வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-43
224
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..
இதோ உங்களுக்கான எபிசோடு 43..
சைலேஷ் போன் செய்ய, அனைவரும் கல்லூரியில் அவனது அறைக்கு தனித்தனியே நேரம் விட்டு சென்றனர். கவின் மட்டும் கிளம்பி விட்டான்.
அர்ச்சு அவன் பிஸினஸ் தொடங்க போவதாக கூற, தேவையில்லாத வேலை என்று கூறினார்கள். இன்னும் நீ அதை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பிக்க கூட இல்லை.அதற்குள் என்ன? இன்பா கேட்க,
அகில் அதற்கு அவனிடம் பணம் உள்ளது செய்கிறான் என்று கூற, அர்ஜூன் அவனை பார்த்து எள்ளலாக சிரித்தான்.
நீ அவனை பற்றி புரிந்து கொண்டது அவ்வளவு தான்..அபி கூறி விட்டு, இன்பாவை பார்த்து ஒரு வேலையில் ஈடுபட பட்டபடிப்பு மட்டும் போதாது. அதை பற்றிய துல்லியமான அறிவும், செயலுமே போதுமானது என்று விட்டு,
அர்ச்சு நீ இதை எதற்காக செய்ய நினைக்கிறாய்? அதற்கான பணம்? கேட்டான்.
அர்ச்சு அமைதியாக இருக்க, அவன் எடுக்க போகும் செயல் உறுதியாக நன்றாக இருக்கும். அவனிடம் நான் பேசிய போது, அவன் கூறிய பதிலிலே எனக்கு தெளிவாக தெரிந்தது.ஆனால் எதற்காக இந்த திடீர் முயற்சி? சைலேஷும் கேட்க….
ஸ்ரீ என்று ஒரே பதிலளித்தான். பின் உங்களுக்கு மிக்கைலா உல்மர் பற்றி தெரியுமா? அவங்க லெமனேடு (லெமன் ஃப்ளேவேர்டு ஜூஸ்) பிஸிஸை பள்ளி முதல் வருடத்திலே தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அவருக்கு பக்கபலமாக பெற்றோர்கள் இருந்தார்கள். எனக்கு நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள் என்றான் சுருக்கமாக.
ஸ்ரீக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அகில் கேட்க….அர்ச்சு அவனது திட்டத்தை கூறினான்.
சந்துரூவும் தாரிகாவும் அவனருகே வந்தனர்.கயலை எதிர்க்கவா? அவள் யார் தெரியுமா? அவளை எதிர்க்க நினைப்பர்களை சும்மா விடவே மாட்டாள்.அப்படி தான் என் அப்பாவை கொன்றாள் என்றான் சந்துரூ கண்கலங்கிய படி.
அவர்களை பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்தது? கேட்டாள் தாரிகா.மருத்துவமனையில் அவள் பேசிய அனைத்தையும் யாசு கூறினாள்.
உனக்கு எப்படி தெரியும்? நித்தி கேட்டாள்.
நித்தி சீனியர்…நீங்கள் அன்று அவளை சிறுவயது தோழி என்றீர்களே! அன்றே எனக்கு புரிந்தது…அவளுக்காக நீங்கள் அனைவரும் நின்றதே சொன்னது அவளுடைய தோழர் தோழிகள் என்று…எனக்கு இன்னொன்றும் தெரியும்.அவளுக்கு ஜிதின் மீது எவ்வித ஈடுபாடும் இல்லை. ஒரு கட்டாயத்தில் அவள் இருப்பது தெரிந்தது.அவள் யாரையும் காதலிக்கிறாளா? என்று தெரியாது. அவன் அவளை அனைவர் முன்னிலையிலும் அணைத்து முத்தமிட்ட போது ரொம்ப அழுதாள்.நான் தான் அவளை அறைக்கு அழைத்து சென்றேன்.
நீ பண்ண நினைக்கிறது ஓ.கே. அவ நம்ம ஊரு பொண்ணு. எனக்கும் ஒரு தங்கை போல் தான்.அவளை காப்பாற்ற நானும் இதில் சேர்ந்து கொள்கிறேன். ஆனால் அர்ஜூன்….நீ செய்ய நினைப்பதில் பெரிய தவறு ஒன்று உள்ளது. இவ்வளவு செய்யும் ஒரு பெண் .நீ தான் செய்வதென்று தெரிந்தால் ஸ்ரீக்கு பிரச்சனை தர மாட்டாளா?பிரதீப் கேட்டார்.
தருவாள் தான். அதற்கு நாம் தான் அந்த கம்பெனி ஓனர் என்று தெரியாமல் இருக்க ஆன்லைனில் தான் அனைத்தும் செய்ய போகிறோம் அர்ஜூன் கூறினான்.
அதற்கு சாத்தியமே இல்லையே! அண்ணா….ஆதேஷ் சொல்ல…இருக்கிறது என்றான் அபி….
ஆன்லைனில் அனைத்தும் செய்யலாம். ஆனால் பொருட்கள் தயாரிக்க ஓர் இடம் நம்பிக்கையான ஆட்கள் வேண்டுமே! கேட்டான்.
எங்கள் கிராமத்து மக்கள் என்றாள் ஜானு.
ம்ம்ம்..சரியான யோசனை ஜானு என்றனர் அனைவரும்.
திலும் பிரச்சனை உள்ளது.அவளுடைய ஆட்கள் அங்கே உள்ளனர் என்றார் பிரதீப்.
அண்ணா! நம்ம ஊரிலா? யாசு கேட்டாள்.
அர்ஜூன் முன்னே என்னிடம் கூறியதால் கண்டு விட்டேன் அவர்களை.
முன்னே கூறினானா? அகில் கோபப்பட்டான்.
அகில்,அவன் எல்லாவற்றையும் கூறவில்லை.யாராவது வித்தியாசமாக தெரிகிறார்களா? பிரச்சனை என்று தான் சொன்னான். என்ன பிரச்சனை? யாருக்கு? என்று அந்த நால்வரை பார்த்து தான் அறிந்து கொண்டேன். அதனால் தான் அவனிடம் கேட்கவே வந்தேன் என்றார்.
எனக்கு ஒரு யோசனை.எங்களுடைய நண்பன் கேரி வெளிநாட்டவன். அவனை வைத்து அனைத்தையும் செய்வோம்.அவனை வர வைப்போம். உங்கள் ஊரை பார்க்க செய்து அவன் அந்த இடத்தில் தொழிற்சாலை அமைத்து வேலையை தொடங்குவோம். பிரதீப் நீங்களும் அவனுடன் பங்காளனாக இருந்து பார்த்துக் கொள்ளுங்கள் சைலேஷ் கூறி விட்டு,இன்பாவை பார்த்தான்.அவள் அவனை முறைத்தாள்.
அவன் நம்முடன் டச்சுலயே இல்லையே?
இல்லாதவனை பற்றி திட்டம் போடாதே! சைலு….என்றாள்.
உங்களுடைய பர்சனல் கோபத்தை இதில் கொண்டு வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றான் சைலேஷ்.அவள் முறைத்தாள்.
என்ன பொருள் என்று முடிவு செய்து விட்டீர்களா? பிரதீப் கேட்டார்.
அந்த பொறுப்பு உங்களுக்கும் அபிக்கும் என்றான் அர்ச்சு.
நானா? அபி கேட்டான்.
எஸ்….ஜீனியஸ் என்றான் அர்ச்சு.
அபி எந்த அசட்டையும் இல்லாது ஓ.கே என்றான்.
இன்பா, இந்த கம்பெனிக்கு நீ தான் “சீ.ஈ.ஓ” என்றான் சைலேஷ்.
மீ? என்றாள் மகிழ்வுடன்.யூ தான் என்றான் சைலேஷ்.
தேங்க்ஸ்டா என்று அவனை அணைக்க வந்தாள் இன்பா.நித்தி அவன் முன் வந்தாள்.
ஏம்மா..உன்னோட ஆளை நான் கடித்து விழுங்கி விட மாட்டேன் என்று இன்பா கூற, அனைவரும் சிரித்தனர்.
உங்களுக்கு அசிஸ்டெண்டா,யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.நான் மேனேஜராக இருக்கிறேன்.ஆதேஷ், தருண் இருக்கிறார்கள். இருவரும் உதவுவார்கள் என்றான் அர்ஜூன்.
தருணா? இன்பா கேட்டாள். அவனை உங்களுக்கு அப்புறம் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்றான் அர்ஜூன்.
அவன் அம்மாவிடம் வாங்குவான் என்று அகில் ஏளனமாக கூற,
சைலேஷ் கோபமாக, உனக்கு என்னடா பிரச்சனை? அவனை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறாய்? அவன் அம்மாவிடம் தான் வாங்குகிறான் கடனாக?
உன்னால் ஐந்து கோடி கடனாக வாங்க முடியுமா? சைலேஷ் கேட்டவுடன் அகில் மட்டுமல்ல அனைவரும் வாயை பிளந்தனர்.
ஐந்து கோடியா? ஜானு கேட்க, ஒரு கம்பெனி ஆரம்பிப்பது என்பது சும்மா என்று நினைக்கிறீர்களா? அதற்கு மேல் கூட ஆகும். அதனால் தான் எங்களுடைய கம்பெனியை மீட்க என்னால் முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன் கண்ணீர் சிந்தினாள் இன்பா.
சைலேஷும் சந்துரூவும் ,எல்லாமே இனி மாறி விடும் அர்ஜூனால் என்றனர்.
அர்ஜூனிற்கு அங்கிளிடமிருந்து போன் வந்தது.அங்கிள் எனக்கு நேரமில்லை. நம்முடைய சந்திப்பை நான் நாளை வைத்துக் கொள்வோம்.அம்மா பணத்திற்கு என்ன சொன்னார்கள்?
அம்மா தருவதாக ஒத்துக் கொண்டார்கள் தம்பி.
நாளைக்கு ஒப்பந்தம் தயாராக கொண்டு வாருங்கள். பணத்தை என்னுடைய அக்கவுண்டில் போட்டு விடுங்கள்.அப்புறம் முக்கியமான விசயம்.மேகாவை இதில் கொண்டு வர மாட்டேன் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும் என்று போனை வைத்தான்.
மேகாவா? நித்தி அர்ச்சு அருகே வந்தாள்.அவள் அம்மாவின் ப்ரெண்டோட பொண்ணு தான். அவளையும் என்னையும் சேர்த்து வைக்க இதை பயன்படுத்த நினைத்தார்கள். அது இல்லை என்றால் பணம் தாருங்கள் இல்லையென்றால் நானே பணத்திற்கு ஏற்பாடு செய்து கொள்கிறேன் என்று கூறி விட்டேன்.
அதை தவிர்த்து கடனாக நாளை ஒப்பந்தம் செய்ய போகிறேன் என்றான். அனைவரும் அவனை மலைத்து பார்த்தனர்.
பின் சந்துரூ,உண்மையாகவே ஜிதின் ஸ்ரீயிடம் அவ்வாறா நடந்து கொண்டான் என்று சிந்தித்தவாறு கேட்டான்.
நானும் அவனை நல்லவன் என்று தான் நினைத்திருந்தேன். என் முன்னே அவன் ஸ்ரீயை முத்தமிட வைத்தான் நித்தி கூறினாள்.
அவன் நல்ல பையன் தான் சந்துரூ கூறினான். ஆதி இறந்த பின்னும் எப்பொழுதும் போல் தான் இருந்தான். அவனை கண்காணிக்கிறாளோ அந்த கயல்…கேட்டான்.
இன்னொரு விசயம் யாரும் தனியே செல்லாமல் இருந்தால் நல்லது. அவளுடைய ஆட்கள் நம் பின் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் எதுவும் செய்யவில்லை.ஸ்ரீ நிவாஸை தாரிகா வீட்டிற்கு அழைத்து சென்ற இரவு அன்று எங்களை தாக்க வந்தார்கள் என்றான் அர்ஜூன்.
நம் அனைவரையுமா? அபி கேட்டான்.
இதுவரை அவர்களது வரிசையில் நான், அகில், ஸ்ரீ, நிவாஸ், நித்தி,யாசு,அபி, கவின், தாரிகா மட்டும் தான் இருக்கிறோம். சைலு,இன்பா,ஆதேஷ்,பிரதீப்,ஜானு உங்கள் மீது பெரியதாக அவர்கள் கண் வைக்கவில்லை.
நீங்கள் எங்களுடன் நெருங்காதவரை உங்களுக்கு பிரச்சனை இருக்காது. நம் பிஸினஸ் திட்டம் நன்றாகவே இருக்கும். ஆனால் என்று அர்ச்சு…நித்தி பக்கம் திரும்பினான்.
புரியுது டா என்றாள் அவள்.
அவளை பார்க்காமல் என்னால முடியாதுப்பா என்று சைலேஷ் கூறினான்.
சார்,நாம் செய்ய போகும் வேலை மிகவும் முக்கியமானது. கொஞ்ச நாட்கள் தயவு செய்து சார்…என்றான் அர்ஜூன்.
சரி. ஆனால் நான் அவளுடன் பேசாமல் கூட இருக்கிறேன். பார்க்க வேண்டுமே!என்றான்.
அதான் உங்களிடம் சிசிடிவி உள்ளதே என்றாள் யாசு.
டேய்,என்னாலையும் முடியாது. போடா..என்று கோபித்துக் கொண்டாள் நித்தி அர்ச்சுவிடம்.
ப்ளீஸ்..கொஞ்ச நாட்கள் தான். அதற்குள் அவளுடைய கம்பெனியை டவுனாக்கி விட்டு அவளுக்கு நானே தெரியும் படி செய்து விடுகிறேன் என்றான்.
அப்புறம் பிரச்சனை வராதா? சந்துரூ கேட்டான்.
அதற்கும் பிளான் ஒன்று உள்ளது.எல்லாமே சரியாக நடக்கணும்னா..நாம் நம்முடைய உறவு முறையுடன் பேசுவது போல் தான் இருக்கணும் என்றான்.
நித்தி சைலேஷை பார்த்தாள். நான் வீடியோ காலில் பேசிக் கொள்வோம் என்றான்.
இன்னும் எதையெல்லாம் மறைத்து வைத்திருக்கிறாய்? அகில் சத்தமிட்டான்.
இங்கே பார் அகில். எனக்கு யாரிடமும் எதையும் சொல்லி விட்டு செய்கிற பழக்கமெல்லாம் இல்லை.எனக்கு சரி என்று தோன்றினால் செய்து விடுவேன்.அவ்வளவு தான். உங்கள் அனைவர் உதவி இல்லாமல் கண்டிப்பாக ஸ்ரீயை இதிலிருந்து வெளியே கொண்டு வர முடியாது என்றான்.
அக்காவிற்கு நீங்கள் கூறிய அந்த பொம்பளையால் தான் பிரச்சனையா? கேட்டாள் ஜானு.ம்ம்..என்று அகில் கூறினான்.
எப்படி அண்ணா? இவ்வளவு அழகாக திட்டமிடுகிறீர்கள்? ஆதேஷ் அர்ஜூனை புகழ, அகிலுக்கு வயிறு எறிந்தது.
பேசல..தூரத்திலிருந்து பார்த்து விட்டு செல்கிறேனே! என்றார்.
சரி..அண்ணா என்று விட்டு,முதலில் அண்ணா, நீங்களும் அபியும் என்ன பிராடெக்ட்?பேசி முடிவெடுத்து நாளை கூறுங்கள். பின் மற்றதை பார்க்கலாம் என்றான் அர்ச்சு.கம்பெனி ஆரம்பிக்க தேவையான அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சைலேஷிடம் கையை கொடுத்தான். அவனும் புன்னகையுடன் சரி..என்றான்.
மறந்து விடாதீர்கள் கம்பெனி சம்பந்தப்பட்ட அனைத்தையும் போனில் தான் தொடர்பு கொள்ள வேண்டும்.நாங்கள் தயாரானவுடன், மேம்..அடுத்து நீங்கள் தயாராக வேண்டும் என்றான் இன்பாவிடம். மறந்தும் கூட நம்முடைய விசயம் ரகசியமாக இருக்க வேண்டும் என்றவுடன் ஆதேஷ் ஜானுவை பார்த்தான் அர்ச்சுவும்.
உன் திருவாயை மூடிக் கொண்டு இருந்து விடுவாயா? ஜானுவை பார்த்து கேட்டான் ஆதேஷ்.
ரகசியத்தை காப்பாற்றுவேன் சார் என்று கையை உயர்த்தி அர்ச்சுவை பார்த்தான். அனைவரும் சிரித்தனர்.
கொஞ்ச நேரம் இருங்கள். நான் சாப்பிட ஆர்டர் செய்திருக்கிறேன். சாப்பிட்டு கிளம்புங்கள்.ஒன்றாக வேலை செய்தாலும் இனி நான் அதிகமாக பேச முடியாது என்றான் சைலேஷ்.
நான் கிளம்புகிறேன்.முக்கியமான வேலை உள்ளது என்று அர்ஜூன் கிளம்ப, அவனை மற்றவர்கள் தடுக்க,