ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான எபிசோடு 68

ஸ்ரீயும் பாப்பாவும் விளையாண்டு கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான் அர்ஜூன். போன் பேசிக் கொண்டே வந்த வினிதா அர்ஜூனை பார்த்து அவனருகே அமர்ந்து போனை துண்டித்தார்.

அக்கா..அது என்ன புண்ணு என்று கேட்டான் அர்ஜூன்.

என்ன? அக்கா தெரியாதது போல் கேட்க, அனு சொன்னா, ஸ்ரீக்கு ஏதோ புண்ணு இருக்காம் என்று அவரை பார்த்தான். அவர் பேச முடியாமல் இருப்பதை கவனித்து,அக்கா நீங்களும் மறைக்கிறீங்கள? கேட்டான்.

அவர் கண்ணுக்கு ஸ்ரீ பேசியது அனைத்தும் நினைவுக்கு வர,அவரை மீறியும் கண்ணில் நீர் வழிந்தது.

அக்கா சொல்ல போறீங்களா? இல்லையா?

எதை சொல்ல சொல்ற? ப்ளீஸ் என்கிட்ட எதுவும் கேட்காத.

ஏதோ பெரிசா இருக்குல அவன் கேட்டான்.

ஆமாம்டா. உனக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவ. விடேன் என்றார்.

சொல்ல மாட்டீங்கள?

புரிஞ்சுக்கோடா..அக்கா கத்த, ஸ்ரீ அங்கே வந்தாள்.

அனுவும் வினிதாவிடம் சென்று,அம்மா எதுக்கு அழுறீங்க?

ஒண்ணுமில்லைடா.அம்மாவுக்கு வயிறு வலிக்குது. அதான் என்றான்.

அக்கா,ஹாஸ்பிடல் போகலாமா? ஸ்ரீ கேட்டாள்.

இல்லைம்மா.நீ பாப்பாவை அவளது அறைக்கு அழைத்து சென்று கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்கிறாயா? நான் அர்ஜூனிடம் தனியே பேசணும் என்றார்.

சரிங்கக்கா என்று பாப்பாவை அழைத்துக் கொண்டு, அர்ஜூனை பார்த்துக் கொண்டே சென்று பாப்பா அறைக்குள் சென்று கதவை சாத்தினாள்.

அவளுக்கு இன்னும் என்னவெல்லாம் பிரச்சனை என்று தெரியல.ஏதோ இந்த ஆடை பிரச்சனையில் தான் பொறுக்க முடியாது சொல்லி விட்டாள். நீ சொன்னது சரி தான். அவள் வலிமையாக தான் இருக்கிறாள். அது உடைந்தால் தான் அவளை காப்பாற்றுவது கடினம்.அக்கா ஸ்ரீக்கு நடந்ததை கூற, அர்ஜூனிற்கு கோபம் அதிகமானது கயல் மீது.

என்னக்கா இப்படியெல்லாமா செய்வாங்க?அர்ஜூனும் அழுதான்.

அந்த பொம்பள ரொம்ப வஞ்சத்தோட இருக்கா ஸ்ரீ மீது. முதல்ல அவளுக்கு சுத்தி இருக்கிற அனைத்தையும் அழித்தால் தான் ஸ்ரீயை உன்னால் காப்பாற்ற முடியும். அவளுடைய அம்மா..பற்றி நீ தெரிந்து கொள்வது தான் சரி.

ஸ்ரீ அம்மாவிற்கும் அந்த பொம்பளைக்கும் என்ன பிரச்சனைன்னு கண்டுபிடி.அதை வைத்து தான் நீ அடுத்து என்ன செய்யலாம் என்பது தெரியும்.

அவன் அமைதியாக இருக்க, அவனது தோளை தட்டி விட்டு, அவளை காப்பாற்றுவது கஷ்டம் தான். உன்னால் முடியும் என்று நினைக்கிறேன்.

அக்கா..நான் அவளை இப்பொழுது பார்க்கலாமா?

என்னிடம் ஏன்டா கேக்குற? போ..என்றார் அக்கா.

அர்ஜூன் அனு அறை நோக்கி நடந்தான்.

அறைக்குள் சென்றான் அர்ஜூன். அங்கு அனுவுடன் ஸ்ரீயும் தூங்கிக் கொண்டிருந்தாள். இருவரும் அணைத்துக் கொண்டு படுத்திருந்தனர்.அவன் இருவரும் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.பின் அனுவின் மறுபக்கம் படுத்து ஸ்ரீயையே பார்த்துக் கொண்டிருந்தான்.அர்ஜூன் அனு மீது கையை போட, ஸ்ரீ மேல் பட்டு அவள் விழித்தாள். அர்ஜூன் கண்ணை வேகமாக மூடி தூங்குவதை போல் நடித்துக் கொண்டிருந்தான்.

எழுந்து அமர்ந்த ஸ்ரீ இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.பின் அவள் மெதுவாக நகர, அனுவும் விழித்து அம்மா..என்றாள் ஸ்ரீயை கட்டிக் கொண்டு. அர்ஜூனும் அதிர்ச்சியுடன் நடப்பதை கேட்டுக் கொண்டிருந்தான்.

பாப்பா, என்ன சொன்ன? ஸ்ரீ அனுவிடம் கேட்க. கண்ணை கசக்கி விட்டு பாப்பா, அம்மா….என்று எழுந்து ஸ்ரீ மீதே சாய்ந்து கொண்டு தூக்கினாள்.

ஸ்ரீ பாப்பாவை அணைத்துக் கொண்டு சத்தமில்லாது அழுதாள். பாப்பா எழுந்தவுடன் ஸ்ரீ கட்டிலின் நடுப்பகுதியில் தான் அமர்ந்திருப்பாள் பாப்பாவை வைத்துக் கொண்டு. அர்ஜூன் பக்கத்தில் இருப்பதால் ஸ்ரீ அழுவது அவனுக்கு தெளிவாக தெரிந்தது.

அவன் அசைவது போல் பாவனை செய்ய, அவனது தலை முடியை வருடினாள். பின் அவனை பார்த்து, உனக்கு இந்த ஏ.சியிலும் ஏன் இப்படி வியர்க்கிறது? என்றவாறு மெதுவாக குனிந்து ஊதினாள். நெற்றியில் ஊதியவள் விடாது அவனது கழுத்து பக்கமும் ஊத, அவனால் அவனது உணர்வுகளை கட்டுபடுத்த முடியவில்லை.சட்டென தூக்கத்தில் இருப்பது போல் அவளை இடுப்போடு அணைத்து அவளது மடியிலே படுத்துக் கொண்டான். ஒரு நிமிடம் உறைந்த ஸ்ரீ, பின் அவனுக்கும் தட்டிக் கொடுக்க அவனும் தூங்கினான்.

வினிதா அக்கா மெதுவாக கதவை திறந்து பார்க்க, அனு ஸ்ரீ மார்பிலும், அர்ஜூன் அவளது மடியிலும் படுத்திருப்பதை பார்த்து நிம்மதியுடன் அகன்றார். ஸ்ரீ வினிதா வந்ததை கவனிக்கவே இல்லை.

ஸ்ரீ அர்ஜூனை பார்த்துக் கொண்டு, எனக்கு இதே போல் வாழ வேண்டும் என்று ஆவலாக உள்ளது. ஆனால் என்ன செய்வது? என் தலை எழுத்து தான் சரியில்லையே என்று புலம்பினாள். பின் அர்ஜூன் நெற்றியில் முத்தமிட்டாள். எனக்கு உன்னுடன் இருக்க வேண்டும் போல் உள்ளது அர்ஜூன்.ரொம்ப கஷ்டமா இருக்கு அர்ஜூன். என் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோற்றது போல் இருக்கிறது.நீ என்னோட குட்டி பையன் டா..என்று மீண்டும் அவனை முத்தமிட்டாள்.

அவள் கண்ணீர் அவன் மீது அடுத்தடுத்து விழ, விழித்தான் அர்ஜூன்.ஆனால் கண்ணை திறக்கவில்லை.அது தெரியாமல் மீண்டும் பேசினாள் ஸ்ரீ.

அர்ஜூன்..எனக்கு உங்க எல்லார் கூடவும் வெளியே எங்காவது செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. அனு கூடவே இருக்க வேண்டும் போல் உள்ளது. முதலில் நீ அவர்களை எதிர்க்க சொன்னாய்.நீ உடன் இருப்பதாக சொன்னாய். சந்தோசமாக இருந்தது. ஆனால் நீ செய்வது,பேசுவதை பார்த்தால் அவங்க உன்னை ஏதாவது செய்து விடுவார்களோ என்று பயமா இருக்கு அர்ஜூன். நீ உன்னோட குடும்பத்தோட சந்தோசமா இருக்கணும் டா. அனுவை நல்லா பார்த்துக்கோ. உன்னோட காதல் வேற ஒரு நல்ல பொண்ணுக்கு கிடைக்கணும். அந்த பொண்ணு லக்கி தான் என்றாள்.

இல்லை என்ற சத்தத்துடன் தன் இமைகளை பிரித்தவன் மேலும் அவளை இறுகி கட்டினான். எனக்கு வேற எந்த பொண்ணையும் பிடிக்காது ஸ்ரீ. எனக்கு நீ தான் வேண்டும் என்று அவளது இதழ்களில் முத்தமிட்டான்.

விடு அர்ஜூன் என்று அவனை தள்ளி விட்டவள், நான் கிளம்புகிறேன் என்று அனுவை மெதுவாக படுக்க வைத்து பதட்டத்துடன் எழுந்தாள். அவளுடைய ஆடை சதி செய்ய கீழே விழ போனவளை பிடித்து, ஒரு சுற்றில் சுவற்றில் சாய்த்தவன் அவளது வாயை மூடி விட்டு,

ஏற்கனவே சொன்னது தான் மறுபடியும் சொல்றேன் நல்ல கேட்டுக்கோ..உன்னை யாரும் ஏதும் செய்ய முடியாது. செய்ய நினைத்தால் எங்களை தாண்டி தான் நடக்கும் என்றான்.

அவள் சட்டென அவனது வாயை பொத்தி விட்டு, ப்ளீஸ் அர்ஜூன் இந்த மாதிரி பேசாதே! என்னால தாங்க முடியல என்றாள்.

நீ எதற்கு என்னை பற்றி கவலைப்படுகிறாய்? கேட்டான் அர்ஜூன்.

எனக்காக நீ கஷ்டப்படுவதனால் தான் சொன்னேன்.

அவ்வளவு தானா? வேறேதுவும் உள்ளதா?

இல்லை என்று கண்ணீருடன் நின்றாள்.

பின் எதற்கு கண்ணீர்?

அகில் என்று அவள் ஏதோ சொல்ல வருவதற்குள், போதும் என்றான்.

அர்ஜூன், நான் சொல்கிறேன் என்று அர்ஜூனை காதலிப்பதை கூற நினைத்து விட்டாள்.

வேண்டாம்ன்னு சொல்றேன்ல..என்று அங்கிருந்த சுவற்றில் குத்த, அர்ஜூன் கையில் இரத்தம் வடிந்தது.

அய்யோ அர்ஜூன்! இரத்தம்..என்று அவளது ஆடையை கிழித்து அவனது கையில் கட்டு போட்டு விட, அவன் அவளையே பார்த்துக் கொண்டு,

ஸ்ரீ விலகு. என்னால் என்னை கட்டுபடுத்த முடியாது என்றான்.

அர்ஜூன் என்று ஸ்ரீ அவனை பார்க்க, விலகு என்றேன் என்று பல்லை கடித்தவாறு கூறி விட அவள் நகர்ந்தாள். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்தது.அர்ஜூன் சென்றவுடன் உடைந்து அழுதாள் ஸ்ரீ.

ஐ லவ் யூ அர்ஜூன் என்றவாறு தன் முழங்கால்களில் முகம் புதைத்து அழுதாள். அவன் தான் சென்று விட்டானே!

கொஞ்ச நேரத்தில் அவன் அங்கே வர, ஸ்ரீ அனு அருகே படுத்து அவளை பார்த்தவாறு ஆழமான சிந்தனைக்குள் மூழ்கி இருந்தாள். அவள் அருகே வந்து சொடக்கிட்டு, அவளை வெளியே வரச் சொன்னான்.அவள் அனுவிற்கு ஆழமான முத்தத்தை கொடுத்து விட்டு,

அக்கா..என்று தயங்கிக் கொண்டே ஆடை மாற்ற கேட்டாள்.

வருகிறாயா?இல்லையா? கத்தினான் அர்ஜூன்.

ஏன்டா கத்துற? இது உனக்கானது. இது உனக்கு மட்டும் தான் ஸ்ரீ என்று அழுத்தமாக அக்கா கூறினார்.அவள் அர்ஜூனை பார்த்தாள். அக்கா கண்ணை மூடி திறந்து அவளை அனுப்பி வைத்து விட்டு அனு அறைக்கு சென்றார்.

அர்ஜூனும் ஸ்ரீயும் வண்டியில் சென்று கொண்டிருக்க, அவன் வண்டியை நிறுத்தினான். அவள் விழிக்க, இறங்கு என்றான்.

அங்கே இருந்த ஏ.டீ. எம் நோக்கி அவன் செல்ல, ஸ்ரீ ஆடை அவனது வண்டியில் மாட்டியது. அவள் அதை எடுக்க குனிந்தாள். முன் சென்றவன் அவளருகே வந்து, குனிந்து ஆடையை எடுத்து விட்டு அவ்விடத்தை நோக்கினான்.அப்பகுதி மிகவும் இருட்டாக இருந்தது.

ஸ்ரீ கையை பிடித்து அவளையும் உள்ளே அழைத்து சென்று பணம் எடுக்கும் மும்பரத்திலே இருந்தான். ஸ்ரீ அவனையே ஏக்கத்தோடு பார்த்தாள்.பணம் எடுத்து விட்டு கிளம்பும் போது அவளிடம் இதை வைத்துக் கொள். தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள் என்றான்.அவள் அவனையே பார்க்க, அவன் மீண்டும் அவளது கையை பிடித்து வண்டி அருகே அழைத்துச் சென்றான்.பின் அவனை ஸ்ரீ இறுகி அணைத்துக் கொண்டிருக்க பயணத்தை மேற்கொண்டனர். தாரிகா வீட்டிற்கு செல்ல மணி பத்தை தாண்டியது.

யாசு, தாரிகா, அகில்,கவின், அபி, தருண் அனைவரும் காத்திருக்க, இருவரும் வீட்டிற்குள் ஒன்றாக வந்தனர்.ஏதோ கல்யாண மாப்பிள்ளையையும் பொண்ணையும் பார்ப்பது போல் அனைவரும் பார்க்க, அகிலுக்கும் அவ்வாறே தோன்றியது. ஜோடி அழகாக தெரிந்தது. அகிலுக்கு கஷ்டமாக இருந்தது.

தருண் கண்ணில் ஆனந்தகண்ணீரே வந்து விட்டது. இரண்டும் சண்டை போட்டு வந்திருக்க,இவர்கள் நினைப்போ வேறேங்கோ போனது.

அர்ஜூன் நேராக தாரிகா அம்மாவிடம் சென்று பணத்தை கொடுத்தான்.

அர்ஜூன்..வேண்டாம்டா என்றார்.

அனைவரும் அதை கவனிக்க, அம்மா..அப்பொழுதே சொன்னேன்ல.இந்தாங்க என்று வலுக்கட்டாயமாக கையில் திணித்தான்.

அம்மா,இது என்னோட அம்மா பணமில்லை.என் உழைப்பு என்றான்.

உன் உழைப்பா? கவின் கேட்டான்.

ஆமாம் என்று அவன் பக்கத்தில் வந்து, போட்டோகிராபி என்றான்.

ஓ..என்றாள் தாரிகா.

எவ்வளவு வரும்? யாசு கேட்டாள்.

அது போட்டோஸ் பொறுத்தது என்றான்.

அது தெரியுது? நீ எவ்வளவு வாங்கின?

குறைந்தது டென் தவுசண்ட்.அதிகமாக லாக்ஸை தொடும் என்றான்.

வாவ்..என்றாள் தாரிகா.

விலங்குகள் போட்டோஸ் என்ன சும்மாவா? கேட்டான் அர்ஜூன்.

காட்டுக்குள்ள போய் எடுக்குற மாதிரி பேசுற? கவின் கிண்டலடிக்க,

யா, அஃப் கோர்ஸ் என்றான் அர்ஜூன். அனைவரும் வாயை பிளந்தனர்.

என்ன சொல்ற அர்ஜூன்? ஸ்ரீ கேட்டாள்.

நான் சொன்னது உனக்கு புரியலையா? கேட்டான்.

எதுக்குடா இப்படி ரிஸ்க் எடுக்குற? தருண் திட்டினான்.

அட,விடுடா.ஒரு டிக்கெட் குறையுதே என்றான்.

ஓய் என்னடா கொழுப்பா? டிக்கெட்டுன்னு சொல்ற என்றாள் தாரிகா.

ஸ்ரீ எதுக்கு நிக்குற? வா..என்று யாசு அவளை உட்கார சொன்னாள். அர்ஜூன் பேசியது ஸ்ரீயை அதிகமாக காயப்படுத்தி விட்டது. அவள் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தாள்.

என்ன அபி,சொல்லிட்ட போலடா?

போடா டேய், அவங்க இனி என்னிடம் பேசுவாங்களான்னு தெரியல.கஷ்டமா இருக்குடா. அனைவரும் மாறி மாறி பேச ஸ்ரீ அமைதியாக இருந்தாள். தருண் ஸ்ரீயையே கவனித்துக் கொண்டிருந்தான்.

ஏன்டா அவளை அப்படி பாக்குற? கவின் கேட்டான் தருணிடம்.

ஒன்றுமில்லை என்று மீண்டும் அவன் ஸ்ரீயையே பார்க்க, அர்ஜூன் தருணை பார்த்தான்.

ஸ்ரீ வித்தியாசமா இருக்குறது போல தெரியுதுடா என்று தருண் சொல்ல, உனக்கும் அழகாக தெரியிறாலா? கேட்டான் அர்ஜூன்.

டேய்,என்ன சொல்ற? நான் அப்படி சொல்லல. உனக்கு எதுவும் தெரியலையா? தருண் கேட்டான்.

அர்ஜூன் ஸ்ரீயையே கண்ணெடுக்காமல் பார்த்தான்.

டேய் போதும் டா.விட்டால் அவளை விழுங்கி விடுவாய் போல என்று தருண் சொல்ல, அர்ஜூன் தலையை சிலுப்பினான்.

சீனியர் ஒரு நிமிஷம் நான் வருகிறேன் என்று எழுந்த ஸ்ரீ அம்மாவிடம் சென்று பேசி விட்டு அறைக்கு சென்றாள்.

அர்ஜூன், என்னடா கையில்? என்று அபி அவனது கையை பார்க்க, இது ஸ்ரீயின் ஆடை தானே தருண் கேட்டான்.

விடுடா..அதெல்லாம் ஒன்றுமில்லை என்றான்.

சொல்லுடா என்று கவின் அர்ச்சுவை கேலி செய்ய, விடுறீங்களா? என்று கத்தி விட்டான்.

ஏன்டா? இரண்டு பேரும் சண்டை போட்டீங்களா? யாசு கேட்டாள். அர்ச்சு அமைதியானான்.

தாரிகா எழுந்து ஸ்ரீ அறை கதவை தட்டி குரல் கொடுத்தாள்.

கொஞ்ச நேரத்தில் வருகிறேன் தாரி என்றாள் சாதாரண குரலில்.ஆனால் ஸ்ரீ அவன் முத்தமிட்டதை நினைத்துக் கொண்டு, பரவாயில்லை அர்ஜூன் நான் எதையும் கூற மாட்டேன். அதற்கான தகுதி எனக்கில்லை என்று அழுது கொண்டிருப்பாள்.அதை மறைத்து தாரிகாவிற்கு பதிலளித்திருப்பாள்.

 “சொல்லாத என் காதல் உயிரற்ற

          கல்லறையில் பதியும்

      உனை விட்டு போகும் என்னுயிர்

         உன் மடி மீது சாயும்

அத்தருணம் உமை நேசித்த என்னுணர்வுகள்

     உனை கடந்து தான் செல்லும்.

          என்னுயிரே! என்னுயிரே!

         என்னுணர்வே! என்னுணர்வே!

      உயிர் காதலுக்கு சொந்தமானவளை

      கண்டு உன் வாழ்க்கை பாதையை

          வழுவாக்கி எனை மறந்து

 மகிழ்வுடன் வாழடா என்னாசை காதலா!”