அத்தியாயம் 40
எதிர்பாராத விதமாக கதவு திறக்கப்பட தன்வந்த் ஒளிந்து கொண்டான். மாயா தான் வெளியே வந்தாள். இவள் இந்த நேரத்தில் எங்கே போகிறாள்? என பார்த்தான் தன்வந்த். மாயா நேராக ஜீவாவும் அவன் நண்பர்களும் இருக்கும் அறைக்கு வெளியே நின்று தட்டலாமா? என்று கையை கதவருகே கொண்டு போவதும் எடுப்பதுமாக நின்றாள்.
மெதுவாக அவள் பின்னே வந்த தன்வந்த அவளது மூக்கில் கையை வைத்து அழுத்தினான். அவள் பயத்தில் அக்கதவை காலால் எத்தினாள்.
தன்வந்த் பதட்டமுடன் அவளை பக்கத்துக்கு அறைக்கு இழுத்து சென்றான். பின் தன் கைக்குட்டையை எடுத்து அவள் வாயில் கட்டினான். பக்கத்து அறையில் தானே ஜீவாவும் அவன் நண்பர்களும் இருந்தனர். அவள் கதவை எத்திய சத்தத்தில் அவன் நண்பன் இருவர் விழித்து வெளியே வந்து பார்த்து தோளை குலுக்கி விட்டு மீண்டும் உள்ளே சென்றனர்.
பக்கத்து அறை தன்வந்த் அறை தான். வேகமாக அங்கிருந்த பரணில் ஏறி கயிற்றை எடுத்து மாயாவின் கை, கால்களை இறுக்கமாக கட்டினான்.
உனக்கு எவ்வளவு தைரியம்டி? என்னை விட்டு அவனிடம் சென்றது இல்லாமல் அவனை தொட விடுற கையை பிடிக்கிறான். உனக்கு ஊட்டி விடுறான். இனி நீ என்ன செய்தாலும் அவன் உன் பக்கம் வர மாட்டான். எப்படின்னு பார்க்கிறாயா?
ம்ம்..முன் போல் நீ என் பக்கத்திலே தான் இருக்கணும். எனக்கு உன் மீது காதல் இல்லை. ஆனால் நீயாக வந்த போது எனக்கு ஏதும் தெரியல. இப்ப நீ வேணும்ன்னு தோணுது. நமக்குள்ள முடிய வேண்டியது முடிந்தால் நீ எப்போது என் பக்கம் இருப்பேல்ல. எனக்கு அவன் உன்னை தொடுவதே பிடிக்கலை. ஆனால் உன் மீது ஆசை வந்திருச்சு என்று விகாரமாய் அவளை பார்த்தான் தன்வந்த். மாயா அழுதாள்.
வேண்டாம் என்று தலையாட்டி மறுப்பு தெரிவித்தாள்.
ஆர்த்தி, ஜஸ்ட் ப்ரெண்டு தான். எனக்கு இப்ப தான் புரியது. அவ பக்கத்துல இருந்தாலும் இல்லைன்னாலும் ஒன்று தான். ஆனால் நீ இல்லாமல் எதுவுமே இல்லாதது போல் இருக்கு. இன்று ஒரு நாள் மட்டும் அமைதியா இரு. அதற்கு பின் நீ இல்லாமல் இருக்க முடியுதான்னு பார்க்கலாம் என்ற தன்வந்த் அவளை நெருங்கி கை காலில் கட்டியதையும் அவிழ்த்து விட்டான்.
மாயா அவனை அடித்து விட்டு எழ முயன்றாள். அவளது கையை பின்னே இறுக்கி ஒரு கையால் பிடித்து அவளை அழுத்தி விட்டு, அவளை அடைய முனைந்தான். அவளது சட்டையை அவன் அவிழ்க்க துடித்து போனாள் மாயா.
அவள் முணங்கலுடன் அழுதாள். அவளது இடையில் முத்தமிட வந்த தன்வந்த்தை ஆக்ரோசமாக தள்ளி விட்டு மாயா ஓட, அவளை இழுத்து அதே இடத்திலே தள்ளி விட்டு அவளிடம் வந்தான்.
ஜீவா..ஜீவா..என்று அச்சுவற்றை தட்டினாள். அவளது சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. ஆனால் தட்டும் சத்தம் கேட்டு, “எவன்டா இந்த நேரத்துல தட்டி விளையாண்டுகிட்டு இருக்கீங்க?” என ஜீவா மேல் காலை போட்டு தூங்கிக் கொண்டிருந்தவன் தூக்கத்திலே சத்தமிட்டான்.
ஏற்கனவே விழித்த இருவரும், “வேற யாரா இருக்கும் அந்த லூசுப்பய தன்வந்த்”தாக தான் இருக்கும் என்று அவர்களும் தூக்கத்திலே சொல்லி விட்டு படுத்தனர்.
இதுக்கு மேல உன்னை மெதுவா டீல் பண்ணா? சரியா இருக்காது என அவன் அவளை நெருங்க, அவனை அவளால் நகர்த்த முடியாத அளவிற்கு அவளை இறுக்கமாக நெருக்கினான். அவளால் தாங்க முடியாமல் அழுதாள்.
தன் கால்களை வேண்டுமென வேகமாக தரையில் அடித்தாள். அவளால் மேலும் முடியாமல் துவண்டு விடாமல் காலை தரையில் அடித்ததில் அவளது காலிலிருந்து இரத்தம் வந்தது.
மாயா..என்று பல்லை கடித்த தன்வந்த் வேகமாக அவளது சட்டையை பிடித்து அவளை முன் இழுத்தான். அவளது சட்டை கிழிய மேலும் கதறி அழுதாள். அவள் சத்தம் தான் கேட்கவில்லை. அவன் மேலும் முன்னேற..இவன் என்னை தொடக்கூடாது என்று உறுதியாக நினைத்தவள் அவளது தலையால் அச்சுவற்றில் பின்னே முட்டி முட்டி அவளை அவளே காயப்படுத்தினாள்.
சத்தம் கேட்டு ஜீவாவும் அவன் நண்பர்களும் எழுந்தனர். பைத்தியமாடி நீ? சாகப் போற? தன்வந்த் கேட்க, நான் சாவதே மேல் என்று மேலும் முட்டினாள். ஆனால் அப்பொழுதும் கூட அவளை அடையும் எண்ணம் தன்வந்த்திற்கு மாறவில்லை. அவளது கிழிந்த சட்டையில் அவளது அங்கங்கள் தெரிய, அவனுக்கு ஆசை கூடிற்று. மாயா அழகில் பைத்தியமானான் தன்வந்த். இப்படியே முட்டினால் அவள் செத்து விடுவாள் என்று அவன் சிந்திக்க கூட இல்லை.
தன்வந்த்திடமிருந்து மாயா தப்பிக்க ஓடும் போது தான் காவியன் அந்தப்பக்கம் தாண்டி வெளியே சென்றிருப்பான். அவனுக்கு ரணா நினைவும் அந்த கொலைகாரன் பேசியது தொந்தரவாக, முடியாமல் வெளியே வந்து அழகான சந்திரதனை வெறித்துக் கொண்டிருந்தான்.
அண்ணா, மாயாவை பார்த்தீங்களா? அவள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அறையில் இல்லை. பயமா இருக்கு என்று காவியன் முன் வந்து நின்றாள் அருணா.
என்ன சொல்ற? இந்த நேரத்துல எங்க போனா? என்ற காவியன் எழுந்து அவன் நண்பர்கள், எழிலனை எழுப்பி விட்டான். அவர்கள் மாயாவை தேடிக் கொண்டு வர, சத்தம் கேட்டு எழுந்த ஜீவாவும் அவன் நண்பர்களும் வெளியே வந்தனர். இரு நண்பர் பட்டாளங்களும் சேர, அவர்கள் சந்தேகம் தன்வந்த் அறைப்பக்கம் திரும்பியது.
ஜீவா முன்னே ஓடிச் சென்று கதவை திறடா என்று தட்ட, உன்னால என்னை ஏதும் செய்ய முடியாது என்று மாயா..இதழ்களில் புன்னகை அரும்பியது. அவன் எதையும் கண்டுகொள்ளாமல் அவள் ஆடையை கிழித்து தூக்கி எறிந்தான். காவியனும் எழிலனும் கதவை உடைத்தனர்.
அருணா வேகமாக மாயாவிடம் ஓடினாள். மற்றவர்கள் தன்வந்த்தை அடிக்க, அங்கே பாட்டி, சுஜி மற்றவர்களும் வந்தனர். அருணா அவளது துப்பட்டாவை மாயாவிற்கு போட்டு விட்டாள்.
ஜீவா, அவனை விடு. செத்து விடாமல் கிருஷ்ணன் ஜீவாவை பிடித்து இழுத்தான். அவனை தள்ளிய ஜீவா மேலும் தன்வந்த்தை வெறிபிடித்தவன் போல் அடித்தான்.
ஜீவா..பாட்டி சத்தமிட, எழிலன் அவனை இழுத்து அறைந்து, அவள பாரு. உன்னை தான் பார்க்கிறாள்.
மாயாவை பார்த்து ஜீவா அவளிடம் வந்தான். அனைவரும் வழிவிட்டனர்.
என்னை விட உனக்கு தூக்கம் முக்கியமா போச்சாடா? என்று மாயா கண்ணீருடன் ஜீவாவிடம் கேட்டாள்.
இல்ல மாயா. சும்மா தான் படுத்திருந்தேன்.
கொஞ்சம் எட்டிப் பார்த்திருந்தால் இவ்வளவு தூரம் போயிருக்காதுல்ல மாயா சொல்ல, “அவன் ஏதும் செய்யலைல்ல மாயா?” அருணா கண்ணீருடன் மாயாவை பார்த்தாள்.
இல்ல, அதான் நம்ம ஹீரோஸ் வந்துட்டாங்கள என்றாள்.
சாரி மாயா, ஜீவா அழுது கொண்டே கேட்டான்.
இந்த நைட்ல எதுக்கு வெளிய வந்த? காவியன் சத்தமிட்டான்.
மாயா ஜீவாவை பார்த்தாள். காவியன் ஏதும் சொல்லாமல் நகர்ந்து சென்று அதிரதனை அழைத்தான்.
ஜீவா..நான் சொல்லலைல்ல என்று அவன் கையை பிடித்த மாயா, எனக்கு உன்னை பிடிச்சிருக்கு ஜீவா. நாம நல்லா படிச்சு வேலைக்கு போய் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று அவள் சொல்ல, அவன் கண்ணீருடன் அவளை பார்த்து. கண்டிப்பா மாயா உனக்காக நான் படிப்பேன் என்றான்.
வெண்பாவும் மற்ற பொண்ணுங்களும் உள்ளே வந்து மாயாவை பார்த்து அழுதனர். வெண்பாவும் மயூரியும் சினத்துடன் தன்வந்த்திடம் வந்து கத்தி விட்டு, அவனை அடிக்க, எழிலனும் தேவாவும் அவர்களை பிடித்தனர்.
“வெண்பா சத்தம் போடாம இரு” என்று சுஜி சத்தமிட்டாள். அனைவரும் அமைதியானார்கள்.
மாயா வா, முதல்ல இங்கிருந்து போகலாம் என்று வெண்பா மாயாவை பிடித்து இழுக்க, ஜீவா கையை அழுத்தமாக பிடித்த மாயா கண்கள் இருள, சாரி ஜீவா..என்று அவள் பின் தலையில் இருந்த இரத்தத்தை காட்ட, அனைவரும் பதறினர்.
அவள் தலையில் கை வைத்து பார்த்த ஜீவா கைகள் நடுங்கியது. மாயா..என்று அவன் தொண்டை அடைக்க அழைத்தான்.
நான் உன்னை தான் அழைத்தேன் ஜீவா. இந்த சுவற்றை தட்டினேன். உனக்கு கேட்கலை. உயிரை விட மானம் பெருசுல ஜீவா. வேற வலியே தெரியல என்று அவளது இரத்தம் படிந்த கையை அவன் கன்னத்தில் வைத்து, இப்ப எனக்கு போக விருப்பமில்லை ஜீவா. நீ என் பக்கத்தில் இருப்பியா ஜீவா? என்று கேட்டுக் கொண்டே மயங்கினாள்.
மாயா, நான் உன் பக்கத்தில தான் இருப்பேன். உன்னை போக விட மாட்டேன் என்று கதறிக் கொண்டே அவளை தூக்கி வெளியே வந்தான். அவன் பின்னே எல்லாரும் அழுது கொண்டே வந்தனர். சத்தம் கேட்டு பார்த்த காவியன் அலைபேசியை கீழே விட்டான்.
மாயா..மாயா..டேய் ஜீவா, என்னாச்சுடா? காவியனும் கத்திக் கொண்டே அவர்களுடன் சென்றான்.
விக்ரமும் கார்ட்ஸூம் அவர்களிடம் வந்தனர். “எல்லாரும் உள்ளே போங்க” என்ற விக்ரம் கார்ட்ஸிடம் எல்லாரையும் பார்த்துக்கோங்க என்று காரை எடுத்தான். பாட்டி பசங்கள பார்த்துக்கோங்க என்று சுஜி, காவியன் ,வெண்பா, ஜீவா மாயாவுடன் ஏறினர்.
மாயா, என்னை பாரு. நான் பக்கத்துல தான் இருக்கேன் என்று ஜீவா அழுதான்.
அக்கா..நிதின் சாருக்கு கால் பண்ணுங்க என்று காவியன் அவனிடம் பேச, அவன் பதட்டமுடன் செழியன் அறைக்கு சென்று கதவை தட்டினான். சிவநந்தினி கதவை திறந்தார்.
மாமா..எங்க? என்று நிதின் கேட்க, அவன் முதன் முறையாக மாமா என்று செழியனை நிதின் அழைப்பதை கண்டு பூரித்தார் சிவநந்தினி. காவியன் அலைபேசியை கீழே விட்டது; அழுகை சத்தம் கேட்டது என அதிரதன் பதறி எழிலனை அழைத்தான். அவன் விசயத்தை சொல்ல, நிதினை அழைத்தான். அப்பொழுது தான் நிதின் செழியனை எழுப்பிக் கொண்டிருந்தான்.
செழியன் எழுந்து, என்ன இந்த நேரத்தில்? என்று கேட்க, அதிரதன் அழைத்தான்.
அலைபேசியை எடுத்து, ரதா உனக்கு யார் சொன்னா?
எழிலன் சொன்னான். அந்த பொண்ணோட விக்ரம், காவியன், சுஜி, ஜீவாவும் போயிருக்காங்களாம். சீக்கிரம் நீயும் அப்பாவும் போங்க. அதீபனிடம் சொல்லீட்டு போ. அவன் வீட்டில் இருப்பவர்களை பார்த்துக்கட்டும்.
அந்த தன்வந்த்துடன் யாராவது இருக்கணும். விஷ்வாவை அழைத்துக் கொள் என்றான் அதிரதன்.
சரிடா அவளுக்கு முதல்ல சொல்லு. ஆனால் நீங்க வர வேண்டாம் என்றான் நிதின்.
ஓ.கேடா, அந்த பொண்ணுக்கு ஏதும் ஆகாம பாருடா. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்றான் அதிரதன்.
சரிடா, நாங்க பார்த்துக்கிறோம் என்று அலைபேசியை வைத்தான் நிதின்.
மாயாவை விக்ரம் ஹாஸ்பிட்டலில் சேர்க்க, நிதினும் செழியனும் வந்தனர். காவியனும் ஜீவாவும் ஒருவரை ஒருவர் அணைத்து அழுதனர். விக்ரம் அவர்களை பார்க்க, சுஜி சிகிச்சை நடக்கும் அறைக்கு வெளியே அழுது கொண்டே அமர்ந்திருந்தாள்.
காவியன் வெளியே செல்ல, ஜீவா கண்ணீருடன் மாயா இருக்கும் அறையை விட்டு மீளாமல் அவள் சொன்னதையே எண்ணிக் கொண்டிருந்தான்.
விஷ்வா நிலையத்திற்கு வந்து தன்வந்த்தை தேடினான். சார், அவன் அவனோட அறையில இருக்கான் என்று எழிலன் சொல்ல, விஷ்வா அவன் அறைக்கதவை திறந்து அவனை கன்னம் மாறி மாறி அடித்தான்.
சார், போதும். இதுக்கு மேல அடிச்சா செத்திருவான். அவன விடுங்க என்று அருணா விஷ்வா முன் வந்து கத்தினாள்.
உன்னை வந்து பார்த்துக்கிறேன் என்று விஷ்வா வெளியேற, எங்க போறீங்க? எழிலன் கேட்டான்.
ஹாஸ்பிட்டலுக்கு மாயாவ பார்க்க போறேன்.
நீங்க இங்கேயே இருங்க எழிலன் சொல்ல, இல்ல எழிலா. இந்த பிரச்சனையை முதலிலே பார்த்திருக்கணும். நானும் வினுவும் தன்வந்த்துக்கு இடம் கொடுத்துட்டோம். வினுவுக்கு தெரியுமா? என்று விஷ்வா கேட்க, சொன்னாங்கல்லான்னு எனக்கு தெரியல என்றான்.
நான் மாயாவை பார்த்துட்டு வாரேன். இங்க தான் கார்ட்ஸ் இருக்காங்கல்ல. கொஞ்ச நேரம் பார்த்துட்டு வந்துடுறேனே?
அவங்க சொன்ன பிறகு போங்க. அதிரதன் சார் அப்பாவும் போவாங்கன்னு நினைக்கிறேன். கொஞ்ச நேரம் பார்க்கலாம் என்றான் எழிலன்.
தன்வந்த்திடமிருந்த தப்பிக்க அவள் முட்டிய இடத்தில் இருந்த இரத்தக்கறையை தன்வந்த் தொட்டுப் பார்த்து,
சாரி மாயா, இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கல. உனக்கு ஏதாவது ஆனால் நானும் உன்னுடன் வந்துடுவேன். என்னால் இதே குற்றவுணர்ச்சியுடன் வாழ முடியாது என்று அடிபட்ட வலியுடன் கதறி அழுதான். மாயாவின் தோழிகள் உடைந்து அழுதனர்.
அதிரதன் அவன் அறையிலிருந்து நேத்ராவிடம் சொல்ல வந்தான். அவள் அறைக்கதவு திறந்திருக்க, கதவை திறந்து உள்ளே சென்றான். நேத்ரா தலையணையை கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். “மாயாவும் நேத்ராவும் கொஞ்சம் க்ளோஸ்” என்று காவியன் அதிரதனிடம் சொல்லி இருப்பான். அதை எண்ணிக் கொண்டு, எப்படி இதை சொல்ல? என்று யோசனையுடன் படுக்கையில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
திரும்பி படுத்த நேத்ரா காலை அதிரதன் மடியில் போட அவளுக்கு வித்தியாசமாக இருக்க மெதுவாக கண்ணை திறந்தாள்.
சார், என்னோட அறையில் என்ன செய்றீங்க? என்று பயத்தில் சத்தமிட்டு கொண்டே படுக்கையில் அமர்ந்தாள்.
வினு, நான் சொல்லணும். ஆனால் எப்படி சொல்றதுன்னு தெரியல என்று அதிரதன் பீடிகை போட, சார், உங்க லவ்வ அப்புறம் வச்சுக்கோங்க. நான் ஓய்வெடுக்கணும் என்றாள்.
அது இல்ல வினு, நான்..மாயாவ..என சொல்ல முடியாமல் கண்கலங்க அவளை பார்த்தான்.
அட, நம்ம ஸ்ட்ரிட் அதிரதன் சாரா இது?
காலையில பேசிக்கலாமா சார்?
இல்ல வினு. மாயாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்காங்க என்று சுருக்கமாக சொன்னான்.
மாயாவா? ஹாஸ்பிட்டல்லா? என்ன சொல்றீங்க? என்று அவள் கண்கலங்க, கண்ணை மூடி நிதானமான அதிரதன் அனைத்தையும் சொன்னான்.
சார், என்ன சொல்றீங்க? இல்ல மாயா தேவையில்லாம வெளிய வரவே மாட்டா. அதுவும் அந்த நேரத்தில் வாய்ப்பேயில்லை. என்னை பழி வாங்க சொல்லாதீங்க. அவ நிலையத்துல நல்லா தான் இருப்பாள் என்று பதட்டமாக கூறிக் கொண்டே எழுந்தாள். அதிரதன் எழுந்து அவளிடம் வந்து உண்மை தான் வினு.
இல்ல சார், நீங்க சும்மா தான சொல்றீங்க? கேட்டாள்.
வினு, நிஜமாக தான் சொல்றேன். காதல் வந்தாலே என்னை போல் எல்லாரும் மாறிடுவாங்க. மாயாவும் ஜீவாவை காதலிக்கிறாள்.
சார், சும்மா இருங்க. அவள் மனசு அவ்வளவு சீக்கிரம் மாறாது. ஜீவா..என்று சிந்தித்து, நீங்க உண்மைய தான் சொல்றீங்களா? வாங்க நாம இப்பவே போகலாம். நான் அவங்கள பார்க்கணும். உங்களுக்கு தெரியுமா?
காவியனுக்கு மாயான்னா உயிர். அவன் ரொம்ப கஷ்டப்படுவான் என்று அவள் சொல்ல, வினு நான் ஜீவா, மாயாவ பத்தி பேசுறேன். நீ எதுக்கு காவியனை இழுக்குற?
இல்ல அதி. அவனுக்கு மாயான்னா ரொம்ப பிடிக்கும். அவன் அங்கு இருக்கும் போது மாயாவுக்கு ஏதும் ஆகாது என்று அதிரதனை அணைத்து அழுதாள்.
அவளது அதியில் திகைத்த அதிரதன், அவளது அணைப்பில் மேலும் அதிர்ந்தான்.
அவளுக்கு ஏதும் ஆகக்கூடாது. என்னோட பிரச்சனையை நான் தாண்டி வர மாயாவும் காவியனும் தான் காரணம். மாயாவுக்கு ஒன்றும் ஆகாது. ஆகக்கூடாது அதி. ப்ளீஸ் என்னை கூட்டிட்டு போங்க. நான் மாயாவ பார்க்கணும் என அவனை அணைத்து அழுதாள்.
பின் நிதானமாகி, சார் போகலாமா? என கேட்டாள். அதிரதன் அவளை பார்த்துக் கொண்டே நின்றான்.
சார், நாம போகலாம்ல்ல என்று கண்ணை துடைத்த நேத்ரா, அறையை விட்டு வெளியேற, இல்ல வினு, நாம போகலை என்றான் அதிரதன்.
சார், அவங்க சின்ன பசங்க. நான் அவளை பார்த்தே ஆகணும் வினு சொல்ல, உனக்கு அவங்க முக்கியம்ன்னா எனக்கு நீ முக்கியம்.
சார், என்ன பேசுறீங்க?
சாரி வினு. ஆனால் நிஜமாக தான் சொல்றேன். நாம இப்ப வெளிய போனால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மாயா, காவியனோட எல்லாரும் இருக்காங்க. நிது, ஜீவா..எல்லாரும். என்னோட அப்பாவும் அங்க தான் இருக்கார் என்றான்.
எனக்கு அவள பார்க்கணுமே? என்று அவள் தரையில் அமர்ந்து அழுதாள். அதிரதன் அவளருகே வந்து அமர்ந்தான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இந்த ரெண்டு வருசமா எந்த பிரச்சனையும் இல்லைன்னு தான் நினைச்சேன்.
என்னோட சாபமோ? என்னமோ? எனக்கு பிடிச்ச யாருமே என்னோட இருக்கிறதே இல்லை. நான் யாரையும் எதுவும் செய்யலையே? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என்று மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டி அழுதாள் வினு நேத்ரா.
அதிரதன் அவளது அழுகையை தாங்க முடியாமல் அவளை அணைக்க, அவளும் அவனை கட்டிக் கொண்டு, ரொம்ப பயமா இருக்கு அதி. நான் ராசியில்லாதவள். நான் இங்கேயேயும் வந்திருக்க கூடாதோ? உங்களுக்கும் ஏதும் ஆகிடுமோ? என்று அவளாக எழுந்து நகர்ந்தாள்.
அதிரதனும் எழுந்து அவளை நகர விடாது அணைத்தான். “ஐ அம் சாரி சார்” நான் கொஞ்சம் எமோஸ்னல் ஆகிட்டேன் என்று அவள் விலக, நீ அழுணும்ன்னா அழு வினு. நீ ராசியில்லாதவளும் இல்லை. உனக்கு சாபமும் இல்லை.
நீ, நாம் தேடுபவன் கண்ணில் பட்டது தான் தப்பு. இப்ப மாயாவுக்கு நடந்தது தன்வந்த்தால் தான். உன்னை நீயே குற்றம் சாட்டாதே! எதற்கும் நீ காரணமில்லை. அப்புறம் நீ காவியனை பற்றி கவலைப்பட வேண்டாம். அவன் “மூவ் ஆன்” ஆகிட்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்த வினு, காவியனா?
ஆமா வினு. அவனுக்கு வேற பொண்ண கொஞ்ச கொஞ்சமா பிடிக்க ஆரம்பித்ததாக கேள்விப்பட்டேன் என்று சொன்னான்.
அப்படியா? நிஜமாகவா? சரி..நாம நாளைக்கு மாயாவை பார்க்க போகலாமா? நேத்ரா கேட்டாள்.
நோ..என்று தலையசைத்தான். அவள் மேலும் அழுதாள்.
ப்ளீஸ் வினு அழாத! என்றான் அதிரதன்.
எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு என சொல்லிக் கொண்டே அவன் மேலே மயங்கி சரிந்தாள்.
வினு.வினு..என பயந்தான் அதிரதன். அவனுக்கும் இன்னும் அடிபட்டது சரியாகலை இருந்தாலும் வலியுடன் அவளை தூக்கி படுக்கையில் படுக்க வைத்து தண்ணீரை தெளிக்க, அவள் விழித்து அவன் கையை பிடித்துக் கொண்டே கண்ணை மூடினாள்.
அவளை மடியில் போட்ட அதிரதன், வினு இங்க பாரு என்று தண்ணீரை அவளுக்கு புகட்டினான். நான் தூங்கவா சார்? எனக்கு ரொம்ப பயமா இருக்கு. பக்கத்திலே இருங்க என்று அவன் மடியிலே கண்ணை மூடி தூங்கினாள்.
இவளுக்கு கண்ணை திறக்க முடியாத அளவிற்கு மயக்கம் வருமா? இந்த அதிர்ச்சியாக கூட இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு அவளை படுக்கப் போட்டு அவளை பார்த்துக் கொண்டு அருகிலே படுத்தான். அவள் அவன் மார்பில் ஒட்டிக் கொண்டு தூங்கினாள்.
என்னடா அதிரதா உனக்கு வந்த சோதனை? என அவன் அவனுக்குள்ளே நினைத்துக் கொண்டான்.
மாயாவிற்கு ஆப்ரேசன் செய்தால் பத்து சதவீதம் பிழைக்க வாய்ப்பிருக்கு என்று டாக்டர் சொல்ல, செழியன் உடனே ஆரம்பியுங்கள் என்று ஆப்ரேசன் முடிந்து வந்த மருத்துவர். ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த பொண்ணு உயிர் பிழைச்சிருக்கு என்று டாக்டர் சொல்ல, ஜீவா உடனே உள்ளே சென்றான்.
அவனை பிடித்து செவிலியர்கள் வெளியே தள்ளினர்.
ஜீவா, சற்று நேரம் அமைதியா தான் இரேன் என்று சொல்ல, அவளை அறைக்கு மாற்றினார்கள். தலை முழுவதும் கட்டிட்டு இருந்தனர். அனைவரும் அவளை கண்ணீருடன் பார்த்தனர். காவியனும் மாயாவை பார்த்துக் கொண்டே நின்றான்.
பின் அவன் வெளியே செல்ல, சுஜியை மாயா அருகே விட்டு ஜீவா வெளியே வந்தான். விஷ்வா காவியனை அடித்துக் கொண்டிருந்தான்.
வேகமாக உள்ளே வந்த ஜீவா, சுஜிக்கா “விஷ்வா சார் காவியன் அண்ணாவை அடிக்கிறாங்க” என்று ஜீவா சொல்ல, செழியனும் நிதினும் வெளியே தான் அமர்ந்திருந்தனர்.
காவியனை எதுக்கு அடிக்கிறான்? பைத்தியமாகிட்டானா? சுஜி திட்டிக் கொண்டே செல்ல, மாமா இங்கேயே இருங்க. நான் பார்த்துட்டு வாரேன் என்று நிதினும் ஓடினான். எல்லாரும் காவியனை பற்றி பேச பேச செழியனுக்கும் அவனை பார்க்கும் ஆர்வம் அதிகமாகி விட்டது.
விஷ்வா, அவனை எதுக்கு அடிக்குற?. இவனுக இருக்கிற தைரியத்துல தான நான் வீட்ல இருக்கேன்.
அதுக்கு பொண்ணுங்க என்ன செய்றாங்கன்னு பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டே இருக்க முடியுமா? முதல்ல அவன் தூங்கவேயில்லை. வெளிய தான் இருந்திருக்கான். அதனால் தான் உடனே பசங்கள வச்சு கண்டு பிடிச்சிருக்காங்க. இதுக்கு மேல பசங்க மேல கையை வைக்காத. அப்புறம் நான் மனுசியா இருக்க மாட்டேன் சத்தமிட்டாள் சுஜி.
வந்தவுடன் மாயாவை பார்க்காமல் அழுதுகிட்டு இருப்பவனை அடிச்சிட்டு இருக்க? அவள் திட்டிக் கொண்டே செல்ல போதும்க்கா என்று அவன் தன் கண்ணீரை சுண்டி விட்டான்.
ஓ..காவியன் காதலித்த பொண்ணு இவள் தானா? என நிதின் காவியனை பார்த்தான்.
செழியனும் பார்க்க வந்திருப்பார். இவர்கள் பேசியதை கேட்டார். ஆனால் காவியன் திரும்பி நிற்பதால் அவனை பார்க்கவில்லை. நிதினை அழைத்து அவனிடம் சொல்லி விட்டு காவியனின் முதுகை வெறித்தவாறு கார்ட்ஸூடன் அங்கிருந்து அகன்றார்.
விஷ்வா காவியனிடம் மன்னிப்பை கேட்க, அவனை என்ன செய்யப் போறீங்க? காவியன் கேட்டான். சேர்மன் சார் தான் முடிவு செய்யணும் என்று விஷ்வா நிதினை பார்த்தான். அனைவரும் ஹாஸ்பிட்டலுக்குள் சென்றனர்.
காலை விடிந்தவுடன் நேத்ரா விழித்தாள். அதிரதனுடன் ஒரே படுக்கையில் அவன் மார்பில் தூங்கியதை நினைத்து நொந்து நகர்ந்தாள். ஆனால் அவனை பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள். அவன் கையை அவள் மீது போடவும் அவன் கையை நகர்த்தி விட்டு எழுந்தாள். கண்ணீருடன் குளியலறைக்கு சென்று தயாராகி வெளியே சென்று சுஜியை அழைத்து, மாயா பற்றி கேட்டாள்.
மாயா இன்னும் விழிக்கலை வினு. எல்லாரும் இங்க தான் இருங்காங்க. தன்வந்த் இப்படி செய்வான்னு நினைக்கலை. ரொம்ப கஷ்டமா இருக்கு. உனக்கும் கஷ்டமா இருக்கும்ன்னு புரியுது வினு. ஆனால் குழந்தையை பற்றி யோசி. மாயா நல்லா இருக்கான்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. எப்படியும் ஒரு வாரமாவது தங்குவான்னு நினைக்கிறேன் என்றாள் சுஜி.
சரி, சுஜி. நீ அவளை பக்கமிருந்து பார்த்துக்கோ.
நீ கவலைப்படாமல் இரு வினு.
சுஜி, மாயா ஜீவாவை தான் காதலிக்கிறாளா?
ஆமா வினு, ஆனால் இதுவரை இருவரும் ஒருவருக்கு ஒருவர் சொல்லவில்லை. அவள் மயங்கும் முன் தான் எல்லார் முன்னும் சொன்னாள். ஆனால் நிதானமா கல்யாணம் வரை பேசுனா?
கல்யாணமா?
ஆமா வினு, தன்வந்த்தால் அவள் அடைந்த ஏமாற்றம், நம்ம காவியனின் காதல் எல்லாம் அவள் மனதில் பயத்தை ஏற்படுத்தி இருக்கு. ஜீவாவை பிடித்தாலும் அவள் காதலை சொன்னவுடன் கல்யாணம் வரை பேசியதே, தன்வந்த் போல் ஜீவாவும் கஷ்டப்படுத்தி விடுவானோன்னு பயத்தில் தான் சொல்லி இருக்காள்.
அக்கா..ஜீவா அழைக்க, சுஜி எழுந்தாள்.
அக்காவிடம் பேசலாமா? அவன் கேட்க, சுஜி அவள் அலைபேசியை அவனிடம் கொடுத்தாள்.
ஜீவா..நேத்ரா அழைக்க, அக்கா நான் அவன் போல் இருக்க மாட்டேன். எனக்கு ஏற்கனவே மாயாவை பிடிக்கும். ஆனால் காதல் இப்பொழுது தான். நாங்கள் படித்து முடிக்கும் வரை காதலுடன் மட்டும் தான் இருப்போம் என்று உறுதி அளித்தான்.
இப்ப என்ன சொல்ல வர்ற? நம்ம நிலைத்துக்கு உங்க காதலால் பிரச்சனை வராதுன்னு சொல்றீயா? நேத்ரா கேட்டாள்.
ஆமாக்கா. அவள் முதல்ல சரியாகட்டும். அப்புறம் பேசிக்கலாம்.
நீ கவலைப்படாதடா. அவள் சீக்கிரம் சரியாகிடுவாள்.
அக்கா, நீங்க வருத்தப்படாதீங்க. நாங்க எல்லாத்தையும் பார்த்துக்கிறோம் என்றான் ஜீவா.
தேறிட்ட போ. இப்படி பொறுப்பில்லாமல் சுத்துறியேன்னு நான் நினைச்சேன் ஜூவா. நீ அவள மட்டும் பார்த்துக்கோ.
சரிக்கா என்றான் அவன்.
காவியன் என்ன செய்றான்? என நேத்ரா கேட்க, விஷ்வா அவனை அடித்ததை சொல்லவும் நேத்ரா கோபமானாள். நீ வைடா என்று அவன் அலைபேசியை வைத்து விட்டு விஷ்வாவை அழைத்து திட்டிக் கொண்டிருந்தாள்.
அதிரதன் வெளியே வந்து, தண்ணீரை பருகிக் கொண்டே அவள் பேசுவதை பார்த்தான்.
வினு, காவியனை விஷ்வா அடித்தானா? அதிரதன் கேட்க, சார் சும்மா இருங்க என விஷ்வை திட்டி விட்டு அலைபேசியை வைத்து காவியனை அழைத்தாள். அவனும் எடுத்தான்.
விஷ்வா நிலையத்தில் கீழே கிடந்த காவியன் அலைபேசியை இரவே கொடுத்திருப்பான்.
விஷ்வா உன்னை தேவையில்லாமல் அடித்தால் வாங்கிகிட்டு சும்மா இருப்பாயா? தடுத்திருக்கலாம்ல? கோபமாக நேத்ரா கேட்டாள்.
அக்கா, இருக்கிற கஷ்டத்துல இது தேவையா? சும்மா இருங்க என்றான் காவியன்.
காவியா, நீ இன்னும் மறக்கலையா?
அக்கா, மறந்துட்டேன் போதுமா? டென்சன் ஆக்காதீங்க என்று கத்தினான்.
எப்பொழுது போல் செழியன் வீட்டில் ஆறு மணிக்கே அனைவரும் கீழே வந்தனர். சிவநந்தினி தேனீருடன் வந்து அனைவருக்கும் கொடுத்தார். பின் பேச ஆரம்பித்தார் செழியன். அவர் மாயாவை பற்றி சொல்ல, ரணா எழுந்தாள்.
இப்ப நல்லா இருக்காலாப்பா? என்று அவள் விசாரிக்க, உனக்கு அந்த பொண்ணை தெரியுமா? செழியன் கேட்டார்.
எனக்கும் அவளை தெரியும். அவளுக்கும் என்னை தெரியும் என்றாள் ரணா.
உனக்கு எப்படி தெரியும்? சிவநந்தினி கேட்க, அம்மா கேள்வி கேட்காதீங்க? நான் என்னோட ப்ரெண்ட்சோட சேர்ந்து அவள பார்த்துட்டு வாரேன் என்றாள் ரணா.
நீ அவளை தான் பார்க்கப் போகிறாயா இல்லை அவனை பார்க்கப்போகிறாயா? செழியன் கேட்க, நான் இருவரையும் தான் பார்க்கப் போகிறேன் என்றாள்.
பிரணா, நீ போகக்கூடாது என்றார் செழியன்.
அப்பா, காவியனும் கஷ்டத்துல இருப்பான்.
அவன் கஷ்டப்பட்டா படட்டும் என்றார் அவர்.
என்னால அப்படி விட முடியாது. எனக்கு அவனை பிடிக்கும். ஆனால் அவனுக்கு அந்த பொண்ணை தான் பிடிக்கும் என்றாள் கண்ணீருடன்.
என்ன புதுசா ஏதோ சொல்ற?
காலேஜூல் இருவரும் பேசியதை சொல்லி விட்டு, அவன் என்னை ப்ரெண்டா தான் பார்க்கிறான். நான் தான் அவனை காதலிக்கிறேன். போதுமா? இன்னும் ஏதும் சொல்லணுமா? என்று ரணா அழுது கொண்டே வெளியே சென்று சங்கீதனிடம் சொல்ல, நானும் வாரேன் என்று அரை மணி நேரத்தில் சங்கீதன், ஆராதனா, ராகவ், நித்திர கண்ணன் வந்தனர்.
ரணா அழுது கொண்டே வெளியே வர, ஆத்விகாவும் அதீபனும் அவளிடம் வந்து பேசினர்.
சங்கீதன் நண்பர்களுடன் வந்தான். நாங்களும் வாரோம் என்று அதீபனும் ஆத்விகாவும் செழியனிடம் சொல்ல, பாப்பா அந்த பையன் பக்கம் போகாம பார்த்துக்கோங்க என்றார்.
ஏன்ப்பா?
அதான் அவளே சொன்னாலே அந்த பையனுக்கு நம்ம பாப்பாவை பிடிக்கலையாமேம் என்றார்.
பிடிச்சா ஒத்துப்பீங்களாப்பா? ஆத்விகா கேட்டாள்.
ஆத்வி..சிவநந்தினி சத்தமிட்டார்.
பார்க்கலாம் என்றார் செழியன். நேத்து வரை பிள்ளைய அடிக்காத குறையா திட்டிகிட்டு, முறைச்சுக்கிட்டு இருந்த? பாட்டி கேட்க, இப்ப யோசிக்கிறேன்னு தான சொன்னேன்.
இப்ப தான கல்லூரியிலே சேர்ந்திருக்கா. அவளுக்கு நேரம் இருக்கு. இப்பவே முடிவெடுக்க முடியாது. படிப்பை முடிக்கும் வரை இருவருக்கும் காதல் இருந்தா பார்க்கலாம் என்றார்.
அப்பா, நீங்க காவியனை பார்த்தீங்களா? அதீபன் கேட்டான்.
இன்னும் பார்க்கலை. ஆனால் பசங்க எல்லாரும் நல்லவிதமா தான் சொல்றாங்க. நம்ம அதிக்கே அவன் மேல நம்பிக்கை இருக்குன்னா பார்க்கலாம் என்றார்.
நாங்க போயிட்டு வாரோம் என்று வெளியே வந்த ஆத்விகா ரணாவை அணைத்தாள். அக்கா..விடு. நானே டென்சன்ல இருக்கேன்.
ஏய் குட்டிப்பிசாசு, காவியன் அப்பாவை இம்பிரஸ் பண்ணிட்டான் போல. அவனை பார்க்க கூட இல்லை. நல்ல விதமாக அவன் அப்பா மனதில் பதிந்து விட்டான் என்றான் அதீபன்.
என்ன சொல்ற? இப்ப தான் திட்டினார்.
ஏய், நீ படிப்பையே முடிக்கல. அதுக்குள்ள எப்படி வீட்ல ஒத்துப்பாங்க? ஆத்விகா கேட்டாள்.
அக்கா, நிஜமாகவா? ஆனால் அவனுக்கு என்னை பிடிக்காதே!
குட்டிப்பிசாசு, பார்க்க தான் பயமா இருக்கும். மத்தபடி அவனுக்கு சரியாதான் இருக்கும் என்றான் அதீபன்.
என்னை பார்த்தால் பயமாவா தெரியுது? ரணா கேட்க, சங்கீதனும் நண்பர்களும் இவர்களை பார்த்து புன்னகைத்து விட்டு, போகலாமா? என்று ஹாரன் அடித்தான்.
போகலாம்? என்று கிளம்பினார்கள்.
நேத்ராவிடம் காவியன் பேசும் போது அவனை கடந்து தான் ரணாவும் நண்பர்களும் சென்றனர். அவன் அலைபேசியை வைத்து விட்டு அமர்ந்தான். காரை நிறுத்தி வந்த அதீபன் காவியனை பார்த்து அவனருகே வந்து அமர்ந்தான்.
அதீபனை பார்த்து எழுந்தான் காவியன்.
உட்காரு, குட்டிப்பிசாசு மாதிரி தொந்தரவெல்லாம் செய்ய மாட்டேன் என்ற அதீபன், உன்னிடம் ஏதோ இருக்கு? அதான் பிரணாவுக்கு உன்னை பிடிச்சிருக்கு என்றான்.
இல்ல சார்..
புரியுதுப்பா. முதல்ல உட்கார் என்று அவன் தோளில் கையை போட்டு, அவள விடு. எங்க அண்ணாவை எப்படி உன் பக்கம் இழுத்த? அதீபன் கேட்க, அவன் கையை எடுத்து விட்டு, நான் யாரையும் என் பக்கம் இழுக்கலை. உதவினேன். அதில் தான் பேசினோம்.
சரி, கோபப்படாத. இப்ப உனக்கு கை எப்படி இருக்கு ஓ.கே வா?
ம்ம்..என்றான் காவியன்.
ஹே, உனக்கு தெரியுமா? எங்க அண்ணனோட காதல் வீட்ல தெரிஞ்சு போச்சு. அப்பாவுக்கு மட்டும் தான் விருப்பமில்லை. எங்க அண்ணா முடிவு சரியா இருக்கும்ன்னு எல்லாருக்கும் நம்பிக்கை. உங்க அக்கா எப்படி? அதீபன் கேட்க,
சார், நீங்க இதையெல்லாம் கேட்க தான் வந்தீங்களா? இதை பேசும் இடம் இதுவல்ல.
சரி, நாளைக்கு பிராக்டிஸ் வருவேல்ல. அங்க பேசலாமா?
சார், அக்காவை பற்றி சாருக்கு தெரியும் அவரிடமே கேட்டுக்கோங்க. நான் மாயாவை பார்க்க போகணும்.
நீ அந்த பொண்ணை இன்னும் காதலிக்கிறாயா? அதீபன் கேட்க,. இல்லை. அவள் வேரொருவனை முடிவு செய்து விட்டாள். அவள் வாழ்வில் இனி தலையிட மாட்டேன் என்று காவியன் உள்ளே செல்ல அதீபனும் அவனுடன் சென்றான்.
காவியன் தன் நண்பர்களை பார்த்து, டேய் இங்க என்ன பண்றீங்க? என கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான். ரணாவையும் பார்த்தான். எல்லாரையும் பார்த்து, லட்சணா எங்க? காவியன் கேட்க, தெரியலடா. அவள் அலைபேசியை எடுக்கவில்லை. நேற்று அவள் அண்ணாவால் பிரச்சனைன்னு அம்மா, அப்பா சண்டை போட்டதா சொன்னா? ஆரா சொன்னாள்.
என்னிடம் யாருமே சொல்லலை? ரணா கேட்க, நீயே ஏழெரை கூட்டி வச்சிருந்த? நான் என்னத்த சொல்ல? ஆரா அலுத்துக் கொண்டு சொன்னாள்.
என்னக்கா பிரச்சனை? பிரச்சனை பெருசா? ஜீவா கேட்டான்.
“பிரச்சனை இப்ப வரும் முன் தான் சரியானது” என்று அதீபன் வந்தான்.
பிரச்சனை முடிந்ததா? நிதின் கேட்க, ஏன்டா, முடிஞ்சா தான நல்லது ஆத்விகா சொல்லிக் கொண்டே காவியனை பார்த்தாள். நிதின் ரணாவை பார்த்தான். அவள் கண்கள் மகிழ்ச்சியை காட்டினாலும் அவளது முகம் சோகமாக இருந்தது.
இன்னுமா எழாம இருக்கா? என ஏதும் அறியாதது போல் காவியன் கேட்க, மாயாவ பார்த்துட்டு போய் பார்க்கணும்டா என்றான் சங்கீதன்.
யாருமே தூங்கலையா? ரணா கேட்க, அனைவரும் காவியனை பார்த்தனர். அவனும் அவளை பார்த்துக் கொண்டு, இல்லை. முதல்ல மாயா விழிக்கட்டும்.
நிது, நீயும் இங்கேயே தான் இருந்தியா? வொர்க்கிற்கு போகணுமே? மாமா கோவிச்சுக்காம என ரணா காவியன் பேசியதை தவிர்த்து கேட்டாள்.
நான் அப்பாவிடம் சொல்லீட்டு தான் வந்தேன். அதனால் அவர் பார்த்துப்பார் என்றான் நிதின்.
மாயா விழித்தவுடன் ஜீவா..ஜீவா..என்று அழைத்துக் கொண்டே எழுந்தாள். ரணா காவியனை பார்க்க, அவன் என்ன தான் மாயாவை மறந்துட்டேன்னு சொன்னாலும் அவனுக்கு இப்படி அவள் கண்ணை திறந்தவுடனே அவனை கேட்டது கஷ்டமாக இருந்தது. நிதினும் அதீபனும் அவனை பார்த்தனர்.
காவியன் மாயாவை மறக்க முயற்சிக்கிறான் என ரணாவை தவிர அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் ரணாவோ அவன் ஜீவாவையும் மாயாவையும் பார்த்து விட்டு, என்ன நடக்குது? அப்ப இவங்க காதலிக்கிறாங்களா? காவியன் கஷ்டப்படுவானே? என அவனை பார்த்தாள்.
அவன் வெளியே செல்ல, அச்சோ கஷ்டமாகிருச்சு போல என ரணா அவன் பின் வர, அவனுக்கு நேத்ரா அனுப்பிய செய்திக்காக பேச வெளியே வந்தான்.
மாயா..என்று அனைவரும் கண்கலங்க, ஜீவா அவளது கையை பிடித்துக் கொண்டே மண்டியிட்டு அமர்ந்தான்.
தலை ரொம்ப வலிக்குதுடா என்றாள்.
ஒன்றுமில்லை மாயா. உனக்கு சீக்கிரம் சரியாகிடும் டாக்டர் சொன்னாங்க என்று சுஜி அவளது கையை இறுக பற்றினாள்.
ம்ம்..என்று கண்ணீருடன் அனைவரையும் பார்த்தாள். ஆரா, ராகாவை பார்த்ததும் காவியனை எங்க? கேட்டாள்.
அண்ணா, இங்க தான இருந்தாங்க என்று பிரணா இல்லாததையும் பார்த்து, அக்காவோட பேசுறாங்களோ? என்றான். மாயா புன்னகையுடன், அதீபன், நிதினை பார்த்து விட்டு,
சார், இவங்க? என ஆத்வியை கேட்டாள். நிதின் ஆத்விகா தோளில் கை போட்டான். மாயா புன்னகைத்தாள்.
நீங்க இருங்க. நான் டாக்டரை அழைச்சிட்டு வாரேன் என்று விஷ்வா சென்றான். ஜீவாவும், சுஜியும் அவளருகேயே அமர்ந்தனர். மற்றவர்கள் வெளியே வந்தனர். கண்ணன் மீண்டும் லட்சணாவை அழைக்க, அப்பொழுதும் அவள் எடுக்கவில்லை.
காவியன் நேத்ராவிடம், சொல்லுங்க என்றான் சோகமாக.
மாயா முழிச்சிட்டாளாடா?
ம்ம்..முழிச்சிட்டாக்கா.
சாரிடா.
உன்னோட சாரிய அப்புறம் வச்சிக்கோ என்ற அதிரதன் அலைபேசியை நேத்ராவிடம் பிடுங்கினான்.
சார், உங்க அலைபேசில பேசலாம்ல..
இப்ப உன்னோடதா இருந்தா தான் என்ன? அவன் கேட்க, இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
நெற்றியை தேய்த்துக் கொண்டே கோபமாக, சார் என்ன பண்றீங்க? என சத்தமிட்டு திரும்பினான் காவியன். அவன் சத்தத்தில் பயந்த ரணா கீழே விழுந்தாள்.
ஹே, என்னாச்சு? என்று ரணாவுக்கு உதவ வந்தான் காவியன். ஒன்றும் வேண்டாம் என்று எழுந்து, சாரா? யாரிடம் பேசுற? என்று ரணா அவனருகே வர, வெளியே வந்த அனைவரும், சுற்றி இருந்தவர்களும் இவர்களை தான் பார்த்தனர்.
ஏய், வராத என்று அவன் பின்னே செல்ல, நம்ம ராஜ் சார் தான் என்றான். தன் தங்கை என்று அதிரதனுக்கு புரிந்தது. எதுக்கு இவன் பொய் சொல்கிறான்? அவன் அக்காவுக்காக இருக்கும் என்று அதிரதன் அவனாகவே நினைத்துக் கொண்டேன்.
ராஜ் சார் தான? நான் பேசுகிறேன் என்று காவியனிடம் அலைபேசிக்காக சண்டை போட்ட ரணா, அவனுடன் நெருக்கமாக இருப்பதையே நினைக்கவில்லை. ஆனால் காவியன் அக்மார்க் பையனாயிற்றே? அவனுக்கு ஒருமாதிரி ஆனது.
ரணா, விட்டுரு என்று அவன் சொல்ல இருவரும் கீழே விழுந்தனர். அவன் மீதிருந்த ரணா அவனது அலைபேசியை பறித்து, நான் பேசுறேன் என்று எழுந்தாள்.
அதிர்ந்த காவியன் மனம் அவள் பக்கம் செல்ல, அவளது ஹலோவில் வேகமாக எழுந்து அவளை அணைத்தான். அவள் அதிர்ந்து நிற்க, அவள் கையிலிருந்து அலைபேசியை எடுத்து அப்புறம் கால் பண்றேன் என்று வைத்து விட்டு ரணா முன் வந்து அலைபேசியை ஆட்டி காட்டி விட்டு புன்னகையுடன் சென்றான்.
அதான பார்த்தேன். இவனது மாற்றம் காதல் தான்னு இப்ப எல்லாருக்கும் சொல்லாமல் சொல்லி விட்டானே? என்று சங்கீதன் புன்னகைத்தான்.
கட்டிபிடிச்சது சரி, அலைபேசிக்காக தான செய்தான். இதை எப்படி காதல்ன்னு எடுத்துக்கிறது? அதீபன் கேட்க, சார் எங்க காவியனுக்கு பசங்க தேவையில்லாமல் தொட்டாலே பிடிக்காது. இது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா? ஆராதனா கேட்டாள்.
சரி, பார்க்கலாம் என்று அதீபன் சொல்ல, ஆத்வி காவியனிடம் சென்றாள்.
இப்ப என்ன நடந்தது? தெரிஞ்சுக்கலாமா? ஆத்வி கேட்க, உங்க தங்கையிடமே கேட்டுக்கோங்களேன் என்று டாக்டர் அறைப்பக்கம் சென்றான். மற்றவர்களும் அவனுடன் சென்றனர்.