அத்தியாயம் 38

எல்லாரும் ஹாலுக்கு வந்தனர். தாட்சாயிணியும் ஆடையை மாற்றி விட்டு சாப்பிட வந்தாள்.

இப்ப நீ ஓ.கே தான தாட்சு? நான் சும்மா விளையாட்டுக்கு பூட்டினேன் என்றான் அதீபன்.

ஒன்றுமில்லை மாமா. நான் நல்லா இருக்கேன் என்று தயங்கிக் கொண்டு அவள் அம்மா, அப்பா, நிதினை பார்த்தாள்.

அம்மா, தாட்சு கல்யாணம் இப்பவே செய்யப் போறீங்களா? நிதின் கேட்க, அவள் சாப்பிடுவதை நிறுத்தி அதீபனை பார்த்தாள். அவன் அவளை பார்த்து கண்ணடித்தான். இவர்களுக்கு தெரியாது என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

அம்மா, இப்ப எதுவும் வேண்டாம் என்று தாட்சாயிணி சொல்ல, அதீபன் சாப்பிடுவதை நிறுத்தி அவளை பார்த்தான்.

அண்ணி, எல்லாமே எல்லாருக்குமே தெரிஞ்சு போச்சு. மாமா கேட்டது அதீபன் அண்ணாவுடனான உங்க கல்யாணத்தை தான் ரணா சொல்ல, குள்ளச்சி எதுக்கு இப்ப சொன்ன? இன்னும் கொஞ்சம் அவளை அழ வைக்கலாம்ன்னு நினைச்சேன் என்றான் நிதின்.

இதுக்கு மேல அவ அழணுமா? நீ தான் அழப் போற என்று ஆத்விகா அதிரதனை காட்டினாள். அவன் நிதினை முறைத்துக் கொண்டிருந்தான்.

என்னாச்சுடா? நிதின் கேட்க அதிரதன் மேலும் முறைத்தான். எல்லாரும் சாப்பிட்டு அறைக்கு செல்ல, ரணாவை நிறுத்திய தாட்சாயிணி அவளறைக்கு அழைத்து சென்று “என்ன நடந்தது?” என கேட்டு அறிந்து கொண்டாள். மகிழ்ச்சியில் ரணாவை அணைத்து அவள் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

அண்ணி, என்ன பண்றீங்க? என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டே வெளியே ஓடி வந்து அதிரதனை இடித்தாள் ரணா.

என்னாச்சு குட்டிம்மா? எதுக்கு இப்படி ஓடி வர்ற? கை ரொம்ப வலிக்குதா? அதிரதன் கேட்க, அய்யோ அண்ணா, வலி பரவாயில்லை..குனியேன் என்று அவனை குனிய வைத்து,

அண்ணா, தாட்சு அண்ணி அறைக்கு போயிறாத?

ஏன்டா?

அண்ணி..அண்ணி..எனக்கு முத்தம் கொடுத்துட்டாங்க என்று முகத்தை மூடிக் கொண்டு ஓட, அவள் தான கொடுத்தாள். அதுக்கே இப்படி ஓடுறாளே? அதிரதன் சொல்லிக் கொண்டிருந்தான். நிதின் அவனிடம் வந்தான்.

அதிரதனுக்கு அழைப்பு வர, மகிழ்ச்சியாக எடுத்தான்.

எங்க வெளியவா? இப்பவா? என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தான். நிதினும் அவன் பின் வந்தான். அவர்களை பார்த்து மற்றவர்களும் வந்தனர்.

சுபிர்தனை பார்த்து, பாட்டி அவனை அழைக்க, ஷ்..என்றான் அவன்.

எழிலனும் வெண்பாவும் அவனுடன் இருந்தனர்.

எழிலா, வா..வா..என்று அதிரதன் அவனை ஓடி சென்று அணைக்க, எழிலன் அதிரதனை விலக்கி விட்டான்.

என்னாச்சு? அதிரதன் கேட்க, “எழிலா என் செல்லக்குட்டி” என்று நிதினும் அவனிடம் வர, பின்னிருந்த சுபிர்தனும் வெண்பாவும் வேண்டாம். அவன் கோபமா இருக்கான் என சைகை செய்தனர். அவன் அப்படியே நின்றான்.

யாருப்பா நீங்க? கண்ணா உனக்கு தெரிஞ்ச பசங்களா? உள்ள வாங்க யசோதா அழைத்தார்.

நான் உள்ளே வர மாட்டேன் என்றான் எழிலன் கோபமாக.

செழியன், அதீபன், சிவநந்தினி அவனை ஏற்கனவே பார்த்திருப்பார்களே? செழியன் அதிரதனிடம், இவனை உனக்கு தெரியுமா அதி? என கேட்டார்.

ம்ம்..தெரியும்ப்பா. உங்களுக்கு தெரியுமா?

தெரியும். நிலையத்துக்கு போன போது பார்த்தேன் என்று தன் மனைவியை பார்த்தார்.

எதுக்கு கோபமா இருக்கீங்க? அதிரதன் எழிலன் தோளில் கையை போட்டான். எழிலன் அவன் கையை தட்டி விட்டு, நீங்க செய்றது சரியில்லை என்றான்.

நான் என்ன செய்தேன்?

அக்காவை முதல்ல இங்க கூட்டிட்டு வந்துருங்க என்றான்.

இங்க அவ வர முடியாது. ரொம்ப ரிஸ்க்.

எதுக்கு? நாங்க எல்லாரும் பார்த்துப்போம்.

உனக்கு இப்ப கால் எப்படி இருக்கு? அதிரதன் கேட்க, நான் நல்லா தான நிக்கிறேன். நான் என்னோட அக்காவை சமாதானப்படுத்திப்பேன். என்னால இதுக்கு மேல அவள விட்டு இருக்க முடியாது.

எழிலா, அவள பத்தி எல்லாமே உனக்கு தெரிஞ்சு போச்சுன்னு தெரிஞ்சா அவ கஷ்டப்படுவா? திரும்ப அவள் தொலைந்தால் உன்னால தேட முடியுமா? நிதின் கேட்டான்.

முடியாது தான் நிது. ஆனால் இன்று நடந்தது தெரிந்தும் நான் எப்படி நிம்மதியா இங்க இருக்க முடியாது. என்னோட படிப்பை அப்புறம் பார்த்துக்கலாம். இப்போதைக்கு காலேஜ்ல என்னை சேர்த்துக்கவும் மாட்டாங்க. பிரின்சிபுல்க்கு நடந்த எல்லாமே தெரிஞ்சா என் கைக்கு டீ.சிய கொடுத்து அனுப்பிடுவாங்க. அக்காவும் இல்லாமல் படிப்பும் இல்லாமல் அப்புறம் என்ன இந்த வாழ்க்கை? விரக்தியுடன் எழிலன் பேச, வெண்பா கண்கள் கலங்கியது.

இன்னும் கொஞ்ச நாள் மட்டும் எழிலா, நான் எப்படியும் கண்டுபிடிச்சிடுவேன். நான் உன்னை பார்க்க வரணும்ன்னு தான் நினைச்சேன் என்றான் அதிரதன்.

என்னை பார்த்து உங்களுக்கு என்ன ஆகப் போகுது?

உன்னோட அக்கா, நிது, நான். எதுக்கு எங்களை சுற்றியே எல்லாமே நடக்குது? அவள வச்சு எதுக்கு அவன் என்னையும் நிதுவையும் மிரட்டணும்? உனக்கு ஏதாவது தெரிந்தால் மறைக்காமல் சொல்லு? அதிரதன் கேட்டான்.

எனக்கு தெரியாது. விக்னேஷ் இல்லன்னு கார்த்திக்கை எல்லாரும் சந்தேகப்படுறோம். எனக்கு அவனும் இருக்க மாட்டானான்னு தோணுது எழிலன் சொல்ல,

உள்ள வந்து பேசு. யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் நம்மை கண்காணிக்கலாம் நிதின் எழிலனை அழைத்தான்.

சுற்றி பார்த்த எழிலனும் கேட்டை தாண்டி வந்து வெளியேவே ஓரிடத்தில் அமர்ந்தான்.

இவ்வளவு உள்ள வந்துட்டேல்ல. உள்ள வரலாம்ல்ல? அதிரதன் கேட்க, தேவையில்லை என்றான் எழிலன்.

வர வேண்டிய நேரத்தில் எப்படியும் வந்து தானே ஆகணும்? அதிரதன் சொல்ல, சார் நீங்க தள்ளியே இருங்க. நீங்க செய்ற உதவி எங்களுக்காக மட்டுமல்ல, அவன் நம்ம எல்லாரையும், உங்க குடும்பத்தையும் சேர்த்து தான் டார்கெட் செய்றான்.

என்னோட அக்கா மனச மாத்த யாராலும் முடியாது. அவளோட கஷ்டத்தை மேலும் அதிகமாக்காதீங்க..

புரியுதுப்பா. ஆனால் என்னால் நீ சொல்ற இதை கேட்க முடியாது. வேறெதாவது சொல்லு? செய்றேன் என்றான் அதிரதன் முறைப்புடன்.

இந்த முறைப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்ல என்ற எழிலன் அதிரதன் முன் சொட்டக்கிட்டு, நீங்க என்னை மீறி ஏதும் செய்ய முடியாது என்றான். அதிரதன் சட்டென இறங்கினான்.

ரதா, வேண்டாம்டா நிதின் சொல்ல, அதிரதனுக்கு, ஒரு குட்டிப்பையன் இவனிடம் இதே போல் சொடக்கிட்டு பேசியது நினைவிற்கு வந்தது.

கண்டுபிடிச்சிட்டாரோ? நினைவு வந்துருச்சோ? எழிலன் மனதினுள் நினைக்க, ஏய் அந்த குட்டிப்பையன் நீ தான? என்ற அதிரதன்..அது எப்படி? இந்த ஸ்கூல விட்டு போறதுக்குள்ள நீங்க என்னை தூக்கல என் பெயரை நானே மாத்திக்கிறேன் என்று சவால் விட்டது நீ தான? என்று எழிலனை நோக்கி அதிரதன் வந்தான்.

கண்டுபிடிச்சுட்டாரே? நல்ல வேலை இது மட்டும் தான் நினைவிருக்கு என்று நினைத்துக் கொண்டே நிது, உன்னோட ப்ரெண்ட பக்கத்துல வர வேண்டாம்ன்னு சொல்லு என்று எழிலன் நிதினிடம் வந்து நின்றான்.

ரதா, எழிலன் பக்கத்துல வராத என்று நிதின் அவனை மறித்து நின்றான்.

அவன் தான ரொம்ப ஆசைப்பட்டான். அதான் என்று அதிரதன் முன்னேற, வாட்? நிது சார் என்ன சொல்றார்? அப்ப நான் சின்னப் பையன்.

வா..என்று நிதின் பின் மறைந்து நின்ற எழிலனை அதிரதன் பிடித்து இழுக்க, அண்ணா..என்று அதீபன் சத்தமிட்டான்.

செழியன் அதிரதனை கோபமாக பார்த்துக் கொண்டிருந்தார். எழிலன் தான் சொல்லி இருப்பானே! நேத்ரா திருமணமானவள் என்றும் தன் மகன் தான் அந்த குட்டிப் பையனை வைத்து அந்த பொண்ணை அருகே வைத்திருக்கான் என்று இவர்களுடன் பேசியது தெளிவாக புரிந்தது. சிவநந்தினி அதிரதனது இந்த நடவடிக்கை பதினேழு வருடமாக காணவில்லை என்று எண்ணி அவர் கண்ணில் கண்ணீர் கோர்க்க தன் மகனை பார்த்தார்.

ஜடம் போல் இருந்தவன் மனசு இப்ப மாறியிருக்கு என்று அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை பார்த்து விட்டு தன் அப்பாவிடம் சென்றான் அதிரதன்.

அப்பா,..அவன் ஆரம்பிக்க, நீ சொன்ன பொண்ணு இந்த பையனோட அக்காவா? கேட்டார்.

“ஆமாப்பா” என்ற மறுநிமிடம் அதிரதனை அறைய வந்த கையை பிடித்தான் எழிலன். அனைவரும் அவர்களை அதிர்ந்து பார்த்தான்.

ஏய், உனக்கு எவ்வளவு தைரியம்? பாட்டி சத்தமிட்டார்.

ஒரே நிமிசம் நான் சொல்வதை சொல்லீட்டு போடுறேன். உங்க பிரச்சனைய நீங்க அப்புறம் பார்த்துக்கோங்க சார் என்றான் எழிலன்.

என்னடா சொன்ன? யசோதா கோபமாக அவனிடம் வந்தார். அவர் முன் வந்த அதிரதன், யசோ..சத்தமிட்டான். அவர் நின்று விட்டார். ஆனால் செழியன் கோபம் ஏறியது.

வெண்பா இடையே வந்து, சாரி சார். அவன் ஏதோ புரியாமல் பேசுறான் என்று எழிலா, என்ன பண்ற? வா போயிடலாம்.

இதுக்கு தான் நீ வரவேண்டாம்ன்னு சொன்னேன். தள்ளிப் போ என்று எழிலன் வெண்பாவிடம் கத்தினான். அவளை யாரும் ஏதும் சொல்லி விடக் கூடாது என்று அவன் கத்த, அவன் எல்லார் முன்னும் இப்படி செய்துட்டான் என்று அவள் அழுது கொண்டே நகர்ந்தாள்.

எழிலா, என்ன பண்ற? சுபிர்தனும் கோபப்பட, உங்க வேலைய மட்டும் பாருங்க. நான் உங்களோட வரணும்ன்னா. அமைதியா நில்லுங்க என்று சொல்லி விட்டு, சார் நான் சொல்ல வேண்டியதை சொல்கிறேன் என்று அதிரதன் பக்கம்  திரும்பினான்.

எனக்கு கார்த்திக்கை நன்றாக தெரியும். அவனுக்கு அடிபட்டது உண்மை தான். அவன் நெற்றியில் அந்த தழும்பு ரொம்ப நாள் இல்லை. என்னுடன் படித்தவனின் அண்ணணோட நண்பன் தான் கார்த்திக். நான்கு வருடங்களுக்கு முன் அவனது புகைப்படம். இவன் தான் கார்த்திக் என்று எழிலன் காட்ட, நிதினும் பார்த்து விட்டு, ஆமா இவன் தான் கார்த்திக்.

ரதா, இதில் தழும்பு இல்லை.

இவன் இப்ப எங்க இருக்கான்னு கேட்டு சொல்ல முடியுமா எழிலா?

அது முடியாது? அவன் தொலைந்து விட்டான். இந்த புகைப்படத்தின் பின் இரு முறை என்னுடன் படித்தவனின் அண்ணன் இவனை சந்தித்து அவர் பார்க்கும் இடத்திலே சேர்த்து விட்டாராம். ஒரு வாரம் அவருடன் தான் வேலை செய்து வந்திருக்கார். ஆனால் அதன் பின் அவர் இடத்திலும் அவர் வரலையாம். போலீஸ்ல சொன்னா கம்பிளைண்ட் பைல் பண்ணதோட சரி, அவரை பற்றி தெரிந்து கொள்ளணும்ன்னா..பணம் வேணும்ன்னு கேட்கிறார்களாம்.

என் வகுப்பு தோழனுக்கு குடும்பம் இருக்கு. அவங்க அண்ணா அவங்க குடும்பத்தை பார்ப்பாங்களா? இல்லை ஸ்டேசன் ஏறி இறங்குவாங்களா? அவங்களால கண்டுபிடிக்க முடியல.

உங்ககிட்ட இந்த விசயத்தை சொன்னது என்னோட அக்காவுக்காக இல்லை. நிதுவை கொல்ல நினைக்கிறவங்களுக்கும் அக்காவுக்காக உங்களை மிரட்டுபவனும் சேர்ந்து தான் வேலை செய்றானுகன்னு எனக்கு தோணுது..

நீங்க உங்க பிரச்சனைய பார்த்துக்கோங்க. நான் என் அக்காவை பார்த்துப்பேன். என் அக்கா அருகே வர நினைக்காதீங்க. போதும். அவள் ஏற்கனவே பட்ட கஷ்டம் போதும். இதுக்கு மேல அவள எப்படி பார்த்துக்கணும்ன்னு எனக்கு தெரியும் என்று ஆத்விகாவை பார்த்து, சாரி சொல்லி விட்டு, சுபி..வா போகலாம் என்று வெண்பாவை பார்த்தான். அவள் கோபமாக நின்று கொண்டிருந்தாள்.

சாரிடா, கோவிச்சுக்காத. இவங்க யாரும் உன்னை ஏதும் சொல்லக் கூடாதுன்னு தான் திட்டினேன். வா..போகலாமா? என்று கையை நீட்டினான். அவளும் அவன் கையை பிடித்துக் கொண்டாள். சுபிர்தன் அதிரதனை திரும்பி பார்த்துக்  கொண்டே செல்ல, யோசனையுடன் நின்ற நிதின் அவர்களை மறித்து,

நீ நினைக்கிறது முடியாது. ரதனோட பாதுகாப்பு இருக்கும் வரை தான் அவளுக்கு பாதுகாப்பு. புரிஞ்சுக்கோ..நிதின் சொல்ல, என் அக்காவை பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம். என்னோட அப்பா எப்படி அவளை பார்த்துக் கொண்டாரோ? அதே போல் நான் உயிரோட இருக்கும் வரை பார்த்துப்பேன் என்றான் எழிலன்.

கையை தட்டிக் கொண்டே எழிலனிடம் வந்த அதிரதன், பரவாயில்லை அவளுக்கு சளைத்தவன் இல்லை என நன்றாக நிரூபிக்கிறாய்? அக்காவுக்கு ஏற்ற தம்பி. அந்த போலீஸ் நினைத்தால் கூட அவளை பாதுக்காக்க முடியாது. நீ உயிரை கொடுத்துட்டு உன்னோட அப்பா போல தனியா விட்டுட்டு தான போகப் போற? அவன் கேட்க,

நாங்க இருந்தா என்ன? செத்தா உங்களுக்கென்ன? எழிலன் கோபமாக சொல்ல, அதிரதன் அவனை அறைத்தான்.

உன்னோட அப்பாவ கொன்றுக்காங்க. உன்னோட அக்காவை மிரட்டி இருக்காங்க. நீ செத்துருவ? அவளோட நிலைமைய யோசித்தாயா? அவன் கேட்க, எழிலனால் ஏதும் பேச முடியவில்லை.

உன் அக்காவை விடு. அப்ப இந்த பொண்ணு என்று அதிரதன் வெண்பாவை காட்டி கேட்க, அவ முன்னாடி எப்படி நிதானமா பேசுணும்ன்னு தெரியாம வார்த்தைய விட்டு இந்த பொண்ணையும் கஷ்டப்படுத்துற என்றான் அதிரதன்.

வெண்பா கண்ணீருடன் எழிலனை பார்த்தாள். பின் தான், நாம் என்ன சொல்லி விட்டோம் என்று உணர்ந்து, அவளது கையை இறுக்கமாக பிடித்தான்.

வெண்பாவிற்கு முழுதாக புரியவில்லை என்றாலும் நேத்ரா அக்காவை அதிரதனுக்கு பிடிச்சிருக்கு. அதனால் தான் சேர்மன் சார் கோபப்படுறார்ன்னு புரியுது.

எழிலன் சொல்றது சரி தான். நீங்க உங்க பிரச்சனைய பாருங்க. அக்காவை நாங்க பார்த்துப்போம் என்று அவளும் சொல்ல, அதிரதன் சிரித்தான். எழிலன் அவனை முறைத்தான்.

அவன் எப்படி பட்டவன்னு தெரிஞ்சும் இப்படி பேசுறீங்க? உங்களால உங்களையே பார்த்துக்க முடியாது அவன் சொல்ல, எழிலனுக்கு கோபம் அதிகமானது.

இருவரும் நிறுத்துறீங்களா? ரதா நீயும் சின்ன பிள்ள மாதிரி அவனிடம் பேசிட்டு இருக்க? நிதின் சத்தமிட்டான்.

அவன் எப்படி பேசுறான் பாரு? கொஞ்சமாவது சீரியஸ் புரியுதா? அதிரதன் சினமாக, அவன் அவனோட அக்காவை பற்றி யோசிப்பது ஒன்றும் தவறில்லை அண்ணா என்று அதீபனும் அவர்கள் அருகே வந்தான்.

அதீபா, நீ தலையிடாத. அண்ணா எனக்கு உன்னோட அந்த பொண்ணு தான் இருக்காங்கன்னு தெரியும். உனக்கு அவங்கள பிடிச்சிருக்குன்னு தெரியும்.

ஆத்வியவோ இல்லை ரணாவையோ உன்னால் அந்த பொண்ணு இடத்தில் வைத்து பார்க்க முடியுமா? வைத்து பாரு. அவன் நிலை உனக்கு புரியும். இப்ப அப்பாவும் எதிர்ப்பை காட்டுகிறார் என்று செழியனை பார்த்தான் அதீபன்.

நான் எல்லாருக்கும் ஒன்று மட்டும் சொல்லணும்ன்னு நினைக்கிறேன். ஒரு பொண்ண பத்தி முழுசா தெரியாம அவங்கள குறை பேசாதீங்க என்றவன்..அப்ப கொலைகாரன் இருவரா? அதீபன் கேட்க,

அதிரதன் அவன் அப்பாவை பார்த்துக் கொண்டு, ஆமா அதீபா இருவன் தான். ஒருவனை கண்டறிந்ததாக நினைத்தோம். ஆனால் எழிலன் அவனில்லை என்கிறான்.

இன்னொரு விசயம் என்ற எழிலன், இதில் ஒருவன் என் அக்காவை காப்பாற்ற நினைக்கிறான். ஆனால் உங்களையும் நிதினையும் இருவருமே கொல்ல நினைக்கிறான். என்னோட அக்காவை இப்பொழுதைக்கு தான் விட்டு வச்சிருக்காங்க என்று, நாங்க வாரோம் என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சென்றான் எழிலன்.

அவ்விடத்தை விட்டு தள்ளி வந்த எழிலன் அழுதான். வெண்பா அவனை அணைத்துக் கொண்டாள். அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அதிரதன் சொன்னது போல் அவனால் அவன் அக்காவை அதிரதன் அளவிற்கு பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள முடியாது என்று புரிந்தது.

ஆனால் அதிரதன் அருகே இருந்தால் அவள் மிகவும் கஷ்டப்படணும். அதை விட அவனது குடும்பம் நேத்ராவிற்கு தொந்தரவு செய்வார்களோ? இல்லை அவளை பற்றி தவறாக பேசி விடுவார்களோ? என்று தான் அதிகமான பயம் எழிலனுக்கு. நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் நேத்ரா, எழிலனுக்கு அவர்களது மானம் பெரியதல்லவா? அதுவும் பெற்றோர்களை இழந்து தவிப்பவர்களாயிற்றே?

அவன் அழுவதை தூரத்தில் நின்று அதிரதன், நிதின், அதீபன் பார்த்தனர். அண்ணா, நீ அப்பாவிடம் பேசியே ஆகணும். அந்த பையன் அவங்கள இங்க கூட்டிட்டு வர முயற்சி செய்து தவறாக ஏதும் நடந்து விடாமல் பார்த்துக்கோ அதீபன் சொல்ல, உனக்கு எப்படி தெரியும்? அதிரதன் கேட்டான். அவன் நிதினை பார்த்தான்.

நான் ஏதும் சொல்லலை ரதா?

இவன் எங்கே சொன்னான்? இவனும் ஆத்வியும் நீங்க பேசியதை ஒட்டுகேட்டு பேசிக் கொண்டிருந்தனர். அதனால் எனக்கும் தாட்சுவுக்கும் தெரியும் என்றான்.

அவளுக்கும் தெரியுமா?

தெரியும் என்றான்.

அண்ணா..போ. நான் அவனை பார்த்து விட்டு வாரேன் என்றான் அதீபன்.

நீ என்ன பேசப் போற? அதிரதன் கேட்டான்.

உன்னோட காதல்ல நான் இடையே வர மாட்டேன். நான் என்னோட அலைபேசி எண்ணை கொடுத்து உதவி தேவைப்பட்டால் சொல்ல சொல்றேன் என்று எழிலனிடம் ஓடினான் அதீபன்.

செழியனும் ரவிக்குமாரும் தன் பசங்களையும், அழுது கொண்டிருந்த எழிலனையும், ஆறுதலாக அவனை அணைத்துக் கொண்டிருந்த வெண்பாவையும், என்ன செய்ய என புரியாமல் நின்று கொண்டிருந்த சுபிர்தனையும் பார்த்தார். பின் அவர் நகர்ந்தார்.

வீட்டிற்கு வந்த அதிரதன், நிது கவனமா இருங்க. பார்த்துக்கோங்க..நான் கிளம்புகிறேன் அதிரதன் சொல்ல, அதி நில்லு..செழியன் சீற்றமானார்.

என்ன வேணும் உங்களுக்கு? அவ மட்டும் அங்க இல்லை. உங்களுக்கு எப்பொழுதுமே என் மேல் நம்பிக்கையே வராதுல்ல என்ற அதிரதன், பாட்டி எல்லாரும் கவனமா இருங்க.

தாட்சு, ஆத்வி, குட்டிம்மா எங்கும் வெளிய போகக்கூடாது. யாரும் கோவிலுக்கு போறேன்னு வெளிய போகாதீங்க. குட்டிம்மா காலேஜ்லயும் கவனமா இரு. யாரையும் முழுசா நம்பாத. ஏதும் பிரச்சனைன்னா உன்னோட ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லு என்று அவளை கூர்ந்து கவனித்தான் அதிரதன். அவள் கண்கள் தாழ்ந்து இருக்க, ஓ…அவன் காவியன் தானா? என்று மனதினுள் நினைத்துக் கொண்டான் அதிரதன்.

அங்கிள், எல்லாரையும் பார்த்துக்கோங்க. நான் கிளம்புகிறேன் என்றான் அதிரதன்.

ரதா, இரவு செல்லலாமே? நிதின் கேட்க, இரவு தான் போகணும்.

அண்ணா, இப்ப எங்க போகப் போற? ரணா கேட்க, நான் நம்ம நிலையத்துக்கு போறேன். சுஜியிடம் பேசணும்டா நிதின். அவள் சொன்னாலாவது எழிலன் கேட்கிறானான்னு பார்க்கலாம்.

இருடா. நானும் வாரேன். அவன் என்னை போல் ஜாலியா இருந்தவன். அவன் கஷ்டப்படுறத பார்க்க முடியல என்றுசெழியனை பார்த்துக் கொண்டே ரவி அப்பா, நான் போயிட்டு வந்துடுறேன் என்றான் நிதின்.

நிது, நீ எங்கேயும் போக வேண்டாம்.

அம்மா, நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன். ஆனால் எழிலனுக்கு அவள் அக்கான்னா. அவள் என்னோட சின்ன வயசு ப்ரெண்டு. எனக்கு யாரும் ஆறுதலா இல்லாத போது எனக்கு ஒரு ப்ரெண்டா நிறைய உதவி செஞ்சிருக்கா. இப்ப அவ கஷ்டப்படும் போது என்னால இங்க நிம்மதியா தண்ணீர் கூட குடிக்க முடியாது.

ஆத்வி, நீ சொல்லு. நான் போகவா? வேண்டாமா? உனக்கு என் மீது நம்பிக்கை இருக்குல்ல நிதின் கேட்க, நிதினை அணைத்த ஆத்விகா, போயிட்டு வா. எனக்கு உன்னோட நிம்மதியும் அண்ணாவோட சந்தோசமும் தான் முக்கியம் என்றாள். ரணாவும், ஆமா போயிட்டு வாங்க என்று ஒரு கையால் ஹார்ட் சிம்பிளை காட்டினாள்.

குட்டிம்மா, கை ரொம்ப வலி இல்லைல்ல? அதிரதன் கேட்டான்.

ஏன்டா, அவளுக்கு வலித்தால் போகாம இருந்திருவியா? பாட்டி கேட்க, நான் என் குட்டிம்மாவையும் அழைச்சிட்டு போயிடுவேன். நீ வர்றியா பாட்டி? அதிரதன் கேட்டான்.

நானா? என்று பாட்டி செழியனை பார்த்தார்.

வரலடா கண்ணா, நான் அந்த பொண்ணை பார்த்திருக்கேன். ஆனால் நினைவில்லை. நான் பார்த்துட்டு சொன்ன பின் தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்றார்.

அம்மா..செழியன் சத்தமிட்டார்.

எல்லாரும் கவனமா இருங்க. குட்டிம்மா பிரச்சனைன்னா. எனக்கு கால் பண்ணு என்றான் அதிரதன்.

யசோதாவும் அதிரதனை பார்த்து, பச்சை கொடி காட்ட, அண்ணா நான் பார்த்துக்கிறேன் என்றான் அதீபன். அதிரதன் அவன் அம்மாவை பார்த்தான். சிவநந்தினி தன் கணவரை பார்த்தார்.

நிதினும் அதிரதனும் நிலையத்திற்கு கிளம்பினர். அங்கே வந்த வெண்பா சோகமாக கோவில் அருகே அமர்ந்திருந்தான். எழிலன் அவனுக்கு இருந்த டென்சனில் சென்று படுத்துக் கொண்டான்.

சுபிர்தன் கூறியதை கேட்ட காவியன் எழிலன் அருகே வந்து, தலைவலி மருந்தை எழிலனுக்கு தடவி விட்டான்.

நீ அதிகமா யோசிக்காத. இப்பொழுதைக்கு அக்கா பாதுகாப்பு அதிரதன் சார் கையில் தான் இருக்கு. அவர் வீட்டில் தான் அக்காவுக்கு பாதுகாப்பு. முதல்ல அக்காவை காப்பாற்றிக் கொள்வோம். பின் சாரை பார்த்துக் கொள்ளலாம்.

இல்லடா, அக்காவுக்கு அவரை பிடிக்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது?

நாம் ஏதும் செய்ய முடியாது. எல்லாம் கடவுளின் சித்தம். அவர் தான் அனைத்தையும் நடத்துக்கிறார். அக்கா பாதுகாப்பு அதிரதன் சார் தான் என்றால் அதிலும் காரணம் இருக்கும். விதியை யாராலும் மாற்ற முடியாதுடா. நீ ஓய்வெடு. நான் வெளியே இருக்கிறேன் என்று காவியன் வெளியேறினான்.

மாலையில் வெளியே வந்த எழிலன் பார்த்தது பசங்களுடன் பசங்களாக விளையாண்டு கொண்டிருந்த அதிரதன், நிதினை தான். கண்ணிமைக்காது அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் எழிலன்.

இப்ப ஓ.கே வா எழிலா? சுஜி கேட்க, இவர் எப்படி இப்படி மாறினார்? என்னால நம்பவே முடியல எழிலன் சொல்ல, நேத்ரா மீது அவனுக்கு வந்த காதல் தான் என்றாள் சுஜி.

என்ன காதலோ? என்று அலுத்துக் கொண்டு அமர்ந்தான்.

மாயாவுடன் அமர்ந்து தேனீர் அருந்தும் வெண்பாவை பார்த்தான்.

அக்கா, வெண்பாவை ஏத்துப்பாங்கல்ல அக்கா?

சுஜி புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டு, வெண்பாவை பிடிக்காமல் போகுமா? என்றாள். அவன் புன்னகைத்தான். அவர்களை பார்த்து அதிரதன் எழிலனிடம் வர, எழிலன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

எப்ப பாரு என்னை திட்டிக்கிட்டே இருக்கான் சுஜி? என்னன்னு இவனிடம் கேளு? என்று அதிரதன் எழிலனை பார்த்தான்.

அக்கா, நான் சொல்லும் படி நடந்து கொண்டால் வினு அங்கேயே இருக்கட்டும் என்றான் எழிலன். சொல்லு என்றான் அதிரதன்.

அக்காவிடம் காதலிக்கிறேன்னு தொந்தரவு செய்யக் கூடாது. மிஸ் பிகேவ் பண்ணக்கூடாது. அவ அறைக்கு போகக் கூடாது. வேலை அதிகமா வாங்கக் கூடாது என அவன் அடுக்கினான்.

சரி..ஆனால் அவள் அறைக்கு நான் ஏற்கனவே சென்றிருக்கேன். இனி போகாமல் இருக்க முயற்சிக்கிறேன் என்று அவனிடம் சொன்ன அதிரதன் மனதினுள். சாரிடா என்னால உன் விதிமுறைகளை ஏத்துக்க முடியாது. இங்கே வந்ததிலிருந்து தூங்கவே முடியலை. வினுவை பார்த்தால் தான் நிம்மதியாக இருக்கும் என நினைத்தான்.

என்ன அதிரதா? பேசிக்கிட்டு இருக்கிறாயா? விக்ரம் அவர்களிடம் வந்தவுடன், ரதா, இடது பக்கம் கொஞ்சம் தூரமாக பாரேன். உன்னோட அம்மா, அப்பா, தம்பி என்றான் விக்ரம்.

எழிலன் திரும்ப, திரும்பாதடா..கேசுவலா பாரு என்றான் விக்ரம்.

எதை கண்டுபிடிக்க சொன்னா? சார் எதை கண்டுபிடிக்கிறாரு? என கேலியாக உரைத்த சுஜி எழுந்து சென்றாள். தன் மகன் சிரிப்பு இத்தனை நாட்கள் தொலைந்து மீண்டு வந்ததை அதிரதன் பெற்றோர்கள் ரசித்து பார்த்தனர். அருகே நின்ற அதீபனும் புதியதாக பார்ப்பதை போல் அதிரதனை பார்த்தான்.

இரவு உணவை நேத்ரா தயார் செய்து கொண்டிருந்தாள். நிதினுடன் காரிலிருந்து இறங்கிய அதிரதன், மிதுனுக்கு அழைப்பு விடுத்து கிளம்ப சொன்னான்.

ஓ.கே சார் வந்திடுறோம் என்று மிதுன், அருள், கிருஷ்ணன் வெளியே வந்தனர்.

அதிரதன் வீட்டிலிருந்து பாதி தொலைவு வந்தவுடனே மிதுனிற்கு கால் செய்து, அவர்களை கிளம்ப சொன்னான்.

எங்க சார்? மிதுன் கேட்க, நீங்க நிதுவோட நிலையத்துக்கு போங்க. நான் இங்க வந்துருவேன். எல்லாரிடமும் சொல்லீட்டு தயாராக இருங்க என்று அவன் சொல்ல, சரி என்று நேத்ராவிடமும் மற்றவர்களிடமும் சொன்னார்கள்.

அப்பொழுது தான் சமைக்கவே ஆரம்பித்து இருப்பாள். சமைத்துக் கொண்டிருக்கும் போதே அதிரதன் அழைக்க, சாரு..பசங்க இன்னும் சாப்பிடலை. சாப்பிட்டு வருவாங்கன்னு சாரிடம் சொல்லு நேத்ரா சொல்ல, அக்கா, வேண்டாம். நாங்க அங்க போய் சாப்பிட்டுக்கிறோம்.

சார் இல்லாமல் நீங்க வெளிய போகவே கூடாது என்ற மிதுன், யுவி அக்காவை பார்த்துக்கோ என்று சொல்ல, அவனும் சீக்கிரம் உங்களிடம் வந்துருவான். உங்க சார்கிட்ட தான் இவளை பார்த்துக்க சொல்லணும். நானும் நாளை கிளம்பிடுவேன் என்றாள் சாரு.

நாளைக்கா? ஜீவா கேட்க, ஆமா நான் என் அம்மாவை பார்த்துக்கணும். வினு நீ இங்க மேனேஜ் பண்ணிப்பேல்ல? சாரு கேட்க, ம்ம்..என்றாள் நேத்ரா.

அதிரதன் உள்ளே வந்து, இன்னுமாடா கிளம்பலை? என்று கேட்க, நிதினும் அவன் பின் வந்தான். இடுப்பில் சொருகிய புடவையுடன் நேத்ரா முன் நின்றாள்.

அதிரதனும் நிதினும் அவளை பார்க்க, நிதின் கோபமாக நேத்ராவிடம் சென்று, இனி நீ வீட்டிலிருந்து வெளிய வரவேக் கூடாது என்றான்.

நிது, நான்..சில பொருட்கள் வாங்கணுமே? நேத்ரா சொல்ல, அதை நான் வாங்கிட்டு வாரேன். நீ உன்னோட வேலைய பார்த்துட்டு உள்ளவே இரு என்றான் அதிரதன். அவள் ஏதும் பேசவில்லை.

சார், அக்காவை பார்த்துக்கோங்க கிருஷ்ணன் சோகமாக சொல்ல, சார் பசங்க சாப்பிட்டு போகட்டுமா? அவள் கேட்க, அதிரதன் பார்வை அவள் சொருகிய புடவையில் இருந்தது. அவள் வேகமாக இறக்கி விட்டு அவனை பார்த்தாள்.

நிதின் அதிரதனை தனியே அழைத்து, டேய் வினு பக்கத்துல கூட போகக்கூடாது என்றான்.

ஏன்டா, உனக்கு பொறாமையா இருக்கா?

எனக்கு என்ன பொறாமை? எனக்கு தான் ஆத்வி இருக்காலே? நாங்க சரின்னு சொன்னா உடனே திருமணம் செய்திடுவாங்க. ஆனால் உன் நிலைமை அப்படியல்ல. அப்பா ஒத்துக்கிறதே கஷ்டம் தான். கவனமா இரு. அவளை கண்காணித்துக் கொண்டே இரு. அவளால் தான் நம்முடன் படிச்சவங்க இறந்துட்டாங்கன்னு கண்டிப்பா கஷ்டப்படுவா. வெளிய காட்டிக்க மாட்டேங்கிறா. அவள் தவறான முடிவு எடுத்துடாம நீ தான் பார்த்துக்கணும் என்று அவர்களிடம் அதிரதனை நிதின் அழைத்து வந்து “வாங்க..போகலாம். நேரமாகுது” என்று பசங்களை அழைத்து சென்றான்.

நேத்ரா சமையலறைக்கு செல்ல, அக்கா பசிக்குது என்று யுவனும் அவள் பின்னே சென்றான். இருவரையும் பார்த்துக் கொண்டே, சாரு நேத்ராவிடம் வந்து, நான் பார்த்துக்கிறேன். நீ ஓய்வெடு என்றாள்.

இல்ல சாரு, நீ போ. காலையிலிருந்து நீ தான எல்லாரையும் பார்த்துக்கிட்ட. நீ இரு. நான் பார்த்துக்கிறேன் என்று யுவியை பார்த்து, யுவி கண்ணா, நான் சீக்கிரமே தயார் செய்திடுவேன். நீ விளையாண்டுகிட்டு இரு என்று சொல்ல,

வா யுவி, நாம விளையாடலாம் என்று சாரு அவனை அழைத்துக் கொண்டு செல்ல, ஜீவா அதிரதன் அருகே வந்து அமர்ந்தான்.

அதிரதன் கண்கள் அவ்வப்போது சமையலறை பக்கமே சென்று கொண்டிருந்தது. அதை கவனித்த ஜீவா, சார் நான் வெளிய இருக்கேன் என்று வெளியே வந்தான். வெளியே தான் சாருவும் யுவியும் விளையாண்டு கொண்டிருந்தனர்.

அவன் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே அமர்ந்தான். யுவி அவனையும் அழைக்க, அவனும் அவர்களுடன் ஓடி பிடித்து விளையாண்டு கொண்டிருந்தான்.

அதிரதன் சமையலறைக்கு வர, ஜீவா..கொஞ்ச நேரம் இரு. தயாராகிடும் என்றாள் நேத்ரா.

பதில் வராமலிருக்க, நேத்ரா திரும்பி பார்த்தாள். அதிரதனை பார்த்து, சா..சார்..நீங்க? என்று தயங்கினாள்.

அதிரதன் அவளை அணைக்க, சார் விடுங்களேன் என அவள் அவனை நகர்த்த, அவன் நகரவேயில்லை. ப்ளீஸ் வினு. மீண்டும் இது போல் வெளிய போகாத.

சரிங்க சார், கொஞ்சம் விட்டீங்கன்னா. நான் மூச்சு விட்டுப்பேன் என்று பயத்துடன் அவனிடம் கேட்டாள்.

அவன் விலகி, நேற்று உன்னை ஹக் பண்ணவேயில்லை. அதாக வச்சுக்கோ என்று அவன் அணைக்க, “ரொம்ப இறுக்காதீங்க சார். உங்களுக்கும் சரியாகலை. ரொம்ப பெயினா ஆகப் போகுது” என்றாள்

“ரொம்ப டென்சன் ஆக்கிட்ட வினு. எனக்கு உயிரே போனது போல் ஆயிற்று” என்றான் அதிரதன். அவள் கண்ணீருடன் அவனை விலக்கி, சார் புரிஞ்சுக்கோங்க. நான் உங்களுக்கு செட் ஆக மாட்டேன்.

ஏன் வினு, உனக்கு என்னை பிடிக்கலையா? என் மீது நம்பிக்கை இல்லையா? கேட்டான்.

உங்களை மட்டுமல்ல யாரையும் என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது. என்னால கல்யாணம் என்ற பந்தத்துக்குள் செல்ல முடியாது. என் அம்மா, அப்பாவும் இந்த கல்யாணத்தால் தான் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. நானும்..என் வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு கல்யாணம் தான். இனியும் அதே தவறை செய்ய முடியாது என்றாள்.

சரி, கல்யாணம் வேண்டாம். இந்த கான்ட்ராக்ட்டை தாண்டியும் நீ என்னுடன் இதே வீட்டில் இருக்க சம்மதிக்கிறாயா? அவன் கேட்க, அவள் திகைத்து, என்ன பேசுறீங்க சார்? என்று மேலும் விலகினாள்.

ஆமா வினு, இந்த ஒரு நாளே உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை. நீ அருகிலே இருக்கணும் என்றான்.

சார், கொஞ்சமாவது உங்க குடும்பத்தை பத்தி யோசியுங்கள். அவங்ககிட்ட இப்படி பேசுனா அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க. ஏற்கனவே என்னை பற்றி தப்பா நினைச்சுட்டு இருப்பாங்க. இதில் இது வேறயா?

“வினு, அவங்க எல்லாருக்கும் தெரியும்” என்றான் அதிரதன்.

தெரியுமா? என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? நேத்ரா கேட்டாள்.

எனக்கு உன்னை தான் பிடிச்சிருக்கு. உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லீட்டேன். அப்பா, அங்கிள், ஆன்ட்டி தவிர எல்லாருமே ஓ.கே சொல்லீட்டாங்க. அப்பா உன்னுடன் பழகினால் ஏத்துப்பார் என்றான்.

நேத்ரா அழுதாள்.

“வினு” என்று அதிரதன் அவளருகே வந்தான்.

வராதீங்க சார். ப்ளீஸ் என்னை விட்டுருங்க என்றாள்.

அவளை நெருங்கிய அதிரதன் அடுப்பை ஆஃப் செய்து விட்டு, வினு நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்றான் அதிரதன்.

நீங்களும் மத்த பசங்க மாதிரியே பேசுறீங்க?

இல்ல வினு, உன்னை பார்த்தவுடன் காதல் வரல வினு. உன் அழகை விட உன்னை தான் ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னை பார்த்துக் கொண்டாவது இருக்கேனே? ப்ளீஸ் என்றான்.

வேண்டாம் சார். நீங்க போங்க என்றாள்.

நான் மட்டுமல்ல, நீயும் இங்கிருந்து செல்ல முடியாது வினு. நானும் உன்னை விட்டு செல்ல மாட்டேன். உன்னை செல்லவும் விட மாட்டேன்.

உங்கள பத்தி நல்லா தெரியும் சார். உங்களை பிடிவாதத்தில் இருந்து கொண்டு வர்றது கஷ்டம் தான். ஒரு வேலை நான் உயிரோடவே இல்லைன்னா என்ன செய்வீங்க? அவள் கேட்க, அப்படி சொல்லாத வினு. எனக்கு கஷ்டமா இருக்கு.

நான் வாழ்வதே என்னுடைய தம்பிக்காக தான். எனக்காக உங்க வாழ்க்கையை பாழாக்காதீங்க. உங்களால் உங்கள சுத்தி இருக்கும் அனைவரும் பாதிக்கப்படுவாங்க என்றாள்.

அப்படின்னா, என் மேல உனக்கு அக்கறையே இல்லையா? அதிரதன் கேட்டான்.

இல்ல இல்ல இல்ல. நான் பணத்துக்காக தான் உங்களுக்கு தேவையான எல்லாமே செய்து கொடுத்தேன். அவ்வளவு தான். எனக்கு உங்கள பிடிக்காது என்று சத்தமிட்டாள் நேத்ரா.

வினு, நீ தான நம்பின? அதிரதன் பாவமாக கேட்டான்.

நம்பினேன். அதுக்கு உங்கள மாதிரி சிடுமூஞ்சிய கல்யாணம் பண்ணிக்க முடியுமா? எனக்கு உங்கள சுத்தமா பிடிக்கலை என்றாள். அதிரதன் மனம் உடைந்து சினமுடன் அனைத்து பாத்திரங்களையும் தட்டி விட்டான்.

வினு, உனக்கு என்னை பிடிக்காதா? பிடிக்காதா? என கத்தியவன் அவளை நெருங்கி, பிடிக்கலைன்னாலும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும். நமக்கு கல்யாணம் நடக்கும். நடக்க வைப்பேன் என்று அவளது தாடை பிடித்து இழுத்து, இனி அமைதியா பேசெல்லாம் மாட்டேன் என்று அவளது இதழ்களில் வன்மையை தெளித்தான். நேத்ரா அழுது கொண்டே அவனை தடுத்துக் கொண்டிருந்தாள்.

சத்தம் கேட்டு உள்ளே வந்த ஜீவாவும், சாருவும் இவர்களை பார்த்து அதிர்ந்து நின்றனர்.

இங்க பாரு. இனி எதுக்கும் பர்மிசனெல்லாம் கேட்க மாட்டேன். எனக்கு தோன்றியதை செய்வேன் என்று அவளது தாடையை விட்டு அவளை முறைத்து விட்டு சாரு ஜீவாவையும் பார்த்துக் கொண்டே சினமுடன் அறைக்கு சென்றான்.

“வினு” என்று சாரு நேத்ராவிடம் வந்தாள். எழுந்த நேத்ரா அழுது கொண்டே அறைக்கு ஓடினாள்.

வினு..நில்லு, நான் அவனிடம் பேசுகிறேன் என்று அவள் பின் சென்று அவள் கதவை அடைக்கும் முன்னே கதவை பிடித்து தள்ளி உள்ளே சென்றாள்.

வினு, என்னாச்சு? ஏன் இப்படி நடந்துக்கிட்டான்? சாரு கேட்க, நேத்ரா அவளை அணைத்து அழுதாள். பாட்டி சொன்னது போல நான் இங்கே வந்துருக்கவே கூடாது என்று நடந்ததை கூறிக் கொண்டே அழுதாள்.

சாரு..ஜீவா அழைத்தான்.

என்ன?

யுவி பசிக்குதுன்னு சொல்றான்.

இரு வாரேன் என்று வினு, நீ இங்கேயே இரு. தூங்கிறாத. சாப்பிட எடுத்து வாரேன்.

எனக்கு வேண்டாம் என்று அவள் சொல்ல, உனக்கு வேண்டாம்ன்னா இருடி, உன் பிள்ளைக்கு வேணும். ஒழுங்கா சாப்பிடுற என்று அவளுக்கு கொடுத்து விட்டு, யுவிக்கு கொடுத்தாள்.

ஜீவா, நீ யுவிய அறைக்கு தூக்கிட்டு போ என்றாள் சாரு.

நேத்ரா அக்கா கூட தான் தூங்குவேன் என்று அழுதான் யுவி.

இன்று மட்டும் ஜீவாவோட இரு என்று அவனை சமாதானப்படுத்தி ஜீவா பார்த்துக்கோ என்று சாரு நகர, அவள் கையை பிடித்து..பாஸிடம் பார்த்து பேசு என்றான்.

ம்ம்..என்று அதிரதனுக்கு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்றாள். கதவு திறந்திருக்க..அப்பாடா என்று உள்ளே சென்றாள். அவனது ஆக்ரோசமான செயல் அவனையே பாதித்து இருந்தது. நெஞ்சினூடே அமைந்த கையால் பொருட்கள் அனைத்தையும் அவன் தட்டி விட்டதில், கட்டு பிரிந்து லேசாக இரத்தம் கசிந்தது.

வலியுடன் அவன் அறையிலிருந்த பஞ்சை வைத்து துடைத்துக் கொண்டிருந்தான் அதிரதன்.

ஏய், என்னடா செய்ற? அச்சோ..கையை எடு என்று பறிய சாரு, ஜீவா..வினுவ அழைச்சிட்டு வா என்று சத்தமிட்டாள்.

அவள எதுக்கு கூப்பிடுற? அதிரதன் கேட்டான்.

நான் நாளைக்கு கிளம்பணும்ன்னு சொன்னேன்ல. அதுக்கு தான் அவளுக்கு எப்படி சரி செய்யணும்ன்னு சொல்லி கொடுத்துட்டு போயிடுறேன்.

இல்ல வேண்டாம். வேற யாரையாவது உங்க ஹாஸ்பிட்டல்ல அனுப்பு என்றான் அவன்.

இங்க பாரு. உன்னோட கோபம் புரியது. அவளுக்கு நேரம் கொடுடா. இப்ப அவளிருக்கும் நிலை..

நிலையா? அப்படி என்ன நிலை? அவளுக்கு நோய் ஏதும் வந்து விட்டதா? அதிரதன் கேட்க, ஏன்டா அவ நல்லா தான் இருக்கா. நான் அவளோட மனச சொல்றேன் என்றாள் சாரு.

மனசுக்கு என்னவாம்? அதில் சிறிய இடம் கொடுத்தால் தான் என்ன?

ஒரு பொண்ணுக்கிட்ட இப்படியா பேசுவ? கல்யாணம் பத்தி பேசியதை கூட விடு. ஒரே வீட்ல தனியா இருந்தா என்ன பேச்செல்லாம் வாங்கணும் தெரியுமா?

அதுக்கு தான் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கிறேன்.

உன்னிடம் சொல்ல வேண்டியது நிறைய இருக்கு. நான் கிளம்பும் முன் முடிந்த அனைத்தையும் சொல்கிறேன். தயவு செய்து அவளிடம் சாரி கேட்டுரு. இல்லை அவளே கிளம்பி விடுவாள்.

அது எப்படி போவாள்? ஷ் ஆ..மெதுவா மருந்து போடு. வலிக்குது என்றான். அந்நேரம் தயங்கிக் கொண்டு நேத்ரா வெளியே நின்றாள்.

வலிக்குதா? என்று மனதினுள் அவளாக கேட்டுக் கொண்டே கதவை திறந்து, சாரு என்றாள். அதிரதன் அவளை முறைத்து பார்த்தான்.

வா..வினு. நாளைக்கு மட்டும் தான் நான் இவனுக்கு மருந்து போட்டு விடுவேன். நீ தான் பார்த்துக்கணும் என்றாள் சாரு.

நானா? நான் எப்படி இஞ்செக்சனெல்லாம் போடுறது. அவருக்கு சரியாகும் வரை இருக்கலாமே? நேத்ரா பாவமாக கேட்டாள்.

இவனை பார்த்துக் கொண்டிருந்தால், என் அம்மாவை யார் பார்ப்பார்கள்? கோபமாக சாரு வினவ, அப்படின்னா உங்க ஹாஸ்பிட்டல்ல வேற நர்ஸை வர வச்சிருக்கலாமே? நேத்ரா கேட்க,

இங்க எதுக்கு வந்துருக்கன்னு மறந்து போச்சா? நீ பாதுகாப்பா இருக்கணும். அதனால் நம்மை தவிர யாரும் உள்ளே வராமல் இருப்பது தான் நல்லது. ஒழுங்கா கத்துக்கோ. நாளைக்கு இவனுக்கு இன்ஜெக்சன் நீ தான் போடணும்.

எனக்கு தெரியாது சாரு.

கத்துக்கோ. நீங்களும் ஜீவாவும் தான் இருக்கணும்.

யுவி இருப்பான்ல? நேத்ரா கேட்க, அவனும் நாளைக்கு நிலையத்துக்கு போயிருவான் என்ற அதிரதன் அவளை பார்த்தான். இப்பொழுது கோபப்பட அவனால் முடியவில்லை.

சரி நீ சாப்பிடு. நான் வாரேன் என்று சாரு நேத்ராவிடம், மருந்தெல்லாம் போட்டாச்சு. நீ கட்டு போட்டிரு. எனக்கு ரொம்ப பசிக்குது. ஹா வினு, அதிரதனால எடுத்து சாப்பிட முடியாது. அவனுக்கு கொடுத்துரு என்று அவள் சென்றாள்.

சாரு நில்லு, நேத்ரா வேகமாக எழுந்தாள். அவள் கையை பிடித்து நிறுத்தி அவளை பார்த்தான். அவளும் கட்டுப் போட்டு விட்டு அவனை பார்த்தாள்.

நான் கிளம்புறேன் என்றவளிடம், எனக்கு பசிக்குது என்றான்.

வேறு வழியில்லாமல் சாப்பாட்டை அவனுக்கு நேத்ரா ஊட்டி விட்டாள். அவனும் சேட்டை செய்யாது சாப்பிட்டான். பின் அவள் அறைக்கு சென்று கண்ணீருடன் படுத்தாள்.