ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 86.
இதயா தருண் அறைக்குள் செல்ல, துகிராவிற்கு அழைப்பு வந்தது. போனை பார்த்த அவள் முகம் முற்றிலும் மாறியது. போனை நழுவ விட்டாள். ஆதேஷ் அவளிடம்,போனை எடு என்றான்.
முடியாது என்று தலையசைத்து விட்டு, அதை வெறித்தவாறு நின்றாள். போன் ஓய்ந்து மீண்டும் ஒலிக்கவே பின் நகர்ந்தாள்.
துகி எடு என்றான் அதட்டலாக. அவள் கண்கலங்க முடியாது என்று அவள் வேகமாக வெளியே ஓடினாள்.
அவன் போனை எடுத்து, அங்கிள் நான் அவளுடன் தான் இருக்கிறேன். வேறேதுவும் பேச வேண்டுமென்றால் வைத்து விடுங்கள் என்று சட்டென போனை அணைத்து வைத்தான்.
பிரதீப் அவனை பார்க்க,நீங்கள் அவர்களை பாருங்கள். நான் அழைத்து வருகிறேன் என்று ஆதேஷ் வெளியே சென்றான் துகிராவை சமாதானப்படுத்த.மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு நிவாஸை பார்க்க சென்றனர்.
அவன் ஆழ்ந்த மயக்கத்தில் இருக்க, அவனருகே தலையை பிடித்தவாறு அமர்ந்திருந்த அர்ஜூனை பார்த்து விட்டு நிவாஸை அந்நிலையில் பார்க்க தவித்து தான் போனாள் ஆருத்ரா.
அவள் அவனையே பார்த்துக் கண்கலங்கி நிற்க,கவின் அதை கவனித்து அர்ஜூன் தோள் மீது கை வைத்து கண்காண்பித்தான்.
அவனும் தான் உள்ளே வரும் போதே அவள் அதிர்ச்சியை பார்த்திருப்பானே! ஆழ்ந்து அவளை பார்த்த அர்ஜூன், அவனை உனக்கு தெரியுமா? என்று கேட்டான் ஆருத்ராவிடம்.
அவள் கண்கள் கலங்கி அர்ஜூனை பார்த்தவள். நன்றாக தெரியும். என் அண்ணா தான் சிகிச்சை செய்தார் ஸ்ரீ விபத்தின் போது. அப்பொழுதே தெரியும். ஸ்ரீயுடம் பேசி இருக்கிறேன். ஆனால் நிவியிடம் பேசியதில்லை. அவள் கூறிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தனர் பிரதீப்பும் தருண் அப்பாவும்.
அவர்களை பார்த்து அவள் அமைதியாக, கவின் அவளை கூர்ந்து பார்த்தான். பிரதீப் பேச தொடங்கும் முன் தருண் அப்பா அவனை நிறுத்தி, நீங்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தீர்களோ? இடையே வந்து விட்டோமோ? அவர் கேட்க,
நோ அங்கிள். நான் வெளியே செல்கிறேன் என்று அவள் வெளியே செல்ல. அர்ஜூனும் மற்றவர்களிடம் சொல்லி விட்டு வெளியே வந்தான்.
ஆரு..என்ன சொல்ற? உனக்கு நடந்தது தெரியுமா? கேட்ட அர்ஜூன் அவளை தனியே அழைத்துச் சென்றான்.
ஸ்ரீ கிராமத்திலிருந்து நேராக எங்கள் மருத்துவமனைக்கு தான் வந்தார்கள்.என் அண்ணா தான் அவளுக்கு சிகிச்சை செய்தான். நான் அவனை பார்க்க வரும் போது ஸ்ரீ பழக்கம். ஒரு வருடம் கோமாவில் தான் இருந்தாள். பின் அவள் நினைவுக்கு வந்த பின் ஒரு மாதம் இங்கே தான் இருந்தாள். அப்பொழுது தான் அவளிடம் பேசினேன். அவள் ரொம்ப நன்றாகவே பழகினாள். போன் நம்பர் கூட மாற்றிக் கொண்டோம். ஆனால் நிவி அவ்வப்போது மட்டும் தான் அவளை பார்க்க வந்தான். பின் அவளை சந்திக்க முடியவில்லை என்றாலும் நாங்கள் போனில் தொடர்ந்து கொண்டு தான் இருந்தோம்.
அவள் பெற்றோர் இறந்த பின் தான் அவளது நம்பர் தவறானது என்று அறிவுறுத்த நானும் அப்படியே விட்டு விட்டேன். சில மாதங்களுக்கு முன் தான் அவளை ஷாப்பிங் சென்ற போது பார்த்தேன். அவளும் நிவியும் மட்டும் தான் வந்திருந்தனர். ஸ்ரீயின் ஆடை முன் போல் இல்லாது இருந்தது. பின் இருவர் முகமும் சோர்ந்து தான் தெரிந்தது. அதிலிருந்து நான் அவர்களை பின் தொடர்ந்தேன். நிவாஸ் நடவடிக்கை ஏனோ அவன் ஸ்ரீயின் பாடி கார்டு போல் நடந்து கொண்டான். என் சந்தேகம் ஊர்ஜிதமானது அவர்கள் பேசியது கேட்டு. அவர்கள் இருவரது பெற்றோரையும் அவங்க ஆன்ட்டி கொன்று விட்டார்கள் என்றும் அதற்கு பழி வாங்க வேண்டும் என்று நிவாஸ் பேசுவதை கேட்டேன். அதனால் இன்று வரை அவர்களை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
அதற்காக தான் தொடருகிறாய் என்றால் இது ஏன்? என்று ஆருத்ராவின் கண்ணீரை சுட்டிக் காட்டி கேட்டான்.
தயங்கிய அவள் முகத்தை மூடி அழுது கொண்டு, நான் அவனை காதலிக்கிறேன் என்று மீண்டும் அழுதாள்.ப்ளீஸ் அர்ஜூன் அவனுக்கு தெரியாமல் தான் அவனை..கூற முடியாமல்..அவனை அவர்கள் இந்த அளவிற்கு காயப்படுத்துவார்கள் என்று எனக்கு தெரியாது என்று ஏங்கினாள்.
அவன் உயிரோட இருப்பதை நினைத்து சந்தோசப்படு என்றான் எங்கோ வெறித்தபடி.
கண்ணீரை துடைத்த ஆருத்ரா..ஸ்ரீ கிடைத்தாளா? கேட்டாள்.
சட்டென அவளை பார்த்து, இதுவும் உனக்கு தெரியுமா? கேட்டான்.
தெரியும். நேற்று அவள் இருந்த இடமும் எனக்கு தெரியும்.வெண்ணையை கையில் வைத்துக் கொண்டு தேடுவதை போல் தான் நீ இருக்கிறாய்? இரு பொருள் பட கூறினாள். ஸ்ரீயின் காதலையும், அவள் அவனை பார்த்துக் கொண்டிருந்ததையும் நினைத்த படி.
உனக்கு தெரியுமா? என்ன பேசுற? வெண்ணையா?
ம்ம் என்று அவள் நீங்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்தாள் அந்த நடுநிசியில்.
கேட்டாளா? பொண்டாட்டி என்றெல்லாம் பேசினேனே? அதையும் கேட்டாளா?
அவள் கேட்டால் என்று உறுதியாக தெரியாது. ஆனால் மறைந்திருந்து உங்கள் மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் தலையை பிடித்துக் கொண்டு கண்ணை மூடியவாறு அமர்ந்தான். தயங்கிய ஆருத்ரா அர்ஜூனிடம், அவனுக்கு ஒன்றுமில்லை தானே!
அவளை நிமிர்ந்து பார்த்தவன், எனக்கு ஒரு உதவி வேணுமே?
சொல்லு?
அர்ஜூன் சொன்னவுடன், கண்கலங்கியவள் அவளது அப்பாவிடம் அவனை அழைத்து சென்றாள்.அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள். முன்பே சிகிச்சை இங்கே தான் நடந்ததா? ஆனால் அந்த மருத்துவர் தான் சிகிச்சை செய்ததாக கூறினார்கள். ஆழ்ந்து யோசித்துக் கொண்டே சென்றான். அவனுள் நினைவுகள் எழ, சரி தான். அவரை மனநல மருத்துவர் என்று தான் கூறினார்கள். இவரிடம் சிகிச்சை என்றால்..அவளுடைய பெற்றோர்கள் இறந்த பின் தான் அவரை சந்திக்கவே சென்றிருக்கிறாள் ஸ்ரீ. அவர் குடும்ப மருத்துவர் இல்லை. இவர்..இவர்..தான் என்று கதவை திறந்து உள்ளே சென்றவுடன்,
நீங்கள்.. நீங்கள் தானே? கேட்க, அர்ஜூன் என்று..ஆருத்ரா அவனை உலுக்க, ம்..என்றவன் நீங்கள் தான் சங்கரி ஆன்ட்டி,மகேஷ் அங்கிளின் குடும்ப மருத்துவரா? கேட்டான்.
எஸ். நான் தான் என்றார்.
ஆரு..நீ வெளியே போ என்று அவளை வலுக்கட்டாயமாக பிடித்து தள்ளியவன், அவரிடம் பேச ஆரம்பித்தான்.
ஸ்ரீயை பற்றி கூறி உதவி கேட்டான். அவர்களை இங்கே பாதுகாப்பாக வைத்திருக்க,
அவள் மோசமானவ தான். என்னால் அவர்கள் உடல் நிலை சரியாகும் வரை மட்டுமே அவளிடம் இருந்து காக்க முடியும்.ஒரு மருத்துவராக பாதுகாப்பேன் அவ்வளவு தான். ஆனால் அதற்கு பின் என்னால் முடியாது. எனக்கு என்னுடைய குடும்பமும், என்னுடைய தொழிலும் முக்கியம் என்று முடித்து விட்டார்.
அர்ஜூற்கு இதற்கு மேல் முடியாமல் சோர்ந்து விட்டான் சாரலுடன். அவனை பார்த்தவர், என்னப்பா காதலா?
அவன் அமைதியாக இருந்தான்.அவனருகே உட்கார்ந்து அந்த பொண்ணை காப்பாற்ற வேண்டுமென்றால் கண் காணாத இடத்திற்கு அழைத்து சென்று விடு. நீ வரும் முன்பே அவளின் மனநல மருத்துவர் அனைத்தையும் கூறினார்.
அனைத்தும்மா? கேட்டான்.
ஆம். அவளுடைய உடல் நிலை மிகவும் வீக்கா இருப்பதாக என்று அவர் கூற, அப்பாடா என்று பெருமூச்சு விட்டவனை பார்த்து,அந்த பையனையும் சேர்த்தே அழைத்து சென்று விடு என்றார்.
அது தான் முடியவில்லையே? என்றவன். அவளது உடலில் உள்ள தழும்பை பற்றி கூறி, அது வெளியே தெரியாமல் செய்ய முடியுமா?
முடியும்.ஆனால் அதுவும் ஒருவிதமான பிளாஸ்டிக் சர்ஜரி போல் தான்.
அப்படியா? ரொம்ப வலி இருக்குமா டாக்டர்? உருக்கமாக அவன் கேட்க, அவர் அவனை பார்த்துப் புன்னகையுடன் வலி அவளது காயத்தை பொறுத்தது.
உடலில் அங்கங்கு இருந்தால்?
இப்பொழுது புதியதாக அதற்கான மருந்தும் உள்ளது. அதன் மூலம் சரி செய்யலாம்.
பிளாஸ்டிக் சர்ஜரி?
தேவைப்படாது என்று நினைக்கிறேன் என்றார்.
எத்தனை நாள் ஆகும்?
கொஞ்சம் கொஞ்சமாக தான் மறையும் குறிப்பிட்டு என்றால் இரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட ஆகும் என்றார்.
ஓ.கே சார். அவள் மனம் சரியில்லாது இருக்கிறாள். அதனால் ஒரு முறை என்று தயங்கியவன், என் வீட்டில் வந்து பார்த்து செல்கிறீர்களா?ப் ளீஸ் சார் என்று அவரது காலை பிடித்தான் கண்கலங்கியவாறு.
அவர் அதிர்ந்து அவனை எழச் செய்து, அவ்வளவு காதலா? வியந்தார். ஆருவும் நீ ஏதோ பிஸினஸ் வுமன் பொண்ணு என்றாள்.
யார் உன் அம்மா?
அவன் கூற, அவர் மகனா நீ? எனக்கும் அவரை நன்றாக தெரியும். உங்க அம்மா உள்ள வந்தாலே அனைவரும் அவ்வளவு மரியாதை கொடுப்பார்கள்.நீ அவர் மகன் போலே தெரியவில்லை. அவர் யாரிடமும் பணிந்து பேசவே மாட்டார். அவர் பிஸினஸ் உலகின் குயின் என்பார்கள்.
அவன் ஏதும் பேசாமலிக்க, அவர் மீண்டும் பேச, அவன் கூறிய வார்த்தையில் வாயடைத்து போனார்.
மற்றவர் போல் தான் அவருக்கு நான் என்றவனை பார்த்து வாயடைத்தவர், அவனை ஆழ்ந்து நோக்கினார்.
சார்,இப்பொழுது வருகிறீர்களா? அவளுக்கு தெரியாமல் செய்ய வேண்டும் என்றான்.
அது எப்படி முடியும்? அவள் என் வீட்டில் ஏற்கனவே மயக்கத்தில் தான் இருக்கிறாள்.
மயக்கமா? அவளை ஏதும் செய்து விட்டாயா? எழுந்தார்.
நோ சார் என்று அவன் அழ, அவளை சரி செய்ய வேண்டுமென்றால் நடந்த அனைத்தையும் கூறு.
அவன் தயங்க, சரி..நீ கிளம்பு.
சார் என்று அவன் பார்த்த வீடியோவை கூற,
மருதமலை முருகா என்று கடவுளை அழைத்தவர், வா செல்லலாம். ஆனால் என்னுடைய நோயாளிகளை பார்த்து விட்டு வருகிறேன் என்றார். அவனும் வெளியே வந்தான். ஆருத்ரா அவனை பார்க்க, அவன் சோர்வுடன் நடந்து அறைக்கு சென்று தருணை பார்த்து வருவதாக கூறினான். அவனை உணர்ந்தவனாய் பிரதீப்பிற்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் உறுதியாக தெரிந்தது.அதே அறைக்கு ஆதேசும் துகிராவும் வந்தனர்.
அவர்களை பார்த்த பிரதீப்பிற்கு துகியின் செயல்கள் நினைவை மீட்டெடுக்க, அவன் காரணம் கேட்டான். அது அவள் அப்பா தான் போன் செய்தார்.
அப்பா போனையா நீ எடுக்கவில்லை என்று தருண் அப்பா கேட்க பொங்கிய நீருடன், அந்த ஆளு எனக்கு அப்பாவே இல்லை. அவருக்கு அவர் தொழில் மட்டும் தான் முக்கியம். அதனால் தான் என் அம்மாவை இழந்தேன். அவர் மட்டும் அம்மா போன் செய்த போது வந்திருந்தால், அம்மாவுடனாவது மகிழ்ச்சியுடன் இருந்திருப்பேன்.
அந்த ஆளு என்னோட அம்மாவை கொன்ற பாவி என்று அவள் அழ, ஆதேஷ் அவளது வாயை பொத்தி விட்டு, அவனை பார் எந்நிலையில் இருக்கிறான்? அழுது சத்தமிட்டு அவனை விழிக்க வைத்து விடாதே!
பிரதீப் அவனது கையை எடுத்தவன்,துகிரா கையை பிடித்து வெளியே அழைத்து வந்தான்.அவள் அழுது கொண்டே, அவனை பார்த்து, எனக்கு உன்னோட நம்பர் தருகிறாயா?
பிரதீப் பட்டென அவளது கையை விடுவித்தான். அழுகை நிற்காமலே நீ தருண் அப்பாவை நன்றாக சமாதானப்படுத்தினாய்? எனக்கு பிரச்சனை என்றால் உனக்கு போன் செய்யவா? கேட்டாள்.
அவன் அவளை உற்றுநோக்க, அதை கூட கவனிக்காது அவள் பேசிக் கொண்டே சென்றாள்.என் அம்மா என்னை விட்டு சென்ற போது தனியாக அழுது அழுது மயங்கியே விட்டேன். ஆனால் யாரும் பெரியதாக கண்டு கொள்ளவில்லை. என் அப்பா கொஞ்சம் கூட அம்மாவிற்காக அழவில்லை. வீட்டில் வேலை செய்வர்கள் தான் என்னை எழுப்பி தண்ணீர் கொடுத்து விட்டு, அப்படியே விலகி விட்டார்கள். ஒரு வருடம் நான் சரியாக சாப்பிடாமல் பள்ளிக்கு செல்லாமல் இருக்க, என் அப்பா அந்த சிறு வயதிலே என்னை அதே வீட்டில் தனியே விட்டு, இன்னொரு பெண்ணை மணமுடித்து வேறு வீட்டிற்கு சென்று விட்டார். அவர்களுக்கு ஒரு பையனும் உள்ளான். ஒரு நாள் கூட என்னை பார்க்க வரவே மாட்டார். அவருடைய தொழில் வேலையாக மீட்டிங் இருந்தால் மட்டுமே கூப்பிட்டு செல்வார். ஒரு வார்த்தை கூட நன்றாக இருக்கிறாயா? கேட்கவே மாட்டார் என்று அழுதவள். மீண்டும் அழுது கொண்டே என்னை அவர் தொழிலுக்காக ஒரு பொறுக்கிக்கு மணமுடித்து வைப்பதாக வாக்கு கொடுத்து விட்டாராம்.அவர் அவனிடம் அழைத்து சென்று தனியே விட்டு விடுவார். அவனை ஏமாற்றி வருவதற்குள் என் உயிரே போய் விடும் என்று அவனை சட்டென அணைக்க, அவளை நினைத்து வருந்தியவன் உறைந்து நின்றான் அவளணைப்பில்.
இதை பார்த்த ஆதேஷோ..என்னடி பண்ற? துகியை பிரதீப்பிடமிருந்து பிரித்தெடுத்து விட்டு, அவ டென்சன்ல இருந்தால அதான் என்ன செய்வதென்று புரியாமல் செய்து விட்டாள்.
இல்லை.நான் தெரிந்து தான் செய்தேன். கொஞ்ச நேரத்திற்கு முன் தானே தருண் அப்பாவை அணைத்து ஆறுதல் சொன்னார்.அதுவுமில்லாமல் ஜானுவிற்காக ஆன்ட்டியிடம் மன்னிப்பும் கேட்டார். அப்புறம் ஜானுவிடம் பாசமா இருக்கிறார்.
ஜில்லா..அவர் அப்பா போல் இல்லைடா என்று குழந்தை போல் பேசியவளை விழிவிரித்து பார்த்த பிரதீப்பிற்கோ ஜானுவை சிறுவயதில் பார்த்தது போல் தெரிந்தது.
ஆதேஷ் தலையில் அடித்துக் கொண்டு, நீ தான் அப்பா வேண்டாம் என்று அடிக்கடி கூறுவாயே?
ஆம்.ஆனால் ஜானுவை இவர் அப்படி தானே பார்த்துக் கொண்டதாக பேசினார்கள் என்று கண்ணை துடைத்தாள்.
யார் சொன்னா? பிரதீப் கேட்டாள்.
உங்கள் இருவரை பற்றியும் கூறினார்கள் அண்ணன் தங்கை என்று தான். ஆனால் ஜானு மீது உங்களது செயல்கள் எனக்கு அப்படி தான் தெரிந்தது.
ஒரே நாளில் தெரிந்து விட்டாயோ? பிரதீப் கேட்க, அவளது துடுக்கான பதில் அவன் மீது விழ அழுமூஞ்சியாய் இருந்தவள் சண்டைக்காரியானாள். ஆதேஷ் இருவரையும் பார்த்து, இதற்கு ஜானுவே பரவாயில்லை என்று திரும்பி நடந்தான்.
“ஆசை அம்மாவே
எனை விட்டு போனதேனோ?
உன் கணவரின் செயல்
எனை தவிக்க வைக்கிறதே?
உன் பாசம் கலந்த சோறும்
மடி தூங்கும் நேசமும்
எனை காக்கும் உயிராய் நீ
எனக்கு வேண்டுமம்மா!
எனக்கு நீ வேண்டுமம்மா!
உயிரின் உயிராய் வளர்த்த
எனை அநாதையென விட்டு
சென்றாயேம்மா!
என்னுயிர் எனை விட்டு
சென்றது போலாகியதே!”