திக்கான இருட்டு அறையில், பள்ளி பருவ பொண்ணும், பையனும் காப்பாற்றுங்கள்…..காப்பாற்றுங்கள்…கத்திக் கொண்டிருக்க,வாயை மூடுங்கள் என்று ஒருவன் உள்ளே வந்தான்.
யாருடா நீ? என்னுடைய அப்பா வந்தால் நீ காலி தான் அந்த பொண்ணு கூற,
குக்கூ சும்மா இரு…..அந்த பையன் கூற,
ஓ….அப்படியா! அதையும் பார்த்து விடுவோம் அவன் கூறி விட்டு அந்த பொண்ணு அருகே வர,அந்த பையனோ, எங்களை விட்டு விடுங்கள். உங்களுக்கு பணம் தருகிறோம் என்று கூறினான்.
நீ என்ன சொல்கிறாய்? நாம் எதற்காக இவனுக்கு பணம் கொடுக்க வேண்டும் அந்த பொண்ணு கோபமாக அவனை வெறித்தாள்.
ஆமாம் பணத்தை கொடுத்து ஈடு செய்ய முடியாத தவறை தான் உங்களுடைய அப்பா செய்திருக்கிறார் என்றான் அவன்.
இருக்காது என்று அந்த பொண்ணு சத்தமுடன் அவனுடன் விவாதிக்க, அவன் கோபமாக அந்த பையனை கொல்ல கத்தி எடுத்து அருகே வர,
அந்த பொண்ணு வேகமாக கையில் இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு, அந்த பையனை காப்பாற்ற ஓடி வந்து தடுத்து அவனுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க,அவன் அந்த பொண்ணை முழு மூச்சாய் தள்ளி விட,அங்கிருந்த சுவற்றில் இருந்த ஆணியில் அவளது தலை பட்டு கீழே சரிந்தாள்.
குக்கூ….குக்கூ…..என கத்திக் கொண்டே தன் கட்டிலில் இருந்து கீழே விழுந்தான் அகிலன்.
டேய் அகில், என்ன? அதே கனவா? சுதீப் கேட்க,
விழித்த அகில், அது கனவல்ல. உண்மையிலே நடந்தது எனக் கூறிக் கொண்டே விடுதியில் இருப்பதை உணர்ந்தான்.
போடா டேய், அந்த கதையை கேட்டு போர் அடிக்கிறது என்றான் கேசவ் சலிப்பாக.
அது நடந்து ஐந்து வருடங்களாகி விட்டது. திடீரென்று இந்த ஒரு வாரமாக இந்த கனவு வந்து கொண்டிருக்கிறது. ஏன் என்று புரியவில்லை?
நீ அந்த பொண்ணை பற்றி நினைத்துக் கொண்டே படுத்திருந்திருப்பாய். அதனால் கூட இருக்கலாம்.பேசி நேரத்தை வீணாக்காமல் சீக்கிரம் கல்லூரிக்கு கிளம்பு….கிருத்திக் கூற,
நாம் கல்லூரி வந்து ஒரு வருடம் முடிந்து விட்டது. இரண்டாம் வருடம் முதல் நாளே தாமதமானால் நன்றாக இராது கேசவ் சொன்னான்.
முதல் வருட பொண்ணுங்க வருவாங்க,சீக்கிரம் வாருங்கடா என்று சுதீப் கிளம்பினான்.மற்றவர்களும் அழகாக தயாரானார்கள்.
எஸ். கே விவசாய மற்றும் கலை கல்லூரி போர்டு இருக்க, தேவலோக மங்கையரும், அவர்களை சுற்றி திரியும் இம்மண்ணுலக ஆடவர்களும் உலவிக் கொண்டிருந்தனர். திடீரென மேகமூட்டமாகி அதிக காற்று வீச,வானிலை அற்புதமாக உள்ளது என்று ஒரு பெண் பேசிக் கொண்டிருக்க,கார் ஒன்று வந்தது.
ஹேய், அங்கே பாருங்கடா நம்ம தல வந்து விட்டார் என்று இருவர் அந்த கார் அருகே வர, பணக்கார தோற்றத்துடன் ஒருவன் காரிலிருந்து இறங்க,
வந்து விட்டானா? ஒருவன் கூறி கொண்டே அவர்களை தாண்டி செல்ல, கீழிருந்த குளிர்பான பாட்டிலை காலாலே எடுத்து, அவன் மீது வீசினான் காரிலிருந்து இறங்கியவன்.
என்ன திமிரு இவனுக்கு? அவன் கோபப்பட,
அமைதியாக வந்து விடு.தேவையில்லாமல் பிரச்சனை வேண்டாம். இது அவனுடைய கல்லூரி. அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். நீ வா என்று கோபப்பட்டவனை ஒரு பெண் இழுத்துச் சென்றாள்.அவன் கைரவை முறைத்துக் கொண்டே சென்றான்.
யாருக்கும் மரியாதை கொடுக்காமல் திமிறாக இருப்பவன் தான் இந்த கைரவ். அவனுடைய தாத்தா தான் இந்த கல்லூரி உரிமையாளராக இருக்கிறார்.அவர் கடின உழைப்பால் தான் இந்த நிலைக்கு வந்திருப்பார். அவருக்கு சில தொழிற்சாலையும் உள்ளது. ஆனால் இதை வைத்து அனைவரையும் மிரட்டிக் கொண்டிருப்பான்.
அழகான நெற்றியில் முட்டிய அடர்ந்த கேசம்.கண் கண்ணாடியுடன் கூடிய கூரான நாசி.கடினமான உதிரம். தெளிவாக அனைவரையும் வசீகரிக்கும் பேச்சுடன் அகில் பைக்கில் வந்து கொண்டிருக்க, பெண்கள் அவனை பார்த்த படியே பிரமித்து நின்றனர்.
ஹே,பவி அவனை கரெக்ட் பண்ணீட்டியா?அகில் கேட்க,
எங்கேடா, பிடி கொடுக்க மாட்டேங்கிறான் அந்த பெண் கூற, ஈவ்னிங் வா நான் உதவுகிறேன்.
உன்னுடைய உதவியா? அய்யோ சாமி! எனக்கு வேண்டாம். ஏதோ பேசவாது செய்கிறான். அதையும் கெடுத்து விடாதே! அவனை நானே கவனித்து கொள்கிறேன் பயப்படுவது போல் அவள் கூறி நடித்தாள்.
அவன் சிரித்துக் கொண்டே செல்ல,அவனுடைய சிறு வயது நண்பர்களான யாஷிகா, நித்திய ஸ்ரீ, கவின், அபினவ் ஒரு பெண்ணின் பின்னே ஓடிக் கொண்டிருந்தனர்.
அவர்களை பார்த்து அகில்,…கவின் ஏன் ஓடிக் கொண் டிருக்கிறீர்கள்? நீ தான் நிறைய பெண்களுடன் சுற்றுவாயே! அவர்களை விட்டு இந்த பெண் பின்னே எதற்கு ஓடுகிறாய்? அவன் பதில் கூறாமல் அகிலை முறைக்க,
ஏய் படிப்பாளி அபினவ்,உனக்கு தான் பெண்கள் மீது விருப்பமில்லையே! நீ எதற்காக ஓடுகிறாய்? என்றவன் அவனிடம் பதிலை எதிர்பாராது
யாசு, உனக்கு வியர்க்கிறது. உனது மேக்கப் அனைத்தும் கலைந்து விட்டது…அப்படியும் ஓடுகிறாயா? கேட்டுக் கொண்டே நித்தியின் அருகே வந்து….
நித்தி நீயுமா? என்ன நடக்கிறது? என்று பைக்கை மெதுவாக ஓட்டிக் கொண்டே கேட்க, அவள் மூச்சிறைத்துக் கொண்டே, நீ அந்த பொண்ணு யாரென்று பார் என்றாள்.
யாருடா அது? என்னுடைய நண்பர்களையே ஓட விட்டது என்று பைக்கை வேகமாக ஓட்டி அந்த பெண்ணிற்கு முன் வந்து வண்டியை சர்ரென்று நிறுத்த, அவள் பயந்து பின் நகர்ந்தாள். அவன் இறங்கி அவளை பார்த்து அதிர்ச்சியோடு கண்ணாடியை கழற்றியவாறு குக்கூ…… என்றான்.
அடர்ந்த கரு நிற கேசம். திராட்சை கண்கள், முந்தரி நாசி, செர்ரி அதிரம்.எளிமையாக என்றாலும் அழகாக இருந்தாள்.அவள் அகிலை பார்க்க, அவளுக்கு அவனருகே ஏதோ நிழலுருவம் தெரிய,அங்கேயே மயங்கி விழுந்தாள்.
குக்கூ…..உனக்கு என்ன ஆயிற்று?அகிலும் அவனது நண்பர்களும் கல்லூரி விட்டு வெளியே வந்து அவளை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அகில் தன்னுடைய நண்பர்களிடம்,என்ன நடக்கிறது? இவள்…..இவள்….என்று கண்கலங்கிக் கொண்டே,இவளுக்கு என்ன ஆயிற்று? ஏன் மயங்கி விட்டாள்? கேட்க,
அந்த கைரவ் கல்லூரியில் அவனுடைய அல்ல கைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான்.அப்பொழுது ஒருவன் பைக்கில் வந்து அவனை இடிக்க வர, அதை பார்த்து நகன்ற கைரவ் நம்முடைய குக்கூ …மீது விழுந்து விட்டான்.நாங்களும் அப்பொழுது தான் அவளை பார்த்தோம். அவள் அதிர்ச்சியில் கண்ணுமுண்ணு தெரியாமல் அவனை அடிக்க ஆரம்பித்து விட்டாள். கைரவ் ஏதும் பேசாமல் அவளை பார்த்தபடியே இருந்தான். அவள் அவனை தள்ளி விட்டு எழுந்தாள். அனைவரும் வேடிக்கை பார்ப்பதை கவனித்து அழ ஆரம்பித்தாள்.
எங்களுக்கு அவளை பார்த்த அதிர்ச்சி வேற, நடந்தது சரியில்லை என்று சுதாரித்து அவளருகே சென்று அவளது கையை பிடித்தாள் நித்தி. எங்களை யாரென்று தெரியாத மாதிரி பார்த்து விட்டு,
யாரும் என்னருகே வராதீர்கள். நானே மிகவும் கஷ்டப்பட்டு தான் கல்லூரி முதல் வருடம் சேர்ந்திருக்கிறேன்.அதை கெடுத்து விடாதீர்கள்! அழுது கொண்டே ஓடினாள். அவளிடம் பேச தான் அவளை பின் தொடர்ந்து ஓடினோம் என்று யாசு முடித்தாள்.
அகில் யோசித்துக் கொண்டே அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அறை கதவை தட்டும் சத்தம் கேட்கவே,அனைவரும் திரும்பி பார்க்க, ஸ்ரீ இருப்பதை பார்த்து ,அங்கே ஒருவன் வேகமாக ஓடி வந்து,
ஸ்ரீ,உனக்கு என்ன ஆயிற்று? கண்கலங்க, இதை பார்த்தவுடன் அகில் அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருக்க, ஸ்ரீ கண்விழிக்காததை பார்த்து, அகில் நண்பர்களிடம் நடந்ததை அறிந்து கொண்டு,அவளருகே உட்கார்ந்து அவனது கைக்குள் அவளது கையை வைத்துக் கொண்டு கண்கலங்கினான்.
இதை பார்த்த அகிலிற்கோ கோபம் வர அவனை முறைத்துக் கொண்டு,
என்னடா செய்கிறாய்? அவளுக்கு நீ யார்? அகில் கேட்க,
அவள் என்னுடைய அக்கா. நான் அவளுடைய பெரியப்பா பையன்.நான்கு வருடங்களாக நாங்கள் எங்களது அத்தை வீட்டில் தான் இருக்கிறோம் என்று அவளை பார்க்க,
அவளுடைய பெற்றோர்கள்? நித்தி கேட்க,
அவர்கள் ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள் சோகமாக அவன் கூற, அனைவரும் அதிர்ச்சியோடு இறந்து விட்டார்களா? அதிர்ச்சி கலந்த கவலையோடு ஸ்ரீயை பார்த்தனர்.
நீங்கள் அனைவரும் யார்? அவன் கேட்டு விட்டு, அவன் பெயர் நிவாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.
நாங்கள் என்று கவின் ஆரம்பிக்க,அகில் கண்ணை மூடி வேண்டாம் என்று தலையசைத்து,அவனிடம் நாங்களும் அவளுடைய கல்லூரி தான்.அவள் மயங்கியதால் அவளை இங்கே வந்து சேர்த்தோம்.
மிகவும் நன்றி.நாங்கள் அதே கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்திருக்கிறோம். நான் கிளம்ப நேரமாகிட்டேன். அதற்குள் இவளுக்கு பிரச்சனையாகி விட்டது.
என்ன! முதல் வருடமா? அபினவ் கேட்க,ஆமாம் நிவாஸ் கூற,அனைவரும் வெளியே வந்தனர்.
கவனித்தீர்களா?அவளுக்கு நம்மை பற்றி ஏதும் நினைவில்லாதது போல் தெரிகிறது கவின் கூறினான்.
அவள் என்னை பார்த்தவுடன் மயங்கி விட்டாள். எதற்காக? அகில் யோசிக்க,
கவின் கூறியது போல் அவள் நம்மை மறந்திருந்தால், நாம் அவளுக்கு யார்? என்று யாருடமும் கூறக் கூடாது நித்தி கூறினாள்.
ஏன் இவ்வாறு கூறுகிறாய்? நாம் அவளிடம் பேசி நினைவுபடுத்துவோம் கவின் கூற,
வேண்டாம். அம்மா, அப்பா இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ தெரியவில்லை. இந்நேரத்தில் அவளுக்கு நினைவுபடுத்துகிறோம் என்று அவளை காயப்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக அவள் அருகே இருந்து அவளை கவனித்து கொள்ளலாம்.
எப்படி முடியும்? அவள் அவளது அத்தை வீட்டில் இருக்கிறாள். எப்படி அவளருகே நாம் செல்ல முடியும்? அகில் கேட்க,
ம்…முடியும்.நம் கல்லூரியில் தானே சேர்ந்திருக்கிறாள் அபினவ் புன்னகையுடன் கூற, அனைவரும் ஒத்துக் கொண்டனர்.
மருத்துவர் அவளை பார்த்து விட்டு, அந்த பொண்ணு மனஅழுத்தத்துடன் இருக்கிறாள். இன்று முழுவதும் ஓய்வெடுத்தால் அனைத்தும் சரியாகி விடும்.இரண்டு நாட்களுக்கு மாத்திரை எழுதி தருகிறேன். அந்த பெண்ணுக்கு கொடுங்கள்.பின் மருத்துவமனை வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.அவள் விழித்தவுடன் அழைத்து செல்லலாம் என்று கூறினார்.
நிவாஸ் அகில் நண்பர்களிடம்,கொஞ்ச நேரம் அவளை கவனித்துக் கொள்ளுங்கள். நான் மருந்து வாங்கி வருகிறேன் என்று அவன் கூறி விட்டு சென்ற, மறு நொடியே ஸ்ரீ கண்விழித்தாள்.அகில் வேகமாக அவள் முன் வந்தான்.பின் அனைவரும் அவளருகே வர,
நீங்கள் அனைவரும் யார்? நான் எங்கே இருக்கிறேன்? எனக்கு என்ன ஆயிற்று?அவள் வினவ,அவர்கள் பதில் கூறாமல் இருந்தனர். அவள் மறுபடியும் நீங்கள் யார்? என்று அகிலை பார்த்துக் கொண்டு கேட்க,அவன் கண்கலங்கினான்.
அவள் மறுபடியும் கேட்கவே,அவன் முடியாமல் சோகமாக அவளை பார்த்துக் கொண்டே வெளியே சென்றான்.நாங்களும் உங்களுடைய கல்லூரி தான்.உன்னை என்னுடைய தோழி என்று நினைத்து தான் கையை பிடித்தோம். உன்னை பார்த்தால் அவளை பார்ப்பது போல் உள்ளது என்று நித்தி கூறினாள்.
ஸ்ரீக்கு அப்பொழுது தான் நடந்த எல்லாம் நினைவுக்கு வந்தது. உடனே அமைதியானாள்.யாரும் ஏதும் பேசாமல் அமைதி நிலவ, நிவாஸ் மருந்தை வாங்கி திரும்பி வந்து கொண்டிருந்தான்.அறைக்கு வெளியே அகில் கவலையாக தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பதை கவனித்து விட்டு உள்ளே நுழைந்தான்.
ஸ்ரீ, நீ விழித்துவிட்டாயா? இப்பொழுது எப்படி இருக்கிறாய்?நிவாஸ் கேட்க,
நான் நன்றாக இருக்கிறேன் என்று சிறு புன்னகையை அவனிடம் காட்ட, அனைவருடைய முகமும் வாடியது.அவன் திரும்பி இவர்களை பார்த்து,உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. நீங்கள் கல்லூரிக்கு கிளம்புங்கள்.இவளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நிவாஸ் கூறினான்.