வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-35
285
ஹாய்…ப்ரெண்ட்ஸ்…
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்…
இன்றைய உங்களுக்கான எபிசோடு..35…
அர்ச்சு அம்மாவையும் தாரிகாவையும் அழைக்க, நான் அழைத்து செல்கிறேன் ஆதேஷ் வந்தான். கைரவை பார்த்து விட்டு வருகிறேன் என்று அவளது அறைக்கு சென்றாள் தாரிகா. அவனிடம் பேசி விட்டு… கதவை திறந்து ஸ்ரீயை பார்த்து விட்டு….பார்த்துக் கொள். நான் அம்மாவை பார்த்துக் கொள்கிறேன் என்று கிளம்ப, கவின் அங்கே வந்தான்.
உனக்கு வேலை உள்ளது என்று கூறினாயே!தாரிகா அம்மா கேட்டார்.
ஒருமணி நேரம் கேட்டு வந்திருக்கிறேன் என்றான் கவின்.
இவர்களை நான் அழைத்து செல்கிறேன் ஆதேஷ் வந்தான். கவின் தாரிகா அம்மாவை பார்த்தான்.
நீ சென்று உன் வேலையை கவனி.ஆதேஷுடன் வீட்டிற்கு செல்கிறோம்….என்றார்.
நான் உங்கள் மகளிடம் பேசலாமா? என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பேசுகிறேன் என்றான் கவின்.
பேசு…..என்றார்…ஆனால் இங்கேயே….என்றார்.
அவளருகே கவின் வந்து, நீ உண்மையாகவே ஆதேஷை ஏற்றுக் கொண்டாயா?
அவள் அமைதியாக அவனை பார்த்தாள். அன்று நான் வேண்டுமென்றே… கூறவில்லை…
சரி….இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? தாரிகா கேட்டாள்.
நீ எனக்கு கொஞ்சம் நேரம் தருகிறாயா?
எதற்கு?
அது வந்து….எனக்கு உன்னை பிடிக்கும். அது காதலா என்று சரியாக மட்டுபடவில்லை. அதற்கு தான்.
நித்தி சீனியர்? அவள் கேட்க, அவள் காதலித்தவருடன் இணைந்து விட்டாள்.
நான் அதை கேட்கவில்லை. அவங்க உங்களுக்கு இப்பொழுது யார்? என்று கேட்டேன்.
அவள்…..என்று தயங்கியவன் எனக்கு தோழி தான்…
தோழியாக நினைத்தால் நீங்கள் தயங்க தேவையில்லையே!
என்னுடைய தயக்கம் அவளால்…இல்லை….உன்னால் தான்.
என்னாலா?
ஆம்…நீ நம்புவாயோ? என்று தான் தயங்கினேன்.
உங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆது…சும்மா தான் கூறினான். நான் அன்றே அவனை மறுத்து விட்டேன்…..என்றாள். அவன் முகத்தில் மலர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
நீ சீக்கிரம் சென்று உன் வேலையை கவனி…..அம்மா சொன்னவுடன்.. சரிங்கம்மா…என்றான்.
நாங்கள் கிளம்புகிறோம் என்று ஆதுவுடன் கிளம்பினார்கள். தாரிகாவும் கவினும் சந்தோசத்தில் திளைத்தனர். ஆது…மட்டும் வருத்தத்தை மறைத்து நின்று கொண்டிருந்தான்.
தாரிகாவையும் அம்மாவையும் அனைவரும் வழி அனுப்பி வைத்தனர். இன்பா,நித்தி, யாசு ஸ்ரீ அறை கதவை எட்டி பார்க்க, அவள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மற்றவர்கள் வெளியே அமர்ந்திருக்க, நிவாசிற்கு ஜிதின் போன் செய்தான். யோசித்தவாறு அவன் எடுக்க,…
அம்மா…அங்கே வருகிறார்கள் என்று போனை துண்டித்தான்.
போச்சு….டா…என்றான் எழுந்தவாறு.
என்ன? அர்ச்சு புருவம் உயர்த்த…ஆன்ட்டி வருகிறார்கள் என்றவுடன்…நான் கிளம்புகிறேன் இங்கிருந்தால் பிரச்சனையாகும்…. எழுந்து வேகமாக நடந்த சந்துரூ, இன்பாவை அழைத்தான்.
நாங்கள் வருகிறோம் என்று சைலேஷிடம் கண்ணை காட்டி விட்டு இன்பாவை இழுத்துக் கொண்டு சென்றான்.நாங்கள் கைரவ் அறைக்கு செல்கிறோம் என்று சைலேஷ் நித்தி, யாசுவை அழைத்தவன்….அர்ச்சு நீயும் ஓய்வெடு…போ உன் அறைக்கு…. அகில் நீயும் அவனுடன் செல்….என்றான்.
நாங்கள் இங்கே தான் இருப்போம் என்றான் அகில். அர்ச்சுவும் அவனருகே சென்றான்.
நாங்களும் அவர்களுடனே இருக்கிறோம் நித்தி கூற, சைலேஷ் அவளை முறைத்தான்.
எங்களால் நண்பர்களை தனியே விட முடியாது என்றாள் உறுதியாக. சரி நானும் இங்கேயே இருக்கிறேன் அவன் கூற, அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த விசயத்தில் நீங்கள் உள்ளே வருவது சரியில்லை அகில் கூறினான்.
நான் வரலை.நான் நடப்பதை கேட்க வேண்டும்.எனக்கு நித்தியும் அவள் நண்பர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
சைலேஷ் உள்ளே சென்று நித்திக்கு போன் செய்து ஆனிலே வைத்திருந்தான். கைரவின் அல்ல கைகள் வந்தனர். நேராக அவன் அறைக்கு சென்றனர். அங்கே சைலேஷ் இருப்பதை பார்த்து அமைதியானார்கள்.
என்னடா…இது? சிரித்தான் கைரவ்.
தல,….ஸ்கூல் பசங்க வேலை தான்.இம்முறை சைலேஷிற்கும் சிரிப்பு வந்தது..நித்தி போனை ஸ்பீக்கரில் போட்டு,
டேய்…உங்க தலைய பார்க்க இவ்வளவு நேரம் கழித்து தான் வருவீர்களா? வினவினாள்.
அதில் ஒருவன்…இந்த குரலை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கே!
அட,…ஆமாம்டா இது அந்த இசை பட்டாளத்தோட” சைடு பீஸ்” என்றான் மற்றொருவன்.
டேய்,வேண்டாம்டா….வேண்டாம்டா….கைரவ் கையசைக்க,
யார பார்த்து “சைடு பீஸ்”னு சொல்வ? சத்தம் பக்கத்தில் கேட்க, நித்தி அவர்களை நோக்கி வந்தாள். அவர்கள் நிலையை கண்டு பயங்கரமாக சிரித்தாள்.
சைலேஷ் அவர்களிடம் அது என்ன பட்டாளம்?
தெரியாதா சார்? மூன்று வருட மாணவ, மாணவிகளும் இசை, நடனம்,….கலைகள் கற்றிருப்பர்கள்.
இவள் குக்கூ இசை குழுவில் இருக்கிறாள்.
ஓ….அப்படியா? என்றவன் நித்தியை பார்க்க அவள் தோளை குலுக்கினாள்.
அது என்ன “சைடு பீஸ்”?
இவ…சைடுல நிற்பாள். அது தான் “சைடு பீஸ்”.
சைலேஷ் அவர்கள் இருவரது காதை திருகிக் கொண்டு, இனி அவளை யாராவது இப்படி கூப்பிட்டால் அவ்வளவு தான். உங்கள தொலைச்சுடுவேன்…..
அண்ணா!அண்ணா!விட்டுடுங்க கதறினார்கள்.
இனி அவளை நித்தி அண்ணின்னு தான் கூப்பிடணும் என்ன? கைரவையும் பார்த்தான்.
அவள் விழி விரித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சைலேஷ்… அவளருகே வந்து,….ஓய்…நீ போ….என்றான்.
ஹ… ஆ… என்று திறுதிறுவென விழித்தாள் நித்தி. நீ போகப் போறியா இல்ல…நான் கிஸ் பண்ணவா? அவளருகே வந்தான்.
நோ என்று ஓடி விட்டாள். சிரித்துக் கொண்டு இவர்கள் பக்கம் திரும்ப, அண்ணா!உனக்குள்ள இப்படியொரு லவ்வர் பாயா? கைரவ் கேட்க,
லவ்வா?அவளையா? மற்றவர்கள் வாயை பிளந்தனர்.
இங்கே பாருடா…நிவி.ஸ்ரீயை அவள் தொடவே கூடாது. பார்த்துக் கொள் அர்ச்சு கூறினான்.ம்ம்…என்றான்.
சில நிமிடங்களில் அங்கே வந்தாள் கயல் விழி.
வெளியே உட்கார்ந்திருந்த அகில் அர்ச்சுவை பார்த்து, அச்சச்சோ!பசங்க பாவம் டா.அவளது அடியாளிடம் பேசிக் கொண்டே அர்ச்சு அருகே வந்து,
அடி பலம் இல்ல போலையே! அவனது தலை பக்கம் கையை கொண்டு வந்தாள் கயல்.அவன் கையை தட்டி விட்டு, அவள் ஓய்வெடுக்க வேண்டும் மருத்துவர் கூறினார். நீங்கள் செல்லலாம்.
அதற்குள்ளா?என்றவர் என்னம்மா நித்தி…உன் உயிர் தோழியின் உடல் நலத்தை கவனித்தாயா? ரொம்ப வீக்கா இருக்கால.நித்தி முறைத்தாள்.
உனக்கு அவள் மீது கோபம் போய் விட்டது போலவே யாஷி. அவள் என்னோட தோழி, எனக்கு கோபமல்லாம் வரவே வராது என்றாள் யாசு புன்னகையுடன். கயலுக்கு கடுப்பாக இருந்தது.
அகிலிடம் வந்து, உன்னை விட்டு விலகுகிறாளா? என்ன? கேட்க,
இங்கே பார்.எங்களுக்குள் என்ன வேண்டுமானாலும் இருக்கும். அது உனக்கு தேவையில்லை அகில் சீற்றத்துடன் பேசினான்.
அதுவும் சரி தான். எனக்கு எல்லாம் சரியாக தான் இருக்கிறது.நான் என் மருமகளை பார்க்க செல்கிறேன் என்று உள்ளே வந்து…
என்னடா நிவி,உன் அக்கா நிலையை பார்த்தாயா? பாவம்ல.ஒரு பொண்ணுக்கு எவ்வளவுதான் பிரச்சனை வரும் என்று பேசிக் கொண்டே ஸ்ரீயை நெருங்கினார். எதற்கு இந்த குளுக்கோஸ்?
ஓ….எனர்ஜிக்காக ல என்றவர், அவளை தொட நிவாஸ் அவரது கையை பிடித்து தடுத்து,அவளை தொந்தரவு செய்யாதீர்கள்!
உனக்கு எவ்வளவு தைரியம் என் கையவே பிடிக்கிற? அவனை அடிக்க கயல் கையை ஓங்க, அகில் தடுத்து, அவர்கள் முன் வந்து,
இது ஹாஸ்பிட்டல்.பார்த்து விட்டீர்கள் தானே! நீங்கள் கிளம்பலாம் என்றான்.
உங்க தைரியம் நல்லா தான் இருக்கு என்றவர் அர்ச்சு காதருகே சென்று, இப்பொழுது தான் ஆரம்பித்து இருக்கிறேன்.இனி தான் கலை கட்ட போகுது என்று விட்டு அவள் படைகளுடன் வெளியேறினாள் கயல். அர்ச்சு அதிர்ந்த வண்ணமிருந்தான்.
என்னடா சொன்னா? அகில் கேட்டான்.
அவள் ஆரம்பித்து விட்டாளாம்.
என்ன?
நம் கண் முன் ஸ்ரீயின் வேதனை ஆரம்பமானது கூறியவன் உள்ளே சென்று நிவாசிடம் அவளுடைய பழைய நினைவுகளை கொண்டு வரும் பேச்சை ஆரம்பித்தது நீயா? கேட்டான்.
ஸ்ரீ தான் கண்டிப்பாக நினைவு கொண்டு வர வேண்டும் என்றாள். எதற்காக கேட்கிறீர்கள்?
ஓ…..செட்…..கத்தியவன். அவள் தான் ஸ்ரீயிடம் நினைவை கொண்டு வர சொல்லி ஊக்கி இருக்கிறாள்.அவள் உடல் நிலை தெரிந்து. அவள் காயப்படுவதை நாம் அனைவரும் பார்க்க,
அனைவரும் அதிர,ஸ்ரீயின் இந்நிலைக்கு காரணம் அந்த கயல் தானா? நித்தி பதற,
இதற்கே பதறுகிறாயே? ஆரம்பமே இப்படி இருந்தால் இனி… என்று அகில் பேச,
நிறுத்துடா.அடுத்த அடி அவளிது இல்லை. நம்ம அடியா தான் இருக்கணும் அர்ச்சு கூறினான்.
நம்மால் என்ன செய்ய முடியும்? யாசு கேட்டாள்.
யோசிப்போம் என்றான். கயல் பேசியது, இவர்களது உரையாடல் அனைத்தையும் கேட்ட, சைலேஷ்… கைரவ்… அவனுடைய அல்லகைகள் கேட்டு உறைந்தனர். வேகமாக சைலேஷ் வெளியே வந்து அவர்களிருந்த கதவருகே வந்தான். கதவை திறந்து யாசு வந்தாள். பின் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.
சைலேஷ் அவர்களை உற்று நோக்கியவாறு இருக்க, அப்பொழுது தான் நித்தி போனை பார்த்தாள்.
எல்லாரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கோபமாக, கைரவ் அவன் கையை பிடித்து தடுத்தான்.
நாங்கள் என்ன செய்தோம்?…அகில் கேட்டான். சைலேஷ் நித்தி போனை பார்க்க, அனைவரது கவனமும் அவள் பக்கம் திரும்பியது.
நாங்கள்…….வந்து என்று நித்தி தடுமாறிக் கொண்டே பயந்தவாறு அவனை பார்த்தாள்.
சொல்லு என்றான் பல்லை கடித்தவாறு… அவள் பயந்து மௌனமாகி விட்டாள்.
சைலேஷ் நித்தியை பளாரென அறைந்து விட்டான். அவள் கன்னத்தில் கை வைத்து அழுத படி நின்றாள்.மற்றவர்கள் திகைத்தனர்.
எதற்கு அவளை அடித்தீர்கள்? அர்ச்சு கேட்டான்.
எதற்கா?….என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா? அந்த கயல் எப்படி என்று தெரியுமா? அவள் வழியில் சென்றால் கொலை செய்து விடுவாள். அவளிடம் எப்படி பேசுகிறீர்கள் என்று ஆத்திரத்துடன் அர்ச்சுவை பார்த்தான்.
உங்கள் தோழி இன்பா, எங்களுடைய ஸ்ரீ நிலையில் இருந்தால் என்ன செய்வீர்கள் சார்? கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பீர்களா? யாசு கோபமாக வினவினாள்.
எங்கள் ஸ்ரீ எப்படி இருந்தவள் தெரியுமா? அவளை விட தைரியமா.. பசங்க கூட இருக்க மாட்டாங்க.அப்படி இருந்த பொண்ணு.இப்ப ரொம்ப பயப்படுறா…. கஷ்டப்படுறா… எல்லாத்தையும் விட அவளுக்கு இப்ப நிவாஸ் தவிர யாருமில்லை. அந்த கேவலமான பொம்பள கிட்ட விட சொல்றீங்களா? அவள் பிரிந்த பின் யாருமே யாராகவே இல்லை.இதோ நிக்கிறான் பாருங்க அகில் அவன் யாரிடமும் பேசவில்லை. நித்தி வாழ்க்கை வெறுத்தது போல் இருந்தாள். கலகலப்புடன் இருக்கும் கவின் அமைதியானான். அபி ஒரு வாரமாக வீட்டிற்குள்ளேயே இருந்தாள். அதற்கும் மேல் இவன்…என்று அர்ச்சுவை பார்த்து கோபமாக ஊரை விட்டு இங்கே வந்து அநாதை மாதிரி தனியாக இருந்திருக்கிறான் அவனது பாட்டியையும் விட்டு.அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா? யாசு அர்ச்சு அருகே வந்து அழுது கொண்டே அவனை அடித்துக் கொண்டிருந்தாள். அவனும் மடிந்து அங்கே உட்கார்ந்து அழுதான்.
போதும் யாசு.அவனை விடு.நித்தி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
சைலேஷ்,அவர்களிடம் நான் உங்களுக்கு உதவுகிறேன். நடந்த அனைத்தையும் கூறுங்கள் கேட்டான்.
இல்லை சார் வேண்டாம். எங்களால் உங்களுக்கும் பிரச்சனையாகி விடும் நிவாஸ் கூறினான்.
அவர் உதவி தேவைப்படும் என்று நினைக்கிறேன் அகில் கூறினான்.அர்ச்சுவும் சைலேஷை பார்த்து, நாங்கள் கேட்கும் போது மட்டும் உதவுங்கள் என்றான்.அவனும் சரி என்றான்.