Advertisement

15.

உன் விழி வழி
மொத்தமாய்
எனை விழுங்கிய
பின்னும்.,

உன் விழி தாகம்
தீரவில்லையடி..,

மீண்டும் மீண்டும்
விழுங்கி கொண்டே
இருக்கிறது..,

அன்று மாலை கல்லூரி முடிந்து வந்தவள்., எப்போதும் தேவகிக்கு உதவும் வேலைகளை முடித்துவிட்டு இரவு அறைக்கு சற்று சீக்கிரமே சென்றவளுக்கு.,

ஏனோ சற்று நேரம் மொட்டைமாடியில் அமர வேண்டும் என்ற எண்ணம் தோன்ற..,

அவர்கள் அறையில் இருந்து வெளியே சென்று., அங்கிருந்த சிறிய அளவிலான தோட்டத்தோடு கூடிய மாடிப் பகுதியில் அமர்ந்தாள்.,

ஏனோ கல்லூரியில் தோழிகள் இன்று அவளை கிண்டல் செய்தது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது.,

“இன்னும் 20 நாளில் எக்ஸாம் ஆரம்பிச்சுடும்..,  அதுக்கப்புறம் பத்து பதினைந்து நாள் ல  எக்ஸாம் முடிஞ்சிடும்., அதுக்கப்புறம் அவங்கவங்க வீட்டுக்கு போயிடுவாங்க.,

உனக்கு என்ன இங்க திருச்சியில் தான் இருக்கப் போற., வேலைக்கு போறத பத்தி என்ன முடிவு பண்ணிருக்கே”., என்று தோழிகள் பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டதற்கு.,

“யோசிக்கணும் இனிமேல் தான் என்ன பண்றதுன்னு முடிவுக்கு வரணும்”., என்று சொல்ல.,

தோழிகளும் “நீ எப்படி மாறிட்ட தெரியுமா நிவி.,  வேலை கிடைச்சதுக்கு அவ்வளவு சந்தோஷப்பட்ட.,  இப்ப வேலைக்கு போகணுமா அப்படின்னு யோசிக்கிற”.,  என்று கேட்டனர்…

“போறதுக்கு ஆசை தான்., ஆனால் என் சிட்டுவேஷன் எப்படி இருக்குன்னு தெரியல.,  அவங்களோட ஜாப் பொறுத்தவரைக்கும் அவங்களுக்கு ஒர்க்  டைட் ன்னு.,  தெரியும்.,

இங்கே ஏதோ தெரிந்த ஊர் ல ஒர்க் பண்றதால சுத்தி சுத்தி இருக்கிறவங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறாங்க.,

இதே இது இப்ப வேற ஊருக்கு டிரான்ஸ்பர் ல போய்ட்டாங்க னா.,  இவங்களோட ஒர்க் கொஞ்சம் கஷ்டம் தான்.,   அது மட்டும் இல்லாம நிறைய பிராப்ளம்ஸ் வேற மீட் பண்ண வேண்டியது இருக்கு.., நிறைய இடங்கள்ல அட்ஜஸ்ட் பண்ணி தான் போக வேண்டியதிருக்கு..,

ஏற்கனவே ஆளு கொஞ்சம் நேர்மையான ஆளு., அதனால பிரச்சினைகளை அதிகமா சந்திக்க வேண்டியது இருக்கிறதால., நிறைய அவாய்ட் பண்ணிட்டு இருக்காங்க..,

இப்ப நான் வேலைக்கு போறேன் அப்படின்னு சொல்லி ஆச்சுன்னா.,  எந்த விஷயத்துலயும் நான் அவங்கள எதிர்பார்க்கவே முடியாது,  அத்தை மாமா எவ்வளவு தான் கூட இருந்தாலும்.,

சில விஷயங்களை மாற்றுவது எப்படி ன்னு.,  ஒரு யோசனையாக இருக்கு.,  அது தான் வேலைக்கு போற ஐடியா ஒரு ஓரமா வச்சிருக்கேன்., அம்மா அப்பா ஒரே வார்த்தையில மாப்பிள்ளை என்ன சொல்கிறாரோ அதுபடி  முடிவு பண்ணு ன்னு சொல்லிட்டாங்க..,

அத்தை மாமா உன் இஷ்டம் தான் அப்படின்னு சொல்லிட்டாங்க.., நந்தன் கிட்ட நான் இது பத்தி பேசவே இல்லை.., பேசணும் அப்படின்னு நினைச்சாலும் ஏனோ மனசு வரமாட்டேங்குதே”.., என்று சொல்லவும்.,

தோழிகள் அனைவரும் ஒரே கேலியும் கிண்டலுமாக அன்றைய பொழுது ஓட்டினர்.

அவளை வைத்து பேசி பேசியே  நேரத்தை ஓட்டினர்.,

“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் இல்ல.., எப்படி எல்லாம் பேசுவ., இப்ப பேச்சும் மாறிட்டு.., ரொம்ப முன்னாடி மாதிரி நீ ரொம்ப வாய் அடிக்கிறது இல்ல”.., என்று சொல்ல..,

“மாறிவிட்டாலும்.,  நான் பேசத்தான் செய்கிறேன்”., என்று சொல்ல.

“இல்லையே இதே  நீ பழைய நிவியா இருந்தா.., இதுகுள்ள எங்கள் எல்லாத்தையும் ஓட்டு ஓட்டு ஓட்டி இருக்கமாட்ட”.,  என்று சொல்ல.

“ஏனோ இப்பல்லாம் அப்படி இருக்க தோண மாட்டேங்குது.,  சில விஷயங்கள் நமக்கு தான்  என்று யோசிக்கும் போது அதிகமா பேசுறோமா அப்படிங்கற மாதிரி ஒரு எண்ணம் வந்துருது”.,என்றாள்.

“கல்யாணம் ஆகி ஆறு மாசத்தில் இப்படி தோணுதா..,  லூசா நீ”., என்று தோழிகள் கேட்க.,

அது எல்லாம் ஒன்னுமில்ல யோசிப்போம் என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் வேலை பற்றி எதுவும் பேசாமல் மற்ற விஷயங்களைப் பற்றி அலசிக் கொண்டிருந்தனர்.,

அதை இப்போது யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.,

எப்போதும் இரவு லேட்டாக மாடிக்கு வருபவள்., இன்று சற்று சீக்கிரமாகவே சென்றுவிட தேவகி எதுவும் சொல்லவில்லை., ஏனென்றால் அவள் கல்லூரி வாழ்க்கை இன்னும் சற்று நாட்கள் மட்டுமே என்பது இடையிடையே அவள் தோழிகளை பற்றி அவரிடம் பேசும் போது சொல்லியிருக்கிறாள்.,

அதனால் தேவகி எதுவும் கேட்காமல் இருந்தார்., நிவியும் அன்று மிக அமைதியாகவே இருக்க தேவகி தான் போய் ரெஸ்ட் எடு என்று சொல்லியிருந்தார்.

நந்தன் படுக்க மாடிக்கு கிளம்பவும்.,

“டேய் இந்தாடா இந்த பாலை மட்டும்  நிவி ட்ட கொடுத்திடு.,  பால் குடிக்காமல் போய்ட்டா” என்று சொல்ல..,

“அம்மா இதெல்லாம் அநியாயமா., கடைசில என்ன அவளுக்கு பால் டம்ளர் தூக்க வைக்கிறீங்க”.,  என்று சொன்னான்.,

“ஏண்டா பொம்பளைங்க தான் எல்லா வேலையும் செய்யணுமா., சாப்பிட மட்டும்  நீங்களா.,  பொம்பளைங்க எந்தெந்த வேலை செய்கிறார்களோ.., அதே மாதிரி எல்லா ஆம்பளைங்களும் செய்யலாம்., பொண்ணுங்க தான் வேலை செய்யனும் ன்னு, கோயிலுக்கு நேர்ந்தா விட்டுருக்கு”., என்றார்.

“ரொம்ப தான் பேசுறீங்க மா., ஏன் மா நீங்க இப்படி பேச ஆரம்பிச்சீங்க”.,  என்றான்.

” நாங்களும் பேசுவோம் டா., எங்கள ஒரேடியா அடிமை மாதிரி வைக்கலாம் நினைச்சுட்டீங்க.., ஐயோ பாவம்  சொல்லி சமைச்சுக் கொடுத்தா., என் மருமகளுக்கு ஒரு டம்ளர் பாலை கொண்டு போறது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு”., என்று சொல்ல.

“அம்மா ப்ளீஸ் மா.,  உங்க மருமளுக்கு பால் தானே கொண்டு போய் கொடுக்கணும்., தாங்க கொண்டு போய் கொடுக்கேன்.,  அதை விட்டுட்டு உங்க மருமகளுக்கு கொடுக்க மாட்டேன்னு சொன்ன மாதிரி.., பில்டப் பண்ணி என்னைய கொடுமைக்கார ஹஸ்பண்ட் ன்னு.,  வெளியே நீங்களே சொல்லிக் கொடுப்பீங்க.,  கொடுங்க”., என்று சொன்னான்.

“அந்த பயம் இருக்கட்டும்., இந்தா கொண்டு போய்க் கொடுத்து விடு”., என்று சொல்ல.,

அவன் “நிறைய இருக்குமா” என்று சொல்லவும்.,

“நீ குடிச்சிடாத டா.,  அவளுக்கு  கொடு”., என்று சொல்ல.,

“இதெல்லாம் அநியாயம் மா.., எல்லாரும் அவங்கவங்க பிள்ளை தான் ஊட்டி ஊட்டி வளர்ப்பாங்க.., இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா., உங்களுக்கு நல்ல மாமியார் ன்னு அவார்டு எல்லாம் தரமாட்டாங்க”..,  என்றான்.

“நீ  தான் மூன்னு  சப்பாத்தி சாப்பிட்ட இல்ல”., என்று சொல்லவும்.,

“எல்லார் வீட்லையும்  அம்மா பிள்ளைங்க  சாப்பிடறது கண்ணு வைக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.,  ஆனா அம்மா  நீங்களே  இத்தனை சப்பாத்தி சாப்பிட்டேன் ன்னு கணக்கு பாக்குறீங்க”.., என்றான்.

“என் மருமக ஒரு சப்பாத்தி தாண்டா சாப்பிட்டா.., சரியாவே சாப்பிடல”., என்றார்.

“அம்மா இதெல்லாம் ரொம்ப அநியாயம் மா., சாயந்திரம் வந்த உடனே  உட்கார வச்சி.,  டீ கூட வடையை சாப்பிடு டா தங்கம் ன்னு சொல்லிக் கொடுத்தது நீங்க தானே.., அப்ப எனக்கு மட்டும் ரெண்டு தான் குடுத்தீங்க..,  உங்க மருமகளுக்கு மட்டும் நாலு கொடுத்தீங்க”… என்றான்.

“அடேய் பிள்ளை சாப்பிடுறத  கண்ணு வைக்க…  நீ ஆபீஸ்ல தான் காபி ஸினக்ஸ் எல்லாம் சாப்பிட்டு தான் வர்ற..,  வீட்டில் வந்து ஒன்னும் சாப்பிடாத மாதிரி பில்டப் பண்ணாத., நிவி என்ன காலேஜ்ல சாப்பிட்டு டா வர்றா”..,  என்று சொல்லவும்.

“தெரியாமல் சொல்லிட்டேன் மா..,  மாமியார் மருமகளுக்கு நடுவுல வந்தது தப்பு தான்.., நீங்க வேணாலும் தொட்டில் போட்டு.., உங்க மருமகள ஆட்டு ஆட்டுனு ஆட்டுங்க”., என்று சொல்லி விட்டு.,

அவர் கொடுத்த பால் டம்ளரை எடுத்துக் கொண்டு சிரித்தபடி மாடிக்கு சென்றான்.,

அறையில் அவள் இல்லாததை பார்த்தவன் அவள் நிச்சயமாக மொட்டை மாடியில் தான் இருப்பாள் என்று தெரிந்து கொண்டு அங்கு வரவும் அவளோ.,

தூரத்தில் வானில் தெரிந்த நட்சத்திரங்களையும்.,  நிலவையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவள் தரையில் அமர்ந்திருக்க இவனும் அவள் அருகே வந்து அமர்ந்த படி.,  அவள் கையை பிடித்து பால் டம்ளரை கையில் வைக்க அவனைப் பார்த்தபடி நிறைய இருக்கு என்றாள்.

“இத உங்க அத்தை கிட்ட கேக்க போய் தான்.,  உங்க அத்தை என்னைய சண்டை போட்டு அனுப்பி இருக்காங்க.., குடிச்சிடும்மா”., என்றான்.

“நீங்க கொஞ்சம் குடிச்சுட்டு தர்றீங்களா”..,  என்று கேட்க

“வேண்டாம் வேற வினையே வேண்டாம்., ஒரு டம்ளர் பாலாலா  நான் கொடுமைக்கார ஹஸ்பண்ட் மாதிரி வெளியே இமேஜனேஷன் கிரியேட் பண்ணி விட்டுருவாங்க.,  நாளைக்கு இந்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி இருக்குல்ல., அவங்க பாத்து சொல்லுவாங்க., நிவி எப்படி ஒல்லியா இருக்கா.,  அவளை கொஞ்சம் நல்ல கவனிப்பா., நீ அவளுக்கு பதிலா நல்ல  சாப்பிடுற போல ன்னு கேட்பாங்க., இது எனக்கு தேவையா”., என்று சொல்லவும்.,

“இங்க பாருங்க., சும்மா நீங்களா இமேஜின் பண்ணிப் பக்கத்து வீட்டு ஆன்ட்டி  எல்லாத்தையும் பற்றி கதை விடக்கூடாது.,  யாரும் உங்கள ஒன்னும் சொல்லல சரியா..,

நான் ஒன்னும்  சொல்ல மாட்டேன் அதனால குடிச்சிடுங்க”.., என்று சொல்ல.

“நீ குடிச்சிட்டு தா குடிக்கிறேன்”., என்று சொல்லிவிட்டு அவளை முடிந்த அளவு குடிக்க வைத்தான்..,

அவள் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன்., “ஏன்டா ஒரு மாதிரி இருக்க”.,  என்று அவள் தோளில் கைபோட்டு தன்னோடு இழுத்து பிடித்துக் கொண்டவன்., “என்ன ஆச்சு”., என்றான்.

“ஒன்னும் இல்ல இன்னும் 20 டேஸ் தான் இருக்கு., எக்ஸாம் ப்ரீப்பர் பண்ணனும்..,  நினைச்சாலே எரிச்சலா இருக்கு”., என்று சொன்னாள்.

“சரி இப்பவே படிக்க ஆரம்பிக்கிறது தானே”., என்றான்.

“அதெல்லாம் இப்ப எல்லாம் படிக்க ஆரம்பிக்க கூடாது.., எக்ஸாம் ஆரம்பிக்கிறதுக்கு முதல் நாள் தான் படிக்கணும்”., என்றாள் நிவேதா..,

“சரி எக்ஸாம் முடிஞ்ச பிறகு என்ன பிளான்”. என்று கேட்டான்.

“ஒரு பிளானும் இல்லை”., என்றாள்.

“சீரியஸா கேக்கறேன் டா., அந்த ஜாப்”., என்று அவன் சொன்னான்.

“யோசிப்போம்”.,  என்றான்.

அவனும் “இல்ல  நான் வேணா டிரான்ஸ்பர் வாங்கிக்கிறேன்., அம்மா அப்பாவை கூட கூட்டிட்டு போகலாம்”., என்று சொன்னான்..

“இல்ல பாக்கலாம்., இப்போதைக்கு எந்த ஐடியாவும் யோசிக்கல., எக்ஸாம் முடியட்டும்”., என்றவள்  அதற்குமேல் அவனிடம் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.

அவளை தன் தோளில் சாய்ந்தபடி அவன் அமைதியாக அமர்ந்து இருந்தான்.

அவளது எண்ணங்களோ ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த அப்பிரச்சினைக்கு சென்று வந்தது.

அப்போது பிரச்சனை செய்து விட்டு போன மஞ்சரியின் குடும்பத்தார் அதிலிருந்து ஒரு வாரத்திற்குள் எதிர் வீட்டை காலி செய்து கொண்டு அவர்களின் கடை இருக்கும் பக்கமாக வீடு பார்த்துக் கொண்டு சென்றுவிட்டனர்.,

அதுமட்டுமல்லாமல் அவளுடன் சுற்றி அவளுக்கு இப்பிரச்சினைகளில் எல்லாம் உதவிகொண்டு சுற்றிய அவனையே பிடித்து திருமணமும் செய்து வைத்துவிட்டார்கள்., என்று தெரியும் அதை இப்போது நினைத்துக் கொண்டவள். கல்யாணத்துக்கு பிறகாவது ஒழுங்கா இருக்குமோ என்னவோ என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

எப்படியோ நல்லா இருந்தா சரிதான் என்று மனதிற்குள் யோசித்துக்கொண்டாள்.

அதுபோல  அப்பிரச்சனைக்கு பிறகுதான் நந்தனின் முகத்தில் ஒரு நிம்மதி வந்திருப்பதை உணர முடிந்தது.,

அதுவரை எப்போது பிரச்சனை செய்வாளோ., எப்போது தங்கையின் வாழ்க்கையில் ஏதும் பிரச்சனை செய்து விடுவாளோ., என்ற பயத்தோடு இருந்தவன் அதன் பிறகு சற்று நிம்மதியாக மூச்சு விட தொடங்கியிருந்தான்..,

அதன் பிறகு நிவிக்கு நாள்கள் கடகடவென ஓடியது போலவே இருந்தது.,

Advertisement