பெரியம்மாவை சலிப்பாக பார்த்தான்

ஒரு மாசம் ஆகறதுக்கு முன்னாடியே அசந்து வருதா துரைக்கு? அவதான் உனக்கு எல்லாம்னு புரிய வை, அவதான் உனக்கு முக்கியம்னு அவ மனசுல பதிய வை. புரிஞ்சுக்கிற பொண்ணுதான், உனக்குத்தான் அவளுக்கு புரிய வைக்கிற டெக்னிக் தெரியலைஎன்றார்

கால்ல விழலையே தவிர எல்லா குட்டிக்கரணமும் அடிச்சுதான் பார்க்கிறேன். மசிய மாட்டேங்குறாளே? இன்னும் என்னதான் பெரியம்மா செய்ய சொல்றீங்க?” என சோர்வாக கேட்டான்

உன் குரங்கு சேஷ்டைய காட்டாம, அவளுக்கு என்ன பாதிப்பு தருதோ அதை தெளிய வை” 

சொல்ல வர்றதகாது கொடுத்து கேட்டாதானே?” 

அவ காது கொடுக்கிற மாதிரி வாயை தொறக்கிறது உன் சாமர்த்தியம்!” என அவர் சொல்ல, பாவமாக பார்த்தான்

நாளைக்கு ஆஃபீஸ் போகாதே, உங்க பிரச்சனைய சரி செய், பொறுமையா பேசுடாஎன்றவரிடம் சரியென தலையாட்டிக் கொண்டான்

இரவில் நேத்ரன் அவனது மனைவியோடு பெங்களூரு புறப்பட அவர்களை வழியனுப்ப கீழே வரவில்லை மித்ரா. அழைத்து வரச் சொல்லி சொன்னார் ருக்மணி. தலை வலியால் மாத்திரை போட்டுக் கொண்டு உறங்கி விட்டாள் என சமாளித்தான் சர்வா

மித்ராவின் இந்த செயலில் அதிருப்தி கொண்டார் ருக்மணி. “அவ பேச்சுக்கு மறு பேச்சு பேசாம ஆடுறியாடா?” என சர்வாவை கடிந்து கொண்டார்.

சர்வா பதில் தராமல் நிற்க அவரை முறைத்தவர் இலக்கியாவை பார்த்து, “நீ போய் சொல்லிட்டு வாஎன்றார்

இலக்கியா கணவனை கோவமாக பார்க்க, “டைம் ஆகிடுச்சு மாஎன்றான் நேத்ரன்

அவ அப்பாதான் பிரைவேட் ஜெட் வச்சிருக்காரே, ஃபிளைட் மிஸ் ஆனாலும் ஜெட் அனுப்பி வைப்பார்மகனை அதட்டிய ருக்மணி, இலக்கியாவை பார்த்து, “ஒரு வருத்தம் கோவம் உண்டானா அத அப்பவே சரி பண்ணிடணும். இல்லன்னா விரிசல் பெருசாகும். நான் இருக்கிற வரைக்கும் மட்டுமில்ல அப்புறமும் கூட விட்டுக் கொடுத்து அனுசரிச்சு போங்க, அதனால எதுவும் குறைஞ்சிட மாட்டீங்கஎன்றார்

மாமியாரிடம் தலையாட்டிக் கொண்ட இலக்கியா கணவனை முறைத்துக் கொண்டே லிஃப்ட் நோக்கி செல்ல சர்வாவும் சென்றான். அவனை தடுத்து விட்ட ருக்மணி பிரகல்யாவை அனுப்பி வைத்தார்

பாருங்க க்கா இப்போ வந்தவ அவ, அவளை தேடி நான் போகணுமாம். என்ன நினைச்சிட்டு இருக்காங்க இவங்க? பார்த்திட்டே இருங்க எங்க பங்க பிரிச்சு வாங்கிட்டு மொத்தமா தனியா போறோம்ஓரகத்தியிடம் பொரிந்தாள் இலக்கியா

இப்போ வந்தவன்னு நீ சொல்றது சரிதான் இலக்கியா. புது இடம் புது மனுஷங்க பழக நாள் எடுக்காதா? நீ இங்க வந்த புதுசுல உன்கிட்ட நான் ஈகோ பார்த்து நடந்திருந்தா நாம இப்போ நல்ல படியா பேசிட்டு இருக்க மாட்டோம். நீ அதிகமா எதுவும் பேச வேணாம், போயிட்டு வர்றேன்னு சொல்லிக்க போதும்என்றாள் பிரகல்யா

தன்னை தேடிக் கொண்டு இலக்கியா வரக்கூடும் என எதிர் பார்த்திருக்கவில்லை மித்ரா. கடமையாக சொல்லிக் கொண்டவளுக்கு அவளும் கடமையாக விடை கொடுத்தாள்

வேறு தேவையற்ற கசப்பான பேச்சுக்கள் வராமல் பார்த்துக் கொண்டாள் பிரகல்யா

நேத்ரனும் இலக்கியாவும் கிளம்பி விட்டனர். அன்றைய இரவு உணவுக்காக கூட கீழே வரவில்லை மித்ரா

ருக்மணி சர்வாவை கோவமாக பார்த்தார்

நான்தான் அவளுக்கு முடியலைன்னு சொன்னேன்ல பெரியம்மா?” எனக் கேட்டான்

அப்புறம் ஏன் நீ இங்க சாப்பிட உட்கார்ந்திருக்க, அவ தனியா சாப்பிடுவாளா? நீயும் போஎன சொல்லி அவனையும் அறைக்கே அனுப்பி வைத்தார்

சர்வா வந்த பிறகும் இலக்கியாவின் நடத்தையில் மனம் வாடிப் போயிருந்த மித்ரா சாப்பிட மறுத்தாள்

என்ன வருத்தம் கோவம்னாலும் வயித்த காய போடக்கூடாது மித்ரா. எனக்கு பசிக்குது ப்ளீஸ் வாயேன்கெஞ்சலாக அழைத்தான். எப்போதும் முறுக்கிக் கொள்பவளுக்கு தான் உதசீனப்படுத்தியும் தன்னிடம் கெஞ்சும் அவனது அந்த கரிசனை நெஞ்சை தொட சாப்பிட அமர்ந்தாள்

அன்றைய இரவின் அமைதியை கெடுத்துக் கொள்ள விரும்பாமல் மேலும் ஏதும் பேசாமல் விட்டான் சர்வா

அடுத்த நாள் காலை மித்ராவுக்கு வழக்கம் போல சென்றது. வீட்டிலேயே இருக்கும் சர்வாவை என்ன ஏதென்று கேட்டுக் கொள்ளாமல் இருந்தாள்

பத்து மணி போலதான் அறைக்கு சென்றாள். அந்த நேரத்துக்காக காத்திருந்தவனும் அவளிடம் சென்றான்

கைப்பேசி பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் சென்று அமர்ந்தான். அவள் கண்டு கொள்ளாமல் போகவும் கைப்பேசியை பிடுங்கி அவனே வைத்துக்கொண்டான்

எழ முற்பட்டவளை போக விடாதவன், “உனக்காகத்தான் வீட்ல இருக்கேன். நான் சொல்றதை காது கொடுத்து கேளு மித்ராஎன்றான்

அவனை விட்டு தள்ளி அமர்ந்து கொண்டவள் சொல் என்பது போல் பார்த்தாள்

அவளுக்கு நம்ம கல்யாண விஷயம் தெரியாது மித்ரா, அவதான் என்னை தேடி வர்றான்னு சொன்னேனே தவிர நான் மனப் பூர்வமா உன் கூடத்தான் இருக்கேன். அவளை நேர்ல பார்த்து எக்ஸ்பிளைன் பண்ணினா அவ வேலைய பார்த்திட்டு போயிட்டே இருக்க போறா. நீ ஃபீல் பண்ற அளவுக்கு எதுவுமில்லைஎன்றான்

ஆத்திரத்தோடு எழுந்தவள், “எனக்கும் நீதான் ஃபர்ஸ்ட் பாய் ஃப்ரெண்ட் இல்லை, முன்னாடியே ரெண்டு பேர் கூட பழகி பிரேக் அப் ஆகிடுச்சு. அதுல ஒருத்தன் இப்பவும் நான் சிங்கிலான்னு கேட்டு மெசேஜ் பண்ணிருக்கான். இப்போ என்ன செய்யலாம்னா நீ அவ கூட போநான்…” என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் அவனை காயப்படுத்தி விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பேசிக் கொண்டிருந்தாள்

ஆனால் அவள் முழுவதுமாக சொல்லி முடிக்கவில்லை, அதற்கு முன் அவளது தாடையை அழுத்திப் பிடித்து அவளை பேச விடாமல் செய்திருந்தான்

நீ பொண்ணே இல்லை சூனியக்காரி அதான் இப்படியெல்லாம் கேவலமா பேசுற!” என கோவமாக சொல்லிக் கொண்டே அவளுடமிருந்து கையை எடுத்தான்

கேவி கேவி அழுதவள், “இன்னும் என்னென்ன மறைச்சு வச்சிருக்கீங்க என்கிட்டருந்து, லிசின்னு ஒருத்தித்தான் இருக்காளா இல்லை அவ உங்க கூட இல்லாம இருந்த அஞ்சு வருஷ கேப்ல இன்னும் வேற யாரும் கூட இருக்காங்களா? இன்ஸ்டால்மெண்ட்ல கொல்லாம ஒரேடியா கொன்னுடுங்க என்னைஎன்றாள்

கைபேசியை எடுத்தவன் லிசிக்கு அழைத்தான். அவள் சென்னையில் இருப்பதை உறுதி செய்து கொண்டவன் அவளை பார்க்க எங்கு வரலாம் எனக் கேட்டான்

ஐடி நிறுவனம் ஒன்றில் பணி புரியும் லிசி இன்று மதியத்திற்கு மேல்தான் அலுவலகம் செல்வேன் என விவரம் சொல்லி, “வெளில மீட் பண்றது கஷ்டம், உனக்கு ஓகேன்னா என் அப்பார்ட்மென்ட் வா சர்வாஎன்றாள்

வீட்டின் முகவரி கேட்டுக் கொண்டவன் தன்னை கோவமாக பார்த்திருக்கும் மித்ராவை அழுத்தமாக பார்த்தான்

தலை சரி பண்ணிட்டு முகம் கழுவிட்டு கிளம்புஎன்றான்

எதுக்கு, அவளை எனக்கு அறிமுகம் செய்து வைக்க போறீங்களா?” 

உன்னை தெரிஞ்சுக்கிட்டு அவ என்ன செய்ய போறா? கொஞ்ச நேரம் முன்னாடி என்னை கோவ படுத்துற மாதிரி சொன்னியே அதை உன் வாயாலேயே அவகிட்ட சொல்லு. அப்போதான் குழப்பம் இல்லாம பின்னாடி நான் நல்லா வாழ முடியும்என்றான்

அத சொல்ல சீவி சிங்காரிச்சுகிட்டுதான் நான் வரணுமா? ஏன் இப்படியே வந்தா உங்க கவுரவம் காணாம போயிடுமா?” 

இப்படியே அழுது வடிஞ்ச முகத்தோட வந்து சொன்னீனா உனக்கு எம்மேல கொஞ்சமா இன்ட்ரெஸ்ட் இருக்கு போல, விலகி போவாளோ இல்லையோன்னு அவளுக்கு டவுட் வந்திடாது? என்னை விட்டு போறதுல எந்த கஷ்டமும் இல்லைனு அவளுக்கு புரிய வைக்க நல்லா ப்ளசன்ட்டா வந்து சொன்னதான் எடுபடும்என்றான்

கோவ மிகுதியில் குளியலறை சென்றவள் இன்னொரு முறை குளிக்கவே செய்தாள். சர்வா கீழே சென்று விட்டான்

அவன் அறைக்கு திரும்பிய போது அடர் ஜரிகை கொண்ட பட்டுப் புடவை, நகைகள், முகத்திற்கு முழு மேக்கப் என ஏதோ விஷேஷத்திற்கு போவது போல தயாராகி நின்றவளை திகைப்பாக பார்த்தான்

போதுமா என் மேக்கப்?’ என்பது போல பார்த்தவளிடம் சரிதான் என தலையாட்டிக் கொண்டான்

பேசிய உடனே புறப்படிருந்தால் இந்நேரம் வந்திருக்கலாமே இன்னும் உன்னை காணோமே என சர்வாவின் கைப்பேசிக்கு அழைத்துக் கேட்டாள் லிசி

திடீர்னு பிஸி ஆகிட்டேன், வந்திடுறேன்என சொல்லி அழைப்பை துண்டித்தவன் அணிந்திருந்த அதே ஆடையோடு கிளம்பினான்

அவர்கள் வெளியில் செல்ல போவதாக பெரியம்மாவிடம் சொல்லிக் கொண்டான். “சினிமா மால்னு போக போறதா நினைச்சேன், உன் பொண்டாட்டி இப்படி கிளம்பி வந்திருக்கா? குன்னூர்தானே இல்லை எதாவது கிராமமா இவ ஊரு? வெளில போறோம்னதும் இப்படி கிளம்பிட்டாளா நீ சொல்லி தர மாட்டியா?” எனக் கேட்டார் ருக்மணி

இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பது போல நின்றாள் மித்ரா

ருக்மணி அதிருப்தியாக சர்வாவை பார்த்தார்

இன்னொரு முறை கல்யாணம் பண்ணிக்க போறோம் பெரியம்மா, அதான் இப்படிஎன விளையாட்டாக சொல்லி சமாளித்த சர்வா, அதற்கு மேல் அங்கு நிற்காமல் மித்ராவின் கையை பிடித்துக்கொண்டு அங்கிருந்து அழைத்து சென்றான்

எத்தனை முறை கல்யாணம் பண்ணினாலும் குடும்பத்தை கூப்பிட்டுக்க மாட்ட, அப்படித்தானே?” எனக் கேட்ட ருக்மணியின் கேள்வி காற்றில் கரைந்தது

வீட்டிற்கு வெளியில் வரவுமே அவனது கையை உதறி விட்டு தள்ளி நடந்தாள். அவனும் அவளிஷ்டத்திற்கே விட்டான்

வழியில் காரை நிறுத்த சொன்னவள் நான்கு முழம் மல்லிகை பூ வாங்கினாள். அத்தனையையும் தலையில் வைத்து அவனை மிதப்பாக பார்த்தாள்

அவளின் நிலையில் கோவம் வரத்தானே செய்யும் என நினைத்தவன் சமாதானமாக பேச எண்ணி, “என்ன மித்ரா இதெல்லாம்? நார்மலா இரேன்என்றான்

உங்கள விட்டுட்டு போறப்பவும் அழுது வடிஞ்சிட்டுலாம் போக மாட்டேன். நல்ல சந்தோஷமா போவேன், அதை கொண்டாடி ஊருக்கே விருந்து வைப்பேன்என்றாள்

பின் சர்வா பேசவே இல்லை. வழியில் பரிசுப் பொருட்களுக்கான கடையில் நிறுத்தியவன், “ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ண போறேன், சும்மா போனா நல்லாருக்காது. நீயும் வர்றியா, சேர்ந்து செலக்ட் பண்ணலாம்என்றான்

என் ஆளுக்கு கிஃப்ட் வாங்க உங்களை கூப்பிட்டு தொந்தரவு பண்ண மாட்டேன்என அவள் சொல்லவும் முகம் இறுகிப் போனவன் அவளை காரிலேயே இருக்க சொல்லி விட்டு அவன் மட்டும் சென்றான்

பதினைந்து நிமிடங்கள் கழித்து பரிசுப் பொருளோடு வந்தவன் காரை எடுக்க, அவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது

லிசியின் வீட்டை நெருங்கும் நேரத்தில் மித்ராவுக்கு மனமும் கண்களும் கலங்கின. நான் இவனது வீட்டில் இருப்பதால் நன்மை நடக்கும், பிரதீப்க்கு சரியாகும் என நினைக்கிறான், அதுவரை ஒப்புக்கு மனைவியாக வைத்திருந்து பின்னர் இந்த லிசியை மணந்து கொள்வான் போலும் என நிஜமாகவே நினைக்க ஆரம்பித்து விட்டாள்.

எவளோட வாழ்ந்தாலும் நல்லா வாழு பதிதேவான்னு வாழ்த்திட்டு போவேன்னு நினைச்சிட்டியா? அப்படியாப் பட்ட தியாகி இல்லை நான்!’ மனதில் கருவிக் கொண்டாள்