ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 80.
ஸ்ரீ அர்ஜூனை நினைத்துக் கொண்டு, ஏன்டா இப்படியெல்லாம் பேசுற? நான் உன்னோட அம்மாவிடம் என்ன பதில் சொல்வது? என்னை பொண்டாட்டியா நினைக்கிறியா? எனக்கு சந்தோசமா தான்டா இருக்கு. ஆனால் உனக்கு பிரச்சனையாக தான் இருக்கும். என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.நான் உன் அம்மாவிடம் சொன்னது போல் உன்னை விட்டு செல்ல தான் போகிறேன். அது தான் உனக்கு நல்லது என்று ஸ்ரீ பேசுவதை கேட்ட நிவாஸ்,
இது வேறயா? அன்றே நினைத்தேன். அர்ஜூன் அம்மாவும் பிரச்சனை கொடுப்பார்கள் என்று நினைத்தேன். ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சுட்டாங்க எகத்தாளமாக கூறிக் கொண்டே ஸ்ரீ முன் வந்தான்.
நிவி, உனக்கு நான் இங்கிருப்பது எப்படி தெரியும்?கேட்டாள்.
எனக்கு தெரிந்தது இருக்கட்டும். நீ அர்ஜூனை காதலிக்கிறாயா? கேட்டான். அவள் மௌனம் சாதிக்க,ம்..நல்லா புரியுது.
சரி வா. நாம அர்ஜூன் அம்மாவை பார்க்க போவோம் அழைத்தான் அவன்.
நான் பேசியது பேசியது தான். நான் அவங்களிடம் பேசிக் கொள்வேன்.
எனக்கு உன் காதல் முன்பே தெரிந்திருந்தால் அர்ஜூனுக்கு உதவி இருப்பேன்.
ஸ்ரீ அவனை முறைத்து விட்டு, ஏன்டா அவன் கிட்ட கத்திட்டு வந்த?
நானும் எவ்வளவு நேரம் தான் பொறுமையா இருக்கிறது. எல்லாரும் உன்னையே குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் கோபத்தில் கத்தினேன். ஆனால் என் மனதிலிருந்து வந்தது தான். இனி நம் பிரச்சனையை நாமே பார்த்துக் கொள்வோம். அவர்கள் நமக்கு உதவ வேண்டாம். வா ஆன்ட்டி வீட்டிற்கே செல்லலாம் கையை நீட்டினான்.
அவனது கையில் அடித்து விட்டு தள்ளி அமர்ந்தாள்.
என்ன? கேட்டான்.
இனி அவங்களுக்கு மட்டுமல்ல,உனக்கும் எனக்கும் கூட எந்த உறவும் வேண்டாம்.
என்ன சொல்ற? பல்லை கடித்துக் கொண்டு கேட்டான்.
நீ உன் வாழ்க்கையை பார். அதான் அந்த மெசேஜ் பொண்ணை பார். ஆன்ட்டியை நான் பார்த்துக் கொள்கிறேன்.
உனக்கு என்ன பைத்தியமா? அந்த கொலைகாரி கிட்ட போய் தனியாக சென்று என்ன செய்ய போகிறாய்?
நான் சொல்றத மட்டும் செய். நீ அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து அர்ஜூன் ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்தாலும் சரி, அந்த பொண்ணோட இருந்தால் கூட ஒ.கே தான்.
அவன் சீற்றத்துடன், விட்டா ரொம்ப பேசிக்கிட்டே போற? நான் அந்த பொண்ணோட போறத விட நீ அர்ஜூனுடன் இருப்பது தான் சரி. நீ அர்ஜூனிடம் சென்று காதலை கூறு. அப்புறம் நான் அந்த பொண்ணை காதலிப்பதை பற்றி யோசிக்கிறேன் என்றான்.
முடியாது. நான் அர்ஜூனிடம் போக மாட்டேன் என்றாள்.
ஆன்ட்டி..நீங்க தான் என் காதலை சேர்த்து வைக்கணும்ன்னு கமலி காலிலே விழுந்து விட்டாள் ஆருத்ரா.
உங்க பையனையும் ஸ்ரீ அக்காவையும் சேர்த்து வைத்தால் எனக்கு ரூட்டு கிளியர் ஆகும் என்றாள்.
என்னோட அர்ஜூனை ஸ்ரீயிடம் மட்டும் விட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார் கமலி.
அட போம்மா. நானே என்னோட ஆளை கரெக்ட் பண்ணிடுவேன். எனக்கு என்னோட அம்மா உதவுவாங்க என்றாள்.
அம்மாவா?..
ஆமாம். அவங்களுக்கு இவங்கள பத்தி சொல்லிட்டேன். நான் எதையும் அம்மாவிடம் மறைக்க மாட்டேன் என்று கமலியை பார்த்துக் கொண்டே,
ஆன்ட்டி, எங்க அம்மா ஒரு விசயம் அடிக்கடி சொல்லுவாங்க. உண்மையான காதலை என்ன தான் பிரிக்க நினைத்தாலும் அவங்க காதலே அவர்களை சேர்த்து விடுமாம்.
கமலி அவளை முறைத்து விட்டு, கொலைகார கும்பலுக்கு இடையே உள்ளவனை தான் காதலிக்கிறாய்? என்று சொல்லிப் பார் தெரியும் என்றார்.
அவங்களிடம் அதையும் சொல்லிட்டேன்.அதற்கு அம்மா, அவனை கண்காணித்துக் கொண்டே இரு.என்ன தான் அவன் கவனமாக இருந்தாலும் அவனால் முடியாத நேரத்தில் நீ உதவ வாய்ப்பு கிடைக்கும். அதற்கு முன் அவன் முன் செல்லாதே! உனக்கும் பிரச்சனையாகி விடும் என்றார்.
என்ன குடும்பம்மா உன்னிது? என்று தலையில் அடித்துக் கொண்டார்.
ஆனாலும் அவள் காதலை பற்றி கூறியது கமலியை சிந்திக்க வைத்தது.
நீ முதல்ல இங்கிருந்து போடா.நான் தனியே இருக்க வேண்டும் கத்தினாள் ஸ்ரீ.
போறேன் அர்ஜூன் அம்மாவை பார்க்க..
வேண்டாம் நிவி.என்னை கோபப்படுத்தாதே!
நீ தான் என்னை கோபப்படுத்துகிறாய்? கண்டிப்பாக பார்க்க தான் போறேன் என்றான்.
ப்ளீஸ் டா, கொஞ்சம் அவங்க நிலையிலிருந்து யோசிடா.
என்ன அவங்க நிலை?
நான் தான் குக்கூ என்று எனக்கு தெரியும். ஆனால் முழுதாக எனக்கு நினைவு திரும்பவில்லை.அவங்க என்னோட சின்ன வயசுல இருந்தே என்னை பற்றி தவறான எண்ணங்கள் தான் பதிந்து இருக்கிறது.
தவறாக என்றால்? நிவாஸ் கேட்க, விரக்தியான புன்னகையுடன் பசங்களுடன் தான் ஒட்டிக் கொண்டிருப்பேனாம் என்று அழ ஆரம்பித்தாள்.
இரு அவங்கள பார்த்துட்டு வாறேன் என்று நிவாஸ் சினத்துடன் எழ, நானே நினைத்தாலும் அவங்க மனதில் உள்ள எண்ணத்தை மாற்ற முடியாது. அப்படி நினைப்பவர்கள் அவங்க பையனை என்னுடன் சேர்த்து வைப்பாங்களா?
அவங்க பையனுக்காக என்னை ஏற்றுக் கொண்டாலும், என்னால் அவங்களுடன் ஒரே குடும்பமாக இருக்க முடியுமா?
அவங்க என்னை பற்றி பேசும் போது தான் என்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. செத்து போயிடலாம் போல இருந்தது.கண்டிப்பா நான் அந்த மாதிரி இருந்திருக்க மாட்டேன். எனக்கு நன்றாகவே தெரியுது.என்னோட அம்மா, அப்பா என்னை அப்படி வளர்க்கலடா என்று நிவாஸ் தோள் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதாள்.
எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்குடா. என்னால எதையும் தாங்கவே முடியலடா.அர்ஜூன் காதல், அவங்க அம்மா பேச்சு அதிகமாக காயப்பட்டு விட்டேன். இதில் இந்த ஆன்ட்டி வேற, என்ன பிளான் பண்றாங்க? எதுக்கு இப்படியெல்லாம பண்றாங்க? கேட்டா சொல்லவே மாட்டிகிறாங்க என்று மேலும் அழுதாள்.நிவாஸ் அமைதியாக அமர்ந்து விட்டான்.
ச்சே.. நீங்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு பொண்ணுக்கிட்ட இப்படியெல்லாம பேசுவீங்க? அருவருத்த குரலில் ஆருத்ரா பேசி விட்டு,
இனி நீங்களே ஒத்துக் கொண்டாலும் அக்கா உங்க பையனை ஏத்துக்க மாட்டாங்க. அவங்க பேசியது கேட்டது தானே!
அர்ஜூன் மட்டும் அவங்க பேசியதை கேட்டிருந்தால் உங்களை முழுதாக வெறுத்திருப்பான்.நான் கூட நீங்க உங்க பையனை அவங்க பிரிச்சிடுவாங்கன்னு தான் பொறாமை என்று தான் நினைத்தேன்.
என்னை பற்றி உனக்கு எப்படி தெரியும்?
அவன் இப்படி இருந்ததற்கு காரணமே நீங்க தான்னு எங்க கல்லூரியில் பேசுனாங்க. அப்படின்னா அக்காவை உங்களுக்கு முன்பே தெரியும்?அவர்களை அழைத்து பேசி அர்ஜூனிடமிருந்து பிரிக்க பார்க்கிறீர்கள் என்று கூறி விட்டு, நீங்க பெரிய பிஸினஸ் வுமன் தான?
உங்க கூட எந்த ஆம்பளையும் பேசியதில்லையா? ஒருவரிடம் கூட நீங்கள் பேசி சிரித்ததில்லையா? அக்காவை பத்தி பேசி இருக்கீங்க? உங்கள சுத்தி நிறைய ஆம்பளைங்க எப்படி உங்களது கம்பெனிக்காக இருந்தார்களோ, அதே போல் ஏன் அக்காவை சுற்றி நண்பர்கள் இருக்கக் கூடாது என்று பட்டென கேட்டு விட்டாள்.
அவர் கண்களில் நீர் வந்து கொண்டிருக்க, உனக்கு எவ்வளவு தைரியம்? என்னை பற்றி இப்படி பேசுற?கையை ஓங்கினார். ஆருத்ரா அவர்களது கையை தடுத்து,நான் ஒன்றும் ஸ்ரீ இல்லை. உங்க இஷ்டத்துக்கு காயப்படுத்த, நீங்க அடிச்சா நானும் திருப்பி அடிப்பேன் என்று சொல்லி விட்டு,இதுக்கு மேல உங்கள மாதிரி கேவலமானவங்க பக்கத்துல கூட நான் இருக்க மாட்டேன் என்று கூறி விட்டு அருவருப்பான பார்வை ஒன்றை கமலி மீது வீசி விட்டு சென்றாள்.
அவர் அவளே பார்த்துக் கொண்டு, மீண்டும் ஸ்ரீ நிவாஸை முறைத்துக் கொண்டிருந்தார்.சரி, வா போகலாம் என்றான் நிவாஸ்.
என்னை கொஞ்சம் தனியே விடுகிறாயா?ப்ளீஸ்டா.
இந்த நேரத்தில் எங்கே போவாய்?
எனக்கு ஒன்றும் ஆகாது. நீ வீட்டிற்கு செல். தருணை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
ஸ்ரீ வா என்றான்.
நான் தான் சொல்றேன்ல என்றாள்.
காலையில் வந்து விடுவாயா? கேட்டான்.
வந்து விடுவேன் என்றாள். ஆனால் யாருக்கும் தெரியக் கூடாது.
ஓ.கே. நானும் அங்கு செல்வதாக இல்லை என்று அவன் கிளம்ப, ஸ்ரீ மீண்டும் நடந்தாள். பயங்கர கோபத்துடன் இருந்தாலும் அதை கட்டுப்படுத்திக் கொண்டு கமலியும் அவள் பின்னே சென்றார்.
அவள் ஓர் குடிசை அருகே அமர்ந்திருக்க ஒரு பாட்டி, இந்த நேரத்தில் யாரு? கேட்டுக் கொண்டே வெளியே வந்தார்.
கண்ணை துடைத்துக் கொண்டு, பாட்டி நான் இன்று இரவு மட்டும் உன் வீட்டில் இருந்து கொள்ளவா? தயக்கத்துடன் கேட்டாள். அவர் அவளருகே வந்து, ஸ்ரீயை உற்று பார்த்தாள்.
ஏதும் பிரச்சனையாம்மா?அழுதது போல தெரியுதும்மா. எனக்கு உங்களை பார்த்தால் என்னுடைய பாட்டி நினைவு தான் வருகிறது ஸ்ரீ கூறினாள்.
என்ன சொல்றா அவள்? அவளுக்கேது பாட்டி? சிந்தித்தார் சினத்தை ஒதுக்கி வைத்து விட்டு,
உன் பாட்டிக்கு என்ன ஆச்சும்மா?
அய்யோ பாட்டிம்மா! அவங்க நல்லா இருக்காங்க. ஊருல இருக்காங்க.எனக்கு கஷ்டமான சமயத்தில் அவங்களும், அவங்க பெயரனும் தான் துணைக்கு இருப்பார்கள். ரொம்ப நல்ல பாட்டி. நாங்கள் இருவரும் செல்லமாக சண்டை போட்டுக் கொண்டே இருப்போம். அவங்கள பார்க்கணும் போல் உள்ளது என்று கண் கலங்கினாள்.
என்னால உங்க பாட்டி மாதிரிலாம் சண்டை போட முடியாதும்மா. நான் தனியே தான் இருக்கிறேன். நீ தாராளமாக இங்கேயே இரும்மா என்றார்.
காலை சென்று விடுவேன். இரவு மட்டும் தனியே இருக்க பயமா இருக்கு.
வீட்ல சண்டை போட்டு வந்துட்டியாம்மா?அவள் அமைதியாக இருந்தாள்.
இப்பெல்லாம் பொண்ணுங்களுக்கு ரொம்ப தைரியம் வந்துருச்சு வீட்டை விட்டு வெளியே வருவதற்கு என்று பேசினார்.
வாம்மா..என்று ஸ்ரீயை அழைத்து உள்ளே சென்றார் அவர்.
இவள் என்ன? என்னுடைய அம்மாவை பற்றி பேசுவது போல் தெரிகிறது? ஆனால் அந்த பையனிடம் நினைவு ஏதுமில்லை என்று தானே சொன்னாள் என்று சிந்தித்தவாறு வீட்டிற்கு சென்றார்.அவருக்கு செத்திடலாம் போல இருக்கு என்று நிவாஸிடம் அழுதது.கொலைகாரி என்று கயலை அவர்கள் கூறியது.அர்ஜூன் ஸ்ரீயை பொண்டாட்டியாக பார்க்கிறேன் என்று கூறியது,ஆருத்ரா பேசியது என்று வார்த்தை இம்சிக்க அவர் தூங்காமல் ஸ்ரீயை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீ தாரிகாவிற்கு, நான் பாதுகாப்பாக தான் இருக்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் மெசேஜ் அனுப்பி விட்டு தூங்கினாள்.
அர்ஜூனிற்கு போன் செய்து தாரிகா ஸ்ரீயை பற்றி கூறினாள். எனக்கு சரியாகபடவில்லை.நான் தருணை பார்த்து விட்டு வருகிறேன் என்று போனை வைத்து விட்டு,மருத்துவமனைக்குள் நுழைந்தான் அர்ஜூன்.
“சொல்ல முடியலையே என் காதலை!
சொல்ல முடியவில்லையே என் காதலை!
காதலா! என் காதலா!
நான் அருகினில் இருக்க
காதல் எங்கோ தொலைவானதே!
உன் கழுகு பார்வை என் முன்னே
தோன்றி உனை நினைய வைக்கிறதே!
மனமில்லாது பிரிகிறேனடா உனை விட்டு
விடை பெறுகிறேன் என் உயிரை விட்டு
எங்கிருந்தாலும் நான் உன்னுடைய
ஏஞ்சலாகவே! வாழ்வேனடா!”