அத்தியாயம் 31
அலைபேசியை எடுத்து அதீபனுக்கு அழைப்பு விடுத்தான் அதிரதன். அவன் எடுத்தவுடன், வினுவிடம் என்ன சொன்ன? என்று அதிரதன் கேட்டான்.
அண்ணா, உனக்கு ஒன்றுமில்லையே? நல்லா தான இருக்க? கையில் கத்தியால் குத்தியதை கேள்விபட்டேன். பெயின் அதிகமா இருக்கா? அவன் குரலும் தாழ்ந்து இருந்தது.
ஆனால் அதிரதன் அதனை கவனிக்காமல், நான் என்ன கேட்டால் நீ என்ன சொல்ற? என கத்தினான். யுவன் பயந்து வெளியே ஓடினான். வெளியே சாருவும், ஜீவாவும் நின்று கொண்டிருந்தனர். சாரு அவனை துக்கினாள்.
அண்ணா, நான் சாதாரணமாக தான் பேசினேன். ஆனால் அவங்க தப்பா எடுத்துக்கிட்டாங்க என்று அவன் சொன்னதை சொல்ல,
ஏன்டா, உனக்கு என்ன பிரச்சனை? அவகிட்ட எதுக்கு இப்படி பேசுன? கத்தினான். சும்மாவே பக்கத்துல வர மாட்டா. நீ வேற.
அண்ணா, நீ அவங்கள காதலிக்கிறது எனக்கும் தெரியும். ஆனால் செழியன் அப்பா ஒத்துக்க மாட்டார். உன்னை தாட்சாயிணிக்கு திருமணம் செய்து வைப்பது போல் பேச்சு அடிபடுது. அதுவும் அப்பாவுக்கு அவளை ரொம்ப பிடிச்சு போச்சு. அப்பாவே பாட்டியிடம் பேசியதை கேட்டேன்.
திருமணம் வரை போயிட்டாங்களா? நீ வீட்ல தான இருக்க? அவளிடம் அலைபேசியை கொடு. நான் பேசுறேன். அவளை திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை என்றான். சாருவும் ஜீவாவும் பார்த்துக் கொண்டனர்.
நான் உன்னோட கம்பெனியில தான் இருக்கேன். நீ வரும் வரை உன் பொறுப்பை எனக்கு கொடுத்தாங்க அப்பா. நீயும் தான பார்த்துக்க சொன்ன? அப்புறம் உன்னோட காதல் தாட்சுவுக்கும் தெரியும்.
தெரியுமா? தெரிந்துமா என்னை கல்யாணம் பண்ணனும்ன்னு சொல்றா? நான் அவளை நல்ல பொண்ணுன்னு நினைச்சேன். ஆனால் அவளும் தீக்சி மாதிரி தானா? அதிரதன் சொல்ல,
அண்ணா, நிறுத்து. வாய்க்கு வந்தபடி பேசாத. அந்த தீக்சியோட தாட்சுவை ஒப்பிட்டு பேசாத என்று அதீபன் சத்தம் போட்டான்.
தாட்சாயிணிய பத்தி பேசுனா உனக்கு என்ன இவ்வளவு கோபம் வருது? என்னிடமே சத்தம் போடுற? அதிரதன் சத்தமிட,
அண்ணா புரிஞ்சுக்கோ. உன்னோட ப்ரெண்டு நிதினோட தங்கச்சில்ல நீயே இப்படி பேசலாமா? அவளோட பெற்றோர் அன்று பேச்செடுத்ததுக்கு உனக்கு விருப்பமிருந்தால் ஓ.கேன்னு தான் சொன்னா. அப்பாவும் பாட்டியும் நான் கம்பெனி வரும் முன் தான் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவளுக்கும் தெரியாது. அவள் குடும்பம், நம்ம குடும்பத்துக்கும் தெரியாது. அவள பத்தி தப்பா பேசாத என்றான்.
நானும் அவளோட அப்பாவிடம், “என்னால அவளை திருமணம் செய்ய முடியாதுன்னு சொல்லீட்டேன்”.
வேரேதும் நம்ம வீட்ல பிரச்சனையே உன் பேச்சும் சரியில்லை. நிதினும் சரியில்லை என்று அதிரதன் கேட்க, ஒன்றுமில்லை. எனக்கு வேலை இருக்கு என்று அவன் வைத்து விட்டான்.
நான் பேசிட்டு இருக்கேன். இவன் இப்படி வைத்து விட்டானே? இல்லை. வீட்ல ஏதோ சரியில்லை என்று சொல்லிக் கொண்டே அவன் அப்பாவை அழைத்தான். அவரும் சோர்வாகவே பேசினார்.
அப்பா, என்னால தாட்சாயிணியை கல்யாணம் பண்ணிக்க முடியாது என்றான் நேரடியாக.
என்னப்பா, இப்படி சொல்ற? நல்ல பொண்ணுப்பா என்றார்.
இல்லப்பா, “எனக்கு வேற பொண்ணை பிடிச்சிருக்கு” என்று பட்டென சொல்லி விட்டான். சாரு அதிர்ந்து நின்றாள்.
யாருப்பா? உண்மையிலே உனக்கு பிடிச்சிருக்கா? பொண்ணா? யாரு? என்ன பண்றா? என அவர் ஆர்வமுடன் கேள்விகளை அடுக்கினார்.
இப்ப என்னால ஏதும் சொல்ல முடியாது. நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்க. வீட்ல என்ன நடக்குது? அவன் கேட்க, அவருக்கு திக்கென்று இருந்தது.
சொல்லுங்கப்பா?
ஒன்றுமில்லையே? ரவிக்குமார் கம்பெனி தான்.
அது தெரியும்ப்பா. அவங்க நம்ம வீட்ல தான் இருக்காங்கன்னு தெரியும். பிரச்சனை முடியும் வரை அங்கேயே அவங்க இருக்கட்டும். நான் கேட்பது நம்ம வீட்டில்? என்று அதிரதன் கேட்க, ஒன்றுமில்லைப்பா. நான் அப்புறம் கால் பண்றேன் என்று அவரும் அலைபேசியை வைத்து விட்டார்.
கண்டிப்பா ஏதோ பிரச்சனை இருக்கு? யாரிடம் கேட்கலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தான் அதிரதன்.
சாரு வேகமாக உள்ளே நுழைந்து, ரதா நான் வினுவை என்னோட வீட்டிற்கு அழைத்து போகப் போகிறேன் என்றாள்.
என்ன? சீறலுடன் அவளை அதிரதன் பார்த்தான்.
உன் முறைப்புக்கு நான் பயப்பட மாட்டேன். நீ ரொம்ப அவளை தொந்தரவு பண்ற? அவளை விட்ரு. உனக்கு கிடைக்காத பொண்ணுங்களா? அவள் கேட்க, அதிரதன் கோபம் மேலும் ஏறியது.
என்ன சொன்ன? என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது? நான் அவளை காதலிக்கிறேன். அதனால் அவள் என்னுடன் தான் இருப்பாள்.
காதலா? உனக்கா? அது எப்ப வந்தது? எப்படி வந்தது? சாருவும் கோபமாக கேட்டாள்.
ஏன் எனக்கு காதல் வரக்கூடாதா? எல்லாரும் இதையே கேட்குறீங்க? எனக்கு வினு தான் வேணும்.
முடியாது. அவளை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.
ஏன் முடியாது? நான் மனிதன் தான். கல்யாணம் பண்ணிக்கலாம்.
அவள் ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுருக்கா. காதல்ன்னு மேலும் அவளை காயப்படுத்தாத.
காயப்படுத்தினேனா? நான் என்ன செய்தேன்? ஜஸ்ட் ஹக் தான பண்ணேன். இதுல என்ன இருக்கு? தேவையில்லாம அவள் அருகே வராதே? அவளுக்கும்..என நிறுத்திய சாரு.
ப்ளீஸ் அவளை விட்டுரு. இந்த நிலையம் உங்களுடையது தானே? யுவனுக்கு நீங்க சிகிச்சை செய்வது உங்க கடமை தான். அதை தான் செஞ்சிருக்க? அதை வச்சு அவளிடம் கான்ட்ராக்ட் எதுக்கு போட்ட?
எனக்கு அவளை பிடிச்சிருக்கு? அதனால் தான் போட்டேன். இதை வைத்து அவளை பக்கத்தில் இருக்க வைத்து அவள் மனதை மாற்றி என் காதலை புரிய வைக்க போறேன்.
புரிய வைக்க போகிறாயா? உனக்கே புரிய மாட்டேங்குது. அவளால் உன்னை கல்யாணம் பண்ண முடியாது. அவள்..என்று நிறுத்து, ப்ளீஸ் அவளை விட்டுரு.
முடியாது. எனக்கு வினு வேண்டும்.
அவள் என்ன பொருளாடா? ஆளாலுக்கு வைச்சு விளையாட?
மற்றவன் போல் நான் இல்லை. அவளை எந்த நிலையும் விட மாட்டேன் என்றான்.
அவள் ஒருவனுடன் வாழ்ந்தவள். ஒரு வேலை குழந்தை வந்தால் கலைக்க சொல்வாயா? பட்டென அவள் கேட்டு விட, அதிரதன் மனம் அடித்துக் கொண்டது.
குழந்தையா? அவள் கொஞ்ச நாட்கள் தானே அவனுடன் வாழ்ந்தாள்.
பைத்தியமாடா நீ? “ஒன் நைட் ஸ்டாண்டு” கேள்விப்பட்டதில்லையா? அப்படி இருந்த பொண்ணுங்க கூட கருவுற்று இருக்கிறார்கள். இவள் மாதங்களாய் இருந்தவள். ஒரு வேலை கருவுற்றிருந்தால் கண்டிப்பாக வினு அவள் குழந்தையை விட மாட்டாள். நீ என்ன செய்வ? ஏத்துப்பாயா? அது வேறொருவன் குழந்தையாக இருக்கும். உன்னால ஏத்துக்க முடியுமா?
எதுக்கு உனக்கு கற்பனை இப்படி போகுது?
கற்பனையா? நீ அவளை ஏத்துக்க வைக்க ஒரு வருசம் கூட ஆகலாம். அதற்குள் இப்படி நடந்தால் அவளுக்கு ஆசை காட்டி விட்டுட்டு தான உன்னால போக முடியும்?
போக மாட்டேன் என்றான் வெறித்தவாறு.
என்ன சொன்ன?
“குழந்தையோடு அவள் வந்து நின்றாலும் ஏத்துப்பேன்” என்றான்.
அவள் அதிர்ந்து, அதிரதன் நீ தான் பேசுறியா?
நான் தான் பேசுறேன்.
அது வேறொருவன் குழந்தை?
ஆமா, அதை விட வினுவோட இரத்தம் தானே? என்றான்.
அவள் கண்ணீருடன் அவனை பார்க்க, அதிரதன் அதிர்ந்து சாரு எதுக்கு அழுற? கேட்டான்.
கண்ணீரை துடைத்து, உன்னோட குடும்பம், கம்பெனி ஆட்கள் கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க?
ஆமா, ஆனால் அவளுடன் வாழப் போவது நான் தான்.
“எனக்கு பயமா இருக்கு அதிரதன்” என்றாள் சாரு.
உனக்கு எதுக்கு பயம்? புன்னகைத்தான்.
பரவாயில்லை. பாசமான இத்தனை பேரை சம்பாதித்து வச்சிருக்கா என்றான்.
ம்ம், வினுவுடன் சிறிது நேரம் பழகினாலும் எல்லாருக்கும் பிடித்து விடும் என்றாள்.
சரி, அவளுக்கு என்ன? காய்ச்சலா? என்று அவளை உற்று நோக்கினான்.
ஆமா, சோர்வா இருக்கா. திடீர்ன்னு பிரஸ்ஸர் அதிகமா இருக்கு. அவள் ஓய்வெடுத்தால் சரியாகிடும் என்று எழுந்து சாப்பிட செய்து எடுத்து வாரேன் என்று வெளியே சென்றாள்.
இவள் எதுக்கு இப்பொழுது குழந்தை பற்றி கேட்டாள்? என மனதில் நினைத்து விட்டு, ம்ம்..அவள் நினைத்தது போல் நடக்க வாய்ப்பும் உள்ளது தானே? வினுவை மட்டும் விட்டு விடக் கூடாது என அவனுக்கு அவனாகவே பேசிக் கொண்டான் அதிரதன். வினு நம் அதிரடியான அதிரதனை எப்படி மாற்றி விட்டாள்?
அதீபன் மனம் கேட்காமல் மீண்டும் அதிரதனிடம் பேசினான்.
அண்ணா, அவங்ககிட்ட நான் பேசலாமா?
எதுக்கு? ஏற்கனவே பேசியது போதும்.
அண்ணா, நான் சும்மா தான் பேசினேன். அவங்ககிட்ட சாரி சொல்லிடுறேன்.
சொல்லு. ஆனால் இப்ப முடியாது.
ஏன்?
அவளுக்கு உடம்பு சரியில்லையாம்.
என்னாச்சு? நான் சொன்னதால்..
டேய், ரொம்ப யோசிக்காத, நேற்றே ஒரு மாதிரி தான் இருந்தாள். காய்ச்சல்ன்னு நர்ஸ் சொன்னாங்க.
ஓ..அப்படியா? சரி குடு. பேசிக்கிறேன்.
டேய், என்னை எழவே கூடாதுன்னு சாரு சொல்லி இருக்கா. வினுவுக்கு தான காய்ச்சல் நானே பார்த்துப்பேன்.
அண்ணா, நான் பேச தான போறேன். அதான் கார்டு யாரோ இருக்கானாமே? அவனிடம் கொடுத்து விடு.
டேய், அவ ஓய்வெடுத்துகிட்டு இருக்கா.
சரி, அவங்க நம்பர் கொடு.
அதெதுக்கு உனக்கு? தர முடியாது போடா. ஒழுங்கா வேலைய பாரு. எங்கள தொந்தரவு பண்ணாத.
என்னது எங்களையா? அண்ணா, எல்லாரிடமும் கடுமையாக நடந்து கொள்ளும் அதிரதனை காணோமே? சூப்பர் அண்ணா. நல்ல முன்னேற்றம். என் சார்பில் நீயே என் மன்னிப்பை அண்ணியிடம் சொல்லி விடு என்று வைத்து விட்டான் அதீபன்.
என்ன சொன்னான்? அண்ணியா? ம்ம்..நல்லா இருக்கே. வினு உன்னை சீக்கிரம் ஒத்துக் கொள்ள வைத்தே ஆகணும் எண்ணிக் கொண்டான் அதிரதன் .
காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் சாரு கொடுக்கும் உணவை சாப்பிட்டு ஓய்வெடுத்தாள் நேத்ரா.
மதிய உணவின் பின் நிதினால் முடியாமல் எழிலனிடம் அதிரதனுக்கு நடந்ததை சொல்ல, அவன் பதட்டமுடன் பேசிக் கொண்டிருந்தான். சுஜி, பாட்டி, வெண்பா, மாயா, காவியன், மிதுன் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நான் வாரேன்” என்று இவன் சொல்ல, நோ..எழிலா, உனக்கு வினுவை பற்றி தெரிந்து விட்டது என வினுவுக்கு தெரிந்தால் எல்லார் மீதும் கோபப்படுவாள்.
காவியன், என்ன செய்றான்? அவனுக்கு கை வலி எப்படி இருக்கு? நிதின் கேட்க, அவனிடமே கேட்டுக்கோ என்று எழிலன் அலைபேசியை காவியனிடம் கொடுத்தான்.
நிதினின் கம்மிய குரலை கண்டு கொண்ட காவியன், நேரடியாகவே “என்ன பிரச்சனை?” எனக் கேட்டான். பிரணா நல்லா தான இருக்கா?
எல்லாரும் அவனை பார்த்தனர்.
அவளுக்கு மட்டும் தான் பிரச்சனை வருமா? நீ அவளை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறாயோ? நிதின் கேட்க, நீங்க தான சார் அவள் மேல் கொலைகாரன் கண் வைத்திருப்பதாக கூறியதாக சொன்னீங்க? அதான் வீட்டிலிருந்து வெளியே ஓடிட்டாளான்னு கேட்டேன்.
அவ வீட்ல தான் இருக்கான்னு உனக்கு எப்படி தெரியும்?
சங்கீதனை வீடியோ காலில் பார்த்தேன். அவன் சொன்னான்.
அவனே காலேஜ் போகல?
ஆமா சார், அதனால தான வீடியோ கால் பண்ணேன்.
சார், திசை திருப்பாம விசயத்தை சொல்லுங்க என்றான் காவியன். அவனிடமும் அதிரதனுக்கு நடந்ததை சொல்ல, கெல்ப்புக்கு ஆள் இருந்தும் எப்படி சார்? இப்ப எப்படி இருக்கார்?
ம்ம், என்னால அவனிடம் சரியா பேச முடியல. நீ பேசணும்ன்னா பேசு என்று நிதின் தயங்கினான்.
என்னாச்சு சார்? வேறெதுவுமா?
ஆமா, நான் கேட்பதற்கு என்ன செய்யலாம்? என்று சொல்லு. ரதன் உன்னை பற்றி சொல்லி இருக்கான். நீ எடுக்கும் முடிவு சரியா இருக்கும்ன்னு சொன்னான்.
என்ன? அவன் சிரிக்க, விளையாடாத காவியா, என்னால நிம்மதியா வேலைய பார்க்கவே முடியல.
சரி, ஆனால் அதிரதன் சார் சொன்ன மாதிரி இல்லை. என்னால் முடிந்த அளவு சொல்கிறேன் என்றான்.
ரதனிடம் இதை பற்றி சொல்ல முடியாது. அதான்..
சொல்லுங்க சார்.
ரொம்ப நெருக்கமான உறவுள்ள ஒரு ஆண் உன் அம்மாவை தொந்தரவு செய்தால் என்ன செய்வ? அம்மா இல்ல தெரியாதுன்னு சொல்லிறாம யோசித்து சொல்லு?
என்ன சொல்றீங்க? காவியன் எழுந்தான்.
திகைப்பை நிறுத்தி என்ன செய்யலாம்ன்னு சொல்லு?
அவன் அவ்வளவு நெருக்கமான உறவுள்ளவனா?
ஆமா.
அம்மாவுக்காக அவன் எவனா இருந்தாலும் அவன் உறவை முறிக்க வேண்டியது தான்.
ஆனால் பாட்டி வருத்தப்படுவாங்களே? பட்டென நிதின் சொல்லி விட்டு, கண்டுபிடிச்சிருவான்னே? என்று நிதின் அமைதியானான்.
சார், என்ன சொன்னீங்க பாட்டியா? அப்படின்னா சாரோட அம்மாவா?
நிதின் அமைதியானான்.
சார், முதல்ல அவர்கிட்ட சொல்லுங்க.
இல்ல காவியா, அவனுக்கு தெரிந்தால் ரொம்ப கோபப்படுவான். பிரச்சனை பெரியதாகிடும். பாட்டிக்கு ஏதாவது ஆகிடும்மோன்னு எல்லாரும் பயப்படுறாங்க
எல்லாருமா? யார் யாருக்கெல்லாம் இது தெரியும்?
அப்பா, அதிரதன், தம்பி, தங்கைகள், என்னோட தங்கைக்கு தெரியும்.
சேர்மன் சாருக்கும் தெரியுமா? அவர் நடவடிக்கை எடுக்கலாமே?
அவன் அவர் எதிர்பார்ப்பை சொல்லி, ரணா, தாட்சாயிணி பேசியதை சொல்ல, அவங்க சொன்னது சரி. ஆனால் அவங்க திட்டம் கண்டிப்பாக ஜெயிக்காது. அவங்க அவங்கள வச்சி தான் திட்டம் போடுவாங்க. அதிலும் ரணா இருக்காலே ஆர்வக்கோளாறு. அவள் ஏதும் செய்யும் முன் நான் சொல்றத செய்யுங்க என்று அவன் திட்டத்தை காவியன் சொன்னான்.
ஓ.கே செய்யலாம் என்று நிதின் சொல்லி விட்டு, எல்லாம் முடிந்து சரியான பின் கால் பண்றேன் என்றான்.
காவியனுக்கு நன்றாக தெரிந்தது. செழியனின் தம்பி தான் தவறாக நடந்து கொள்ள பார்ப்பவர் என்று. ஆனால் அவன் நிதினிடம் காட்டிக் கொள்ளவில்லை.
எழிலன் காவியனையே பார்த்துக் கொண்டிருக்க, எழிலா அண்ணாவை சைட் அடிக்கிறியா? கேட்டுக் கொண்டு அவனருகே வந்து அமர்ந்தாள் வெண்பா.
அவளை பார்த்து பதில் கூறாமல் அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். மிதுன் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு, வெண்பா இங்க வா? அழைத்தான்.
அண்ணா என்று வெண்பா இறங்க, அவள் கையை பிடித்து அமரு என்று வெண்பாவை பார்த்தான் எழிலன். வெண்பா இருவரையும் பார்த்து விட்டு, வேகமாக இறங்கி மாயா அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
எழிலனும், மிதுனும் ஒருவாறு வெண்பாவை அழைத்தனர். அனைவரும் அவர்களையும் வெண்பாவையும் பார்த்தனர். அவள் எழாமல் விழித்துக் கொண்டிருக்க எழிலன் அவளருகே வந்து அமர்ந்தான். மிதுன் காவியனை பார்த்துக் கொண்டே வெண்பா அருகே சென்று அமர்ந்தான்.
சீனியர், கொஞ்ச நாள் அவள் படிக்க ஆரம்பிச்சிருக்கா? மிதுன் சொல்ல, எனக்கும் தெரியுமே? படிக்க தான போறா? நாங்க ஒன்றும் செய்யலை. பேச தானே செய்கிறோம் என்று இருவரும் வாக்குவாதம் செய்ய, மிதுன் மனதினுள் சிரித்துக் கொண்டு எழிலனிடம் இவ்வாறு பேசினான்.
அண்ணா, நான் இருவரிடமும் பேசணும். அதற்கு முன் அங்கே பாருங்க என்று காவியனை காட்டினாள். அவன் யோசனையுடன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். நிதினிடம் திட்டத்தை சொல்ல அந்நேரம் தான் காவியன் நகர்ந்து சென்று இப்பொழுது அவர்களிடம் வந்து எழிலனிடம் அலைபேசியை கொடுத்தான்.
சுஜி காவியனிடம் கேட்க, அவன் அவளிடம் அதிரதனுக்கு நெஞ்சில் கத்தி பட்டது மட்டும் சொன்னான். அவள் அதிரதனுக்கு அழைக்கும் முன் காவியன் அவனை அழைத்தான். எழிலனும் அதிரதனிடம் பேச நினைத்தான்.
அழைப்பை ஏற்ற அதிரதனிடம், சார், எப்படி இருக்கீங்க? முதல்ல உங்க பாடி கார்ட்ஸை ஃபையர் பண்ணுங்க என்றான் காவியன்.
எதுக்குடா?
சார், எங்களுக்கு தெரிஞ்சு போச்சு. சும்மா நடிக்காதீங்க.
என்ன சொல்ற?
சார், போதும் என்றான் கோபமாக காவியன்.
சரி, சரி, இப்ப பரவாயில்லை. ரொம்ப பலமாக இல்லை.
கத்தியால நெஞ்சுல குத்தி இருக்கானுக. பலமா இல்லன்னு சொல்றீங்க? அக்கா என்ன செய்றாங்க? அவன் கேட்க, அவன் கையிலிருந்து எழிலன் அலைபேசியை பிடுங்கி, ஏதோ பெருசா அக்காவை பார்த்துப்பேன்னு சொன்னீங்க? உங்களையே நீங்க பார்த்துக்காம என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? அதற்கு மேல் கோபமாக எழிலன் கத்தினான்.
டேய், எதுக்குடா கத்துறீங்க? வினுவுக்கும் உடம்பு சரியில்லை என்று அதிரதன் சொல்ல, எழிலனிடமிருந்து அலைபேசியை பிடுங்கிய காவியன், அக்காவை பார்த்துக்க சொன்னேன்னா? இல்லையா? என்ன செய்யுது?
காய்ச்சல் என்றான் அதிரதன்.
காய்ச்சலா? என்று சுஜி அலைபேசியை பிடுங்க, டேய் ரதா, அவளுக்கு வேற ஒன்றுமில்லையே? அவள் கேட்க, சுஜி ஸ்பீக்கரில் போடு என்றான் அதிரதன். அவள் போட..
எனக்கு ஒரு சந்தேகம்? என் மீதுள்ள அக்கறையில் உங்களுக்கு கோபம் வருதா? இல்லை வினு மேல உள்ள அக்கறையில் என்னிடம் கோபத்தை காட்டுறீங்களா? அதிரதன் கேட்டான்.
“இருவர் மீதுள்ள அக்கறையும் தான்” என்று காவியனும் எழிலனும் சொல்ல, உன்னோட சந்தேகத்தை அப்புறம் தீர்த்துக் கொள். முதல்ல நான் வினுவிடம் பேசணும் என்றாள் சுஜி.
சுஜி அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாளாம். நானே அருகிலிருந்து அவளை பார்க்க முடியவில்லை என்றான் அதிரதன்.
பாருடா சாருக்கு சோகத்தை தேவா நண்பன் கிண்டலாக சொல்ல, சுஜி நம்ம பக்கத்துல வகுப்பு பொண்ணு தான் இங்க செவிலியரா வந்துருக்கா என்றான் அதிரதன்.
பக்கத்து வகுப்பா? யாரு?
சாரு என்ற அதிரதன் அவள் தான் வினுவையும் யுவனையும் பார்த்துக்கிறா. அதனால அவளிடம் பேசு என்று சாரு என்று அழைத்து அவளிடம் அலைபேசியை நீட்டினான்.
என்ன? அவள் கேட்க, சுஜி பேசுறா என்றான்.
சுஜியா என்று அலைபேசியை காதில் வைத்தாள். வினு என்ன செய்றா? பிரச்சனை ஏதும் இல்லையே? சுஜி கேட்க,
ஏய்..நீயா? சுஜித்ரா நீ தானா? என்று சாரு முகம் மாறியது. இருவருக்கும் சுத்தமாக ஆகாது போல.
இந்தாங்க சார், நான் யாரிடமும் பேசலை என்று சாரு அதிரதனிடம் கொடுத்தாள்.
ஏய், அவள் தான் பேசுறால பேசு என்றான் அவன்.
என்ன வேணும்? வேண்டா வெறுப்பாக சாரு கேட்க, நான் வினுவிற்காக தான் கேட்கிறேன். முதல்ல அதிரதனை விட்டு தள்ளி வா என்றாள் சுஜி.
என்ன ரகசியம் பேசப் போற சுஜி? அவன் கேட்க, நாங்க என்ன பேசினால் உனக்கென்ன? அவளுக்கு காய்ச்சல் வர்ற அளவுக்கு விட்டுருக்க சுஜி அதிரதனை திட்டினாள்.
அங்கே வந்த ஜீவா, மேம் தெரியாம பேசாதீங்க. உங்க வினுக்காகவும் மத்தவங்களுக்காகவும் தான் சார் துணிந்து தனியா அவங்களிடம் சென்றார். அதனால தான் இப்ப எழ கூட முடியாமல் படுத்திருக்காரு கோபமாக அவன் சொல்ல, ஜீவா என்ன பண்ற? நீ போ என்றான்.
அவன் என்ன தவறாக சொல்லீட்டான். அவனை போக சொல்ற? அதிரதனிடம் சாரு கோபமாக கேட்டாள்.
சாரு, அவனை அப்புறம் திட்டிக்கலாம். நான் உன்னிடம் தனியா பேசணும். ரதா, நீ வாயை மூடிக்கிட்டு படு என்று சுஜி சொல்ல,
என்ன வர வர மரியாத ரொம்ப குறையுது? அதிரதன் கேட்க, ப்ளீஸ் ரதா. நான் அவளிடம் பேசணும் என்று சுஜி சொல்ல, போம்மா..போ..பேசு. இல்லை நேராகவே வந்து கழுத்தை நெறித்தாலும் நெறித்து விடுவாள் என்று அதிரதன் சொன்னான்.
சுஜியும், சாருவும் வினு உடல் நிலையை பற்றி பேசினர். பின் அதிரதனிடம் வந்து அலைபேசியை கொடுத்து விட்டு சாரு வெளியே வந்தாள். யுவன் அவள் மடியில் வந்து அமர்ந்தான். ஜீவாவும் அவளிடம் வந்து அமர்ந்தான்.
காவியன் போனை வாங்கி இருவரும் கவனமாக இருங்க என்று சொல்ல, எழிலனும் அவனிடம் பேசி விட்டு இணைப்பை துண்டித்தனர்.
காவியனுக்கு ஏதோ தவறாக நடக்கப் போவதை போல் அவன் மனம் அடித்துக் கொண்டது. அவன் அமைதியாக அவனறைக்கு செல்ல மிதுனும் அவனுடன் சென்றான்.
நிதின் செழியன் வீட்டிற்குள் வந்தான். சிவநந்தினி, ரேவதி அவர்களது பழைய நினைவுகளை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
நிதின் பதட்டமுடன் ஆத்விகா அறைக்கு சென்றான். அவனை பார்த்து இருவரும் அவன் பின் சென்றனர். அவள் அறையில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. தாட்சாயிணியும் ரணாவும் ஆத்விகாவிடம் நடனம் கற்றுக் கொண்டிருந்தனர்.
அவளை பார்த்து வேகமாக அவளிடம் வந்து, ” உனக்கு ஒன்றுமில்லையே ஆத்வி?” என்று அவளை அணைத்தான். மூவரும் அவனை பார்த்து விழித்துக் கொண்டிருந்தனர்.
என்னாச்சுடா? எதுக்கு இவ்வளவு வேகமா வந்த? ரேவதி கேட்க, அம்மா என்று ஆத்விகாவிடமிருந்து விலகி தயங்கி ஒன்றுமில்லை என்று அவளை பார்த்து விட்டு வெளியே வந்தான். அதீபனும் கோபமாக உள்ளே நுழைந்தான்.
அதீபா? சிவநந்தினி அழைக்க, அவரை பார்த்து விட்டு கோபமாக அவன் மேலேற, அவன் பின் ராமவிஷ்ணு வந்தார். அவர் சிவநந்தினியை பார்த்துக் கொண்டே அவர் மகன் பின் செல்ல, நிதின் சிவநந்தினியை பார்த்தான். அவர் பயத்துடன் இருவரையும் பார்த்தான்.
செழியனும் உள்ளே வந்தார். பாட்டி அவர் அறையிலிருந்து வந்தார். மொத்த குடும்பமும் ஹாலில் இருந்தனர்.
என்ன எல்லாரும் கூடி நிக்குறீங்க? செழியன் ஏதும் தெரியாமல் கேட்க, அப்பா, அண்ணா கோபமாக அறைக்கு போனான். சித்தப்பாவும் பின்னே போனார் என்று ரணா சொல்ல, நான் பார்த்துட்டு வாரேன் என்ற செழியன் கையை பிடித்து தடுத்து, “வேண்டாம்” என்று தலையசைத்தான் நிதின்.
சற்று நேரத்தில் இரு பைகளுடன் அதீபன் வெளியே வர, அவன் பின்னாலேயே நீ போகணும்ன்னா போ. என்னுடைய பொருட்களை கொடுத்துட்டு போ என்று சத்தமிட்டுக் கொண்டே ராமவிஷ்ணு அவன் பின் வந்தார்.
செழியன் அதீபனிடம் வந்து, எதுக்கு பையை எடுத்துட்டு வர்ற அதீபா? பதறினார்.
நானும் என்னோட அப்பாவும் இந்த வீட்டை விட்டு போறோம் என்றான்.
இல்லை. நான் போகலை என்று ராமவிஷ்ணு சொல்ல, வர்றீங்க? உங்களால தான் நான் நந்தும்மா, அப்பா, அக்கா, ஆத்வி என்று ரேவதி, தாட்சாயிணியை பார்த்துக் கொண்டே எல்லாரையும் விட்டு போக போறேன் என்றான் கண்ணீருடன்.
டேய், நீ எதுக்கு போகணும்? சிவநந்தினி முன் வர, ராமவிஷ்ணு பார்வையில் அப்படியே நின்றார். ஆத்வியும் ரணாவும் நீ போகக் கூடாது. சித்தப்பா போகட்டும் என்றனர்.
எதுக்கு என் பிள்ளைய போகணும்ன்னு சொல்றீங்க? அதீபா என்ன இது? பாட்டி கேட்க, அம்மா, நான் போக மாட்டேன். சொல்லு என்று அவர் கலங்கினார். நடந்த விசயம் தெரிந்த அனைவருக்கும் இப்பொழுது தான் புரிந்தது. செழியன் அமைதியாக நின்றார்.
என்னடா? நீ அமைதியா இருக்க? கேளுடா பாட்டி சொல்ல, அப்பொழுதும் அவர் பேசவில்லை. என்னாச்சுடா உனக்கு? அவர் கேட்க, விசயம் வெளியே தெரிந்து விட்டால் என்ன ஆவது? சிவநந்தினி பயந்தவாறு நின்றார்.
அதீபன் வெளியே செல்ல, நீ போ..எங்கேயும் போ. என்னுடையதை கொடுத்திட்டு போ என்று ராமவிஷ்ணு சொல்ல,
என்னடா நடக்குது? புள்ளங்க உன்னை போக சொல்லுதுக? ஆனால் நீ உன் பிள்ளைய வெளிய போக சொல்ற? கத்தினார் பாட்டி.
அதீபன் யார் பேசுவதையும் கண்டு கொள்ளாமல் வெளியே பையை வைத்து விட்டு உள்ளே வந்து, அவன் அப்பா கையை பிடித்து, இப்பவே போகணும். இல்லை அவ்வளவு தான் என்று அவரிடம் கோபமாக கத்தி விட்டு இழுத்தான்.
அதீபா, எங்க போவீங்க? வேண்டாம் என்று சிவநந்தினி அதீபன் கையை பிடித்தார்.
அம்மா, நீங்க போங்க என்று அவன் சொல்ல, ராமவிஷ்ணு சிவநந்தினி கையை பிடித்து, இவளும் என்னுடன் வந்தால் நான் இப்பொழுதே செல்கிறேன் என்றார்.
அதீபன் அவர் கையை விட, அனைவரும் அதிர்ந்து நின்றனர். சிவநந்தினி அழுது கொண்டே அவரிடமிருந்து கையை எடுக்க முயன்றார். ஆனால் ராமவிஷ்ணு இறுக்கமாக கையை பிடித்திருக்க, ப்ளீஸ் கையை விடு விஷ்ணு என்று அழுது கொண்டே செழியனை பார்த்தார். அவர் சிவநந்தினியை முறைத்துக் கொண்டிருந்தார்.
எல்லார் முன்னும் கையை பிடித்தவுடன் சிவநந்தினி அவரை அறைந்திருக்கணும். ஆனால் இவர் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். தன் கணவன் தன்னை முறைக்கிறார்? அவர் தன்னை தவறாக நினைத்து விடுவாரோ என்று பயந்து கொண்டே விடு..விடு..என்று அழுதார்.
என்ன சொன்னடா விச்சு? பாட்டி அவர் இளைய மகனிடம் வந்து கேட்க, எனக்கு சிவநந்தினி வேண்டும். அவளை வரச் சொல்லுங்க. நான் இப்பவே போயிடுறேன் என்று அவர் சொல்ல, பாட்டி அவரை பளாரென அறைந்து விட்டு, சிவநந்தினியை அறைய வந்தார்.
அவர் கையை பிடித்த இளஞ்செழியன், எனக்கு என் பொண்டாட்டி மேல் முழு நம்பிக்கை இருக்கு. அவள் வேண்டாம்ன்னு தான சொல்றா? உங்களுக்கு கேக்கலையா? உங்க பையனை முதல்ல கவனிங்க என்று ராமவிஷ்ணு கையை தட்டி விட்டு தன் பொண்டாட்டி கையை பிடித்தார். இப்பொழுது தான் சிவநந்தினி நிம்மதியாக உணர்ந்து அழுகையை நிறுத்தினார்.
ஆனால் ராமவிஷ்ணு கோபம் வீறிட்டது. பாட்டி தன் இளைய மகனை பார்த்து, நந்து உனக்கு அண்ணிடா. அம்மா மாதிரி என்றார்.
இல்ல..இல்ல..இல்ல..என்று கத்திய ராமவிஷ்ணு, அண்ணாவை விட நான் அவளை காதலித்தேன். நான் என் காதலை சொல்லவில்லை. இவனுடன் நானும் தான் அவளோட கிராமத்துக்கு போனேன். உனக்கு தெரியும்லம்மா. எனக்கு நந்துவை பார்த்தவுடனே பிடித்து விட்டது. நான் காதலை சொல்ல கிளம்பும் சமயத்தில் தான் இவன் அவளை கல்யாணம் பண்ணிட்டு மாலையும் கழுத்துமாய் வந்து நின்றான். எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? இவங்க சேரக் கூடாதுன்னு நிறைய செய்தேன். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.
அதனால் அவளை எடுத்துக் கொண்டால் நானும் அவளுடன் வாழலாம் என்று அவளறைக்கு சென்றாள். இவன் வந்துட்டான். எப்படி தான் சரியான நேரத்தில் வருகிறானோ? தெரியலை. என் காதல் இவனுக்கு தெரியும். தெரிந்து தான் நந்துவை என்னிடமிருந்து பிரித்து திருமணம் செய்து கொண்டான் என்று அவன் சொல்ல,
அப்பா, பொய் சொல்லாதீங்க. செழியன் அப்பா பார்த்த பின் தான் பார்த்தீங்க? அப்படி முன் பார்த்திருந்தாலும் அம்மா செழியன் அப்பாவை தான் காதலிச்சாங்க. அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அப்பாவுக்கு நீங்க சொல்லி தான் உங்க காதலே அவருக்கும் தெரியும். தப்ப உங்க மேல வச்சுகிட்டு அப்பாவை ஏதும் சொல்லாதீங்க என்றான் அதீபன்.
செழியன் கையை விடுத்து சிவநந்தினி அவரை பார்த்து, அவன் என்ன சொல்றான்? அப்ப அவன் என்னை காதலிக்கிறான்னு உங்களுக்கு தெரியுமா? ஏன் சும்மா இருந்தீங்க? நேற்று தான் இவன் என்னை..தடுமாறி சொல்லமுடியாமல்..
எனக்கு தெரியும்.
எல்லாம் தெரிந்து என்னிடம் சொல்லாமல் இருந்திருக்கீங்க? எதுக்கு என்னிடம் மறைச்சீங்க? என செழியனை அடித்து அழுதார் சிவநந்தினி.
நம்ம சவால்ல நீ சீக்கிரமே தோற்கப் போகிறாய்? அப்பொழுது நீயே வந்து நந்துவை என்னிடம் ஒப்படைப்பாய் ராமவிஷ்ணு சொல்ல,
சிவநந்தினி மேலும் செழியனை பார்த்து, என்னை வைத்து இவனிடம் என்ன சவால் விட்டீங்க? உங்களுக்காக என்னோட எல்லாத்தையும் விட்டு நம்பி தான வந்தேன் என்று அழுது கொண்டே அமர்ந்தார்.
இல்ல நந்து. இவன் ஏதோ பிதற்றுகிறான். நான் சவால் விட்டேன் தான். சிவநந்தினி என் மனைவி. உன்னால் அவளை தொட கூட முடியாதுன்னு தான் சவால் விட்டேன் செழியன் சொல்ல,
நந்து, இவன் பொய் சொல்றான்? கம்பெனி பொறுப்பு என் கைக்கு வரும் வரை வேலை நன்றாக செய்தால் இவன் உன்னை என்னிடம் ஒப்படைப்பதாக சொன்னான் ராமவிஷ்ணு சொல்ல,
இல்ல நந்து, இவன் நம்மை பிரிப்பதாக தான் சவால் விட்டான். அதற்கு தான் நான் பதில் நான் சொன்ன சவால் என்று செழியன் சொல்ல, அனைவரும் விழித்துக் கொண்டு நின்றனர்.
என்ன தான் கோபம் வந்து தன் கணவனை சிவநந்தினி அடித்தாலும் அவருடன் தான் நின்று கொண்டிருந்தார். சீற்றமுடன் செழியனிடமிருந்து சிவநந்தினியை பிரித்து ராமவிஷ்ணு இழுத்தார்.
ச்சீ, என்னை விடு என்று சிவநந்தினி அவர் கையை தள்ள, முடியாமல் முயன்று கொண்டிருந்தார். தன் மனைவியை தன்னிடமிருந்து ஏதாவது சொல்லி பிரித்து விடுவானோ? என்ற பயத்தில் செழியனும் ராமவிஷ்ணுவை அடிக்க வந்தார். ஆனால் அதற்குள் ராமவிஷ்ணு செழியன் சட்டையை பிடித்து, உன்னால எனக்கு யாருமே இல்லை. எதுவுமே இல்லை. ஆனால் நந்து எனக்கு வேண்டும். கண்டிப்பாக வேண்டும் என்றார்.
சண்டை போடாதீங்கடா பாட்டி சத்தம் போட, இருவரும் கேட்பதாக இல்லை.
அம்மா, உனக்கும் இவன் தான் முக்கியம். அப்பாவுக்கும் இவன் தான் முக்கியம் என்று கம்பெனி பொறுப்புகள் அனைத்தையும் அவனுக்கு கொடுத்துட்டீங்க. நந்துவையும் என்னிடமிருந்து பிரிஞ்சுட்டான். நான் தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கேன். என்னக்கான எல்லாத்தையும் இவன் பறிச்சிட்டான். இவன் நந்துவிடம் நெருங்கும் போது உண்டாகும் வலி இருக்கே? என்னால தாங்கவே முடியாது.
இதுல கல்யாணம் வேற. அவ சரியான ராங்கி. எனக்கு அவளையும் பிடிக்காது. இவனையும் பிடிக்காது என்று அதீபனை கை காட்ட, அவன் சோர்ந்து அமர்ந்தான். எனக்கு யாருமே வேண்டாம். எதுவுமே வேண்டாம். எனக்கு என் காதல் வேண்டும். என் நந்து வேண்டும். என்னால இவனிடம் நந்துவை விட முடியாது.
வா..நந்து, நீ ஆசைப்படும் படி நாம் வாழலாம். அவனை விட உன்னை நான் நல்லா பார்த்துப்பேன் என்று அவர் பேச பேச சிவநந்தினி செழியன் அருகே சென்று அவர் கையை பிடித்தார். அவன் பொறாமையிலும் காதலிலும் செய்கிறான் என்று அவருக்கு புரிந்தது.
அவனிடம் போகாத நந்து, அவன் மோசமானவன். நம்மை பிரித்தவன். நீ அவனுடன் பாதுகாப்பாக இருக்க முடியாது. அவனுக்கு உன் மேல் காதல் இல்லை ஆசை மட்டும் தான் என்று செழியனை நெருங்கி நீ இருந்தால் தான நந்து உன்னை விட்டு வர மாட்டாள். நீ செத்துட்டா அவளை நான் அழைச்சிட்டு போயிடுவேன் என்று அவர் கழுத்தை நெறித்தார்.
எல்லாரும் அவரிடம் வர, வராதீங்க..வராதீங்க..என்று மேலும் செழியன் கழுத்தை இறுக்க, சிவநந்தினி சீற்றமானார். அவரை விடு என்று அவர் தடுக்க, அவனுக்கு கோபம் ஏறியது. வேறு வழியில்லாமல் ஒரு வேகத்தில் சிவநந்தினி ராமவிஷ்ணு கழுத்தை பிடித்து இறுக்க, செழியனிடமிருந்து அவன் கையை எடுத்தான். அப்பொழுதும் புன்னகையுடன் சிவநந்தினியை அவர் பார்த்தார்.
அம்மா, அவரை விடுங்க என்று நிதின் அவரை தடுத்தான்.
ராமவிஷ்ணுவை முறைத்த சிவநந்தினி சினமுடன், உன்னையே நான் முன்பு முதலாய் பார்த்திருந்தாலும் எனக்கு உன்னை பிடிக்க வாய்ப்பில்லை. எனக்கு என் கணவரை தான் பிடிக்கும். அவர் தப்பு செய்திருக்க மாட்டார். ஒரு வேலை செய்தாலும் நான் அவருக்கு சொந்தமானவள். அதை விட எனக்கு அவரை மட்டும் தான் பிடிக்கும். என் அப்பா, தம்பிக்கு அடுத்த படியாக நான் நேசித்த ஆண் இவர் மட்டும் தான். உனக்கு புரியுதா? எனக்கு உன்னை பிடிக்காது, பிடிக்காது, பிடிக்காது..என அவர் கத்தினார்.
நந்து, இப்படி சொல்லாத. ரொம்ப கஷ்டமா இருக்கு ராமவிஷ்ணு சொல்ல, பாட்டி அவரை அறைந்தார்.
அத்தை, நான் உங்களிடம் இதுவரை ஏதும் கேட்டதேயில்லை. முதலாய் ஒன்று மட்டும் கேட்கிறேன். என்னால் அண்ணனும் தம்பியும் பிரியக்கூடாதுன்னு தான் ரெண்டு நாளாய் கஷ்டப்பட்டு அவரிடம் இவன் நடந்து கொண்டதை சொல்லாமல் விட்டேன். ஆனால் இவன் என் கணவன் முன்னே என்னை தவறான எண்ணத்தில் தான் பார்த்திருக்கான். என்னால் இனியும் இங்கே இருக்க முடியாது. ஒன்று அவன் இங்கே இருக்கணும். இல்லை நாங்க இருக்கணும். இனி முடிவு உங்கள் கையில் என்றார்.
பாட்டி நெஞ்சில் அடித்துக் கொண்டு, என் புள்ளங்க ஒத்துமையா இருக்காங்க. எப்பொழுதும் இப்படியே இருக்கணும்ன்னு தான் ஆசைப்பட்டேன். அது தவறா? முனியப்பா. எதுக்கு இந்த சோதனை? என்று அழுதார். ரேவதியும் தாட்சாயிணியும் அவர் தோளில் ஆறுதலாக கை வைத்தனர். ஆனால் ரணாவும் ஆத்விகாவும் அவரை முறைத்துக் கொண்டு நின்றனர்.
நான் கேட்டது தவறில்லையே? எல்லாமே அவங்களே வச்சிக்கட்டும். உங்களுக்காக நான் வந்தேன்ல. இனி நாம சின்ன வீடாக இருந்தாலும் நிம்மதியா வாழலாம். நீங்க இவனிடமிருந்து என்னை பாதுகாக்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்கல்ல என்று செழியனை பார்த்து சிவநந்தினி அழுதார்.
சரி தான்ம்மா. நாம போயிடலாம் என்று அவர் சிவநந்தினியை அணைக்க, ராமவிஷ்ணு அவரை மீண்டும் அடிக்க வந்தார். அதீபன் அவர் முன் வந்து முறைத்து நின்றான்.
வழிய விடு அவர் கத்த, முடியாது என்றான் அவன். நிதினும் அவனுடன் வர, அவனை முறைத்த ராமவிஷ்ணு அதீபனை அடிக்கும் நேரம் ரவிக்குமார் அவர் கையை பிடித்து தள்ளி விட்டு, உன் பொண்டாட்டி, பிள்ளையவே எல்லார் முன்னாடியும் பிடிக்கலைன்னு சொல்ற? இது ஓர் ஆணுக்கு அழகல்ல..
என் பிள்ளைய நான் அடித்தால் உனக்கென்னடா? பதிலுக்கு ராமவிஷ்ணு கேட்க, இப்ப தான் பொண்டாட்டி பிள்ள வேண்டாம்ன்னு சொன்னேல்ல. அப்புறம் எந்த உரிமையில என் மருமகன் மேல கையை வக்குற? சத்தமிட்டார்.
மருமகனா? அவன் தான் மறைந்து ஒளிந்து இருக்கானே? என்று அதிரதனை இழுக்க, சிவநந்தினிக்கு தன் பிள்ளையை அவன் பேசவும் கோபம் வந்தது.
யாருடா ஒளிந்து இருக்கான்? என் பிள்ளைக்கு ஒளிந்து வாழும் பழக்கமில்லை. அவன் நினைத்தால் நாட்டையே ஆள்வான். அவன் எங்கே இருக்கான்னு தெரியலைன்னாலும் இங்கே இருக்கும் சிலருக்கு அவன் இருக்கும் இடம், அவன் செய்யும் அனைத்தும் தெரியும் என்று நிதினை பார்த்தார்.
ஆமா, என்னோட ப்ரெண்ட பத்தி பேசுற தகுதி உங்களுக்கில்லை என்றான் நிதின்.
என்ன பணக்கார குடும்பம் வந்ததும் ஆடுகிறாயா? அவர் கேட்க, இல்லையே?
இத்தனை நாள் நந்தும்மாவுக்கு மகனா தான இந்த வீட்ல இருந்தேன். ஆனால் இந்த வீட்டு மருமகனா பேசுறேன் என்றான் நிதின் கெத்தாக.
ம்ம்..பேசுடா,பேசு..
அத்தை, நீங்க சொல்லுங்க சிவநந்தினி கோபமாக கேட்க, எனக்கு இரு பசங்களும் வேண்டுமே? என்றார் தவிப்புடன்.
பாட்டி, அம்மா எப்படி இங்க இருக்க முடியும்? இப்படி பேசுறீங்க? ஆத்விகா கேட்க, நான் என்ன செய்வது? அழுதார் பாட்டி.