ஹாய்…ப்ரெண்ட்ஸ்…
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்…
இதோ உங்களுக்கான எபிசோடு 39…
வீட்டிற்கு வந்தனர் சைலேஷும் கைரவும். தாத்தாவுடன்…இருவரும் பேசி விட்டு, கைரவை அவனது அறையில் விட்டு, அவனறைக்கு வந்தான் சைலேஷ்.
நித்தி அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளருகே சென்று அவனும் படுத்துக் கொண்டான். அவள் திரும்பி அவன் முகத்தை நோக்கி தூங்கிக் கொண்டிருக்க, அவன் அவளை ரசித்தவாறே…படுத்திருந்தான். அவளது போன் ஒலித்தது. யாசு போனை எடுடி அப்பாவாக தான் இருக்கும் கூறிக் கொண்டே கண்ணை விழித்தாள்.அருகே சைலேஷை பார்த்து பயந்து எழுந்தாள். அவளை மீண்டும் பெட்டில் தள்ளியவன். குட் மார்னிங்க் என்று அவளது இதழ்களை வருடினான். அவள் கண்ணை மூட அவன் சிரித்துக் கொண்டு அவளது நெற்றியில் முட்டினாள். அவள் கண்ணை திறந்தவுடன் போன் ….கையை நீட்டினாள்.
அவன் போனை கொடுத்து விட்டு, அவளது கன்னத்தில் முத்தமிட்டு அவனது லேப்பை எடுத்து வேலையை கவனிக்க ஆரம்பித்தான். அவளது அப்பா போனில் இருக்க,
அப்பா…ரொம்ப அசதியா இருந்தது.அதனால் தான் அயர்ந்து தூங்கிட்டேன். அவன் அவளை ஓரக்கண்ணால் பார்க்க, அவளும் பார்த்தாள்.
என்னம்மா பேசு…அப்பா கூற, சாப்பிடீங்களா? என்ன சாப்பிட்டீர்கள்? என்று நிறைய பேசினாள் அவளது அப்பாவிடம்.போனை வைத்து விட்டு…சைலேஷிடம் நான் கிளம்புகிறேன் என்று வேகமாக நகர, அவள் முன் வந்தான்.
உங்களுக்கு ரொம்ப அசதியா? கிண்டலாக கேட்டான்.
ஆமாம் என்றாள் சாதாரணமாக.உன்னோட அப்பாவிற்கு என் வீட்டில் நீ இருப்பது தெரிந்தால் என்ன நினைப்பார் என்னை பற்றி?
அதெல்லாம் ஏதும் நினைக்க மாட்டார்.அப்படியா! என்று கேட்டவாறு அவளருகே வந்தான். உன்னை அசதியாக ஆக்கி விடுவோமா?
ஹே….என்ன சொல்றீங்க? நான் கிளம்புகிறேன். நான் இன்னும் விடுதிக்கு போகணும்.கிளம்பணும் கல்லூரி செல்ல வேண்டும். அதுவும் ஒரு மணி நேரத்திற்குள்.அட,…..ஸ்ரீயை பார்க்கணுமே!..தலையில் கை வைத்து இவ்வளவு நேரமாகி விட்டதே! நன்றாக தூங்கி விட்டேன். போச்சு என்றாள்.
அதெல்லாம் வேண்டாம். இங்கேயே எல்லாவற்றையும் முடி.நாம் ஸ்ரீயை பார்த்து விட்டு கல்லூரி செல்வோம் என்றான்.வேறு வழியில்லை என்று சரி…நீங்கள் வெளியே செல்லுங்கள்.
நானா?…ஆம் நீங்கள் தான் என்றாள். மீண்டும் அருகே அவன் வர, நேரமாகிறது சார் என்று அவனை பிடித்து அறைக்கு வெளியே தள்ளி கதவை சாத்த, அவன் விடாமல் உள்ளே நுழைந்தவன் அவளுக்கு ஒரு ஆடையை வைத்து விட்டு வெளியே சென்றான். அவள் வெட்க புன்னகையுடன் குளிக்க சென்றாள்.
அவள் தயாராகி தலையை சரி செய்தவாறு கதவை திறந்தாள். அவன் உள்ளே வந்து அவனுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்து, நான் கையூவை பார்த்து வருகிறேன் அவனிடம் கூறி விட்டு வெளியே வந்து கைரவை பார்க்க சென்றாள். அவன் படுத்திருக்க கதவை தட்டினாள். வா…நித்தி…என்று அழைத்து விட்டு, ஒரே நாளில் அனைவரையும் கவர் செய்துட்ட…
என்னடா இப்படி பேசுற?
நான் என்ன கூறினேன்.எல்லாரும் உன்னை கேட்கும் படி வைத்து விட்டாய். ம்ம்…சூப்பர் என்றான்.
நீ சாப்பிட வருகிறாயா? அவள் கேட்டாள்.
ம்ம்..பசிக்கிறது..ஆனால் அதை விட டயார்டா இருக்கு என்றான்.நீ சென்று சாப்பிடு..கல்லூரிக்கு நேரமாகிறது.
ஓ.கே என்றவள் நேராக சமையலறைக்குள் நுழைந்தாள்.
என்னமா?…சாப்பாடு எடுத்து வைக்கவா?…கேட்டார். அவர்களுடன் சேர்ந்து டைனிங் டேபிளில் அனைத்தையும் எடுத்து வைத்தாள். அவர்கள் வேண்டாம் என்று கூறியும் கேட்கவில்லை. தாத்தாவிற்கு சாப்பிட எடுத்து வைத்து விட்டு ஒரு தட்டில் அனைத்தையும் எடுத்துக் கொண்டு,
நான் கையூவிற்கு சாப்பாடு கொடுத்து விட்டு வருகிறேன். அவனுக்கு பசிக்கிறது போலும் என்றாள்.
சாப்பிட்டு போம்மா என்றார் தாத்தா.
அவர் இன்னும் வரவில்லையே. அவர் வரட்டும் நான் சாப்பிடுகிறேன். அதற்குள் அவனுக்கு கொடுத்து விடுவேன்…என்று அவனது அறைக்கு சென்றாள். தாத்தாவிற்கு பெருமை.. கைரவிற்கு அளவில்லாத சந்தோசம்.
அவனுக்கு கட்டு போட்டதால் சாப்பிட முடியவில்லை. அவனுக்கு ஊட்டி விட்டாள்.கைரவ் கண்ணில் நீர் தேங்கியது.சைலேஷ் அவளை தேடிக் கொண்டு இருவரையும் பார்த்த போது வேடிக்கையான பேச்சுடன் உரையாடிக் கொண்டிருப்பதையும் நித்தி கைரவிற்கு ஊட்டி விடுவதையும் பார்த்து அவன் கண்ணில் காதல் பொங்கி வழிந்தது.
முடிந்ததா? சைலேஷ் உள்ளே வந்தான்.கொஞ்சம் காத்திருங்கள் வந்து விடுகிறேன்.நீங்கள் சாப்பிட்டீர்கள் தானே!
இல்லை.முடிந்தவுடன் வா..கிளம்பலாம் என்று கீழே சென்றான். அவன் சென்ற மறு நொடியே கைரவிடம் கூறி விட்டு வந்து விட்டாள். சாப்பிட்டு பின் இருவரும் கிளம்பினார்கள்.
காரில் சென்று கொண்டிருந்த போது நித்தி ஒரு பாட்டை முணங்கிக் கொண்டே சந்தோசமாக இருப்பதை பார்த்த சைலேஷ் அவளிடம்,
ரொம்ப தேங்க்ஸ்ம்மா…என்றான் அவளது கையை பற்றியவாறு.
தேங்க்ஸ் சொல்லி பிரிக்கிறீங்க…என்றாள்.காரை நிறுத்திய சைலேஷ்…இதுவரை நான் மட்டும் தான் அவனுக்கும் தாத்தாவுக்கும்…
இனி நானும் உங்களுள் ஒருத்தி…அவள் சிரிக்க, என்ன எமோஸ்னலாக்காம இருக்க விட மாட்ட போல..
எதற்கு இதெல்லாம்? ஹாப்பியா இருங்க….அவனது கன்னத்தை பிடித்து இழுத்தாள்.அவன் அவளது தலையை தொட வந்தான்.
இப்பொழுது தான் சரி செய்தேன். உலைத்து விடாதீர்கள்! பேசிக் கொண்டே மருத்துவமனைக்கு வந்தனர்.
தாரிகா ஸ்ரீக்கு சாப்பாடு எடுத்து வந்தாள்.அகிலும் நண்பர்களும் பின்னே நித்தியும் சைலேஷும் ஜோடியாக வந்தனர். அர்ச்சுவும் அவனது அறையை காலி செய்து வெளியே வந்தான். அவர்களை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நித்தி…..என்று யாசு சந்தோசத்தில் அவளை ஓடி போய் கட்டிக் கொண்டாள்.
யாசு…என்னாச்சு? புரியாமல் அவள் விழிக்க, யாசு இருவரையும் சேர்த்து நிற்க வைத்து…இரண்டு பேரையும் நெட்டி முறித்தாள். செம ஜோடி நீங்கள்….அவளை பார்த்து குறும்புடன் கண்ணடித்தாள். நித்தி வெட்கத்துடன் சைலேஷ் பின் மறைய…ஓ…வென்று சத்தமிட்டனர் மற்றவர்கள்.
இது ஹாஸ்பிட்டல்….செவிலியர் கூறி விட்டு,நீங்கள் வந்ததிலிருந்து எங்கள் மருத்துவமனை ஒரே சத்தமாக உள்ளது.
கவலைப்படாதேடி… மற்றொரு செவிலியர் வந்து…அந்த பொண்ணு இன்று மாலை டிஸ்சார்ஜ்னு டாக்டர் சொல்லிட்டாரு…
அப்பாடா…இனி அமைதியாக இருக்கும் என்றார் அவர்.
மேடம்….எனக்கொரு…சந்தேகம். உங்களது ஹாஸ்பிட்டலில் எங்களை விட இந்த அறையிலும் சத்தம் அதிகமாக உள்ளது என்னவென்று பாருங்கள்.ஹாஸ்பிட்டல் இடிந்து விழுந்து விடாமல்…..கிண்டலடித்தான் அபி.
அது பிரசவ அறை….அனைவரும் அவனை முறைத்தனர். செவிலியர் அவனை முறைத்தபடி சென்றார்.
ஏன்டா என்று தலையில் அடித்துக் கொண்டாள் யாசு.
வாங்க. ஸ்ரீயை பார்க்கலாம்….அவள் அறைக்குள் செல்ல, அவளருகே செல்லாது தள்ளி நின்று பேசினார்கள்.
அவளுக்கு உடல் சரியானது இருந்தும் அவளுக்கு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. அகிலை பார்த்தாள். அவன் அவளருகே வர, அவள்…வேண்டாம் சீனியர் என்ன சொல்வதாக இருந்தாலும் அங்கிருந்தே பேசுங்கள் என்றாள்.
ஒன்றுமில்லை. உடம்பை கவனித்துக் கொள் கூறி விட்டு கவலையோடு விலகினான். அர்ச்சுவை பார்த்து,..
அர்ச்சு உன் கிட்ட ஒன்று கேட்கணுமே? என்றாள்.
சொல்லு ஸ்ரீ கேட்டான்.
ஒரு நிமிஷம் …..என்று யாசு ஸ்ரீ முன் வந்து…அது என்ன அர்ச்சு? நாங்களெல்லாம் சீனியர் அவன் மட்டும் உனக்கும் உன் தம்பிக்கும் அர்ச்சுவா?
அதானே நானும் கேட்க நினைத்தேன் நித்தியும் முன் வர, அவனை பார்த்தால் எனக்கு சீனியர் போல் தெரியவில்லை. அவனை பார்த்தால்..என்று அவனை பார்த்துக் கொண்டே….அவன் வளர்ந்திருக்கிறான்.ஆனால் குட்டி பையன் போல் தெரிகிறான் அவள் கூறவும் அர்ச்சு முகமலர்ச்சியுடன் அவளை பார்த்தான்.
மற்றவர்கள் திகைக்க…நீ என்ன சொன்ன? அர்ச்சு கேட்டான்.
அவள் தயங்கினாள். நிவாஸ் உள்ளே புகுந்து…..அதெல்லாம் அவள் மறந்து விட்டாள் என்றான்.
கவின் ஸ்ரீயிடம்..நீ மறுபடியும் கூறு..அவளை உறுத்து பார்த்தனர்.
ஏதோ உள்ளது? என்று நினைத்த நிவாஸ்,நான் உங்கள் அனைவரிடமும் பேச வேண்டும் என்றான்.அர்ச்சுவுடன் பேசியதை அசைபோட்ட படி….
அர்ச்சு அவளை விட்டு தள்ளியே இரு.உன் அம்மாவால் கூட என் அக்காவிற்கு பிரச்சனை வரும் போலவே!
என்னோட அம்மா கோபத்தில் பேசுவாரே தவிர. உயிரை எடுக்கும் அளவிற்கு செல்ல மாட்டார். அதுவும் எனக்கு பிடித்த ஸ்ரீயை என்று வெளிப்படையாகவே இருவரும் பேசி இருப்பர்.
அதெல்லாம் முடியாது…காதலெல்லாம் வேண்டாம் அவளுக்கு. அவள் உயிரோடு இருந்தால் போதும் என்று நினைத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்.அப்படி உதவி செய்தால் செய்யுங்கள் இல்லையென்றால் யார் உதவியும் வேண்டாம்.
நான் அவள் பிரச்சனை முடிந்தவுடன் அவள் அருகே வரக்கூடாது என்ற நிபந்தனையோடு தான் அவள் முன் வரவே செய்தேன்.
அப்படியே எல்லாரும் இருந்தால் நல்லது என்று பின் தான் நிவாஸ் அவளது அந்த அங்கிளை ஸ்ரீ வாயிலிருந்து கொண்டு வந்திருப்பான்.அதேயே இப்பொழுது மற்றவர்களை அழைத்து கூறினான் நிவாஸ். அகில் முன் வந்தவன் அவள் ஏற்கனவே அதிகமாகவே காயப்பட்டு விட்டாள். இனி அவ்வாறு இருக்கக் கூடாது… நிவாஸ் கூற, அகில் அவனை முறைத்தபடி நின்றான்.
மற்றவர்களிடமும்….அவளுக்கு யார் சரியாக இருப்பார்கள் என்ற யோசனையே வரக் கூடாது..முடிந்தால் எங்கள் ஆன்ட்யிடமிருந்து வெளியே வர எங்களுக்கு உதவுங்கள். இல்லையென்றால் யார் உதவியும் தேவையில்லை என்று தாரிகாவை பார்த்தான். அவள் ஸ்ரீ அறைக்கு சென்றாள்.
பாவம் நிவாஸ் அவனே ஸ்ரீயை ஒருவனுடன் சேர்த்து வைக்க முயலப் போகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.
சைலேஷ் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். யாரும் எதுவும் பேசவில்லை. கல்லூரிக்கு கிளம்பினர்.
கல்லூரியில் வகுப்புகள் ஆரம்பமானது. இன்பா வகுப்பில் அர்ச்சுவும் ஆதேஷும் இருக்க அவள் மகிழ்ச்சியாக வகுப்பை ஆரம்பித்தாள். அவளுக்கு சந்துரூ போன் செய்து கொண்டிருந்தான்.அவள் சைலன்ட்டில் போட்டு விட்டு வகுப்பை எடுத்தாள். வகுப்பு முடிந்து ஸ்டூடண்ஸ்….வெளியே வந்தவுடன்…என்னடா பிரச்சனை உனக்கு? போன் பேசிக் கொண்டே வந்தாள். எதிரே வந்த ஒரு ஆசிரியரை இடித்து விட்டாள்.இருவரது புத்தகங்களும் கலக்க, அவருக்கு பார்த்தவுடன் இன்பாவை பிடித்து விட்டது.
சாரி மேடம் என்றார் அவர்.
சாரி சார் என் மீது தான் தவறு.சாரி…சாரி.. என்று அவரை பார்த்து புன்னகை சிந்திய வண்ணம் அவளது புத்தகங்களை எடுத்தவள். காதில் போனை வைத்தவாறு சொல்லுடா..மதியமா?…என்னால முடியாது டா…நிறைய வேலை உள்ளது.கல்லூரி முடிந்து பார்ப்போம்…
ஆதேசை பற்றி அவன் கேட்க, அவன் இப்பொழுது தான் வகுப்பிலிருந்து வெளியேறினான்.
உன்னிடம் ஏதும் பேசினானா?
இல்லையே…அவள் அங்கேயே நிற்க,சந்துரூ போனை வைத்தான். அவரும் அவளை பார்த்த வண்ணமிருந்தார்.
போனை வைத்த இன்பா, சார்..என்னாச்சு..? அவரருகே வந்தாள்.அவள் சாதாரணமாக பேச, அவர் அவளை பார்த்து வஞ்சகமாக புன்னகைத்தார். தூரத்திலிருந்து இதயா இருவரும் பேசிக் கொண்டு செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மதிய வேளையில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, வேண்டுமென்றே…. அந்த வழியே தோழிகளுடன் வந்த இதயா, என்னோட அக்காவிற்கு ஒரு சார் வலை போட்டுக் கொண்டிருக்கிறார் தெரியுமாடி…? உரக்க கத்த, அபிக்கு புரை ஏறியது.
அர்ச்சு..சிரித்துக் கொண்டே அபி தலையை தட்டி விட்டு தண்ணீரை கொடுத்து விட்டு, என்னடா…இதயா உன் பக்கம் போலவே முணுமுணுத்து விட்டு….உனக்கு போட்டிக்கு ஆளா? டா…கிண்டல் செய்தவனை பார்த்து, தண்ணீரை விழுங்கியவன் அவங்க கிட்ட அதெல்லாம் நடக்காது என்றான் அபி உறுதியாக.
மற்றவர்கள் அவனை கேலி செய்ய இன்பா அங்கே வந்தாள். அனைவரும் அபியை பார்த்தனர்.அர்ச்சு அருகே வந்து…ஆதேஷை பார்த்தாயா? கேட்டாள்.
ஆதேஷா?…அவனையா பார்க்க வந்தீர்கள்? அர்ச்சு அபியை பார்த்துக் கொண்டே கேட்டான்.
ஏன்டா அவனை பாக்குற? நான் உன்னிடம் தானே கேட்டேன் என்று அபியை பார்த்தாள்.புரை ஏறியதில் கண்கள் சிவந்திருந்தது.
உனக்கு என்னடா ஆச்சு? இன்பா அபி மீதுள்ள கோபத்தை மறந்து அவனருகே வந்தாள். நீ அழுதாயா? கேட்டாள்.
அவள் பக்கத்தில் வந்தவுடன் அவனால் எதுவும் பேச முடியவில்லை.
அது ஒன்றுமில்லை மேம். அவனுக்கு தெரிந்த அதிர்ச்சியான செய்தியால் புரை ஏறியதா? அதனால் தான்….இவ்வாறானது அவனது கண்கள் என்று யாசு கூறினாள்.
அதிர்ச்சியா? யாருக்கும் ஏதும் பிரச்சனையா?
பிரச்சனையெல்லாம் இல்லை. அது காதல் பிரச்சனை என்றாள் நித்தி.
காதலா? அவனை பார்த்தாள்.
அதெல்லாம் ஒன்றுமில்லை மேம்.இவர்களுக்கு யாரையாது கிண்டல் செய்ய வேண்டும். கிடைத்தேன்ல அதான் இப்படி…சமாளித்தான் அபி.
உங்களுக்கு என் மீது கோபம் போய்விட்டதா? அபி கேட்க, அவள் சிந்தனையோடு பார்த்து விட்டு,..சரி …விடு…இனி இப்படி யாரிடமும் பேசாதே!
அட..அவன் உங்களிடம் மட்டும் தான் இப்படி பேசி விட்டான்..சின்ன பையன் விட்டுருங்கள் மேம்….யாசு பேச, அமைதியாக இருந்த அபி, யாரை பார்த்து சின்ன பையன் என்கிறாய்? கோபமாக எழுந்தான்.
யாசு எழுந்து ஓட, ஏய்…நில்லு யாசு..அவளை விரட்டிக் கொண்டு சென்றான். அவன் கிஷோர் சாரை இடிக்க, அவர் கோபமாக வார்த்தைகளை உதிர்த்தார். பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அங்கே சென்றனர்.அபி அவரிடம் மன்னிப்பு கேட்டார். இடித்து விட்டு மன்னிப்பு வேற கேட்கிறாயா?அவர் அவனை அடிக்க கையை ஓங்கினார்.
அடிங்க சார்…நல்லா அடிங்க என்று இதயா போனுடன் முன் வந்தாள். அவர் கையை இறக்கினார். இன்பாவும் அபி நண்பர்களும் வந்தனர்.
அபி உனக்கு என்னாச்சு? அவனருகே இன்பாவை பார்த்ததும் ஒன்றுமில்லை மேடம்.சும்மா தான் என்றான் இன்பாவை இடித்த கிஷோர். ஆம் இன்பா அவனை இடிக்கவில்லை. அவன் தான் இன்பாவை இடித்து இன்பம் கண்டவன். அவனை பார்த்து முறைத்த படி இருந்தான் அபி.
சார் நீங்களா? அவனருகே இன்பா செல்ல, இதயா அவளை நிறுத்தினாள்.
நீ யாருமா? மேடம் என்னிடம் பேச தானே வருகிறார்கள்? என்னை அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அனைவரும் செல்லுங்கள்…அவன் கூற, மற்றவர்கள் கலைந்தனர்.
இவள் என்னுடைய அக்கா என்று இன்பாவை தள்ளி இழுத்து சென்றாள் இதயா.
போடா…டேய்…அபியை பார்த்து அவன் கூற, அகில் அபியை இழுத்து சென்றான்.
தனியே அழைத்து வந்து இதயா, இன்பாவிடம் அந்த சார் பார்வை உன் மீது வேறாக உள்ளது.
என்னடி..எல்லாரையும் சந்தேகப்படாதே! என்றாள் இன்பா. அவள் போனை எடுத்து காண்பித்தாள் இன்பா. இன்பா சந்துரூவிடம் போனில் உரையாடிய போது அவள் தேகத்தை அவன் பார்த்த விதம் தெளிவாக இருந்தது.
ச்சே…எப்படி பேசினான் தெரியுமா? இடியட் அவனை…அவள் கோபமாக செல்ல, இதயா அவளை தடுத்து ஏற்கனவே உனக்கு அந்த விக்கியால் உள்ள பிரச்சனையே போதும் என்றாள்.
சரி…வா…சாப்பிடலாம் என்று இன்பா இதயாவை அழைத்தாலும் அவளுள் பயம் இருக்க தான் செய்தது.
இருவரும் கிளம்ப, என்ன வீடியோ? என்ற சத்தம் கேட்டது. பெண்கள் திடுக்கிட்டு திரும்ப அங்கே அர்ச்சு நின்று கொண்டிருந்தான்.