ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 74.

“செல்லக்குட்டி உன்ன காண சிலையாக நிக்கிறேன் வாடி…”பாடல் ஒலிக்க, அது வாசற்பக்கம் கேட்க, அனைவரும் அங்கே கவனித்தனர்.

அர்ஜூன் கூலிங் கிளாஸூடன் உள்ளே வந்து கொண்டே, போனை எடுத்து, ஓ.கே சார் என்று வைத்து விட்டு,சோபாவில் அமர்ந்தான்.

அடியாட்கள்,அவனருகே வர, கொஞ்ச நேரம்டா.. நடப்பது முழுதாக முடியட்டுமே! என்றான்.

அர்ஜூன்,நீ என்ன செய்ற? இங்கிருந்து போ என்றார் அம்மா.

கையிலிருந்து ஒரு போனை எடுத்து ஆட்டிக் காட்டினான் அம்மாவிடம்.

ஹேய், அர்ஜூன்.அவருக்கு ஒன்றுமில்லை தானே! எங்கே இருக்கார்? ஏதும் பிரச்சனையில்லைல இந்த பொறுக்கி பய தான் அவரை கத்தியால் குத்திட்டான்.அவனை விடாத தாரிம்மா. அவன் உன்னோட அப்பாவை கத்தியால் குத்திட்டான்.

அம்மா,கூல்மா அர்ஜூன் அவரிடம் கண்ணை காட்டினான்.

என்னோட பையன விட சொல்லுடி என்று ஸ்ரீயின் தாடையை பிடித்தாள் சுமதி. அர்ஜூன் சட்டென எழுந்தான். அதற்குள் ஸ்ரீ சுமதி கன்னத்திலே அறை விட்டு பிடித்து தள்ளி விட்டு, கவின் கட்டை அவிழ்க, அவர்களது ஆட்கள் அவளை சூழ்ந்தனர்.

அர்ஜூன், ஸ்ரீ, கவின் ஒருவரை ஒருவர் பார்த்து அவர்களது ஆட்களை காலி செய்ய,தாரிகா குமாரன் கையில் கீறலை போட்டு பாட்டிலை கீழே விட்டாள். அவன் அவளை பிடித்துக் கொண்டான். குமாரன் தாரிகாவை இழுத்து அறை நோக்கி செல்ல, கவின் அங்கிருந்த சோபாவை தாண்டி வேகமாக குமாரனை எட்டி உதைத்தான். அவன் கவிழ்ந்து விழுந்த சமயத்தில் தாரிகாவை ஸ்ரீ அருகே இழுத்துச் சென்றான்.ஸ்ரீ நிவாஸையும் அம்மாவையும் விடுவிக்க,

அம்மா, அவருக்கு என்ன ஆச்சு? என்று தாரிகா அம்மாவிடம் கேட்டாள்.

தெரியலம்மா என்றார் கண்ணீருடன். உனக்கு ஒன்றுமில்லை தானே! அம்மா அவளிடம் வினவினார்.

குமாரனை அர்ஜூன், கவின், நிவாஸ் சூழ்ந்து அடித்து கட்டினர். அவனது அம்மாவை ஸ்ரீயே பிடித்து கட்டி வைத்தாள்.

அர்ஜூன் வந்து அமர்ந்து, என்னை பெத்தவரே வாருங்கள் என்று சத்தமிட்டான். அனைவரும் அதிர்ந்து அர்ஜூனை பார்த்தனர்.

அங்கே வந்தார் வீல் சேரில் மோகன். அர்ஜூன் அம்மா காதலித்தது மோகனை தான். அதனை தான் அன்றே அங்கிள் சொல்ல வந்திருப்பார். அர்ஜூன் தான் கோபமாக இருந்தானே!

அர்ஜூனின் அப்பாவும் மோகன் தான். திகைத்த அஞ்சனாம்மா..என்ன சொல்றீங்க? கேட்டார்.

அர்ஜூன் தனக்கும் மகன் தான் என்று சந்தோசப்படவா? இல்லை கமலியிடம் பேசியதை நினைத்து வருந்துவதா? என்று புரியாமலிருந்தார். ஆனால் அர்ஜூனுக்கு தான் அவ்வளவு சந்தோசம். சும்மா தானே அவளை மிரட்டினேன். அர்ஜூன் உண்மையிலே எனக்கும் மகனா? என்று தவித்து தான் போனார்.

அர்ஜூன் சிறு பிள்ளை போல் ஓடிவந்து அஞ்சும்மா..என்று கட்டிக் கொண்டான். அவரும் மகிழ்ந்து தான் போனார்.

ஸ்ரீக்கும் தெரியுமே? கமலியிடம் பேசினார் என்று. அம்மா முகத்தை வைத்தே ஏதோ தனக்காக என்று பேசி இருக்கிறார் என்று புரிந்தது ஸ்ரீக்கு.

அர்ஜூன் மருத்துவமனை சென்று மோகனிடம் பேசி, அனைத்தையும் அறிந்து கொண்டு, போலீசுக்கும் விசயத்தை கூறி இருப்பான். அதனால் அவர்களும் வந்திருப்பர். தருணிற்கும் நடந்ததை கூறி இருப்பான். அவர்கள் தாரிகா வீட்டில் இருப்பார்கள். மோகன் கம்பிளைண்ட் கொடுத்து இருப்பார். சுமதி,குமாரன் அவர்களது ஆட்களை போலீஸ் அரெஸ்ட் செய்து அழைத்து சென்றனர். மோகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தாரிகாவும் அம்மாவும் அங்கு சென்றனர்.

அர்ஜூன் மோகனை இப்பொழுதும் ஏற்பதாக இல்லை.அதனால் அவர்களுடன் செல்லவில்லை. ஸ்ரீ, நிவாஸ், கவின், அர்ஜூன் தாரிகா வீட்டிற்கு வந்தனர்.

அர்ஜூனும் மற்றவர்களும் வர, மீண்டும் இதயாவை அமர வைத்தனர். யாசுவும் அப்பொழுது தான் போன் பேசி விட்டு உள்ளே வந்தாள். இவ்வளவு நேரம் போன் தான் பேசினாயா? இன்பா கேட்டாள்.

அவள் அசடு வழிய மற்றவர்கள் சிரித்தனர். இதயாவுடன் அனைவரும் வீட்டிற்கு வந்தனர். பக்கத்து வீட்டு ஆன்ட்டியை வைத்து இரத்தக்கறையை சுத்தம் செய்திருப்பான் அர்ஜூன். அதனால் அனைவரும் எப்பொழுதும் போல் உள்ளே சென்றனர். இதயாவை சோபாவில் படுக்க வைத்து விட்டு,

உனக்கு என்னடி ஆச்சு? கேட்டாள் இன்பா.

அக்கா,நான் இன்று சாப்பிடவில்லை காலையிலிருந்தே என்றாள் இதயா.

அம்மா சாப்பாடு செய்தார்கள் தானே! இன்பா கேட்க,இதயா தருணை பார்த்து விட்டு, தயங்கிய படி அபியை பார்த்தாள்.

அக்கா, எனக்கு பசிக்கவில்லை அதான் சாப்பிடவில்லை. கேண்டியனில் இன்று தானே கடைசி வேலை அதிகமா இருந்தது.அதனால் தான் மயக்கம் வந்திருக்கும் என்றாள்.

அபிக்கு புரிந்து விட்டது. இதயாகாதலை நிரூபிக்கிறேன் என்று தான் சாப்பிடாமல் இருந்திருக்கிறாள் என்று. அவன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

தருண் அவளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வா..அவளுக்கு என்ன பிடிக்கும் என்று உங்களுக்கு தானே தெரியும்.நீங்களும் போங்கள்என்று இன்பாவிடம் கூறினான்.

இவளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அபி சாதாரணமாக பேசினாலும், அவனை பார்த்தாலே தெரிந்தது அவன் கோபமாக இருப்பது தருணிற்கு. அவன் இதயாவை பார்க்க, அவள் அபியை பார்த்து கெஞ்சுவது போல் தெரிந்தது. இன்பா தான் எதையும் கவனிக்கவில்லை.யாசுவிற்கு மாதவிடமிருந்து போன் வந்தது வெளியே சென்று விட்டாள்

இதயாவை பார்த்துக் கொண்டே தருண் செல்ல, இன்பா அபியை பார்த்தவாறு சென்றாள். அதிக உரிமை எடுத்துக் கொள்கிறானே என்று.

அவர்கள் சென்றவுடன், நீ என்ன செய்கிறாய் என்று உனக்கு புரிகிறதா? அபி இதயாவிடம் கோபமாக கேட்டான்.

என்னால் அவனை போல் இருக்க முடிகிறதா? என்று முயன்று பார்க்கிறேன்.

உன்னால முடியாது. அவனோட அம்மாவை பார்த்துக்கணும். அவனுடைய தங்கையை படிக்க வைக்கணும்.அதற்கு அவன் பார்க்க வேண்டும். சாப்பாடு கூட அவர்களாக தான் செய்து கொள்வார்கள். சிக்கமாக இருக்கணும். விரும்பியதை ஹோட்டலில் சாப்பிட முடியாது. சினிமா,அவிட்டிங் எதுவும் முடியாது. அவன் ஃபேமிலியை பற்றி தான் யோசிப்பான். அவனே நினைத்தாலும் உன்னை தனியாக பார்த்துக் கொள்ள முடியாது. அவனுடன் தனியாக நேரம் செலவழிக்க முடியாது.இதயா வேண்டாம். விட்டுரு என்றான் அபி.

நீ எதற்கு என் மேல் இவ்வளவு கேர் பண்ற? அக்காவுக்காக வா? கேட்டாள்.

உன் அக்காவுக்காக என்பதை விட,அவங்க ஃபேமிலி என்னுடையது போல் தான் என்றான்.

இதயா சந்தோசமாக, அக்கா..உனக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே!

மெதுவாக சொல்லட்டும். பதில் கூறவில்லை என்பதற்காக அப்படியே உங்களை என்னால் விட முடியாது. எனக்கு உங்க அம்மா பேசியது நினைவிற்கு வந்து கொண்டே இருக்கிறது. ரெண்டு பொண்ணுங்கள வைச்சு என்று பயப்படுகிறார்கள். அது கஷ்டமாக இருந்தது. நீங்களே வேண்டாம் என்றாலும் நான் உதவ தான் செய்வேன்.

அபி,உனக்கு கண்டிப்பா அக்கா ஓ.கே சொல்வா பாரு.

எப்படி உறுதியா சொல்ற?

அது அப்படி தான்.ப்ளீஸ் அபி, என்னால தருணை நினைக்காமல் இருக்கவே முடியல. கஷ்டமா இருக்கு. என்னால் முடியும். நான் என் காதலை உனக்கு புரிய வைக்கிறேன்.

எப்படி? இப்படி மயங்கியா?

இல்ல அபி.உண்மையாகவே வேலை அதிகமா தான் இருந்தது. அதனால் தான் சோர்வடைந்து விட்டேன் என்றாள்.

நீ சொன்ன மாதிரி, அவனுடன் வெளியே செல்ல, சாப்பாடு எதுவும் வேண்டாம். அவனை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்றாள் உருக்கமுடன்.

ஏய், நீ ரொம்ப சீரியசா இருக்கிற போல.அவன் ஒத்துக் கொள்வானா? கேட்டான் அபி.

நீ சொல்லு அபி என்றாள்.

இவ்வளவு உறுதியா நீ இருக்கும் போது முயற்சி செய்யலாம். நான் அவன் செய்வதனைத்தையும் கூறுகிறேன் என்றான்.

தேங்க்ஸ் அபி. நான் அவனது தங்கைக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்திருக்கிறேன். அவள் மெலிவாக தான் தெரிந்தாள். அன்றே வீடியோ காலில் பார்த்தேன். இன்னும் இரண்டு நாட்களில் அவளுக்கு சென்று விடும்.பின் போன் செய்து அவனுக்கு தெரியாதவாறு பேசிக் கொள்கிறேன் எனும் போதே இருவரும் வந்தனர்.

இன்பாவும் தருணும் அவர்களை ஒருவாறு பார்த்தனர். அவன் தள்ளி தான் அமர்ந்திருந்தான் இருந்தும் அவர்களுக்கு ஏதோ தோன்றியது போல்.

இன்பா சாப்பாட்டை எடுத்து இதயாவிற்கு ஊட்டினாள். அக்கா, நாம வீட்டுக்கு போவோமா? ரொம்ப சோர்வா இருக்கு அக்கா என்றாள். அவளுக்கு சாப்பாட்டை கொடுத்து விட்டு, இதயா மீண்டும் தடுமாறிக் கொண்டே எழுந்தாள்.

அர்ஜூனும் மற்றவர்களும் வர, மீண்டும் இதயாவை அமர வைத்தனர். யாசுவும் அப்பொழுது தான் போன் பேசி விட்டு உள்ளே வந்தாள். இவ்வளவு நேரம் போன் தான் பேசினாயா? இன்பா கேட்டாள்.அவள் அசடு வழிய, மற்றவர்கள் சிரித்தனர்.

தருண் இதயாவை பார்த்துக் கொண்டிருந்தான். வெளியிலிருந்து வந்த அர்ஜூன் தருணை பார்த்தவுடன் ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டு, நான் ஹாப்பியா இருக்கேன்டா என்று கத்தினான்.

அர்ஜூன் தருணை இறுக்க,அவனது தோளில் வலிக்க இருந்தாலும் அவன் புன்னகையுடன், உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்குடா என்றான்.

இதயா அர்ஜூனை மெதுவாக அழைத்தாள்.நீயும் இங்கே தான் இருக்கிறாயா? ஏதும் பிரச்சனையா? அர்ஜூன் தருணை பார்த்து விட்டு அவளருகே சென்றான்.

அர்ஜூன் அவனுக்கு..என்று இதயா சொல்ல வர, வேகமாக இதயா அருகே வந்து,அவளது வாயில் தருண் கையை வைத்து, அவளுக்கு முகத்தினருகே வந்து சொல்லாத..என்றான் மெதுவாக.

அதற்குள் இன்பா..தருணுக்கு தோளில் அடிபட்டதை கூறி விட,..

ஏன்டா, என்ன ஆச்சு? என்று அர்ஜூனும் அபியும் அவனருகே வந்து, சர்ட்டை கழற்று என்றனர்.

என்னடா பண்றீங்க? தருண் விலக, அர்ஜூன் அவனை தனியே அழைத்து சென்றான்.கவினும் அபியும் அவர்களுடன் சென்றனர்.அவனது காயத்தை பார்த்து விட்டு கேட்டனர்.

புவி பின்னே ஒருவன் சுற்றினான். அந்த பிரச்சனையில் பட்ட அடி தான் தருண் சொல்ல,நீ சொல்லவே மாட்டாயா? அர்ஜூன் கேட்டான்.

ஆமா,இவரு சொல்லிட்டு தான் எல்லாமே செய்றாரு என்று கோபமாக அபி கூறினான்.

எனக்கு தான் பழக்கமே இல்லையே அர்ஜூன் சொன்னான்.தருண் நீ தான் எதுவாக இருந்தாலும் சொல்வாயே! என்று கேட்டான் அர்ஜூன்.

அது அப்போ..

இப்ப என்ன ஆச்சுடா?

நாம தான் ரொம்ப நாளா பார்க்கவே இல்லை. என்னோட கஷ்டத்தை நான் சொல்லி உன்னை வருத்தப்பட வைக்க வேண்டாம்னு நினைத்தேன்.

அதெல்லாம் இல்லை. நீ சொல்லி தான் ஆகணும் என்றான்.

சரிடா என்றான்.

அர்ஜூன் உன்னோட சந்தோசத்துக்கு காரணம் என்னடா? அபி கேட்டான்.

வாங்க..உள்ளே செல்வோம் என்று கூறி விட்டு, வீட்டிற்கு செல்லும் முன் தருண் நாம் ஹாஸ்பிட்டல் போகணும் சொல்லிய படி உள்ளே வந்தான்.

ஏற்கனவே  பார்த்துட்டேன்டா. ஒன் வீக்ல சரியாகிடும் என்றான் தருண்.

பரவாயில்லை. கண்டிப்பா போறோம் என்றான் அர்ஜூன்.

இன்பா அர்ஜூனிடம், தருணுக்கு காயம் பெரியதா? என்று கேட்டாள்.

மருத்துவரை பார்த்தால் தான் தெரியும். அவன் சரியா எதையும் சொல்ல மாட்டிக்கிறான்.

இதயா எங்கே? அபி கேட்டான்.

அவள் ஸ்ரீயுடன் அறையில் இருக்கிறாள் இன்பா கூற, ஸ்ரீயுடனா? அபி கேட்டான்.

இதயாவை பார்த்த ஸ்ரீ, நீ ஏன் சோர்வாக இருக்கிறாய்?

அவள் பயந்து பின் நகர, இன்பா சொன்னதை கேட்ட ஸ்ரீ, இதயாவை கையை பிடித்து அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றிருப்பாள். தருண் கவனம் அந்த அறை நோக்கி செல்வதை அர்ஜூன், இன்பா பார்த்தனர்.

தருணிற்கு இதயாவை பிடித்திருக்கிறதோ? மனதினுள் யோசித்தபடி நின்றாள் இன்பா.

என்ன விசயம்டா சந்தோசமா இருக்க? யாசு கேட்டாள்.

அறையிலிருந்து ஸ்ரீயும் இதயாவும் வந்தனர். கொஞ்சம் ஓ.கே வா இருந்தாள் இதயா. அவளாகவே சோபாவில் வந்து அமர்ந்தாள்.ஸ்ரீயும் அவளருகே உட்கார்ந்தாள்.

தாரிகா என்னுடைய தங்கை தான் என்றான்.

அது தெரிந்தது தானே! என்றாள் யாசு.

அவள் உண்மையாவே என்னுடைய தங்கை என்று மகிழ்ச்சியில் ஆர்பரித்தான்.

என்னடா சொல்ற?

அவளோட அப்பாவும் என்னோட அப்பாவும் ஒருவர் தான்.

உனக்கு கஷ்டமா இல்லையா? இப்படி சந்தோசப்படுற?

இதுல என்ன கஷ்டம்? அந்த ஆளையெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. ஆனால் எனக்கு அஞ்சும்மாவும் தாரிகாவும் என்னுடனே இருப்பாங்க என்றான் மகிழ்ச்சியுடன்.

ஸ்ரீயின் முகம் மாறியது. நீ இப்படி சந்தோசப்படுறியே அர்ஜூன். நான் அவர்களுடன் முன் போல் பேச முடியாதே! வருத்தமுடன் கண்கலங்கிய படி அவனை பார்த்தாள். அதை பார்த்தனர் தருணும் அபியும்.

நாளை உன்னோட அம்மா என்ன சொல்ல போறாங்களோ? அவங்களுடனும் பேச விட மாட்டாங்களோ என்று பயமாக உள்ளதுடா.. மனதினுள் நினைத்த அவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் இதயா மீது பட, அவள் திரும்பி ஸ்ரீயை பார்த்தாள்.

ஸ்ரீ? மெதுவாக அழைத்தாள்.

கண்ணீரை உள்ளிழுத்து, கஷ்டப்பட்டு புன்னகைத்து உனக்கு எதுவும் வேண்டுமா? கேட்டாள். அது பக்கத்தில் இருந்த இதயா உணர்ந்தாள். ஸ்ரீயை பார்த்து விட்டு அர்ஜூனை பார்த்தாள்.

அவன் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தான். ஏதோ பிரச்சனை? என்று இதயா ஸ்ரீயின் கையை அழுத்தமாக பிடித்தாள். ஸ்ரீயால் முடியாமல்,எனக்கு கொஞ்சம் வேலை உள்ளது என்று அவள் வேகமாக அறைக்கு சென்று கதவை தாழிட்டு அழுதாள்.

அவள் சென்றவுடன் இதயா என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தாள். அபியும் தருணும் இதயாவிற்கும் புரிந்ததை அறிந்து அவளருகே சென்று அமர்ந்தனர்.

ஸ்ரீ யாரிடமும் ஏதும் சொல்லவே மாட்டாள் என்றான் அபி.

தருண் அதற்கு அவள் கூறுவாள். ஆனால் நம்மிடமல்ல நிவாஸிடம் என்றான். அவனும் இங்கு தான் இருக்கிறான். அவன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றான்.

இதயா இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.ஏன்டா, நீங்களும் அவளை கவனித்தீர்களா? கேட்டாள்.

எங்க வேலையே அதானே! என்றனர் ஒருவாறு.

என்ன? அதிர்ந்தாள்.

ஏய் இதயா, என்ன ஆச்சு? அர்ஜூன் கேட்க, கவினும் நிவாஸும் அர்ஜூன் பேசுவதையே பார்த்தவர்கள்,அவள் பக்கம் திரும்பினர்.

          “சிட்டுக்குருவி கூட்டுள்ளே

             புதிய பறவை குடிவர

           கிளம்பியதொறு சிக்கல்..

         சிக்கலின் அதிபதி வேலையை

              காட்ட குலைந்தது

                 அக்கூடு..

           குருவி மனமோ மூழ்கியது

        அதனுள்ளே..எழாமல் தவித்தும்

            மீள முடியவில்லையே!

        முடிவாக காதலின் ஆற்றலே

         ஒன்றிணைத்து..அக்கூட்டை

             பலப்படுத்தியதே!”