ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான எபிசோடு 73

பவியின் வீட்டை அடைந்தனர் அகில், நித்தி, பவி.அவள் கீழிறங்கி,ரொம்ப தேங்க்ஸ் அகில். சரியான நேரத்தில் உதவினாய்.

நித்தி, நீ என்னிடம் சொன்னேல! என்னை அனைவரும் பிடிக்கும் என்று..லெட் பீ ப்ரெண்ட்ஸ் நித்தி என்றாள்.

நித்தி புன்னகையுடன், யா அஃப் கோர்ஸ் என்று பவியை அணைத்தாள்.

அகில் பவியிடம், எனக்கு தெரிந்து அவன் நாளையே கூட வந்து விடுவான். கவனமாக இரு. ஏதும் பிரச்சனை என்றால் என்னை மட்டும் அழைக்காதே! என்றான்.அவள் முகம் வாடியது.

நீ என்னிடம் தாராளமாக சொல்லலாம் நித்தி சொல்ல, பவி அவளை பார்த்து புன்னகையுடன் கேட்டை திறந்தாள். பஞ்சு போன்ற அழகாக வெள்ளை நிற நாய்க்குட்டு பவி மீது தாவியது.

ஜூலி..என்ன ஆச்சு? என்று அதை கொஞ்சிக் கொண்டே  நித்தியிடம் காட்ட,

வாவ்,குட்டியா க்யூட்டா இருக்கு என்று பவி அருகே வந்து நாய்க்குட்டியை கொஞ்சிக் கொண்டிருந்தாள் நித்தி.

நித்தி, வா..நேரமாகிறது. அந்த லூசு அர்ஜூன் என்ன செய்றான்னு தெரியல..நீ என்னன்ன..நாயை கொஞ்சிக் கொண்டு இருக்கிறாய்? என்று அகில் சத்தமிட

நாய்க்குட்டி இறங்கி..அகிலை பார்த்து குரைத்தது.

ஜூலி..வேண்டாம் என்று விட்டு, அகிலை பார்த்து பவி, அவளுக்கு அப்படி சொன்னா பிடிக்காது. ஜூலின்னு கூப்பிடு என்றாள்.

இது நாய் தான? எப்படி கூப்பிட்டா என்ன?மீண்டும் ஜூலி குரைத்தது.

அகில் சும்மா இருடா. ஜூலி எவ்வளவு க்யூட்டா இருக்கா.நீ அவளை கஷ்டப்படுத்திட்ட. வா, ஜூலி நாம போவோம் என்று கண்கலங்கிக் கொண்டே உள்ளே நகர்ந்தாள் பவி.

நித்தி, இவள் என்ன பைத்தியமா? இதுக்கெல்லாம் கண்ணை கசக்கிக் கொண்டு இருக்கிறாள்.

ஏன்டா? அந்த பொண்ணுக்கு ஜூலி முக்கியமா இருக்கலாம்.நீ எப்படி இவளிடம் பழகினாய்? நித்தி அகிலிடம் கேட்டாள்.

நான் எங்கே பழகினேன்? அவள் நம் இசைக்குழுவிற்கு அடிமையாம்.என்னை பிடிக்குமாம்.ஆட்டோகிராப் வாங்குகிறேன் என்று பார்க்கும் போதெல்லாம் கேட்பாள்.அப்படி தான் பேசினோம் என்றான்.

உன்னை பிடிக்குமா? நித்தி கேட்டாள்.

ஓய்..ரொம்ப யோசிக்காத.அவள் மற்ற பொண்ணுங்க மாதிரி தான்.நம் புகழுக்காக தான் பிடித்திருக்கும் என்றான்.

கேட்டை திறந்த பவி,அவளது பேக் ஜிப்பை திறந்து, அவன் கொடுத்த கையெழுத்து அனைத்தையும் அகில் மூஞ்சியிலே தூக்கி எறிந்தாள்.பின்  அவனிடம்,நான் உன் பின்னே சுற்றியதுமில்லை. அதுவும் புகழாம் புகழ். அதுவும் எனக்கு பிடிக்காது. மூஞ்சிய பாரு.பெரிய மன்மதன்னு நினைப்பு என்று திட்டினாள். ஜூலியும் அகிலை பார்த்து குரைக்க,

ஷ்..ஜூலி போதும் என்றவள்.இனி உனை பார்க்க கூட மாட்டேன். நீ யாரோ தான். உன்னையும் ப்ரெண்டாக்கிகலாம்னு  நினைச்சேன். இடியட்..என்று அவள் உள்ளே செல்ல,

பவி, நான்… என்று நித்தி கேட்க, நாம ப்ரெண்ட்ஸ் தான். நாளைக்கு பேசுவோம் நித்தி என்று சென்றாள்.

அகில் அசையாது இருக்க, அவன் கையெழுத்திட்டிருந்த காதத்தின் பின் ஏதோ எழுதி இருந்தது.நித்தி அதை படித்து சிரித்தாள்.

அவன் வாங்கி பார்த்தான். அதில்..அகில், நீ யாரையோ லவ் பண்றேல.அந்த பொண்ணு உன்னுடைய இந்த பாடலை கேட்டால் ரொம்ப சந்தோசப்படுவாள். நீ சோ க்யூட் டா..என்றிருந்தது.

மற்றதையும் எடுத்து பார்த்தனர்.அதிலும் எழுதி வைத்திருந்தாள். அதில் ஒன்றில் ஹார்ட் சிம்பள் போட்டிருந்தது. அதை இருவரும் எடுத்து பார்க்க, அவன் கண்ணாடியுடன் இருப்பதை போன்று போட்டோவுடன்..இது தான் டா ரொம்ப அழகா இருக்கும் என்று எழுதி இருந்தது.

அவன் புன்னகையுடன் பார்த்தான்.என்னடா இது? லவ்வா? என்ன? நித்தி கேட்டாள்.

பைத்தியமா நீ? வினயை லவ் பண்ண என்னிடம் ஐடியா எல்லாம் கேட்டிருக்கிறாள்? காதலித்தால் அதெல்லாம் கேட்க முடியாது. வா நாம கிளம்பலாம் என்று அந்த காகிதத்தை எடுத்து வைத்துக் கொண்டான்.

எதுக்கு எடுத்து வைக்கிற? அவ..நல்லா எழுதி இருக்கா. அதான் என்னலாம் எழுதி இருக்கான்னு பார்க்க தான் எடுத்தேன் கூற, சரி தான் கிளம்பு என்றாள் அவனை பார்த்து மனதினுள் சிரித்தவாறு.

நித்தியை விட்டு கிளம்பிய அபியின் பின் யாசுவும், தருணுடன் இதயாவும்,இன்பாவும் இருக்க, வண்டியில் சென்று கொண்டே பேசினார்கள்.

நிவாஸ் எங்கே? யாசு கேட்டாள். அவனும் விட்டவுடன் கிளம்பி விட்டான். காரணம் தெரியவில்லை. ஆனால் அவன் மெசேஜ் பண்ணான்  என்றான் அபி.

இதயா தருண் பின் தான் அவனது தோளில் கை வைத்து தான் அமர்ந்திருப்பாள். திடீரென தருண் தோளை அழுந்த பற்றி விடுவித்தாள். மீண்டும் அவள் அவ்வாறே செய்ய, சட்டென பைக்கை நிறுத்தினான்.

அபி அவனை பார்த்து நிறுத்த,அழுத்தமாக பிடித்த பிடியை விடாமல் அவன் முதுகிலே சரிந்தாள் இதயா. பின் தான் இன்பாவும் அவளை கவனித்தாள்.

ஏய்..இதயா, என்னடி ஆச்சு உனக்கு? என்று பதறினாள்.

இன்பா வண்டியிலிருந்து இறங்கி இதயாவை பற்றி பதட்டத்துடன் அவள் பக்கம் இழுக்க, தருண் இன்பாவை விலக்கி விட்டு இதயாவை தூக்கி இன்பா அருகே விட, இதயா இன்பா மடியிலே விழுந்தாள்.

இன்பா அவளது கன்னத்தில் அடித்துக் கொண்டிருக்க, யாசுவும் இதயாவை தட்டி எழுப்ப முயன்றாள்.அவள் எழவில்லை. அபி அவனது பைக்கில் இருந்த தண்ணீரை எடுத்து,இதயா மீது தெளித்தான். இதயா தட்டி தடுமாறி எழுந்து நின்றாள் சோர்வாக.

இன்பா எழுந்து, நீ ஓ.கே தானே என்றவுடன் தண்ணீர் கேட்டாள் இதயா. அவள் குடித்தவுடன், ஏன்டி திடீரென மயங்கி விட்டாய்?

அக்கா..என்று தயங்கினாள் நிற்க முடியாமல்.

வாங்க..உங்க வீட்ல நான் விடுகிறேன் தருண் சொல்ல, நான் தாரிகாவையும் பார்க்கணும் என் யாழுவின் தங்கை ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள். நான் எப்படி வீட்டிற்கு செல்ல முடியும்?

சரி, வா..உன்னை மட்டும் விடுகிறேன் என்றான் தருண்.

இல்லை. எனக்கு ஏதோ என்று அம்மா பயப்படுவார்கள்.

அதற்கு இப்படியே அங்கே வரப்போகிறாயா? அங்கு என்ன நிலவரமென்றே தெரியவில்லை கோபமாக தருண் கூறினான்.

அவன் கூறுவது சரி தான் என்றாள் இன்பா.

இல்லை.நான் அக்காவுடன் தான் இருப்பேன் என்றாள் பிடிவாதமாக.

இங்கே ஏதும் பேச வேண்டாம். இதயாவும் நம்முடன் வரட்டும் அபி கூற, தருண் அவளை முறைத்தான்.அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

அர்ஜூன் இரத்தக்கறையை பார்த்து அதிர்ந்து இருக்க, பக்கத்து வீட்டம்மா அர்ஜூனை பார்த்து, உன்னை பத்தி அஞ்சனா சொன்னா? அன்னிக்கி நீங்க இருந்த போது கூட ஒருவன் வந்து அம்மாவையும் பிள்ளையையும் தொந்தரவு செய்தார்களே! அவன் வந்து தாரிகாவை உடனே கிளம்பி வரச் சொல்லு சத்தமிட்டான் அஞ்சனாவிடம்.

அவள் முடியாது…முடியாது..என்று கூறவே கத்தியை எடுத்து விட்டான். எங்களுக்கு அவனை பார்த்தாலே பயமாக இருந்தது. வெளியேயிருந்து நடப்பதை கவனித்து கொண்டிருந்தோம்.அவன் கத்தியை எடுத்து அவளை குத்தும் முன் ஒருவன் உள்ளே வந்து அவன் குத்தை வாங்கிக் கொண்டு, அவர்களிடம் இனி அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சத்தம் போட்டார். இது கூட அவருடைய இரத்தம் தான்.

அஞ்சனா அவரை பார்த்து உறைந்து நின்றாள். பின் அவரை பிடித்து அழுது கொண்டிருந்தாள்.அவளது கணவனாக இருப்பான் என்று நினைக்கிறேன். அவனை அப்படியே விட்டு, அஞ்சனாவை இங்கிருந்து ஜூப்பில் ஆட்களுடன் இழுத்து செல்ல எத்தனித்தனர். அப்பொழுது தான் தாரிகாவுடன் சுற்றுவாளே அந்த பொண்ணு அங்கு வந்து, அவர்களுடன் சண்டை போட்டாள். அவளாலும் முடியவில்லை.அவர்கள் அவளையும் கடத்தி சென்று விட்டனர்.

ஸ்ரீயையுமா? என்று தலையை பிடித்திருந்தான். அங்கே போலீஸ் ஜீப் வந்தது.அவர்களை பார்த்து நடந்ததை கூறவும், அவர்கள் விசாரணையை ஆரம்பித்தனர்.

அர்ஜூன் தாரிகா கவினிற்கு போன் செய்ய, அவர்கள் எடுக்கவில்லை. அவனுக்கு நன்றாக புரிந்து விட்டது. அவர்களையும் குமாரன் கடத்தி விட்டான் என்று. பின் மோகனை பற்றி கேட்க, அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்திருந்தனர்.அவரை பார்க்க சென்றான் அர்ஜூன்.

குமாரன் அனைவரையும் ஒரே இடத்தில் கட்டி வைத்திருந்தான். கவின், தாரிகா, அம்மா, ஸ்ரீ, நிவாஸும் அங்கே தான் இருந்தான். சுமதி அங்கே வந்தாள்.

என்னடி என்னோட பையனை டீல்ல விட்டு ஏமாத்த பாக்குறியா?அவள் அம்மாவை அடிக்க கையை ஓங்கினார்.

வாவ்..நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்கன்னு கவின் சுமதியை பார்த்து கூற,என்ன பேசுகிறான்? என்று அனைவரும் அதிர்ந்து கவினை பார்த்தனர்.

என்னையவா சொன்ன? என்று சுமதி அவனருகே வந்தார்.

உங்களை தான் பேபி என்றான்.

பேபியா? தாரிகா அவனை முறைத்தாள். அவன் தாரிகாவை பார்த்து கண்ணடித்து விட்டு, அட ஆமாம்..செம்மயா இருக்கீங்க? உங்க பையனா இவன்? ச்சீ..ச்சீ..உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சுன்னு சொன்னா யாரும் நம்பவே மாட்டாங்க. தெரியுமா?

என்ன நிவாஸ் சரி தான? அவனிடம் கவின் கேட்க, என்ன கருமம் டா? மனதினுள் நினைத்தவாறு, ஆமாம் சீனியர்..ரொம்ப சரி என்றான்.

டேய்..உங்க கண்ணு எங்கடா போச்சு? என்று கேட்டாள் ஸ்ரீ.

அட..உனக்கு பொறாமை இந்த பொண்ணை பார்த்து என்று கவின் கூறியவுடன் காது வரை பல்லை காட்டினாள் சுமதி.

பொண்ணா? என்று அனைவரும் கோரசாக கேட்க, பொண்ணு தான்.எவ்வளவு க்யூட்டா இருக்கா பாருங்க..தாரி உன்னை பாக்குறதுக்கு முன்னாடி இவளை பார்த்திருந்தால் நான் இவளையே லவ் பண்ணி இருப்பேன் என்றான்.

என்ன சொன்ன? தாரிகா அம்மா கேட்க,

ஆமாம்மா என்றான்.

சுமதிக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது. குமாரன்,அம்மா..அவன் பேச்சை கேட்காத,..அவன் உடான்ஸ் உடுறான்.

டேய், என்னைக்காவது என்னிடம் இப்படி பேசி இருக்கிறாயா? உனையெல்லாம் பையன்னு சொல்லவே முடியல..

நீ சொல்லு டா..என்றாள் சுமதி கவினிடம்.அவன் மேலும் அவளை புகழ, இதற்கு மேல் முடியாது என்று மடமடவென தாரிகாவின் கட்டை அவிழ்த்து, அவளை இழுக்க, அவள் தூணை பிடித்துக் கொண்டு நின்றாள்.

இதை பார்த்த சுமதி, மகனிடம் நீ தொந்தரவு செய்யாதேடா. நாங்கள் தான் பேசிக் கிட்டிருக்கோம்ல! அவளை தூக்கிக் கொண்டு அறைக்கு சென்று கதையை முடித்து விடு. அவளே நம்ம பக்கம் வந்திருவா என்றாள். இதற்கும் மேல் கவின் பேசிக் கொண்டிருப்பானா? என்ன? அவன் வந்த வழியை நோக்கிக் கொண்டே கை கட்டை அவிழ்க்க முயன்றான்.

என்னப்பா கை வலிக்குதா? அவிழ்க்க முடியாதே! என்னோட பையனுக்கு அவனா உசுறுயா. கொஞ்ச நேரம் கழித்து நானே அவிழ்த்து விடுகிறேன். அவன் வேலை முடியட்டுமே! என்றாள்.

இல்ல..அவள எதுவும் செய்யாதீங்க! என்று கத்தினான்.

அடடே, இவ்வளவு நேரமும் நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தீங்க? சுமதி எகத்தாளமாக கவினை பார்த்தாள்.

ப்ளீஸ் அவளை விட்டுருங்க…அம்மா, கவின் மற்றவர்கள் பதற,

டேய்..லூசு கூமுட்டை என்று ஸ்ரீ குமாரனிடம் , அவளை உன்னால் ஏதும் செய்ய முடியாது என்றான்.

உன் முன்னே செய்து காட்டுகிறேன் என்று அவளை பட்டென இழுத்தான். அவன் இழுத்ததில் தாரிகா கீழே விழுந்தாள். கவின் கையை முறுக்கிக் கொண்டு, கட்டிய கயிற்றை இழுக்க, சுமதி அவனை பார்த்து சிரித்தாள்.

தாரிகா அங்கிருந்து எழுவதற்குள் குமாரன் முன் வந்தான்.

ப்ளீஸ் என்னை விட்டுடு..என்றாள்.

நீ என்ன ட்ரை பண்ணாலும் முடியாது ஸ்ரீ மேலும் கூற,

ஸ்ரீ என்ன பண்ற? கவின் கோபப்பட்டான்.

ஸ்ரீ அவளது கண்ணாலே கையை காட்டினாள். அவளது கையை அவிழ்த்திருந்தாள். இருவரும் அவர்களது நடிப்பை ஆரம்பித்தனர்.

உன்னால முடிந்ததை செய்டா என்று ஸ்ரீ கூற, அவன் சீற்றத்துடன் தாரிகாவை பார்த்தான். அவள் ஸ்ரீயை பார்க்க, கீழிருந்து மது மாட்டிலை கண் காண்பித்தாள். புரிந்து கொண்டாள் தாரிகா.

சும்மா இருக்கவே மாட்டியா? அந்த பொறுக்கி என்னோட தாரியை ஏதும் செய்து விடாமல் என்று கவின் பயப்படுவது போல் நடித்தான்.

அவனுக்கு மூளையே இல்லடா? ஸ்ரீ கூற, சுமதி ஸ்ரீ பக்கம் திரும்பி,

என்னடி ரொம்ப பேசுற? அவளருகே வரவும் தாரிகாவும் அந்த மது பாட்டிலை எடுத்து உடைத்தாள்.

அடியேய், என்ன செய்ற? உன்னை எதுவும் செய்து கொள்ளாதே! சுமதி தாரிகா பக்கம் திரும்பினாள்.

நான் என்னை என்ன செய்யப் போகிறேன்? உன் மகனை..என்று பாட்டிலை குமாரன் பக்கம் நீட்டினாள் தாரிகா.

அய்யோ பாவம், அந்த பொறுக்கி சாகப் போகிறான் கிண்டலாக ஸ்ரீ கூறினாள்.

ன்னை என்ன செய்கிறேன் பார் என்று சுமதி ஸ்ரீயை நெருங்க, யாருடைய போனோ ஒலித்தது.