ஹாய்…ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 40…
அர்ஜூன்..வீடியோவா? என்ன வீடியோ?தெரியாதது போல் இன்பா நடிக்க,இதயா போனை அவனிடம் கொடுத்தாள்.
இன்பா அவளை முறைத்து விட்டு, வேண்டாம்.அர்ஜூன் பிரச்சனை என்றாள். அவன் போனை பார்த்து விட்டு,இது உங்களுக்கு வேண்டாம்.எனக்கு வேண்டுமே? என்று அவனுக்கு அதை அனுப்பி விட்டு இதயா போனில் வீடியோவை அழித்து விட்டான்.
அதை விடுங்கள். எதற்காக ஆதேஷை தேடினீர்கள்?
சந்துரூ காலையிலிருந்து போன் செய்து கொண்டே இருந்தான்.என்னவென்று தெரியவில்லை.ஆதேஷை பற்றியும் கேட்டான். அதான் அவனிடம் கேட்கலாம் என்று நினைத்தேன் என்றாள்.
அந்த கிஷோர் அங்கே வந்தான். அவன் நேராக இன்பா அருகே உட்கார வந்தான். அர்ச்சு வேகமாக எழுந்து இன்பாவை மறைத்துக் கொண்டு தெனாவட்டாக உட்கார்ந்தான்.
தம்பி, கொஞ்சம் வழி விடுகிறாயா? மேடம் கிட்ட பேசணும்.
சார்…பேசுங்க சார். நான் உங்களை தடுக்கவில்லையே!
நீங்கள் என் வழியை மறைத்தால் எப்படி பேசுவது?
சார், நீங்க பேசினா மேம்கு நல்லா கேட்கும்.அவர் முறைத்தார்.
நான் அப்புறம் பேசிக் கொள்கிறேன் என்று விட்டு அங்கிருந்து அகன்றார்.
எப்படியானாலும் அந்த பொறுக்கி என்னுடன் தான் வேலை செய்கிறான்.அதனால் நான் அதனை சமாளித்து தான் ஆக வேண்டும்.
எதற்கும் கவனமாக இருங்கள் என்று விட்டு ஆதேஷை பார்த்தால் உங்களை வந்து பார்க்க சொல்லவா?
வேண்டாம். அவனையும் சந்துரூவையும் சாயங்காலம் சந்தித்துக் கொள்கிறேன்..
அபி கோபமாக அவன் பார்வையை பாரேன்டா அகில். அவனை பார்த்தால் ஆசிரியர் போலவா தெரிகிறது?
இல்லை தான். அச்சோ எங்க செல்ல அபிக்கு கோபத்தை பாரேன் நித்தி அவனது கன்னத்தை பிடித்து கொஞ்சிக் கொண்டிருக்க, அவளது போன் ஒலித்தது.
மேடம்,நீங்கள் ஏதோ செய்வது போல் தெரிகிறதே? சைலேஷ் அவளிடம் கேட்க, அபி கோபமாக இருக்கிறான். சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
ஓ…அப்படியா..
ஆமாம். உங்களுக்கு எப்படி தெரிந்தது? அவள் கேட்க, யாசு அவளது தலையை திருப்பி சிசிடிவி புட்டேஜை காண்பித்தாள்.
அவளது போனை பிடுங்கி யாசு,…என்ன சார்…கொஞ்ச நேரம் கூட எங்க ப்ரெண்டை விட்டு இருக்க முடியவில்லையா? எங்களுக்கும் அவளை கொஞ்சம் மிச்சம் வையுங்கள்.
அடியேய்! யாசு என்ன பேசுகிறாய்? அவளது போனை யாசுவிடம் வாங்க போராடினாள். அனைவரது மனநிலையும் மாறியது.
இதயா அர்ச்சுவை தனியாக சந்தித்து, சீக்கிரம் அபியிடம் சென்று அவனது போனில் அந்த வீடியோவை அழிக்க முடியுமா?
ஏய்…என்ன செஞ்சு வைச்சுருக்க? அவனுக்கு தெரிந்தால் பயங்கரமாக கோபப்படுவான். அவனுக்கு வேற,….தொடங்கிய அர்ச்சு இடையிலே நிறுத்தினான்.
எனக்கு தெரியும்? அபியை வெறுப்பேற்ற தான் இவ்வாறு செய்தேன். அக்காவிற்கு தெரிந்தால் அவ்வளவு தான். அவனுக்கு அனுப்பிய பின் தான் அந்த ராஸ்கலின் செய்கையை கவனித்தேன்.
தயவு செய்து சீக்கிரம் போ….இதயா பதட்டமாக, அர்ச்சு அங்கிருந்து ஓடி வந்தான். இவர்கள் நித்தியை கேலி செய்து கொண்டிருக்க, மூச்சிறைக்க…வந்த அர்ச்சு அபி கையில் வைத்திருந்த போனை பிடுங்கினான். பாஸ்வேர்டை கேட்டான். எதற்குடா…? அபி கேட்க…சொல்லுடா என்று ஏதோ ஒரு காரணத்தை கூறி வாங்கி வீடியோவை அழித்து விட்டு…அப்பாடா…அமர்ந்தான்.
என்ன செஞ்சடா? ஒழுங்கா சொல்லிடு கேட்டான் அபி.அர்ச்சு அகிலிடமிருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி முகத்தில் ஊற்றி வியர்வையை போக்கிக் கொண்டிருந்தான்.
அபி மீண்டும் கேட்கவே…உன்னுடைய அக்கவுண்ட்டில் இப்பொழுதைக்கு ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டேன்.அவனை நம்பாமல் அனைவரும் பார்க்க, அவன் எடுத்து காண்பித்தான்.
ஸ்வாகடா அபி, நிஜமாகவே எடுத்திருக்கிறான் கவின் கூறினாள்.
அர்ச்சு அகிலிடம் இப்படி உம்மென்று இருக்காதேடா.உனக்கு செட்டே ஆகல என்றான்.பின் அனைவரும் அகிலை சமாதனப்படுத்தினர்.அவனும் நண்பர்களிடம், இனி சிந்தித்து நடந்து கொள்வேன் என்றான்.
ஓய்..எனக்கு சாப்பாடு? அர்ச்சு தாரிகாவிற்கு போன் செய்தான். சாரிடா….நான் ஆதேஷிற்கு கொடுத்துட்டேன் அவன் முன் வந்தாள்.
அவனுக்கா? அர்ச்சு வயிற்றை தடவினான். சும்மா தான் சொன்னேன்.இந்தா உன்னை பட்டினி போட்டால் அம்மா..என்னை கொன்னுடுவாங்க..
சரி….அவனெங்கே? அர்ச்சு கேட்க, ஆதுவா?
அவனுக்கு மந்திரிக்கணும்னு நினைக்கிறேன்.
என்னாச்சு? அகில் கேட்க, சொல்ல மாட்டேங்கிறான். ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் என்று நினைக்கிறேன். என்னிடம் பேசவே மாட்டிக்கிறான்.
என்னவாக இருக்கும்? தாரிகா யோசித்துக் கொண்டிருக்க,கவின் தாரிகாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.அர்ச்சு இன்பா கூறியதை நினைத்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
நித்தி கவினை அழைக்க,…அவன் கவனம் தாரிகா மீதே இருந்தது. யாசு ஜூஸை குடித்துக் கொண்டே நித்தியிடம் சைகை செய்ய, இரண்டு பேரையும் தனியா கோர்த்து விடணுமே! என்ன செய்யலாம்? சிந்தித்தாள்.
முதலில் தாரிகா போனை எடுத்து வீட்டிற்கு சென்றவுடன் ஐந்து நிமிடம் கழித்து பூங்காவிற்கு வந்து விடு என்று கவினிற்கு அனுப்பி விட்டு ஏதும் தெரியாதது போல் வைத்து விட்டு பேசினாள். சில பேர் இருக்காங்க யாசு….காதல் இருக்குமாம்..ஆனால் சொல்ல மாட்டாங்களாம்…சொல்ல நினைப்பாங்களாம்..காதல் இருக்காதாம் என்று பிதற்றினாள்.
அனைவரும் அவளை ஒருவாறு பார்த்து,என்ன சொன்னாய்?கேட்க…..அவள் மீண்டும் கூற,….
ஒரு எலவும் புரியல…டேய்….உனக்கு புரியுதா?..அகில் கேட்டான்.
அதற்கு அர்ச்சு நல்லா புரியுது. நம்ம நித்திக்கு சாரை பார்க்காமல் பைத்தியம் முத்திருச்சு கிண்டல் செய்ய….
அட போங்கடா. அவர் ரொம்ப பிஸி மேன் டா.அவர விடுங்க, கவின் உன்னோட போனை கொடேன் நித்தி பேச, அவன் தாரிகாவிடமிருந்து மீளவில்லை.
சுத்தம்.இவனிடம் பேசுவதற்கு எங்காவது போய் சுவத்து கிட்ட பேசலாம் என்றாள். அனைவரும் அவனை பார்க்க, தாரிகாவும் பார்த்தாள். அவன் அவளையே பார்ப்பதை கவனித்து அவள் கூச்சத்தில் ஒருவாறு நெளிய,இது சரியில்லை.நீ கிளம்பு. இவனுக லவ்வ சொல்ல மாட்டானுகளாம்.சைட் மட்டும் அடிப்பானுகளாம்.
டேய்..பார்த்தது போதும்…அவனது தலையில் அர்ச்சு தட்டி விட்டு, என் முன்னாடியே எல்லாத்தையும் பண்ணுடா.
என்னடா? அவன் விழிக்க, தாரிகாவிற்கு சிரிப்பு வந்தது.
ஓய்…என்ன சிரிப்பு? கிளம்பு என்று அவளை அர்ச்சு விரட்டினான். மற்றவர்கள் கவினை கலாய்த்தனர். கவின் போனை எடுத்து தாரிகாவிற்கு அதே செய்தியை அனுப்பி விட்டு அவனது பையிலே போட்டாள் நித்தி.
கல்லூரி முடிந்து மாணவ, மாணவிகள் சென்று கொண்டிருந்தனர்.இன்பா அவளுக்கான வருகையில் கையெழுத்திட்டு வெளியே வந்தாள்.ஆதேஷ் அவளை கடந்து செல்ல அவள் ஓட்டமும் நடையுமாக அவனருகே வந்தாள். இடையே வந்தான் கிஷோர்.அவளை நிறுத்தி, அவளிடம் பேச வேண்டும் என்றான்.
சார், முக்கியமான விசயம். பேசி விட்டு வந்து விடுகிறேன் என்றாள். ஆதேஷ் கார் அருகே செல்ல, அவனுக்கு போன் வந்தது.வெளியே சந்துரூ தெரிந்தான்.
இவன் இந்நேரத்தில்….சிந்தித்தவள் கிஷோரை விலக்கி விட்டு வேகமாக ஆதேஷ் அருகே செல்லவும்,ஆதேஷ் சந்துரூ அருகே செல்லவும் சரியாக இருந்தது. இன்பா ஒரு பக்கமும், சந்துரூ ஒரு பக்கமும் ஆதேஷை பிடிக்க, அவனுக்கு என்னை விடுங்கடா என்றிருந்தது. கல்லூரியில் அனைவரும் சென்றிருந்தாலும் சில பேர் அங்கங்கு தென்பட்டனர். இருவரும் மாறி மாறி அவனை இழுக்க, அபி அங்கே வந்து என்ன செய்கிறீர்கள்? அனைவரும் உங்களை தான் பார்க்கிறார்கள் என்றான்.
நான் ஆதேசிடம் பேச வேண்டும் என்றாள் இன்பா..நீ பேச கூடாது என்றான் சந்துரூ.இருவரும் வழி விடுகிறீர்களா? ஆது வா போகலாம் என்றாள் அந்த பெண் துகிரா.
நீ போ.நான் இவர்களிடம் பேசி விட்டு வருகிறேன் என்றான்.அப்பொழுது மாமா…என்றொரு சத்தம்.
அனைவரும் ஜானு என்றனர் கோரசாக, ஆதேஷ் திரும்பி பார்த்தான்.
அடக் கொடுமையே! இவள் வேறா? ஆதேஷை மேலும் இருவரும் இழுக்க,..
மாமா…என்று அபி அருகே ஓடி வந்தாள் ஜானு. அபி விலகி ஓட… மாட்டினேன்டா……என்று ஆதேஷ் ஜானுவை பார்க்க, அபியை விடுத்து ஜானு ஆதேஷை பார்த்தாள்.
அட,…நம்ம திருட்டு பையன்.உண்மையாகவே திருடிட்டானா? அதான் அவனை பிடிக்க பார்க்கிறார்களோ!…என்று அவனிடம் வந்து அவனை நான் பிடித்து தருகிறேன் என்று அவளும் இன்பா அருகே வந்து இழுக்க, ஆதேஷ் கீழே விழுந்தான். அவனது கையில் லேசான கீறல்.அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்தான்.
ஆது…தாரிகா ஒரு பக்கம் வர, ஜில்லா..என்று துகிரா ஒரு பக்கம் வந்து இருவரும் மோத அவர்கள் தலை இடித்துக் கொண்டது..
அடப்பாவிகளா? ஏன்டா…என்று அனைவரையும் பார்த்தான். சுற்றியிருந்தவர்கள்… ஆதேஷை பார்த்து சிரிக்க
எல்லாரும் நிறுத்துங்க.என்னால முடியலப்பா..என்று ஆதேஷ் எழ,தாரிகா அவனுக்கு உதவ வந்தாள்.
போதும்..நானே பார்த்துக்கிறேன் அவன் கூற, ஜானுவின் பின்னே பிரதீப் வந்திருந்தான். அவன் பக்கம் கவனம் செல்ல, அண்ணா….என்றனர். அபி மாமா,…..என்றான் சிந்தித்தவாறு.
பிரதீப் ஆதேஷிற்கு கை கொடுக்க எழுந்து தூசியை தட்டியவாறு,தேங்க்யூ சார்
ஏய்…ராட்ச்சசி,இங்க வா.. உனக்கு என்னை பார்த்தால் திருடன் போலவா தெரிகிறது?
ஜானு வேகமாக வந்து, ஆமாடா….திருட்டு பயலே.நீ திருடன் தான்டா என்றாள்.
டேய்,…நீ வர போகிறாயா? இல்லையா? துகிரா கேட்க, நீ கிளம்பு. நான் உன்னோட வீட்டுக்கு தான் போகிறேன்.நல்லா…நடடா…என்றாள் திமிராக.
அது என்னோட கார் டி…கத்தினான்.
போடா..ஜில்லா….என்றாள்.
என்ன திமிரு உனக்கு என்றவன்.இன்பா சந்தீப்பிடம் திரும்பி…எல்லாம் நீங்கள் தொடங்கியது.நீங்களாம் சீனியரா? உதவிக்கு வராமல்….என்று அகில் நண்பர்களிடம் கூறி விட்டு, அண்ணா! நீங்களும் என்னை விட்டு விட்டீர்களே! அர்ச்சுவை பார்த்தான்.
ஜானு அர்ச்சுவை பார்த்து, அண்ணா அன்று பேசவே முடியல.அவள் அவனருகே வர,
உனக்கு அண்ணாவா? அர்ச்சுவை பார்த்தான் ஆதேஷ்.
உனக்கு தான் இவனுடன் சண்டை போடவே நேரம் பத்தலையே! என்றபடி ஆதேஷை கிண்டலாக பார்த்தான்.
அண்ணா! என்று ஓரக்கண்ணால் பார்த்தான் அவன். இவர் தான் ஜானுவின் உடன் பிறந்த அண்ணன் பிரதீப்.அபி தான் முறைப்பையன்.
அதான் தெரியுமே! என்றான். அவள் தான் தண்டோரா போடுகிறாளே? மூஞ்சியை பார் என்று முணு முணுத்தான். பிரதீப் ஆதேஷை முறைத்தான்.
அர்ச்சு சிரித்தவாறு ஆதேஷிற்கு கண்ணை காட்ட, சும்மா..ஜோக் சார் என்றான் பிரதீப்பிடம்.
சார்,..நீ எப்படி மெயிண்டெயின் பண்றீங்க உங்களது தேகத்தை.சூப்பர் சார்.. பார்த்தால் படித்தவர் போல் உள்ளீர்கள்.மற்றபடி கிராமத்து சாயல் என்றான் ஆதேஷ்.
ம்…உடற்பயிற்சி தான் கம்பீரமான குரலில். அவன் அருகே வந்து, அவள் உங்கள் தங்கை தானா?கேட்டான்.
ஆமாம்…என்றான். அவள் அதிகம் பேசுகிறாளே? என்றான்.
அவள் அப்படி தான். உனக்கு என் தங்கையை எப்படி தெரியும்? அவளிடம் பேசவே எல்லாரும் அடித்து பிடித்து ஓடுவார்கள்.நீ பேசுகிறாயே!
அதுவா சார்? அது ஒரு பெரிய கதை…
சரி.அப்புறம் பேசுவோம்.
“என்ன சேதி! என்ன சேதி!
மறைக்கிறாயோ என் நண்பனே!
என்ன சேதி! என்ன சேதி!
சொல்லடா என் நண்பனே!
வானும் மண்ணுமாய் கலந்து
உரையாடினோமே என் நண்பனே!
நம்முடன் நட்பு அனைத்தும்
சொல்வாயே என் நண்பனே!
சொல்லடா! சொல்லடா!
சேதி கூறடா!”