ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 92.

அகிலுக்கு பவியின் முதல் சந்திப்பு நினைவிற்கு வந்தது.அவனை பார்த்தவாறு தனியே நின்று கொண்டிருந்தாள். இவன் தான் முதலில் பேசி இருப்பான். பின் தான் ஒவ்வொரு முறையும் அகிலிடம் ஆட்டோகிராப் வாங்குவாள். அப்பொழுதிலிருந்து அகிலை பார்க்கும் போதெல்லாம் பேசுவாள். அவனும் பேசுவான்.

அதான் நாங்க இருக்கோம்ல.பயப்படாதீங்க ஆன்ட்டி.நீங்க கல்லூரிக்கு அனுப்புங்கள் என்று யாசு கூற, நித்திக்கு ஸ்ரீ, நிவாஸ் நினைவில் பதறி, நோ..வேண்டாம் என்று கண்கலங்கினாள் நித்தி.

எதற்கு வேண்டாம்னு சொல்ற? ஸ்ரீ ஆன்ட்டிக்கு பயந்தா? அகில் வினவினான்.

இல்லை. அப்படின்னா இங்கே நம்மை அழைத்து வந்திருக்க மாட்டாள் அபி கூற, நித்தி கீழே அமர்ந்து அழுதாள்.

நித்தி என்ன ஆச்சு? எதுக்கு அழுற? யாசு பதறினாள்.

அழுகைய நிறுத்திட்டு சொல்லு நித்தி. இருக்கிற டென்சன்ல நீ வேற அபி திட்டினான்.

அவனை பார்த்து நிவாஸ் ஹாஸ்பிட்டலில் இருக்கான்டா. அப்புறம் ஸ்ரீ என்று அகிலை பார்த்தாள்.

ஸ்ரீக்கு என்ன? என்று பதறினார்கள். பவி அம்மா அவர்களை கவனிப்பதை மறந்து ஆளாளுக்கு பேசினர்.

ஸ்ரீயிடம் அந்த ஜிதின் போதையில் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறான். அர்ஜூனும் கவினும் தான் காப்பாற்றி இருக்கிறார்கள். அவர்களை தடுக்க சென்ற நிவாஸை அடித்து போட்டிருக்கிறார்கள். அவன் இன்னும் விழிக்க கூட இல்லை என்று தேம்பி தேம்பி அழுதாள்.

அதை பார்த்த பவியின் அம்மா,அவளை ஆறுதலாய் அணைக்க, அகில் அங்கிருந்த பூச்சட்டியை எட்டி உதைத்தான்.சத்தம் கேட்டு பவியும் ஜூலியும் அவனை பயந்து பார்த்தனர்.

அவனுக்கு எவ்வளவு தைரியம்? ஸ்ரீ மீதே கை வைக்க பார்த்திருக்கிறான். அவனை கொல்லாமல் விட மாட்டேன் என்று கர்ஜித்தபடி செல்ல, அபி அவனை தடுத்தான்.

அகில் போகாதே, ஸ்ரீ ரொம்ப பயந்திருக்கா..ப்ளீஸ் போகாதே? அவள் மயங்கி விட்டாளாம். தூங்க மருந்து வேற கொடுத்திருக்காங்களாம். நீ போகாதே என்று யாசு தடுத்தாள்.

நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன் அர்ஜூனிடம். அவன் எதையும் சொல்ல மாட்டிக்கிறான் கத்தினான் அகில்.

ஜூலி அவனை பார்த்து குரைத்தது.பவிக்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது.

அவன் ஜூலியை பார்த்து விட்டு, பவியையும் பார்த்தான்.பின் அவன் செல்ல அவனை அபி தடுக்க, அகில் விடுவதாக இல்லை.

என்னை மன்னிச்சிடுடா மச்சான் என்று அபி அகிலை அடித்து விட்டான்.அகில் அவனை பார்த்து, அபி நீயுமா?

உனக்கு புரியலையா? இருக்கும் தீவிரம். பிரச்சனை போகப் போக பெரிதாகிறது.இப்பொழுது ஜிதினை அடித்து என்ன ஆகப் போகிறது? இப்ப நமக்கு ஸ்ரீ தான் முக்கியம். முதலில் அவளை தான் பார்க்கணும்.

இல்ல..நாம நிவாஸை தான் பார்க்கப் போகணும். அதுவும் கல்லூரி முடிந்து என்றாள் நித்தி.

ஸ்ரீயை தான் பார்க்கணும் என்றான் அகில்.

அகில் என்னால முடியல. அர்ஜூன் வீட்ல தான் ஸ்ரீ இருக்கா.ஏற்கனவே அவளை கவனித்த டாக்டர் அவள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறி தான் தூங்க ஊசி போட்டிருக்கிறார்கள். அவள் மனகலக்கத்தில் இருப்பாள். அர்ஜூனையே அவள் பார்க்க விடுவது சந்தேகம் தான். அவள் உடல் நிலையை பற்றி உனக்கு தெரியும் தானே?

தாரிகா தான் அவளருகிலே இருக்கிறாள். அர்ஜூனும் ஹாஸ்பிட்டலில் தான் இருந்தான். மீண்டும் டாக்டரை அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு செல்வதாக சொன்னான். அதனால் இன்று நாம் ஹாஸ்பிட்டலில் தான் இருக்கணும். ஸ்ரீயை நாளை பார்க்கலாம். ஸ்ரீயை விட அவளது நிலையை பக்கத்திலிருந்து பார்த்த நிவாஸ் தான் அதிகமாக உடைந்திருப்பான். அவனை தான் நாம் பார்க்கணும் என்றாள்.

அகில் அமைதியானான். ஆனால் அபிக்கு சந்தேகம் வந்தது.ஏற்கனவே மருத்துவர் பார்த்து அவளுக்கு மருந்து கொடுத்து ஓய்வெடுத்த பின்னும், ஏன் அர்ஜூன் அவரை ஸ்ரீயை பார்க்க வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும்? சிந்தித்தான்.

அகில் பவியின் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டான் பூச்சட்டியை உடைத்ததற்கு.பவியும் ஜூலியும் அவர்களருகே வந்தனர். ஜூலியோ அகிலையே எந்நேரமும் உன்னை கடித்து விடுவேன் என்பது போல் நின்றது. ஆனால் அகில் அதை எண்ணவில்லை. அவன் யோசனை, ஸ்ரீ நிவியிடம் தான்.

பவியை கல்லூரிக்கு அனுப்பினால் எங்களால் முடிந்தவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் அனுப்பவில்லை எனில் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் நித்தி கூறினாள்.

நித்தி, ஸ்ரீக்கு என்ன ஆச்சு?

உனக்கு ஸ்ரீயை தெரியுமா?

அது எப்படி தெரியாம போகும்? அவள் தான் முதல் நாளே டிரெண்டானாலே?

நீ இங்கே வா. உன்னிடம் பேச வேண்டும்? என்று நித்தி பவியை தனியே அழைத்துச் சென்று, அவளோட அம்மா வருத்தத்தை கூறி, நீ யாரிடமும் ஏமாறக் கூடாது. தைரியமா இரு.நாங்க இருக்கோம். கொஞ்சம் பிரச்சனை. அதை முடித்து விட்டு வாரோம்.எங்களுடன் நீயும் சேர்ந்து கொள்.

தயவு செய்து அம்மா, அப்பாவிற்காக மாறு. வெளியே சுற்றாமல் எப்பொழுதும் போல் கல்லூரி செல். வீட்டிற்கு காரிலே வந்து விடு. அம்மாவை கூட வர சொல்றோம் பிக் அப், டிராப்பிற்கு.

எங்க பிரச்சனையால உனக்கு ஏதும் ஆகக்கூடாது. அதனால் தான் இப்பொழுது உன்னை தனியே இருக்க சொல்கிறேன். மற்றபடி ஏதுமில்லை. உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்று அனைவரது நம்பரையும் நித்தி பவிக்கு அனுப்பி, பிரச்சனை என்றால் யாருக்குனாலும் போன் போடு என்றாள். இருவரும் அனைவரும் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

அகில் பவியிடம், ஏதும் பிரச்சனை என்றால் சொல்லு என்று அவளது போனை கேட்டான்.

போன் எதற்கு?

போனை எதற்கு கேட்பாங்க?

நம்பரா? என்று அவளது போனை காண்பித்தாள். அவர்கள் அனைவரது நம்பரையும் பார்த்தவன் திரும்பி நித்தியை பார்த்தான். அவள் முகம் வாட்டத்துடன் இருந்தது. அகிலை பார்த்து புன்னகைத்த பவி,.நான் ஃபர்ஸ்ட் உனக்கு தான் கால் பண்ணுவேன் என்றாள்.அவன் தலையசைத்தான். பின் அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

அர்ஜூன் வீட்டிற்கு வந்தனர்.வெளியே செவிலியர் ஒருவர் இருந்தார்.

டாக்டர் அவரிடம், உள்ளே செல்லவில்லையா? கேட்டார்.

அந்த செவிலியரோ..நம்பர் லாக்கை காட்டினாள்.

கூப்பிட்டால் வெளியே வந்திருப்பாளே தாரிகா என்று அர்ஜூன் முன் வந்து நம்பரை அழுத்தினான். உள்ளே சென்றனர் அனைவரும்.

ஸ்ரீ அறைக்கு சென்று பார்த்தால் தாரிகா ஸ்ரீ கட்டிலில் படுத்துக் கொண்டு, அவள் மீது கையை போட்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.

அர்ஜூன் கண்ணில் நீர் வழிய,தாரிகா அருகே சென்று அவளை எழுப்பினான். அவள் எழுந்து அண்ணா! என்று அவனை கட்டிக் கொண்டு, எனக்கு ரொம்ப பயமா இருக்குடா என்று அழுதாள். பின் தான் மற்றவர்களை பார்த்து அவனை விட்டு விலகி எழுந்தாள்.

சைலேஷ், சந்துரூ,பிரதீப், டாக்டரை பார்த்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

சார்,நீங்க இங்க.. ஸ்ரீ? என்று அர்ஜூனை கேள்வியுடன் நோக்கினாள் தாரிகா.

இவர்களுக்கு எல்லாமே தெரியும் தாரி.

எல்லாமே சொல்லிட்டாயா?

ம்ம்..என்றான்.

செவிலியர் முதலில் உள்ளே சென்று, ஸ்ரீயை பார்த்து விட்டு தாரிகாவை உதவிக்கு அழைத்தார். அவளுடைய ஆடையை மாற்ற கேட்டார்.

இங்கே ஏதும் இல்லை என்று தாரிகா கூற, கையில்லா ஆடை வேண்டுமே? கேட்டார்.

தாரிகா கதவை திறந்து வெளியே வந்து அர்ஜூனிடம் கூற, அவன் வாங்கி வந்தான். அவளுக்கு ஆடை மாற்றி விட்டு,தாரிகாவும் செவிலியரும் அவளை பாவமுடன் பார்த்தனர்.

தாரிகா சோர்வுடன் கண்கள் கலங்க, வெளியே யாரையும் கண்டு கொள்ளாது கண்ணீருடன் சோபாவில் அமர்ந்து தலையில் கை வைத்து இருக்க, இப்பொழுது டாக்டரும் செவிலியரும் உள்ளே சென்றனர்.

அர்ஜூனிற்கும் தான் தெரியுமே? தாரிகாவிற்கு தெரியும் தான். ஆனால் ஸ்ரீ உடலில் இவ்வளவு தழும்புகள் இருக்கும் என்று நினைக்கவில்லை.

அர்ஜூன் தாரிகாவை பார்த்து, அவளருகே வந்து அமர்ந்து அவளது தோளில் கை வைக்க, கட்டுப்படுத்திய அழுகை வெளியே வந்தது.

ஏன்டா, இவளுக்கு மட்டும் இவ்வளவு கஷ்டம்? அவளுக்கு எவ்வளவு வலித்திருக்கும். யாருமே அப்பொழுது அவளுடன் இல்லையேடா. எப்படிடா தாங்கிக்கிட்டா? அவனது தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதாள்.அவனும் அழுதான்.

மற்றவர்கள் புரியாமல் இவர்களை பார்த்தனர்.

அர்ஜூன், டாக்டரை எதற்கு அழைத்து வந்திருக்கிறாய்? சந்துரூ யோசனையோடு கேட்க, தாரிகா சினத்துடன்,

நீங்க அவங்க குடும்ப வக்கீல் தான? அங்க என்ன நடக்குதுன்னு பார்க்கவே மாட்டிங்களா? என்ன வக்கீல் நீங்க? கத்தினாள்.

அர்ஜூன் அவளை கட்டுப்படுத்த, தாரிகா மீண்டும் அழுதாள். சந்துரூ அவளை பார்த்தபடியே இருந்தான்.

அர்ஜூன் அவளை முகத்தை கையில் பிடித்து கண்ணீரை துடைத்து விட்டு, நீ ஓய்வெடு போ என்றான்.

எனக்கு ஏற்கனவே தெரியும் அர்ஜூன். வினிதா அக்கா வீட்டில் நடந்ததை அவள் கூற, அனைவரும் திகைத்து விழித்தனர்.

நான் அந்த பெரிய காயத்தை மட்டும் தான் பார்த்தேன் அன்று. ஆனால் உடல் முழுவதும் காயம் மீண்டும் அழுதாள்.அவங்க யாரையும் உயிரோட இருக்கவே கூடாது அந்த ஜிதினையும் சேர்த்து என்றாள்.

அர்ஜூனும் அவளை பார்த்து திகைத்து, நீ ஹாஸ்பிட்டல் கிளம்பு. அவளது காயத்தை பார்த்து அவள் காயப்படக் கூடாது என்று தான் டாக்டரை அழைத்து வந்திருகிறேன்.

கவினை வரச் சொல்கிறேன்.

முடியாது. நான் ஸ்ரீயை விட்டு போக மாட்டேன்.

புரிஞ்சுக்கோ தாரி. எனக்கும் கோபம் வெறியா இருக்கு. அதை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நீ சொன்ன மாதிரி யாரையும்  உயிரோட விட மாட்டேன் என்றான் அர்ஜூன்.

இங்க என்ன நடக்குது அர்ஜூன்? அது என்ன காயம்? பிரதீப் கேட்டான்.

அர்ஜூன் அனைத்தையும் சொல்ல, மற்றவர்கள் கண்களும் கலங்கியது. கைரவிடம் கூறியதை அவர்களிடம் சொன்ன அர்ஜூன். இவ்வாறு தான் அனைவரும் தெரியும். கவின் தவிர யாருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியவும் கூடாது என்றான்.

சந்துரூ அவனிடம், அவளை கொல்வது சாதாரண விசமில்லை. நீ சொன்னது போல் அவளுக்கு பின்புலம் யாராவது இருந்தால் அவர்களை நாம் வெளியே வர வைக்க வேண்டும்.

ம்ம்..என்று அமைதியாக இருந்தான்.

அர்ஜூன்,..ஸ்ரீயை நாம் அன்றே கவனித்திருக்கலாம். அவளுடைய பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்று தான் நானும் அசால்டாக இருந்து விட்டேன். தவறு செய்து விட்டேன் என்று பிரதீப்பும் அழுதான். அனைவரும் ஸ்ரீ நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருந்தனர்.

கண்களை துடைத்த அர்ஜூன் சைலேஷிடம் சார், உங்க லேப்பை வைத்திருக்கிறீர்களா?

காரில் தான் இருக்கு.

அவன் கயல் வீட்டிலிருந்து எடுத்து வந்த பென் டிரைவ் பாக்ஸை எடுத்து வைத்தான்.

என்னடா இது? தாரிகா கேட்டாள்.

அர்ஜூன் ஸ்ரீயை விட்டு தனியே கயல் வீட்டிற்கு சென்றதையும் நடந்ததையும் கூற, தாரிகா அவனை அடித்துக் கொண்டே,

ஏன்டா, தனியா போன? உனக்கு ஏதாவது ஆகி இருந்தால் என்ன செய்வது?

சைலேஷும் பிரதீப்பும் மாறி மாறி அர்ஜூனை திட்டினார்கள்.

அங்க யாருமே உன்னை தடுக்கவில்லையா? கேமிராவில் நீ உள்ளே வருவதை பார்க்காமலா இருந்திருப்பாள்?ஆட்கள் யாருமே இல்லையா? நீங்கள் அடித்தவர்களை விட அங்கே யாருமில்லை என்றால் கயலை வைத்து தான் பின்னே மறைந்திருப்பவனை கண்டறியலாம்.அந்நேரம் அவனிடம் தான் சென்றிருப்பார்களோ? வக்கீல் மூளை சிந்தித்ததை அனைவரிடமும் பகிர்ந்தனர்.

அவர்கள் அவனையே பார்க்க, இருக்க வாய்ப்புள்ளது சார் என்றான் அர்ஜூன்.

சரி. வாங்க இதை பார்க்கலாம் என்று அர்ஜூன் அழைக்க, அனைவரும் லேப்பை எடுத்தனர். பிரதீப் அர்ஜூனை பார்த்தான். வேகமாக அர்ஜூன் அருகே வந்து அவனை காட்டிக் கொண்டு, எல்லாத்தையும் நாம எல்லாரும் சேர்ந்து சரி செய்வோம் என்றார்.

அவன் உணர்வை காட்டாது அண்ணா! அபி லேப் இங்கே தான் இருக்கு என்று எழுந்து அதை எடுத்துக் கொடுத்தான்.

          “மனதை திடமாக்கி உனை

               நான் தேற்றுவேனே!

            நேரம் கடந்து காத்தாலும்

   நீ உயிரோடிருக்க நானும் இருப்பேனே!

                    அல்லாது

   உன்னுடன் என்னுயிரையும் இழப்பேனே!

               உணர்வை துடைத்து

              வலியை மறைத்து

           என் காதல் தேவதையின்

                  உயிரை காக்க

        இனி செய்வேன் எல்லாமே!

                                எதையுமே!

                             எந்நேரமுமே!”