அத்தியாயம் 4
கைரவ் அங்கே வந்து, இங்கே என்ன நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது? நித்தி கோபமாக இங்கிருந்து அமைதியாக சென்று விடு என்று கூற, அவன் அடங்காமல் ஸ்ரீ அருகே வந்து, வா என்று அவளது கையை பிடிக்க, அவள் பயப்பட, நிவாஸ் கோபமாக அவனருகே வருவதற்குள் நித்தி அவனை சப்பென்று அறைந்து விட்டு, அவளது கையை விடு என்று எடுத்து விட்டு, நீ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளது கையை பிடிப்பது கூட தவறு.
என்னை அடித்து விட்டு அறிவுரையும் வழங்குகிறாயா? நித்தியை பிடித்து தள்ளினான். நித்தி அருகே வந்து ஒரு கை அவளை தாங்கி பிடித்தது. அவனை அதிர்ச்சியுடன் பார்த்து நித்தி தடுமாறினாள்.
கைரவ் அதிர்ச்சியுடன், அண்ணா! நீயா?….அந்த கோர்ட்டு போட்டவன் கைரவின் அண்ணா சைலேஷ்.அவன் நித்தியை நிறுத்தி விட்டு,
கைரவை பார்த்து, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று அவனது கையை பிடித்து விறுவிறுவென்று அழைத்து சென்றான் சைலேஷ்.
நித்தி சைலேஷை பார்த்தவாறு நிற்க, யாசு அருகே வந்து நீ நன்றாக தானே இருக்கிறாய்?
ம்ம்ம்…..என்றாள்.
அங்கே ஒருவன் வந்து,….இங்கே என்ன நடக்கிறது? யாரும் ஸ்ரீ பக்கம் வரக் கூடாது.
ஜிதின் உனக்கு ஸ்ரீயை தெரியுமா? யாசு கேட்டாள்.
ஸ்ரீ கையை ஜிதின் பிடித்துக் கொண்டு,அவள் நான் திருமணம் செய்ய போகும் பெண் என்று அறிமுகப்படுத்த, அனைவரும் திகைத்து நின்றனர்.
என்ன திருமணமா? யாசு ஸ்ரீயை பார்க்க,
உனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? நித்தி கேட்டாள்.
அவள் என்னுடைய மாமா பொண்ணு. இன்னும் கொஞ்ச நாட்கள் தான்.தேதியை முடிவு செய்து விடுவார்கள் என்றான். நித்தியும் ஸ்ரீயை பார்க்க,அவள் ஏதும் கூறாமல் நின்று கொண்டிருந்தாள்.நிவாஸ் அவனது கையை தட்டி விட்டு, ஸ்ரீயை அங்கிருந்து அழைத்து சென்று,
நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? இப்பொழுதாவது இங்கிருந்து சென்று விடு…அவன் திட்ட..
அவள் பதிலுக்கு, நீயும் செல்லலாமே! எதற்காக இங்கே இருக்கிறாய்? நீ நினைப்பதை ஒரு போதும் உன்னால் செய்ய முடியாது. நீ முதலில் செல் என்று ஸ்ரீ கூற,நிவாஸ் அமைதியானான்.
வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. வகுப்பு முடிந்தவுடன் நித்தியை பார்க்க வேண்டும் நினைத்துக் கொண்டே ஸ்ரீ வெளியே வந்தாள். மதிய உணவை வகுப்பில் விட்டு வந்ததால், நீ சென்று கொண்டிரு…நான் வருகிறேன் நிவாஸிடம் கூறி விட்டு வகுப்பிற்கு வந்தாள். அங்கே ஒரு பெண்ணை நான்கு பெண்கள் தொந்தரவு செய்து கொண்டிருந்தனர்.
ஸ்ரீயை பார்த்து, இவள் அந்த பொண்ணு தானே! ஒருத்தி கேட்க,…
ஆமாம். வாருங்கள் சென்று விடுவோம் என்று அவளை பார்த்து ஓடினர்.அந்த பெண்ணிற்கு அங்கங்கு காயம் இருப்பதை பார்த்து கல்லூரி மெடிக்கலுக்கு ஸ்ரீ அழைத்து சென்று காயம் போட்டு விட்டு எதுவும் பேசாமல் சென்று விட்டாள்.அந்த பெண்ணிற்கு ஸ்ரீயை பிடித்து போயிற்று.அவள் பெயர் தாரிகா. ஸ்ரீயுடன் ஒரே வகுப்பில் படிக்கும் பெண்.
அகிலிற்கு கல்லூரியில் நடந்ததை கூற, அவன் கல்லூரிக்கே வந்து விட்டான். பார்வையாளர்கள் இடத்தில் அவன் அமர்ந்திருக்க, மற்ற நண்பர்களும் வந்தனர் உடன் அர்ச்சுவும் வந்து விட்டான்.மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் அர்ச்சு அதை வெளி காட்டவே இல்லை. அகில் கோபமாக இருக்க, நித்தியும் யாசுவும் அவர்களை பார்க்க வந்தனர்.
வந்தவுடன் யாசு அகிலிடம், அவளை நினைத்து ஏன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய்?அவளுக்கு திருமணமாக போகிறதாம்…விட்டு விடு கூற, நித்தி யாசுவை முறைத்தாள். அகிலும் அவளை எரிச்சலாக உற்று நோக்கினான்.
அவளை விடுடா…..உனக்கு கஷ்டமாக இருக்கும் என்று புரிகிறது என அர்ச்சுவை பார்க்க, அவனும் நித்தியை பார்த்தான்.
கடந்த ஐந்து வருடங்களாக அவள் இருக்கிறாளா? இல்லையா? எங்கே? எப்படி இருக்கிறாள்? ஏதும் தெரியாமல் இருந்தோம். இப்பொழுது அவளை தினமும் பார்க்க போகிறோம். அவள் நம்மை மறந்து விட்டால் தான். அவளுடைய பழைய நினைவுகளையாவது கொண்டு வர முயலுவோம். அந்த ஜிதின் பணக்காரன். அதை விட ரொம்ப நல்லவன் தான். நாம் பேசினால் புரிந்து கொள்வான்.அவர்களது திருமணம் நடக்காமல் பார்த்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு. அவளது முழுமையான உடல் நலத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவன் திருமணம் என்று கூறிய போது எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் தான் ஸ்ரீ இருந்தாள். அவளுக்கு விருப்பமில்லாதது போல் தான் தெரிகிறது.நீ முதலில் கூறியது போல் அவளையும், நிவாஸையும் கண்காணிப்பது தான் நல்லது என்று அவள் நடத்தையை வைத்து தெரிகிறது. அவளாகவே கண்டிப்பாக என்னை தேடி வருவாள். நான் அவளை சிறுவயது தோழி என்றேனே! அதை பற்றி பேச வருவாள் என்றாள் நித்தி.
நீ அவளிடம் கூற போகிறாயா? அகில் கேட்டான்.
அந்த நேரத்தில் காப்பாற்ற தான் அவ்வாறு கூறினேன் என்று பேச ஆரம்பிப்பேன்.நீ உன் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே! ஜிதினிடம் பிரச்சனை ஏதும் செய்து விடாதே! அனைவரும் வீட்டிற்கு சென்று சாப்பிடுங்கள் கூறி அனுப்பி விட்டு,அகில் நீ வருத்தத்தை நேரடியாக காட்டுகிறாய்? உன் அருகில் இருக்கும் அர்ச்சு மனதினுள்ளே வருத்தப்பட்டு கொண்டிருப்பான் என்று மனதினுள் நினைத்துக் கொண்டே திரும்பி, யாசுவை திட்டினாள் நித்தி.
யாசு சிறு வயதிலிருந்தே அகிலை காதலித்துக் கொண்டிருக்கிறாள்.அவனிடம் காதலை கூறி, அவளது காதலை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை.அந்த வருத்தத்தில் தான் பேசி இருப்பாள்.
அனைவரும் சென்ற பின் நித்தி சோகமாக, நீ எங்களை மறந்ததை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை ஸ்ரீ என்று கண்ணீருடன் உட்கார்ந்து அவளும் நித்தியும் எவ்வளவு நெருக்கமான தோழிகளாக இருந்தார்கள் நினைவுகளை ஓட்டியபடி அமர்ந்திருக்க, அவளருகே யாரோ உட்கார்ந்திருப்பதை உணர்ந்து கண்ணீரை துடைத்துக் கொண்டு, நிமிர்ந்து பார்த்தால் சைலேஷ் அவளை பார்த்தபடியே இருந்தான்.
உண்மையிலே நீ கைரவின் அண்ணன் தானா! முறைத்தபடி நித்தி இருக்க,
உன் பார்வையாலே என்னை எறித்து விடாதே! சைலேஷ் அவளது கண்ணுடன் கலந்த வண்ணமே கூறினான்.
உன் தம்பியை காப்பாற்றி விட்டதாக எண்ணாதே! அவனை சும்மா விட மாட்டேன்.
உன் மீதும் தவறுள்ளது தானே! ஒரு ஆணை அடிக்கலாமா?
அவன் பேசிய பேச்சிற்கு இதுவே பத்தாது.அவன் எல்லாரிடமும் திமிருடன் தான் நடந்து கொள்கிறான்.
அவன் செய்தது தவறு தான்.அதற்கான தண்டனையும் அவனுக்கு கிடைத்துவிட்டது.
தண்டனையா?
அவன் ஆரம்பித்து இருப்பான். அவனை விடு. நீ உன்னை பற்றி கூறு?அவன் ஆர்வமாக கேட்க,
நீ எப்படி கல்லூரிக்குள் நுழைந்தாய்? ஓ……இந்த கல்லூரி உங்களுடையது தானே….அப்படியிருந்தாலும் நீ உள்ளே வரக்கூடாது தானே!
நீ நாளையே தெரிந்து கொள்வாய் அவன் அவளை பார்த்து கண்ணடிக்க, நித்தி வேகமாக எழுந்து அவனை மேலும் கீழுமாக ஒரு பார்வையை உதிர்த்து விட்டு,
நான் ஏன் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்? நினைத்துக் கொண்டிருக்க, போன் வந்தது நித்திக்கு.
ஸ்ரீ கைரவ் இருக்கும் இடத்திற்கு சென்று இருப்பதாக யாசு கூற, நித்தி அவளது பொருட்களை அங்கேயே போட்டு விட்டு, இவளை…..என்று கோபமாக எழுந்தாள்.போனை மட்டும் எடுத்து சென்றாள்.
என்ன பொண்ணுடா…இவள்? என்று நித்தி செல்வதை பார்த்தவாறு ரசித்துக் கொண்டிருந்தான்.சைலேஷ் நித்தியை காதலிக்க ஆரம்பித்து விட்டான்.
கைரவ், பயங்கர வெயிலில் முட்டி போட்டுக் கொண்டு கையில் ஒரு பலகையுடன் இருந்தான்.
ஹே..இங்கே பாருங்கடா ஸ்கூல் பையன் போல் மண்டியிட்டு இருக்கிறான் இந்த திமிர் பிடித்தவன் ஒருவன் கேலி செய்ய,
இவனுக்கு இதெல்லாம் போதாது.. எத்தனை பெயரை காயப்படுத்தி இருப்பான் இவன் என்று ஒரு பெண் காண்டாக,
இனி யாரிடமும் வம்பு வளர்க்க மாட்டேன் .யாரையும் காயப்படுத்த மாட்டேன். ஸ்ரீ என்னை மன்னித்து விடு.நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என எழுதி இருந்தது. இதை பார்த்து அனைவரும் கைரவை கேலி செய்ய,அவன் அவமானத்தில் தலை கவிழ்ந்த படி இருந்தான்.அங்கே கைரவ் நிலையை பார்த்து ஸ்ரீ அவனருகே வந்து எழுந்திரு….
கல்லூரி முடிந்தவுடன் நான் எழுவேன். என் அண்ணாவின் பேச்சை என்னால் மீற முடியாது அவன் கூற,அனைவரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர்.
உன் அண்ணனிடம் நான் பேசுகிறேன்.நீ எழுந்திரு…… என்றாள் ஸ்ரீ.
நித்தி அங்கே வந்து, ஸ்ரீ என்ன செய்கிறாய்? இவனுக்கு இந்த தண்டனை தேவை தான். தண்டனையிலிருந்து விடுபட்டால்,அவன் உன்னை பற்றி பேசியது உண்மையாகி விடும்.
பரவாயில்லை. எனக்கு இதெல்லாம் சாதாரண வலி தான். என் அம்மா, அப்பாவை இழந்ததை விட இது பெரியதல்ல.மற்றவர்கள் என்னை பற்றி என்ன பேசினாலும் பிரச்சனையில்லை அவள் கூறவே கைரவ் அவளையே கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.சரியாக சைலேஷ் அங்கே வந்து நிற்க,ஸ்ரீ அவனை பார்த்து
நீங்கள்,உங்கள் தம்பி தவறு செய்து விட்டானென்றால் இப்படி தான் அனைவர் முன்னிலையிலும் தண்டனை தருவீர்களா?அதற்கு பதிலாகஅவனிடம் பேசி புரிய வையுங்கள்.தண்டனை அனைத்திற்கும் தீர்வாகாது என்றாள் கோபமாக.
நீ அறிவான பெண் தான். உனக்காக உன் தோழிகள் எதுவானாலும் செய்யலாம். மற்றவர்களை பற்றி எவ்வளவு அழகாக புரிந்து கொள்கிறாய்? உன் பேச்சு என்னை கவர்ந்து விட்டது கூறிக் கொண்டே நித்தியை பார்த்தான்.
அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க,அதாவது எவ்வளவு அழகாக புரிய வைக்கிறாய்? கூறினேன் என்றான் குறுஞ்சிரிப்புடன்.
நீ கூறியதை கூட பெரியதாக எடுத்துக் கொள்ளாமல், அந்த பொண்ணு உன் நிலையில் இருந்து யோசிக்கிறாள். இந்த பெண்ணை பற்றி நீ பேசியது தவறு தானே! என்ன செய்யலாம்? சைலேஷ் கேட்க,
அதெல்லாம் யாரும் ஏதும் செய்ய வேண்டாம்.இனி யாரை பற்றியும் இவ்வாறு பேசாமல் இருந்தாலே போதும் ஸ்ரீ கூறி விட்டு ஒரு அடி எடுத்து வைக்க, கைரவ் அவளது கையை பிடித்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்டான்.அனைவரும் அவனை அதிர்ச்சியோடு நோக்கினார்கள்.
என்ன! இத்தனை நாட்களாக திமிராக பேசி பார்த்திருக்கிறோம்,காயப்படுத்தி பார்த்திருக்கிறோம். இது புதிதாக உள்ளதே! ஒருவன் கூற,கைரவ் யோசிக்காது, இனி இப்படி தான் இருப்பேன்.
நான் கூட சும்மா தான் மன்னிப்பு கேட்கிறாய் என்று நினைத்தேன்; இருந்தாலும் அவளை நீ சீண்டினால் அவ்வளவு தான் கையை உயர்த்தி மிரட்டினாள் நித்தி.
நீ இவ்வாறு பேச தேவையில்லை என்று கைரவ் நித்தியை பார்த்து சிரித்துக் கொண்டான்.
உனக்கு என்ன ஆயிற்று? நீ சிரிக்கிறாய்? நான் உன்னை திட்டிக் கொண்டிருக்கிறேன்.
அதுவா?…அதுவா?….என்று மீண்டும் சிரித்து விட்டு அவன் செல்ல, நித்தி வாயடைத்து நின்றாள். பின் வெயிலில் வெகு நேரம் இருந்ததால், இவனுக்கு மண்டையில் அனைத்தும் காலியாகி விட்டதோ! அவளாகவே புலம்பிக் கொண்டிருக்க, சைலேஷ் அவளருகே வந்து,
என்னங்க மேடம் ,பிரச்சனை சரியாகி விட்டது தானே! அவள் ஏதும் கூறாமல் வகுப்பிற்கு சென்றாள். சைலேஷ் அவளை பார்த்தவாறே புன்னகைத்து நின்றிருந்தான்.
நித்தி வகுப்பறைக்கு வெளியே ஸ்ரீ காத்துக் கொண்டிருக்க, நித்தி அவளை பார்த்து ஸ்ரீ, நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
உங்களை பார்க்க தான் சீனியர்.
என்னை பார்க்கவா? எதுவும் தெரியாதது போல் நித்தி கேட்க,
அது என்ன? சிறு வயது நண்பர்களா? நீங்கள் அனைவரும்…பேச, அவளது வாயில் கையை வைத்துக் கொண்டு தனியாக அழைத்து சென்றாள். உன்னை காப்பாற்ற தான் அவ்வாறு கூறினேன்.
என்னை எதற்காக நீங்கள் காப்பாற்ற வேண்டும்? உங்களுடைய மூன்று நண்பர்களும் எனக்காக ஏன் கைரவுடன் சண்டை போட்டார்கள்? என்னால் அவர்களை கல்லூரியை விட்டு நீக்கி விட்டார்கள் வருத்தமாக ஸ்ரீ கூற,
பேச நினைத்ததையே மறந்து நித்தி தவிக்கவே, யாசு அங்கே வந்து, உன்னை போலவே எங்களுக்கு ஒரு தோழி இருந்தாள்.இப்பொழுது அவள் உயிரோடு இல்லை கூறினாள்.பரிதவித்துக் கொண்டிருந்த நித்தியோ கோபமானாள்.
உனக்கு விடை கிடைத்தது தானே! ஸ்ரீயிடம் நீ இங்கிருந்து செல் கூறி விட, யோசித்துக் கொண்டே ஸ்ரீ அங்கிருந்து அகன்றாள்.பிறகு நித்தி யாசுவை ஓங்கி அறைந்து விட்டு,என்ன கூறினாய்? நம் குக்கூ இறந்து விட்டாள் என்கிறாயே? உனக்கு அவள் மீது அன்பே இல்லையா? உனக்கு ஏன் தான் இந்த புத்தியோ? சீறினாள் நித்தி. இதை அகிலும் அர்ச்சுவும் கேட்டிருந்தால் உன் மீது எவ்வளவு கோபப்படுவார்கள்? உனக்கு தெரியும் தானே!.. அவளை மறுபடியும் பார்த்ததிலிருந்து நீ சரியில்லை நித்தி கூற,யாசு பயங்கர கோபமாக கத்தினாள்.
யார் சரியில்லை. நானா? நீங்கள் அனைவருமா? அவள் தான் எல்லாவற்றையும் மறந்து விட்டாளே! பிறகும் எதற்கு அவள் பின்னாலேயே சுற்றுகிறீர்கள். இப்பொழுது கூட அவளுடன் தான் இருக்கிறாய்.அகில் கண் முழுவதும் அவள் பின்னே தான் சுற்றுகிறது. எனக்கு அது பிடிக்கவில்லை. எத்தனை வருடங்களாக நான் அவனை காதலிக்கிறேன். அவன் பார்வை என் மீது ஒரு முறை கூட காதலாக படவில்லை.அவள் வந்திருக்கவே கூடாது கத்தினாள்.
உன் காதலை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை.மறந்து விட்டாயா? அவனால் உன்னை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.அவன் உன்னை தோழியாக மட்டும் பார்க்கிறான்.உனக்கு ஏன் புரியவில்லை? தயவு செய்து புரிந்து கொள். நம் நட்பை பிரித்து விடாதே! கெஞ்சினாள் நித்தி.
அப்பொழுது பக்கத்து அறையிலிருந்து இருமல் சத்தம் கேட்டது. அது கழிவறை.இவர்கள் பேசியதை யாரோ கேட்டு விட்டனர் நித்தி புரிந்து கொண்டு, மேலும் பேசி பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என்று யாசுவை முறைத்து விட்டு கிளம்பினாள்.யாசு தனியாக நின்று கொண்டு அந்த குக்கூவை கொல்லாமல் விட மாட்டேன் வாய் விட்டு கத்திக் கொண்டிருந்தாள். அந்த அறையில் இருந்தது ஸ்ரீ தான். யார் அந்த குக்கூ?அகில் சீனியர் குக்கூவை காதலிக்கிறார். யாசு சீனியர் அகில் சீனியரை காதலிக்கிறார்.யாசு சீனியர் கோபம் பயங்கரமாக தெரிகிறதே! அந்த குக்கூ உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? ஒரு வேளை இருந்தால் எச்சரிக்கை விடுப்பது நல்லது என்று எண்ணிக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.
“காதலா? நட்பா?
காதலா? நட்பா?
என்னை புறக்கணித்து
நட்பை ஏற்றாய்
உன் நட்பின் இலக்கணம்
என்னை
மடைமையாக்கி பித்தாகியது
காதலாகிய என் மனமோ
உன் நட்பை ஏற்க மறுக்கிறதே!
உன்னவள் ஆவேனோ?”