வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-55
239
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
உங்களுக்கான இன்றைய எபிசோடு 55..
அர்ஜூன் வண்டியை வழியிலே நிறுத்தி,கவின் நீ அவளை கல்லூரிக்கு அழைத்து செல்.நாங்கள் வருகிறோம்.
நீ எங்கே செல்ல போகிறாய்? கவின் கேட்டான்.
வந்து கூறுகிறேன் என்றான்.
ஆமாம்.அவன் வந்து கூறுவான்.வாங்க, நாம் செல்லலாம் தாரிகா கூறினாள்.
ஸ்ரீயும்,நிவாஸூம் அவளை உற்று பார்க்க,நிஜமாக தான் நீ கிளம்புடா அண்ணா. நாம் அப்புறம் பேசலாம் என்றாள்.
அர்ஜூன் கிளம்பினான்.பின் கவின் வண்டியை எடுத்தான்.
நோ..சீனியர்..நோ அர்ஜூன் பைக்கை பின் தொடருங்கள்.
கவின் அவளை திரும்பி பார்த்து, நாம் இப்பொழுது எங்கே செல்ல வேண்டும்? கேட்டான்.
அவள் கோவிலை கூறினாள்.அவனும் கிளம்பினான். இருவரும் கோவிலை அடைந்தனர். அர்ச்சுவின் பைக் வெளியே நின்று கொண்டிருந்தது..
வாங்க..சீக்கிரம் போனால் தான் அவர்கள் என்ன பேசுகிறார்கள்? என்பது தெரியும்.அவனது கையை பிடித்து இழுத்தாள்.
யார்? என்ன பேசுவார்கள்? கேட்டான்.
வாங்க..நீங்களே பாருங்கள் என்று அழைத்து சென்றாள்.
ஸ்ரீ..நிவாஸ் அர்ஜூனுடன் வருவதை பார்த்த ஜிதின் தயங்கினான்.அர்ஜூன் அவனருகே வந்து, நீ உண்மையாகவே அவளுக்கு உதவ தான் போகிறாயா? இல்லை.அவளை உன் அம்மாவிடம்..
அதற்குள் ஜிதின், என்னால் அவளை மகிழ்ச்சியாக்க முடியவில்லை என்றாலும், கண்டிப்பாக உதவுவேன். இருவரும் முறைத்துக் கொண்டு நின்றனர்.
கவினும் தாரிகாவும் மறைந்து அவர்களை பார்த்தனர்.
சீனியர் அவனை பாருங்களேன்.என்ன விசயம்னு தெரிஞ்சிட்டு வருவான்னு பார்த்தா இருவரும் கோவிலிலே மல்யுத்தம் நடத்துவார்கள் போல், கவின் தோளை பற்றிக் கொண்டு நின்றாள். அவன் தாரிகாவை பார்க்க, அவள் அவனை பார்த்து கையை எடுத்து விட்டு,
சீனியர்,அங்கே பாருங்கள் என்றாள்.
எங்கே? என்று இருபதலியாக அவன் வினவ,அவள் விலகினாள்.அவளது கையை பிடித்து அவளை முன் நிறுத்தி,அவனும் அவர்களை கவனித்தான்.
யார் முதலில் அருகே வந்தது புருவத்தை உயர்த்தினான் கவின்.
தெரியாமல் என்றவள் அவனை விட்டு விலக, அங்கிருந்த ஒருவர் மீது மோதி விட்டாள். அவர் அவளை திட்ட, கவின் அவளை இழுத்து மறைத்துக் கொண்டான்.
ஏதும் பிரச்சனையா? என்று ஸ்ரீயும் மற்றவர்களும் திரும்பி பார்த்தனர்.
அங்கிருந்த ஒரு பெண், இப்போதெல்லாம் பாரேன். பசங்க,பொண்ணுங்க எவ்வளவு ஃப்ரீயா இருக்காங்க. நம்மை எல்லாம் வெளியே தனியே விடவே மாட்டாங்க..பேசிக் கொண்டே பிரகாரத்தை வலம் வந்தனர். இதை கேட்ட தாரிகா முகம் சுருங்கியது.
ஸ்ரீக்கு ஏதோ தோன்றவே,அவர்கள் கை காட்டி பேசிய இடத்திற்கு சென்று பார்த்தாள். மற்றவர்களும் அவள் பின்னே சென்றனர்.
தாரிகா அழுவதை போல் நிற்க, கவின் அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான்.
அர்ஜூன் கோபமாக, ஏன்டா..உங்களை நான் கல்லூரிக்கு தானே போக சொன்னேன்.இங்க என்னடா செய்றீங்க? கோபமாக கவின் அருகே வந்தான்.
நான் தான் அவரை அழைத்து வந்தேன் என்றாள் தலையை தொங்கவிட்டபடி.
உன் பேச்சிலே எனக்கு சந்தேகம் வந்தது.சரியா போச்சு என்றான் நிவாஸ்.
தாரிகாவும், கவினும் அமைதியாக இருந்தனர். அர்ஜூன் கோபமாக அவளருகே வந்தான். ஸ்ரீ அவனது கையை பிடித்து தடுத்தாள்.அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,
ஆமாம்,எதற்கு அவர்களிடம் இப்படி கோபப்படுகிறாய்? எனக்கு நிச்சயமாக தெரியும்.இவர்கள் இங்கே வருவார்கள் என்று.அவளுக்கு நான் என்ன பேசப் போகிறோம் என்று தெரிய வேண்டும்.சீனியர் என்ன நடக்கிறதென்று பார்க்க வந்திருக்கலாம் இல்லையென்றால் அவளுடன் முதல் முதலாக தனியே கோவிலுக்கு வர வாய்ப்பு கிடைத்த சந்தோசத்தில் வந்திருக்கலாம்
கோவிலுக்கு தானே இதில் என்ன தவறு? யார் என்ன பேசினால் நமக்கென்ன? பேசுபவர்களுக்கு பேச ஏதாவது செய்தி வேண்டும்.அது இவர்கள் மூலம் கிடைத்தது.அவ்வளவு தானே!
பேசிய அம்மாவை அழைத்து ஸ்ரீ, அம்மா அங்கே பாருங்களேன். அது யாருன்னு தெரியுதா? கேட்டு விட்டு அவளாகவே உங்க பொண்ணு தான்.ஒளிஞ்சுருக்கா ஒரு பையனுடன்.
அவர்கள் கோபத்தோட அந்த பொண்ணை பார்க்க,ஒரு பையனுடன் அவள் வெளியே வந்தாள். அவர்கள் அவளை அடிக்க கையை ஓங்கினார்.தாரிகா ஓடி வந்து அவர்களது கையை பிடித்து நிறுத்தினாள்.
ஸ்ரீ அவர்களை பார்த்து,உங்களது காலத்தில் நீங்கள் வெளியே வராமல் இருந்திருக்கலாம்.ஆனால் இப்பொழுது வெளியே வந்தால் தான் அவர்களால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும்.தெளிவான முடிவு எடுக்க முடியும். நீங்கள் திருமணத்தில் அடி எடுத்து வைத்த போது வீட்டு நிர்வாகம் தெரிந்திருக்கும்.மற்றவர் கூறி வெளி உலகத்தை அறியக் கூடாதும்மா. யாரிடம் எப்படி பேச..என்று கூட திணறி தான் இருப்பீர்கள்.ஆனால் உங்க பொண்ணுக்கு இப்பொழுதே தெரியும். அவள் காதலித்தாலும் அவர்களது எல்லை கண்டிப்பாக தெரியும்.இதில் பாதகமும் உள்ளது தான். பசங்க..ஏமாற்றவும் செய்வாங்க.அதை அவள் எவ்வாறு புரிந்து கொள்கிறாளோ அது தான் அவளது வாழ்க்கை.
உங்க பொண்ணு அவருடன் கோவிலுக்கு தான் வந்திருக்கிறாள்.தவறாக எங்கும் செல்லவில்லை. இப்பொழுது கூட உங்கள் மேல் உள்ள பயம் தான் தெரிகிறது.அவளது கண்ணில் தெளிவும் அமைதியும் தெரிகிறது.
தவறு செய்வர்கள் கண்ணில் அமைதி, தெளிவு இருக்காது.அந்த பையனை பாருங்கள் அவன் அவளது கையை இறுக்கமாக பிடித்திருக்கிறான். தவறு செய்பவன் உங்களை பார்த்த உடனே அவளை விட்டு ஓடியிருப்பான்.
கவின் தாரிகாவை பார்த்து, இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். அவளுடைய அம்மாவிற்கு தெரியும்.அவனை ஏற்றுக் கொண்டார்.
அவர்கள் ஒன்றாக இங்கே வந்தது.ஊர் சுற்ற இல்லை. அவர்களுடைய தோழிக்கு உதவ தான். என்ன? நேராக முன் வந்து நிற்காமல் மறைந்து நின்று பார்த்து தவறாக உங்கள் கண்ணில் பட்டு விட்டார்கள் என்று அவர்களை முறைத்தாள்.
நீ உங்க பொண்ணிடம் பேசுங்கள்.அந்த பையனை பற்றி முழுதாக அறிந்து, உங்க பொண்ணுக்கு சரியானவரா? என்று முடிவெடுங்கள் என்றாள்.
என்னடி,எல்லாரும் பொண்ணு பாக்க தான் கோவிலுக்கு வருவாங்க.உன் மவ, மாப்பிள்ளையை பார்க்க வர வைச்சுட்டா பக்கத்தில் இருப்பவர் கூற, மற்றவர்கள் நகைத்தனர். அந்த அம்மாவிற்கு ஒரு மாதிரி இருந்தாலும் அவர்களிடம் பேச தனியே அழைத்து சென்றார்.
வேடிக்கை பார்த்த அனைவரும் ஸ்ரீயை பார்த்துக் கொண்டே, சில பேர் அவள் பேசியதற்கு ஒப்பாகவும்,சில பேர் என்ன இந்த பொண்ணு இப்படி பேசுறா? என்று அவள் முன் பேசிச் செல்ல, சிறு புன்னகையுடன் நண்பர்களை பார்த்தாள்.
ஸ்ரீ..செம்மையா பேசுன போ நிவாஸ் பாராட்ட,அவர்களை பாரேன்.உன்னை பற்றி ஏதோ தவறாக நினைப்பது போலவே பார்க்கிறார்கள்.ஜிதின் கூறினான்.
நினைத்தால் நினைக்கட்டும்.என் மனதுக்கு பட்டதை நான் பேசினேன் என்றாள். அர்ஜூன் கண்கள் அகலாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தன. அதை பார்த்த ஸ்ரீ அவனை கவனிக்காதவனாய் கடந்து தாரிகாவை அருகே வந்து, அவளது காதை திருகி..அர்ஜூன் உன்னை கல்லூரிக்கு செல்ல சொன்னானே! அப்போதே நினைத்தேன்.நீ வருவாய் என்று அவள் பேச,
விடு ஸ்ரீ..வலிக்குது என்றாள் தாரிகா.திரும்பி கவினை பார்த்தாள். அவன் சிரித்துக் கொண்டிருந்தான்.அவரை மட்டும் விட்டு விட்டாய் தாரிகா கவினை கோர்த்து விட,
ஓய், நீ தானே அழைத்து வரச் சொன்னாய்.நானா கேட்டேன்? அவன் வாயை கோண..போடா என்றாள்.
போடாவா,சீனியர்..சீனியர்னு..கூப்பிட்டே என்னை கவுத்திட்டு,இப்போ..போடாவா என்று அவன் முறைத்தான்.
கோபம் வந்து விட்டதா?சீனியர். அதான் போடா என்றாள்.
சரி, வா ஜிதின் நீ என்ன சொல்ல வேண்டும்?
அவன் அவர்களை பார்க்க,நாங்கள் இங்கே தான் இருப்போம் கூறு என்றான் கவின்.
இனி வீட்டிற்கு வராத வரை நல்லது ஸ்ரீ. அவர்கள் கொடுத்த போதை மருந்தால் தான் நமக்கு அந்த கற்பனை உருவம் வந்திருக்கிறது.
போதை மருந்தா? நிவாஸ் கேட்டான்.
ஆம்.அவர்கள் பல விதமான போதை மருந்துகளை தயார் செய்து வெளிநாட்டவர்களுக்கு கூட, அரசிற்கு எதிராக விற்பனை செய்கிறார்கள். அதில் உயிர் கொல்லி மருந்தும் அடங்கும்.நமக்கு அவர்கள் கொடுத்தது. நம்முடைய பயத்தை சாதகமாக வைத்து ஹோலோகிராபியில்..ஒரு உருவத்தை அந்த மருந்தின் மூலம் வர வைத்து நம்மை கட்டுபடுத்துகிறார்கள்.
அது என்ன ஹோலோகிராபி ? கவின் கேட்டான்.
போலியான மனித உருவம்.மற்றவர் கண்ணுக்கு தெரியாது.அந்த மருந்தை பயன்படுத்த.. பயன்படுத்த.. அதனுடைய வீரியத்தால் அந்த உருவம் கண்ணுக்கு தெரியும்.அதன் செயல்கள் நம் பயத்தை பொறுத்து அமையும் என்றான்.
புரியவில்லையே?தாரிகா கேட்டாள்.
சாப்பிட பயப்படும் குழந்தைக்கு நாயை காட்டி பயமுறுத்துவது,பேய் கதை கூறி தூங்க வைப்பது போல் என்றான்.
பயமுறுத்தி அவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர ஹோலோவை பயன்படுத்துகிறார்கள் என்கிறாயா?
ஹோலோ பயன்படுத்துவது சாதாரண ஆட்களால் முடியாது.அவர்களுடன் விஞ்ஞானம் படித்த மேதைகள் யாரோ இருக்கிறார்கள்.எனக்கு அதை பற்றி தெரியும்.அர்ஜூன் கூறினான்.
இப்ப என்ன தான் சொல்ற?…அவங்க போதை மருந்து பயன்படுத்துகிறார்கள். அந்த உருவத்தை நாம் பார்ப்பது போதை மருந்தால் தானா? நாம் எப்பொழுது அதை பயன்படுத்தினோம்?
நாமா? உனக்கும் அந்த உருவம் தெரியுமா? நிவாஸ் ஜிதினிடம் கேட்டான்.
ஆமாம் தெரியும்.நான் அதை இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நம்முடைய சாப்பாடு,பழச்சாறு அனைத்திலும் கலந்து விடுவார்கள்.
அடப்பாவிகளா,இன்னும் என்னடா செய்வீங்க?
அந்த வீட்டிற்கு வரும் வேண்டாதவர்களுக்கும் கலந்து கொடுப்பார்கள்.பின் அவர்களே போதை மருந்து பயன்படுத்துகிறான் என்று போலீசில் மாட்டியும் விடுவார்கள்.
நீ ஏன் கண்ணை மூடிக் கொண்டே பேசுகிறாய்? கவின் ஜிதினிடம் கேட்டான்..
எனக்கு தான் அவர்களை பற்றி பேசும் போது அந்த உருவம் தெரியுமே! என்றான்.
ஆமாம்.அது எப்படி இருக்கும்? தாரிகா கேட்டாள்.
அது கருப்பு நிறம்,சிகப்பு கண்கள்,கூரிய பற்கள் ஸ்ரீ கூற,இல்லை என்று மறுத்த நிவாஸ் வெள்ளை நிறம்,பச்சை நிற விழிகள் என்றான்.
எனக்கு அது எறிந்த விகார முகத்துடன் அதன் விழிகள்.கரும்பச்சை நிறத்தில் உதடு வெண்மையாகவும் என்னால் இதற்கு மேல் முடியாது என்று காதை இறுக்கமாக மூடினான்.எதிரொலியாக பேசாதே என்று கூறும் என்று குறுகி அமர்ந்தான்.
அர்ஜூனும் கவினும் அவன் அருகே பயந்து கொண்டு வந்தனர்.பின் அவனை தொட,ஜிதின் மெதுவாக காதில் வைத்திருந்த கையை எடுத்தவாறு கண்ணை திறந்தான்.அவன் முகமெங்கும் வேர்வை நிரம்பி வழிந்தது.
ஜிதினின் பயம் அனைவரையும் கலங்க செய்தது. அவனை மருந்து அதிகமாக பாதித்து இருப்பதை புரிந்து கொண்டான் அர்ஜூன்.
எனக்கு இப்பொழுதெல்லாம் அந்த முகம் மட்டும் அடிக்கடி கண்முன் தெரிகிறது கலக்கத்தை அடக்கியபடி.
முக்கியமான விசயம் ஒன்று மட்டும் ஸ்ரீ,நிவாஸ்..என்று மறுபடியும் கண்ணை மூடிய ஜிதின் இருவரும் அந்த வீட்டில் தண்ணீர் கூட குடிக்கக் கூடாது என்றவன் மயங்கினான். மற்றவர்கள் பதற,கவின் நீரை தெளித்தான்.
எழுந்த ஜிதின் அர்ஜூனை நகர்த்தியவன்.ஸ்ரீயை நேராக பார்த்தான். அவளையே பார்த்துக் கொண்டே இருந்தான்.பின் கொஞ்ச நேரத்தில் நார்மலானான்.
ஏன்டா,ஸ்ரீயை அப்படி பார்த்தாய்? நான் அதிலிருந்து வெளியே வர ஸ்ரீயை தான் பயன்படுத்துவேன்.நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான்.நமக்கு பிடித்தவர்களை ஆழ்ந்து பார்த்தாலே அனைத்தும் சரியாகும் என்றான்.
என்னடா சொல்ற?அர்ஜூன் கேட்டான்.
நீயும் அங்கே சாப்பிடாமல் இரு நிவாஸ் கூறினான்.
நாம் இருவருமே சாப்பிடாமல் இருந்தால் அவர்களுக்கு நம் மீது சந்தேகம் எழும் என்றவன் அர்ச்சுவை பார்த்து, நிவாஸை உன்னுடன் தங்க வைத்து பார்த்துக் கொள்.அவங்களை நான் சமாளித்துக் கொள்கிறேன் என்றான்.
நீ அவளுடைய பையன் தானே! உன்னையும் விட மாட்டிகிறாங்களே! கவின் கேட்டான்.
அவங்களுக்கு,என் மீது பாசமாக பேசி நான் பார்த்ததே இல்லை.அன்று ஹாஸ்பிட்டலில் கூட அவர்ளை அகில் தாக்க வரும் போது தடுத்தது அவனுக்காகவே.
அர்ச்சுவை நெருங்கிய ஜிதின் ,அவர்கள் குறி என்னதான் ஸ்ரீயாக இருந்தாலும் அதில் அவள் மட்டுமல்ல காயப்பட போவது நீங்கள் அனைவரும் தான்.
நேற்று அவர்கள் போனில் யாருடனோ பேசியதை கேட்டேன்.நினைத்த படி எல்லாமே சரியாக நடக்கிறது.உன்னையும் அகிலையும் தான் முதலில் குறி வைத்திருக்கிறாள். கவனமாக இருங்கள் என்றான் மெதுவாக அர்ஜூனிற்கு மட்டும் கேட்கும் படி.