ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான எபிசோடு 72.

அர்ஜூன் தாரிகா வீட்டிற்கு சென்றான்.அனைத்து பொருட்களும் களைந்திருக்க, அங்கங்கு இரத்தக்கறை பார்த்து அவனுக்கு பயம் தொற்றிக் கொண்டது.

தாரிகா அம்மாவிற்கு போன் செய்ய, அவரும் போன் எடுக்கவில்லை.அகிலிடம் கூறி விட்டு கவினும் தாரிகாவும் வெளியே வந்த கொஞ்ச தூரத்தில் அவர்களை இடித்து தள்ளிய வேன் ஒன்று அவர்களை கடத்திக் கொண்டு சென்றது.

அதே நேரத்தில் பவி..ஓடாதேடி..ஓடாதே..நில்லு என்று கத்திக் கொண்டு அவளது தோழிகள் அழைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்த அகில் அவர்களில் ஒருத்தியை இழுத்து, பவிக்கு என்ன? எதற்காக அழுது கொண்டே ஓடுகிறாள்? கேட்டான்.நித்தியும் யாசுவும் அந்த பொண்ணையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அகில்,அவளை உன்னால் நிறுத்த முடியுமான்னு பாரு என்றாள் ஒருத்தி.

முதல்ல பிரச்சனைய சொல்லுமா? யாசு கேட்டாள்.

அந்த கிறுக்கு பய பின்னால சுத்தாதன்னு எத்தனை முறை நான் சொன்னேன். கேட்டாளா இவள்? அந்த பொண்ணும் அழுது கொண்டே கூற,

யாரை சொல்ற?

வினயா?

ஆமா,அந்த பரதேசி தான்.

பவி  அவனை காதலித்தது தான் உனக்கு தெரியுமே!அகில்.

ம்ம்.என்ன செஞ்சான்?

அவனும் காதலிப்பதாக கூறி அவளுடன் நிறைய போட்டோஸ் எடுத்து, அது அனைத்தையும் அவனுடன் தவறாக உறவில் இருப்பதை போல் தயாரித்து, அவளை படுக்க அழைக்கிறான். இதற்கு அவன் நண்பர்களும் உடனிருக்கிறார்கள் என்றாள்.

இப்பொழுது அந்த படுபாவியின் நண்பன் அவளை தனியே இழுத்து தவறாக நடந்து கொள்ள முயற்சித்தான். அந்த பயத்தில் தான் ஓடுகிறாள். இன்று அவர்கள் கூறிய ஹோட்டலுக்கு போகவில்லை என்றால் இணையதளத்தில் அனைத்தையும் போட்டு விடுவானாம். எங்கள் முன்னும் மிரட்டுகிறான் என்றாள்.

அகில் அவனது வண்டியை எடுத்து பவியை மடக்கி பிடித்தான். அவள் பயத்தில் கத்த, அவளது வாயை மூடினான். நித்தியும் யாசுவும் அங்கே வந்தனர். அவளுடைய தோழிகளும் அருகே வந்தனர்.

அவன் மெதுவாக கையை எடுக்க, அவள் அழுது கொண்டே,அகில் அவன் ரொம்ப சீப்பா நடந்துக்கிறான். என்னோட ப்ரெண்ட்ஸ் சொல்லியும் கேட்காம அவனை காதலித்தேன். இப்பொழுது தான் அவனை பற்றி தெரிகிறதுடா. பயமா இருக்குடா என்று அவன் மீது சாய்ந்து அழ,

நிறுத்துறியா? கோபப்பட்டான் அகில். சட்டென விலகினாள் பவி.

நீ ஒரு வருடமாக அவன் பின் சுற்றுகிறாய்? அவனை பற்றி கொஞ்சம் கூட சந்தேகம் வரவே இல்லையா? கேட்டான்.

இல்லையேடா என்று மீண்டும் அழுதாள்.

நீ எதற்காக அவனை காதலித்தாய்? கேட்டான்.

அவன்  ஒரு குட்டிப் பொண்ணுக்கு உதவுவதை பார்த்தேன். பின் யாருமில்லா பாட்டிக்கு சாப்பாடு வாங்கித் தந்தான். பிடித்து விட்டது.

தெளிவாக கூறுகிறாயா? நித்தி கேட்டாள்.

குட்டிப் பொண்ணு ரோட்டை கடக்க முடியாமல் தனியே வரும் போது கார் ஒன்று அவளை இடிக்க வந்தது. அந்த பொண்ணை காப்பாற்றி உதவி செய்தான்.

ஓர் இடத்தை கூறி, அங்கே ஒரு பாட்டி ரோட்டில் பிச்சை எடுத்தார்கள். அவங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து இனி உங்களால் முடிந்த வேலை செய்து வாழுங்கள் என்றான்.

அந்த பாட்டி அவனை பார்த்து, சாப்பாடு கொடுத்துட்டேல.. கிளம்பு என்று அவனை திட்ட, அவனும் கிளம்பி விட்டான்.அவனுடைய இந்த குணம் பிடித்து தான் காதலித்தேன் என்றாள்.

அடியேய்..என்ன சொல்ற?

அந்த ஏரியாவுல எந்த பிச்சைகாரனோ, பிச்சைகாரியோ இருக்க மாட்டாங்க. அந்த ஏரியாவே பணம் படைத்தவர்கள் இருக்கும் ஏரியா என்றாள் பவியின் தோழி.

இல்லை. அங்கே தான் இருந்தாங்க..

சரி,அடுத்து என்றாவது அவங்கள பார்த்தாயா? அகில் கேட்டான்.

இல்லை என்றாள்.

எந்த சிக்னல்ல ரோட்டை கடக்க முடியாம அந்த பொண்ணு கஷ்டப்பட்டா?நித்தி கேட்டாள்.

அவள் கூற. நித்தி தலையில் அடித்துக் கொண்டு,அந்த சிக்னல் கிட்ட பெரிசா டிராபிக்கே இருக்காது என்றாள்.

என்ன சொல்றீங்க? அவள் அறியாமல் விழித்தாள்.

அவன் உன்னை விழ வைக்க செய்த ஏற்பாடு தான். நீயும் அவனை போய் காதலித்திருக்கிறாய் அகில் கூறினான்.

அப்ப நான் பார்த்தது?.. அவனோட ஆட்களாக கூட இருக்கும் என்றவுடன் அவள் மீண்டும் அழத் தொடங்கினாள்.

உன்னையெல்லாம் என்ன தான் செய்றது? பவி தோழி திட்ட, அவள் அவன் ஏமாற்றியது தாங்க முடியாமல் அழுது கொண்டே மீண்டும் ஓடினாள்.

ஓடாதேடி,எங்களால் முடியவில்லை என்று தோழிகள் கத்தினார்கள். சரியாக வினய் அவள் முன் வந்து, வா போகலாம் என்று அவளை பிடித்து இழுக்க, என்னை விடு என்று அழுது கொண்டே,

ஏன்டா என்னை ஏமாத்தின?அவனை அடித்தாள். அவன் கோபத்தில் அவளை அடிக்க மயங்கி சரிந்தாள். அவளை காரில் போட்டு அவன் காரை எடுக்க,

அவளை விடு என்று அனைவரும் பின் வந்தனர். அகில் நித்தியை அழைத்துக் கொண்டு பைக்கில் அவனை பின் தொடர்ந்தான்.

அவர்கள் இறங்கியது ஒரு காட்டுப் பகுதி. என்ன இடம்டா இது? என்று நித்தி கேட்க,

நான் அவனை பார்த்துக் கொள்கிறேன். நீ அவளை பார்த்துக் கொள் என்று இருவரும் முன் சென்றனர். மயங்கிய பவியை வினய் தூக்கிக் கொண்டு மர வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே அவனுடைய நண்பர்கள் இருந்தனர்.

யாகூ..என்று ஆரவாரக் குரலுடன் வினயை உற்சாகப்படுத்த, அவளை கீழே போட்டவன். அவளது ஆடைய களைய முற்பட்டான். கதவை தள்ளிக் கொண்டு அகில் உள்ளே வர,

இவன் இங்கே எப்படிடா வந்தான்? கேட்டனர்.

வந்து அவன் பார்த்து விட்டு போகட்டும் என்றான்.

அகில் அவர்களையெல்லாம் கண்டு கொள்ளாது பவியை தூக்க வந்தான்.

அவள் எங்களது விருந்து. நீ போ. அங்கே உட்கார் என்றான் ஒருவன். அகில் அவனை முறைத்து பார்க்க,

இவளுக்காக ஒரு வருடம் காத்திருந்திருக்கிறோம். காதலை சொல்ல ஒரு வருடமாக்கிட்டா.யாரும் நம்மை இவ்வளவு தூரம் காக்க வைத்ததே இல்லை வினய் கூற, பல்லை கடித்தான் அகில்.

எவ்வளவு பெர்பார்மென்ஸ்..ஹப்பா முடியலடா.. இன்னொருவன் கூறினான்.

அகில் மீண்டும் பவி அருகே வர, அவனை மூவர் பிடிக்க, அவளது மேலாடையை கழற்ற, அகிலும் அவர்களுடன் போராட, அங்கே வந்தனர் யாசு,தருண், ஆதேஷ், அபி, இன்பா, இதயா.

கவினை தேடி வந்த தருணிடம் யாசு விசயத்தை கூற, அனைவரும் அவர்களுக்கு உதவ வந்தனர். நித்தி சைலேஷிற்கும் கூறி இருப்பாள். அவனும் அங்கே வந்தான் தன் நண்பன் மாதவுடன்.

பொண்ணுங்க பவியை சூழ, மற்றவர்களுக்குள் சண்டை நடக்க, அகில் அவர்களது போனை எடுத்து தர, நித்தி அனைத்து போட்டோஸ், வீடியோக்களை அழித்துக் கொண்டிருந்தாள். பின் மாதவும் சைலேஷும் சேர்ந்து அவர்களை ஒன்றாக பிடித்து கட்டி ஜூப்பில் போட்டனர்.

பொண்ணு விசயம் என்பதாலும் சைலேஷ் கல்லூரிக்காகவும் விசயத்தை வேறு விதமாக மாற்றி மாதவ் அவர்களை ஸ்டேசனுக்கு இழுத்து சென்றான்.

பவியை தண்ணீர் தெளித்து எழுப்பினர். அவளுக்கு நடந்ததை கூறி, அகில் அவளை திட்டினான். நீ காதலிச்சா..அவனை பற்றி முழுதாக அறிந்து விட்டு காதலி பேக்கு என்றான்.

அவள் மீண்டும் அழுது கொண்டே, நான் ஒன்றும் பேக்கு இல்ல என்று கூறினாள்.

அப்புறம் என்ன கேக்கா? ஒரு பையன் உன்னிடம்
எந்த நோக்கத்துடன் பழகுகிறான் என்று தெரியாமலா காதலிப்பாய்? பொரிந்து தள்ளினான் அகில்.

அவள் பாவமாக நித்தியை பார்க்க, விடுடா.. மறுபடியும் அவளை அழ வைக்காதே! நித்தி கூற,

இல்லேன்னாலும் அழாம இருந்துருவா பாரு என்று அகில் கூற, பவி அவனை முறைத்தாள்.

பின் அனைவருக்கும் நன்றி கூறி விட்டு எழுந்து, சுற்றி பார்த்தாள். காடாக இருப்பதை கண்டவள், இங்கே சிங்கமெல்லாம் இருக்குமா? அவள் கேட்க,

வர வாய்ப்புள்ளது என்றான் தருண்.

வருமா? பவி கேட்க, ஏன் அதையும் லவ் பண்ணப் போறியா? அகில் கேட்டான்.

ப்ளீஸ் வீட்டுக்கு போகலாமா? எனக்கு பயமாக இருக்கு என்றாள்.

அவள் கூறுவதும் சரி தான். கொஞ்ச நேரத்தில் இருட்டி விடும் என்றவுடன் தான் தருண்.

அய்யோ! அர்ஜூன் கவின் என்றான்.

என்ன? என்று அகில் கேட்க, தருண் சொல்ல.

அவனை என்னடா பண்றது? எதையும் சொல்லவே மாட்டிங்கிறான். வாங்க சீக்கிரம் போகலாம் என்று அனைவரும் கிளம்ப,நான்..என்று அனைவரையும் பார்த்தாள் பவி.

வா..என்று அகில் அழைத்தான்.அனைவரும் கிளம்பி, கல்லூரிக்கு வந்தனர்.

பவதாரணி என்று அவளது தோழி ஓடி வர, மற்றவர்களும் வீட்டிற்கு செல்லாது இருந்தனர்.

உனக்கு ஒன்றுமில்லையே? என்று அவளை சுற்றி சுற்றி பார்த்தனர் தோழிகள்.

ஒன்றுமில்லை என்றாள் தலைகவிழ்ந்தவாறு.

அவனை நம்பாதே! என்று முன்பே கூறினேன்ல. கேட்டாயா? எல்லாரும் திட்ட,

போதும்.எத்தனை பேர் தான் திட்டுவீங்க.நான் ரொம்ப டயர்டாகிட்டேன் என்று அங்கிருந்த பெஞ்சில் சோகமாக அமர்ந்தாள்.

எல்லாரும் கிளம்புங்கடா தாரிகா வீட்டிற்கு. அங்க என்ன பிரச்சனைன்னு தெரியல.நாங்க வாரோம் என்று அபியிடமிருந்து நித்தி கீழே இறங்கி அகிலை மட்டும் பிடித்துக் கொண்டு மற்றவர்களை அனுப்பினாள்.

நித்தி பவியிடம் வந்தாள். அவள் முடியெல்லாம் முன் வந்திருக்க,தலை கவிழ்ந்திருப்பவளை பார்த்து ரசித்துக் கொண்டு,

அவளது முடியை ஒதுக்கி விட்டு,அவளது முகத்தை கழுவ தண்ணீர் கொடுத்தாள். அவள் கிளம்ப தயாராகி எழ,அவளை நிறுத்தி,

நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? என்னை விட அழகா இருக்க. க்யூட்டா பேசுற. உன்னை எல்லாருக்கும் பிடிக்கும். உன்னோட குழந்தை தனமான பேச்சு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

 காதலிக்கலாம். உனக்கு யாரையாவது பிடித்திருந்தால் என்னிடம் சொல்லு.நான் அவனை பற்றி விசாரித்து நல்லவனாக இருந்தால் சொல்கிறேன்.பழகு என்று அறிவுரை கூறினாள். தயவு செய்து வினயை மறக்க முடியலன்னு கஷ்டப்படாதே! உன்னோட ஒரு சொட்டு கண்ணீருக்கு கூட அருகதை இல்லாதவன் அவன். அவனை மனதிலிருந்து இன்றோடு தூக்கி எறிந்து விட்டு, உன் படிப்பில் கவனத்தை செலுத்து. தோழிகளுடன் எஞ்சாஜ் பண்ணு என்றாள்.

நம் இருவருக்கும் ஒரே வயது தான்.நீ தெளிவாக இருக்கிறாய்? பவி ஆச்சர்யத்துடன் கேட்க,

எனக்கு பழக்கமுள்ளது.ஒரளவு மற்றவர்களை புரிந்து கொள்வேன். உனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. போகப் போக அனைத்தும் சரியாகும் என்றாள்.

பவி அவளை அணைத்து ரொம்ப தேங்க்ஸ் நித்தி. இப்பொழுது கூட நடுக்கமாக உள்ளது. நீங்கள் உதவ வரவில்லை என்றால் நான் அவ்வளவு தான் என்று அழுதாள்.

ஷ்..நீ அழாதே. யாரிடமும் இதை சொல்லாதே! என்று விட்டு அவளுடைய தோழிகளிடம் நீங்களும் விசயத்தை வெளியே சொல்லாதீர்கள் என்று அவள் கிளம்ப, தோழிகளுள் ஒருத்தி முன் வந்து அவளை கொஞ்சம் வீட்டில் விட முடியுமா? கேட்டாள்.

அகில் அவர்களை முறைக்க, நானே சென்று விடுவேன்.

நீயும் பணக்கார பொண்ணு தானே! கார் இல்லையா உங்க வீட்டில்.

இருக்கு..எனக்கு ப்ரெண்ட்ஸோட போறது தான் பிடிக்கும். அதனால் காரே வேண்டாம் என்று கூறி விட்டேன். இப்பொழுது அம்மாவிடம் கேட்டால் அவங்க சந்தேகப்படுவாங்க என்றாள்.

இவர்களுடன் தானே செல்வாய்?அகில் கேட்டான். அவர்களுக்கு வீட்டிலிருந்து கூப்பிட வருவதாக கூறி விட்டார்களாம். வெகு நேரமாகிறதல்லவா? என்றாள்.

நித்தி நீ கிளம்பு. நான் சென்று விடுவேன். உன்னுடைய நம்பர் மட்டும் தருகிறாயா? கேட்டாள் பவி.

வா..வீட்டில் இறக்கி விடுகிறோம் என்று அவளையும் அழைத்துச் சென்றனர். அவள் தோழிகளிடம் பை சொல்லி விட்டு வந்தாள்.

           “தூய்மையான காதலாகி

     உனை கண்டேன்! எனை மறந்தேன்!

          நீயோ எனை சதையாகி

            கண்டிருக்கிறாய்!!

        கண்ணீராலும் அழுக்கான

          உன் மனமிறங்க வில்லையோ!!

        உடல் நடுங்கி விதிர்விதிர்த்தும்

             உன் செய்கையால்

      மனமே உடைந்து தான் போனதே!

          உனை மறந்து இனி என்

   காதலுக்குரியவனை அடைவேனோ!”