அத்தியாயம் 7
அர்ச்சு அவனது வீட்டிற்கு யாசுவை அழைத்து செல்ல, அவன் வீட்டில் பொருட்கள் எதுவும் இல்லை. இருவரும் சென்று வாங்கி வர, அர்ச்சுவே சமைத்தான்.
யாசு அவனிடம்,….நீ ரொம்ப மாறி விட்டாய்? அமைதியாக இருப்பாய். இப்பொழுது உனக்கு கோபமெல்லாம் வருகிறது? உனக்கு சமைக்க தெரியாதே! கற்று கொண்டாயா?…அம்மா…எப்பொழுது வருவார்கள்? கேட்க,…
அவன் ஏதும் பேசாமல் வேலையை கவனிக்க, நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். நீ ஏதும் கூற மாட்டாயா?
நீ ஏன் அவளை முறைத்துக் கொண்டே இருக்கிறாய்?…..அர்ச்சு யாசு பக்கம் திரும்ப,
நான் ஏதும் செய்யவில்லை.
ஓ….ஏதும் செய்யவில்லையா?….. நீ ஸ்ரீயை பார்க்கும் போதெல்லாம், நிவாஸ் எதற்காக அவளது கையை பிடிக்கிறான்.
நீ என்ன செய்தாய்?……
அவளுக்கு தான் யாருமே நினைவிலே இல்லையே அப்புறம் எதற்கு அவளை இப்படி தாங்குகிறீர்கள்?
நான் கேட்டதற்கு பதில் இது இல்லை. கூறு…..அவள் ஏதும் கூறாமலிருக்க,
சரி கூற வேண்டாம். இனி அவள் பக்கம் கூட செல்லாதே! நான் கூறுவது புரிகிறதா?
அவள் ஏதும் பேசாமல் மூடிய அறை அருகே செல்ல, அதற்குள் யாரும் செல்லகூடாது என்று அறையின் முன் வந்து நின்றான்.
உள்ளே என்ன உள்ளது?
என்ன இருந்தால் உனக்கென்ன? என்னுடைய அறை யாருக்கும் அனுமதியில்லை கூறினான்.
ஆமாம்.என்ன இருந்தால் எனக்கென்ன? அவள் சோபாவில் சென்று அமர்ந்தாள். தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். சாப்பாடு செய்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு கிளம்பினான் அர்ச்சு.
அகில் வண்டியை ஓட்ட அவன் மீது தூங்கி விழுந்து கொண்டிருந்தாள் ஸ்ரீ.
ஏய், எழுந்திரு. இரவு தூங்காமல் இப்பொழுது சீனியர் மீது சாய்ந்து தூங்குகிறாயா? எழுந்திரு நிவாஸ் எழுப்ப,
டேய், இன்னும் கொஞ்ச நேரம்….தயவுசெய்து தொந்தரவு செய்யாதே! உளறிக் கொண்டே அவள் தூங்க, அகிலிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அவன் சிரித்துக் கொண்டிருந்தான்.
ஸ்ரீ, சீனியர் இடுப்பிலிருந்து கையை எடுடி… நிவாஸ் எடுக்க, அவள் அகிலை இறுக்கமாக பிடித்துக் கொண்டு,அவன் முதுகில் சாய்ந்து கொண்டே, என்னை தூங்க விடுடா…தூக்கத்தில் புலம்ப, அகிலுக்கு சந்தோசம் தாங்கவில்லை.
அய்யோ….இவளை……. நிவாஸ் வேறு வழியில்லாது, அவளது தலையில் ஒரு கொட்டு கொட்டினான்.
அம்மா…வலிக்கிறதே! அதற்குள் விடிந்து விட்டதா என்று ஸ்ரீ கண்ணை திறந்தாள்.
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?….நிவாஸ் ஸ்ரீ மீது கோபப்பட, அப்பொழுது தான் அவள் பைக்கில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தாள். சட்டென அகில் இடுப்பிலிருந்து கையை எடுத்து விட்டு, என்னை மன்னித்து விடுங்கள் சீனியர் கூற, அகில் சிரித்துக் கொண்டே இருக்கட்டும் என்றான்.
ஸ்ரீ அகிலை பார்த்து சிரிக்க, அவன் ஸ்ரீயை பைக் கண்ணாடி வழியே பார்த்து சிரித்தான்.
இப்படியா தூங்குவாய்? நிவாஸ் திட்ட,
நீ என்னை முதலிலே எழுப்பி இருக்கலாமே!….நிவாஸ் அவளை முறைத்துக் கொண்டே, நான் உன்னை எழுப்பவில்லையா?
சரிடா, மறுபடியும் என் மேல் கோபப்படாதே!
அகில் இருவரும் அழகாக சண்டை போடுகிறார்கள் என ரசித்துக் கொண்டே வண்டியை ஒரு ஹோட்டலில் நிறுத்தினான்.இங்கே சாப்பாடு அருமையாக இருக்கும் என்றான்.
அகிலும், நிவாசும் அருகருகே இருக்க, ஸ்ரீ அவர்களுக்கு எதிரே அமர்ந்தாள்.சாப்பாடு கொண்டு வரப்பட்டது.
ஸ்ரீ தன்னுடைய சாப்பாட்டை எடுத்து அகிலுக்கு வைக்க, அவனுக்கு கண்கலங்கியது. எத்தனை நாட்கள் நாம் சேர்ந்து சாப்பிட்டிருப்போம்… எனக்கு ஒரு முறையாவது எடுத்து வைத்திருக்கிறாயா? நிவாஸ் கேட்க, அவள் கையையும் அகில் இலையையும் இருவரையும் மாறி மாறி பார்த்தாள். அகில் எழுந்து,நான் வந்து விடுகிறேன் சாப்பிடுங்கள் கூறி விட்டு உள்ளே சென்று முகத்தை கழுவி விட்டு, கண்ணாடியில் அவனை அவனே பார்த்துக் கொண்டு சிரித்தான்.
ஸ்ரீ நிவாசிடம்…நான் ஏன் அவ்வாறு செய்தேன்? எனக்கே தெரியவில்லை என்று குழப்பமாக மீண்டும் அவளது கை, இருவரது சாப்பாட்டையும் பார்க்க, அகில் வந்தான்.
அவனை பார்த்தவுடன் திடீரென்று பதட்டமாக, நிவாஸ் அவளைபார்த்து கண்ணை மூடி திறந்து காட்ட,அவளும் அவ்வாறு செய்து நிதானமானாள். அகிலும் நிவாசும் சாப்பிட ஸ்ரீ மட்டும் சாப்பிடாமல் அதை பற்றி யோசிக்க, அகில் அவளை பார்த்து சாப்பாடு நன்றாக இல்லையா?
நல்லா இருக்கு சீனியர் என்று சாப்பிட ஆரம்பித்தாள்.பின் சீனியர் நீங்கள் தவறாக எண்ணவில்லையெனில், உங்களிடம் ஒன்று கேட்கவா?
குக்கூ…என்பவர் உங்களது தோழி தானே! அகில் கையில் இருந்த சாப்பாடு கீழே விழுந்தது. உனக்கு குக்கூவை பற்றி எப்படி தெரியும்?
அந்த பெண்ணை காதலிக்கிறீர்கள் தானே!
உனக்கு எப்படி தெரியும்? கேட்டான் சீரியசாக.
நித்தி சீனியரும்,யாசு சீனியரும் அந்த பெண்ணால் சண்டை போட்டனர். அந்த பொண்ணு உயிரோட இல்லை என்று யாசு சீனியர் கூறிய பின் தான் சண்டை ஆரம்பித்தது. பிறகு இருவருமே அந்த பொண்ணு உயிரோடு இருப்பது போல் பேசிக் கொண்டனர்.எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா?
குக்கூ இறந்து விட்டதாக பேசினார்களா? அவன் கோபமாக எழுந்து அவனது சாப்பாடு மேசையில் இருந்த சாப்பாட்டை தட்டி விட்டு, ஸ்ரீ அருகே நெருக்கமாக கோபத்துடன் கத்த,அவள் பயத்துடன் அவனை பார்க்க முடியாமல் கண்ணை மூடிக் கொண்டாள். நிவாஸ் அவனை ஸ்ரீயிடமிருந்து விலக்கி விட்டு, ஸ்ரீயை சமாதானப்படுத்தினான். அவளுக்கு ஏற்கனவே இது போல் நடந்திருப்பதை போல் தோன்ற அவ்விடம் விட்டு நகராமல் அப்படியே உட்கார்ந்தாள்.
போதும் சீனியர். நீங்கள் கிளம்புங்கள். அவள் சரியானவுடன் வருகிறோம் என்று நிவாஸ் கோபமாக முறைத்து விட்டு, அகிலை பிடித்து தள்ள, அப்பொழுது தான் சுயநினைவிற்கு வந்தான் அகில்.என்ன செய்வதென்று தெரியாமல் அவன் நிற்க, நீங்கள் கிளம்புங்கள் நிவாஸ் மீண்டும் முறைத்தவாறு கூறினான்.
இல்லை, நானே அழைத்து செல்கிறேன் அவளது கையை அகில் பிடிக்க, அவனது கையை தட்டி விட்டு,வா என்று நிவாசை பிடித்து பக்கத்தில் இருந்த பழக்கடைக்கு அழைத்து சென்று பழம் வாங்கினாள் ஸ்ரீ. இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.பின் மூவரும் மருத்துவமனைக்கு சென்றனர்.
மருத்துவமனை வந்தவுடன் நிவாசும், ஸ்ரீயும் உள்ளே செல்ல தயங்க,அகில் வேகமாக உள்ளே வந்து யாசுவை தேட, அவள் நித்தி அறையினுள் இருக்க, அர்ச்சு, அபினவ் வெளியே உட்கார்ந்திருந்தனர்.
அகில் யாசுவை வெளியே வரவழைத்து, அவளை பார்த்து நித்தி நிலைக்கு காரணம் யார்? அவள் மனதை காயப்படுத்தியது யார்? சத்தமாக கேட்க, அவள் தலைகவிழ்ந்து நின்றாள்.
என்ன ஆயிற்றுடா? அபினவ் கேட்க, அகில் மீண்டும் யாசுவிடம் கூறு? கத்தினான்.
அவள் பயந்து ஓர் அடி பின்னே வைத்து விட்டு,ஏதும் பேசாமல் நின்றாள்.அவன் அவளை அறைந்தே விட்டான். அவள் அழுது கொண்டிருக்க,
அவளை சுவற்றில் சாய்த்து பயங்கர கோபமாக கழுத்தை பிடித்துக் கொண்டு, குக்கூவை பற்றி நித்தியிடம் என்ன பேசினாய்?
மீண்டும் பதில் கூறாமல் இருக்க, ஸ்ரீ பெயரை கேட்டவுடன் அர்ச்சு அவளருகே வந்து, நான் ஏற்கனவே உன்னிடம் கேட்டேன்? நீ ஏதோ செய்திருக்கிறாய்? அர்ச்சுவும் கோபமாக பார்க்க,
அங்கிருந்த செவிலியர், இங்கே என்ன சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? கேட்க, அகில் அவளது கழுத்திலிருந்து கையை எடுக்க, அபினவும் என்ன தான் பேசினாய்? கேட்க,……
நிறுத்துங்கடா…….இதற்கு தான்…..எனக்கு அவளை பிடிக்காமல் போனதன் காரணம்….யாசு கூற…
பிடிக்காதா? அபினவ் கேட்க,
ஆமாம், எனக்கு குக்கூவை பிடிக்காது தான். நானும் அவளுடன் நல்ல தோழியாக தான் இருந்தேன்.அவள் மட்டும் உங்கள் அனைவருக்கும் சிறப்பானவள்…நானும் உங்களுடைய தோழி தானே! நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா? அகிலை பார்த்து கூறி விட்டு, நீ அப்பொழுது அவளை காதலிக்கவில்லை என்றாலும் உன் அன்பு முழுவதும் அவளுக்கு மட்டும் தான் இருந்தது.நீ என்னை கண்டு கொள்ளவே இல்லை.இப்பொழுது கூட அவளுக்கு திருமணம் முடிவாக போகிறது இருந்தும் நீ அவளை காதலிக்கிறாய் தானே! உன்னுடைய காதல்…… பிரிவினால் மட்டுமே வந்தது. அது உண்மையில்லை.அவளை
உன்னால் காதலிக்க முடியாது என்று அர்ச்சுவை பார்த்துக் கொண்டே, நடந்ததை மறந்து விட்டாயா? கேட்க,
அர்ச்சு கோபமாக, வேண்டாம் இதோட நிறுத்திக் கொள் கூற, அவள் கேட்காமல் ஏதோ கூற வர,
அவளை பற்றி பேசாதே! அர்ச்சு கோபப்பட,
பாருங்கடா…..உண்மையை சொன்னா கோபம் வருதோ உனக்கு என்றாள் யாசு.
நடந்தது தெரியாமல் பேசாதே, அவளருகே அர்ச்சு வர,
கவின், நித்தி வெளியே வந்து….என்னடா நடக்கிறது?
ஸ்ரீயை வெளியே ஓரிடத்தில் உட்கார வைத்து விட்டு நிவாஸ் உள்ளே வந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க,அர்ச்சு கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் நித்தி நீ உள்ளே போ…நான் இவளை கவனித்துக் கொள்கிறேன்…
யாசு சட்டென, அவள் தவறானவள் கூற, யோசிக்காது அர்ச்சுவும் அவளை அறைந்து விட்டு,உனக்கு என்ன தான் பிரச்சனை? அவள் உன்னை என்ன தான் செய்தாள்? கண்கலங்க கேட்டான்.
ஏன் அர்ச்சு? உனக்கு அவள் மீதுள்ள காதல் குறையவே இல்லை போல, இந்த கண்ணீர் தெளிவாக கூறுகிறது யாசு அர்ச்சுவிடம் கேட்டு விட்டு மேலும் அகிலை வெறுப்பேற்ற, அர்ச்சு அமைதியாகி விட்டான்.
என்னுடைய பிரச்சனை? நீங்கள் அனைவரும் அவள் மீது வைத்திருக்கும் அன்பும் அக்கறையும். இப்பொழுது கூட நித்தியை அந்த காரிலிருந்து காப்பாற்றியது நான் தான். ஆனால் அவள் என்னை கண்டுகொள்ளாமல் அவளிடம் தான் சென்றாள்.
அபினவ் உள்ளே நுழைந்து, காதலை கட்டாயப்படுத்தி வர வைக்க முடியாது.புரிந்து கொள் யாசு…
அவளுக்கு திருமணம் முடிந்தாலும் அகில் உன்னை காதலிக்க மாட்டான்.அவனுக்கு நீ தோழி மட்டும் தான்.
நீ மனதினுள் இவ்வளவு வஞ்சத்துடன் இருப்பாய் என்று நினைக்கவே இல்லை.எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை. இனி என் கண் முன் வராதே! கூறினான் அகில். யாசு அழுது கொண்டிருந்தாள்.
அங்கே நடப்பது புரியாமல் அகில் யாசுவை நிராகரிப்பதை பார்த்தபடி உள்ளே வந்த ஸ்ரீ, நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள்? அவர்களை தோழியாகவாது ஏற்றுக் கொள்ளுங்கள் ஸ்ரீ கூற, எல்லா பிரச்சனைக்கும் காரணமே நீ தான் யாசு கோபமாக அழுது கொண்டே அவளை அடிக்க வர,
அர்ச்சு, அகில் இருவரும் முன் வந்து, அகில் அவளது கையை பிடிக்க, அர்ச்சு ஸ்ரீ முன் வந்து நின்றான். நடப்பதை அதிர்ச்சியாக நிவாஸ் பார்த்துக் கொண்டிருக்க, நெருக்கமாக இருக்கும் அர்ச்சுவை பார்த்தவாறு ஸ்ரீ நின்றாள்.
உன் இடத்தில் அவள் இருந்தால் அவளுடைய காதலை தோழிக்காக விட்டுக் கொடுத்திருப்பாள்.உன்னை போல் அவள் சுயநலவாதி இல்லை என்றான் அர்ச்சு. ஸ்ரீ கண்கள் அர்ச்சுவை விட்டு அகலாதிருக்க, இங்கிருந்து சென்று விடு…. அவனது கண்கள் சிவக்க கூறினான் அகில்.அப்பொழுது தான் அர்ச்சு ஸ்ரீயை பார்த்தான். அவள் தன்னையே பார்த்திருப்பதை கவனித்து அவளை விட்டு விலகினான்.
வேண்டாம்டா…….நித்தி வர, யாசு அழுது கொண்டே சென்றாள்.
யாசு….நில்லு… என்று நித்தி யாசு அருகே வருவதற்குள் அவள் ஓடி விட்டாள். மீண்டும் சோர்ந்தாள் நித்தி.அவளை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் கவின் கூற, சைலேஷ் அங்கே வந்தான்.
யாசு சீனியர் என்னை குக்கூ என்று நினைத்து விட்டாரோ? அபியை பார்த்தாள். அவன் தடுமாற, அதெல்லாம் இல்லை. அவளுக்கு என் மீதுள்ள விருப்பம் தான். உன் அருகே வர கூடாது என்று இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்றான் அகில். அவன் பேசியவுடன் ஸ்ரீ அமைதியானாள்.