Advertisement

“ஏன் கையை உதரிட்டு., எங்க போறீங்க,  மேலிருந்து ஜம் பண்றீங்க.,  சூசைட் பண்ணுறீங்க.,  எவ்வளவு நல்ல இடம் கிடைச்சிருக்கு.., இத விட்டுட்டு எங்க ஓட பார்க்குறீங்க.., நானும் இதுவரைக்கும் யாரும் சூசைட் பண்ணி பார்த்ததே இல்லீங்க”.., என்று சொல்லி மஞ்சரியை இழுக்கவும்.,

நந்தனிற்கும்., அவன் நண்பர்களுக்கும் சிரிப்பு வந்தது., அதே நேரம் அவன் நண்பர்களை பார்த்து “என்ன அண்ணா இப்படி நின்னு வேடிக்க பாத்துட்டு இருக்கீங்க.., வாங்க வந்து கைய பிடிச்சு தூக்கி விடுங்க.., இவங்களுக்கு கைப்பிடி சுவர் உயரமாக இருக்க போய்  மேலே ஏற முடியலையோ என்னவோ சீக்கிரம்  வந்தீங்கன்னா.,  சீக்கிரம் போய்டுவாங்க”.,  என்று சொன்னாள்.,

“அது மட்டுமில்ல மஞ்சரி இங்கிருந்து குதிச்சீங்கன்னா., ஒரு ப்ரசன்ட்  கூட  காப்பாற்றுவதற்கு வாய்ப்பே இருக்காது.., உடனே ஆம்புலன்ஸ் வந்து தூக்கிட்டு போனா கூட.., அரை மணி நேரத்தில் போய் சேர்ந்துருவீங்க..,  சீக்கிரம் குதிங்க”., என்று மஞ்சரியை அவசர படுத்தவும்..,

மச்சி படியில் நின்று ஷியாமுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் வாயை பொத்தியபடி நின்றான்., இவளோ அவனைப் பார்த்து  சத்தம் கேட்கக் கூடாது என்னும் படியாக போன் வைத்திருக்கும் கையை வைத்து சைகை காட்ட அவன் அமைதியாகவே நின்றுகொண்டான்.,

மஞ்சரி நிவேதா கையை உதறியபடி  தள்ளி வந்தாள்.,  மறுபடியும் நந்தன் அருகில் வர முயற்சிக்கவும்.. நிவேதாவிற்க்கும்., அவன் நண்பர்களுக்கும் நடுவில் வந்து நின்றான் நந்தன்., மஞ்சரியை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் நிவேதா.,

“என்ன எல்லாரும் சேர்ந்து விளையாடுறீங்களா”.,  என்று கேட்டாள் மஞ்சரி.,

நிவேதாவோ  நிதானமாக பார்த்தவள்.,  “நான் என்ன விளையாடுறேன்.,  நீங்கதான் சாகணும்னு சொன்னீங்க..,  இவர் பேரை எழுதி வைக்கணும் சொன்னீங்க..,  இப்பவும் லெட்டரில் கண்டிப்பா எழுதியிருப்பீங்க.., அந்த லட்டரை அப்படியே நான் போலீஸ்ல கூட கொடுக்கிறேன்..,  ஒன்னும் பிரச்சனை இல்ல..,

நீங்க குதிங்க.,  இந்த டைம் போனா..,  இமிடியேட்டா  சொர்க்கம் தான்.., இன்னைக்கு வேற ரொம்ப நல்ல நாள் ன்னு  சொன்னாங்க.,  நீங்கதான்  சாகணும்னு சொன்னீங்க..,  நானா உங்களை சாக சொன்னேன்”.,  என்று கேட்டாள்.

அதற்கு அப்பெண் முறைத்தபடி “இங்க பாரு நீ சின்ன பொண்ணு.., இதுல எல்லாம் தலையிடாதே” என்று சொல்லவும்.

“ஐயோ என்னங்க என்னைய பாத்து சின்னபொண்ணு சின்னபொண்ணு.,  சொல்றீங்க.., நானும் காலேஜ் படிக்கிறேன் ங்க” என்று இழுத்து சொன்னாள்.

அவள் அவனை முறைத்தபடி நந்தனிடம் பேசத் தொடங்கினாள்.

“நான் நெனச்சா  என்ன பண்ணுவேன் தெரியுமா..,  இப்பவும் நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கிட்ட லெட்டர் கொடுத்த மாதிரி..,  உன் தங்கச்சியை பத்தி சொல்றதுக்கு எனக்கு ரொம்ப நேரம் ஆகாது”., என்று சொல்லவும்.

நந்தன் ஏய் என்று கோபத்தோடு கத்தினான்.

ஷியாம் நகராமல் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தான்., என்ன தான் பேசுகிறாள் என்று பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு.,

அதேநேரம் மஞ்சரியும் மேற்கொண்டு பேச தொடங்கினாள்.,

“நான் நெனச்சா எங்க அண்ணன் கைய பிடிச்சு இழுத்தான் மட்டும் தான் மத்தவங்களுக்கு தெரியும்., ஆனால் என்ன நடந்தது எதுவும் மத்தவங்களுக்கு தெரியாது ன்னு சொல்லுவேன்..,  அந்த குழந்தை வேற மாதிரி பொறந்திருச்சு ன்னு சொல்லி.,  என் அண்ணன விட்டு கேஸ் போட வைப்பேன்., உன் குடும்ப மானம் போயிரும்”., என்று சொல்லி வாய்மூடும் முன்
நந்தன் ஏய் என்று சத்தம் போட.., அதே நேரம் மஞ்சரியின் கன்னத்தில் ஓங்கி அறை விழுந்தது.,

அனைவரும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க அருகில் இருந்த நிவேதா தான் அடித்திருந்தாள்.,

அவள் அடித்த அடியில் மஞ்சரி சற்று அதிர்வுடன் நகர்ந்து நிற்கும் நிலைக்கு போயிருந்தாள்.,

அதுவரை விளையாட்டுத்தனமாக பேசிக்கொண்டிருந்த நிவேதாவோ.,  அப்போது தீர்க்கமாக அழுத்தம் திருத்தமாக பேசினாள்.,

“அடிக் கொன்னுருவேன்.., இவங்க யார் ஹெல்ப் ம்  வேண்டாம்..,  நானே உன்னை மேல இருந்து கீழே தள்ளிவிட்டுருவேன்.,  பார்த்துக்கோ..,

என்ன நெனச்சிட்டு இருக்க., உனக்கும்.,  இவருக்கும் பிரச்சனைனா பேசித் தீர்த்துக்கோங்க..,  அதை விட்டுட்டு எதுக்கு தேவை இல்லாம  தங்கச்சிய பத்தி பேசுற”.., என்றாள்.,

“நீ எதுக்கு இதை கேட்குற”., என்று சொன்னாள்.,

“ஹலோ தேவை இல்லாம பொண்ணுங்கள பேசக் கூடாது..,  அடுத்த பொண்ண பத்தி தப்பா பேசுறதுக்கு உனக்கு எந்த தகுதியும் கிடையாது.., ரைட்.

தேவை இல்லாம பேசுற.,  ஏதோ ஒன்னு.,  வந்து பொலம்பிட்டு இருக்க ன்னு., நான் வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன்.,  ஜஸ்ட் பார் ஃபன் அப்படின்னு சொல்லி..,  நீ பேசுறத  ஜாலியா பார்த்துகிட்டு இருந்தா..,  ஓவரா பேசுற”.., என்று சொன்னாள். நிவேதா

“இவன் தங்கச்சிய சொன்னா உனக்கு என்ன வந்துச்சு”., என்றாள்.மஞ்சரி

“இவங்க தங்கச்சி ன்னு., இல்ல எந்த பொண்ண பத்தி  தவறா பேசினாலும்  அடிக்க தான் செய்வேன் போடி”., என்று சொன்னாள்.

அவள் பதிலுக்கு அதிகமாக பேச தொடங்கவும்.,

“இன்னொரு தடவை இந்த பேச்சு பேசின ., நடக்குறதே வேற பார்த்துக்கோ” என்று சொல்லவும்.,

அதற்குள் வேகமாக ஷ்யாம் வருவதை கண்டவள்., அவசரஅவசரமாக வந்த வழியே ஓடத் தொடங்கினாள் மஞ்சரி..,

“ரொம்ப தேங்க்ஸ் ம்மா” என்று சொன்னான்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள்.,   “விடுங்க ண்ணா” என்று சொன்னபடி இவள் கீழே செல்ல போனாள்.

அவன் நண்பர்கள் தான் “என்னம்மா பட்டுன்னு அடிச்சிட்ட.,  நீ பேசாம அடிச்சுட்டு போயிருவ., உங்க வீட்டு பொண்ணு தானே அங்க வந்து வாழ போகுது.., அந்த பொண்ணுக்கு ஏதும் பிரச்சினை வந்துச்சின்னா”., என்று சொல்லவும்.

“அதுலாம் வராது”., என்றாள்.

“எப்படி மா இவ்வளவு உறுதியா சொல்ற”., என்றான்.

“அண்ணா அதெல்லாம் உங்களுக்கு நாளைக்கு தெரியும்”., என்றாள்.

“என்னது நாளைக்கு தெரியும்”., என்று கேட்டார்கள்..

அதே நேரம் அவள் கிளம்பப் போனவளை மறித்த நந்தன்  “பூனைக்குட்டி அந்த லெட்டர் குடுத்துட்டு போயேன்” என்று கேட்டான்.,

நிமிர்ந்து  அவனைப் பார்த்தவள்.,  “அதெல்லாம் கொடுக்க முடியாது.,  நான் கீழ போய் கொடுக்கலை போதுமா “., என்று சொல்லவும்.,

“நிஜமா”., என்றான்.

அவளோ ஷியாமை பார்த்து சிரித்தபடி., “என் கையில் இருந்து யார் கைக்கும் போகாது., இப்ப ஒகே வா”., என்றாள்.

“ஒகே.,  ரொம்ப தேங்க்ஸ்”., என்றவன். “அப்புறம் இன்னொரு ஸ்பெஷல் தேங்க்ஸ்” என்றான்.

“அது எதுக்கு” என்றாள்.

” இல்ல கன்னத்தில் ஓங்கி ஒன்னு விட்ட இல்ல அதுக்கு தான்”., என்று சொல்லவும்.

“இத நீங்க முன்னாடியே செஞ்சு இருந்தீங்கன்னா., அவ இந்த பக்கம் வந்து இருக்கவே மாட்டா”., என்றாள்.

“வீட்டு பொண்ணுங்கள அடிக்கிறதே தப்பு.., அடுத்த வீட்டு பொண்ண அடிக்குறது எப்படி., இதையே நான் அடிச்சு இருந்தா., அந்த பொண்ணு வேற மாதிரி அசிங்கமா கிரியேட் பண்ணி இருப்பா”..,  என்று சொல்லவும்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ஓகே புரியுது” என்று சொன்னபடி நகர.,

“உனக்கு ஏதாவது நான் செய்யணும்.,  என்ன வேணும் கேளு..,  எது கேட்டாலும் செய்வேன்”.., என்று சொல்லவும்.

“நிஜமாவா., ப்ராமிஸ்”.., என்று கேட்டாள்.

“கையை நீட்டு பிராமிஸ் பண்றேன்” என்று சொல்ல.,

அவள் செல்போனை பிடித்தபடி கையை மறைத்துக் கொண்டாள். ஏனெனில் கையில் மெஹந்தி வைத்தவர்கள் அவள் கையில் இடது கையில் நிவி என்றும்.,  வலது கையில் நந்தன் என்றும் எழுதியிருந்தனர்..,

அதற்காக மறைத்துக் கொண்டவள்.,  “பரவால்ல.,  கையை காட்ட அவசியமில்லை”  என்று சொன்னவுடன்..,

“ப்ராமிஸ் ஆ சொல்றேன் நீ என்ன கேட்டாலும் செய்வேன்” என்று சொல்லவும்.,

” சரி நாளைக்கு கேட்கிறேன்”., என்றாள்.

“நாளைக்கு என்ன, இன்னிக்கே கேளு”..,  என்றான்.

“இல்ல இல்ல கண்டிப்பா  நாளைக்கு தான் கேட்பேன்”.,  என்று சொல்லியபடி அங்கிருந்து நகர்ந்தாள்.,

Advertisement