ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

நான் வந்துட்டேன்.

இதோ இன்றைய எபிசோடு 49..

அபி..கஷ்டமான மனநிலையில் இருந்தான். இன்பா பேசியதை கேட்டவன் அப்படியே உட்கார்ந்தான் யோசித்தபடி.

இன்பா அவனையே பார்த்துக் கொண்டே இருக்க..நீங்க சொன்னது ரொம்ப கஷ்டம் மேம் என்றான் தருண்.

பெண்களை புரிந்து கொள்ள யாராலும் முடியாது.அதுவும் ஸ்ரீயை..இப்போது அவளுள்ள மனநிலை எப்படி உள்ளது? என்று அவளை கண்காணித்தால் மட்டும் தான் தெரியும் என்றான் தருண்.

எனக்கு புரிகிறது.அம்மா, அப்பா இல்லாமல் அவளது ஆன்ட்டியிடம்  மாட்டிக் கொண்டு இருக்கிறாள்.அவள் நினைத்தால் என்றோ அவர்களிடமிருந்து வெளியே வந்திருக்கலாம்.ஏன் வரவில்லை? தப்பிக்க முயற்சி கூட எடுக்கவில்லையே.?எனக்கு அது தான் சந்தேகமாக உள்ளது.

அவன் அருகே அமர்ந்த இன்பா,நான் அவள் நிலையில் இருந்தால் உடனே வந்திருப்பேன். நான்  கண்டிப்பாக அங்கே இருக்க வேண்டுமென்றால் பெற்றோர்களுக்காக பழி வாங்க இருப்பேன் இல்லையென்றால் எனக்குரிய யாரையாவது வைத்து என்னை மிரட்டினால் வர முடியாமல் இருக்கும்.

தட்ஸ் கரெக்ட் மேம்.சூப்பர்..சரியா சொன்னீங்க என்ற தருண்,அவள் பழி வாங்க நினைத்தால் கண்டிப்பாக உள்ளே இருக்க மாட்டாள் நேரடியாகவே மோதுவாள்.அப்படியென்றால் கயல் வலையில் யாரோ இருக்கிறார்கள் என்று கோரசாக இன்பாவும் அபியும் கூறி விட்டு ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

இதை யாரிடமும் கூற வேண்டாம் என்று இன்பா கூற, தருண் சிறு புன்னகையுடன்,என்னோட அர்ஜூன் இதை ஏற்கனவே கண்டு கொண்டிருப்பான்.

அர்ஜூனுக்கு தெரிந்திருக்குமா? எப்படி? இன்பா கேட்டாள்.

எப்படி? என்று எனக்கு தெரியாது.அவனுடைய பிஸினஸ் திட்டம் தான் தெளிவாக கூறுகிறது. அவன் அவளது ஆன்ட்டியை திசை திருப்ப தானே கூறினான்.அது தான் சரியான நேரம் அவர்கள் அதில் மூழ்கியிருக்க, ஸ்ரீயை அவர்கள் முழுதாக இல்லையென்றாலும் கொஞ்சமாவது விடுவார்கள். அவளிடம் மெதுவாக பேசி உண்மையை தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் ஸ்ரீ…நடவடிக்கை மாறி தான் இருக்கிறாள்.அவள் எங்கள் ஊரிலிருந்து இங்கே வந்த பின் நடந்த அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றான் தருண்.

ம்ம்ம்..ஓ.கே..நிவாஸை பார்த்து அறிந்து கொள்வோம் என்றான் அபி. அனைவரும் தாரிகா வீட்டில் தான் இருக்கிறார்கள். வாருங்கள் நாமும் செல்லலாம்.மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

அர்ஜூன், கைரவ், நிவாஸ் வீட்டிற்கு வந்தனர். நித்தியும் அங்கே இருந்தாள்.

வந்தவுடன் அர்ச்சு கண்கள் வீடெங்கும் துலாவ, தாரிகா அதை பார்த்து சிரித்தாள்.

என்னடா..அண்ணா! வந்ததும் வராததுமா யாரையோ தேடுற போல?

கிண்டலடித்தாள் தாரிகா.

அவளருகே அர்ச்சு வந்து அமர்ந்தான்.பின்னே கைரவ், நிவாஸ் வந்தனர்.

டேய்..நீ இன்னும் வீட்டிற்கு போகவில்லையா? அகில் கைரவை பார்த்து கேட்டான்.

நான் என்ன செய்தாள் உனக்கென்னடா? என்றான் அவன்.

ஆரம்பிக்காதீங்கடா நித்தி கோபமாக.

என்ன மேடம்! இவ்வளவு கோபமா இருக்கீங்க? கைரவ் அவள் பக்கம் திரும்பினான்.அவள் அர்ச்சுவை பார்த்தாள்.

அவன் சிரித்துக் கொண்டு, ஹே கைரவ்,உன்னோட அண்ணாவை பார்க்க கூடாத மாதிரி பிளான் செய்து விட்டோம்.அதனால் தான் கோபமாக இருக்கிறாள்.அவனும் அவளை பார்த்து சிரித்தான்.

வாயை மூடுங்கள் கடுப்படிக்காதீங்கடா என்றாள் எரிச்சலுடன் நித்தி.

அர்ச்சு தாரிகாவிடம், அவள் எங்கே? இன்னும் கோபமாக இருக்கிறாளா? கேட்டான்.

அவள் அறையில் இருக்கிறாள்.வருவாள் என்றாள்.

இன்பாவும் பசங்களும் அங்கே வந்தனர்.தருணை பார்த்த அர்ஜூன் கோபம் போயிடுச்சு போல..கேட்டான்.

இல்ல,உனக்காக தான் வந்தேன் என்றான் தருண்.

நீ எங்கே தங்கி இருக்கிறாய்?

கல்லூரி பக்கமுள்ள விடுதி தான். பிரதீப் அண்ணா தான் ஏற்பாடு செய்து தந்தார் என்றான்.

அம்மாவை அழைத்து தாரிகா அம்மாவிடம் தருணை அறிமுகப்படுத்தி வைத்தான்.அவரும் புன்னகையுடன் அவனிடம் பேசினார்.

டேய், இனி கொஞ்ச நாட்கள் இங்கே வராதீங்கடா என்றான் அர்ஜூன்.

தருண் புருவத்தை சுருக்க,….நாங்கள் அனைவரும் அடிக்கடி சந்திப்பது இங்கே தான். நீ, கைரவ், ஆதேஷ் தான் கிளைண்ட் மீட்டிங் பார்க்க போறீங்க. அதனால் மூவரும் இங்கே வந்தால் நம் திட்டம் அனைத்தும் கெட்டு விடும் என்றான்.

சரி என்றனர் இருவரும்.

அர்ஜூன்,எனக்கு ஒரு சந்தேகம்..என்று இன்பா அவனை பார்த்தாள். அனைவரும் அவளை பார்க்க ,ஸ்ரீக்காக தான் எல்லாமே செய்கிறாய் என்றால்…என்று இழுத்து,உறுதியாக தானே இருக்கிறாய்?

அவன் சிரித்துக் கொண்டு,மேம்..நீங்கள் என்னை என்ன விளையாட்டு பையன் என்றா நினைத்தீர்கள்? நாம் இந்த கம்பெனியை பெரியதாக்க வேண்டும்.நம்முடைய கம்பெனியை முன்னே கொண்டு வந்து,நான் செய்வதெல்லாம் சரியாக தான் இருக்கும் என்று என்னுடைய அம்மாவிற்கு நிரூபிக்க வேண்டும் என்றான்.

ம்ம்..கிரேட்..என்றாள் இன்பா.ஸ்ரீ மெதுவாக எட்டி பார்த்தாள். பின் அறையிலிருந்து வெளியே வந்தாள்.அனைவரும் அவள் பக்கம் திரும்பினர்.அபி இன்பாவை பார்த்தான்.அவள் ஸ்ரீயை காட்ட அவள் பார்வை அகில் மீது பட்டு மீண்டது.பின் அர்ச்சு அவளை பார்ப்பதை கவனித்து, உதட்டை கோணி காட்டி விட்டு,சமையலறைக்குள் சென்றாள்.தருணும் அவளை பார்த்தான்.

அர்ஜூன் வேண்டுமென்றே, ஸ்ரீ தண்ணீர் கொண்டு வா என்றான். அவள் முறைத்துக் கொண்டே கொடுத்து விட்டு சென்றாள்.மீண்டும் கேட்டான்.அவள் மீண்டும் கொண்டு வந்தாள்.

போதும்டா.அவளை விடு என்றாள் யாசு.

அட,இரு என்ன செய்கிறாள் என்று பார்ப்போம் என்று யாசுவிடம் கண்ணடித்து அவளை காட்டி விட்டு, மீண்டும் தண்ணீர் என்பதற்குள் எடுத்து வந்தவள்,அவனது தலையில் ஊற்றினாள்.அனைவரும் அர்ச்சுவை பார்த்து சிரித்தனர்.

ஹே, ஸ்ரீ..உனக்கு எவ்வளவு தைரியம்? என்று எழுந்தான்.அவள் அவன் முன் வந்து, உனக்கு தான்டா திமிர் அதிகமாகி விட்டது.

எனக்கு திமிரா? என்று அவன் கேட்க, உனக்கு தான்டா.அப்புறம் என்ன அவனுக்கா? என்று நிவாசை இழுத்தாள் ஸ்ரீ.

நான் என்னம்மா செய்தேன்? அவன் பேச,வாயை மூடுடா.நீயெல்லாம் தம்பியா?அவன் என்னிடம் சண்டைக்கு வருகிறான்.நீ வேடிக்கை பார்க்கிறாயே!

நானா? சண்டைக்கு வந்தேன் என்று அர்ச்சு அவளை நெருங்க,நீ தான்டா என்றாள் தயக்கத்துடன்.

ஹே, நீங்க..சண்டையா போடுறீங்க? அகில் கேட்டான்.இருவரும் அவனை பார்த்து விட்டு ஒருவரை ஒருவர் பார்க்க நெருக்கமாக இருந்தார்கள். அவள் அவனிடமிருந்து விலக,மற்றவர்கள் ஆவென்று பார்த்தனர்.

போடா,உன் மேல கோபமாக இருக்கேன் அவள் நகர, அவள் கையை பிடித்து நிறுத்தியவன்.நீ சொன்னன்னு தான் மெசேஜ் பண்ணேன்.எது வேண்டுமானாலும் கேட்பேன்.ஆனால் இந்த விசயத்தை மட்டும் இழுக்காதே என்றான்.

அவள் அவனை ஆழ்ந்து பார்த்து, கிடைப்பதை நழுவ விடாதே! பின் அதை இழந்து வருத்தப்பட்டு எந்த பயனுமில்லை வருத்தமுடன் கூறி விட்டு சென்றாள். ஸ்ரீ,அர்ஜூனை பார்த்தபடி இருந்தனர் மற்றவர்கள்.

ஆனால் அகில் இவர்களை இப்படியே விடக்கூடாது என்று நினைத்தான்.

ஸ்ரீ அம்மாவை பிரிந்த துயரத்தில் தான் கூறுகிறாள் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.அபியை பார்த்து அர்ஜூன், மாமா ஊருக்கு சென்று விட்டாரா? கேட்டான். சென்றிருப்பார்கள் என்றான் அபி.

என்னடா போன் செய்யவில்லையா நீ? என்று பதறினான் அர்ஜூன்.

ஏன்டா, இப்படி பதருகிறாய்?என்று அபி கேட்க, எங்களை தாக்க வந்ததை போல் ஏதாவது நடந்து விட்டால் என்று அர்ஜூன் உளறி விட்டான்.தாரிகா தலையில் அடித்துக் கொண்டாள்.அர்ஜூன் விழித்தான்.

என்னடா சொல்ற?மற்றவர்கள் வினவ,அர்ஜூன் நடந்ததை கூறினான். இதை கேட்டு ஸ்ரீ..நான் அங்கேயே போய் விடுகிறேன் என்றாள்.

பொறும்மா.சொல்வதை முழுதாக கேளு அர்ச்சு கூற, அவளும் அவர்களுடன் உட்கார்ந்து கொண்டாள்.

அன்று தாக்க வந்தவர்கள் கண்டிப்பாக உங்க ஆன்ட்டியின் ஆட்களாக இருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு உன்னை காயப்படுத்த வேண்டும். அதை பார்த்து நாங்கள் வேதனை பட வேண்டும்.கொல்ல நினைத்தாலும் உன்னை தான் கொல்ல பார்ப்பார்கள். இவர்கள் யாரென்று தெரியவில்லை இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும் எச்சரித்தான்.

அர்ச்சுவிற்கு அவனது போன் அழைப்பு விடுக்க, போனை பார்த்தவன்,சிறு புன்னகையுடன் அங்கிருந்து எழுந்தான்.

யாருடா போனில்? தாரிகா கேட்டாள்.

மை செக்கண்டு ஏஞ்சல் என்றான்.

செக்கண்டு? ஏஞ்சலா? யாருடா அந்த பொண்ணு? நித்தி கேட்டாள்.

பேசுறீங்களா? நான் பேசிட்டு தாரேன். பேசுங்கள் என்றான். அர்ஜூனின் முதல் ஏஞ்சல் ஸ்ரீ தானே. அவளை தவிர அனைவருக்கும் தெரியும் தானே!

ஸ்பீக்கரில் போடுடா என்றாள் யாசு அவனை முறைத்த படி, அந்த பக்கம் ஒரு குட்டி பாப்பா குரல் கேட்டது..

அர்ஜூன்..என்ன பண்ற? நீ வரவே இல்லை..அனு பாவம் இல்லையா? உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு என்றது.

ஹே..செக்கண்டு ஏஞ்சல்,அர்ஜூனுக்கு வேலை இருக்குடா.இன்னும் இரண்டு வாரம் மட்டும் வெயிட் பண்றீங்களா? செல்லம் என்று கொஞ்சி பேசினான்.அப்புறம் என்னோட ஏஞ்சலை பார்க்க தினமும் வந்து விடுவேன்.

போ..என்னால முடியாது.நீ இப்பவே வரணும் என்று குட்டி பாப்பா அடம் செய்தாள்.

கொஞ்ச நாள் தான்டா.சாப்பிட்டீங்களா? தூங்க போறீங்களா?

நான் தூங்க மாட்டேன் போனை கையில் எடுத்து தள்ளி சென்றான்.என் செல்லம்ல அர்ஜூன் சொன்னா கேட்பீங்கள் தானே! என் சமத்து பாப்பா தான! அம்மா சாப்பிட்டாங்களா?என்று கேட்டான்.

சரி,சீக்கிரம் வந்து விடு.

பாப்பா சாப்பிட்டு தூங்குங்க.அம்மா கிட்ட போனை கொடு என்றான்.

என்ன அர்ஜூன்,நீ வருவன்னு பார்த்தோம் என்றார் வினிதா.

அக்கா,நான் கொஞ்சம் வேலையாக இருக்கேன். காலேஜ் கூட மாத்திட்டேன்.நானே போன் போடுறேன்கா. நேற்று அவருக்கு கால் பண்ணேன். கேஸ் எப்படி போகுதுகா?எதுவும் பிராபிளமா? கேட்டான் அர்ஜூன்.

பிராபிளம் இல்லை. யாருன்னு கண்டு பிடிக்க முடியலைன்னு சொல்றாங்க.அக்கா அந்த ஏரியா போலீஸ் நம்பர் வேணும்கா.அவரு உங்களுக்கு கொடுத்தாரா?

ம்ம்..அவருடைய பர்சனல் நம்பர் கொடுத்தார்.இதோ அனுப்புகிறேன். “நோ” கா சொல்லுங்க என்றான்.

அவன் நம்பரை நோட் செய்ய,ஸ்பீக்கரில் போட்டு விட்டு பேசிக் கொண்டே, அவனது பையை திறந்தான்.

என்னடா,அனு சொன்னா? உன்னோட ஏஞ்சலை பார்க்க போவதாக.பார்த்து விட்டாயா? பேசினாயா?

அக்கா என்று ஓடி வந்து போனை எடுத்து, சும்மா இருங்க..என்று விட்டு நம்பரை கூறுங்கள் என்றான்.அவள் உன் பக்கத்தில் இருக்கிறாளா?

ம்..என்றவன் அக்கா நம்பர்.

சரி..சரி..சொல்றேன் என்று நம்பரை கூற, அவன் எழுதிக் கொண்டான். அவர் பெயர் அக்கா? மாதவ் என்றார்.

என்ன? அவரா? என்று யாசுவை பார்த்தான். எனக்கு தெரிந்தவர் தான். இன்னும் பார்த்து பேசியதில்லை.வக்கீல் ரெடி செய்து விட்டீர்களா?

ம்ம்ம்..ஆனால் சாட்சி தான் ஏதும் கிடைக்கவில்லை வருத்தப்பட்டார்.

கவலைப்படாதீங்க அக்கா.நான் தான் இருக்கேன்ல.

சரி,ஹாஸ்பிட்டல் போனீங்களா? என்ன சொன்னாங்க?

அவர்கள் ஒரு மாதம் தான் கூறி இருக்கிறார்கள் என்றார் கவலையுடன்.

அக்கா என்றவன் கண்ணில் நீர் கோர்க்க,அனு..என்று கேட்டான்.

என்னால யாரையும் நம்ப முடியல.அவள உன்னால..என்று தயங்கிக் கொண்டே வேண்டாம் என்றார்.

அர்ஜூன் தொண்டை அடைக்க நான்… நான்..அவளை பார்த்துக் கொள்கிறேன் சொன்ன போதே கண்ணில் நீர் வழிந்தோடியது.

சொத்திற்கான கார்டியனும் நீ தான் என்றார்.அவன் பேச முடியாமல்.. வேகமாக வெளியே சென்றான்.அவனை மற்றவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருந்திருப்பார்கள். அவர்களும் வெளியே வந்து பார்த்தனர்.

அக்கா வேண்டாம் அனுவை நான் பார்த்துக் கொள்வேன். ஆனால் நான்..தயங்கியபடி, நானும் ஹாஸ்பிட்டல் வாரேன் என்னுடன் வருகிறீர்களா? மருத்துவர் என்ன கூறுகிறார்?என்று தெரிந்து கொள்ள வேண்டுமே!

அதெல்லாம் வேண்டாம் அர்ஜூன். நடப்பது நடக்கட்டும். அனுவை பற்றி அம்மாவிடம்..எப்படி பேசுவது? அவர் ஒத்துக் கொள்ளவே மாட்டாரே! அனுவை யாரிடமும் விட முடியவில்லை.பணம் தான் எல்லாமாக உள்ளது.பணத்திற்காக அவளை யாராவது ஏதும் செய்து விட்டால் என்ன செய்வது? பயமாக உள்ளது என்றார்.

எதை பற்றியும் யோசிக்காது.அவளை பார்த்துக் கொள்ளுங்கள்.என் அம்மாவை நான் பார்த்துக் கொள்கிறேன்.

நீ அனுவை விட்டுட மாட்டேல.உன்னோட ஏஞ்சல் ஒத்துக் கொள்வாளா?

அவள் முதலில் என்னை ஏற்றுக் கொள்ளவே மாட்டாள் நீங்க வேற.. அவளுக்கு அடுத்து அனு தானே எனக்கு எல்லாமே! அவளுக்காக நான் என்றும் இருப்பேன் என்றான் வருத்தமுடன்.

இது போதும்.எனக்கு சொத்து பற்றிய விவரத்தை பற்றி நேரில் பேசலாம்.

அக்கா ஒரு பிரச்சனை.அதை முடித்து விட்டு நானே போன் செய்கிறேன் என்றான்.இருவரும் போனை அணைத்தனர்.

   ” பூவான மனதை புண்ணாக்கி

          சென்றதே!என் செய்வது?

      உலகில்  தாயில்லா இப்பிள்ளை

           தனியாகிறதே! என் செய்வது?

     சொர்க்கபுரியை தவிர்த்து நரகமாக

        போகிறதே!என் செய்வேன்?

    அனுவாகிய உன்னை நான்

              மகிழ்வுடன்

         எங்கு காண்பேனோ!”