Advertisement

எங்கே எந்தன் இதயம் 02

 அந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்த பூங்காவில் அமர்ந்திருந்தான் சக்திவேல். கவிதை மொழி வேண்டுமென்றால், தொட்டு விடும் தூரத்தில் அமர்ந்திருந்தது அவன் சொர்க்கம். ஆனால், அவனை ஏறிட்டுக் கூட பாராமல் முகம் திருப்பிக் கொண்டிருந்தது.

மின்தூக்கியில் அருகருகில் நின்றபோதும் சரி. இங்கே வந்து அமர்ந்த பின்பும் சரி. இன்னும் ஒருமுறைக்கூட சக்திவேலனின் கண்களை சந்திக்கவே இல்லை வேதவள்ளி.

இதோ இப்போதும் தன் பிள்ளை மட்டுமே பிடிமானம் என்பதுபோல், மகளை கையில் பிடித்துக்கொண்டு அவள் அமர்ந்திருக்க, அவளுக்கு சற்று தள்ளி இருந்த இருக்கையில் அவள் முகம் பார்க்கும்படி அமர்ந்திருந்தான் சக்திவேல்.

பத்து நிமிடங்கள் இருபது நிமிடங்களாக நீண்ட பின்பும் இந்த நிலை தொடர, வேதவள்ளிக்கு அதற்குமேல் பொறுமை இல்லை. மூன்றாண்டுகளாக அவள் கண்ட காயமும், அதன் வலியும் அவளை உந்தியதோ என்னவோ

அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து கணவனை நெருங்கியவள், கையில் இருந்த பிள்ளையை கணவனிடம் நீட்டினாள். சக்திவேல் ஒன்றும் புரியாமல் எழுந்து நின்றுவிட, அவனை ஏளனமாகப் பார்த்து, “உங்க வாரிசு. தாராளமா நீங்க தூக்கிட்டுப் போகலாம். நான் எப்பவும் உரிமை கொண்டாடி வர மாட்டேன்.” என்றாள்.

அவள் பேச்சில் முணுக்கென கோபம் கொண்டவனாக அழுத தன் மகளை கை நீட்டி வாங்கி கொண்டான் சக்திவேல். அவன் செயலில் இப்போது வேதவள்ளி அதிர்ந்து போக, அலட்டிக்கொள்ளாமல் மகளை தன் நெஞ்சோடு அணைத்தபடி பிடித்துக் கொண்டான் கணவன்.

அழும் பிள்ளையிடம் தனது அலைபேசியை நீட்டி அவன் விளையாட்டு காண்பிக்க, அழுகையை மறந்து அலைபேசியை கையை நீட்டி வாங்கிக்கொண்டாள் மகள். இப்போது அன்னையின் பார்வை தவிப்புடன் மகள் மீது படிய, “அப்புறம் என்ன? அதுதான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாச்சே.” என்றவன், ‘கிளம்புஎன்பதாக தலையசைக்க, கண்ணீரை அடக்கியபடி அவனைக் கடந்து சென்றாள் மனைவி.

அவளது கண்ணீர் எதிரில் இருந்தவனை ஏதோ செய்ய, “ஏய் நில்லு.” என்றான் அதட்டலாக.

எப்போதும் அவனது அந்த குரலை மீறி பழக்கம் இல்லாதவள் தான் வேதவள்ளி. மூன்றாண்டுகள் மொத்தமாக அத்தனையையும் மாற்றிப் போட்டிருக்க, காது கேளாதவள் போல் தன் வழியில் நடந்தாள் அவள்.

சக்திவேல் இரண்டே எட்டில் அவளைப் பிடித்து நிறுத்திட, இப்போது கண்ணீர் காணாமல் போயிருந்தது. அவன் பிடியில் இருந்த தன் கையை விடுவிக்க முயன்று தோற்றுப் போனவள் அசையாமல் நின்று கொள்ள, தன் கையிலிருந்த பிள்ளையை அவளிடம் நீட்டினான் சக்திவேல்.

வேதவள்ளி அப்போதும் அசையாமல் நிற்க, பிள்ளையை மொத்தமாக அவள் மீது சாய்த்தவன் தனது கையால் அவளையும் மிக லேசாக உரசிவிட, வேகமாக பின்னால் நகர்ந்து கொள்ள முயன்றாள் அவள்.

ஆனால், சக்திவேல் தான் அவளை அசையாதபடி பிடித்திருந்தானே. வேதவள்ளி அவன் செயலில் கோபம் கொண்டு அவன் முகம் காண, சக்திவேலின் பிடி இறுகியது.

அவன் தொடுகையை ஏற்கவும் முடியாமல், விலக்கவும் மனம் வராமல் நிற்கும் தனது நிலையை அறவே வெறுத்தவள் எதிரில் இருந்தவனை குத்திக் கிழித்துவிட முயன்றாள்.

ஏன் இந்தமுறை ஆம்பளைப் பிள்ளையை பெத்துட்டு வர சொல்லி அனுப்பி வச்சிருக்காங்களா உங்க அம்மாவும், மாமாவும். நீங்கதான் அவங்க பேச்சை மீறவே மாட்டீங்களே?” என்ற வேதவள்ளியின் வார்த்தைகள் சக்திவேலனை சரியாக தாக்கிட

இதை விடவே மாட்டியா நீ? என் பொண்டாட்டியை தானே நான் தொட்டேன். ரோட்ல போற எவளோ ஒருத்தியை ரேப் பண்ணல இல்ல?” என்று தானும் கத்தினான் கணவன்.

பொண்டாட்டியா இருந்தா ரேப் பண்ணலாமா? இந்தியன் பீனல் கோர்ட்ல அதற்கு அனுமதி கொடுத்திருக்காங்களா?” 

வாய்க்கு வந்ததை பேசி, வீணா அடி வாங்காத

அடிக்கிறதும், மிரட்டுறதும் உங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்.” என்று அலட்சியமாக உதட்டைப் பிதுக்கினாள் வேதவள்ளி.

அப்படி எத்தனை முறை உன்னை அடிச்சிருக்கேன்? நான் மிரட்டணும்னு முடிவு செஞ்சிருந்தா, நீ இங்கே இப்படி இருந்திருக்க மாட்ட. நிதானமா யோசிச்சுப் பாருஎன்றவனை அவளால் மறுக்க முடியாதே.

நீ கேட்டது மொத்தத்தையும் உனக்கு நான் கொடுத்திருக்கேன்.” என்று அழுத்தம் திருத்தமாக சக்திவேல் பேச, அவன் கையில் இருந்த பிள்ளையின் மீது பதிந்தது வேதவள்ளியின் பார்வை.

சூழ்நிலை தப்பா இருக்கலாம். ஆனா, நமக்குள்ள நடந்தது தப்பில்ல. என் மகளை என் தவறுக்கான அடையாளமா காட்டாத வள்ளி.” என்ற சக்திவேலனின் குரல் எச்சரிக்கையாக ஒலிக்க,

உங்களோட எந்த தப்புக்கும் என் குழந்தை பொறுப்பாகாது. அவ என்னோட மக.” என்றவள் மகளை கையில் வாங்க முற்பட

அதுதான் அவளை வேண்டாம்னு சொல்லிட்டியே. அப்புறம் ஏன் உன்கிட்ட கொடுக்கணும்?” என்று முரண்டினான் கணவன்.

உங்களுக்கு எப்போதுமே இது வழக்கம் தான் இல்லையா. எல்லாத்தையும் கொடுத்து மொத்தமா பிடுங்கிக்கிறது?” 

கொடுத்ததை திரும்ப கேட்கிற பழக்கம் சக்திவேலுக்கு கிடையாது. அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி வேண்டாம்னு சொல்றது நீதான். இன்னும் எத்தனை நாளைக்கு நான் தண்டனை அனுபவிக்கனும்? சொல்லுஎன்றவன் அவள் கண்களை சந்திக்க

நல்லா பேசறீங்க? தண்டனையாஅர்த்தமாவது தெரியுமா உங்களுக்கு? அபத்தமா இல்லையா?” 

சரிம்மாநீ அனுபவிச்சது தான் தண்டனை. நான் கொடுத்தது தான் வலி. போதுமா? ஆனா, இதுக்கு முடிவு என்ன வள்ளி?” 

மொத்தமா முடிக்க நினைச்சு தான் உங்களை விட்டு விலகி வந்தேன். நீங்கதான் விடாம என்னை தொடர்ந்துட்டு இருக்கீங்க

எனக்கு என் பொண்டாட்டி பிள்ளை வேணும்.”

எனக்கு நீங்க வேணாம்

நான் உன்கிட்ட கேட்கலையே? எண்ணி நாலு நாள் அவகாசம் உனக்கு. என்னோட நீ மதுரைக்கு கிளம்பி இருக்கணும். இல்ல, நீ சொன்னது தான் நடக்கும். என் பிள்ளையை தூக்கிட்டு நான் கிளம்பிடுவேன்என்றவன் இறுதிவரை குழந்தையை அவள் கையில் கொடுக்காமல் தூக்கிச் சென்றுவிட, அவன் பேச்சில் வருத்தம் கொண்டவளாக மீண்டும் பூங்காவின் இருக்கையிலேயே அமர்ந்துவிட்டாள் வேதவள்ளி.

சக்திவேலுக்கு அவன் பேசியதை நினைத்து வருத்தம் எல்லாம் ஏதுமில்லை. அவனுக்கு இதைத் தவிர்த்து வேறு வழியும் இல்லை. இப்படி பேசினால் மட்டுமே அவன் குடும்பம் அவனுக்கு நிலைக்கும் என்று நிதர்சனம் புரிந்தவனாக அதிரடியில் இறங்கி இருந்தான் அவன்.

வேதவள்ளியின் கண்ணீரை இந்த முறை கணக்கில் கொள்வதாக இல்லை சக்திவேல். அவள் கண்ணீருக்காக அவளை விட்டு விலகி நின்றால், இனி எப்போதுமே அவளை நெருங்க முடியாது என்பதை நன்கு உணர்ந்தவனாக, காய்களை நகர்த்த திட்டமிட்டான் சக்திவேல்.

வீட்டிற்குள் நுழைந்து பிள்ளையை கண்ணம்மாவிடம் கொடுத்தவன் ஹால் சோஃபாவில் உடலை குறுக்கிக்கொண்டு படுத்துவிட்டான். அறையில் படுக்குமாறு கண்ணம்மா வற்புறுத்தியும் மறுத்து, அங்கேயே படுத்துக்கொண்டான் அவன்.

அவள் அருகில் இருக்கிறாள் என்ற நிம்மதியோ என்னவோ, நேற்று முதல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த உறக்கம் அந்த நிமிடம் அவனை நெருங்கிவர, சரியாக ஒரு மணி நேரம் ஆழ்ந்து உறங்கினான் சக்திவேல்.

அதற்குமேல் அவனை உறங்கவிட அவன் மனைவிக்கு மனமில்லை போலும். ஒருமணி நேரம் போராடி தன்னை ஓரளவு சரிசெய்து கொண்டு அவள் மேலே வர, அவள் போராட்டத்திற்கு காரணமானவன் சட்டமாக உறங்கி கொண்டிருந்தால் அவளும் என்னதான் செய்வாள்.

அந்த நேர ஆத்திரத்தில் பக்கவாட்டு மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் கவிழ்த்து விட்டாள்

ஏய்என்று அலறியபடி எழுந்தவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல், வேதவள்ளி அறைக்குள் நுழைந்து கொள்ள, இப்போது எந்த தயக்கமும் இல்லாமல் அவளைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தான் சக்திவேல்.

அவன் வேகத்தில் அரண்டவளாக மனைவி சுவற்றோடு ஒண்டிக்கொள்ள, அந்த அறையின் கட்டில் அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை சக்திவேல் கையில் எடுக்கவும், வேகமாக விலகிச் செல்ல முயன்றாள் வேதவள்ளி.

சக்தி விடாமல் அவளை இழுத்து நிறுத்த, “பாப்பா தூங்குறா. வழி விடுங்கஎன்று அடிக்குரலில் சீறினாள் மனைவி.

பாப்பா தூங்கினா என்ன? நீதானே குளிக்கப் போற.” என்றவன் வலது கையில் இருந்த பாட்டிலை அவள் தலைக்கு மேலாக உயர்த்த, “அச்சோ…” என்று கண்களை மூடிக் கொண்டாள் மனைவி.

ஆனால், அவள் பயத்திற்கு அவசியமே இல்லை என்பதாக, நீரின் சாரல் மட்டுமே அவள் மீது தெறிக்க, பட்டென கண்களைத் திறந்தவள் எதிரில் தண்ணீர் வழியும் முகத்துடன் நின்றவனை கண்டு ஸ்தம்பித்து நின்றாள்.

அவள் அதிர்ச்சியைக் கண்டு கொள்ளாமல், தலையை சிலுப்பி மீண்டும் அவளை நனையச் செய்தவனோ, தன் சட்டையின் பொத்தான்களை ஒவ்வொன்றாக கழட்ட தொடங்க, இந்த முறை சற்று வேகமாக கணவனின் கையை உதறிட முயன்றாள் மனைவி.

ஆனால், அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டவனோ, கால் இடறி மீண்டும் அவள் மீதே சாய, நொடியும் யோசிக்காமல் அவனைப் பிடித்து தூர தள்ளி இருந்தாள் வேதவள்ளி.

அவள் தள்ளி விட்டதில் இரண்டடி பின்னால் நகர்ந்து பின் சுதாரித்து கொண்டவன் தான் அணிந்திருந்த சட்டையைக் கழட்டி வேதவள்ளியின் மீது எறிய, அதில் கோபம் கொண்டவள் அந்த சட்டையை மீண்டும் அவன்மீதே எறிய முற்பட, “உன் சட்டை உன்கிட்ட இருக்கணும்ன்னா, என் சட்டையை ஒழுங்கா துவைச்சுக் கொடு.” என்று மிரட்டினான்.

வெகு இயல்பான அவன் பேச்சில் ஓர் நொடி திகைத்து நின்றவள் அதன்பின்பே அவனது வார்த்தைகளின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்தாள்

உணர்ந்த விஷயம் உவப்பாக இல்லை பெண்ணுக்கு. இவனுக்கு நான் அத்தனை சுலபமாக தெரிகிறேனா என்பதும் சேர்ந்து கொள்ள, சில நொடிகள் மறந்திருந்த அவளது கடந்த காலம் மீண்டும் மீண்டு வந்து அவளுள் அமர்ந்து கொண்டது.

தன் கையில் இருந்த சட்டையை வெகு அலட்சியமாக தரையில் வீசியவள் சட்டென குளியலறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள். சக்திவேல் அவளது முகமாற்றங்களை அழுத்தமாக அவதானித்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வர, கண்ணம்மா அப்போதுதான் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார்.

ஈரத்தலையுடன் நின்றவனைக் கண்டு, “துண்டு எடுத்துட்டு வரட்டுமா தம்பி?” என்று அவர் நகர, தலையசைத்து அவரை மறுத்தபடி, அங்கே ஓரமாக இருந்த தன் பெட்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் வேதவள்ளியின் அறைக்குள் நுழைந்து கொண்டான் சக்திவேல்.

தான் கொண்டு வந்த பெட்டியில் இருந்து உடைகளை எடுத்துகொண்டு அவன் குளியலறைக் கதவைத் தட்ட, ஐந்து நிமிடம் கழித்து எரிச்சல் மாறாத முகத்துடன் காட்சியளித்தாள் அவன் மனைவி.

வெளியே வர்றியா? இல்ல, சேர்ந்தே குளிப்போமா?” என்று இலகுவாக குளியலறையின் கதவில் சாய்ந்தபடி அவன் கேட்க,

உங்களுக்கு கொஞ்சம்கூட குற்றவுணர்வே இல்லையா?” என்றாள் அவன் வள்ளி.

குற்றவுணர்வெல்லாம் பார்த்தா குடும்பம் பண்ண முடியாதுன்னு மூணு வருஷம் கழிச்சு தான் புரிஞ்சிருக்கு.” என்று சாவகாசமாக சக்திவேல் கூற, அவனை வெறித்து நோக்கியபடி நின்றாள் மனைவி.

ரொம்ப அதிகமா யோசிக்காத. புருஷன் பொண்டாட்டிக்குள்ள மானம், மரியாதை எல்லாம் எதிர்பார்த்தால் இங்கே பல குடும்பம் ஒன்னுமில்லாம போயிடும். என் குடும்பம் அப்படி போக வேண்டாம்னு தான் உன்கிட்ட வந்து நிற்கிறேன்.”

அதுக்காக மானம், மரியாதையெல்லாம் விட்டுட்டும் வர சொல்லல. எல்லாத்துக்கும் இனி நான் பொறுப்புன்னு நம்பி வா. நிச்சயம் நீ வருத்தப்படாதபடி நான் நடப்பேன்என்று குளியறையின் வாயிலில் நின்று உறுதியளித்துக் கொண்டிருந்தான் சக்திவேல்.

காதல் கொண்ட மனம் ஆகிற்றே அவளுடையது. அவனுடன் அப்படியே கையைப் பிடித்துக் கொண்டு கிளம்பிவிட தான் தயாராகி நின்றது. ஆனால், காயம் கண்ட மற்றொரு மனமோ, ‘இனி என்னால் முடியாதுஎன்று அச்சுறுத்திப் பார்த்தது அவளை.

என் வானம் இருண்டு கிடப்பதையே விரும்புகிறேன்

வெண்ணிலவாக அவன் வருவதானால்.

.

Advertisement