுது கொண்டிருந்தாள்.
எங்கள விட்ரு. நான் அவருடன் வாழணும். நீ இப்படி செய்யாத சுபி என்று அழுதாள். பட்டென கதவு திறக்கப்பட மிருளாலினி யாரென பார்த்தால் அங்கும் சுபிதனின் உருவம். சுபி..இது..நீ என பலம் கொண்டு மிருளாலினி தள்ள, அவனை அசைக்க கூட முடியவில்லை. சுபிதன் உருவத்தின் பின் நின்றான் தமிழினியன்.
தமிழ், காப்பாத்துங்க..என மேலும் அழுதாள்.
சாவான் அவனை பார்க்க, சுபிதனின் ஆன்மா தமிழினியனின் உடலுக்குள் சென்றது. பின் மிருளாலினியிடமிருந்து சாவானை இழுத்து தமிழினியன் அடிக்க கையை ஓங்கினான். அது மிருளாலினி உருவத்தை சட்டென எடுத்தது. அவனால் ஏதும் செய்ய முடியவில்லை.
அவனை விடாத சுபி. நான் உன் முன் தான இருக்கேன் மிருளாலினி சத்தமிட்டாள்.
என்னால முடியலையே! என்று தமிழினியன் உடலில் இருக்கும் சுபிதனின் ஆன்மா சொல்ல, அங்கிருந்த கட்டையை எடுத்து அதை மிருளாலினி அடிக்க, அது சுபிதனின் உருவத்தில் வந்தது.
“இப்பவாது ஏதாவது செய்” என்று மிருளாலினி சோர்ந்து படுத்தாள்.
மிரு..என சுபிதனின் ஆன்மா அவளை பார்க்க, சாம்பவா..அவள் என் கட்டுப்பாட்டில் இருக்கா. உன்னால ஏதும் செய்ய முடியாது என்றது சாவான்.
இல்ல, உன்னை விட மாட்டேன் என்று உள்ளிருக்கும் ஆன்மா இரண்டிற்கு சண்டை நடந்தது. சுபிதனின் ஆன்மாவை வீழ்த்திய சாவான், “என்னை வெல்ல எவன் உள்ளான்” என்று மீண்டும் மிருளாலினியை அடைய முற்பட்டது.
விக்ரம் உள்ளே வந்து குருக்கள் கொடுத்த நீரை மிருளாலினி மீது தெளித்தான்.
அண்ணி, இந்தாங்க என்று விகாஸ் செம்மஞ்சள் நிற அனிச்சம் மலரை தூக்கி போட்டான். அவள் அதை தவற விட, சுபிதனின் ஆன்மா காற்றின் மூலம் அவள் கையில் செல்ல வைத்தது.
“சாவான் வாயில போடுங்க” என்று ராஜா கத்தினான். உடனே அதை மிருளாலினி சாவான் வாயில் திணித்து அதனை தள்ள, அதனுள் நடுக்கம் வந்தது.
சங்ககால மலர்களில் ஒன்று தான் அனிச்சம் மலர். இதனை பெரும்பாலும் சங்க கால பெண்கள் பயன்படுத்துவார்கள். பெண்கள் பயன்படுத்தும் வாசனை மலர்கள் அன்றைய காலத்திலே சாவானிற்கு ஆகாது.
சுபிதனால் தன் ஜென்ம ஜென்மமான ஆசையும் உலகை அடையும் எண்ணமும் தடைபடும் என அறிந்து சுபிதனின் உடலை பயன்படுத்தி அது சம்பூவை அடைய திட்டம் செய்தது. அதனால் சுபிதன் இறந்தவுடனே அவன் உடலை பத்திரப்படுத்தி வைத்திருந்தது.
யாரை அடைய இத்தனையும் சாவான் செய்கிறதோ அதே பெண்களால் தான் தன் அழிவு என்பதை மட்டும் அறியவில்லை. அப்பூவின் மென்மை தன்மை சாவான் வாயில் கரைந்து அழியும் போது அதன் உணர்வுகள் கொஞ்சமாக மறத்து போனது. கோபம் அதிகமான அது மிருளாலினி கழுத்தை பிடிக்க, தமிழ், விக்ரம், அவன் தம்பிகள் சுபிதன் உடலில் இருக்கும் சாவானை இழுத்தனர்.
அவன் சீற்றமுடன் அனைவரையும் தள்ள, எல்லாரும் விழுந்தனர். பூஜையிலிருந்து கிடைத்த சக்தி மிக்க கத்தியை எடுத்து வந்த மிளிரன், இதை வச்சு அவன் நடு வயிற்றிலே குத்துங்க என மிருளாலினியிடம் தூக்கிப் போட்டான். அவள் அதை பிடித்து அவனை குத்த, அவள் கையை பிடித்து தடுத்த சாவான் சீற்றமுடன் கத்தினான்.
“பிடிங்கடா அவனை” விக்ரம் சொல்ல, அனைவரும் அவனை இழுத்து பிடித்தனர். மிரு சீக்கிரம் குத்து. சரியாக நடுவயிற்றிலே குத்து என்று தமிழினியன் உடலில் இருக்கும் சுபிதன் கத்தினான். அவளும் கத்தியால் குத்த அவன் இரத்தம் வழிய கீழே விழுந்து மறைந்தான்.
இனி உங்களுக்கு பிரச்சனையில்லை. நட்சு, ரித்துவை காப்பாற்றணும் என்று தமிழினியன் உடலிலிருந்து மறுநொடி வெளியே வந்த சுபிதனின் ஆன்மா விருட்டென சென்றது.
சாவான் சாகவில்லை. மூன்று பெண்களும் அவனை அழித்தாக வேண்டும். மிருளாலினி கத்தி அவன் வயிற்றில் பதிந்து இருந்தாலும் இரத்தம் நின்று சாதாரணமாக இருந்தான்.
டென்ட்டினுள் வந்த ரித்திகா உதிரனை பார்த்து, மாமா உங்களுக்கு ஏதும் ஆகலைல்ல? என அவனை அணைத்து அழுதாள். அவள் கூந்தலின் நறுமணம் அவனை அழைக்க, ம்ம்..ஸ்மல் நல்லா இருக்கே என்றான் புன்னகையுடன் உதிரன்.
மாமா, நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? நீங்க வேற..என்று அவள் நகர அவளை பிடித்து இழுத்த உதிரன் அவளது இதழ்களை அடைந்தான். ரித்திகா அமைதியாக இருக்க, அவன் கைகள் அவளை தாங்கி கட்டிலில் போட்டது. அவள் பயத்துடன் எழுந்தாள்.
ரித்து..என்று கிரக்கமாக அழைத்தான் உதிரன். மாமா..இப்ப..பயமா இருக்கு என்று அவள் சொல்ல, அவன் அதை பொருட்படுத்தாமல் அவனது கையை அவளது மேனியில் உலவ விட்டான். ரித்திகாவினுள் இருந்த மோக உணர்வுகளை கிளப்பி விட்டான். அவள் உயிருனுள் அவன் இணைய முற்பட, பட்டென அவனை தள்ளி விட்டு ரித்திகா அழுதாள்.
“ரித்து” கோபமாக உதிரன் அழைத்தான்.
முடியல மாமா. அவன் படுத்திய கஷ்டம் தான் எனக்கு நினைவுக்கு வருது என முகத்தை மூடி அழுதாள். அவன் தன் தலையை அழுத்தமாக கோதி கண்கள் சிவக்க ஓரிடத்தை வெறித்தான். அவள் அழுகை நிற்காமல் இருந்தது. அவனை அவனே சமாதானப்படுத்தினான்.
ரித்து, நான் உன்னோட உதிரன். நீ என்னோட ரித்து. இங்க பாரு என்று அவள் தாடையை பிடித்து நிமிர்த்தி, என்னுடன் இருக்கும் போது என் கண்ணை பார். நம்ம காதலை நினைவு வச்சுக்கோ. எந்த டிஸ்டர்பன்ஸூம் இருக்காது என்றான்.
எங்க மாமாவுக்கு முத்தம் கொடு என்று இதழ் குவித்தான். ரித்திகா கண்ணீர் காணாமல் போனது. ஓர் உற்சாகம் வந்தது. அவள் அவனை வெட்கத்துடன் பார்க்க, ம்ம்..குட்..என்று அவளுக்கு ஊக்கமளித்து அவளுடன் பேசிக் கொண்டே அவர்களது கூடலை கையில் எடுத்தான் உதிரன். இருவர் உயிரும் கலக்கும் வேளையில் ரித்திகாவை நிமிர்த்தி அவன் கண்ணை பார்க்க செய்து அவளுக்கு சுகவதை கொடுத்தான். அவர்களின் அழகான முதல் கூடலை இனிதாக்கினான்.
சிம்மாவும் நட்சத்திராவும் டென்ட்டினுள் நுழையவும், மாமா..ரம்யா பாவம்ல்ல என்று அவளுக்காக நட்சத்திரா வருத்தப்பட்டாள்.
ம்ம்..பாவம் தான். அவளுக்கு பெற்றோர் இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என ரம்யாவிற்காக சிம்மாவும் வருத்தப்பட்டான். வெளியே யாகம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருந்தது.
என்னோட பொண்டாட்டி பேசும் நேரமா இது? என்று சிம்மா இதழ் குவித்து பறக்கும் முத்தம் கொடுக்க, “போங்க மாமா” என்று வெட்கத்துடன் எழுந்தாள் நட்சத்திரா.
அவளது முந்தானையை பிடித்த சிம்மா, என்னோட ஸ்டார் எனக்கு இன்று விருந்தாகப் போகிறாளே!
ச்சீ..என்ன பேசுறீங்க மாமா என அவள் சிணுங்க, அவளை இழுத்து அவன் மடியில் அமர வைத்து அவளது ஒவ்வொரு பாகமாக அளந்தான். அவள் இடை வரவும் அதில் சிறு முத்தம் இட்டு கைகளால் அதனை பிசைந்தான்.
மாமா..அவள் முணங்க, இருவரும் அவர்கள் கூடலின் முதற்பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், இறுதி என முணகலில் இருவரும் தவித்து, தகித்து, களைத்து இருந்தனர்.
இரு ஜோடிகளும் அழகான அவர்களின் முதல் கூடலில் களைத்திருக்க வந்தான் சுபிதனின் உடலில் சாவான். ஒருவனாக இல்லை இருவனாக. இப்பொழுதும் சுபிதனின் ஆன்மா தான் அவனை தடுத்துக் கொண்டிருந்தது.
இருவனாக சுபிதனின் உடலை பிய்த்து அகோரமாக இருந்த அவனை பார்த்து அனைவரும் பயந்தனர்.
ஒருவனை சுபிதன் சமாளிக்க, மற்ற சாவானை மருது, சிம்மாவின் ஆட்கள் தடுத்துக் கொண்டிருந்தனர். அனைவரையும் தன் மந்திரக்கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டு இரு டென்ட்டையும் கண்களால் பொசுக்கினான். அதில் இரு ஜோடிகளும் பயந்து எழுந்தனர்.
நீ வருவன்னு தெரியுமே! என்ற சிம்மா, சுபிதனின் உடலை பார்த்து அதிர்ந்தான்.
“சுபி” நட்சத்திரா அழைக்க, “சாவான் இந்த உலகை ஆளவிருக்கும் சாவான்” என கத்தினான்.
டேய் மச்சான், “அந்த கத்திய எடு” என்று மாறன் கத்தினான். சிம்மாவும் உதிரனும் ஒருவரை ஒருவர் பார்க்க, சாவான் பெண்கள் பக்கம் திரும்பியது.
ம்ம்..என்று அது முகர, ச்சீ..என்றாள் ரித்திகா. “சம்பூ” என்று ஹா..ஹா..சிரித்தான் சாவான்.
சிம்மாவும் உதிரனும் அவனுடன் சண்டையிட்டு கத்தியை எடுக்க முயன்றனர். வெளியே இருந்த சுபிதன் ஆன்மாவாலும் சமாளிக்க முடியவில்லை. உதிரனை பார்த்த சுபிதனின் ஆன்மா அவன் உடலுக்குள் சென்றது.
சிம்மா, நாம ஒருவாறு அந்த கத்தியை உருவணும் என்றான் உதிரன் உடலில் இருந்த சுபிதனின் ஆன்மா.
சுபி..சிம்மா அழைக்க, ஆமா என்று இருவரும் இரு உடலில் இருக்கும் சாவான் வயிற்றிலிருக்கும் கத்தியை எடுக்க முயன்றனர். குருக்களின் உதவியால் சிம்மா, மருது நண்பர்கள் உள்ளே வந்து இரு சாவானையும் பிடிக்க, இந்தாம்மா..இதை வைத்து அவர்கள் கத்தியை எடுக்கவும் இந்த ஆயுதத்தால் அதை கொல்லுங்க என்ற அவங்க சிவன் கோவில் குரு ஓர் ஆயுதத்தை கொடுத்தார்.
அதன் பிடிமானம் வளைவாகவும் பின் நேரிய கூரிய முனையான கத்தியாக வித்தியாசமாக இருந்தது. இருவரும் அதை வாங்க..சிம்மா, உதிரன் ஒன், டூ, த்ரீ என சொல்லிக் கொண்டே அவனிடமிருந்து கத்தியை எடுத்த நொடியில் வித்தியாசமான அக்கத்தியை உள்ளே நுழைத்தனர் பெண்கள். சுபிதனின் உடலில் இருந்து ஆன்மா வெளியே வந்து பயங்கரமாக அலறியது. அதன் மீது குருக்கள் நீரை தெளிக்க, அது மறைந்து வீட்டிலிருந்த சுவாதியிடம் வந்தது.
அவளுடன் இருந்த பெண்கள் பயந்து விலக, சுபிதன் ஆன்மாவின் குரல் சுவாதிக்கு கேட்டது.
அந்த ஆன்மா மண்டியிட்டு சுவாதியை பார்க்க, “சுவாதி நல்ல வார்த்தையாக சொல்லி அதற்கு விடை கொடு” என்றது சுபிதனின் ஆன்மா.
ம்ம்..என்று “நீ என்றும் பெண்களை பெரிதாய் மதிக்கும் குணம் படைத்தவனாகவும், உலகை காக்கும் வேந்தனாகவும் திகழ்வாய்” என்று சொல்லிக் கொண்டே கண்ணை மூடி அதன் தலையில் கை வைக்க, அது “என் ஆசை சம்பூ..அடுத்த ஜென்ம காதலி” என்று சொல்லி விட்டு அங்கேயே சாம்பலானது.
ஹப்பா, “இது இனி வராதுல்ல சுபி அண்ணா?” சுவாதி கேட்க, கண்டிப்பாக வராது. அவன் மறுபடியும் பிறப்பான் அரக்கனாக இல்லை. நல்ல மனம் படைத்த மனிதனாக என்று சுபிதன் ஆன்மா அங்கிருந்து சென்றது.
சுபிதனின் ஆன்மா நேராக சிம்மாவிடம் சென்றது. ஜோடிகளும் சிம்மா, மருதுவின் ஆட்களும் பேசிக் கொண்டிருந்தனர். அனைவர் முன்னும் வந்தது சுபிதனின் ஆன்மா.
“சிம்மா” அது அழைக்க, சுபி ”ரொம்ப தேங்க்ஸ்”.
அந்த சாவான் அழிஞ்சுட்டானா இல்லை இன்னும் இருக்கானா?
அவன் இந்த உலகில் இல்லை. இனி நிம்மதியாக நான் செல்வேன். என் வேலை முடிந்து விட்டது சிம்மா. ஆனால் உனக்கும் நட்சுவிற்கும் மட்டும் முடியல. அந்த கோகுல் உயிரோட இருக்கும் வரை எல்லாம் பிரச்சனையாக தான் இருக்கும். உங்களை சந்தோசமாக இருக்க விட மாட்டான்.
கோகுலா? மாமா..என்னது? நட்சத்திரா கேட்க, ஆமா ஸ்டார். அவனை பற்றி எனக்கு தெரியும். நீங்க நினைப்பது போல் அவன் சாகலை. அவனுக்கு நீ வேண்டும். அதுக்காக எதுவும் செய்வான் என்று அந்த புகைப்படத்தின் பின் எழுதி இருந்ததை சிம்மா ஏற்கனவே பார்த்திருப்பான். அதை கூறினான்.
கடந்த வாழ்க்கை கடந்து விட்டது. என் மிரு அதை தாண்டிட்டா. நீயும் தாண்டி வந்து உன்னோட மாமா கூட சந்தோசமா வாழணும்.
உதிரன் சிம்மாவையும் சேர்த்து எல்லாரையும் பார்த்துக்கோங்க. எல்லாரும் ஒத்துமையாக இருங்க. நான் செல்ல வேண்டிய நேரம் வந்திருச்சு என்று அவ்வான்மா அங்கிருந்து மிருளாலினியை பார்க்க சென்றது.
அங்கேயும் எல்லாரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
தமிழ், மிருவை பார்த்துக்கோ. ஹாப்பியா இருங்க என்ற சுபிதனின் ஆன்மாவை மிருளாலினி வெறுமையுடன் பார்த்தாள்.
எனக்கு ரொம்ப சந்தோசம் மிரு. நீ நல்லா இருக்கணும். எல்லாரும் என்னோட மிருவை பார்த்துக்கோங்க. நான் போறேன் மிரு என்று வானை நோக்கி நகர்ந்தது சுபிதனின் ஆன்மா.
எல்லாரும் மிருளாலினியை பார்க்க, அவள் தமிழினியன் தோளில் சாய்ந்து கொண்டு கண்கலங்க அவன் கையை இறுக பற்றினாள். அவன் அவளை அணைத்து சமாதானப்படுத்தினான்.
அண்ணா, “உங்க கழுத்துல்ல இது மின்னுது?” ரித்திகா சொல்ல, ஆமா செல்லம்மா உன் கழுத்திலும் என்று உதிரன் சொல்ல, அதை பார்த்த குருக்கள். இது உங்கள் ஆபத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். கவனமா இருங்க என்று அவர்கள் சென்றனர்.
சிம்மா, இங்கிருந்து நாமும் கிளம்புவது தான் சரியாக இருக்கும் முகேஷ் சொல்ல, ம்ம்..போகலாம் என்று நட்சத்திராவை பார்த்து,
ஸ்டார் கோகுல் பற்றி உனக்கு தெரிந்த எல்லாமே சொல்லு. நம்ம அர்சுவுக்கும் இவனால் ஆபத்து இருக்கு. முதல்ல நாம ஓய்வெடுக்கணும். வாங்க செல்லலாம் என்று அனைவரும் கிளம்பினார்கள்.
கிருஷ்ணன் வேகமாக அஜய் அறைக்கு வந்தான்.
சார்..சார்..நமக்கு நல்ல வாய்ப்பு என்று உள்ளே வந்தான். உள்ளே தியா பைலில் இருந்ததை அஜய்க்கும் வினித்திற்கும் விளக்கிக் கொண்டிருந்தான்.
அவன் “ரிச் கேவ்”ல இருக்கான். குடிச்சிட்டு தனியா இருக்கான். உனக்கு பழக்கமான இடம் தான அஜய். நீ எப்பொழுதும் போல் சென்று பேசி விசயத்தை வாங்கிடு என்றான் கிருஷ்ணன்.
என்னை அவனுக்கு நல்லா தெரியும். அஜய் தியாவை பார்த்தான். மூவரும் அவளை பார்க்க, நானா? என்னால முடியாதுப்பா. என்னை விட்ருங்க என்றாள்.
தியா, உன்னோட அப்பா விசயத்துல அவனுக்கு சம்பந்தம் இருக்கு. சும்மா விடச் சொல்றீயா? வினித் கேட்க, இப்ப இதெல்லாம் செய்து என்ன தான் ஆகப் போகுது? என்று தியா கோபமாக கேட்டாள்.
தியா, அஜய் மேல தவறா பழி போட்ருக்காங்க கிருஷ்ணன் சொல்ல, என்ன இருந்தாலும் அவர் ஏற்கனவே போட்ட திட்டம் தான என்று முகத்தை திருப்பினாள் தியா. அஜய் அவளையே பார்த்தான்.
வினித் இருவரையும் பார்த்து விட்டு, “கிருஷ் உன்னை அவனுக்கு தெரியுமா?” அவன் அசிஸ்டென்ட்டுக்கு தான் தெரியும். அவன் என்னை பார்த்தது கூட இல்லை என்றான் அவன்.
சரி, நீயும் அஜய்யும் போங்க. அஜய் நீ அவனருகே சென்று முதல்ல பேசிப்பார். அவன் தெளிவில்லாமல் இருக்கும் போது தான் விசயத்துக்குள்ளவே போகணும் என்றான் வினித்.
“வாங்க போகலாம்” என்று அஜய் அழைக்க, தியா நீ எங்களுடன் வா. என்னுடன் கார்ல்ல இரு. எப்படியும் இப்ப வீட்டிற்கு தான போகணும். வா..என்று மூவரும் காரில் ஏற, கிருஷ் அவனது பைக்கை எடுத்தான்.
எல்லாரும் அவ்விடம் வந்து விட, அஜய் காரை விட்டு இறங்கி முதலில் உள்ளே சென்றான். பின்னே கிருஷ் சென்றான். ஏற்கனவே குடித்து இருந்தாலும் ஸ்டெடியாக தான் இருந்தான் விதுரன்.
அஜய் ஒரு மதுபான கோப்பையை எடுத்து, அவனிடம் வந்து அமர்ந்து அருந்தினான்.
சோ, வாட்? அஜய் கேட்க, ஆச்சர்யமாச்சே! ஜாலியாக நண்பர்களுடன் பொழுதை கழிக்கும் “தி கிரேட் அஜய்” பிஸினஸை கையில் எடுத்திருக்கார். உலகமே இன்று உங்களை பற்றி தான் பேச்சு. “அதெப்படி?” என்று உலறலுடன், “உங்க கம்பெனி ஆள் மீது தவறான பழி போட்டீர்களே! அதன் பின்னும் உங்க ஊழியர்கள் உங்களை எப்படி ஏத்துகிட்டாங்க?”
ம்ம்..அதான் எனக்கும் தெரியல. ஒருவரை நான் கொல்லும் அளவிற்கு செல்வேன் என்று எண்ண கூட முடியல என்று கையிலிருந்ததை மொத்தமாக வாயில் சரித்து அழுவது போல் நடித்தான் அஜய்.
அஜய், “பேபி மாதிரி அழுறாரே! இவரை என்ன செய்து சமாதானப்படுத்துவது?” என்று மேலும் விதுரன் குடித்தான்.
அந்நேரம் ஸ்லீவ்லஸ் ப்ளாக் டாப் மேலேறியும் முட்டி வரை இருக்கும் ப்ளாக் சார்ட்ஸூடன் சிலப்பல ஒப்பனையுடன் அடித்து தூக்கும் உதட்டு சாயம் இட்டு அந்த பப்பிற்கு வரும் பொண்ணாக அழகாகவும் செக்ஸீயாகவும் வந்தாள் தியா.
தியாவை எதிர்பார்க்காத அஜய்யும் கிருஷ்ஷூம் அவளை பார்த்து வாயை பிளந்தனர்.
“இவ எதுக்கு வந்தா? இப்படி வந்திருக்கா?” என்று அஜய் முகம் சுருங்கியது. வந்தவள் நேராக கிருஷ் அருகே சென்று அனைவரும் குதித்து ஆடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு அவனை இழுத்து சென்றாள்.
தியா, “நீ..நீயா?” கிருஷ் அவளை உற்று பார்க்க, வாய மூடு..கண்டிப்பா அஜய் சார் மூச்சு முட்ட குடிப்பார். எப்படி தனியா சமாளிப்ப. மகனே நீ குடிச்ச. உன்னை காலி செய்திடுவேன் என்று மிரட்டினாள்.
வாவ் தியா, “எவ்வளவு அழகா இருக்க தெரியுமா?” உன்னை அடிச்சுக்க யாராலும் முடியாது. “அப்படியே ஒரு டான்ஸ் போடலாமா?” கிருஷ் கேட்க, கண்டிப்பா அவன் என்னை பார்த்து அவனே வரணும். அப்படி தான் இந்த லூசு வினித் சொல்லி அனுப்பினான்.
ஓ..”எல்லாம் அவன் ஏற்பாடா?” கிருஷ் கேட்க, அப்புறம்..என்று தியா அவனை பார்த்தாள்.
ஒரு நாலு ஸ்டெப் ஆட சொல்லிக் குடு. என்னால டான்ஸ் பண்ண முடியும். அவன் என்னை பார்க்க வைத்து நான் அவனிடம் விசயத்தை வாங்குகிறேன். இந்த டிவைஸ நீ வச்சிரு. நாம டான்ஸ் முடிக்கவும் இதை என் ஆடையில் பொருத்தி விடு என்றாள்.
இருவரையும் சேர்ந்து பார்த்த அஜய்க்கு புகைச்சல் எடுத்து நிறையவே மது அருந்தத் தொடங்கினான். இருவரும் குதித்து சிரித்துக் கொண்டே ஆட அஜய்க்கு சினம் மேலிட்டது.
தியாவுடன் மற்ற ஆண்களும் வந்து விட, அனைவர் கவனமும் அவள் பக்கம் திரும்பியது. அங்கிருந்த ஒருவன் அவள் வேண்டாம் என்று சொல்ல சொல்ல, டிரிங்சை வாயில் ஊத்தி விட்டான். அவள் அலப்பரை அதிகமானது. அஜய் கோபமாக பார்த்தான்.
விதுரன் தியாவை பார்த்து, “எக்ஸ்யூஸ் மீ” என்று அஜய்யிடம் சொல்லி விட்டு அவளிடம் சென்றான்.
“அவள் உளறி விடுவாளோ?” என கிருஷ் பயப்பட, விதுரனும் அவளுடன் ஆடினான்.
அவள் களைத்து அமர்ந்து விட, விதுரன் அவளிடம் வந்தான். கிருஷூம் யாரோ போல் அமர, அஜய்யும் அங்கே வந்தான்.
ஹே ஹேண்ட்சம்..”ஹூ ஆர் யூ?” என தியா குலைய கேட்க, அவனோ அவனை பற்றி கூறியதில்லாமல் அஜய் பற்றியும் கூறினான்.
ஹோ அப்படியா? எப்படி திட்டம் போட்டீங்க ஹேண்ட்சம்? என்று தியா அஜய் பக்கம் திரும்பி கேட்டாள்.
“திட்டமா?” எனக்கு தெரியாது என்று பல்லை கடித்தான் அஜய்.
ஆமா..ஆமா..என் திட்டம் அவனுக்கு தெரியாது பேப். எனக்கு தான தெரியும் என அவன் கூற, தியா கை தானாக டிவைஸை ஆன் செய்தது.
“திட்டமா விது?”
ம்ம்..திட்டம். பேப் அஜய் குடும்பத்தை பழி வாங்க தான் அந்த புது மேனேஜரை நான் பயன்படுத்தினேன். இந்தா..என்று இடையில் மதுவை தியாவிடம் கொடுத்து குடிக்க வைத்தான். அவளுக்கு தொண்டை எரிந்தது.
ஹா..பயனா? வாய் குலற கேட்டாள்.
நோ..யூஸ் பண்ணேன்.
வொய்?
அந்த விசுவை வைத்து பணம் திருடி இந்த அஜய் மீது பழிய போட்டேன்.
ம்ம்..என்று தியா அமைதியாக, “இந்தா” என்று மீண்டும் கொடுத்தான். அஜய் தியாவை முறைக்க, கிருஷ் விழிவிரிய தியாவை பார்த்தான்.
போட்டு..போட்டு..என்று அவள் விதுவை பார்க்க, அவன் அவளது தொடையை வருடினான். அவள் அவன் கையை பிடித்து மேசையில் வைத்தாள். அஜய் அவனை வெட்டுவது போல் பார்த்தான்.
வொய் பேப்?
நோ..என்று பேச கூட முடியாமல் விரலை ஆட்டினாள் தியா.
விதுவா பண்ண? அவள் உலற கேட்டாள்.
எஸ், நான் தான் பணம் கொடுத்து அவன் நண்பர்களையும், அந்த விசுவை வைத்தும் செய்தேன் என்றிருந்தான்.
தியா மயங்கி அவன் மீது விழ வந்தவளை அஜய் பிடித்து இழுத்தான்.
விதுவும் மயங்கி அம்மேசையிலே தலையை சாய்த்தான். தியாவின் உடையில் இருந்த வீடியோ டிவைஸை எடுத்துக் கொண்டான் கிருஷ்.
அஜய் சார், தியா..என அவன் தயங்க, நான்..என்று அஜய் அவளை தூக்கி தள்ளாடி காருக்கு வந்தான். காரில் வினித் இல்லை. கிருஷ் அவனை அழைக்க, தியா பொருட்களை வாங்கிட்டு வீட்டிற்கு போக சொன்னால் என்று அவன் கிளம்பியதாக கூறினான்.
நாமே டிராப் செய்யலாம் என்று வினித்திடம் இருவரும் குடித்திருப்பதை கூறாமல், அஜய்யிடமிருந்து கீயை வாங்க, காரை எடுத்தான் கிருஷ்ணன்.
வீட்டிற்கு வந்ததும் “தேங்க்ஸ் கிருஷ்..” என்று அஜய் இறங்கி தியாவை எழுப்ப, அவள் எழவில்லை. அஜய்யும் தள்ளாடி நடக்க, “நான் உதவிக்கு வரவா?” கிருஷ் கேட்க, நோ..கிருஷ். உன்னோட அம்மா தனியா இருப்பாங்க. என்னோட கார்ல்லயே போ என்று அவனை அனுப்பி விட்டு அஜய் தியாவை தூக்கிக் கொண்டு அவளிருக்கும் வீட்டிற்கு கதவை திறந்து உள்ளே சென்றான்.
தியா அறைக்கு அஜய் அவளை தூக்கி சென்று படுக்கையில் கிடத்தி விட்டு போதையில் அவளருகே அமர்ந்தான். அவள் அவன் பக்கம் திரும்பி படுத்தாள். அவன் அவளருகே சென்று படுத்துக் கொண்டான்.
தியா ஏதோ முணங்க, அவள் வாயருகே காதை கொண்டு சென்றான்.
ப்பா..நீங்க சொன்னது சரி தான். நான் தான் அஜய்யை தப்பா நினைச்சுட்டேன். சாரிப்பா..அதுக்காக என்னை விட்டு நீங்க போகணுமா? ஐ மிஸ் யூப்பா..
வினித்தும் போகப் போறான். அவன் என்னை டார்ச்சர் பண்றான். எனக்கு இந்த ஆடையெல்லாம் பிடிக்கல. எல்லாரும் என்னையே பார்ப்பது போல இருக்கு. “ஐ ஹேட் திஸ் லைஃப்பா”. என்னை தனியா விட்டு அம்மாவுடன் நீங்களும் போயிட்டீங்க. நீங்க வந்துருங்கப்பா..என அவள் கண்ணீர் வடித்தாள்.
அவளது அந்த ஆடையில் அவள் அங்க லாவன்யங்கள் அனைவர் கண்ணுக்கும் விருந்தாவது அஜய்க்கும் பிடிக்கவில்லை. அவளும் விரும்பவில்லை என்றதும் எழுந்து தள்ளாடி தோட்டத்தின் சிறு குடிலுக்கு சென்று, கண்ணம்மாம்மா…என போதையில் அழைத்தான்.
அய்யா, “இந்த நேரத்துல்ல வந்துருக்கீங்க?” முருகன் கேட்க, கண்ணம்மாம்மா..என உள்ளே பார்த்தான். அவனுக்கு அனைத்தும் போதையில் மங்கலாகவே தெரிந்தது.
கண்ணம்மா, சின்னய்யா அழைக்கிறார் என்று முருகன் சொல்ல, கண்ணம்மா வந்தார்.
அய்யா, “இப்படி குடிச்சிட்டு இங்க வந்துருக்கீங்க? வீட்ல யாருக்காவது ஏதுமா?” கண்ணம்மா பதற, அங்க என்று அவன் பேச முடியாமல் தியா இருக்கும் விருந்தாளிகளுக்கான வீட்டை காட்டினான்.
“அந்த புள்ளைக்கு என்னாச்சு?” என அவர் மேலும் பதறினார்.
“குடிச்சிட்டா” என்று “தள்ளாடி வா” என அஜய் முன் நடக்க,
யோவ்..சின்னய்யாவை பிடிய்யா..என்று தன் கணவன் முருகனிடம் சொல்லி விட்டு முன்னே வேகமாக கண்ணம்மா நடந்தார்.
அறைக்கு வந்து தியாவை பார்த்து விட்டு, அவள் ஆடையை எடுத்து மாற்றி விட்டு அவளை படுக்க வைத்து விட்டு வெளியே வந்தார். அஜய் சோபாவில் சாய்ந்திருக்க, முருகன் அவனருகே நின்று கொண்டிருந்தான்.
அய்யா, நீங்க கிளம்புங்க. இன்று நான் இங்கே இருந்து அந்த பொண்ணை பார்த்துக்கிறேன் என்றார் கண்ணம்மா.
நோ..நானும் இங்க தான் இருப்பேன். நீ அறைக்குள்ள இரு. நான் இங்கேயே இருக்கேன் என்று அஜய் சோபாவிலே படுத்தான்.
அம்மாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவாங்கய்யா கண்ணம்மா சொல்ல, நோ..இங்க தான் இருப்பேன் என்று ஒர் கால் தொங்க, ஒரு காலை சோபா விளிம்பில் போட்டு படுத்துக் கொண்டான் அஜய்.
வேண்டாம்ய்யா..கிளம்புங்க என அவர் சொல்ல, அவனிடம் பதிலில்லை.
ஏய்யா, நம்ம அஜய் அய்யாவா? நம்பவே முடியல. எந்த பொண்ணுக்காகவும் இவர் யாரிடமும் நின்றதில்லை. எனக்கு என்னம்மோ இவருக்கு இந்த பொண்ணை பிடிச்சிருக்கோ? கண்ணம்மா கேட்டார்.
“இது எதுக்கு நமக்கு?” போ..அந்த பொண்ணுக்காக துணைக்கு இரு. காலையில அந்த பிள்ளைய எழுப்பிட்டு வேலைக்கு போயிடு இல்லை எஜமானியம்மா.. கத்தியே நம்மை வெளிய அனுப்பிடுவாங்க. இவர் இங்கேயே தூங்கட்டும். என்னால இவரை நகர்த்த முடியாதுடி. நான் கீழ படுத்துக்கிறேன் என்றார் முருகன்.
கண்ணம்மா தியா அறைக்கு சென்று அவளுடன் படுத்துக் கொண்டார்.