ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான எபிசோடு 83

அர்ஜூன் வீட்டிற்கு செல்ல,அங்கே யாருமில்லை. அதே சமயத்திற்கு முன்பு ஸ்ரீ பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள்.ஏதோ சத்தம் கேட்டு எழுந்தாள்.

பாட்டி எழுந்து காலை வேலையை கவனித்துக் கொண்டிருந்தார்.அவரிடம் சென்று,நானும் உதவுகிறேன் பாட்டி என்று ஸ்ரீ வந்தாள்.

கமலி ஸ்ரீ நினைவிலே உழன்று கொண்டிருக்க,இதற்கு மேல் முடியாது என்று அந்த பாட்டி வீட்டிற்கு வந்தார். ஸ்ரீ தன்னுடைய துப்பட்டாவை இட,வலமாக உடலை மறைத்தவாறு கட்டிக் கொண்டு, வேலை செய்து கொண்டிருந்தாள்.அதுவும் அதிகாலை ஐந்து மணியளவில். அவருக்கு இப்பொழுது ஸ்ரீயை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.”இவளா வேலை செய்கிறாள்?” பார்த்துக் கொண்டே நின்றார்.

பாட்டி வேலையை செய்து கொண்டே ஸ்ரீயிடம், ஏம்மா..உனக்கு அவனை பிடிக்குமா? கேட்டார்.

“யார பாட்டி?” கைகள் வேலையில் மும்பரமாக இருக்க பேசினாள்.

அதான். நீ சொன்ன பாட்டியின் பெயரனை?

அவள் அசையாது ஒரு வினாடிகள் நின்றவள்.ஆமாம் பாட்டி..ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

அப்படினா? அந்த பையனை கட்டிக் கொள்ள வேண்டியது தானே?

“என்னால முடியாதே!” பாட்டி.

ஏன்மா?

“அவனோட அம்மாவுக்கு என்னை பிடிக்காதே!”

ஏம்மா பிடிக்காது. உன்னை மாதிரி தங்கமான பொண்ணு கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும்.

அத விடுங்க பாட்டி.”நான் ஒண்ணு கேட்கவா பாட்டி?”

கேளும்மா?

பாட்டி கொஞ்ச நாட்கள் கழித்து, நான் உன்னுடன் தங்க வந்தால் என்னை நீ ஏற்றுக் கொள்வாயா?

ஏன்மா இப்படி கேட்குற?

நான் இப்பவே கிளம்பணும் பாட்டி. என்னோட பிரச்சனையை முடித்து விட்டு வந்து, நான் இங்கே வந்து தங்கலாமா?

தாராளமா வாம்மா. யார் கிட்ட கோபப்பட்டு வந்தீயோ? அவங்கள முதல்ல போய் பாரும்மா. அவங்க உன்னை நினச்சி கவலையா இருப்பாங்க.

ஆமாம் பாட்டி. எல்லாரும் கவலைப்படுவாங்க. ஆனால் என்னால் அவங்களுக்கு பிரச்சனை வரும். அந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட தான் கிளம்புகிறேன்.

சரிம்மா. நீ போயிட்டு வாம்மா. நான் உனக்காக காத்திருக்கிறேன் என்றார்.

சரிங்க பாட்டி என்று அவளது பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அதே கொடூரமான இடத்திற்கு. அவள் செல்லாமலே இருந்திருக்கலாம். கமலி அவளை பார்த்து விட்டு அவர் வீட்டிற்கு கிளம்பினார்.

ஸ்ரீ அவளது ஆன்ட்டிக்கு பயந்து கொண்டே தோட்டத்து பக்கம் பார்த்தாள் .அவள் முன் அந்த கொலை நினைவு வர,மூச்சடைத்தது அவளுக்கு. அவளது அந்த உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டே உள்ளே நுழைந்தாள். நிவாஸ் கை காட்ட, இருவரும் சேர்ந்தவாறு கையை பிடித்துக் கொண்டு மாடிப்படி ஏறினார்கள்.அதே சமயத்தில் அர்ஜூன் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தான்.

நிவாஸ் ஆன்ட்டி..ஆன்ட்டி..என்று கத்தினான்.

ஜிதின் அவர்கள் முன் வந்து ஸ்ரீ, “நீ இங்கே என்ன செய்கிறாய்?” பதறினான்.

அங்கே வந்த கயல், என் செல்லத்துக்கு என் மேல் கோபமா? கொஞ்சியபடி நிவாஸ் அருகே வந்தாள். பின் ஜிதினை பார்க்க அவன் அமைதியாக நின்றான். அவள் கையை தட்ட, ஜிதினை சில பேர் வந்து இழுத்து சென்றனர்.

அவனை என்ன செய்யப் போகிறீர்கள்? அவனை விடுங்கள் ஸ்ரீ கூற, அவன் மீது உனக்கு கரிசனம் உள்ளதா? என்றவர் ஸ்ரீ அருகே வந்து, நான் சொன்ன அனைத்தையும் நீ நம்பி விட்டாய் போல?

நீ சின்னப் பொண்ணு தானே! உனக்கு என்னுடைய விளையாட்டு புரியவில்லையே! பாவம்மா நீ.

சம்பந்தமில்லாது ஏன் பேசுகிறீர்கள்? நிவாஸ் சத்தமிட,

“இருக்குடா என் செல்லமே!” என்று ஸ்ரீயை பார்த்து, ஜிதின் உனக்கு அண்ணணா? கேட்டார்

அவள் ஆம் என்க. என்ன சொல்ற ஸ்ரீ? என்று அதிர்ந்தான் நிவாஸ்.

ஆமாம் நிவி என்று ஸ்ரீ கயல் கூறியதை கூற, கயல்விழியோ பயங்கரமாக சிரித்து விட்டு, முட்டாள்..அவன் உன்னோட அண்ணன் என்றா இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறாய்?

ஸ்ரீ விழிக்க, என்ன புரியலையா? நான் தெளிவாக கூறுகிறேன் கேள். அவனுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவன் ஒரு அநாதை என்றாள்.

அவனை அண்ணன் என்றீர்கள்?

நான் அப்படி கூறினால் தானே நீ அவனிடம் கோபப்படுவாய்? நீ எனக்கு அண்ணன் என்று அவனிடம் சண்டை போடுவாய்? அவனுக்கு கோபம் வரும் என்றார்.

நான் சொன்னேன் தான். ஆனால் அவன் வருத்தப்பட்டான். கோபமெல்லாம் இல்லையே!

கோபம் இல்லையா? இருக்கு உன் மீது மட்டுமல்ல; உன் காதல் வேறொருவன் மீது உள்ளது என்று தெரிந்து தான் அவனிடம் நல்லவன் போல பழகுகிறான்.

இருக்காது.நீங்க பொய் சொல்றீங்க? என்றாள்.

நான் உனக்கு புரிய வைக்கிறேன். அதிலும் சிறியதாக விளையாடலாம். இந்த விளையாட்டிற்காக தான் வெகு நாட்கள் காத்திருந்தேன்.நீங்கள் இருவரும் அந்த அறைக்கு செல்லுங்கள். நான் வருகிறேன் என்று அலைபேசியை பார்த்து சிரித்தவாறு நகர்ந்தாள்.

அர்ஜூன் குளித்து விட்டு ஆடை மாற்றிக் கொண்டிக்க, அலைபேசி அவனை அழைத்தது. அதனை எடுத்தி காதில் வைத்துக் கொண்டு சர்ட் பட்டனை மாற்றிக் கொண்டிருந்தான்.

அர்ஜூன் பேபி, நல்லா இருக்கியா? இனி நீ சிரிக்க கூட முடியாது என்று கயல் வாய்சை கேட்டு, என்ன சொல்ற? சினத்துடன் கர்ஜித்தான்.

எதற்கு பேபி கோபம்? நான் உனக்கு வீடியோ கால் பண்றேன். நான் மியூட்டில் தான் வைத்திருப்பேன். நீ கதறுவது உன் அருமை ஏஞ்சலுக்கு கேட்காது. ஆனால் அவ துடிக்கிறத பாரு டியர் என்று போனை அணைத்தாள்.

ஸ்ரீ, நிவாஸ் இருந்த அறைக்குள் கயல் சில ஆட்களுடன் வந்தாள். அவர்களில் ஒருவனிடம் உள்ள போனில் தான் மறைத்து அர்ஜூனிடம் காண்பிக்க, அவனும் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். நீ எதற்கு அங்கே சென்றாய் ஸ்ரீ? அழாத குறையாய் கலக்கத்துடன் கவனித்துக் கொண்டிருந்தான்.

இவர்களை எதற்காக அழைத்து வந்திருக்கிறீர்கள்? நிவாஸ் கேட்க, விளையாட்டிற்காக தான்.

நீ சொன்ன மாதிரி ஜிதின் இருக்க மாட்டான் என்று ஸ்ரீ உறுதியாக கூற,

நீயே பார்க்கத் தானே போகிறாய்? அதற்கு முன் இந்த வீடியோவை பார் என்று அவனிடம் கண்காட்ட, அவனும் வீடியோ முன் வந்து அர்ஜூனுக்கு காண்பித்தான்.

அர்ஜூன் அதை பார்த்து, சுற்றியிருந்த பொருட்களை வெறித்தனமாக கத்திக் கொண்டே உடைத்துக் கொண்டிருந்தான். ஸ்ரீயோ தலையில் அடித்துக் கொண்டு, எல்லாமே போச்சு..இனிமே நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம்? என்று தரையில் அமர்ந்து கதறிக் கொண்டிருந்தாள்.

என்ன செஞ்சு வைச்சிருக்க? நிவாஸ் கயலை அடிக்க பாய்ந்தான். அவளுடன் இருந்தவர்கள் நிவாஸை பிடித்து அடித்து துவைத்தனர்.

அர்ஜூன் அனைத்தையும் உடைக்க, அதிலிருந்து சில கண்ணாடி துண்டுகள் அவன் முகத்தில் தெறித்து கீழே விழுந்தது. மனதில் வேதனை தாங்காது கைகளை தரையில் போட்டு குத்திக் கொண்டே இருந்தான். கையில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதற்கு மேல் முடியாமல் மண்டியிட்டு நடுஹாலில் அமர்ந்து தலையை பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தான். அப்பொழுது கவின், தாரிகா,இதயா அர்ஜூன் வீட்டிற்கு வந்திருப்பார்கள்.

அவனது சத்தம் கேட்டு பதறி உள்ளே வந்தனர். அர்ஜூன் கைகளை பார்த்து தாரிகா பதறி

அவனருகே வர அவன் போனை பார்த்துக் கொண்டே கதறிக் கொண்டிருந்தான். அனைவரும் ஸ்ரீ,நிவாசை பார்த்து திகைத்தனர்.பின் நடப்பதை பார்த்து அவர்களும் கதறினர்.

அந்த வீடியோவில் ஸ்ரீ மயங்கி உணர்வில்லாது இருக்க, ஜிதினை போதையுடன் கயல் ஓர் அறைக்கு இழுந்து வந்தார்.வந்த கயல் ஸ்ரீயின் உடையை களைந்து அவள் மீது ஏதோ ஒன்றை ஊற்றினாள். ஜிதினை விடுவித்து அதை வீடியோவாக பதிவு செய்ய ஆரம்பித்தாள்.ஜிதினும் போதையில் ஸ்ரீயிடம் தவறாக நடந்து கொண்டான்.பின் அவளுக்கு ஆடையை அணிவித்து அவள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை அடித்து விட்டு ஆட்களை வைத்து அவளது அறையில் போட்டனர். ஸ்ரீயோ எதையும் அறியாது சாதாரணமாக நடமாடினாள்.

என்ன ஸ்ரீ வீடியோ கிளியரா இருக்குல?

அவள் தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தாள்.

காது வலிக்குதுடி. அழறத நிறுத்து. உன் அழுகை எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. அதை விட காது வலிக்குது. இதற்கே அழுகிறாயே என்று மீண்டும் ஒரு வீடியோவை காண்பிக்க, அதில் ஜிதின் எந்த போதை மருந்தும் இல்லாமல் அவளுடன் தவறாக நடந்திருப்பான். அவள் உடலெங்கும் கூசியது. எறிய ஆரம்பித்தது.

ஸ்ரீ மேலும் கத்திக் கொண்டே, என்னால முடியல. என்னை கொன்னுடுங்க என்று கத்திக் கொண்டே இருந்தாள். நிவாஸ் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டு எழுந்து கயலை நெருங்கி அவளது கழுத்தை பிடித்தான்.ஆட்கள் அவனை சூழ்ந்தனர். அவனை விடுங்கடா என்று மற்றவர்களை தடுத்து, அவளே நிவாசை பிடித்து தள்ளினாள். அவர்கள் அடித்ததில் ஏற்கனவே வாயில், தலையில், காலில் இரத்தம் வந்திருக்கும் நிவாஸிற்கு.இவள் தள்ளியதில் நிவாஸ் கீழே விழுந்து மேலும் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. அவன் கண்கள் ஸ்ரீயை பார்க்க, அவள் அழுகை நிற்பதாக இல்லை.

நிவாஸ் மெதுவாக நகர்ந்து ஸ்ரீ கையை பிடித்தான். அவள் அப்பொழுது தான் அவனை கவனித்தாள்.

அய்யோ நிவி, நான் தான் சொன்னேன்ல..என்று அவனது கையை பிடித்தாள். கயல் அவளது கையை மிதித்து விட்டு, உனக்கு காதலை விட இவன் தானே முக்கியம் என்று நிவாஸை பார்த்தாள்.

நிவி..உன்னோட அக்கா எப்படி இருக்கா பார்த்தேல? குரூரமாக பேச, அந்நிலையிலும் அவளை காரி உமிழ்ந்தான்.

என்னிடமே காருகிறாயா? இப்பொழுது பார் என்று ஸ்ரீ அருகே கயல் வர, ஸ்ரீயை நடுக்கம் தொற்றிக் கொண்டது.

ஸ்ரீயை பிடித்து இழுத்து அவளது தாடையை பற்றிய கயல் அவளிடம், இனி நடப்பது நடந்தே தீரும் என்றாள்.கவின் அர்ச்சுவை அணைக்க, பாருடா என்ன செஞ்சுட்டான் அந்த ஜிதின் என்னோட ஸ்ரீயை?என்று கதறினான்.

அவங்க யாரையும் உயிரோட விடக் கூடாது என்று கவின் கத்திக் கொண்டே எழுந்தான்.தாரிகா அவனை தடுத்தாள். இதயா மயங்கி சரிந்தாள். ஏற்கனவே அவள் உடல் சோர்வாக இருந்திருக்கும்.அவள் ஸ்ரீ நிலையை பார்த்து அதிர்ச்சியில் மயங்கி இருப்பாள்.

இதயா..என்று தாரிகா அவளருகே வந்தாள்.கவின் தண்ணீரை எடுத்து தெளிக்க, அவள் விழித்து ஸ்ரீக்கு நம் உதவி தேவை என்று இதயா பதட்டமாக சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

அர்ஜூன் அழுகை நின்றது. அங்கே ஸ்ரீ அருகே பேசிக் கொண்டிருந்த கயல் ஸ்ரீயின் கை பக்க ஆடையை கிழித்தாள். ஸ்ரீ மிகவும் சோர்ந்தாலும் கயலை பிடித்து தள்ளினாள். ஆனால் கயல் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் ஸ்ரீ ஆடையை கிழிக்க, ப்ளீஸ் என்னை விட்டு விடுங்கள் என்று அழுதாள்.

விடவா? முடியாது. இன்று உன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்க போகிறது? அர்ஜூன் தயாராக இரு சொல்லிக் கொண்டே போனருகே வர, கவின் அதை எடுத்து உன்னை கொல்லாமல் விட மாட்டேன் கத்தினான்.

ஸ்ரீயின் தோழனா? வா.. நான் உன்னை எதிர்பார்க்கவில்லை. நீயும் பார்த்து விட்டு போ.

எங்கே அர்ஜூன்? அவள் அவனை தேட,அர்ஜூன் போனை வாங்கி, இதுக்கு மேல, அவ மேல யாராவது கை வச்சீங்க கொல்லாம விட மாட்டேன் சீற்றத்துடன் கத்தினான்.

அர்ஜூன் அழுதாயா? கண்கள் இப்படி சிவந்திருக்கிறதே! அர்ஜூன் பெயரை கேட்டவுடன் நிவாஸ் நிமிர்ந்து பார்க்க, ஸ்ரீயால் தாங்க முடியவில்லை. அவனும் பார்த்தானா? மனதினுள் பார்த்ததை ஓட்டிக் கொண்டே, முகத்தை மூடிக் கொண்டே மீண்டும் கதறி அழுதாள்.

அது எப்படி கை வைக்காமல் இருப்பது பேபி. வீடியோவில் பார்த்ததை இதே காலில் நேரடி காட்சியாக்குகிறேன். பார்த்து கதறு என்றாள்.

தாரிகா போனை திருப்பி, நீயெல்லாம் பொம்பளையா?  உன்னை பார்க்கவே அருவருப்பா இருக்கு. ச்சீ என்றாள்.

யார பார்த்து ச்சீன்னு சொன்ன? நானா? உன்னுடைய தோழியா? கத்தினாள். இதை கேட்டு ஸ்ரீ உடைந்து மேலும் அழுதாள்.

போதும். நிறுத்துகிறாயா? என்று நிவாஸ் மீண்டும் எழுந்தான். அவன் முழுவதுமாக அடிபட்டு இரத்தத்துடன் இருந்தான்.

அதை பார்த்து தாரிகா, நிவி என்று வாயில் கை வைத்து அழுது கொண்டே, அவங்கள விட்டிருங்க?

அதெல்லாம் முடியாது என்று பாட்டிலிலிருந்து எதையோ ஸ்ரீ மீது ஊற்றினாள்.

அவனை பார்க்காமலே, அர்ஜூன் இது என்னன்னு தெரியுமா? இது உன்னுடைய ஏஞ்சலில் மணமுள்ள வாசனைத்திரவியம் புரியவில்லையா?

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓர் வாசனை இருக்கும். இது ஸ்ரீ பயன்படுத்தும் பொருட்கள் அவளது வியர்வையின் மூலம் உடல் வாசனை திரவியமாக உருவாக்கப்பட்டது. இதன் வாசனையை ஏற்கனவே ஜிதின் உணர்ந்து இருக்கிறான். அவளை வைத்து அவளுக்கே தெரியாமல் தான் உருவாக்கினோம். இப்பொழுது நடப்பதை பாருங்கள் என்று அவள் கூற, அங்கே ஜிதினை அழைத்து வந்தார்கள். அவனுக்கு போதை மருந்தை கொடுத்து பிடித்து வைத்திருந்தனர்.

ஜிதினை பார்த்தவுடன், அர்ஜூன் சீக்கிரம் வா. ப்ளீஸ் இந்த ஒரு முறை மட்டும் உதவி செய் கத்தினாள் ஸ்ரீ அழுது கொண்டே. போனை கையில் வைத்திருந்தது தாரிகா தான். கவினும் அர்ஜூன் ஏற்கனவே கிளம்பி விட்டனர்.

அர்ஜூன் வருவானா? அட முடியாதுடா ஸ்ரீ கண்ணு. அவன் வந்தும் பிரயோஜனம் இல்லை. அவன் வருவதற்குள் உன் கதை முடிந்து விடும் என்று அரக்கத்தனமாக சிரித்தாள் கயல்.

ப்ளீஸ்..என்னை விட்டுருங்க..யார் என்னை இந்த நிலையில் பார்க்கக் கூடாதோ? அவனே பார்த்து விட்டான். அதுவே என்னை வாழ்நாளை குறைத்து விடும். இதற்கு மேலும் வேண்டாம். என்னால் தாங்க முடியாது என்று ஸ்ரீ கெஞ்சினாள்.

கவினும் அர்ஜூனும் இவள் பேசுவதை கேட்டுக் கொண்டு தான் வந்திருப்பார்கள். ஸ்ரீ அர்ஜூன் மீதுள்ள காதலை மறைமுகமாக சொல்வதை பார்த்து கவின் அர்ஜூனை பார்க்க, அவன் ஸ்ரீ பேசியதை கூட கவனிக்காமல் இருந்திருக்கிறான்.அவனுக்கு சினம்..சினம்..சினம்..மட்டுமே கயல், ஜிதின் மீது.