ஹாய்…ப்ரெண்ட்ஸ்…
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..
இதோ உங்களுக்கான எபிசோடு 41
அர்ச்சு உன்னை பார்க்க தான் வந்தேன் என்றான் பிரதீப்.
யாரை பத்தி யார் கிட்ட பேசுற? உனக்கு இருக்குடா? என்றாள் ஜானு ஆதேஷிடம்
இன்னுமா?…என்றவன் இன்பா பக்கம் திரும்ப,அவள் பின்னே நின்ற சந்துரூ சொல்லாதே என்று சைகை செய்து கொண்டிருந்தான்.
அட..முதல்ல இருவரிடமும் பேசணும்.தாரிகா அவன் முன் வந்தாள்.
உனக்கு என்ன தான்டா பிரச்சனை? அவள் கேட்டவுடன் நீ…நீ…தான் பிரச்சனை என்று கத்தி விட்டான். அவள் அழுது கொண்டே செல்ல,
அவ மேலே ஏன்டா கோபத்தை காட்டுற? கவின் ஆதேஷிடம் கத்தி விட்டு செல்ல,…அய்யோ என்றிருந்தது ஆதேஷிற்கு. அங்கேயே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.
திருட்டு பையா? ஏதும் பிரச்சனையா? ஜானு வர, நில்லு வராதே! என்னால் முடியல..என்று தலையை பிடிக்க,அர்ச்சு அவனருகே வந்து…என்னடா பிரச்சனை?
அண்ணா! ஒன்றுமில்லை நான் தனியே இருக்க வேண்டும். தாருவிடம் சாரி கேட்டேன்னு சொல்லிடுங்க.
நீயே சொல்லு.அப்புறம் என்னிடம் கத்துவா? மதியம் கூட உன்னை பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள் என்றவுடன் ஆதேஷ் வருத்ததுடன் தாரிகா சென்ற திசையை பார்த்தான். கவின் அவன் பின்னே சென்று கொண்டிருந்தான். அனைவரும் அவனை பார்க்க, நாம் நினைத்த படி அனைத்தும் நடவாது.நீ புத்திசாலி புரிந்து கொள்வாய்.
அர்ச்சு அவனை அணைத்துக் கொள்ள, ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா என்றான். அம்மா சொல்லியும் என் மனது கேட்கவே மாட்டிக்கிறதே! கலங்கிய குரலில்.
அவனை மற்றவர்கள் பாவமாக பார்த்தனர்.சரி விடு.சீக்கிரம் சரியாகி விடும்.வந்த வேலையை கவனி என்றான்.
ஜானு அபியை அணைத்து,மாமா..உங்களுக்கு ஒன்றுமில்லையே என்று கேட்டாள். அவன் பார்வை இன்பா மீது விழ,அவளும் அவர்களை பார்த்தாள். பின் அபியும் நண்பர்களும் பேசிக் கொண்டே இருக்க, ஆதேஷை பற்றி வினவினாள் ஜானு.
அவன் காதல் பற்றியும், காதல் ரத்து பற்றி கூறவும்…லவ் ஃபெயிலியரா?அது ரொம்ப கஷ்டமா? கேட்டாள் ஜானு.
அதற்கு யாசு, அபி உன்னை வேண்டாம் என்றால் எப்படி இருக்கும்? அவள் கேட்டவுடன் ஜானு கோபித்துக் கொண்டு, என்னோட மாமாவிற்கு என்னை தான் பிடிக்கும் என்றாள்.
அபி அவளை அதிர்ந்து பார்த்துக் கொண்டு,இங்கே பாருடா…அபி தொடங்க,அகில் அவனது வாயை மூடி அவனை தள்ளி இழுத்து சென்றான்.
இப்பொழுது அவளிடம் ஏதும் கூறாதே! என்றான்.
அவர்களருகே வந்து மாமா..உனக்கு என்னை பிடிக்கும் தானே! கேட்டான்.
ஜானுவை எனக்கு பிடிக்கும்.ஆனால் அவன் இன்பாவை பார்த்தான்.
அங்கே ஆதேஷ் இன்பாவிடம் பேச வந்தான்.ஆதேஷை சந்துரூ முறைக்க, அவன் கண்ணாலே கெஞ்சினான்.
என்னடா லவ்வா பண்றீங்க? கண்ணாலே பேசுறீங்க? இன்பா கோபமானாள். அவள் பேசியதை பார்த்து எல்லாரும் சிரித்தனர்.
மூவரும் தனியே சென்றனர். மேம்…தாரிகா அக்கா விபத்து அல்ல…கொலை என்றான் ஆதேஷ்…
தெரியும் என்றாள் இன்பா.
இருவரும் திகைத்து அவளை நோக்க,அவள் முன் தினம் பேசிய போது, அவளது குரலில் பதட்டம் தெரிந்தது. எனக்கு தெரிந்து அந்நேரம் அவளை கொலை செய்தவர்கள் மிரட்டி இருப்பார்கள் என்று தோன்றியது. மறு நாள் அவள் இறந்து விட்டாள். கொஞ்ச நாளில் அவளது முதலாளி ஸ்ரீ அம்மா,அப்பா இறந்தார்கள். எல்லாமே இணைகிறது என்றாள் இன்பா.
உனக்கு எப்படிடா தெரியும்? ஆதேஷை கேட்டாள்.சந்தீப்பை காண்பித்தான் அவன்.பின் எனக்கு இன்னொரு சந்தேகமும் உள்ளது என்றான் ஆதேஷ்.
இருவரும் அவனை பார்க்க, யாழு அக்கா உயிரோடு இருக்க கூட வாய்ப்புள்ளது என்றான்.
என்னடா சொல்ற? என்னோட யாழு உயிரோட இருக்கிறாளா? பூரிப்புடன் கேட்டாள் இன்பா.சந்தீப் முகம் மாறியது.
கண்டிப்பாக தெரியவில்லை. எனக்கு அப்படியொரு யூகம் உள்ளது.
யூகமா? சந்தீப் கேட்டான்.
ம்ம்ம்…அக்காவிற்கு இடது கை மணிக்கட்டில் தான் தழும்பு இருக்கும். அன்று இறந்த சடலத்தில் வலது கை மணிக்கட்டில் தான் தழும்பை பார்த்தேன். எனக்கு நன்றாக நினைவுள்ளது என்றான்.
ஓ..அப்படியா? தாரிகா அக்கா கிடைத்தாள். அனைத்து பிரச்சனையும் முடியும் என்ற சத்தம் வந்த திசை நோக்கி திரும்பினர் மூவரும்.அர்ஜூனும் பிரதீப்பும் அனைத்தையும் கேட்டு விட்டார்கள்.
அர்ச்சு பிரதீப்பிடம் நடந்ததை கூறி இருப்பான்.பிரதீப் அவர்கள் அனைவரது போன் நம்பரையும் வாங்கிக் கொண்டான். பின் அர்ஜூனிடம், நான் கிராமத்தில் வேவு பார்க்க வந்திருக்கும் நால்வரையும் கவனித்துக் கொள்கிறேன். நீ ஸ்ரீயை பார்த்துக் கொள். நீங்கள் முடிந்தால் விவரங்களை சேகரியுங்கள். வேறு யாருக்கும் இது தெரிய வேண்டாம் என்று விட்டு சேர்ந்து வந்தனர்.
ஜானு அபியுடன் வெளியே வந்து ஐஸ்கிரீம் வாங்கி வந்தாள்.அனைவருக்கும் கொடுத்து விட்டு,ஏய்..திருட்டு பையா? அழைத்தாள்.
எனக்கு பெயர் இருக்கு மா.அதை கூறியாவது அழையேன் என்றான் கெஞ்சுதலாக ஆதேஷ்.
நீ வாயை திறயேன். எதற்குமா? சோர்வாக….கேட்டான் ஆதேஷ்.
திற…கூறுகிறேன்….என்றவள் அவன் வாயை திறந்தவுடன் ஐஸ்கிரீமை அவனது வாயில் தள்ளி விட்டு, அவனது நெஞ்சை தடவி விட்டு, உள்ளே இறங்குவது தெரிகிறதா? ஜில்லென்று இருக்கும் என்றாள்.
அவள் பக்கத்தில் இருக்கவும் அவளையே பார்த்தவன்.இங்க பாருமா,நீ சொல்ற மாதிரி நல்லா தான் இருக்கு.நீ கையை எடுத்து விட்டு தள்ளி நின்றாள் நன்றாக இருக்கும் என்றான்.
அவள் விலக, என்ன செய்கிறாய் ஜானு? பிரதீப் அவளருகே வந்தான்.
அண்ணா, அவனுக்கு லவ் ஃபெயிலியராம்.பாவம்ல…அதான் உதவி செய்தேன் என்று அவள் கூற, அவளை திரும்பி பார்த்து விட்டு உட்கார்ந்தான். தாரிகாவும் கவினும் கோபமாக நித்தி அருகே வந்தனர்.
என்ன இது? இருவரும் ஒரே நேரத்தில் போனை காட்ட, நீங்க மாறி மாறி பாத்துகிறீங்க.பேச மாட்டிகிறீங்கள..அதான் இப்படி செய்தேன்.
நீ நில்லு….நித்தியை கவினும் தாரிகாவும் விரட்ட, சைலேஷ் கார் முன் வந்து விழுந்தாள் நித்தி.
என்னாச்சு? என்று பதறி வந்தவனை கண்ணடித்து கெஞ்சினாள் நித்தி.இவள் ஏதோ செய்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டு, அவளை காப்பாற்ற முன் வந்தான் சைலேஷ்.
சைலேஷை பார்த்து பிரதீப்,நீயா? அவனருகே வர,
ஹே…பிரதீப்….இருவரும் அணைத்துக் கொண்டனர்.
அண்ணா, உங்களுக்கு இவரை தெரியுமா? நித்தி கேட்டாள்.
நன்றாக தெரியும். ஒரு பிஸினஸ் மீட்டிங்.அவர் கிராமத்தை பற்றி கூறி, அங்குள்ள இயற்கை காய் கனிகளை பற்றி அதில் பேசி காண்ட்ராக்ட் வாங்கினார். “யுவர் ஸ்பீச் ஸ் கிரேட்” என்றான் சைலேஷ்.
நித்தி உனக்கு எப்படி இவரை தெரியும்?
சைலேஷ் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு, நாங்கள் காதலிக்கிறோம் என்றான். பிரதீப் கவினை பார்த்தார். அவன் தாரிகா கையை கோர்த்து இருக்க, தாரிகா அவளது கண்ணை விரித்த படி அவனை பார்த்தாள்.
அவன் அவளை பார்த்து சிறு புன்னகையை உதிர்த்தான்.
வீட்டுல, எல்லாருக்கும் தெரிந்த மாதிரி இல்லையே! கேட்டார் பிரதீப்.நாங்கள் இன்னும் இதை பற்றி கூறவில்லை அண்ணா.படிப்பு முடியட்டும்.அப்புறம் பேசலாம்னு நினைச்சேன் நித்தி கூறி விட்டு,
அண்ணா, அப்பாவிற்கு இப்பொழுது தெரிய வேண்டாம் என்று சைலேஷை பார்த்தாள்.
ஏன் தெரியக்கூடாது? சைலேஷ் கேட்டான்.
அவருக்கு கவின் மீது கொல்ல பிரியம் பிரதீப் கூறினான். சைலேஷ் முகம் சுருங்கியது. நான் தான் ஏற்கனவே உங்களிடம் கூறினேனே!உங்களை கண்டிப்பாக அப்பாவிற்கு பிடிக்கும் என்று சமாதானப்படுத்தினாள் நித்தி. தாரிகா கவின் கையை விலக்க, அவளை ஆழ்ந்து பார்த்த கவின் அவளது கையை இறுக்கமாக பிடித்தான்.
சார், நான் நித்தியை பார்த்துக் கொண்ட விதம் தான் அவருக்கு பிடித்திருந்தது. அதுமட்டுமல்ல எனக்கு…என்று தயங்கியவன் அவரது தொழிலில் ஆர்வம் அதிகம். அதனால் எப்போதும் அவருடன் தான் இருப்பேன் என்றான்.
மருத்துவராக உனக்கு ஆசையா? கேட்டான் சைலேஷ்.ஆம்…தலையசைத்தான்.
அப்புறம் எதற்காக இங்கே வந்து படித்து கொண்டிருக்கிறாய்?
பணம் வேண்டுமே! அக்காவிற்கு திருமணம்.மாமா அக்காவை காதலிப்பதால் தான் இந்த ஒரு வருடமாக காத்திருக்கிறார்கள். மாமாவின் அம்மாவிற்கு என் அக்கா மீது பெரியதாக விருப்பமில்லை. மாமாவின் பிடிவாதத்திற்காக ஒத்துக் கொண்டார்கள்.அனைத்து விசயத்திற்கான செலவு அதிகமாக உள்ளது. அவளுக்கு பெரிய இடம் வேறு.அதிகமாக செய்ய வேண்டும்.அதனால் தான் இந்த படிப்பில் அதிக செலவு இராது என்று தான் இதை எடுத்தேன் என்றான்.
நானும் பணம் தருகிறேன் என்று கூறினால் கேட்கவே மாட்டேங்கிறான் பிரதீப் வருத்தமாக கூறினார்.
அண்ணா! நீங்கள் அவர்களை பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே போதும். எங்களுக்கான செலவை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.அவளுக்கான திருமண தேதியும் நெருங்கி வருகிறது. அதற்கான பணத்தை அம்மாவிடம் வாங்கிக் கொள்ளுங்கள். நானும் தருகிறேன்.மாமா வீட்டில் திருமணம் நம் கிராமத்தில் நடத்த வேண்டும் என்று போராடி தான் முடிவெடுத்துள்ளோம்.அதனால் கொஞ்சம் கிராண்டாகவே நடத்தும் படி பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா! நானும் இதை பற்றி இன்னும் பேச வேண்டும். இந்த வாரம் ஊருக்கு வருகிறேன்.ரதி ஆன்ட்டியும், நீங்களும் பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா.
அகில் உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையே!
அம்மா இதை செய்வதால் அவர் கொஞ்சம் நார்மலாக இருப்பார் என்றான் அவன்.
சரி.இந்த திருமணம் முடியட்டும்.நீ நீட் தேர்வு எழுது பார்க்கலாம் என்றான் சைலேஷ்.
சார்,என்னால….போதும்டா. நீ சும்மா வேண்டாம். கடனா வாங்கிக்கோ…படித்து வேலை கிடைத்தவுடன் திருப்பி தா பிரதீப் கூறினான்.
சரிங்கண்ணா. பார்ப்போம் என்றான்.நீ படிக்க புத்தகங்கள் தேவைப்படும் தானே! அர்ச்சு கேட்டான்.
எனக்கு அங்கிள் நிறைய புத்தகங்கள் கொடுத்துள்ளார் என்றான் கவின்.
ஓ.கே அமைதியாக தாரிகா மட்டும் தயக்கத்துடன் அங்கே நின்றாள்.ஆதேஷ் அவளை பார்த்து,
தாரு…கூப்பிட,நான் கிளம்புகிறேன் என்றாள்.
சாரி.உன்னிடம் அதிகமாகவே கோபப்பட்டு விட்டேன்.அது ரொம்ப டென்சனா இருந்ததா? நீயும் டிஸ்டர்ப் பண்ணியா? அதான் கத்திட்டேன். என்னை மன்னித்து விடு.
நீ எதற்கு என்னை அவாய்டு பண்ற?
அது..வந்து..எனக்கு கஷ்டமா இருக்கு.
ஓ.கே ஒரு வாரம் நாம் பேச வேண்டாம்.அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றவள் வேகமாக நடக்க, கவின் அவளது கையை பிடித்து, உன்னிடம் பேச வேண்டும் என்று தனியே அழைத்து சென்றான்.
ஜானு பிரதீப் அருகே வந்து, அண்ணா! உனக்கு மட்டும் எந்த பொண்ணையும் பிடிக்கவில்லையா? ஏன் அண்ணா?
எனக்கு தான் நீ இருக்கிறாயே! போதும்மா என்றான் பிரதீப்.
இப்படி சொன்னால் எப்படி? சைலேஷ் கேட்டான்.
என் தங்கையை போல் ஒரு பொண்ணு கிடைப்பாளா? என்ன?
இவளை போலா? அபி,மாமா….கண்டிப்பா உங்களுக்கு திருமணமே நடக்காது.
மாமா..என்று சிணுங்கினாள் ஜானு.
இல்லை மாப்பிள்ள.எனக்கு அதெல்லாம் தோணவே இல்ல.எனக்கு என்னோட ஜானுவோட சிரிப்பே போதும் என்றான்.
ஆதேஷ்…ஏதோ பேச வந்தவனை நித்தி நிறுத்தி, எங்க ஜானு சரியான சண்டைக்காரி தான்.ஆனால் ரொம்ப பாசமான பொண்ணு.பிடிச்சவங்களுக்கு ஒண்ணுனா அவள் தான் முன் வந்து நிற்பாள். அண்ணனும் தங்கையும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் இல்லை….அவ்வளவு பாசம்..ஒருவர் மீது மற்றவருக்கு…
ஆதேஷ் பற்றி உனக்கு ஏதும் தெரியாது. நீ அவளை பற்றி ஏதும் பேசாதே! என்று விட்டு ஆதேஷை நீ திருட்டு பையன்னு கூப்பிடுறத நிறுத்து….ஜானு.
அவன் பணக்கார பையன். அவனை தெரிந்தவர்கள் முன் இவ்வாறு அழைத்தால் தவறாகி விடும்.அவனது அம்மாவிற்கு கஷ்டமாக இருக்கும் என்றாள் நித்தி.
சரிக்கா,நான் எப்படி கூப்பிடுவது? யோசித்தாள்.மறுபடியும் சந்தித்தால் பார்க்கலாம் என்றான் அவன்.
அவன் அம்மா போனில் அவனை அழைக்க, அர்ச்சு அவனிடம் வர கொஞ்சம் நேராகும்னு சொல்லுடா.
எதுக்கு அண்ணா! வேலை ஏதும் உள்ளதா? வினவினான்.ஆம் என்று தலையசைத்தான்.
போன் துண்டிக்க பட….என்ன வைச்சுட்டாங்க.பிரச்சனையா? யோசனையோடு போனை பார்த்தான் ஆதேஷ்.