அத்தியாயம் 29

தியா வீட்டிலிருந்து கிளம்பிய சிம்மாவும் அவன் குடும்பத்தாரும் நட்சத்திரா வீட்டிற்கு மாலை நேரத்திற்கு முன்னதாகவே வந்தனர்.

வீட்டில் அர்சு உதிரன் அருகே அமர்ந்து விளையாண்டு கொண்டிருந்தான். உதிரன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

அம்மா..என்று நட்சத்திராவை பார்த்து அர்சு அவளை அணைத்தான். மற்றவர்களையும் பார்த்து அவர்களிடமும் வந்தான்.

“என்னடா பண்ற?” உதிரனிடம் நட்சத்திரா கேட்க, அவளை பார்த்து விட்டு பதிலளிக்காமல் திரும்பிக் கொண்டான்.

நான் கேக்குறேன்ல்ல. “காது கேக்கலையா? செவிடா.. என்று உதிரனை வம்புக்கு இழுத்தாள்.

“செவிடா?” சிம்மா உதிரனை பார்க்க, அவன் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தான்.

“என்ன மச்சான்? ரித்து டென்சனாக்கி விட்டாளோ!” சிம்மா அவனருகே வந்து அமர்ந்தான்.

ஆமாப்பா, “அத்துவும் மாமாவும் சண்டை போட்டுக்கிட்டாங்க” என்றான் அர்சு.

“என்னப்பா பிரச்சனை?” பரிதி கேட்க, அவ விலகி போறது கஷ்டமா இருந்தது. “அதான் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு கேட்டேன்?”

“அவ என்ன சொன்னா?” அன்னம் ஆர்வமாக கேட்டார்.

“அழுதுகிட்டே அறைக்குள்ள போயிட்டா” என்றான் அவன்.

ஹம்..என்று அன்னம் பெருமூச்செடுத்து விட சுபிதனின் ஆன்மா ரித்திகாவிடம் பேச, வேகமாக வெளியே வந்தாள். அனைவரையும் பார்த்து விட்டு, அண்ணா..இங்க வா இன்று ரித்திகா பதட்டமாக அழைக்க, பரிதியும் “என்னாச்சும்மா?” எனக் கேட்டார்.

ஒன்றுமில்லை பெரியப்பா என்று சிம்மாவை அழைத்து சென்று, மாறன் “அண்ணா எங்க?” எனக் கேட்டாள். அவன் சித்துவை ஊருக்கு விட போயிருக்கான் என்றான் சிம்மா.

“நம்ம ஊர்ல தான் இருக்காரா?”

ஆமா, அங்க தான் இருக்கான். அண்ணா கோவில் பூசாரியை அழைச்சிட்டு வரச் சொல்லு. நாம ஒருத்தரை பார்க்க போகணும். வா…கார் வேண்டாம். பைக்கை எடு என்றாள். இருவரும் விரைந்தனர்.

“மாமா” என்று நட்சத்திரா வெளியே வந்தாள்.

“போன பிறகு என்ன தேடிட்டு இருக்க? சிம்மா தான அர்சுவோட அப்பா?” என்று உதிரன் கேட்க, இல்லண்ணா..ஆனால் எனக்கு போக போக சந்தேகமா இருக்கு என்று அவன் சென்ற வழியை பார்த்தாள்.

“வெளிய என்ன பண்றீங்க?” உள்ள வாங்க அன்னம் அழைக்க, இருவரும் உள்ளே சென்றனர். ரித்துவை வீட்டிற்கு அழைத்து வந்த அன்றே நட்சத்திராவிடம் மானசீகமாய் மன்னிப்பு கேட்டிருப்பான் உதிரன்.

அஜய் வீட்டிற்கு வீராவும், அஜய் அப்பாவும் சேர்ந்தே வந்திருந்தனர். தியாவும் அவர்களுடன் தயக்கத்துடன் நின்றாள். அஜய் அவளை பார்த்து, “உள்ள வா” என்று அழைத்தான்.

இல்ல தியா, “நீ உனக்கான இடத்தில் இருந்தால் போதும்” என்று வினித் அஜய்யை முறைத்துக் கொண்டே சொன்னான்.

“உள்ள வா”ன்னு சொன்னேன் என்று அஜய் கோபமாக கூற, வாம்மா என்று வீரா அவள் கையை இழுத்து கெஸ்ட் ஹவுஸ் பக்கம் நகர, “அங்கிள்” நான் அவளை எங்க வீட்ல தங்க சொல்லலை. இரவு உணவு முடித்து நீங்களே கூட அவளை கெஸ்ட் ஹவுஸிற்கு அழைச்சிட்டு போங்க என்றான்.

வினித் அஜய் அப்பாவை பார்க்க, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எல்லாரும் வாங்க. சாப்பிட்டு போகலாம் என்றார்.

நால்வரும் உள்ளே நுழைய மேலிருந்து கண்ணாடிப் பொருளை மேலிருந்து வீசி எறிந்தார் அஜய் அம்மா. அது நேராக தியா காலின் முன் வந்து விழுந்தது. அவள் பதறி அஜய் அப்பா கையை இறுக பற்றியவாறு நகர்ந்தாள்.

“மாம்” கத்தினான் அஜய்.

“ஏதோ ஒரு பொண்ணை எதுக்கு வீட்டுக்கு அழைச்சிட்டு வர்ற அஜய்?” உனக்கு எவ்வளவு சொல்லி சொல்லி வளர்த்தேன். “என் பேச்சை மீறி சென்றது மட்டுமல்லாமல் நம்ம வீட்டுக்குள்ளவே அழைச்சிட்டு வந்துருக்க?” என பைத்தியம் போல் கத்தினார்.

ஏம்மா, “வீட்டுக்கு வந்தவங்க முன்னால் இப்படி தான் நடந்து கொள்வாயா?” அஜய் அப்பா அவன் அம்மாவை அதட்ட அவரோ, “உங்களுக்கு நான் தான் என்றுமே முக்கியமில்லையே! இப்ப என் மகன் மனதையும் மாற்றி எனக்கு எதிராக மாத்திட்டீங்கல்ல?” என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்.

மாம், டாட் ஒன்றுமே சொல்லலை. நான் தான் இவங்களை அழைச்சிட்டு வந்திருக்கேன்.

“உனக்கு உன் அம்மா தேவையில்லைன்னா யாரை வேண்டுமானாலும் அழைச்சுக்கோ” என்று தேம்பிக் கொண்டே உள்ளே சென்றார்.

தியா வினித்தை பார்த்து “போகலாம்” என்று கண்ணால் சொல்ல, அவனும் புரிந்து கொண்டு தியா கையை பிடித்தான். இருவரும் நகரும் சமயம் இருவரையும் பார்த்த அஜய், “எங்க போறீங்க?” என்ற அவனது சினமிக்க குரல் இருவர் கையையும் பார்வையிட்டது.

வினித் தியா கையை இறுக பற்றினான். அவள் வினித்தை பார்த்து, “என்னடா பண்ற?” கையை விடு என்று அவன் காதருகே வந்து கிசுகிசுத்தாள்.

ஷ்..அமைதியா இரு என்றான் வினித்.

அஜய் அவர்களிடம் வர, அவன் அம்மாவோ வேண்டுமென்றே அவரது அழுகை சத்தத்தை அதிகரித்தார்.

டாட், அம்மாகிட்ட போய் என்னன்னு பாருங்களேன் அஜய் சொல்ல, என்னால முடியாது. அவளுக்கு திமிரு கூடி போயிருச்சு. அவ அழுதா அழட்டும். தேவையில்லாமல் பிரச்சனை செய்ய பார்க்கிறாள் என்று வினித்தை பார்த்து, அவ கிடக்கா. உள்ள வாப்பா என்றார்.

சாரி சார், நாங்க உங்க வீட்டிற்குள் வந்ததே உங்க மனைவிக்கு பிடிக்கலை. எங்களுக்கும் விருப்பமில்லை. வா..தியா, அப்பா என்று வினித் அழைக்க, தியா தங்க வேண்டிய ஹெஸ்ட் ஹவுஸ் சாவி என்னிடம் தான் இருக்கு. சாப்பிட்டு போங்க என்று அஜய் சொன்னான்.

சாரி பாஸ், உங்க அம்மாவை போல் இருப்பவர்களை நம்பி தியாவை இங்கே விட முடியாது. அதனால் நாங்க நாளை காலை நேராக ஆபிஸ் வந்துருவோம். அவள நான் என் பொறுப்புல்ல விடுதியில சேர்த்து விடுறேன் என்றான் வினித்.

“வினித்” அஜய் சத்தமிட, போங்க பாஸ் உங்க அம்மாவை கவனிங்க. வா..தியா என்று வினித் ஒரு புறமும் அவளை இழுக்க, அவள் மறுகையை பிடித்த அஜய்..”போகாத தியா” என்றனர்.

வா தியா.. வினித் இழுக்க, போகாத.. என அஜய்யும் அவளை இழுத்தான்.

இருவருமே விடுங்களேன்! என்று தியா அழுது கொண்டே அமர்ந்தாள். அஜய் அம்மா மெதுவாக அவர் அறையிலிருந்து புன்னகையுடன் எட்டி பார்த்தார். அஜய் அப்பா அவனை சுரண்டி அவன் அம்மாவை காட்டினார்.

அஜய் அவன் அம்மாவை முறைத்து விட்டு, “தியா அழாத” என்று சொல்ல, வினித் சிறிது சிந்திக்காமல் அவளை தூக்கினாள்.

கண்ணீருடன் வினித் செயலை பார்த்து பயந்து, “விடு வினித்” என அவனை அடித்தாள் தியா. அஜய் அவனை அடிக்க செல்ல வீரா அவன் முன் வந்தார்.

வினித் நிற்காமல் வெளியே சென்றான். கெஸ்ட் ஹவுஸின் வெளியே சில்வர் நிறத்தில் பெரிய ஊஞ்சல் ஒன்று இருந்தது. அவள் அடிப்பதை பொருட்படுத்தாமல் நேராக அங்கே வந்து அவளை அவ்வூஞ்சலில் அமர வைத்தான்.

தியாவின் அழுகை நின்று, ஆச்சர்யத்தில் கண்களை விரித்தாள். வினித் பின் சென்று அவ்வூஞ்சலை ஆட்ட, புன்னகையுடன் வினுவை பார்த்தாள். ஊஞ்சலை அவன் வேகமாக தள்ளவும் தியாவின் மொத்த கவலையும் சென்று முகத்தில் பளிச்சென்ற புன்னகை.

இதுவரை அஜய் பார்த்திராத தியாவின் முகம். அவளின் ஆனந்த கண்ணீருடன் வந்த புன்னகை கண்டு அஜய் அவனை தியாவினுள் தொலைத்தான்.

அவனுக்கும் இதுவரை கிடைக்காத பெரியதாக ஏதோ ஒன்று கிடைத்தது போல் இருந்தது.

வினு..போதும்..போதும். நீயும் வா என்று சிறுபிள்ளை போல் தியா வினித்திடம் கையை நீட்டினாள். அதை பொறுக்க முடியாத அஜய் அவளருகே சென்று அமர, அவனை எதிர்பார்க்காத தியா “இறங்குகிறேன்” என கீழே விழுந்தாள்.

அம்மாடி..பார்த்து என்று எல்லார் முன்னும் அஜய் அப்பா தியாவை தூக்கி விட்டு அவளது அடிப்பட்ட கையில் ஊதினார். அஜய் அதிர்ந்து தன் அப்பாவை பார்த்தான். வினித், வீரா மனதில் ஓர் மகிழ்ச்சி.

“ரொம்ப வலிக்குதாம்மா?”

இல்ல சார். “ஐ அம் ஓ.கே” என்று அவர் கண்ணீரை பார்த்து, “என்னாச்சு சார்?” கேட்டார்.

“உனக்கும் ஊஞ்சல் பிடிக்குமாம்மா?” அஜய் அப்பா கேட்க, ரொம்ப பிடிக்கும் சார். என் அம்மாவுக்கும் ரொம்ப பிடிக்கும். அம்மா இருந்த போது அப்பா, எங்களுக்காக வீட்ல சிறியதாக வாங்கினார். நானும் அம்மாவும் சேர்ந்து ஒருவழி செய்துட்டோம். அப்புறம் அதை பயன்படுத்த முடியாமல் போனது என்று கண்ணீரை கட்டுப்படுத்தி சொன்னாள்.

நீ உட்காரும்மா. நான் ஆட்டி விடுகிறேன் என்றார் அஜய் அப்பா.

அய்யோ சார், “நீங்களா?” வேண்டாம் சார். உங்க மனைவி பார்த்தாங்க. அவ்வளவு தான். வினித் என்னோட ப்ரெண்டு. அவனுக்கு என்னை பற்றி எல்லாம் தெரியும். அதான் நான்..என்று பேசிக் கொண்டே அவரை பார்த்தாள். அவர் கண்கள் கலங்கியது.

சார், “எதுக்கு?” அவள் கேட்க, அஜய் அவன் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஒரே ஒரு முறைம்மா” என்று அவர் கெஞ்சலாக கேட்க, அவளும் அமர்ந்தார். அவர் மனதில் சில ஓட்டங்களுடன் கண்கலங்கினாலும் புன்னகையுடன் அவளுக்கு ஆட்டி விட்டார்.

சார், “போதும்” அவள் சொல்ல, “போதும்டா” என்று வீரா அஜய் அப்பாவை தடுத்து அணைத்துக் கொண்டார்.

எல்லாரும் இருவரையும் பார்க்க, நடப்பதை சீற்றமுடன் அஜய் அம்மா அறையிலிருந்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

“அப்பா” வினித் சத்தமிட, வீரா நகர்ந்து தன் மகன் பக்கம் வந்து நின்றார்.

வினு, “எதுக்கு சத்தம் போடுற?” தியா கேட்டுக் கொண்டே காலை நொண்டி நடந்தாள்.

“என்னாச்சு தியா?” அஜய் அவளருகே வந்தான்.

“வா தியா” வினித் அழைக்க, வினு நான் இங்கேயே இருக்கேனே! ப்ளீஸ். நான் சார் வீட்டுக்கு நீயில்லாமல் போக மாட்டேன். “போதுமா?”

யாரும் உன் இடத்திற்கு வந்தால்..வினித் இழுக்க, “வந்தால் என்ன?” எல்லாரும் மனுசங்க தான. நான் பேசிப்பேன். “நாளை காலை என்னை பிக் அப் பண்ண வந்துருவியா? ரொம்ப வருடம் கழித்து நாம சேர்ந்து செல்லப் போகிறோம்ல்ல?” தியா உற்சாகத்தில் பேசிக் கொண்டே செல்ல, அஜய்க்கு தான் கடுப்பானது.

வா, “எங்களுடன் சாப்பிட்டு வந்து இங்கே தங்கிக்கோ” வினித் அழைக்க, வா போகலாம். அங்கிள் போகலாமா? என வீராவை பார்த்து கேட்டாள். “நானும் வாரேன்” என்று அஜய் சொல்ல, தியா அவனை ஒருமாதிரி பார்த்தாள்.

உங்களை போல் ஹை கிளாஸ் ஹோட்டலுக்கோ, ரெஸ்டாரண்டிற்க்கோ நாங்க போகலை. நாங்க உணவருந்த செல்லும் இடம் உங்க ஸ்டேட்டஸ்க்கு வராது பாஸ். நீங்க கேட்டா தான் உங்க மாம் உலகத்தையே கைக்கு கொண்டு வந்து கொடுப்பாங்களே! நாங்க கிளம்புகிறோம் என்று வினித் அவனிடம் நக்கலாக “பை பாஸ்” என்று தியா மற்றும் அவன் அப்பாவுடன் வெளியேறினான்.

சாப்பிட்டு வந்த வினித் அலைபேசியில் அஜய்யை வெளியே வர வைத்தான். சாவியை வாங்கி அவளது பையை உள்ளே வைத்தான் வினித். அஜய்யும் அவர்களுடன் வந்தான்.

அங்கிள் நீங்க கிளம்புங்க. ரொம்ப நேரமாகுது. “வினித் கிளம்பு” என்று தியா அவனை பிடித்து தள்ள, “எதுக்கு இப்படி வெளிய தள்ளுற?”

அய்யோ, கிளம்புங்க. காரணம் என்னால சொல்ல முடியாது. ப்ளீஸ் என்றாள்.

சரிம்மா, கவனமா இரு. இரவில் கதவை திறந்து வெளிய வராத. மாலையில் நாம உனக்கு தேவையான பொருட்களை வாங்கலாம் என்றார்.

அங்கிள், “எங்க வீட்ல நான் சொல்ற பொருட்களை மட்டும் கொண்டு வர்றீங்களா?” என தன் டாப்பை இழுத்து விட்டுக் கொண்டே கேட்டாள்.

“என்ன செய்ற?” வினித் தியா அருகே செல்ல, அவனை பிடித்து இழுத்த வீரா..முதல்ல உன்னோட வேலைய பாரும்மா. அப்புறம் மத்ததை பார்த்துக்கலாம் என்றார்.

“அப்பா” வினித் அழைக்க, பொம்பள புள்ள, ”யோசிக்காம உள்ள போகாத” என்றார்.

ஹலோ, “பாஸ் நீங்க கிளம்பலையா?” அஜய்யை முறைத்துக் கொண்டே வினித் கேட்க, “போறேன்” என்று இருவரையும் பார்த்துக் கொண்டே சென்றான். அனைவரும் கிளம்ப, குளித்து விட்டு பால்கனியை திறந்து தலையை துவட்டியவாறு கண்ணீருடன் வெந்நிலவை வெறித்துக் கொண்டிருந்தாள் தியா  தங்கப்பதுமையாக. அஜய் அவனறையிலிருந்தவாறு அவளை ரசித்து பார்த்தான்.

புரண்டு புரண்டு படுத்து தன் பெற்றோர் நினைவு தியாவை வாட்ட, அவளது அலைபேசியில் பாடல் ஒன்றை ஒலிக்க விட்டு அழுது கொண்டிருந்தாள். பாடலை கேட்ட அஜய் அம்மா..ச்சே..என்று முகத்தை திருப்ப, அஜய் அப்பாவோ கண்ணீருடன் தியா இருக்கும் இடம் வந்து அதனை கண்கலங்க கேட்டுக் கொண்டிருந்தார்.

அஜய் அவன் அப்பாவை கீழே பார்த்து அவனும் வந்தான். உருக்கமான அக்குரலை கேட்டு அவனும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தான். இடையிடையே வந்த தியாவின் அழுகையும் அவனை வலிக்க செய்தது.

“என் கண்ணே! கண்ணின் மணியே!

நீயின்றி நானில்லை

கருவாய் உனை காத்து

என்னுள் புதைத்து பாதுகாப்பேனேடி..

உன் பிஞ்சு விரல்கள் பிடிக்க

என் வேதனை அனைத்தும்

தீரும் இடமாய் உணர்ந்தேனடி..

என் கண்ணே! கண்ணின் மணியே!”

என வரிகள் மேலும் நீண்டு மனதை வருடும் தாயின் பாச வரிகள் யாவரையும் மெய் தீண்ட செய்யுமளவிற்கு இருந்தது.

அழுது கொண்டே தியா உறங்கி விட, அஜய் அப்பாவோ தன் மகனை பார்த்து கண்ணீருடன் மறைந்திருந்தார். அவன் செல்லவும் அவர் வெளியே வந்து தியா அறையை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். மேலிருந்து அஜய் அவரை வித்தியாசமாக பார்த்தான்.

“சிடுமூஞ்சி டாட்டா இவர்?” என மனதினுள் எண்ணினான் அவன். “அவரின் நிலையை அறிவானோ அஜய்?”

விக்ரம் மிருளாலினி பெற்றோரை சம்மதிக்க வைத்தான். இரவு ஏழு மணிக்கே உணவை முடித்து விட்டு சுவாதி, ரசிகா, மிருளாலினி பெற்றோர் அங்கிருந்து அவர்கள் ஏற்பாடு செய்து வைத்த எதிர் வீட்டிற்கு சென்று விட்டனர். விக்ரம் வெளியே அமர்ந்திருந்தான். மிருளாலினி பயத்தில் தமிழினியனை விட்டு அகலவே இல்லை.

மிருளா ஒன்றுமாகாது. விக்ரம் ஏற்பாடு செஞ்சிருக்கார் என்று தமிழினியன் சாதாரணமாக சொல்ல, அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “அவனுக்கு ஏதாவது ஆகி விடுமோ?” என்று அவள் மிகவும் பயந்தாள்.

மாறன் சில குருக்களுடன் அங்கே வந்தான். அவர்கள் நேராக விக்ரமை நோக்கி வந்தனர்.

நாங்களும் அவனை பற்றி அறிந்து தான் வந்திருக்கோம். இப்பொழுதைக்கு அவனை முடிந்த அளவு தடுக்கலாம். அவனை அழிப்பது யாராலும் முடியாத காரியம் என்றார் ஒருவர்.

இல்ல, அவனை அழிக்கலாம். ஆனால் அது சாதாரணமில்லை. அவன் அழிக்க நினைக்கும் மூன்று பொண்ணுங்க தான் வைத்து அவனை அழிக்கணும். மற்ற யாராலும் ஏன் இவனுக்கு சாபமளித்த சம்பூவால் கூட அவனை அழிக்க முடியாது.

“ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே”

பெண்களால் மாறிய அவன் மனதின் வக்கிரம் ஓர் பெண்ணால் அழிந்தான். ஆனால் அவன் ஆத்மா சம்பூ கூறிய கடைசி விசயத்தில் கண்ணாக..அதாவது அந்த சம்பூவை அடைய தான் காத்துக் கொண்டிருக்கிறது.

என்ன? அப்ப அந்த சம்பூ சாகலையா? விக்ரம் கேட்க, சம்பூ மட்டுமல்ல எல்லாரும் இறந்து விட்டனர். ஆனால் எப்படி இந்த பொண்ணுங்க உண்மையோ? அதே போல் சம்பூவும் ஏன் மித்தலையாரும் கூட மனித உருவில் பிறந்து இருக்கலாம்.

பத்தாயிரம் வருடங்களுக்கு முன் சாவான் மித்தலையாரின் மனைவியாக தான் சம்பூவை பார்த்தான். ஆனாலும் அவள் அழகில் மயங்கி தான் அனைத்தும் நடந்தேறியது.

ஆத்மாவாகிய பின் அவன் வரத்தில் முதலாவதாக கேட்ட விசயம்..சம்பூ கன்னித்தன்மையுடனும் யாருடைய மனைவியாகவும் இருக்கக் கூடாது என்று தான் கேட்டதாக வரலாறு சொல்லப்படுது.

இந்த ஊரில் கூட அந்த பொண்ணு இருக்க வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்கணும். அவனை அழிப்பதை பற்றி பின் சிந்திக்கலாம். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் அவன் தொந்தரவு இருக்காது. அதுவரை நாம் சமாளித்தாக வேண்டும். ஆட்கள் நடமாட்டம் இவ்வாறு இருந்தால் இந்த ஊரே அழியும் நிலை கூட ஏற்படலாம் என்றார் ஒருவர்.

குருக்கள் தாங்கள் அழைத்து வந்திருக்கும் ஆட்களை பார்க்க, அவர்கள் அவனை தடுக்க பூஜை செய்ய ஆரம்பித்தனர்.

சீடர்களே! என்ன நடந்தாலும் நாம் நடத்தும் பூஜையிலிருந்து யாரும் எழக் கூடாது. நெருப்பை உருவாக்கும் மந்திரமோ, செயலோ செய்யவே கூடாது. அவன் சக்தியே நெருப்பு தான்.

“முதல்ல மக்கள் யாரும் வெளியே வர விடாமல் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று குருக்கள் விக்ரமிடம் சொல்ல, அவன் அவ்வூரின் போலீஸாரிடம் பேசி பாதுகாப்பு போட்டான். அவர்களிடம் அவன் கூறிய காரணம் கொள்ளைக்கார கும்பல் தப்பியதாக கூறி அவர்களை பாதுகாப்பிற்கு நிறுத்தி, மக்களை வீட்டிற்குள்ளே அடைந்து இருக்கும்படி செய்தான்.

மாறா, “இந்தா இதை வீட்டின் வாயிலில் கட்டி விடு” என்று சில மந்திரங்களை சொல்லிக் கொண்டே அனைத்து குருக்களும் கை வைத்து ஜெபித்த தாயத்து ஒன்றை அவரிடம் கொடுத்தார். அவன் ஏறி கட்டிக் கொண்டிருந்த சமயம், அனைவர் உடலும் எறியும் வண்ணம் உஷ்ணம் பரவியது. சீற்றமுடன் நடந்து வந்தது சாவான் என்ற அரக்கனின் ஆத்மா.

பேசிக் கொண்டிருப்பவனை முழுதாக பேச விடாமல், “சீக்கிரம் அதை அனுப்பு” சுவாதி பரபரக்க அலைபேசியில் உரையாடியவாறு ஜன்னலை திறந்தாள். அவ்வரக்கனின் கண்கள் நேராக அவள் மீது பதிந்து, “என் ஆசை சம்பூ..” என்றது. அவள் விக்கித்து அப்படியே நிற்க, ரசிகா சுவாதியை பார்த்துக் கொண்டு,

“சம்பூவா? என்னடி உன்னை பார்த்து சொல்லுது” என்று அதிர்ந்தாள். அந்த பக்கம் பேசுபவன் பேச்சு இருவர் காதுக்கும் எட்டவில்லை.

ஆம், “அந்த அரக்கனை கொன்ற சம்பூ அரக்கி நம் மானூட அழகியான சுவாதியே!”

சுவா..ஒன்றுமில்லை, ரசிகா அவளை அணைத்து தேற்ற, நினைவுக்கு வந்த சுவாதி வேகமாக அலைபேசியை எடுத்தாள்.

இப்பொழுது தான் நண்பர்களிடம் சாவான் பற்றி கதையா சுவாதியும் ரசிகாவும் பேசினார்கள். அப்படின்னா..”அந்த சம்பூ அரக்க தலைவனான மித்தலையாரை காதலித்து மணந்து இருக்கிறாரோ?” என்று பேச்சு அடிபட, நண்பர்களிடம் சுவாதி ஆர்வமாக, அந்த சம்பூவின் காதல் கதையை இப்பவே தேடிப் பாருங்க என்று சொல்லி இருப்பாள்.

நிறைய மெசேஜை பார்த்து பதட்டமாக அதை எடுத்து பார்த்த இருவருக்கும் அதிர்ச்சி.

சம்பூ..அப்படியே சுவாதி போல் அரக்கி உடையிலும், மித்தலையார் விக்ரம் போலும், தமிழினியனும் அவன் தம்பிகளும் சேவர்கள் போலும் இருக்க, “அடியேய் என்ன இது?” உன்னோட மொத்த குடும்பமும் என்று சொல்ல வந்த ரசிகா வாயடைத்து அவளும் அதில் இருப்பதை பார்த்து பேச்சு திணறி அமர்ந்தாள்.

ரசி, இங்க பாரு. இதுல சிம்மா மாமாவும், உதிரன் சாரும் தான் இல்லை. அண்ணிகளும் இருக்காங்க என காட்டினாள் சுவாதி.

மித்தலையாரின் அம்மா, அப்பாவாக அன்னம் பரிதியும், தங்கைகளாக ரித்திகாவும், மிருளாலியும் இருந்தனர். மித்தலையாரின் நாத்தனாக்கள் வரிசையில் ரசிகா, தமிழினியன் அத்தை பொண்ணுங்க, நட்சத்திராவும் இருந்தாள். இருவரும் மூச்சு வாங்க அமர்ந்தனர்.

சுவாதி நினைவு வந்தவளாக, “ஏய் உன்னோட அண்ணா இப்ப அங்க தான இருப்பார்” என்று ஓடி வந்து சன்னல் வழியாக சுவாதி பார்த்தாள். இருவருக்கும் விக்ரம் தெரியவில்லை.

“என்னோட அண்ணாவை லவ் பண்றீயா?” ரசிகா கேட்க, “இப்ப முக்கியம் பாரு” என்ற சுவாதி, “விக்ரமை மட்டும் அது பார்த்துச்சு கொல்லாம விடாது” என்று பதறினாள்.

“சம்பூவுக்காக தான மித்தலையாரை அது கொன்றது?” அதான் சம்பூ நீ இங்கே இருக்கேல்ல.

அய்யோ, அது முடிந்த விசயம். கொஞ்சம் சிந்தித்து பாரு. அந்த சாவான் முதல் முதலாக திருமணம் பற்றி பேசிய போது தடுத்தது யார்? சாவானின் வன்மமே மித்தலையாரிடமிருந்து தான் தொடங்கியது. அப்ப அது அவரை பார்த்தால் கொல்லாமல் விடாது. வா..என்று சுவாதி ரசிகாவை மிருளாலினி பெற்றோர் இருக்கும் அறைக்கு வந்து அவர்களுடன் பார்க்க, நேராக வீட்டை நோக்கி சென்ற சாவான் அதன் பெரிய உருவத்தை சிறிதாக்கி வீட்டை தொட முற்பட, அதன் முன் வந்தது சுபிதனின் ஆன்மா.

“யார் நீ? எதுக்கு என்னை தடுக்குற?” என்று சாவான் கத்த, சுபியின் ஆன்மா ஏதும் பேசாது அவனது சக்தியான கருங்காற்றை ஊத சாவான் தள்ளி சென்று நின்றான். விக்ரம் அதிர்ந்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதோ இருக்கார்டி,” உன்னோட அண்ணாவுக்கு சீக்கிரம் கால் பண்ணு” என்று சுவாதி சொல்ல, என்னாச்சும்மா? மிருளாலினி அப்பா கேட்க, அவளது அலைபேசியில் இருந்த மித்தலையார்- சம்பூவின் காதலை படமாக அனுப்பியதை பார்த்து அதிர்ந்தனர் பெற்றோர் இருவரும்.

“என்னம்மா இது?” அவர் கேட்க, அங்கிள் இதை பற்றி பொறுமையா பேசிக்கலாம் என்ற சுவாதி பேசுடி என்று சத்தமிட்டாள். ரசிகா பேச முடியாமல் அழ, விக்ரம் தன் தங்கை அழுவதை கேட்டுக் கொண்டு அவர்கள் இருக்கும் வீட்டை பார்த்தான்.

அவனை அவ்விடம் விட்டு செல்ல சொல்லி சுவாதி கையசைத்தாள். அவன் புரியாமல் விழிக்க, ரசிகாவிடமிருந்து அலைபேசியை பிடுங்கி, அந்த அரக்கன் உங்களை பார்க்கக் கூடாது. நீங்க அங்க இருக்காதீங்க என்று கண்ணீருடன் சொன்னாள்.

“எதுக்கு?” எனக்கு ஒன்றுமாகாது அவன் சொல்ல, “அய்யோ..அந்த கதையில வந்த மித்தலையாரே நீங்க தான் போயிருங்க” என்று சுவாதி அழுது கொண்டே கத்தினாள். அவ்விடம் அமைதியாக விக்ரம் அதிர்ச்சியுடன் அவளை பார்க்க, அதே நேரம் மித்தலையார் பெயரை கேட்டவுடன் அந்த ராட்சச அரக்கன் சாவான் சுவாதியை பார்த்தான்.

அவள் விக்ரமை பார்ப்பதை பார்த்து “மித்தலையாரா? என் தலைவரா?” என்று விக்ரமிடம் அது பழைய அரக்க உருவத்தில் மாறி நகர, “விக்ரம் ஓடிருங்க” என்று சுவாதியும் ரசிகாவும் கத்த, மிருளாலினி பெற்றோரோ..தம்பி…நேரா நம்ம காளியாத்தா கோவிலுக்குள்ள போங்க என்று கத்தினர்.

“நானில்லை” என்று விக்ரம் சுவாதியையும் அதையும் பார்த்துக் கொண்டே நிற்க, ரசிகாவும் சுவாதியும் வெளியே வந்தனர். ரசி, “நீ உள்ள போ”. என்னால ஆரம்பித்த பிரச்சனை தான என்று சுவாதி வேகமாக விக்ரமை நோக்கி ஓட, அதற்குள் அவ்வரக்கன் விக்ரமை அடிக்க தரையோட தள்ளி சென்று விழுந்தான் அவன்.

விக்ரம்..என்று அழுது கொண்டே சுவாதி அவனிடம் வந்தாள். அவளை பார்த்த அரக்கனோ “என் ஆசை சம்பூ” என்று சொல்ல, தலையில் அடிப்பட்டு இரத்தத்துடன் இருந்த விக்ரம் “சம்பூவா?” என்று சுவாதியை பார்த்தான்.

“விக்ரம் வாங்க” என்று அவன் கையை பிடித்து சுவாதி இழுக்க, அரக்கனின் மூர்க்கத்தனமான “சம்பூ” என்ற வெறித்தனமான சத்தம் அனைவர் காதையும் எட்ட, மாறன் அதிர்ந்தான். தமிழினியனும் மிருளாலினியும் வெளியே எட்டி பார்த்தனர்.

மீண்டும் வெறியுடன் விக்ரமை அது தாக்க, “விக்ரம்” என்று தமிழ் சத்தமிட்டான். “என்ன நடக்குது?” புரியாமல் அனைவரும் பார்க்க, விக்ரமை சுவாதி தன் பக்கம் இழுக்க, அவன் மீதே அவள் விழுந்தான். அதன் கோபம் அதிகரித்து வாயை திறக்க, அவர்கள் முன் சுபி வந்து காற்றை செலுத்தினான். அக்காற்று அரக்கன் மீது பட்டும் ஏதும் ஆகாமல் சுபியுடன் சண்டையிட ஒரு கட்டத்தில் சுபியின் ஆன்மாவை அடித்து தூக்கியது.

சுபியின் ஆன்மாவையும், அரக்கனின் ஆத்மாவையும் அனைவரும் பார்த்தனர். சுபி பேசுவது யாருக்கும் கேட்கவில்லை. ஆனால் அரக்கனின் குரல் கனீரென ஒலித்தது.

விக்ரம், “வாங்க” என்று சுவாதி பதற, அவனும் எழுந்தான். அவனை சுவாதி இழுத்துக் கொண்டு “அண்ணா, எங்களுக்கு ஏதும் ஆகாது. நடக்க வேண்டியது நடந்தே ஆகணும்” என்று கத்திக் கொண்டே ஓடினாள். ஆக்ரோசமாக அது இருவரையும் விரட்டியது.

குறுக்கு வழியில் வந்த மாறன், இதை இருவரும் கையில கட்டிக்கோங்க. அம்மன் தாயத்து என்று தூரமிருந்து தூக்கி எறிய விக்ரம் அதை பிடித்தான். சுவாதி தவற விட்டு விக்ரம் “நீங்க ஓடுங்க” என்று அவள் தேட, அவளை நெருங்கிய அரக்கனின் ஆத்மா, “சம்பூ..உன் கணவனை கொல்லாமல் விட மாட்டேன்” என்றது.

தேடுவதை நிறுத்திய அவள் கல்லை எடுத்து அதன் மேல் எறிய, அது அதன் உடலில் நுழைந்து மறுபக்கம் சென்று விழுந்தது.

அவர் ஒன்றும் என் கணவன் இல்லை. நான் சம்புவும் இல்லை. அவர் மித்தலையாரும் இல்லை. நாங்க மனிதர்கள். நான் ஒன்றும் சம்பூ அரக்கி இல்லை என்று அதனை எதிர்த்து கத்த, “லூசாடி நீ அதுகிட்ட பேசிட்டு இருக்க?” விக்ரம் கத்தினான்.

விக்ரமை விரட்டுவதை நிறுத்தி தன் உடலை சுருக்கி அவளுக்கு இணையாக வைத்து சுவாதியை நெருங்கி, அவளை தொட வந்தது.

நோ..விக்ரம் கத்த, அவனை பார்த்து விட்டு அவளை தொட தள்ளி சென்று நின்றது. கண்களை மூடி நின்ற சுவாதி மெதுவாக கண்களை பிரிக்க,” நீ என் ஆசை சம்பூ தான்” என்று அவளை சுற்றி அவள் மேனியை தூரமிருந்தே முகர்ந்தது. அதன் செய்கை சுவாதிக்கு அருவருப்பை தந்தது. அவள் முகம் சுளித்தாள்.

“விக்ரம் போங்க” என்று அவள் சொல்ல, வேகமாக அவனருகே அது வருவதற்குள் சொன்ன நிமிடம் ஓடிய சுவாதி விக்ரம் கையை பிடித்து மீண்டும் ஓடினாள். ஊரே அவர்களை பார்த்து திகைத்து இருந்தனர்.

மிருளாலினி பெற்றோர் சொன்ன கோவிலுக்கு வரவும் விக்ரமை உள்ளே சுவாதி இழுத்து சென்று அதனை கவனித்தாள். சாவானால் உள்ளே வர முடியவில்லை.

விக்ரம் தலையில் இரத்தத்தை பார்த்து அவனை அணைத்து கதறி அழுதாள். அவள் இதயத்தின் அதிகப்படியான துடிப்பு விக்ரமை உணர வைத்தது. அவனும் அவளை அணைத்துக் கொண்டிருந்தான்.

சாவான் வெளியே இருந்து நெருப்பை உமிழ, அது இம்மியும் கோவிலுக்குள் செல்லவில்லை.

சுவாதி, “நீ சொன்னது உண்மையா?” என அவளை அணைத்தவாரே விக்ரம் கேட்க, ஆமா..என்று அழுது கொண்டே மித்தலையார்- சம்பூவின் காதல் கதையை கூறத் தொடங்கினாள். இவர்களை நெருங்க முடியாமல் சாவான் சென்றது.

விக்ரமிற்கு அங்கிருந்த திரையை கிழித்து தலையில் கட்டுப் போட்டுக் கொண்டே அவளது அலைபேசியை அவனிடம் அந்த படத்தை காட்டி கதையை கூறினாள்.

சம்பூ தான் முதலில் மித்தலையாரை காதலித்தாள். அவரை அவள் முதல் முறையாக ஓர் போர்க்களத்தில் வாளுடன் பார்த்து இருப்பாள். அவரின் கன்னியமான தோற்றமும், அவரின் வாள் வீச்சும் அவளுக்கு பிடித்திருந்திருக்கும். காதல்வயப்பட்ட அவள் அடிக்கடி அவரை அறியாமல் கள்ளத்தனமாக பார்த்து வந்தாள். அவரின் தங்கையுடன் நட்பாகிக் கொண்டு அவரை நெருங்க முயற்சித்தாள். ஏதாவது தடங்கல் உருவாகிக் கொண்டே இருந்தது. சம்பூ எதிர்பார்க்காத சமயத்தில் இருவரும் சந்தித்தனர். அவளால் காதலை கூற முடியவில்லை.

சம்பூவை பார்த்தவுடனே மித்தலையார் அவள் மீது காதல் வசப்பட்டு விட்டார். இருவரும் பேச ஆரம்பித்து தன் பெற்றோரின் மூலம் திருமணம் செய்து கொண்டனர்.

சாவான் போல் இருக்கும் சேவகன் ஒருவன் கூட மித்தலையார், நாத்தனாருடன் உல்லாசமாக இருக்கிறார் என்று சொன்னது மித்தலையார் சேவகனிடம் கூறப்பட்ட பொய். “சம்பூவை பார்த்து சாவான் மயங்கி விடுவானோ?” என்று தான் சம்பூவை சாவான் முன் மித்தலையார் கொண்டு வரவில்லை.

அன்றைய சமயத்தில் வேறு வழியில்லாமல் தான் சம்பூவை மித்தலையாரின் அரண்மனைக்கு அவர் அழைத்து சென்றார். ஆனால் அனைத்தும் தவறாக முடிந்து விட்டது என சுவாதி விக்ரமிடம் கூறிக் கொண்டே அவனை பார்த்தாள். அவன் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எதுக்கு சிரிக்கிறீங்க?”

இல்லை, இந்த புகைப்படத்தில் இருக்கும் சம்பூ தலையில் இருக்கும் கிரீடத்தை எப்படி இந்த குட்டி தலை தாங்கியது என சுவாதி தலையை அழுத்தினான்.

நான் ஒன்றும் அரக்கி இல்லை. எதையும் தாங்க என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.

“நீ ஏதாவது சொல்லணும்ன்னா சொல்லலாம்” என்று விக்ரம் கேட்க, “என்ன?” என்று அவனை பார்த்தாள்.

அந்த மித்தலையார் சம்பூவை பார்த்ததும் மயங்கி இருக்கலாம். அதனால் அவர் காதலை சம்பூவிடம் கூறி இருப்பார். ஆனால் இங்க அப்படி நடக்க வாய்ப்பேயில்லை. சம்பூ சொல்லலைன்னா மித்தலையார் கிளம்பி போய்க் கொண்டே இருப்பான் என்றான் விக்ரம்.

சுவாதி தயக்கமுடன் விக்ரமை பார்த்து விட்டு தலைகவிழ்ந்தாள்.

அடேங்கப்பா, “வாயாடிக்கெல்லாம் வெட்கம் வருமா?” விக்ரம் புன்னகைக்க, “போடா” என்று சுவாதி எழுந்தாள்.

“ஏன் சொல்ல மாட்டீங்களோ?” விக்ரம் கேட்க, “விக்ரம் சார் நான் சொல்லாமலே புரிஞ்சுக்கிட்டாரே! அப்புறம் என்னவாம்?”

“சொல்லவில்லை என்றால் கிளம்ப வேண்டியது தான்” என்று விக்ரம் எழுந்தான். “விக்ரம்” என்று சுவாதி அவனை அணைத்துக் கொண்டாள்.

ப்ளீஸ், போகாதீங்க விக்ரம். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நான் உங்களை முன்னதாகவே பார்த்து இருக்கேன். எங்க கல்லூரி பக்கம் நடந்த சூட் அவுட்டில் தான் பார்த்தேன். ரசி தான் உங்களை அவள் அண்ணனாக அறிமுகப்படுத்தினாள். காதல் இல்லை. ஆனால் உங்களை பார்த்ததும் சந்தோசமா இருந்தது.

கல்லுரிக்கு செல்லும் போதோ இல்லை விட்டு வரும் போதோ உங்களை அடிக்கடி சந்திக்க நேரிட்டது. கொஞ்ச கொஞ்சமாக உங்களை பிடித்தது.

என் அண்ணா வீட்டுக்கு நீங்க வருவீங்கன்னு நான் நினைக்கவேயில்லை என்று சுவாதி அவனை பார்க்க, சொல்ல வேண்டியதையே சொல்லலை என்றான்.

உங்களை பிடிக்கும்ன்னு சொன்னேன்ல்ல.

“பிடிக்குமா?” பல பேர் அப்படி தான் சொல்வாங்க. அதுக்காக என்று அவன் நிறுத்தினான்.

“பல பேர் சொல்வாங்களா? யார் சொன்னாங்க?” சுவாதி கோபமாக அவனிடம் கேட்டாள்.

“உன்னோட அத்தை பொண்ணுங்களே என் காதில் விழும் படி பேசுனாங்க” என்று விக்ரம் சிரிக்க, “அவளுகளா சொன்னாளுக?” இருங்க என்று அவள் அலைபேசியை எடுக்க, அவளை இழுத்து அணைத்த விக்ரம், “இவ்வளவு பொறாமை படும் அளவுக்கு என்னை பிடிக்குமா?” என தாழ்ந்த குரலில் கேட்டான்.

அவனை விலக்கி சுவாதி பார்க்க விக்ரம் கண்கலங்கி இருந்தான்.

“நான் சொல்லலைன்னா இப்படி கலங்கி இருக்கீங்க?” சுவாதி கேட்க, அவன் மௌனம் காத்தான்.

“ஐ லவ் யூ விக்ரம்” என்று சுவாதி அவனை அணைத்தாள். விக்ரம் உடல் குலுங்க அழுதான்.