மறுநாள் எல்லாரும் நேரம் கழித்து தயாராகி கீழே வந்தனர். ரணா எழுந்து, “தலைவலிக்குதே!” என்று தலையை பிடித்தாள். இவள் காவியனை திட்டியது அவளுக்கு மெதுவாக நினைவு வந்தது.
போச்சி..போச்சி..என்ன செய்துட்ட ரணா? “நீ காலி. இனி உன் பக்கமே காவியன் திரும்ப மாட்டானே!” என்று எழுந்து குளித்து தயாராகி ஹூட்டி போட்டு முகத்தை மறைத்து கொண்டே வந்து, ஹாலில் இருந்த ஊஞ்சலில் இடித்துக் கொண்டாள்.
எல்லாரும் அவளை பார்த்து, சாதாரணமாக பேசினர்.
அதீபன் அவளிடம் வந்து ஹூட்டியை எடுத்து விட, “விடுடா” என்று மேலும் அவள் போட்டுக் கொண்டாள். குனிந்தே அனைவரையும் பார்த்துக் கொண்டு, எல்லாரும் நம்மை இப்ப திட்டி தீர்த்திருக்கணுமே? அமைதியா இருக்காங்க.
எங்கே அம்மா? என்னை கொல்லும் வரை கோபம் வந்திருக்கணுமே? என்று சிவநந்தினியை தேட, அவள் அருகே அவர் இருப்பதை பார்த்து எழுந்தாள். அதிரதனும் காவியனும் வீட்டினுள் வர, போச்சு இவன் வேற என்று ஹூட்டியை மேலும் இழுத்து மறைத்துக் கொண்டாள். காவியன் அவளிடம் வந்து அவள் தலையிலிருந்து எடுத்து விட்டு அமர்ந்தான்.
அத்த, செம்மையா பசிக்குது? சாப்பிடலாமா? காவியன் கேட்க, வாங்க என்று அனைவரும் எழுந்தனர். சாப்பிட அமர்ந்தனர். சாப்பாடு பரிமாறப்பட அனைவரும் சாப்பிட்டு விட்டு அவளுக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டு சென்றனர்.
கனவா? நினவா? ஒன்றுமே புரியல? எல்லாரும் இப்படி நடந்துக்க மாட்டாங்களே? என்று செழியனை பார்த்தாள்.
பாப்பா, சாப்பிடாம என்ன பண்றீங்க? செழியன் கேட்க, அப்பா இப்ப..என்று அவர் அருகே அமர்ந்து அவளை பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த காவியனை பார்த்தாள். அவன் தன்னையா பார்க்கிறான்? என்று திரும்பி பார்த்தாள். அவன் புன்னகையுடன் அவளை பார்க்க, காவியன் என்னை பார்த்து சிரிக்கிறானா? என்று அவளால் நம்பவே முடியவில்லை. வேகமாக எழுந்து திரும்பினாள். நிதின் மீது இடித்தாள்.
பிரணா, சாப்பிடாம எங்க போற? அவன் கேட்க, ஹ..என்று அவனிடம் கேட்டுக் கொண்டே கண்ணை கசக்கினாள். மீண்டும் காவியனை பார்க்க, இம்முறை காவியன் அவளை பார்த்து ஒற்றை கண்ணடித்தான்.
மூச்சே நின்றது ரணாவிற்கு. இவன் என்ன செய்கிறான்? கனவு தான் போல என்று உணவுத்தட்டை தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உணவு தட்டெல்லாம் சுடாதும்மா என்று பாட்டி சொல்ல, அம்மாவா..என்னை எப்பவும் டி தான போடுவாங்க? அய்யோ இங்க என்ன நடக்குது? என்று கத்திக் கொண்டே மயங்கினாள்.
மீண்டும் கண்ணை விழித்த ரணா அருகே நேத்ரா இருந்தாள்.
அண்ணி, என்ன நடக்குது? நீங்களும் இப்ப என்னோட கனவுல வந்திருக்கீங்களா? என்று அவள் கேட்க, நேத்ரா புன்னகையுடன், கனவாகவா உனக்கு தெரியுது? இன்னும் போதை இறங்கலையோ? நேத்ரா கேட்டாள்.
இரவு நடந்த எதுவுமே உன் நினைவில் இல்லையா? நேத்ரா கேட்க, தெரியல அண்ணி. ஆனால் அந்நேரம் சரியாக எல்லாரிடமும் பேசுன?
பேசினேனா? என்ன பேசினேன்? யாரையும் அதிகமா திட்டிட்டேனா? ரணா கேட்க, இல்ல..இல்ல..இனி நடக்கும் எல்லாம் உனக்கு நல்லதாகவே இருக்கும் என்றாள் நேத்ரா.
வா..என்று நேத்ரா உணவை எடுத்து வைக்க, அவள் சாப்பிட்டுக் கொண்டே எல்லாரையும் பார்த்தாள்.
அண்ணி, எல்லாரும் ஏதோ டிஸ்கஸ் செய்வது போல் இருக்கே? ரணா கேட்க, மேரேஜ் விசயம் தான். நாளைக்கு எனக்கும் உன்னோட அண்ணாவுக்கும் மேரேஜ்ல்ல. அதான் பேசிட்டு இருக்காங்க.
நானும் நீங்களும் இல்லாமல் எல்லாரும் பண்றாங்க ரணா கேட்க, யார் சொன்னா? உனக்கு முக்கியமான வேலை இருக்கு. சாப்பிட்டு கிளம்பு என்றான் காவியன்.
எனக்கு வேலையா? ரணா கேட்க, ஏன் செய்ய மாட்டாயா? அவன் கேட்க, நீ என் மேல கோபமா இல்லையா? ரணா கேட்க, நானா? இல்லையே? என்று அக்கா, நீங்க செலக்ட் பண்ண போங்க என்று நேத்ராவை அனுப்பி விட்டு, சாப்பிட்டு வேற நல்ல ஆடையா மாத்திட்டு வா. நாம வெளிய போகணும் என்றான் காவியன்.
இவனா பேசுகிறான்? என்று அதிர்ச்சியுடன், நாம எங்க போறோம்? என்று கேட்டாள். வீடு, மஹால் டெக்கரேசனுக்கு ஆள் பேசிட்டாங்க. அவங்கள மீட் பண்ணனும். நீ டெக்கரேட்டிங் வொர்க் நல்லா செய்வியாமே? எல்லாத்தையும் செலக்ட் பண்ணனும். அவங்களோட போய் வாங்கி வரணும். எவ்வளவு வேலை இருக்கு. ம்ம்..சீக்கிரம் சாப்பிட்டு வா என்று அவன் சொல்லி விட்டு சென்றான் காவியன்.
அனைவரும் வேலையை பார்த்துக் கொண்டிருக்க, நேத்ரா அதிரதனுடன் அவள் அப்பாவின் ரகசிய அறைக்கு சென்றாள். உள்ளே சென்றதும் அவள் கண்ணீர் நிற்காமல் வர, அதிரதனும் திகைத்து பார்த்தான்.
அறை முழுவதும் புகைப்படங்கள். செழியன் குடும்ப மொத்தமும் இருந்தனர். அதிரதன் பள்ளிப்பருவம், வெளிநாட்டில் அவன் படித்த கல்லூரியில் என அதுவரை இருந்தது. இருவரையும் கண்கலங்க வைத்தது. யசோவுடனான பரணியின் புகைப்படம். நேத்ரா அதிரதனை கட்டிக் கொண்டு கதறி அழுதாள். வெளியே விளையாட்டு பொருட்களுடன் இருந்த தர்ஷன் அவர்களிடம் தத்தி தத்தி நடந்து வந்தான்.
அவர் அறையை அதிரதன் துலாவ, நேத்ரா அப்பா பரணியின் டைரி கிடைத்தது. அதில் அம்மா, அப்பாவை இழந்த பரணி அக்காவை சந்திக்க வந்த போது செழியனுடன் சந்தோசமாக இருப்பதை பார்த்து ஒதுங்கியது; திருமணத்திற்கு பின் அக்காவை பார்க்க வந்த பரணி யசோதாவை பார்த்து கண்ணீருடன் சென்றது; அக்காவை சந்தித்து தன் மருமகன் அதிரதனுடன் பேசியது. தன் பொண்ணும் அவனும் நண்பர்களானதை பார்த்து நெகிழ்ந்தது; அவரது வீட்டுச்சூழல்; தன் மனைவி யசோதாவை பார்க்க சென்றாக அவதூறாக பழி போட்டு தவறாக பேசியது; பிரச்சனை ஆரம்பித்தது; டிவோர்ஸ் செய்ய முடிவெடுத்தது எல்லாம் இருந்தது.
முக்கிய பிரச்சனையான அந்த பரத் அந்த சிறுவயதிலே நேத்ராவை எங்கோ சந்தித்து காதலுற்றது. பின் நேத்ரா படிக்கும் பள்ளியில் அவளுக்காக சேர்ந்தது. அவன் மிரட்டியதில் பயந்து தான் பரணி நேத்ராவை அதிரதன், நிதின் இருக்கும் பள்ளியில் சேர்த்தது. இடையிடையே பரணிக்கு பரத் கொடுத்த மிரட்டல், அவள் திருமணம் கூட முதலிலே அதிரதனுடன் செய்வதாக ஆசையாக அவர் எழுதி இருந்தார். அதிலும் அவன் மிரட்டியது விக்னேஷ்வரனுக்கு தெரிய வர, அவனுடனான திருமணத்தை தயார் செய்தது. பின் அவன் விக்னேஷ் இல்லை என்று அறிந்து திருமணத்தை நிறுத்தியது, செள்ளியன் தினகரன் வாயிலாக வந்ததால் திருமணம் செய்து வைத்தது. ஆனால் அவனையும் பரத் மிரட்டி தான் திருமணம் செய்ய வைத்திருக்கான் என அறிந்து அவனை பார்க்க செல்வதாக முடித்து இருந்தார்.
அனைத்தையும் பார்த்தவர்களுக்கு பரத்தை பார்க்க தான் இவர் சென்றிருக்கிறார் என்றும் அவன் தான் கண்டிப்பாக அப்பாவை கொன்றதாகவும் இருக்கணும் என்று நினைத்தனர்.
எழிலனிடம் ரவிக்குமாரை பார்க்க செல்வதாக எதற்கு சொல்லணும்? அதிரதன் கேட்க, அவரிடம் இருவரும் கால் செய்து கேட்க, அவரும் யோசனையுடன் அவரை பார்த்தேன். என்னோட கம்பெனி வொர்க்கர் யாரையோ பார்க்க வருவதாக சொன்னதாக என்று அவர் சொல்ல,
பரத் உங்க வொர்க்கரா? பரத்தா? ஆமா..என்னோட கம்பெனியில தான் மேனேஜராக இருந்தான்.
மேனேஜரா?
வினு, அவன் கொன்ற முதல் ஆள் உன் அம்மா, அப்பா தான் அதிரதன் சொல்ல, இல்ல..எனக்கு அப்படி தோணலை. அவனை வச்சு யாரோ செஞ்சிருக்காங்க என்றாள் நேத்ரா.
மாப்பிள்ள நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நான் ஒன்று சொல்லவா? ரவிக்குமார் கேட்க, சொல்லுங்க அங்கிள் என்றான் அதிரதன்.
உன்னோட சித்தப்பாவுக்கும் அவனுக்கும் பழக்கம் இருக்கு என்றார் அவர் பீடிகையுடன்.
தெரியும் சித்தப்பா. நாம் தேடும் கொலைகாரனே ராமவிஷ்ணு சித்தப்பா தான். ஆனால் வினு அப்பாவை எதுக்கு? அதிரதன் கேட்க,.
எங்கே மாமா குடும்பம் உள்ளே வந்தால் தனக்கென ஏதும் இல்லாமல் போய் விடுமோ? என்று செய்திருக்கார். ஆனால் பரத்துக்கும் அவருக்கும் என்ன பழக்கம்?
மாப்பிள்ள, அவங்க இரத்த உறவு. அந்த பையன் அடிக்கடி உன்னோட சித்தப்பாவை பார்க்க செல்வதால் அவனை பற்றி ஆராய்ந்தேன். அவன் அவரின் மகன். யாரோ பைத்தியக்கார பொண்ணு வாழ்க்கையை அழித்து தான் உன் சித்தப்பா இவனை மகனாக்கினான். அதுவும் நம் எல்லாரையும் பழிவாங்க என்று தோன்றுகிறது என்றார் அவர்.
மகனா? அவன் எனக்கு தம்பியா? அதீபனுக்கு மட்டும் இது தெரிந்தால் உடைந்து விடுவானே? என்று அதிரதன் சொல்ல, வெளியே இருந்த பொருட்கள் அனைத்தும் உடைந்தது. வெறியுடன் அனைத்தையும் உடைத்துக் கொண்டிருந்தான் அதீபன். பக்கத்தில் தாட்சாயிணியும் ரேவதியும் அவனை தடுக்க, முடியாமல் கண்ணீருடன் அவனை பார்த்தனர்.
அங்கிள், “நாம அப்புறம் பேசுவோம்” என்று போனை வைத்து விட்டு அதிரதன் அதீபனை தடுத்து அணைத்துக் கொண்டே இந்த விசயம் இப்பொழுதைக்கு யாருக்கும் தெரியக்கூடாது. இன்னும் இரு நாட்கள் அவன் விழித்து விடுவான் என்றான் அதிரதன்.
யார சொல்றீங்க? நேத்ரா கேட்டாள்.
விழித்த பரத் நான் எங்கே இருக்கேன்? என்று துவல, அது ஹாஸ்பிட்டல்.
என்னாச்சு? நான் எப்படி இங்கே வந்தேன்? அவன் கத்த, பாஸ் இரண்டு மாதமாக இங்கே தான் இருக்கோம் என்று ஒருவன் சொல்ல, அவன் முகத்தை கண்ணாடியில் பார்த்து பக்கத்திலிருந்த பொருளை எடுத்து உடைத்தான்.
அவனுடைய பழைய பரத்தான முகம். அப்பா..அவன் கத்த, பாஸ் ஆக்சிடண்ட்ல்ல உங்கள் முகம் கார் டயர் உரசியதில் சிதைந்து விட்டது. அதனால் உங்களது பழைய முகத்தையே அப்பா சர்ஜரி செய்ய சொன்னார் என்று அவன் சொல்ல, அவனை கோபத்தில் அடித்தே கொன்றான் பரத்.
நான் என்னோட நேத்துவை பார்க்கணும் என்று எழுந்தான். பாஸ் உங்களை போக விடக்கூடாதுன்னு சொன்னார் என்று காட்டெருமை பலமுள்ள பத்து ஆட்கள் அவனை மறித்து நின்றனர்.
ஏன்? ஏன்? ஏன்? அவன் கத்த, ராமவிஷ்ணு பரத்திற்கு கால் செய்து நேத்ராவிற்கு அதிரதனுடன் திருமணம். இப்ப அவளை நீ எதுவும் செய்யக்கூடாது. திருமணம் முடிந்த பின் முன் போல அவளை எடுத்துக் கொள் என்றார்.
“ம்ம்…காதலித்தவளை அடுத்தவன் தொடும் போது வலிக்கும் வலியை அந்த செழியன் மகனும் அனுபவிக்கணும்” என்று பயங்கரமாக கத்தினார். பரத்தும் அமைதியானான்.
பரத்திற்கு நடந்து விபத்தை கூறிய அதிரதன், அவன் கண்டிப்பாக வேகமாகவே விழிப்பான் என்று நேத்ராவை பார்த்து, நீ அவனுக்கு பயந்து தான திருமணத்தை வேகமாக வச்சுக்கணும்ன்னு சொன்ன? ஆனால் நான் ஒத்துக் கொண்டதற்கும் காரணம் இருக்கு என்றான் அதிரதன்.
இருவரும் விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணிக்கலையா? ரேவதி கேட்க, அதிரதனும் நேத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, வேலை இருக்கு. பார்க்கலாம் என்று சென்றனர்.
ரேவதி அவர்களை பார்த்து விட்டு, “தாட்சு மாப்பிள்ளைய அறைக்கு அழைச்சிட்டு போ” என்று அதீபனை பார்த்து, “நாங்க எல்லாருமே உங்களுக்காக இருக்கோம். அதை மட்டும் நன்றாக நினைவில் வச்சுக்கோங்க” என்று சொல்லி விட்டு தன் மகளை பார்க்க, தாட்சாயிணி அதீபனை அழைத்து சென்றாள்.
இரவு சாப்பாட்டை முடித்து அனைவரும் களைப்புடன் உறங்க சென்றனர். ரணா மாடியின் மேற்கூரை போன்ற பகுதியில் அமர்ந்து கண்ணீருடன் நிலவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நீ தூங்கலையா? என்று சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். காவியனும் அவளருகே வந்து அமர்ந்து அவள் கண்ணீரை பார்த்து, எதுக்கு அழுற? என்று கேட்டான்.
“நான் அழவில்லை” என்றாள். காவியன் அவள் கையை பிடிக்க, அவள் அவனை பார்த்தாள்.
“சொல்லு ரௌடி பேபி?” என்றான்.
என்ன சொன்ன? அவள் கேட்க, நான் தப்பா ஏதும் சொல்லலையே? என்றாள்.
நீ என்னையா சொன்ன? இது நிஜம் தானா? இன்று என்னிடம் ரொம்ப நல்லவிதமா நடந்துக்கிற? ரணா கேட்க, ஆமா நான் தான் உன்னோட மாமால்ல. செய்யக்கூடாதா? அவன் கேட்க, அவள் விரக்தி சிரிப்பை உதிர்த்தாள்.
“ரணா” காவியன் அழைக்க, சொல்லு என்றாள்.
“இங்க பாரேன்” என்று காவியன் அவளை அவன் பக்கம் திருப்பி நெருங்கி அமர்ந்து அவன் இரு கைகளையும் ரணாவின் கன்னத்தில் வைத்தாள். அவள் விழித்து அவனை பார்த்தாள்.
உனக்கு எதுவுமே நினைவில்லையா? அவன் கேட்க, என்ன? என்று ரணா கேட்டாள். காவியன் அவள் கண்களை பார்த்துக் கொண்டு கன்னத்தை அவன் கையில் ஏந்தியவாறு காதலுடன் “ஐ லவ் யூ மை ரௌடி” என்றான்.
ரணா அதிர்ந்து காவியனை பார்க்க, நீ மறந்துட்டேல்ல. உனக்கு நினைவுபடுத்துகிறேன் என்று அவள் இதழ்களில் முத்தமிட்டான்.
காவியன் என்று கண்ணீருடன் அவனை பார்த்தாள் ரணா. அன்று பேசியது போல் காவியன் பேச, ரணா அவனை இறுக அணைத்துக் கொண்டு அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு தன் காதலை வெளிப்படுத்தினாள்.
அதிரதன்- நேத்ரா திருமணத்திற்காக அதிகாலையிலே எழுந்து தயாரானார்கள் . பாவையவளோ மஞ்சலாகி தன் அழகை மெருகேற்றும் விதமாக ஆரஞ்சு நிறத்தில் பச்சை நிற ஜரிகையுடன், தலையில் கொண்டையிட்டு முழுவதும் பூ சுற்றி அவளுடைய நீளமான கூந்தலை பின்னி பூக்களால் அதனை நிரப்பி, மை விழி மங்கையவளாக பொழிவுடன், ஜொழிக்கும் ஆபரணங்களுடனும் மேடையில் ஏறினாள்.
வெள்ளை நிற பட்டுச்சட்டை வேஷ்டியுடன், கழுத்தில் செயினும் கையில் பிரேஸ்லெட்டும் அழகான மயக்கும் சிரிப்புடன் கண்ணில் காதலுடன் வரும் தன்னவளை ரசித்துக் கொண்டிருந்தான் அதிரதன்.
ப்பா..என்று சத்தம் கேட்டு பின்னே திரும்பிய அதிரதன் தன் மகன் தர்ஷனை மடியில் அமர்த்திக் கொண்டான். கை கூப்பி சபையினரை பார்த்து வணங்கி விட்டு அதிரதன் அருகே அவனையும், தன் மகனையும் ரசித்துக் கொண்டே அமர்ந்தாள் வினு நேத்ரா.
சடங்குகள் ஓடிக் கொண்டிருக்க, அனைவரும் ஜோடியாக நின்றனர். ரணாவும் காவியனும் காதலை பரிமாறியதும் அனைவரும் அறிந்ததே. அனைவரும் மகிழ்வுடன் இருக்க, நேத்ராவின் கழுத்து வளைவில் பொன் தாலியை அணிவித்து தன் மனைவியாக்கி விட்டு, “வினு ஐ லவ் யூ” என கத்திக் கொண்டே நேத்ரா கன்னத்தில் முத்தமிட்டாள்.
எல்லாரும் ஓ..வென கத்தி ஆர்ப்பரிக்க, அவள் வெட்கத்தில் சிவந்தாள். பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் தம்பதியினருக்கு வாழ்த்தை தெரிவித்தனர்.
“ஆத்வி ஐ லவ் யூ” என்று நிதின் சத்தமிட்டு இதழ் குவித்து ஆத்விகா கன்னத்தில் முத்தமிட வந்தவனை தடுத்த ரணா, எனக்கு தெரியும்டா மாமா. நீ செய்வன்னு? அக்கா..இந்த பக்கம் வா என்று ஆத்விகாவை ரணா மறைக்க, ஏய் “குள்ளச்சி வழிய விடு” என்றான் நிதின்.
“குள்ளச்சின்னு சொல்லாத” என்று நிதினிடம் எப்பொழுதும் சொல்லும் அதிரதனுடன் இன்று காவியனும் சேர்ந்து கொள்ள ரணா ஓடிச் சென்று தன் அண்ணனுக்கும் காவியனுக்கு முத்தத்தை பரிசாக அளித்தாள். இப்படியே வேடிக்கையாக நிமிடங்கள் கரைந்து முதலிரவிற்கான நேரமும் வந்தது.
நேத்ரா தயாராகி அதிரதன் அறைக்குள் கால் எடுத்து வைக்க, அறை இருட்டானது. அவள் பயந்து அப்படியே நிற்க, சற்று நேரத்தில் அறை வெளிச்சமானது. நேத்ரா பதட்டமாக அதிரதனை பார்க்க, அவன் கத்தியை பரத் கழுத்தில் வைத்திருந்தான். அவனுடன் அதீபனும் நிதினும் அவ்வறையில் இருந்தனர்.
டேய், “இவனை பிடிச்சு கட்டுங்கடா” என்று அதிரதன் அதீபன், நிதின் பக்கம் பரத்தை தள்ளினான். பரத் நேத்ராவை பார்த்து, “நேத்து என்னை விட சொல்லு. இல்ல அவனை கொன்றுவேன்” என்று கத்திக் கொண்டிருந்தான். அவள் பயத்துடன் அதிரதன் அருகே ஓடிச் சென்று அவன் கையை பிடித்து அவன் முதுகின் பின் மறைந்து கொண்டாள்.
நிதினும் அதீபனும் பரத்தை அவ்வறையிலே கட்டி வைத்து விட்டு நகர்ந்தனர்.
இவனை பார்த்து எதுக்கு பயப்படுற வினு? என்று அவளை அதிரதன் முன் இழுக்க, நீ நேத்துவை தொடக்கூடாது என்று பரத் கோபமாக கத்தினான்.
நேத்ரா மெதுவாக அவனை எட்டி பார்த்து விட்டு, அதிரதனை பார்த்தாள்.
பரத்தை பார்த்து, எனக்கு முன் முகம் கூட நினைவில் இல்லை. எனக்குரிய எல்லாத்தையும் எடுத்துட்டு நான் வேணும்ன்னு சொல்ற? என்று அவள் சத்தமிட்டாள்.
வினு, அவனை விடு. மாமா எந்த மூடுல இருக்கேன்? நீ அவனோட சண்டை போட்டுட்டு இருக்க? என்று அவள் புடவையின் இடையே கையை நுழைத்து நேத்ராவை இழுத்தான் அதிரதன்.
டேய், “அவள தொடாத” பரத் கத்த, நேத்ரா அவனை பார்த்து விட்டு அதிரதன் கழுத்தில் கைகளை மாலையாக போட்டுக் கொண்டு, “மாமா இவன் இருப்பது தொந்தரவா இருக்கே!” என்றாள். “நேத்து இப்படி பேசாத” என்று பரத் சத்தமிட்டான்.
டேய் வாய மூடு, நான் எனக்கு தாலி கட்டிய என்னோட மாமாகிட்ட பேசிட்டு இருக்கேன். சும்மா சும்மா கத்துற? பாருங்க மாமா. இவனை வெளிய அனுப்புங்களேன் என்று அதிரதன் கன்னத்தில் முத்தமிட்டாள் நேத்ரா.
நேத்து வேண்டாம். எனக்கு கோபம் வருது. உன்னையும் கொன்றுவேன் என்று பரத் கத்த, நேத்ராவை நகர்த்தி கோபமாக அதிரதன் அவன் கழுத்தை பிடித்து, யார கொன்றுவேன்னு சொன்ன? என்று நெறித்தான்.
“அதி அவனை விட்டுருங்க” என்று நேத்ரா அதிரதன் கையை எடுத்து விட்டு அதிரதனை வெளியே அழைத்து வந்தாள். மாமா…என்று நேத்ரா கத்த, அனைவரும் அங்கே வந்தனர்.
மாமா எங்க அறையில் இருப்பவனை போலீஸில் ஒப்படைங்க என்று செழினிடம் சொல்ல, உங்க அறையில் யார் இருக்கா? என்று சிவநந்தினி நகர, அவர் கையை பிடித்த செழியன், அவனை உங்களது குளியலறையில் அடைத்து வையுங்கள் என்றார்.
வினுவை தூக்கிய அதிரதன், “இதுக்கு மேல அறையை விட்டு வெளிய வந்த அப்புறம் நடக்கும் விபரீதத்திற்கு நான் பொறுப்பல்ல” என்றான்.
“நீ வெளிய வராம இருந்திருக்கணும்” என்றான் அவன். அனைவரும் புன்னகையுடன் சென்றனர்.
அதிரதன் நேத்ராவை படுக்கையில் போட்டு விட்டு, பரத் கையை அவிழ்த்து விட்டான். படுக்கையில் இருவரையும் பார்த்தவாறு படுத்திருந்த நேத்ராவை பரத் விழுங்குவது போல் பார்த்தான்.
அதிரதன் அவன் கைகட்டை மட்டும் அவிழ்க்காமல் குளியலறைக்கு இழுக்க, பரத் அதிரதனை தள்ளி விட்டு நேத்ரா அருகே வர, அவள் பயந்து எழுந்து படுக்கைக்கு பின் நின்றாள். அதிரதனுக்கும் பரத்திற்கும் சரியாக சண்டை நடக்க இருவருக்குமே அடிபட்டது.
அதிரதன் அடி வாங்குவதை பார்க்க முடியாமல் நேத்ரா அவர்களை தடுக்க, பரத் அவளது புடவையை பிடித்து இழுத்தான். அவிழாமல் பிடித்த நேத்ரா அவனை அடிக்க, அவனுக்கா வலிக்கப் போகிறது. அவனுக்கு சுகவதையாக இருந்தது.
வினு என்று சத்தமிட்ட அதிரதன் அவளை தன் பக்கம் இழுக்க, பரத் மீண்டும் அதிரதனுடன் சண்டைக்கு வந்தான். நேத்ரா அவனை தள்ளி விட தலையில் அடிபட்டு பரத் மயங்கினான்.
வினு, என்ன பண்ணீட்ட? அதிரதன் கேட்க, யோசித்த நேத்ரா நிதினை அழைத்து விசயத்தை சொல்ல, அவனும் அதீபனும் பரத்தை காரில் போட்டு ஓர் ஹாஸ்பிட்டலுக்கு வெளியே போட்டு விட்டு சென்றனர்.
அதிரதன் மனவருத்தமுடன் அமர்ந்திருந்தான். நேத்ரா அவனருகே வந்து, கோபமா இருக்கீங்களா? எனக் கேட்டாள். அவன் திரும்பி அமர்ந்து கொண்டான்.
அச்சோ, “என்னோட மாமா என் மேல கோபமா இருக்காங்களே!” என்று அதிரதன் கையை நேத்ரா பிடித்தாள். அவன் அவளை பார்த்து “சும்மா ஏதும் பேசாம படுத்து தூங்கு” என்றான்.
தூங்கணுமா? என்று அதிரதனிடம் நேத்ரா கேட்க, உனக்கு தான் நேரம் தேவைப்படுமே? என்றான்.
நேத்ரா எழுந்து கட்டியிருந்த அவன் கையை எடுத்து விட்டு, அவன் மடியில் அமர்ந்து அவன் கையை இழுத்து அவள் இடையுடன் அணைத்துக் கொண்டாள். அவள் தலையில் சூட்டிய பூவின் மணம் அவனை இழுக்க, அதிரதன் அவளை படுக்கையில் போட்டு அணைத்துக் கொண்டான்.
சற்று நேரத்தில் அதிரதன் அறை பால்கனிக்கு வெளியே நின்ற பரத்திற்கு நேத்ராவின் சுகமான முணங்கல் சத்தத்தில் வெறியானான். இதற்கு முன் பரத் அவளை அடைந்த போது உணர்வில்லாமல் கிடந்த நேத்ராவின் உணர்வுகள் அதிரதனுக்கு கிடைத்தது பரத்தை அதிக கோபத்திற்குள்ளாக்கியது. அவன் உள்ளே வர முடியாமல் வெறியுடன் கிளம்பினான்.
காலை எழுந்த நேத்ரா அதிரதன் தூங்குவதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். பின் பக்கமிருந்த போர்வையை உடலில் சுற்றிக் கொண்டு குளியலறைக்குள் செல்ல இருந்த நேத்ராவை தாவி வந்து நிறுத்தி இழுத்து தூக்கினான் அதிரதன்.
எல்லார் முன்னாடியும் என்னை மாமான்னு கூப்பிடுறேன்னு சொல்லு. நான் விட்டுருறேன்.
சரி, கூப்பிடுறேன். என்னை விடுங்க என்று அவனிடமிருந்து நேத்ரா குளியலறைக்குள் ஓடினாள்.
கோவிலுக்கு சென்றனர். செழியனும் ரவிக்குமாரும் பேசிக் கொண்டிருந்தனர். அதிரதனும் பசங்களும் தர்ஷனுடனும் யுவினுடனும் விளையாண்டு கொண்டிருக்க, பொண்ணுங்க கோவிலினுள் பூஜையில் இருந்தனர்.
சற்று நேரத்தில் அதீபன் உள்ளே வர, கோவிலினுள் அவர்கள் குடும்பத்து பொண்ணுங்க யாருமே இல்லை. அனைவரும் அவர்களை தேடினர்.
அதிரதனுக்கு போன் வர, அவன் எடுத்தான். பரத் பயங்கரமாக சிரித்தான். அவன் தான் அனைவரையும் கடத்தி இருக்கான் என்று ராம விஷ்ணு அவனுடன் இருப்பதும் அதிரதனுக்கு புரிந்தது. அவன் அம்மாவுக்கும் பெரிய ஆபத்தாயிற்றே. கோவில் புட்டேஜை பார்த்து விட்டு நேத்ராவின் போனை ட்ரேஸ் செய்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தனர் ஆண்கள். அடியாட்கள் அதிரதனையும் அவன் குடும்பத்தையும் பிடித்து கட்டினர்.
பின் பொண்ணுங்களை முன்னே கொண்டு வர, அனைவர் கையும் கட்டப்பட்டு இருந்தது.
சிவநந்தினி, நேத்ரா, ரணா மட்டும் அங்கே இல்லை. செழியன் சத்தமிட, அவருக்கு தன் தம்பி தான் காரணமென்று தெரியாதே? அப்பா அமைதியா இருங்க என்றான் அதிரதன்.
எதுக்குடா அண்ணா கத்துற? நந்து என்னோட தான் இருக்கா? என்று சத்தம் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர். சிவநந்தினியும் நேத்ராவும் அழும் சத்தம் கேட்டது.
அண்ணா, முக்கியமான விசயம். நம்ம குடும்பத்து காதல் எல்லாமே வேற லெவல். நானும் அப்பாவும் காதலுக்காக தான் எல்லாமே செய்தோம். யாரும் காதலை விடலை. ஆனால் நேத்து..அவன் ஆரம்பிக்க,
வாய மூடுடா நாயே. நானே சொல்றேன் என்ற நேத்ரா, மாமா உங்களுக்கு என்னோட கிரஷ் யாருன்னு தெரியணும்ல்ல? அவன் வேறு யாருமில்லை. நம்ம நிது தான் என்றாள்.
வினு, நானா? என்ன சொல்ற? நிதின் கேட்க, ஆத்விகா முகம் வாடியது.
ஆமா நிது, என்னோட கிரஷ் நீ தான். நீ என்றால் நீயில்லை. உன் முதல் காதல் தான் என்னை ஈர்த்தது.
அக்கா, புரியுற மாதிரி பேசுறியா? எழிலன் சத்தமிட்டான்.
அவனோட முதல் காதல் ஆத்வி தானே. அவன் ஆத்வியை பற்றி அவனே அறியாமல் என்னிடம் நிறைய முறை பேசி இருக்கான். அவனை யாருமில்லாத அநாதைன்னு சொல்லும் போது ஆத்வி ரொம்ப கஷ்டப்படுவதை பார்த்து தான் வெளியே தங்க ஆரம்பித்தான். அவன் காதல் கதையை கேட்ட எனக்கு அவனை பிடிக்க ஆரம்பித்தது. எப்ப ஆத்வி அவனை பள்ளிக்கே வந்து பார்க்க ஆரம்பித்தாலே அப்பொழுதிலிருந்தே அவனிடமுள்ள ஈர்ப்பு குறைந்தது. அவர்களை சேர்த்து வைக்க தான் நானும் அவன் கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் சென்றேன். எனக்கு முன்னதாகவே தெரியும்.
நான் ரொம்ப கஷ்டப்பட்ட சமயம் அது. அப்பொழுது என்னை சிரிக்க வைத்து நல்லா பார்த்துக்கிட்டான் நிது. “தேங்க்ஸ் நிது” என்று சொல்லி அழுதாள்.
அப்புறம் என்னோட காதல்? ஆத்வி பயப்படாத. காதல் நிது மேல இல்லை.
எனக்கு தெரியும்மா என்ற சிவநந்தினி. நீ காதலித்தது என் மகனை தானே! அதுவும் பத்து வருட காதல்லம்மா என்று அவர் கேட்க, அதிரதன் திகைத்து அவன் அம்மாவை பார்த்தான்.
ஆமா பப்பூ, என்னோட மருமகளோட அறையில தான இருந்தோம். அவளிடம் நிறைய புகைப்படங்கள் இருந்தது. நீ வெளிநாட்டிற்கு போன பின் தான் புகைப்படம் இல்லை. மற்ற படி ஒரு ஆல்பமே வச்சிருக்காடா என்று சிவநந்தினி அழுதார்.
உங்கள பத்தி எனக்கு எல்லாமே தெரியும்ன்னா அது என் காதலால் நாங்க உங்களை பின் தொடர்ந்ததனால் மாமா. ஆனால் உங்களிடம் காதலை சொல்ல நினைத்தேன். நீங்க தான் பேசவே மாட்டீங்களே! கிரீட்டிங் நம் வகுப்பறையில் உங்களது பையில் வைத்தேன். நீங்க தான் அதை குப்பையில போட்டுட்டு போயிட்டீங்க என்று நேத்ரா அழுதாள்.
எழிலன் அதனால் தான் உங்க மேல கோபமா இருந்தான். என் குடும்பத்துக்கே என் காதல் தெரியும். என் காதல் பிடிக்காமல் தான் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாக நானும் எழிலனும் நினைத்தோம். ஆனால் அப்பா பெரிய பிரச்சனையில் இருந்திருக்கார். இது தெரியாமல் நான் பெரிய முட்டாள் மாமா. அப்பாவுக்கும் உங்களை பிடிச்சிருக்குன்னு தெரிந்த பின் தான் எனக்குள் நிம்மதியும் அமைதியும். இப்படி சொந்த அத்தை மகனாக இருப்பீங்கன்னு எனக்கு தெரியல மாமா என்று அவள் அழுதாள்.
எனக்கு தெரியுமே? என் நேத்து உன்னை தான் காதலிக்கிறால் என்றும் நீ என் அண்ணன் என்றும் நன்றாக தெரியும். நான் நேத்துவை பத்து வயதிலே பார்த்துட்டேன். ரோடு கிராஸ் பண்ணும் போது குட்டிப்பையனுக்கு உதவினேல்ல நினைவிருக்கா நேத்து? அந்த பையன் நான் தான். என் உயிர் உனக்கு தான் சொந்தம் நேத்தும்மா. உன் பக்கத்து ஊர் திருவிழாவில் தான் நடந்தது என்றான்.
“எனக்கு தெரியாது” என்றாள் அழுது கொண்டு.
அழாத நேத்து, நானும் உனக்கு மாமா தான். நீ அழும் போதெல்லாம் எனக்கு ரொம்ப வலிக்குதுடா. ஆனாலும் உன்னை அழ வைப்பது நீ எனக்கு வேண்டும் என்பதால்..உடல் மேலுள்ள ஆசையில்லை நேத்து. ஆழமான உன் பாசத்தால், அக்கறையால் வந்த காதல் என்று அவன் பேச,”நிறுத்து” என்று அழுது கொண்டே கத்தினாள்.
அழாத நேத்து..
என் பக்கத்துல்ல வராத. எனக்கு திருமணம் நடக்கும் போது என் மாமா நினைவில் தான் செள்ளியனிடம் தாலியை வாங்கிக் கொண்டு படுத்தேன். ஆனால் அது நீயென தெரியாமல் போனது. உன்னை பார்த்தாலே அருவருப்பா இருக்கு. பக்கத்துல வராத என்றாள்.
பக்கத்துல வரக்கூடாதா? ஏன் வரக் கூடாது? நீ எப்பொழுதும் என்னுடன் தான் இருக்கணும். நம் குழந்தை இறந்ததற்கு காரணமான அந்த செள்ளியன் அஷ்வினியை கொன்றவன் நான். உனக்காக உன் பின் சுற்றிய ஒன்பது பேரை கொன்றவன் நான். இன்னும் ஒன்று தான செய்ய தயங்க மாட்டேன் என்று அதிரதனை குறிப்பு காட்டினான்.
வினு..என்று கண்ணீருடனும் காதலுடனும் அதிரதன் அழைக்க, மாமா என்னை மன்னிச்சிருங்க. “நான் அடுத்த ஜென்மத்தில் காதல் சொல்ல வந்தால் பாருங்க பேசுங்க” என்றாள்.
என்ன சொல்ற வினு? அதிரதன் கத்த, “அக்கா” என்று வினு என்று அனைவரும் சத்தமிட்டனர்.
மாமா, நான் எப்படி சொல்றது? நேற்று நாம் இருந்தது போல் இவனுடன் என்னால் முடியாது. ஒருநாள் உங்களுடன் வாழ்ந்துட்டேனே? அதுவே போதும் என்று அழுது கொண்டே பரத்தை பார்த்து, என் மாமாவிற்கு உரிய எது வேண்டுமானாலும் உனக்கு கிடைக்கும் என்னை தவிர என்று மாடியின் உச்சியில் நின்றாள்.
நேத்து வேண்டாம். நீ எனக்கு வேணும் அவன் கத்த எல்லாரும் பதறினர். அப்பொழுது காகம் கத்தும் சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வந்து பார்த்தனர். பாதி கட்டிட வேலையுடன் நின்றிருந்த அந்த உயர்ந்த கட்டிடத்தில், புடவை இல்லாமல் ரவிக்கையும் பாவடையுமாக, கை, கால்களில் போட பட்டிருந்த மெகந்தியுடன் அந்த வெயில் சூட்டிலும் உச்சியில் நிற்பதை பார்த்து, எல்லாரும் அவளை அழைக்க, காவியனும் எழிலனும் வேகமாக படி ஏறினார்கள்.
அதிரதன் சுற்றி பார்க்க, நிதின் நீளமான கயிற்றை தூக்கி போட அது பாதி தூரம் கூட போகவில்லை. அதீபன் அதை பிடுங்கி முடிச்சிட்டு அவள் நிற்கும் அதே உச்சியில் நீட்டிக் கொண்டிருந்த இரும்பு கம்பியில் போட அதிரதன் வேகமாக மேலே ஏறினான்.
இதை கவனிக்காமல் பரத் நேத்ராவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். விக்ரம் ஆட்களில் சிலர் ராமவிஷ்ணுவை இழுத்து செல்ல, அனைத்தும் இவர்கள் இங்கே வந்ததிலிருந்து படமாக்கப்பட்டது.
அதிரதன் ஏறிய மறுநொடியே சற்றும் சிந்திக்காமல் துப்பாக்கியை எடுத்து பரத்தை சுட்டான். சத்தத்தில் பயந்த நேத்ரா மேலிருந்து கீழே விழ, அதிரதன் பிடித்திருந்த கயிற்றை விட்டு, அவள் பக்கம் தாவி அவளை பிடித்துக் கொண்டு கீழே விழ, அனைவரும் கத்தினர்.
விழும் போது மாமா..என்று கண்ணீருடன் நேத்ரா அவன் இதழ்களில் முத்தமிட்டு காதலை சொன்னாள். அனைவரும் பதற, அங்கிருந்த பஞ்சு மூட்டை லாரியை அவர்கள் விழும் இடத்திற்கு நேராக நிதின் நிறுத்தினான். இருவரும் அதில் விழுந்து பிரண்டு விழ இருவருக்கே பலமான அடியாக இல்லை என்றாலும் அடிபட்டிருந்தது.
நேத்ராவை பிடித்திருந்த அதிரதன் நேத்ரா முகமெங்கும் முத்தம் கொடுத்து விட்டு, என்னை மன்னிச்சிரு வினு. நீ முட்டாள் இல்லை. நான் தான் முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று அழுதான்.
மாமா, நீங்க கிரேட் அதிரதன். முட்டாள் இல்லை என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டான். காவியனும் எழிலனும் உச்சியில் நின்று இருவரையும் மகிழ்வுடன் பார்த்து ஆறுதலாக அணைத்துக் கொண்டனர்.
கம்பெனிக்காக ராமவிஷ்ணு கொன்ற ஆட்கள், நேத்ரா அப்பாவை கொலை செய்த ஆதாரம் என அவரை திகார் ஜெயிலில் போட்டு மரண தண்டனை விதித்தனர். நேத்ரா அம்மா, அப்பா கொலையை நேரில் பார்த்த சங்கீதனின் அம்மா குணமாகி அவர் பங்கிற்கு ஆதாரமாக வந்து நின்றார்.
ஒரு வருடத்திற்கு பின் அதி சீக்கிரம் வா. வினுவ ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்திருக்காங்க செழியன் சத்தமிட, ஹாஸ்பிட்டலுக்கு அதிரதன் தன் அப்பாவும் வந்தான். குடும்பமே அங்கே இருந்தது.
மாமா, இவ்வளவு நேரமா? எழிலன் கேட்க, சாரிடா என்று அவன் வர, சிவநந்தினி கையில் குட்டிப்பாப்பா இருந்தது. அதை பார்த்துக் கொண்டே அதிரதன் தன் மனைவி வினுநேத்ராவை பார்த்து நெற்றியில் முத்தமிட்டான். அவளும் மாமா, பாப்பா என்றாள்.
பாப்பா இல்லை. குட்டி வினு என்று தன் மகளை தூக்கினான் அதிரதன். அப்பா என்று தர்சன் அவனிடம் வந்தான். அங்கிள் என்று யுவி..பாப்பாவை காட்டுங்க என்று கன்னத்தில் முத்தமிட்டான். நிதின் ஆத்விகாவிற்கு திருமணம் முடிந்திருந்தது. வரும் மாதம் அதீபன் தாட்சாயிணி திருமணம் நடக்க முடிவு செய்தனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் குட்டிபாப்பா கனிவழகியை கொஞ்சிக் கொண்டே அழகான அவர்களது நாட்களை தொடர்ந்தனர்.