இவள் எந்தன் சரணமென்றால் 14-1 13535 இவள் எந்தன் சரணமென்றால் 14 இரவு வெகுநேரம் கழித்தே உறங்க தொடங்கி இருந்தாலும், எப்போதும் உள்ள வழக்கமாக அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது திருவுக்கு.எப்போதும் போல் நான்கு மணிக்கு எழுந்து விட்டவன் கண்களை திறக்க, அவன் கைகளுக்குள் அழகாக துயில் கொண்டிருந்தாள் துர்கா. எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மட்டுமே பார்த்து பழகி இருந்த அவள் முகம் இன்று அவன் கைவளைவில். எத்தனை முயற்சித்தும் நல்லவனாக நடிக்கக்கூட முடியவில்லை அவனால். அவள் புறம் லேசாக சாய்ந்து திரும்பியவன் இடக்கையின் வளைவில் அவள் தலையை தாங்கி கொண்டு வலது கையால் அவள் கன்னத்தை வருடிக் கொண்டிருந்தான். துர்கா அவன் கையை தட்டிவிட்டு மீண்டும் உறங்க, கடுப்பானவன் இப்போது தன் இதழ்களால் அவள் கன்னத்தை ஈரமாக்க, மெல்லிய முனகலுடன் திரும்ப முயற்சித்தாள் துர்கா. திருவோ அவளை திரும்ப விடாமல் தன்னுடன் இறுக்கி கொண்டு அவள் கழுத்தில் தன் மீசையால் குறுகுறுப்பூட்ட, தூக்கம் தெளிந்து போனது துர்காவுக்கு. கோபமாக விழித்துக் கொண்டவள் “என்ன பண்றிங்க நீங்க.. தூங்க விடுங்க.. நைட் முழுக்க தூங்கவிடாம பண்ணிட்டு இப்போவு…” என்று வார்த்தையை முடிக்கக்கூட இல்லை. அவள் இதழ்களை தீண்டியவன் அவளை மீண்டும் விடுவிக்கும் போது அவள் வாய் திறக்கவே இல்லை. முகம் சிவந்து போயிருக்க, கண்களை மூடிக் கொண்டு அந்த கணங்களில் அவள் திளைத்து இருக்க, அவள் கழுத்தில் அழுத்தமாக மீண்டும் முத்தமிட்டவன் அவள் முகத்தில் தெரிந்த சோர்வில் அவளை அதற்குமேல் தொல்லை செய்யாமல் விலகிக் கொண்டான். இப்போது அவனுக்கும் வெளியே கிளம்பும் எண்ணம் இல்லாமல் போக, சரத்திற்கு அழைத்தவன் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டான். திருவுக்கு அதற்குமேல் உறக்கம் வரும் என்று தோன்றவில்லை. ஆனால் அங்கிருந்து செல்லும் எண்ணமும் வராமல் போக, அமைதியாக மனைவியின் அருகில் வந்து படுத்துக் கொண்டான். துர்காவுக்கு அவனின் அணைப்பில் இருந்தபோதே தூக்கம் களைந்து போயிருக்க, கண்ணை மூடி இருந்தாலும் அவன் செயல்கள் பிடிபட்டது. அவன் சரத்திடம் போனில் பேசியதை கேட்டுக் கொண்டு இருந்தவளுக்கு அவன் நிலை புரிந்தாலும் சின்ன சிரிப்புடன் அமைதியாகவே இருந்தாள் அவள். அவன் நெருங்கவே இல்லை என்றாகவும், சிறிது நேரம் கழித்து தானே அவனை நெருங்கி அவன் கழுத்தில் கையை போட்டுக் கொண்டாள் அவள். அவள் முகம் அவன் மார்பில் பதிந்து இருக்க, திருவுக்கு தான் அவஸ்தையாக இருந்தது. “இவளை..” என்று கடுப்பானவன் எழுந்து கொள்ள பார்க்க, “ம்ச்.. இப்போ எங்கே எழுந்துக்கறிங்க.. படுங்க.. நான் தூங்கணும்…” என்று சட்டமாக அவனை அணைத்து கொள்ள, திருவின் பொறுமை பறிபோனது அங்கே. அவளை புரட்டியவன் அவளை தனக்கு அருகில் கிடத்தி அவள் மேல் சரிந்து கொள்ள, இப்போது துர்காவின் முகம் புன்னகையை சுமந்திருந்தது. அவள் உதட்டை வலிக்க சுண்டியவன் “பாவம்.. சின்னப்புள்ள பொழச்சி போகட்டும் ன்னு பார்த்தா, என்னையே கடுப்பேத்துறியா நீ” என்று அவளை கிள்ளி வைக்க, தன் இடையை தடவியவள் “உங்க ஊர்ல சின்னப்புள்ள கிட்ட இப்படித்தான் நடந்துப்பாங்களா..” என்று கேட்டு வைத்தாள் மனைவி. அவளை பார்த்து சிரித்தவன் “ரொம்ப பேசுறடி நீ… உன்னை சமாளிக்கவே நான் நிறைய பேச வேண்டி இருக்கும் போல..” என்று அலுத்து கொள்ள “அப்போ சமாளிச்சிடுவேன் ன்னு சொல்றிங்க… ” என்று அவள் அப்போதும் வாயடிக்க “என்ன செய்றது.. சிக்கிட்டேனே… அதுவும் தானா வந்து சிக்கி இருக்கேனே..சமாளிச்சு தானே ஆகணும்..” “என்ன.. என்ன சிக்கிட்டிங்க இப்போ.. என்ன செஞ்சுட்டாங்க உங்களை… ரொம்பத்தான் அப்படியே அப்பாவி மாதிரி ஸீன் போடறீங்க..” என்று துர்கா முறைக்க, “ஏய்.. என்னடி பேசுற… ஸீன் போடறேனா..” என்று அதிர்ந்தவன் “உன்னை..” என்று அவளை இறுக்க, அவன் கைகளில் இருந்து திமிறினாள் துர்கா. அவளை விடாமல் இறுக்கி கொண்டவன் “சின்னபுள்ள மூஞ்சிய பாரு.. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா, நீ சின்ன புள்ள ஆகிடுவியா…என்ன பேசினாலும் வாய்க்கு வாய் பேசிட்டே இருக்க.. தப்பு இல்ல..” என்று கேட்டு அவள் உதடுகளையும், கன்னங்களையும் தண்டிக்க ஆரம்பிக்க, தண்டனை நீண்ட நேரம் தொடர்ந்து கொண்டிருந்தது அங்கே. திரு ஒருவழியாக தன் தண்டனையை நிறைவேற்றி அவளை விடுவிக்கும்போது, விலக விருப்பமில்லாமல் அவன் மேஜில் மீண்டும் புதைந்து உறங்க தொடங்கி விட்டாள் துர்கா. திருவும் ஆவலுடன் சேர்ந்து கொள்ள, அவர்கள் மீண்டும் விழிக்கும்போது நேரம் காலை பத்து மணி. அப்போதும் திரு தான் துர்காவை மிரட்டி எழுப்பி அமர வைத்தான். அவளை குளிக்க சொல்லி வெளியில் சென்றவன் பத்து நிமிடங்களில் காலை உணவுடன் வந்து சேர்ந்தான். இருவரும் உண்டு முடிக்கவும், அவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு மார்கெட்டிற்கு கிளம்பினான் அவன். அவன் கிளம்பிய பிறகு பெரிதாக ஒன்றும் வேலை இல்லாததால், சோஃபாவில் சாய்ந்து கொண்டு நேற்றைய நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தாள் துர்கா. திருவுடன் ஆன சண்டை, அதன்பிறகான தனது கோபம், இறுதியாக அவன் அறைக்குள் நுழைந்தது அதனை தொடர்ந்த நிகழ்வுகள் என்று ஒவ்வொன்றாக நினைவுவர, அழகான ஒரு வெட்கப்புன்னகை குடிகொண்டது அவளிடம். அதே புன்னகையுடன் அவள் தனது வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்க, மதியம் திரு வரும்வரை அந்த புன்னகை அவள் முகத்தில் இருந்தது. திருவுக்கு வழக்கம்போல் உணவை பரிமாறியவள் அவன் அருகில் அமர்ந்துக் கொள்ள, திருவும் அமைதியாகவே உண்டு முடித்தான். சாப்பிட்டு முடித்தவன் வெகு நேரம் ஆகியும் வெளியில் கிளம்பாமல் இருக்க, துர்கா அவனை பார்த்துக் கொண்டே தான் சுற்றிக் கொண்டிருந்தாள். இவன் ஏன் இன்னும் கிளம்பல?? என்று துர்கா நினைத்திருக்க, அவனோ “துர்கா… ” என்று அழைத்துவிட்டான். அவள் அருகில் வரவும் அவள் கையை பிடித்து மடியில் அமர்த்திக் கொண்டவன் “இன்னிக்கு மார்க்கெட்ல பெருசா வேலை இல்ல. இதுக்குமேல வீட்லதான்.. சொல்லு என்ன பண்ணலாம்..” என்று அவள் கழுத்தில் தன் உதடுகளை உரசிக் கொண்டே கேட்டுவைத்தான். அவன் செய்கைகள் புரிந்தாலும் “ஏன் வேலை இல்லை..?? எப்பவும் சாப்பிட்ட ஒடனே ஓடிடுவீங்க..” என்று கேள்வி கேட்டாள் துர்கா. “இன்னிக்கு முக்கியமான வேலை எல்லாம் காலையிலேயே முடிஞ்சுது. இனி இருக்க வேலையை அவங்க பார்த்துப்பாங்க.. நான் போய்த்தான் ஆகணும் ன்னு இல்ல.. இப்போ சொல்லு.. என்ன பண்ணலாம்??” என்று மீண்டும் அவன் கேட்கவும், அவன் புறமாக திரும்பி அமர்ந்தவள் “என்ன பண்ணலாம்..” என்று அவன் கழுத்தில் கைகளை மாலையாக்கி கொண்டு கேட்க, அவள் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சிதான் திருவுக்கு. நேற்று முழுவதும் அவளை படுத்தி வைத்திருக்க, ஏன் இன்று காலையும் கூட.. அப்படி இருக்க தான் கேட்டதும் மறுக்காமல், அவள் தன்னை கொடுக்க நினைப்பது பிடித்திருந்தது அவனுக்கு. ஆனால் அவனுக்கு அவளை அதற்குமேல் வாட்டும் எண்ணமில்லை போலும். அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் “சீக்கிரமா கிளம்பி வா.. வெளியே போகலாம்.. படத்துக்கு போலாமா..” என்று கேள்விகளாக கேட்டுவைக்க, துர்காவுக்கும் புரிந்தது அவன் பூரிப்பு. சிரித்துக் கொண்டே எழுந்து தயாராக சென்றாள் அவள். திருவுடனான முதல் பயணம்.. அதுவும் படத்திற்கு. இனிப்பான நிமிடங்கள்.. ஒரு ரசிப்புடனே அவனுடன் கிளம்பினாள் துர்கா. இருவருக்கும் நேரம் இனிமையாக கழிந்தது. கவுண்டரில் கூட்டம் அதிகமாக இருக்கவும், அவளை ஒரு ஓரமாக நிறுத்தியவன் தான் சென்று டிக்கெட் எடுத்து வந்தான். இருவரும் தியேட்டருக்குள் நுழைந்து அவரவர் இருக்கையில் அமர விளக்குகள் அணைக்கப்பட்டு படம் தொடங்கியது. திரு துர்காவை நெருங்கி அமர்ந்தவன் அவளை சுற்றி கைபோட்டு அணைத்துக் கொள்ள, துர்கா அவனை திரும்பி பார்த்துவிட்டு படத்தை கவனிக்க தொடங்கினாள். திருவுக்கு அந்த அணைப்பே போதுமானதாக இருந்தது. அதற்குமேல் துர்காவை அவன் தொந்தரவு எதுவும் செய்யவில்லை. ஆனால் அதற்காக துர்காவை சைட் அடிப்பதையும் நிறுத்தவில்லை. நிச்சயம் படத்தின் கதையையோ, காட்சியையோ திருவிடம் கேட்டால் ஒன்றுமே தெரியாது அவனுக்கு. இடைவேளை நேரத்தில் துர்கா அவனை திரும்பி பார்க்க, அவளைத்தான் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் திரு. அவன் நெற்றியில் தன் வலது கையால் லேசாக தட்டியவள் “படம் முடிஞ்சு போச்சு..” என்று கூற, “கிளம்பலாமா ” என்று எழுந்து விட்டான் அவன். துர்கா அடக்கமுடியாமல் சிரித்து அவன் கையை இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டாள். திருவுக்கு அது இடைவேளை என்பது அப்போதுதான் புரிய அசடு வழிந்தான் அவன். துர்காவுக்கு திருவின் இந்த அசட்டுத்தனம் பிடித்திருந்தது. அவன் முழித்த முழியில் சிரிப்பாக வர, அவனை நெருங்கி அமர்ந்தவள் அவன் பாக்கெட்டிலிருந்து மொபைல் எடுத்து தங்கள் இருவரையும் செல்பி எடுத்துக் கொண்டாள். இருவரும் எழுந்து வெளியே வர, துர்கா கேட்டதை வாங்கி கொடுத்தான் திரு. ஆனால் அங்கிருந்த பொருட்களுக்கான விலை மிகவும் அதிகமாக தோன்றியது துர்காவுக்கு. அதுவும் சிக்கனமாக செலவு செய்தே பழக்கப்பட்டு இருந்தவளுக்கு அந்த பகல் கொள்ளையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்போதும் சினிமாவுக்கு செல்வதெல்லாம் பழக்கமே இல்லை என்பதால், அவளுக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது. ஆனால் திருவிடம் எதுவும் வாயை திறக்கவில்லை. ஒருவழியாக படம் முடிந்து கிளம்பியவர்கள் வீட்டிற்கு வர, அவர்கள் தெருவுக்குள் வண்டி நுழையவும் தன் வீடு நினைவு வந்தது துர்காவுக்கு.