ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இன்றைய உங்களுக்கான எபிசோடு 65..

அர்ஜூனை மேகா முத்தமிடும் முன்னே அவளது கழுத்தை பிடித்து இழுத்து சுவற்றில் சாய்த்தவன், உன்னை பார்த்தால் அருவருப்பாக உள்ளது. ச்சீ.. உனக்கு என் மனம் தெரிந்தும் என் அம்மாவுடன் சேர்ந்து கொண்டு என்ன செய்கிறாய்? காதல் அடுத்தவர் கூறி வராது.அது தானாய் பிறக்கும்.காதல் தமக்கான வழியை சீராக்கும்.

ஆனால் உன் காதல் மனம் சம்பந்தப்பட்டது போல் தெரியவில்லை என்று கூறவும் அவனை பிடித்து தள்ளியவள் அவளும் கோபமாக ஆமாம் இல்லை தான்.அடுத்தவர் கூறி தான் காதலை நானே ஏற்படுத்திக் கொண்டேன்.எனக்கு நீ வேண்டும் அவ்வளவு தான்.காதல் கத்தரிக்காயெல்லாம் வேண்டாம் என்று அரக்கி போல் கத்தினாள்.

அனைவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர். நந்து கோபமாக, என்ன பேசினாய்? மேகாவை அறைந்தான்.

அய்யோ விடுங்கள் என்று ஸ்ரீ நந்து முன் வந்தாள்.அவன் கோபமாக தரையில் அமர்ந்து அழுதான்.அவன் மேகாவை காதலிக்கிறான். அவள் இவ்வாறு பேசவும் அவனால் தாங்க முடியவில்லை.எல்லாரும் அவனை பார்க்க,மேகாவும் நந்துவை அதிர்ந்து தான் பார்த்தாள்.

அர்ஜூன் வேகமாக நந்து அருகே வந்து அவனை அணைத்தான்.அவனும் அர்ச்சுவை கட்டிக் கொண்டு அழுதான். அர்ஜூன் நிமிர்ந்து கண்களை துடைத்து விட்டு, மேகாவை பார்த்து,உனக்கு இப்பொழுதாவது புரிகிறதா? என்று கத்தினான்.

நீ ஏன்டா இப்படி பண்ண?நந்துவை திட்டினான் அர்ஜூன்.

அவளுக்கு உன்னை பிடிக்கும் என்று தான் செய்தேன்.ஆனால் இப்படி கேவலமாக பேசி விட்டாள். இதற்காகவா உதவி செய்தேன்? என்று நந்து அழுதான்.

மேகா புரியாமல் அவர்கள் அருகே வரவும்,அங்கேயே நில். பக்கத்தில் வந்தால் உன்னை நானே கொன்று விடுவேன் என்று கத்தினான் நந்து.

நந்து..என்று திக்கிக் கொண்டே இருவர் அருகே வந்தாள். அர்ஜூன் கூற ஆரம்பித்தான். அவன் உன்னை பார்த்த நாளிலிருந்து விரும்ப ஆரம்பித்து விட்டான். உனக்கு நினைவிருக்கிறதா? கேட்டான் அர்ஜூன்.

அவள் அங்கேயே உடைந்து அமர்ந்து, நந்து என்றாள்.

கண்கள் சிவக்க, நிமிர்ந்த நந்து, ஆமாம் நான் உன்னை பார்த்த நாளிலிருந்து காதலிக்கிறேன். அப்பொழுது எனக்கு அர்ச்சுவை பற்றி தெரியாது. நம்முடைய பதினைந்தாவது வயதில் தான் நீ அறிமுகப்படுத்தி தான் அவனை சந்தித்தேன். என்னுடைய காதல் அவனுக்கு கொஞ்ச நாட்களிலே தெரிந்து விட்டது. நீ தான் பத்து வருடங்களாகியும் என்னை பெரியதாக கண்டு கொள்ளவில்லை. நீ அவனை காதலிப்பதாக கூறியதால் தான் உனக்கு உதவினேன். ஆனால் நீ இப்படி சீப்பா பேசுற? என்றவன். நான் கிளம்புறேன் அர்ஜூன் என்று எழுந்தான்.

வினிதா அக்கா முன் வந்து, சாப்பிட்டு கிளம்பு என்றார் நந்துவிடம்.என்னை மன்னிச்சிருங்க..இனி என்னத்த சாப்பிடுறது? வெளியே கிளம்பினான்.

அர்ஜூன் அவனை நிற்க சொல்லுடா என்றாள் மேகா ஏதும் நடக்காதவாறு அழைக்க அவன் அவளை முறைத்து விட்டு, இனி அவன் உன் முகத்தில் விழிப்பான் என்று கூட தோன்றுகிறதோ! அவன் மட்டுமல்ல நீ என் அருகே வந்தாலென்றால் கொன்று விடுவேன். பார்த்துக் கொள் என்றான்.

மேகா அழுது கொண்டிருக்க, உறங்கிக் கொண்டிருக்கும் அனு பாப்பாவை ஸ்ரீயிடம் கொடுத்து விட்டு,அக்கா அவளை தூக்கி விட்டு ஓர் அறைக்குள் அழைத்து சென்றார்.

அர்ஜூன் மீது யாருக்கும் கோபம் போகவில்லை.எல்லாரும் அமைதியாக இருக்க, ஸ்ரீ அனு அறையில் அவளை பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையில் மூழ்கியவாறு இருந்தாள்.

அர்ஜூன் அங்கே வந்து, அவள் அருகே அமர்ந்து அவளை பார்த்தான்.அவள் கையை பிடித்து தன் கைக்குள் வைத்தான். அப்பொழுது தான் நிலைக்கு வந்தாள் ஸ்ரீ.

என்ன ஆச்சு அர்ஜூன்? என்று அவன் பின் பார்த்தாள். யாருமில்லாது அவன் மட்டும் அங்கிருக்கவே அர்ஜூன் என்றாள்.

அவன் கண்ணில் நீர் உதிர..ஸ்ரீ என்றான்.

எதுக்குடா அழற?

சாரி ஸ்ரீ. அவள் உன்னை அடித்த போது நான் ஏதும் பேசாமல் இருந்து விட்டேன்.அதற்கு காரணம் கூட உள்ளது என்றான்.

அவன் வாயை தன் கையால் மூடிய ஸ்ரீ, பேசாதே அர்ஜூன். உன் செயலுக்கு அர்த்தம் இருக்கும் என்று நன்றாக தெரியும். எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை. ஆனால் அர்ஜூன்..அவள் தாரிகாவுடன் சண்டை போட்டாள். அவளை அடிக்க வந்தாள்.

உனக்கு தடுக்க தோன்றவில்லையா? நீ அம்மாவிடமும் தாரிகாவிடமும் உரிமையாக தான் பழகுகிறாய்.ஏன் தடுக்கவில்லை? விருப்பமிருந்தால் கூறு என்றாள்.

மேகாவின் அப்பாவும் என்னுடைய அம்மா நல்ல ப்ரெண்ட்ஸ்.அவர் என்ன நினைக்கிறாரோ அதை நடத்தியே தீருவார் கம்பெனி விசயமாக இருந்தாலும் சரி..வீட்டு விசயமாக இருந்தாலும் சரி..

முதல் முறை என்னை பார்த்தவுடனே அவருக்கு பிடித்து விட்டது. அப்பொழுதே அம்மாவிடம் எனக்கு கம்பெனி பொறுப்பை கொடுக்க சொல்லி இருந்தார்.அம்மாவிற்கு என்னை பற்றி நன்றாக தெரியும்.அவரே வேண்டாம் என்று மறுத்து விட்டார். அப்புறம் தான் மேகாவை எனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி அம்மாவிடம் கேட்டார். அம்மாவிற்கு அவளை மிகவும் பிடிக்கும்.அதனால் என்னை சம்மதிக்க வைக்கிறேன் என்று கூறி என்னை ஒத்துக் கொள்ள சொன்னாங்க. நான் அம்மாவிடம் பதில் ஏதும் கூறாமல் அவரிடம் நேராகவே உங்க பொண்ணு எனக்கு தங்கை மாதிரின்னு சொல்லிட்டேன்.ஆனால் அதற்கு முன்னே அவளை தயார் செய்து அழைத்து வந்திருந்தார்கள்.

நான் கூறியதை கண்டு கொள்ளவே இல்லை அவரும். இப்பொழுதே எங்கேஜ்மென்ட்டுன்னு சொன்னாங்க.என்ன செய்வதென்று புரியாமல் இருந்தாலும் என்னால் முடியாது என்பதில் தெளிவாக இருந்தேன். அனைவர் முன்னிலையிலும் திருமணம் முடியாது என்று வந்து விட்டேன்.அவள் முதலிலே ஒத்துக் கொண்டதால்..அவளிடம் என்னை சம்மதிக்க வைக்கும் பொறுப்பை அவளிடம் கொடுத்து விட்டார்கள்.அவள் வேறு வழியில்லாமல் என்னிடம் தோழி என்று நடித்து பின் சம்மதிக்க வைக்கலாம் என்று நினைத்திருக்கிறாள்.

இப்பொழுது எங்களால் அதிகம் காயப்பட்டது நந்து தான். அவன் மிடில்கிளாஸ் பையன் தான். கண்டிப்பாக அவனை மேகாவின் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.எல்லாமே மேகாவின் அப்பா கையில் தான் உள்ளது.

அவங்க அப்பாவிடம் கூறியதை அவளால் செய்ய முடியவில்லை. இனி அவர் என்ன செய்யப் போகிறாரோ? இந்நிலையில் தாரிகாவை தங்கை என்று கூறினால் தேவையில்லாமல் பிரச்சனை எழும்.அதனால் தான் அமைதியாக இருந்தேன். அப்புறம் நீ..என்று அவன் பேச,

நான்..சொல்லு அர்ஜூன் என்றாள் ஆர்வமுடன்.

இல்லை ஸ்ரீ, சாரி என்றான். உனக்கு வலித்ததா? என்று அவளருகே நெருங்கி வந்த அர்ஜூன் அவளது கன்னத்தை வருடிக் கொண்டே அவளை பார்த்தான். ஸ்ரீ அமைதியாக அவனையே பார்த்தாள். பின் மெதுவாக அவனது கன்னமருகே கையை கொண்டு சென்ற ஸ்ரீ கிள்ளி விட்டாள். அவன் வேகமாக எழுந்து, ஷ்..ஆ..என்று சத்தமிட்டான்.

அய்யோ பாப்பாடா..என்று அவனருகே வந்து அவனது வாயை மூடி விட்டு, பாப்பாவை பார்த்து விட்டு அவன் புறம் திரும்ப, அவனது கருவிழியில் ஸ்ரீ முகம் தெரிவதை பார்த்து, அவனது கண்ணையே பார்த்துக் கொண்டே கையை எடுத்தாள் ஸ்ரீ.

அதற்குள் அவன் கை அவளது இடையை பிடித்திருக்க,அதை கூட கவனியாது அவள் அவனது கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள். அர்ஜூன் அவனது கையை எடுத்து விட்டு அவளை பார்க்க, அவள் அவன் கண்ணையே பார்ப்பதை கண்டு புன்னகையுடன், ஸ்ரீ..என்று மெதுவாக அழைத்தான்.அவள் மெதுவாக நினைவிற்கு வந்து, அர்ஜூன் இந்த கண்ணில் நான் தெரிகிறேன் என்றாள்.

ம்ம்..என்றவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,அர்ஜூன் ஸ்ரீ கையை இறுக பற்றி இருந்தான்.

ஏய், என்ன பண்றீங்க? என்ற சத்தம் கேட்டு இருவரும் சுதாரித்தனர். ஆனால் அர்ச்சு அவள் கையை விடவில்லை. நிவாஸ் அர்ச்சுவை  முறைத்துக் கொண்டு, வா.. ஸ்ரீ.. சாப்பிடலாம்.

அவள் கோர்த்திருந்த கையை பார்த்தாள். அர்ச்சு விட மாட்டேன் என்று தலையசைக்க, அவள் நிவாஸை பார்த்தாள்.

நீ அவளை அழைத்து செல்லலாம்.நான் அவளிடம் தனியாக பேசி விட்டு விடுகிறேன் என்றான் அர்ஜூன். நிவாஸ் போகாது நிற்கவே, நான் உன்னிடம் ஏற்கனவே கூறினேன்.அது படி தான் நடந்து கொள்வேன். ப்ளீஸ் என்றான்.

நிவாஸ் வெளியே நிற்க, ஸ்ரீயிடன் நெருக்கமாக அர்ஜூன் வந்தான். இருவரது இதழ்களும் உரசும் தூரம் நூலிலையாய் இருக்க, ஸ்ரீ திணறி போனான். அவள் பதட்டமாக..அவன் பேச ஆரம்பித்தான்.

ஒரு விசயம் நல்லா நினைவில் வைத்துக் கொள்.உன்னை யாரும் ஏதும் செய்ய முடியாது செய்வதென்றால் என்னையும் அகிலையும் தாண்டி தான் நடக்கும்.நீ சாவதற்கான வாய்ப்பே இல்லை.

நீ கூறியதும் சரி தான். நீ எங்களுடைய குக்கூ தான். நீ தான் என்னுடைய  ஏஞ்சல். நம் அனைவருக்கும் சம்பந்தம் உள்ளது தான்.உனக்கு நினைவு வரும் போது தெரிந்து கொள்.அப்புறம் நீ நினைத்தது போல் உன் காதலுடன் சந்தோசமாக வாழ்வாய். வாழ வைப்பேன் என்றான்.

அவள் கண்ணீர் நிற்காமல் ஓடியது. அர்ஜூன் நீ நாங்கள் பேசியதை கேட்டாயா? என்று அவனை அணைத்துக் கொண்டாள்.அவன் அப்படியே நின்றான் உணர்வை வெளிக்காட்டாதவனாய்.அகிலுக்கும் தெரியும் என்று அர்ஜூன் கூறியவுடன் அவனிடமிருந்து விலகினாள் ஸ்ரீ.

“ஐ அம் சாரி அர்ஜூன்” என்று விட்டு அவள் அங்கிருந்து வெளியே வந்தாள். நிவாசும் அகிலும் இவர்கள் பேசியதை கேட்டிருப்பார்கள்.

அகில் அங்கிருந்து செல்ல, நிவாஸ் அங்கேயே நின்றான். என்னால முடியவில்லை ஏஞ்சல்..என்று அர்ஜூன் வாயை பொத்திக் கொண்டு அழுது கொண்டிருந்தான். அர்ஜூனை பார்க்க நிவாஸிற்கு பாவமாக இருந்தது.ஸ்ரீயும் மனதில் வலியுடன் அங்கிருந்து சென்றிருப்பாள்.

ஸ்ரீ மனதில் அர்ஜூன் வந்து விட்டான். அகிலும் கேட்டு விட்டானா? என்ற வருத்தத்தில் தான் சென்றிருப்பாள். ஆனால் அர்ஜூன் அவனை நிராகரித்து விட்டாள் என்று நினைத்து அழுது கொண்டிருந்தான். அகில் ஸ்ரீ நினைத்தது போல், தன்னை பற்றி அர்ஜூன் பேசியதால் தான் அவள் வெளியே வந்து விட்டாள் என்று சரியாக நினைத்தான்.

தருணுடன் இதயா அமர்ந்திருக்க, நடன வகுப்பு முடித்து இன்பா வந்தாள். அவளை பார்த்து இருவரும் எழுந்து வர,போகலாமா மேம்? தருண் கேட்டான்.

ஓ.கே என்று மூவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அந்த விக்கியின் கார் இடையே வர,பிரேக்கை அழுத்தினான் தருண்.

பதறிய இதயா, நோ..தருண் நிறுத்தாதே! சீக்கிரம் வண்டியை எடு..என்று அவளது தோளை தட்ட,சும்மா இரு. அவனை கவனிச்சுட்டு வாரேன் என்று வண்டியிலிருந்து இறங்கினான்.

ப்ளீஸ் வேண்டாம் என்று இதயா அவனது கையை பிடிக்க,அவன் தான் பார்த்துக்கிறேன்னு சொல்றான்லடி என்றாள் இன்பா.

அக்கா..அவனுக்கு கையில் ஏற்கனவே பெயினா இருக்கு, இப்பொழுது இதெல்லாம் வேண்டாம்.எனக்கு பயமா இருக்கு என்றாள்.

பெயினா? என்னடி சொல்ற? என்று இன்பா தருணை பார்த்தாள்.

இதை பத்தி அப்புறம் பேசுவோம்.சீக்கிரம் வா..அவசரப்படுத்தினாள் இதயா. நிலை புரிந்த தருணும் வண்டியில் ஏறி விட்டு, இரண்டு பேரும் இறுக்கமா பிடிச்சுக்கோங்க..என்று பைக்கை வேகமாக எடுத்தான். இதயா அவனை இறுக கட்டிக் கொள்ள, இன்பா இதயாவையும்,வண்டி சீட்டையும் இறுக பற்றினாள். அவன் சிறு புன்னகையுடன் வேகமெடுத்தான்.விக்கியும் சேஸ் பண்ணி வர, இருவரும் இவ்வாறாக இருக்க..இதயா நெஞ்சமோ படபடத்தது.

ஒரு கட்டத்தில் விக்கியை தவிர்க்க வேறு வழியில் சென்றவன்.இருட்டான பாதையில் வண்டியை மறைத்து வைக்க,விக்கி கொஞ்ச நேரம் தேடி விட்டு,அவன் சென்று விட்டான். அதை உறுதிபடுத்தி விட்டு, இன்பா வீட்டிற்கு வந்தனர்.

அவர்களை இறக்கி விட்டு இறங்கிய தருணிற்கு தோள்பட்டையில் வலி அதிகமானது. அவன் அதை வெளிக்காட்டாமல் நான் வருகிறேன் மேம் என்றான்.

வீட்டிற்கு வா..என்று இன்பா அழைத்துக் கொண்டிருக்க, வீட்டிலிருந்து வெளியே வந்தனர் மதுசூதனும் அவனது பெற்றோர்களும். அவர்களை பார்த்து இன்பா புன்னகையுடன்,ஆன்ட்டி என்று மதுவின் அம்மாவை கட்டிக் கொண்டு,ரொம்ப நாளாயிற்றே..பேசினாள்.

தருண் அபிக்கு போன் செய்து தள்ளி நின்று நடந்ததை கூறி பேசிக் கொண்டே வீட்டருகே வந்தான். இதயா ஓடி வந்து இன்பாவை கட்டிக் கொண்டு,கங்கிராட்ஸ் அக்கா என்று இன்பாவை அணைத்து தருணை பார்த்து கண்ணடித்தாள்.அவன் புரியாமல் விழித்தான். தருண் அமைதியாக இருக்க,நடப்பது அபிக்கு கேட்டது.

என்ன மருமகளே! எப்ப வீட்டுக்கு வர? மதுவின் அப்பா கேட்டார்.

என்ன அங்கிள் கேட்டீங்க? என்று இதயாவை விலக்கி விட்டு அவளை பார்த்தாள்.

அக்கா, சோடாபுட்டி ரொம்ப ஹேன்சமாக இருக்கார்க்கா. மாமா..என்றாள். இன்பா கோபத்துடன் இதயாவை முறைத்தாள்.

இன்பாவின் அம்மா அங்கே வந்து, நீங்கள் செல்லுங்கள்.நான் அவளிடம் பேசுகிறேன் என்றார்.

நல்ல பதிலை சொல்லும்மா என்று மது அம்மா கூற,ஆன்ட்டி..என்று பேச முடியாமல் தயங்கினாள் இன்பா.

மது இன்பாவை பார்த்து கண்ணடிக்க, மாமா..நில்லுங்க என்று இதயா அவனை நிறுத்தி போனை எடுத்து அவனை ஒரு போட்டோ எடுத்தாள்.தருண் இதை பார்த்து அசையாமல் இருக்க, அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.