அவர்கள் கூற, அவன் போனை மரத்தில் மாட்டி விட்டு.மண்ணில் குச்சியை வைத்து..சம்ஸ் செய்து விவரித்தான்.
புவனா எழுத,அண்ணா..திரும்ப சொல்லுங்க என்றாள் ஜானு.
போதும் அண்ணா என்ற புவனா ஜானுவிடம்,
ஜானு உனக்கு எப்படியும் புரிய போவதில்லை. நீ என்னை பார்த்து காப்பி பண்ணிக்கோ.அப்புறம் நான் சொல்லித் தாரேன்.
ஏன்டி மானத்தை வாங்குகிறாய்? சும்மா இருடி என்று புவனாவிடம் கூறி விட்டு, அண்ணா நீங்க சொல்லுங்க என்றாள்.
அவர்கள் முடித்து போனை வைத்தனர்.அவன் நெட்டி முறித்தவாறு கையை தூக்க, கையிலிருந்த குச்சி பட்டு மரத்திலிருந்த தேன் கூடு கலைந்தது.இதை பார்த்து வேகமாக அனைவரும் எழுந்தனர்..
இதயா அவளது துப்பட்டாவை எடுத்து அவனை நோக்கி ஓடி வந்து இருவரது தலையிலும் அணைத்தவாறு போட்டுக் கொண்டு,வாடா..சீக்கிரம் ஓடு என்று கத்தினாள்.
என்னடி பண்ற? இன்பா ஓரடி எடுத்து வைக்க ,மேம். நோ..என்று இன்பாவை தடுத்து, துகிராவையும் அழைத்து கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு வந்தான்.
டேய்,என் தங்கை டா..என்றாள் இன்பா.
ரெண்டு பேரும் இங்கேயே வந்து விடுவார்கள்.தருணிற்கு நடப்பது புரியாமல் இதயாவை பார்த்தான்.சீக்கிரம் வா தேனீ..என்றாள்.
தேனீயா? என்று அவன் அவனது சட்டையை கழற்றி அவளை மறைத்தவாறு போட்டு..அவள் கையை பிடித்து இழுத்துச் சென்றான்.பக்கத்தில் இருந்த நீச்சல் குளத்தில் பசங்க,நீச்சல் பயிற்சியில் இருக்க, அங்கே வந்த தருண் பசங்களை மறைவான இடத்திற்கு செல்ல சொல்லி கத்திக் கொண்டே வந்தான்.
அங்கிருந்த கோச் என்னடா செஞ்சீங்க? சீக்கிரம் என்று உடை மாற்றும் அறைக்குள் மற்றவர்களை தள்ளி அவரும் மறைந்து கொண்டார்.
உனக்கு நீச்சல் தெரியுமா? கேட்டுக் கொண்டே குளத்திற்கு பக்கம் வந்தவுடன் இல்லை என்று அவள் கூறவும் இருவரும் தண்ணீரில் விழுந்தனர். தலையை வெளியே கொண்டு வராதே! மூச்சை கொஞ்ச நேரம் பிடித்து வைத்துக் கொள் என்றான்.
இருவரும் தண்ணீருக்குள் இருந்தனர்.அவள் முடியவில்லை என்று தலையசைத்து அவனது மார்பிலே ஒட்டிக் கொண்டாள்.
தண்ணீரிலிருந்து தலையை மெதுவாக வெளியே நீட்டி பார்த்தான்.தேனீ இல்லாமல் இருந்தது. அவள் மயங்கி இருந்தாள்.
அவளை அவன் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான். கோச்சும் பசங்களும் வந்தனர். தருண் இதயாவை படுக்க வைத்து வயிற்றை அழுத்த தண்ணீர் வாயிலிருந்து வந்தது. அவளது கன்னத்தை தட்டி எழுப்பினான். அவள் எழவில்லை. வாயோடு வாய் வைத்து தண்ணீரை எடுத்தான்.அவள் இறுமினாள்.பின் எழுந்து அமர்ந்தாள். அவளை சுற்றி பசங்களை பார்த்து, வேகமாக எழுந்தாள்.
கால் வழுக்கி மீண்டும் தண்ணீரில் விழ, தருண் கையை கொடுத்தான். அவள் அவனையும் சேர்த்து இழுக்க மறுபடியும் உள்ளே விழுந்தனர்.
சாரிடா என்றவள் அவனை கட்டிக் கொண்டு பயமா இருக்குடா.பசங்களா இருக்காங்க என்றாள். அவன் அவளை தள்ளி இழுத்து சென்று முதலில் அவளை தூக்கி உட்கார வைத்து விட்டு,அவளை பார்த்து நானும் பையன் தான்மா என்றான்.
அவள் ஆடை நனைந்திருக்க அவள் கையை வைத்து மார்பகத்தை மறைத்தாள். அவன் வேகமாக திரும்பி அவளது துப்பட்டாவை கொடுத்தான். அவள் போட்ட பின் வெளியே வந்தான்.
நீ எழாதே!..நான் வருகிறேன் என்று வெளியே வந்த தருண்.அவனது கையை நீட்டினான். அவள் அவனது கையை பிடித்து மெதுவாக எழுந்து விழாமல் வந்து விட்டாள்.
அங்கிருந்த பசங்க இதயாவை பார்த்து,அந்த பொண்ணுடா..கேண்டின்ல.. தண்டனை கொடுத்தாங்கல அவள் தான்டா.
உனக்கென்ன பெரிய இவன்னு நினப்பா? சீனியர்ஸ் நாங்களே சும்மா இருக்கோம் என்று இதயா அருகே வந்தான் ஒருவன்.
இல்லை சீனியர். ப்ரெண்ட்ஸ்..என்று பேசிக் கொண்டே தருண் பின் ஒளிந்தாள்.
டேய் விடுடா, அதான் தண்டனை செய்து கொண்டிருக்கிறாளே! என்றான் மற்றொருவன்.
அதை எப்படிடா விடுறது? அவளுக்கு அது தெரியணுமே என்று தருணை கடந்து வந்து இதயாவை பார்வையாலே வருடினான்.
வா..கிளம்பலாம் என்று தருண் இதயா கையை பிடித்தான்.
சீனியர் சொல்றேன்ல நில்லுடா என்று அவன் சத்தமிட,
சீனியர்.நீங்க சீனியர் மட்டும் தான்.அதுலயே இருங்க. அவளுக்கான தண்டனையை அவள் செய்து கொண்டு தான் இருக்கிறாள்.அதற்கு மேல் தண்டனை கொடுக்க,கல்லூரி நிர்வாகம் உள்ளது என்றான்.
உங்களுக்குள்ள என்னடா? நீ டேஸ்ட் பண்ணேல.நான் ஒரு முறை பண்ணிக்கிறேன் என்று சீனியர் முன் வர,அப்பொழுது தான் இதயா தன் உதட்டை தொட்டு பார்த்தாள்.அவன் அருகே வர, இதயா தருண் கையை இறுக்கமாக பற்றினாள்.
நான் அவளுக்கு முதலுதவி தான் செய்தேன்.தவறாக பேசாதீர்கள் என்றான்.
சரி,நானும் உதவுகிறேன் என்றான்.
அவங்க அக்கா அவளை தேடுவார்கள்.நாங்கள் செல்கிறோம் என்று நடந்தான்.
ஓ..அக்காவை வெளியே வைத்துக் கொண்டு,இங்கே இருவரும் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா?சரி.நான் அக்காவை சென்று பார்க்கிறேன் என்றான்.
தருண் முறைத்துக் கொண்டே அவனை திரும்பி பார்த்தான்.
என்னடா முறைக்கிறாய்? ஒன்று அவளை விட்டு செல் இல்லை வழி விடு.இவளது அக்கா ஒன்றும் சும்மா இல்லை.ரொம்பவே சூப்பரா இருப்பாங்க..
அவளது கையை விடுத்தவன்.அதனால் தான் நானும் இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தேன் என்று அவர்கள் பக்கம் வந்தான்.
டேய்,என்னடா செய்றீங்க? கோச் அங்கே வந்தார்.அவரை பார்த்து தருண்,
கோச்,உங்க பசங்க அதிகமா பேசுறாங்க? சொல்லி வையுங்கள் என்றவன் இதயா கையை பிடித்து நகர, உன்னை என்று சீனியர் தருண் அருகே வர, கோச் அவனை நிறுத்தி முதலில் போட்டிக்கு தயாராகுங்கள் திட்டினார்.