ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

இனிய மதிய வணக்கம் நண்பர்களே..

இதோ உங்களுக்கான எபிசோடு 52..

அபி மட்டும் அமைதியாக இருந்தான்.அவனுக்கு இந்த குமாரன் செய்கை இன்பாவை துரத்திய விக்கி செய்கை போல் இருந்தது. அதையே சிந்தித்தவன் அகில் அவனை அழைப்பதை கூட கவனிக்கவில்லை. தாமதமாக உணர்ந்தவன் இன்பாவை பார்த்து,உங்களிடம் பேச வேண்டும் என்றான்.

அவள் புருவத்தை உயர்த்த, தனியே என்றான்.

இருவரும் சென்றவுடன் அவனை பற்றி நீங்கள் போலீசிடம் புகார் அளிக்கலாமே! கேட்டான்.

எவனை?

அன்று உங்களை விரட்டியவனை.

அவனையா? என்று இழுத்தவள், என்னால் செய்ய முடியாதே! செய்தால் அப்பா கஷ்டப்பட்டு வளர்த்த கம்பெனி போயிருமே! ஒரு வேளை நான் கம்பிளைண்ட் கொடுத்தாலும் என் மீதே மாற்றி விடுவார்களே என்றாள்.

அது எப்படி?

பணம்..பணம்..போதாதா? அவர்கள் கௌரத்தை, சொத்தை காப்பாற்ற நான் தான் அவனை படுக்கைக்கு அழைத்தேன் என்று கூட சொல்வான் அந்த பொறம்போக்கு.நான் தான் சாட்சிக்கு ஆள் தேடணும்.என் மானத்தை நானே வாங்குவதா? கேட்டாள்.

நான்..நான்..சாட்சி கூறுகிறேன்.நான் தான் பார்த்தேனே! என்றான்.

கலகலவென சிரித்தாள்.ஏன்டா நான் தான் எப்பொழுதும் உன்னுடனே சுற்றுகிறேனே! அதை எப்பொழுதோ கவனித்து இருப்பார்கள் அவனது ஆட்கள்.உன் பேச்சை யார் ஏற்றுக் கொள்வார்கள்?

அவனால் தான் நான் சீக்கிரமே வீட்டிற்கு செல்வேன்.அவனை எங்க ஏரியா ஆட்களுக்கு தெரியும்.அவனது அப்பா மந்திரி.அவரது பதவிக்கு அவனால் ஏதும் நடந்தால் அவனையே கொன்று விடுவார்கள்.அதனால் இரவில் தான் என்னை தேடி சுற்றிக் கொண்டே இருப்பான்..

அப்படியென்றால் இன்று? கேட்டான்.

தலைவிதி என்று காண்பித்தாள்.

அவர்களையெல்லாம் ஏதும் செய்யவும் முடியாது.செய்யவும் வேண்டாம்.

ஆனால் இது ஆபத்தாயிற்றே?

இப்படி தான் என் வாழ்க்கை என்றால் யாரால் என்ன செய்ய முடியும்? விரக்தியுடன் கூறினாள்.

ஏன் இப்படி பேசுகிறீர்கள்?

நீ உன் வேலையை மட்டும் செய்.என் விசயத்தில் தலையிடாதே! என்றாள். அவன் அமைதியானான்.

வீட்டிற்கு செல்ல நேரமானால் போன் செய்யுங்கள் என்றான்.

அவள் அவனை பார்த்து, யாரும் என்னிடம் இதை பற்றி பேசியது கூட இல்லை.என்னுடைய நண்பர்களுக்கு கூட தெரியும் தான்.இப்படி யாரும் கேள்வி கேட்டதுமில்லை.நான் கேட்கும் அளவிற்கு வைத்ததில்லை.உன் அக்கறைக்கு நன்றி என்று அவனது தலையை களைத்து விட்டு வீட்டிற்குள் சென்றாள்.அவன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான்.

அர்ஜூன் நிவாஸிடம் நீ சாப்பிட்டு வீட்டிற்கு கிளம்பு என்றான்.அவன் ஸ்ரீயை பார்த்தான்.

என்னடா பயமா இருக்கா? கேட்டாள் ஸ்ரீ. இல்லை நீ பாதுகாப்பா இருக்கேல. அது போதும்.எனக்கு அங்கு செல்லவே பிடிக்கல என்றான்..

நீ தானடா கூறுவாய்? அவர்களை அழிக்க வேண்டும் என்று. இப்பொழுது மறந்து விட்டாயா? கேட்டாள் ஸ்ரீ.

மறக்கல ஸ்ரீ. நீ எங்களிடம் ஏதும் மறைக்கிறாயா? கேட்டான்.

அர்ச்சுவை திரும்பி பார்த்தாள். அவனும் இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

நான் எதை மறைக்கிறேன்? இல்லையே என்றாள்.

சரி, அர்ச்சு கூறியது போல் எங்களுக்கு தெரியாமல் ஏதும் செய்து விடாதே! என்றான்.

சரிடா என்றாள் சலிப்புடன்.

அர்ஜூன் நிவாஸ் அருகே வந்து ஒவ்வொன்றையும் கவனமாக கவனி. ஏதாவது தெரியவந்தால் நாளை என்னிடம் கூற வேண்டும் என்றான்.

அவனும் சரி என்றான். சாப்பாடு தயாராகவும் சாப்பிட்டு விட்டு அனைவரும் கிளம்பினார்கள்.

இன்பா அபியுடனும், அர்ஜூன்,கைரவ்,கவின்,நித்தி ஒன்றாக காரிலும், தருணும் நிவாசும் பின் யாசு,அகிலும் கிளம்பினார்கள்.

ஸ்ரீயும் தாரிகாவும் அம்மாவும் வீட்டில் அனைத்து வேலையை முடிக்கவும், அர்ஜூன் அங்கே வந்தான்.

அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டார்களா? அம்மா வினவ, இதோ கேட்கிறேன் என்று அகில்,தருண்,அபிக்கு போன் செய்தான். அவர்கள் சென்று விட்டனர்.ஆதேஷிற்கு போன் செய்து, கொஞ்ச நாட்கள் தாரிகா வீட்டிற்கு வரவேண்டாம் என்று காரணத்தை கூற, அவனும் கவலையோடு ஒத்துக் கொண்டான்.பின் சைலேஷிற்கு போன் செய்தான். அவன் போனை எடுக்கவில்லை.

கொஞ்ச நேரத்தில் சைலேஷே போன் செய்தான் அர்ஜூனிற்கு.

டேய் என்னை எவனோ பின் தொடர்கிறான்டா.

என்ன சொல்றீங்க? உங்களையா?

ஆமாம்டா, காரில் சென்று கொண்டிருக்கிறேன்.பைக்கில் தொடர்கிறார்கள்.

காரை நிறுத்துங்கள் என்றான். அவர்களும் நிறுத்த,சைலேஷ் கூறினான். அப்பொழுது பைக் நபர் காரை திறக்க சொல்லி கார் சன்னலை தட்ட, ஏதும் செய்யாமல் காரை எடுங்கள் வேகமாக செல்லுங்கள்.மணி பத்தாகிறது. மெயின் ரோட்டிற்கு செல்லாமல் உங்களது வீட்டிற்கு செல்லலாம்.அந்த வழியே செல்லுங்கள். நிறுத்தாமல் செல்லுங்கள்.ரோட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்.கவனமாக இருங்கள்.

என்னை எதற்கு? சைலேஷ் கேட்டான். உங்களது காதல் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.அதான் உங்களை தொடர்கிறார்கள்.

பேச வந்தவன் கூட அதை பற்றி தான் கேட்க வந்திருப்பானோ!சைலேஷ் கேட்க, இருக்கலாம் இல்லையென்றால் தாக்க கூட வந்திருக்கலாம்.

வீட்டிற்கு செல்லும் வரை பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தான் அர்ஜூன்.அவர்கள் பின் தொடர்வதை நிறுத்தி விட்டனர் என்றான் சைலேஷ்.வீட்டிற்கும் வந்து விட்டேன் என்றவுடன் தான் போனை வைத்தான் அர்ஜூன்.

அட என்ன நாள்டா இது? எத்தனை பிரச்சனை அடுத்தடுத்து என்றவாறு சோபாவில் பொத்தென்று அமர்ந்தான். ஸ்ரீ சமையலறைக்கு சென்று டீ போட, அம்மா அங்கிருந்து எனக்கு வேண்டாம்மா என்று நழுவினார். அம்மா அறைக்கு செல்வதை பார்த்து தாரிகா அவரிடம் பேச உள்ளே சென்றாள்.

அங்கிருந்த சோபாவிலே படுத்தான் அர்ஜூன். ஸ்ரீ டீ எடுத்து வந்து வெளியே பார்த்தால் யாருமில்லை.அர்ஜூன் படுத்திருப்பதை பார்த்து அவனை பார்த்து, எழுப்பலாமா? வேண்டாமா? என்று கையை அவனருகே கொண்டு வருவதும் எடுப்பதுமாக இருந்தாள்.

உனக்கு என்ன வேண்டும்? அர்ஜூன் கேட்க, டீயை நீட்டினாள்.

அவன் எழுந்து வாங்க,அவளும் அவளுக்கு எடுத்து வந்து அமர்ந்தாள். இருவரும் குடித்துக் கொண்டிருக்க, ஸ்ரீ அவ்வப்போது அர்ச்சுவையே பார்த்தாள்.

என்ன ஸ்ரீ? ஏதும் கேட்க வேண்டுமா?

அவள் தயங்கியவாறு,தனியே கடைசி வரை இருக்க முடியாது என்றாயே! ஏன்?

உண்மையை தானே கூறினேன்.

எப்படியும் திருமணம் செய்து கொள்வாய் தானே?

அவளை ஒரு முறை பார்த்தவன்.காதல் ஒரு முறை தான் வரும்.வேறொரு பெண்ணை ஏற்றுக் கொள்ள முடியாது என் மனதால்.திருமணத்திற்கு பதில் தான் என்னுடைய செகண்ட் ஏஞ்சல் இருக்கிறாளே! அதுவே போதும்.

அது என்ன செகண்ட் ஏஞ்சல் ?

நான் காதலித்த முதல் பெண் பர்ஸ்ட் ஏஞ்சல்.அனு எனக்கு செகண்ட் ஏஞ்சல்.

ஒருவேளை உனக்கு உன்னோட ஏஞ்சல் ஓ.கே சொல்லி,அனுவை விட சொன்னால் என்ன செய்வாய்?

அவன் சிரித்துக் கொண்டு,என்னோட ஏஞ்சல் கண்டிப்பாக அவ்வாறு கூற மாட்டாள்.அவள் மற்றவர்களுக்காக எதையும் செய்பவள்.அனு குட்டிப்பொண்ணு. அவளே அனுவை நன்றாக பார்த்துக் கொள்வாள்.

அவள் எனக்கு ஓ.கே சொல்ல மாட்டாள்.அவளுக்கு எப்பொழுதையும் அகிலை தான் பிடிக்கும் என்றான்.

தேவையில்லாமல் எதையும் யோசித்து,மீண்டும் மயங்கி விழுந்து விடாதே! என்றான் கிண்டலாக.தாரிகா வெளியே வந்தாள்.

என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க? ஸ்ரீ அருகே வந்து அமர்ந்தாள் தாரிகா.

உன்னோட ப்ரெண்டு,தேவையில்லாத விசயத்தை போட்டு யோசிச்சுகிட்டு இருக்கா.அவளை அமைதியாக இருக்க சொல்லேன் என்றான் அர்ஜூன்.

என்ன ஸ்ரீ?

ஒன்றுமில்லை என்று கூறிய ஸ்ரீ,அர்ச்சுவிற்கு தன் மீது இப்படியொரு காதலா? வியந்து அவனை பார்த்தாள்.அவள் அர்ச்சுவையே பார்ப்பதை தாரிகாவும் கவனித்தாள்.

நான் கிளம்புகிறேன் என்றான் அர்ஜூன் தாரிகாவிடம் கூறினான்.

டேய்,இன்று மட்டும் இங்கே இரேன் என்றாள் தாரிகா.

நான் எப்படி இங்கே இருப்பது? கேட்டான் ஸ்ரீயை பார்த்தவாறு.

அதனால என்ன அர்ஜூன்? தாரிகா மனசு சரியில்லைன்னு சொன்னா.நீ இருந்தா கொஞ்சம் நிம்மதியாக தூங்குவாள்.இன்று மட்டும் தானே!என்றார் அம்மா.

அவன் சோபாவிலே படுக்க, அவனிடம் நீ யாழுவின் அறைக்கு செல் என்றார் அம்மா.

அம்மா..நானா?

நீ தான் என்றார்.அனைவரும் தூங்க சென்றனர்.

அர்ஜூனிற்கு மீண்டும் போன் வந்தது.என்னை யாரும் தூங்க கூட விட மாட்டீங்களாடா? கடுப்புடன் அலைபேசியை எடுத்தான்.

அங்கிள் சொல்லுங்க..என்றான் சோர்வுடன்.

அவர் சொன்னதை கேட்டு, இங்கேயா?

இருங்கள் வருகிறேன் என்றவன்,அய்யோ என்னை விட மாட்டீங்களா? ரொம்ப டயார்டா இருக்கே என்று புலம்பிக் கொண்டே மாடிக்கு சென்றான். பக்கத்து அறையில் இருந்த ஸ்ரீ, தாரிகாவிற்கு அவனது புலம்பல் நன்றாகவே கேட்டது.இருவருமே மாடியில் மெதுவாக ஏறி மறைந்து நின்றனர்.

அங்கிள்..என்று அவன் மேலிருந்து கை காட்ட,அவர் கீழிருந்து கை காட்டினார்.

என்ன அங்கிள்? இப்படி செய்து விட்டீர்களே! அந்த மோகனை வைத்திருக்க வேறு இடமா இல்லை.எங்கள் வீட்டிற்கு எதிரே வா பார்ப்பீர்கள். அஞ்சு அம்மாவிற்கு அந்த ஆளை கடத்தியது தெரிந்தால் கொன்று விடுவார் என்றான்.

அடப்பாவி, இது வேற செய்திருக்கிறாயா?தாரிகா மெதுவாக கூற, ஸ்ரீ அவளது வாயை பொத்தினாள்.

சரி,நான் சொன்ன மாதிரி தானே செய்திருக்கிறீர்கள்?

ஆம் தம்பி.நீங்கள் உங்களது லேப்பை ஆன் செய்யுங்கள். ஏற்கனவே கனெக்ட் செய்து விட்டேன்.நீங்கள் ஓ.கே வா என்று பாருங்கள் என்றார்.

அவர் கூறியதால் லேப்பை எடுத்து வந்துருப்பான்.அதை ஆன் செய்தால் மோகனது நடவடிக்கை அனைத்தும் தெளிவாக  இருந்தது.அதை பார்த்து அர்ஜூன் எழுந்து அவருக்கு ஓ.கே என்று ஆள்காட்டி விரலை உயர்த்தி சூப்பர் மாமா என்றான்.

ம்ம்..சூப்பர் தான். நன்றாக தான் உள்ளது என்று தாரிகா கையில் அர்ஜூன் லேப்டாப்.ஸ்ரீ தாரிகா இருவரும் அவனை முறைத்தவாறு நின்றிருந்தனர்.

தெரிந்து விட்டதா? நல்லது. எங்கே என்னோட லேப்பை கொடுத்து விடேன் தாரிகா அருகே வந்தான்.இப்பொழுது ஸ்ரீ கைக்கு மாறியது. அவனுள் பதட்டம் அதிகமானது. இதிலும் ஸ்ரீ புகைப்படங்கள் வைத்திருக்கிறான் அர்ஜூன்.

ஸ்ரீ ப்ளீஸ் கொடுத்து விடு கெஞ்சினான். வின்டோஸ் மாறினால் அவளது புகைப்படம்.அதில் வெளிச்சம் கம்மியாக அவனது கண்கள் கலங்கியது.

தாரிகா அவனை பார்த்து, இதில் வேற ஏதும் வைத்திருக்கிறாயா? என்று கேட்டாள்.

அவன் தந்து விடு ஸ்ரீ..கண்கலங்க,

உனக்கு அந்த லேப் அவ்வளவு முக்கியமா? கேட்டாள் ஸ்ரீ.

ம்ம்..தந்து விடு என்றவுடன் காரணத்தை கூறு.

முடியாது.முதலில் நீ கொடு என்றவன் தாரிகாவை கெஞ்சலோடு பார்த்தான். அவள் தான் ஸ்ரீயின் புகைப்படத்தை அர்ஜூன் அறையிலே பார்த்திருப்பாலே.. இதிலும் இருக்குமோ!என்று சரியாக யூகித்தாள்.

ஸ்ரீ..போதும். அவனிடம் கொடுத்து விடு என்றாள் தாரிகா.

நான் தர மாட்டேனே! என்று அவள் மேலும் விளையாட,அர்ஜூனிற்கு கோபம் வந்தது.அவளருகே வந்து கொடு என்று பிடுங்க, அவன் வேகமாக இழுத்ததில் அவள் அவன் மீது விழ, லேப் கீழே விழப் போனது. தாரிகா சரியாக பிடித்து விட்டாள். ஸ்ரீ அவனை பார்க்க, அர்ஜூன் கோபமாக அவளை தள்ளி விட்டு, தாரிகா கையில் இருந்த லேப்பை வாங்கி விட்டு,அதனை அனைத்தவாறு விறுவிறுவென கீழே வந்தான். அறைக்குள் சென்றவன் கதவை சாத்தி விட்டு அழுதான்.

தாரிகா ஸ்ரீயை தூக்கி விட்டு,அவனுக்கு ரொம்ப முக்கியமானது அதில் உள்ளது போல.அதனால் தான் இந்த கோபம் என்றாள்.

அவன் செயல் அவளை காயப்படுத்தினாலும் சிரித்துக் கொண்டே, ஒன்றுமில்லை. எனக்கு புரிகிறது என்று வேகமாக கீழே வந்தாள். அர்ஜூன் அறையில் அழும் சத்தம் கேட்டது. அவள் அங்கேயே நின்றாள்.தாரிகா அவளை அவர்களது அறைக்கு அனுப்பி விட்டு, அர்ஜூனை காண வந்தாள். அவன் கதவை தட்டினாள். எனக்கு வேலை உள்ளது.தொந்தரவு செய்யாதே!என்றான்.

எனக்கு தெரியும்.கதவை திறக்கிறாயா? அம்மாவிடம் கூறி வேற சாவியை வாங்கி வரவா? மிரட்டினாள்.

அர்ஜூன் கதவை திறந்தான்.லேப் ஆனில் இருக்க.ரொம்ப தேங்க்ஸ் தாரு,கீழே விழாமல் பிடித்து விட்டாய் என்றான்.

ஸ்ரீயை தள்ளி விட்டாயே? இது அவ்வளவு முக்கியமாடா?தாரிகா கேட்டாள்.

ஆமாம் தாரு என்று அதில் அவளது புகைப்படம் மட்டுமல்லாது..ஒரு சில வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது. அவன் அவளிடம் காண்பித்தான்.

ரொம்ப க்யூட்டா இருக்காடா. அவளுடையதிற்காக.. அவளையே காயப்படுத்தி விட்டாயே!

எனக்கு இது தானே நிரந்தரம்.இது இல்லாமல் நான் ரொம்ப கஷ்டப்படுவேனே!

நீ பைத்தியமாடா? அவள் உன் அருகிலே இருக்கிறாள்.அதுவும் முன் விட நெருக்கமாக பழகுவது போல் இருந்தது. இப்பொழுது இப்படி செய்து விட்டாயே!

நான் தெரிந்து தான் செய்தேன்.அவளுக்கு என் மீது காதல் வராது தாரி.அது ஒருவித ஈர்ப்பாக கூட இருக்கும்.

ஏன்டா..அகில் சீனியர் மீது கூட ஈர்ப்பாக இருக்கலாமே என்றாள் தாரிகா.

பைத்தியம் மாதிரி பேசாதே! நீ கிளம்பு.அவளுக்கு என் மீது காதல்லாம் வராது என்றான்  வருத்தமுடன்.

யாரும் சொல்றத கேட்காதீர்கள்! அவளை நீ தள்ளி விடும் போது அவள் பார்வை எனக்கு ஒன்றை தெளிவாக சொன்னது. உன்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்று அவள் கூறுவதை போல் இருந்தது.

ஏதாவது செய்யுங்கள் என்று அவள் எழுந்தாள். அவர்கள் அறை பூட்டப்பட்டு இருந்தது.

ஸ்ரீயை அழைத்தாள் தாரிகா.அவளிடம் பதிலில்லை.பின் வந்தது..வருகிறேன் என்று.அவள் அழுதது போன்ற தோற்றம் தெளிவாக தெரிந்தது தாரிகாவிற்கு. அர்ஜூன் அறையில் பேசியதை ஸ்ரீ கேட்டிருப்பாள்.

தாரிகா அவளிடம் ஏதும் பேசாமல் அவளை அணைத்துக் கொள்ள,ஸ்ரீக்கு ஆறுதலாக இருந்தது.

“கண்கள் கூறியதே! உன் காதலே!

 உணர்வினால் தெரியுதே! உன்  காதலே!

மனதினால் புரியுதே! உன் காதலே!

உன் கருவினுள் சுமக்கிறாயே!

 உன் காதலை!

 முழுதாய் அறிந்தேனே உன்னை!

 ஏற்க முடியவில்லையே உன் காதலை!

 உன் காதலே! உன் காதலே!”