அத்தியாயம் 31

ஏம்மா, “உனக்கு விக்ரமை பிடிக்குமா?” திலீப் அம்மா தன் மகனை பார்த்துக் கொண்டே ரித்திகாவிடம் கேட்க, அவள் வலப்பக்கம் திரும்பி அவன் அம்மாவை பார்த்து, பிடிக்கும். அண்ணாவோட ப்ரெண்டு எனக்கும் அண்ணா தானே! என்று அவள் நேராக திரும்ப, அவளை பார்த்துக் கொண்டிருந்த திலீப்பிற்கு அவளது அழகான கண்களும் இதழ்களும் அவன் மனதில் பதிந்தது.

அப்ப..உன்னோட மாமா என்று அவர் கேட்க, ரித்திகா கண்கள் கலங்கியது. அவளது அலைபேசியை இறுக பிடித்துக் கொண்டு திரும்பாமல், “மாமாவாக பிடிக்கும்” என்றாள்.

திருமணம்மா? அவர் கேட்க, சட்டென காரை நிறுத்தினான் திலீப்.

“என்னாச்சுடா?” அவன் அத்தை கேட்க, “ஒன்றுமில்லை” என தலையசைத்து ரித்திகாவை பார்த்துக் கொண்டே காரை எடுத்தான்.

இல்ல ஆன்ட்டி, “எனக்கு விருப்பமில்லை” என்று மழுப்பிக் கொண்டு, “எனக்கு டயர்டா இருக்கு” என்றவள் கண்ணிலிருந்து சொட்டு சொட்டாய் கண்ணீர் வந்தது. அலைபேசியை எடுத்து உதிரன் புகைப்படத்தை பார்த்த அவளுக்கு தொண்டை அடைத்தது.

யாருக்கும் தெரியாது மெதுவாக “சாரி மாமா” என்ற அவளது வார்த்தை திலீப்பை ஈட்டியால் தைத்தது போல் வலித்தது. அவளது உருக்கமான “சாரி மாமா” உதிரன் மேல் அவளுக்குள்ள காதலை காட்டியது. அவன் அவளது கையை ஆறுதலாக பிடிக்க வரவும் தயங்கி எடுத்தும் கொண்டிருந்தான். அவர்கள் இறங்க வேண்டிய இடம் வரவும் அனைவரும் இறங்கினர். உறங்கிய ரசிகாவை எழுப்பினாள் ரித்திகா.

திலீப் காரினுள்ளே ரித்திகாவை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். ரசிகா இறங்கவும் ரித்திகாவும் இறங்கி, “தேங்க்யூ சார்” என்று திலீப்பிடம் கையை நீட்ட, அவன் அவள் கையை இறுக பற்றினான். அதிர்ந்த ரித்திகா அவனை பார்க்க, அவன் கண்கள் குளம் கட்டி இருந்தது. மெதுவாக அவள் அவனிடமிருந்து கையை எடுக்க, அவனோ விடாது பிடிக்க, அவஸ்தையுடன் அவனை பார்த்தாள் ரித்திகா. அவனாகவே கையை தளர்த்த கையை எடுத்து விட்டு, “சாரி சார்” என்று வேகமாக ரசிகாவின் பின் சென்றாள்.

வீட்டினுள் வந்த ரசிகா நேராக சுவாதியும் ரசிகாவும் தங்கும் அறைக்கு சென்று, அவளது பொருட்களை வேக வேகமாக எடுத்து பையினுள் போட்டாள்.

ரசி, “வந்துட்டியா?” என்று சுவாதி தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்து, “என்னடி பண்ற?” என்று பதறினாள். ரசிகா அவளிடம் ஏதும் பேசாமல் பையை அடைத்து விட்டு அவ்வறையை விட்டு வெளியே வர, அவள் பின்னே சுவாதியும் ஓடி வந்து அவளை கையை பிடித்து தடுத்தாள்.

சுவாதி, போதும். என்னை தொந்தரவு செய்யாத. இனி மேல் உன்னை பார்க்க உன் வீட்டுக்கு வர மாட்டேன். அப்புறம் எங்கேயும் என்று கண்ணீருடன் ரித்திகா அறைக்கு வந்து கதவை தட்டினாள்.

ரசி..என்று சுவாதி அவள் பின்னே ஓட, குழுமி இருந்த அனைவரும் அவர்களை பார்த்தனர்.

தாத்தா எழுந்து, “என்னம்மா?” என்று சுவாதியிடம் கேட்க, தெரியல தாத்தா. என்னை விட்டு விலகி போ றா என்று கண்கலங்க சுவாதி சொல்ல, பாட்டி சுவாதியை அழைத்து அவள் அம்மா பேசியதை சொல்ல பொங்கி விட்டாள் சுவாதி.

அம்மா, “அவள பத்தி தெரிந்தும் இப்படி பேசி இருக்க?” விக்ரமிடம் காதலை கூறி ஒரு நாள் கூட ஆகலை. “அதுக்குள்ளவா? அவருக்கும் என்னோட ரசிக்கும் என்ன குறை? அவள் என் தோழியானாலும் அவள் என்னை போல் ஊர் சுற்றி பார்த்திருக்கிறாயா?” நான் சுற்றுவேன் தான். ஆனால் அவள் எல்லா இடத்திற்கும் என்னுடன் வர மாட்டாள். அவள் அப்பாவிற்கு பிடிக்காது என்று தெளிவாக சொல்லி விடுவாள். ச்சே, ”என்ன பேச்சு?” என்று கோபமுடனும் ஆற்றாமையுடன் அமர்ந்தாள் சுவாதி.

விகாஸ் அவளருகே வந்து அமர, அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.

“சுவா” அவன் அழைக்க, “உன்னோட வேலைய பார்த்துட்டு போ” என்று சுவாதி குரல் உடைந்து அழத் தொடங்கினாள்.

“ரசியோட அண்ணனா அவர் அவளை எப்படி பார்த்து பார்த்து கவனிச்சுப்பார் தெரியுமா? அவளுக்கு அவள் பெற்றோரை விட விக்ரம் தான் எல்லாமே. நீ ஒரு நாள் எனக்காக நேரம் ஒதுக்கி இருக்கிறாயா? எப்ப பாரு பொண்ணுங்க பின்னாடி ஜொல்லு விட்டு திரியுற?”

கம்பெனியை எடுத்து நடத்த ஆரம்பித்த பின்னாவது மாறுவன்னு பார்த்தேன். ஆனால் அவர் அவருக்கான வேலையிலும் தன் குடும்பத்தை நன்றாக கவனிச்சுப்பார்.

“அவரை பத்தி என்ன பேச்சு பேசுறீங்க? அவர் அநாதையாம்மா? நீ பார்த்தாயா? அவர் குடும்பத்தை பற்றி தெரியுமா?” அவரே பிரச்சனை முடிந்து இங்கிருந்து சென்று விடுவார். நான் எப்படி அவரை பார்ப்பேன்னு வேதனையில் இருக்கேன். ஹெம்…என்று கோபமாக எழுந்தாள் சுவாதி.

“எங்க போகப் போறார்?” ரகசியன் கேட்க, அவனை முறைத்த சுவாதி..லவ் பண்றது பெரியதல்ல. “அவளை பற்றி பேசியும் கேட்டிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க?” உனக்கு பதில் என்னோட ரசிக்கு அவளோட மாமாவே பரவாயில்லை என்று வார்த்தையை உதிர்த்தாள்.

“மாமாவா?” அதிர்ச்சியுடன் ரகசியன் கேட்க, ஆமா..ஆன்ட்டியோட அண்ணன் மகன் ஆகாஷ்.

“என்னமும் செஞ்சு தொலைங்க” என்று அழுது கொண்டே சுவாதி அறையை பூட்டி விட்டு அழுதாள்.

சுவா..வெளிய வா. விகாஸ் சத்தமிட, ரகா, “என்னடா லவ்?” அவர் அப்பா கேட்க, ஆமாப்பா, எனக்கு ரசிகாவை முன்னதாகவே தெரியும். நானும் அவளும் காதலிக்கிறோம். ஆனால் சொல்லிக் கொண்டதில்லை. நான் அவளை தவிர யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று மாடிப் படியில் கோபமாக ஏறினான் ரகசியன்.

“பிள்ளைங்க மனசு புரியாம என்ன பேச்சு பேசிட்ட?” என்று பாட்டி கோபமாக, அத்த எங்க விசயத்துல தலையிடாதீங்க என்றார் சுவாதி அம்மா.

நல்லதும்மா, “நீங்க என்னப்பா சொல்றீங்க?” பாட்டி ரகசியனின் பெற்றோரை பார்த்தார். அவன் அம்மா அப்பாவை எதிர்நோக்க, அவரோ “என் மகனின் விருப்பம் அவன் வாழ்க்கை”. ஆனால் அவன் எப்பொழுது அவன் உழைப்பில் முன்னேறி வேரூன்றுகிறானோ அப்பொழுது இதை பற்றி பேசலாம். அதுவரை அவன் தவறான வழிக்கு செல்லாமல் காதலாக மட்டும் இருந்தால் அந்த பொண்ணு எனக்கு ஓ.கே தான் என்று தன் உற்ற துணையை பார்த்தார். அவரும் புன்னகையுடன் எனக்கு நாளை என்றால் கூட விருப்பம் தான். எனக்கு ரசிகாவை பிடிச்சிருக்கு என்று முடித்தார்.

சுமதி, “என்ன உடனே சரின்னு சொல்லீட்ட?” சுவாதி அம்மா கேட்க, எனக்கு விக்ரம் மீதும் சரி ரசிகா மீதும் சரி நல்ல அபிப்ராயம் தான்.

அந்த வனஜா..என்று சுவாதி அம்மா தொடங்க, அவள பத்தி நீ பேசாத. எனக்கு அவளை சிறுவயதிலே தெரியும். வனஜா நம்மை விட பெரிய வீட்டு பொண்ணு. ஆனால் அவள் அம்மாவை இழந்து அவள் சித்தியுடன் தான் வாழ்ந்தாள். அவள் சித்தி அவள் அப்பாவை ஏமாற்றி சொத்தை வாங்கிட்டா. அந்த கவலையில் அவள் அப்பாவை இழந்து தவித்த நேரம் தான் அவள் கடத்தல் கும்பலிடம் மாட்டி சதாசிவம் சார் உதவியில் தப்பி இருவருக்கும் பிடித்து திருமணம் செய்து கொண்டனர். அவள் அண்ணனும் பாரினில் இருந்ததால் இவளுக்கு நடந்த எதுவும் தெரியாது.

விக்ரமை முதலில் அவளது மகனாக பாராட்டி சீராட்டி தான் வளர்த்தாள். விக்ரம் அவனது மகன் தான் என்று அனைவரும் நினைத்திருந்தனர். பள்ளி பருவத்தில் அவனாக தான் எல்லா உண்மையையும் சொல்லி வீட்டை விட்டு வெளியே வந்தான். அப்பொழுது தான் ஊர் உலகத்திற்கு உண்மை தெரிய வந்தது.

எனக்கு தெரிந்து ரசிகா பிறந்த பின் தான் வனஜா விக்ரமை பார்த்து, தன் நிலை தன் மகளுக்கும் வந்து விடுமோன்னு பயந்து விக்ரமை விலக்கி இருந்திருப்பாள். ஏனென்றால் அந்த அளவிற்கு அவள் காயப்பட்டு இருந்தாள். விக்ரமிற்கு அவளை பற்றி தெரியுமான்னு தெரியல. அவன் எதுக்காக வீட்டை விட்டு வெளியே வந்தான்னு தெரியல. அவள் அவனை மனதால் காயப்படுத்தி கூட இருக்கலாம்.

“விக்ரம், ரசிகாவை பற்றி உனக்கு என்ன தெரியும்ன்னு வாய்க்கு வந்தபடி பேசுற?” அந்த பிள்ளைகள் இருவரும் ஓருயிரிலிருந்து உதிக்கவில்லை என்றாலும் அவ்வளவு பாசமாக இருப்பார்கள்.

“கோவிலில் விக்ரம் ரசிகாவை பார்த்துக் கொண்டதை யாருமே பார்க்கவில்லையா?” நம் பிள்ளைகள் கூட அந்த அளவிற்கு ஒருவருக்கு ஒருவர் பாசமாக இருப்பாங்கன்னு சொல்ல முடியாது என்றார்.

“என்ன நம்ம பிள்ளைகளை பத்தி பேசுற?” ராஜா அம்மா கேட்க, ஆமா..நம்ம சுவா ஆடும் போதும் சேட்டை செய்யும் போது வம்பு செய்யும் நம்ம பசங்க பொண்ணுங்க அவ அழுதுகிட்டு அறைக்கு போகும் போது அமைதியாக தான உட்கார்ந்து இருக்காங்க. “யாருக்காவது அவளை சமாதானப்படுத்த தோன்றியதா?” அவள் உடன் பிறந்த விகாஸ் மட்டும் தான போனான் என்று ரகசியன் அம்மா தங்களுடைய எல்லா பசங்களையும் பார்த்தனர். அனைவரும் தலைகவிழ்ந்து அமர்ந்தனர்.

பசங்களா, பெற்றவர்கள் உங்கள் வாழ்க்கையில் கடைசி வரை வர முடியாது. உங்கள் உற்றதுணை தான் கடைசி வரை வருவாங்க. அவர்களுடன் பிரச்சனைன்னா யாரிடம் போய் நிற்பீங்க? இதே சகோதர, சகோதரிகளிடம் தானே. ஒருவரின் மகிழ்ச்சியில் நாம் பங்கு கொள்வது போல் அவங்களின் கஷ்டகாலத்திலும் உடன் இருக்கணும் என்று ரகசியன் அம்மா சொல்ல, படியிலிருந்து ரகசியன் ஓடி வந்து தன் பெற்றோரை அணைத்து நன்றி தெரிவித்து, “என்னடா வேடிக்கை பாக்குறீங்க?” என்று சுவாதி அறைக்கதவிடம் சென்றனர்.

சுவாதி அறையில் அரவமே இல்லை. சுவா..என்று அனைவரும் சத்தமிட்டு கதவை தட்ட, அவளிடம் பதிலே இல்லை. இவர்கள் சத்தம் கேட்டு ரசிகாவும் ரித்திகாவும் கீழே ஓடி வந்தனர். ரசிகா சோர்வாக இருந்தாலும் சுவாதி அலைபேசியிலும் அழைக்க, அவளிடம் பதில் இல்லாமல் இருந்தது.

தாத்தா, அவள் அலைபேசி எடுக்கல. அவள் ஏற்கனவே இந்த அரக்கன் வர காரணமே சம்பூ..அதான் அவ தான்னு ரொம்ப புலம்பிக்கிட்டே இருந்தா. அய்யோ..இந்த நேரத்துல நானும் அவளை கஷ்டப்படுத்திட்டேனே! என்று ரசிகா அவள் தலையில் அடித்தாள்.

இருங்க..இன்னொரு சாவி இருக்கு என்று மிருளாலினி அம்மா ஓடிச் சென்று சாவியை எடுத்து வந்தார். கிருபாகரன் கதவை திறக்க, அனைவரும் அதிர்ந்தனர். சுவாதி கட்டிலின் கீழே மயங்கி விழுந்திருந்தாள்.

“சுவாதி” என்று அவள் அம்மா அவளிடம் வர, விகாஸ் அவரை தடுத்து அவன் முன் சென்று அவன் தங்கையை தூக்கி கட்டிலில் கிடத்தினான். ராஜா நீரை எடுத்து வர, ரகசியன் நீரை தெளித்தான்.

சுவாதி எழுந்து அமர, அனைவரும் அவளை சூழ்ந்து நின்றனர். பின்னே தள்ளி அமர்ந்து கொண்டிருந்த ரித்திகா, அவளுக்கு மூச்சு முட்ட போகுது. முதல்ல அவள் உயிரோட இருக்க காற்று வேண்டும் என்று சாகவாசமாக சொல்ல, எல்லாரும் அவளை முறைத்துக் கொண்டு தள்ளி நின்றனர். திலீப் புன்னகையுடன் அவளை பார்த்தான்.

சுவாதி புன்னகையுடன் ரித்திகாவை பார்த்து, நான் அவங்களிடம் பேசணும் என்றாள் ரசிகாவை பார்த்துக் கொண்டு.

“அவளிடம் என்ன பேசணும்?” நாங்க எல்லாரும் உனக்காக கவலைப்படுகிறோம் என்று சுவாதி அம்மா கோபப்பட, எழுந்த ரித்திகா, ஆன்ட்டி அமைதி அமைதி…உங்களுக்கு பீபீ ஏறி நீங்க மயங்கி விழுந்தால் பாவம் அங்கிள் உங்களது வெயிட்டை கூட அவரால் தாங்க முடியுமோ” என்று நக்கலாக கூறி மட்டியை கடித்து சிரிப்பை விழுங்கியும் விழுங்காமலும் நின்றாள்.

“என்னடி பேசுற?” சுவாதி அம்மா கோபமாக, பசங்க எல்லாரும் வாய்விட்டு சிரித்தனர்.

வாய மூடுங்கடா. “என்னை அந்த பொண்ணு கிண்டல் பண்றா என்னன்னு கேட்காமல் சிரிக்கிறீங்க?” சுவாதி அம்மா கோபமாக சொல்ல, அத்தை..அவங்க சொல்றது உண்மைதானே! உங்களை மாமாவால் தாங்க முடியாதே! என்று நேகன் சொல்லி சிரிக்க, அங்கே சிரிப்பலை பரவியது.

சுவாதி, “நீ என்ன கேட்கப் போறன்னு தெரியுது? சோ..விக்ரமிற்கு உண்மை தெரிந்து விட்டதோ?” ரித்திகா கேட்க, “ஆம்” என்று தலையசைத்தாள்.

என்ன? உங்களுக்கும் தெரியுமா? படபடப்புடன் ரசிகா ரித்திகாவை பார்த்து விழிக்க, அவள் தலையை பிடித்து அழுத்திய ரித்திகா, பயப்படாத..எனக்கு என்னோட மகிழை சமாளிக்கவே போதும் போதும்ன்னு ஆகிடும் என்று புன்னகைத்தாள்.

“என்ன சமாளிப்பு? உன்னோட தம்பி தான் வளர்ந்துட்டானே!” வேல்விழி கேட்க, வளர்ந்துட்டான் தான். ஆனால் கோபமும் பாசமும் அதிகம்.

சிம்மா அண்ணா, என்னை விட இரு வீட்டிலும் அவன் தான் செல்லம். சிம்மா அண்ணாவுக்கும். ஆனால் இப்ப நாங்க அண்ணாவை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவன் எங்க பிரச்சனையில படிப்பை கொஞ்சம் தவற விட்டுட்டான். அவனை இன்னும் ஹாஸ்ட்டலில் விட்டால் அவன் கவனம் வேற மாதிரி சிந்திக்க தொடங்கும். அதனால நாங்க தனியா அவன் காலேஜூக்கு அருகே வீடு பார்க்கலாம்ன்னு நினைச்சிட்டு இருக்கோம். அவனை தனியே சமாளிப்பது கடினம்.

முன் போல் தான் இருப்பான். எனக்காக மனசுக்குள்ளேவே எல்லாத்தையும் போட்டு உலன்று வேதனையில் இருந்திருப்பான். பகுதி நேர வேலைக்கு செல்கிறேன் என்று அடுத்தவங்களிடம் சண்டை போட்டு அடி வாங்கும் வரை சென்று விட்டான் என்று ரித்திகா கண்கலங்கினாள். விக்ரம் சார் தான் அப்ப உதவி செஞ்சாங்க..சரி..சரி..எங்களை விடுங்க.

சுவாதி, நீ தேவையில்லாமல் சிந்திக்காத. முன் நடந்தது முன் ஜென்மம் தான். சம்பூ உன்னை போல் இருந்தாலும் இப்ப இருக்கும் சுவாதி இல்லை. நீ நீ தான். இந்த பிரச்சனை உன்னால இல்லை. எல்லாம் அந்த கடவுளின் விளையாட்டு. நீ ஓய்வெடு என்று ரித்திகா அறைக்கு சென்றாள்.

மகிழ், “அடி வாங்கினானா?” என்று ரசிகா யோசனையுடன் அவள் பின் ஓடினாள்.

அனைவரும் உறங்க செல்ல, சுருதி அங்கேயே நின்றாள்.

“சுருதி” என உலுக்கினாள் ஹரிணி.

ம்ம்..ஹரா..என்று சுருதி மகிழை எண்ணி வருத்தமாக அவளை அணைத்தாள்.

என்னடி, நி”ஜமாகவே அவனை காதலிக்கிறாயா? சரியா வரும்ன்னு நினைக்கிறியா? நம்ம மாமாக்களோட காதலுக்கே நம்ம வீட்ல எவ்வளவு பிரச்சனை?” என்று சுருதியை விலக்கி பார்த்தாள். அவள் கண்ணீருடன் என்னால அவனை மறக்க முடியும்ன்னு தோணலை என்று அழ, ஷ்..என்று அவள் வாயை பொத்தி தனியே அழைத்து வந்தாள் ஹரிணி.

சுருதி, நீ அவனை சந்திக்காமல் இருந்தால் மறந்துருவன்னு நினைக்கிறேன். ஜஸ்ட் ஒரு ஈர்ப்பாக தான் இருக்கும். அவனை காணாதது போல் இருக்க பாரு. சித்தியும் சித்தப்பாவும் ஏத்துக்கிறது கஷ்டம். வா..அறைக்கு போகலாம் என்று அவள் கண்ணை துடைத்து விட்டு சுருதியை இழுத்து சென்றாள். அறைக்கு சென்ற சுருதியோ தூங்க முடியாமல் மகிழன் நினைவில் அன்றைய இரவை கழித்தாள்.

அதிகாலையில் வெளியே வந்த தாத்தா, விக்ரம் வீட்டின் வெளியே சாய்ந்து கண்ணை மூடி அமர்ந்திருப்பதை பார்த்து அவனருகே வந்து அமர்ந்தார்.

“ஏதோ யோசனையில் இருக்கீங்களா தம்பி?” என்று அவர் கேட்க, கண்ணை திறந்து அவரை பார்த்து..நம்மை சுற்றி எல்லாமே வினோதமாகவும் த்ரில்லிங்காகவும் இருக்கு என்று அவரை பார்த்தான்.

சரி, “இரவு எதுக்கு இவ்வளவு நேரம்? எங்க போனீங்க?” அவர் கேட்க, கண்கலங்கினான் விக்ரம்.

“தப்பா ஏதும் கேட்டு விட்டேனா?” அவர் கேட்க, இல்ல இதுவரை யாரும் இவ்வளவு அக்கறையாக கேட்டதில்லை. “தேங்க்ஸ் சார்” என்றான்.

சார் இல்லை தாத்தான்னே அழைக்கலாம் என்றார் அவர்.

ம்ம்..என்று அமைதியானான்.

“நான் கேட்டேனே!” அவர் கேட்க, ரித்திகாவும் தற்செயலாக வெளியே வந்தாள்.

“தூங்கலையாம்மா?” அவர் கேட்க, தூங்க முடியல என்றாள் அவள்.

அவளை பார்த்து கையை மடக்கிய விக்ரம், இதற்கு இது நேரமில்லை என்று கட்டுப்படுத்தினான். பின் தாத்தாவிடம் அவனது அலைபேசியை காட்டினான். அதில் இருப்பதை பார்த்து, “இது எப்பொழுது நடந்தது? இப்ப எல்லாரும் ஓ.கே வா?” என கேட்டார். ரித்திகாவும் தாத்தா அருகே அமர, திலீப்பும் அவர்களை நோக்கி வந்து அதனை பார்த்தான்.

“யாரு இதெல்லாம் செய்றாங்க?” திலீப் கேட்க, இந்த பிரச்சனை ஆசிரம இடத்திற்காக. அவனுக சீக்கிரமே என்னிடம் மாட்டுவானுக என்று விக்ரம் வார்த்தைகள் சீற்றமானது.

“இது எல்லா இடத்திலும் நடப்பது தானே!” என்று தாத்தா ஓரக்கண்ணால் விக்ரமை பார்த்தார்.

என்ன எல்லா இடத்திலும் நடப்பது? சாதாரணமா சொல்றீங்க? இந்த சின்ன பிள்ளைங்க என்ன தப்பு செஞ்சாங்க? பதினேழு பேர் ஹாஸ்பிட்டலில் இருக்காங்க. “நிறைய பேர்” என்று அவன் கண்ணீர் கசிந்தது. சொல்ல முடியாமல் வார்த்தைகள் தடுமாறியது. விக்ரம் தொண்டை அடைக்க..இறந்துட்டாங்க. எல்லாத்துக்கும் காரணம் நான் தான் என்று அழுதான்.

“விக்ரம்” என்று ரித்திகா, திலீப் எழுந்தனர். தாத்தா இருவரையும் பார்க்க, அவர்கள் அமர்ந்தனர்.

ஆமா, நான் தான்..என்னை பிடிக்க தான் இவங்கள யூஸ் பண்ணி இருக்காங்க. என்னிடம் இருக்கும் ஆதாரங்கள். அந்த பிஞ்சுகள் உயிரை காவு வாங்கியது என்று தலையில் கை வைத்தான்.

உன்னை பிடிக்க இவங்களை எதற்கு? தாத்தா கேட்க, அம்மா அப்பா மேற்பார்வையிலும் ரசி இங்கேயும்..பாதுகாப்பாக இருப்பதால் அந்த பசங்களை..நான் செய்தவற்றை மறைமுகமாக செய்திருந்தால் இந்த பிஞ்சுகளில் உயிர் போயிருக்காது என அழுதான்.

புரியல ரித்திகா சொல்ல, இந்த பசங்களுக்கான மேற்செலவுகளை நான் தான் பார்த்துக் கொள்கிறேன். வேலையை தவிர எனக்கான நேரம் அங்கே தான் செல்வேன். பின் தான் குடியிருப்பிற்கு செல்வேன். அதான் அந்த பாவிகள் இப்படி செஞ்சுட்டாங்க. ஹாஸ்பிட்டலில் இருப்பவர்களுக்கு ஆதரவாக யாருமில்லாமல் இருக்காங்க. பசங்க வலியோட இருப்பாங்க. என்னாலும் இப்ப அங்க இருக்க முடியல. ரொம்ப வலிக்குது என்று அவன் அழ, திலீப் அவனை இழுத்து அணைத்துக் கொண்டான்.

ஏற்கனவே விக்ரமை பற்றி தான் ரகசியன் அம்மா கூறினாரே! மற்றவர் மனதில் விக்ரம் இடம் பிடித்து விட்டான். “சுவாதி பெற்றோர் மனதில் இடம் பெறுவானா விக்ரம்?” பார்க்கலாம்.

தாத்தா, நான் அந்த பசங்கள அட்மிட் செய்த ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டு வாரேன். நீங்க அம்மா, அப்பாவிடம் சொல்லிடுங்க என்று திலீப் கிளம்ப, நல்லதுப்பா. பிள்ளைகளுக்கு வேண்டிய உதவியை செய் என்றார் தாத்தா.

விக்ரம் எழுந்து திலீப்பை அணைத்து விட்டு, எனக்கும் ஒரு உதவி வேண்டும். “ரித்துவை நட்சத்திரா வீட்டில் விட்டு போறீங்களா?” விக்ரம் கேட்க, வேண்டாம். நான் அப்புறம் சென்று கொள்கிறேன் என்றாள் அவள்.

“வாயை மூடிட்டு சொன்னதை மட்டும் செய்” என்று விக்ரம் கர்ஜித்தான். மூவரும் அதிர, “விக்ரம் நான் என்ன செய்தேன்?” ரித்திகா கேட்டாள்.

“அதை நான் எப்படி சொல்வது?” சொல்ல வேண்டியவங்க சொல்வாங்க. முதல்ல இங்கிருந்து கிளம்பு.

“நான் ரசியிடம் சொல்லீட்டு வாரேன்” என்றாள் அவள்.

அதெல்லாம் தேவையில்லை. நான் அவளை பார்த்துக் கொள்கிறேன்.

விக்ரம் அருகே வந்த ரித்திகா, “உன்னை ஏதாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிச்சிரு ப்ளீஸ்” என்றாள்.

“கிளம்பு” என்றான் அவன் கோபமாக.

ரித்திகா யோசனையுடன் திலீப்பை பார்க்க, அவன் அவளுக்கு முன்பக்க கார்கதவை திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்தான். “வாரேன் தாத்தா” என்று விக்ரமை பார்த்துக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள் ரித்திகா. திலீப் காரை செலுத்த ரித்திகா சிந்தனையுடன் தூங்கி விட்டாள் அக்குளிர்காற்றில்.

அவளது தூங்கும் அமைதியான முகத்தை ரசித்து பார்த்த திலீப் காரை நிறுத்தி, அவளது முகத்தில் விழுந்த கூந்தலை சரி செய்ய ரித்திகா அசைந்தாள். அவன் பதற மீண்டும் துயிலானாள். திலீப் அவளை நெருங்கி அவளது வதனத்தை ரசித்தவாறு இருக்க, ரித்திகா விழித்தாள். பதட்டத்தில் அவன் கை அவளது கையில் பட்டு விட, கண்ணை விழித்து அவனை பார்த்தாள்.

அவன் மெதுவாக அவளது கையை பிடித்து அவளை நெருங்கி ரித்திகா கண்களை ஆழ்ந்து பார்த்தான்.

திகைத்த ரித்திகா சுயம் வர, அவன் இதழ்கள் அவள் இதழ்களை நெருங்கிக் கொண்டிருந்தது. அவனது மார்பில் கை வைத்து ரித்திகா அவனை தள்ள, அவளது கையை இறுக பற்றிய திலீப் அவளது கையை அவனது இடது மார்பில் அழுந்த வைத்தான்.

“கேட்குதா?” என்னுடைய இதயத்துடிப்பு அதிகமாகிறது. “உனக்கு புரியவில்லையா?” எனக்கு உன்னை சும்மா எல்லார் போலும் பிடிக்கலை. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு உன் மீது காதல் வந்து விட்டது.

இல்ல, “என்னை விடு” என்று அவள் கையை அவன் மார்பிலிருந்து அவள் எடுக்க, அமைதியா இரு. நான் பேசணும் என்றான் திலீப். ரித்திகா கண்ணீருடன் அமர்ந்திருந்தாள்.

அழாத. உன்னை அந்த மணமேடையில் பார்த்தவுடனே உன்னை தொலைத்து விட்டேன். எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் என்று தோன்றியது. ஆனால் உன் காதல் நானில்லை என்று தெரியவும் என் நெஞ்சில் ஈட்டியை பாய்த்தது போல் வலி. இன்னும் ஆறவில்லை. உன் கை பட்டால் சரியாகும். நீ என்னை ஏற்றுக் கொண்டால் சரியாகும் என்று அவளை திலீப் நெருங்க, ரித்திகாவின் அழுகை அதிகமானது.

அவளை விட்டு சட்டென விலகிய திலீப் கைகள் தளர, அவன் மனம் இறுகியது. நீ என்னை அடித்திருந்தால் கூட வலித்திருக்காது. ஆனால் இப்பொழுது உன் அழுகை என் மனதில் வலியை அதிகரிக்கிறது என்று ஸ்டியரிங்கை குத்தினான்.

சாரி, என்னால உங்களை காதலிக்கவோ, திருமணம் செய்யவோ முடியாது. ப்ளீஸ் என்னை தொந்தரவு செய்யாதீங்க என்றாள்.

ம்ம்..சரி என்று அழுது கண்களை துடைத்து விட்டு மீண்டும் காரை செலுத்தலானான்.

காலை ஆறு முப்பது மணியளவில் நட்சத்திரா வீட்டை அடைந்தனர் இருவரும். அதே நேரம் மிருளாலினி ஊரில் அனைவரும் காலை தேனீரை ஒன்றாக சேர்ந்து சுவைக்க, வீட்டிற்கு வெளியே திண்ணையில் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

“விக்ரம்” என்று ஒரு பொண்ணு பள்ளிச்சீருடையுடன் ஓடி வந்தாள். குரலை கேட்டு நிமிர்ந்த விக்ரமும் வேகமாக அவளை நோக்கி வேகமாக நடந்தான். அந்த பொண்ணு ஓடி வந்து அவனை அணைத்து தேம்பி தேம்பி அழுதாள். ரவி காரிலிருந்து இறங்கினார்.

“ஒன்றுமில்லை.. ஒன்றுமில்லை..”என்று விக்ரம் அவள் முதுகை தடவினான்.

சட்டென வந்த வார்த்தையில் விக்ரம் உடல் விறைத்தது. ஏன்டி, நேத்து ஏதோ பெருசா லெட்சர் எடுத்த, “இப்ப என்ன சொல்ற?” எல்லா போலீஸ்காரனும் ஓரே மாதிரி தான் இருப்பானுக. “சுவாதியை உண்மையாக காதலிப்பதாக சொன்ன?” அப்படின்னா, “இது என்னது? காலங்காத்தால் என்ன கண்றாவி?” என்று சுவாதி அம்மா வார்த்தைகள் சூடாய் வந்து விழுந்தது.

பள்ளிப் பொண்ணு அவளாக நகர, விக்ரம் எல்லாரையும் பார்த்தான். ரசிகா அந்த பொண்ணிடம் வந்து, “போதுமாடி. இப்ப எதுக்கு வந்த?” என்று கோபமாக கத்தினாள்.

எல்லாரையும் பார்த்த விக்ரம் சுவாதியை கூர்மையுடன் பார்க்க, அவள் கண்களோ கலங்கி இருந்தது.

“நான் வந்துதுல என்ன இருக்கு?” எனக்கு எல்லாமே விக்ரம் தான என்று அந்த பொண்ணு அழ, ரசிகா அவளை அடிக்க கையை ஓங்கினாள்.

ரசி, “என்ன பழக்கம் இது?” விக்ரம் சத்தமிட்டான்.

அந்த பொண்ணும் பயந்து விலக, சுவாதி அம்மா மேலும் பேசினார். மீண்டும் சுவாதியை விக்ரம் பார்க்க, அவள் கண்கள் விக்ரமை குற்றம் சாட்ட, அவ்விடம் விட்டு விக்ரம் நகர்ந்தான்.

விக்ரம் அண்ணா, எங்க போற? நான் உன்னை பார்க்க தான வந்தேன். அங்க பாட்டி, லட்சுமி அக்கா..எல்லாருமே செத்து போயிட்டாங்க. ராக்கி என்னை காப்பாற்றி என அங்கேயே அமர்ந்து கதறி அழுதாள் கீர்த்தனா.

கீர்த்து..ஒன்றுமில்லை அழாத. நான் போகலை என்று விக்ரம் அவளை அணைக்க, “அண்ணாவா?” சுவாதி அம்மா கேட்டார்.

ஆமாம்மா, அந்த பொண்ணு இருந்த ஆசிரமத்தை சில பாவிகள் நெருப்பிற்கு இரையாக்கிட்டாங்க. அதில் சிலர் இறந்துட்டாங்க. சிலர் ஹாஸ்பிட்டலில் இருக்காங்க என்ற தாத்தா..அவர்களிடம் வந்தார்.

பாட்டி கையிலிருந்த காபி கோப்பையை கீழே வைத்து விட்டு அவர்களிடம் வந்தார். அனைவரும் அங்கே வர, விக்ரமின் பார்வை சுவாதியிடம் சென்றது,

அவள் மன்னிப்பு கேட்டு கெஞ்சலாக அவனை பார்க்க, “நீ தான் என்னை நம்பவில்லையே?” என அவன் கண்கள் கனலாய் அவளை சுட்டது. தன் தவறை உணர்ந்த சுவாதி..ப்ளீஸ் என்று உதட்டை அசைக்க, ரகசியன் இருவரையும் பார்த்தான். விக்ரம் வேறு புறம் திரும்பிக் கொள்ள, துடித்து போனாள் சுவாதி. அவள் கண்ணீரை உதிர்க்க, ரசிகா அப்பொழுது தான் இருவரையும் பார்த்தான்.

சட்டென விக்ரமிடமிருந்து தன் தோழி சுவாதி அருகே வந்து நின்று கொண்டாள். சுவா, “அவனை அப்புறம் சரி செய்து கொள்ளலாம் அழாத” என்று ரசிகா சுவாதி கண்ணை துடைத்து விட்டு விக்ரமை பார்த்தாள்.

ரவி அவன் முன் வர, “கீர்த்துவ எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க?” கீர்த்து நீ சிம்மாவுடனே இரு. இனி முடிந்ததை நினைத்து ஒன்றும் ஆகப் போறதில்லை. ஆனால் அவர்கள் யாரையும் நான் சும்மா விட மாட்டேன். நீ என்னை நம்புறேல்ல என்று விக்ரம் கீர்த்தனாவிடம் கேட்டுக் கொண்டே சுவாதியை பார்க்க, அவள் உடைந்து விட்டாள்.

“நான் விக்ரமை நம்பாமல் இருந்து விட்டேனே!” என் மீதும் பெரும் தவறு என்று அவள் கண்கள் கலங்க வீட்டிற்குள் சென்றாள்.

“சுவா” என்று சுருதி அழைக்க, அனைவரும் அழுது கொண்டே செல்லும் சுவாதியை பார்த்தனர்.

நேகனோ, சுவா..நில்லு என்று ஓட, அனைவரும் அவன் பின் சென்றனர். விக்ரம் கொஞ்சமும் அசரவில்லை. ரவி, இவள் சிம்மாவுடன் பாதுகாப்பாக இருக்கட்டும். இங்கே பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து விட்டு நான் அங்கே வருகிறேன் என்றான்.

ஓ.கே சார் என்று சல்யூட் செய்த ரவி கீர்த்தனாவை அழைக்க, கீர்த்து…சிம்மா இருப்பான். நீ போ. அவனுடன் நீ பாதுகாப்பாக இருப்பாய் என்று அவளை ரவியுடன் அனுப்பி விட்டு மனதில் வேதனையுடன் வெளியே அமர்ந்து கொண்டான்.

காரிலிருந்து இறங்கிய ரித்திகாவை எதிர்நோக்கி காத்திருந்த உதிரன் ஓடி வந்து அவளை ஓங்கி அறைந்தான். திலீப் பதற, அவனை முறைத்து விட்டு ரித்திகாவை பார்வையாலே எறித்தான் உதிரன்.

“மாமா” என கையை கன்னத்தில் தாங்கியபடி உதிரனை கண்ணீருடன் ரித்திகா பார்த்தாள்.

“என்னடி பண்ணீட்டு வந்துருக்க? என்னைய உயிரோட கொல்லாம விட மாட்டீயா?” என உதிரன் கத்தினான்.

மச்சான், “என்ன பண்றீங்க?” என சிம்மா வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தான்.

அண்ணா, “நீ சும்மா இரு. இவ செஞ்ச காரியத்துக்கு கொஞ்ச சொல்றீங்களா?” மகிழனும் சினத்துடன் கத்தினான்.

திலீப் புரியாமல் எல்லாரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அப்படி என்ன தான் செஞ்சுட்டா?” என்று சிம்மா கேட்க, உள்ளிருந்து அன்னம், பரிதி, நட்சத்திரா, அர்சு வந்தனர்.

“என்ன செஞ்சாலா?”

இவளுக்கு நான் அவளோட உடன்பிறந்த தம்பின்னு கூட மறந்து போச்சு. இதற்கு முன் அந்த பிரணவ் விசயத்தை மறைத்தது போல் இப்பவும் என்று மகிழன் கோபமாக, “அம்மா அப்பாவோட நானும் செத்துட்டேன்னு நினைச்சிட்டியோ?” என்று ஆற்றாமையுடன் கண்ணீருடன் கத்தினான்.

“என்னன்னு சொல்லீட்டு பேசுங்கடா?” சிம்மா கேட்க, “அதை உங்க அருமை தங்கச்சியிடமே கேளுங்க மாமா” என்ற நட்சத்திரா, “எந்த பொண்ணும் தயங்கும் விசயத்தை சாதாராணமா பேசிட்டு வந்திருக்க? ரித்து நீ இப்படியெல்லாம் பண்ணுவன்னு நினைக்கல?” என்று இயலாமையுடன் தன் அண்ணன் உதிரனை பார்த்தாள்.

ரித்து, “எல்லாரும் திட்டும் அளவிற்கு இப்பொழுது என்ன செஞ்ச?” சிம்மா கேட்டான்.

அண்ணா..அண்ணா..என்று ரித்திகா வார்த்தைகள் தந்தியடிக்க, “டாக்டர் கிட்ட என்ன பேசுன?” அண்ணாகிட்ட சொல்லு. நான் மட்டும் உதி மாமா இடத்துல இருந்தா உன்னையும் கொன்னுட்டு நானும் செத்து போயிருப்பேன் என்றான் மகிழன்.

“டாக்டரா?” ரித்து சொல்லு? சிம்மா குரல் ஓங்க, நெஞ்சில் கையை வைத்து கதறி அழுதாள் ரித்திகா.

“சொல்லு?” மேலும் சிம்மா கத்த, “அம்மாடி என்ன விசயம்?” அழாம சொல்லு பரிதி கேட்க, ஓடிச் சென்று அன்னத்தை அணைத்துக் கொண்டாள் ரித்திகா.

அவளை பிடித்து இழுத்த உதிரன், நீ நினைச்சதை சொல்லி இருக்கலாம்ல்ல. “நீயா முடிவெடுக்க நாங்க எல்லாரும் தேவையில்லாதவங்களாகிட்டோமா?” என அவளை பிடித்து உலுக்கினான்.

சாரி மாமா, என்னால முடியல. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நீ..நீ..நீங்க..என நிறுத்தி உதிரன் கண்ணை பார்த்த ரித்திகா பேச முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டு,  “நீங்க இங்கிருந்து போயிருங்க மாமா. வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று அவள் முடிக்கும் முன் மீண்டும் அவளை அறைந்தான் உதிரன்.

நல்லா கேட்டுக்கோ ரித்து. உனக்கு பிடிக்கலைன்னா இப்பவே டாக்டர்கிட்ட நானும் வாரேன். போகலாம். உன்னோட கர்ப்பப்பையை எடுத்திடலாம். அதுக்காக உன்னை விட்டு என்னால போக முடியாது. நமக்கு குழந்தையே இல்லைன்னாலும் எனக்கு என்னோட ரித்து வேணும்.

“நீ மட்டும் தான் உண்மையாக காதலிக்கிறாயா? நானும் தான்..எத்தனை வருசமா?” நானும் பள்ளியிலிருந்தே தான் காதலிக்கிறேன். நானும் செல்லம்மாவும் உன்னிடமும் சிம்மாவிடம் காதலை சொல்லாத காரணம் எங்க அப்பா தான். அவர் வேவு பார்க்க பள்ளியில் நமக்குள் ஒருவனை உலவ விட்டு அவன் மூலம் அனைத்தையும் அறிந்து கொண்டிருந்தார். எங்களிடம் மிரட்டியும் வைத்திருந்தார்.

“அப்பாவை பற்றி உங்க எல்லாருக்கும் தெரியும் தான?” மானத்திற்காகவும் குடும்ப கௌவரத்திற்காகவும் எதையும் செய்வார். உங்களை அவர் ஆட்களை விட்டு கொன்று விடுவாரோன்னு தான் நாங்க உங்களிடம் பேச கூட இல்லை என்று சொல்லி ரித்திகாவை பிடித்து தள்ளினான்.

மச்சான், “என்ன சொன்னீங்க?” சிம்மா கேட்க, ஆமா..உன்னோட ப்ரெண்டு கார்த்திக் தான். அவன் தான் நம் செய்கை ஒவ்வொன்றையும் உன் அப்பாவிடம் தினமும் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அப்பா மெடிக்கல் செலவிற்காக செய்தான்.

அதுமட்டுமல்ல சிம்மா காதல் தான எல்லாருக்கும் தெரியும். என்னோட செல்லம்மா என நட்சத்திராவை பிடித்து இழுத்த உதிரன், இவளும் சிம்மாவை காதலித்தாள். சிம்மா சீமந்தம் முடிந்து பெங்களூரு கிளம்பும் முன் சென்னை சென்றேன். சுபிதனை தனியே சந்தித்து பேசிய போது அனைத்தும் தெரிந்தது.

நட்சா, அர்சு உனக்கும் சிம்மாவிற்கும் பிறந்த குழந்தை தான்.

அண்ணா..இல்லை..நட்சத்திரா பேசத் தொடங்க, “வாய மூடு ஸ்டார்” என்று சிம்மா அவள் வீட்டினுள் நுழைந்து அந்த பையை எடுத்து வந்து அனைத்தையும் கொட்டினான்.

அதில் கோகுலுடன் எடிட் செய்யப் பட்ட புகைப்படத்தை பார்த்து கண்கலங்க அதிர்ந்தாள் நட்சத்திரா.

அப்ப, “கல்யாணம்?” நட்சத்திரா கேட்க, “கல்யாணமா?” அப்படி ஒன்று உன் வாழ்வில் நடக்கவேயில்லை செல்லம்மா என்ற உதிரன், சிம்மா..நீ உன்னோட விந்தணுவை குழந்தையில்லாத ஒரு தம்பதினருக்கு உதவ குடுத்திருக்க. ஆனால் ஹாஸ்பிட்டல்ல அந்த பொண்ணுக்கு பதிலாக, அப்பண்டிஸ் ஆப்ரேசனுக்காக சென்ற நட்சாவிற்கு செலுத்திட்டாங்க.

ஆப்ரேசன் செய்யாமல் இருப்பதை பார்த்து, மிருளாலினி டாக்டரிடம் கேட்ட பின் தான் எல்லாரும் மாறியதை கவனித்து இருக்காங்க. பின் ஏதும் செய்ய முடியாது இருக்க, அந்த பொண்ணு நம்ம நட்சாவிடம் குழந்தையை பெத்து கொடுக்க சொல்லி பிரச்சனை செய்ய, சுபிக்கு மிருளாலினி சொல்ல, அவன் கோபத்தில் கோர்ட்டுக்கு போறேன்னு சொன்னதால் இவர்கள் மூவரையும் சமாதானப்படுத்தும் போது தான் அந்த பொண்ணு குழந்தைக்காக தற்கொலை செய்யப் போக, எல்லாரும் பதறி விட்டனர்.

நட்சத்திரா நேரம் கேட்க, அந்த பொண்ணு அமைதியானாள். மூன்று நாட்களுக்கு பின் இந்த குழந்தை வேணாம்ன்னு சுபி அறிவுரையால் மூவரும் மருத்துவமனை வந்த போது, அந்த பொண்ணும் அவள் குடும்பமும் ஓர் விபத்தில் இறந்ததாக தெரிய வந்தது.

கருகலைப்பு பற்றி பேச நினைக்கும் போது தான் செவிலியர்கள் சிம்மா விந்தணு தான் இன்ஜெக்ட் செய்ததாக பேசியதை கேட்டு மூவரும் அதிர்ந்தனர். மருத்துவர் வந்து விட இந்த குழந்தையின் அப்பாவை பற்றி கட்டாயப்படுத்தி மருத்துவரிடம் கேட்டு அறிந்தனர்.

சிம்மா என்றதும் நட்சா மகிழ்ந்தாள். அப்பொழுதும் சுபி வேண்டாம். தனியே வளர்ப்பது நல்லதல்லன்னு நட்சாவுக்காக கருவை கலைக்க சொன்னான். ஆனால் நட்சா தான் பிடிவாதம் செய்து அர்சுவை சுமந்தாள் என்று உதிரன் கண்ணீருடன் அமர்ந்தான். நட்சத்திரா மயங்கி விழுந்தாள்.

அனைவரும் பதறி அவளிடம் சென்று நீரை தெளிக்க, சிம்மாவை பார்த்த நட்சத்திராவோ அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.

மாமா..தலை ரொம்ப வலிக்குது. தாங்க முடியல என்று சொல்ல, திலீப் அவளருகே சென்று அவளை பரிசோதித்தான். பின் சில மருந்துகளை அவனே வாங்கி வந்து போட்டு விட்டான். கொஞ்ச நேரம் தூங்கி எழட்டும். மறுபடியும் இதை பற்றி அவங்களிடம் பேச வேண்டாம் என்று வெளியே வந்தான்.