ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 66..

இதயா தருண் அருகே வந்து, அபி தான போனில். நான் சொல்லும் வரை கட் செய்யாதே என்றாள் மெதுவாக.

வா..தருண் என்று இதயா அழைக்க அவன் தயங்கி நின்றான்.

வாப்பா..என்று அவர்களது அம்மா அழைத்தார். அனைவரும் உள்ளே சென்றவுடன்,

அம்மா…நில்லுங்கள். என்ன இது? அவங்க என்ன சொல்றாங்க? கேட்டாள் இன்பா.

உன்ன பொண்ணு கேட்டு தான் வந்திருக்காங்க என்றார். இன்பா பயங்கர கோபமாக கத்தினாள்.

என்னால முடியாது. அந்த ஆன்ட்டியை எனக்கு பிடிக்கும் தான். ஆனால் எனக்கு மது மீது காதலெல்லாம் இல்லை.எங்கிட்ட இத பத்தி பேசாதீங்க.

நான் முடிவெடுத்து விட்டேன்.இன்னும் ஒரு மாதத்தில் உனக்கும் மதுவுக்கும் திருமணம் என்றார்.

அம்மா..எனக்கு பிடிக்கவில்லை என்று இன்பா கத்தினாள்.

நண்பர்கள் அனைவரும் வினிதா அக்கா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அபிக்கு இவர்கள் பேசுவதை கேட்டு, சாப்பிட வாய்க்கு கொண்டு போன சாப்பாடு நழுவியது.கண்கள் கலங்கியது. விக்கல் ஆரம்பித்தது அவனுக்கு.

இதை பார்த்தவர்கள் தண்ணிய குடிடா..மேம் நினைக்கிறாங்க போல கவின் கிண்டல் செய்ய,அவன் கண்ணில் நீர் ஓடிக் கொண்டிருந்தது.

ஏன்டா அழுற? என்று பக்கத்தில் அமர்ந்திருந்த யாசு அவனது போன் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

இன்பா அவளுடைய அம்மாவிடன், நான் உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லுங்க. நான் ஹாஸ்டல்ல தங்கிக்கிறேன். என்னால அவனை கல்யாணம் செய்து கொள்ள முடியாது.அவன் என்னோட ப்ரெண்டு லிஸ்டுல கூட இல்லை. நீ என்னோட விருப்பத்தை பார்க்க மாட்டீங்களா? கத்தினாள்.

நான் ஏன்டி கேக்கணும்? நீ எல்லாத்தையும் என்கிட்ட சொல்லவா செய்ற? அந்த பொறுக்கி விக்கி உன்னை தினமும் பாலோ பண்றான்ல? என்னிடம் சொன்னியா நீ?

உன்னோட ப்ரெண்ஸ் உன்னை பார்த்து பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வாராங்க. எத்தனை நாள் இதெல்லாம்.. சொல்லு.. அவங்களுக்கும் வேலையெல்லாம் இருக்கும்.ஃபேமிலி இருப்பாங்க.அவங்களை பார்க்க வேண்டாமா?

தம்பி,இப்பவும் அந்த பொறுக்கி வந்தான் தான? தருணை கேட்டார் அம்மா.

அவன் இன்பாவையும் இதயாவையும் பார்த்து விட்டு, ஆமா..ஆன்ட்டி என்றான்.

பாருடி, நீ மட்டுமல்ல. உனக்கடுத்து இன்னொருத்தியும் இருக்கா.இரண்டும் பொட்ட பிள்ளைய வைச்சுகிட்டு,நான் எப்படி நிம்மதியா வீட்ல இருக்க முடியும் என்று அழுதே விட்டார்.

உங்க அப்பா இருந்தவரை எனக்கு பெரிதாக ஏதும் தோன்றவில்லை. ஆனால் இப்ப நமக்குன்னு யாருமில்லை. எதையும் புரிஞ்சு நடந்துக்கோ. எனக்கு புரியுது.அவர் கட்டி காப்பாத்திய கம்பெனிக்காக தான் அமைதியா இருக்கணுன்னு புரியுது. ஆனால் அதை விட எனக்கு என்னோட பொண்ணுங்க பாதுகாப்பு தான் முக்கியம் என்று திட்டிக் கொண்டிருக்க,

கதவு தட்டும் ஓசை கேட்டு அனைவரும் பார்த்தனர். மது தன் கையில் ஒரு சேலையை வைத்துக் கொண்டு இன்பா அருகே வந்தான்.

வாங்க..மாப்பிள்ளை என்று அம்மா அழைக்க, இன்பா அவனை முறைத்து பார்த்தாள்.

இது, உனக்கு என்று இன்பா கையில் கொடுத்து விட்டு, இதயாவிடம் ஒரு பார்சலை கொடுத்தான். அவளுக்கு பிடித்த மேக் அப் செட்.அவள் திறுதிறுவென விழித்தாள்.

இன்பா யோசிக்க கூட இல்லை. அதை அவன் முன்னே தூக்கி எறிந்தாள். அம்மாவிற்கு கோபம் வந்து, இன்பாவை அடிக்க வந்தார். மது அவரை தடுத்து,

நோ..ஆன்ட்டி..என்று அவள் எறிந்ததை எடுத்து மீண்டும் அவளருகே வந்து, உன்னிடம் பேசணும் என்றான்.

இன்பா திமிறாக, இங்கேயே பேசலாம் என்றாள்.

அவனும் ஏற்றுக் கொண்டு, நாம் வசித்த இடத்திலே நமக்கு வீடு கட்டி இருக்கிறேன்.அது போல் சந்தோசமாக இருக்கலாம். எனக்கு உன் மீதுள்ள காதல் உன் பின் கேரி சுற்றிய போது தான் புரிய ஆரம்பித்தது. எங்கே அவனை ஏற்றுக் கொள்வாயோ என்று பயம் கூட இருந்தது. ஆனால் நீ அவனை வேண்டாம் என்று கூறியதும் உனக்காகவென்று எல்லாமே சேர்த்து வைத்தேன்.இப்பொழுது பணம் என்னிடம் நிறைய உள்ளது. அங்கிளுடைய கம்பெனி தானே வேண்டும். கண்டிப்பாக அதையும் வாங்கி விடலாம். நல்ல வேலையாக அவர் அடகிலே வைத்திருக்கிறார். விற்றிருந்தால் தான் கஷ்டம்.

எந்த பிரச்சனையும் இருக்காது. இதயாவையும் ஆன்ட்டியையும் கூட நம்முடன் தங்க வைத்துக் கொள்வோம் என்றான் பெருமிதத்தோடு.

டேய்,என்னடா நடக்குது? விட்டா நாளைக்கே திருமணம் நடத்தி விடுவார்கள் போல என்றாள் யாசு.அபி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாலும், அவனுக்கு இன்பா வெகு தூரம் போனது போல் இருந்தது. அவனுடைய கண்ணீர் நிற்கவே இல்லை.

ஷ்..சும்மா இரு யாசு என்று நித்தி அவளை நிறுத்தினாள்.

யாருடா அந்த பொறுக்கி? நித்தி அகிலை பார்த்தாள். அவன் தெரியாது என்று கையசைக்க, அபியிடமே கேளுங்கள். அவனுக்கு தெரியும் என்றான் அர்ஜூன்.

அபி, இதெல்லாம் என்ன? உனக்கு எங்களிடம் சொல்ல தோன்றவேயில்லையா? கவின் கேட்டான். மற்றவர்களுக்கு பதில் கூறும் நிலையிலா இருக்கிறான் அவன்.

இன்பா அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவள், என்ன சொன்ன?

பணம் நிறைய வச்சிருக்கியா? எல்லாமே எனக்கா? ஓ.கே என் பெயரில் எல்லாத்தையும் மாத்து.நான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றாள்.

என்னடி பேசுற? அம்மா கேட்க, அதை கண்டுகொள்ளாமல் சொல்லு. செய்யலாமா? கேட்டாள் இன்பா.

எல்லாத்தையுமா? கேட்டான் அவன்.

ஆமாம்.எல்லாமே வீடு முதற்கொண்டு என்றாள்.

இன்பா அம்மா சத்தமிட,கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா? கத்தினாள்.

சொல்லு?

வீடு உன் பெயரில் வைத்துக் கொள்ளலாம்.கம்பெனி மத்தது அம்மா பெயரில் என்றான்.

நீ தானடா சொன்ன? எனக்காக தானே சேர்த்து வைத்தாய்?

ஆமாம்.அம்மாவை விட முடியாதே!

அம்மாவை விட முடியாது தான்.

நீ உண்மையை பேசி என்னை சம்மதிக்க வைத்திருக்கணும். அதை விட்டு எனக்காக எல்லா தியாகமும் செஞ்ச மாதிரி பேசுற?உன் பேச்சு இப்பொழுது இனிப்பாய் தித்திக்கும். எல்லாம் முடிந்து வாழும் போது எல்லாம் மாறும்.என்னை பார்த்துக்க நினைச்சா நீ பணத்தை பத்தி பேசி இருக்கவே மாட்ட.

நான் காதலிக்கிறவன் என் பக்கம் இருக்கும் போது பாதுகாப்பான உணர்வு தோன்றணும். அவனுக்கான காதல் நானாக மட்டும் தான் இருக்கணும். நீ ஒரு பொண்ணு கூட சுத்துனேல.

ஏன் நீ சுத்தலையா? நான் ஒரு பொண்ணு கூட தான் பழகினேன்.நீ எப்பொழுதும் பசங்களுடன் தான் சுற்றுவாய்? இப்பொழுது கூட தினமும் ஒருவனுடன் வீட்டிற்கு வருகிறாய்? அவன் கேட்டு விட, இதயா அவனை அடித்து விட்டு,

என்னடா பேசுன? நான் கூட உண்மையாகவே காதலிக்கிறாய் என்று நம்பி விட்டேன். ச்சீ..இவ்வளவு சீப்பா பேசுற?என்னோட அக்கா சொக்க தங்கம்டா. அவள் பார்வையிலே தப்பா நினைக்கிறவன் கூட விலகிடுவான். அவள் பழகிய பசங்க எல்லாரும் ப்ரெண்ட்ஸ்டா.உனக்கு எங்க புரியப் போகுது? அவளோட ப்ரெண்டு லிஸ்ல கூட நீ இல்லை. ஒழுங்கா ஓடி போயிடு..என்று அவன் வாங்கிக் கொடுத்ததை விட்டெறிந்தாள்.

அர்ஜூன் அபியை பார்த்து நீ இப்படியே உட்கார்ந்து கேட்டு தான் கொண்டிருக்க போறியா? கேட்டான்.

அபி அவனை நிமிர்ந்து பார்த்தான். அபி எழ, அர்ஜூன் அவனருகே வந்து,..ப்ளூடூத் ஒன்றை கொடுத்து விட்டு அவனை பார்த்தான். அபி அவனை கட்டிக் கொண்டு “தேங்க்ஸ்டா” என்று கிளம்பினான்.

நில்லுடா, நாங்களும் வாரோம் என்று கவின் அழைக்க, அர்ஜூன் அவனை தடுத்து, அவன் தான் இதை சரி செய்ய வேண்டும் என்றான் அழுத்தமாக.

அனு அர்ஜூனிடம் செல்ல,அவளை தூக்கிக் கொண்டு வெளியே வந்தான் அர்ஜூன். அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

உனக்கு என்ன தைரியம்? பாவம் என்று நினைத்தால் அவ ஓவரா பேசுறா? நீ என்ன அவளை பத்தி அப்படி பெரும பேசுற? என்று இதயா அருகே மது வந்து கையை ஓங்கினான். இன்பாவின் அம்மா பயந்து விட்டார். வேண்டாம் என்று அவரும் தடுக்க மது அருகே வந்தார். அதற்குள் அவனது கையை பிடித்த தருண், இன்பாவை திரும்பி பார்த்தான்.

விடுடா..அவனை ஒன்னு என்றாள் அவள்.சொன்ன மறு நொடியே மதுவின் பல் உடைந்து இரத்தம் வடிந்தது தருணால்.அம்மா வாயில் கை வைத்தபடி நின்றார்.

இவ்வளவு நேரம் அமைதியாக நின்ற பையனா இவன்? என்று மலங்க மலங்க அவனை பார்த்தார். இதயா அருகே நின்ற தருணை கண்ணெடுக்காமல் பார்த்தாள்.

இதுக்கு மேல எங்க மேடமை தொந்தரவு செய்ய வருவ? வந்தா அவ்வளவு தான். இப்பொழுது பல் தான் உடைந்தது.அப்புறம் எது போகும் என்று சொல்ல மாட்டேன் நேரடியா களத்தில் தான் இறங்குவேன் என்றான்.

ஆளை வைச்சு அடிக்கிறியா? இருடி வாரேன் மது வெளியே வர, கன்னத்தில் விழுந்தது ஓர் அடி மதுவிற்கு. அபியின் கைவரிசை தான்.

என்னடா மாத்தி மாத்தி அடிக்கிறீங்க? மது வினவ, இனி நீ வருவ? அபி மீண்டும் அவன் அடிக்க கையை ஓங்கினான்.

சார்..உங்க மேடம் யாருன்னே எனக்கு தெரியாது? நான் வரவே மாட்டேன் என்றான் கையில் அவனது பல்லை வைத்துக் கொண்டு.பின் அவன் வேகமாக அங்கிருந்து ஓடி விட்டான்.

அபியை பார்த்து இன்பா, நீ என்னடா செய்ற? கேட்டாள்.

நீங்க என்ன செய்றீங்க? அவன் முன்னே கோபமாக வர அவள் பின் நகர்ந்து சென்றாள்.

நான் அன்றைக்கே சொன்னேன்ல.எல்லாத்தையும் சாதாரணமாக எடுக்காதீங்க.முதல்ல அம்மா கிட்ட சொல்லுங்க.போலீஸ் கம்பிளைண்ட் கொடுக்கலாம்னு சொன்னேன்ல. இன்னிக்கி எவனோ ஒருவன் இவ்வளவு கேவலமா பேசுறான்.அந்த அளவு விட்டுருக்கீங்க..கத்தினான். இன்பாவின் அம்மா அபியையே பார்த்துக் கொண்டிருக்க,

அபி என்று தயங்கியவாறு இதயா அழைத்தாள். அவங்களுக்கு தான் அறிவில்லை.உனக்குமா?இல்லை என்று அவளிடமும் கத்தினான்.

ஏய், என்னடா ஓவரா பேசுற? கேட்டாள் இன்பா.

நீங்க ஏதாவது பேசுனீங்கனா அவ்வளவு தான் என்று அவளிடம் கத்த, அம்மா வியந்து அபியை பார்த்தார்.

அம்மா..உங்களுக்கு விசயம் தெரிந்தவுடன்,நீங்களாவது கம்பிளைண்ட் கொடுத்திருக்கலாம்ல என்றான் தணிந்த குரலில்.

கம்பிளைண்டுன்னு அழைய முடியாதுப்பா.பொம்பள பிள்ளைய வைச்சுகிட்டு எப்படிப்பா கோர்ட்டுக்கு அழையுறது? என்று இன்பா அன்று கூறியதையே அவரும் கூறினார்.

முடியும்மா? மூளைய கொஞ்சம் யூஸ் பண்ணணும் என்றான் இன்பாவை பார்த்து பல்லை கடித்தவாறு.மத்த நேரம் மட்டும் எல்லார்கிட்டயும் வாய் கிழிய பேச முடியுதுல.பேச வேண்டிய நேரத்தில் பேசணும் என்றான் இன்பாவை பார்த்துக் கொண்டே. அவர்களுடைய அம்மா அபி பேசியதை கேட்டு மனதினுள் சிரித்தார். யாரும் இன்பாவிடம் இந்த அளவு பேசவே மாட்டாங்க. அவள் பேசவும் விட மாட்டாள். இன்று அபியை முறைத்தபடி நின்றாள் அவள்.

அவன் மேலும் பேச, நீ எதுக்கு எங்க விசயத்துல தலையிடுற? கேட்டாள் இன்பா.

நானில்லாமல் யார் தலையிடுவா? கேட்டு விட்டான்.

என்ன சொன்ன? இதயா கேட்க,நான் கேட்டேன் என்று மழுப்பினான் அபி.

அம்மா அவனை பார்த்து சிரித்தார்.

அபி நீ கிளம்பு என்றாள் இன்பா.இந்த பிரச்சனையை முடிக்காமல் எப்படி போறது? அபி கேட்டான்.

என்னோட பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன். அதில் தலையிட நீ யார்? இன்பா கேட்டவுடன் அவனுக்கு கஷ்டமானது.

நானா?..நான்..என்று தயங்கியவன்,எனக்கு உங்களை பிடிச்சிருக்கு என்று சொல்லி விட்டு வெளியே வந்தான். தருணும் வெளியே அவன் பின்னே ஓடி வந்தான்.

டேய், நீ சொல்லிட்ட..என்றான் அபியை அணைத்து தருண். அபி வீட்டிற்கு வெளியே அமர்ந்தான். இன்பா அதிர்ச்சியுடன் அபி, என்ன சொன்னான்? இதயாவை பார்த்தாள்.

அக்கா..நான் தான் அன்றே சொன்னேன்ல இதயா கூற, என்னடி நடக்குது? என்று அம்மா நாற்காலியில் தட்டு தடுமாறி அமர்ந்தார். அபி இன்பாவிடம் பேசியது அம்மாவிற்கு பிடித்திருந்தாலும் அவன் இன்பாவை விட சிறியவன் என்ற எண்ணம் ஓங்கி இருந்தது.

          “என் காதல் சொல்லும் நேரம்

           புரியாமல் சொன்னேனே!

          மறைந்திருந்த என் காதல்

       வெளிபட்டதே உன் செயலாலே!

         உன் முன் நிற்க முடியாமல்

       தயங்கினேன்! தயங்கினேன்!

          உனை விட்டு வெகு தூரம்

          செல்ல துணிந்தேனே!

        முடியாது திரும்பி உனை

         காண வந்தேனே!

        பேசாது கண்டேனே!

    என் மனதை படித்து காதலை

     ஏற்பாயோ! ஏற்பாயோ!”