ஹாய்..ப்ரெண்ட்ஸ்…
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்…
இதோ..உங்களுக்கான எபிசோடு 27
அர்ச்சு நிவாசை அழைக்க, அவன் அர்ச்சுவை பார்த்தவாறு அப்படியே உட்கார்ந்திருந்தான்.
டேய்…..கத்தினான் அர்ஜூன்.
ம்ம்ம்…..வேகமாக நினைவிற்கு வந்தவனாய் அர்ச்சுவை பார்க்க, சீக்கிரம் ஏறு….அர்ச்சு ஸ்ரீயை தூக்கிக் கொண்டு வண்டியருகே வர, நிவாஸ் பின் சென்றான்.
இவளை பிடி…..ஸ்ரீயை நிவாசிடம் ஒப்படைத்து விட்டு, அர்ச்சு வண்டியை எடுக்க, நிவாஸ் ஸ்ரீயை ஏற்றி விட்டு அவனும் ஏறினான். பின் அர்ச்சு வண்டியை எடுத்தான். ஸ்ரீ அர்ச்சுவை கட்டியவாறு கண்ணை மூடினாள். இருவருமே அவளை கவனிக்கவில்லை. கொஞ்ச தூரத்திற்கு பின் அவர்களை யாரோ துரத்தினார்கள். அர்ச்சு வேகம் எடுத்துக் கொண்டே ஸ்ரீயை நன்றாக பிடித்துக் கொள் நிவாசிடம் கூற, அவளது கைகள் அர்ச்சுவை மேலும் இறுக்கி கட்டிக் கொண்டன. அர்ச்சுவோ விரட்டுபவர்களிடம் இருவரையும் காக்கவே நினைத்தான். வேரேதுவும் அவனுக்கு தோன்றவே இல்லை. நிவாசிற்கு அர்ச்சு ஸ்ரீ மீது வைத்துள்ள காதல் மிகவும் பிடித்து விட்டது.
விரட்டியவர்களை சமாளித்து அவர்கள் தாரிகா வீட்டை அடைய மணி மூன்றை தாண்டியது.வேகமாக கதவை நிவாஸ் தட்ட, அர்ச்சு ஸ்ரீயை தூக்கிக் கொண்டு நின்றான். இருவரையும் பார்த்து அம்மா அதிர்ந்து…இந்த நேரத்தில் ….என்று ஸ்ரீயை பார்த்து,
என்னாச்சு இந்த பொண்ணுக்கு? கேட்க,அம்மா வழி விடுங்கள். உள்ளே வந்து பேசலாம் என்று அர்ச்சு அவளை தூக்கி உள்ளே செல்ல ,தாரிகா அறை கதவை அம்மா தட்டினார்.
என்னம்மா,….இந்நேரத்தில்…..என்று அலுத்துக் கொண்டே வெளியே வந்து ஸ்ரீயை பார்த்து,
அய்யோ ஸ்ரீ…..ஸ்ரீ…..உனக்கு என்னாயிற்று? பதறினாள்.
அர்ச்சு அசால்டாக உள்ளே சென்று அவளை படுக்கையில் கிடத்த, அவளது முடிகற்றை அவள் முகத்தில் விழ, அவன் அதனை எடுத்து விட்டு, அவளது தலையை வருடியாறு மறுகையை அவளது கையில் வைத்துக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அனைவரும் அவன் செய்கையை பார்க்க, நிவாஸ் தொண்டையை செறுமினான்.அர்ச்சு அவர்களை பார்த்து விட்டு அவள் கையில் இருந்த சாக்லெட்டை எடுத்து சிறுபுன்னகையுடன் அங்கிருந்த மேசையில் வைத்தான். எழுந்து கதவருகே வந்து பின் ஒரு முறை அவளை திரும்பி பார்த்து விட்டு வெளியே வந்தான்.
சோபாவில் அமர்ந்து தலையில் கை வைத்தவாறு அர்ச்சு அமர, என்ன ஆயிற்று? அம்மா அவருனருகே உட்கார்ந்தார்.
தெரியவில்லைம்மா.
அந்த பொண்ணு? அம்மா கேட்க,
அவள்…அவள்….அவன் நிவாஸை பார்த்தான்.
அவள் என்னுடைய அக்கா…
அம்மா, ஸ்ரீ என்னுடைய தோழி என்றாள் தாரிகா. அன்று இவர்கள் கூட வீட்டிற்கு வந்தாலே! அம்மா அவளை கண்விரித்து பார்த்து விட்டு, நீ கூறியதே இல்லையே!
நாங்கள் கிளம்புகிறோம்…அர்ச்சு எழ, நான் கேட்டது அவள் உனக்கு யார் என்று?அவனை ஓரக்கண்ணால் அம்மா வினவ,
அவள்…அவன் யோசிக்க, தாரிகா அவனருகே வந்து, எனக்கும் தெரியும் என்றாள்.
உனக்கு என்ன தெரியும்? அவன் பதற,
எல்லாமே என்றாள் கண்சிமிட்டியவாறே
எப்படி?
தெரியும். நான் அவளிடம் எதை பற்றியும் கூறவில்லை. அண்ணா பயப்படாதீர்கள்! அம்மா…நான் கூறுகிறேன்…என்றாள் அவள்.
தலையை அழுந்த கோதியவன் கதவை பூட்டிக் கொள்ளுங்கள். யார் அழைத்தாலும் வெளியே வராதீர்கள். என் வீட்டில் நான் மட்டும் இருப்பதால் என்னால் அவளை அழைத்து செல்ல முடியாது. அவளை பார்த்துக் கொள்ளுங்கள்.எழுந்தால் எனக்கு போன் போடுங்கள்.
ஒரு நிமிடம் அர்ச்சு, அவனை அணைத்துக் கொண்ட நிவாஸ் தேங்க்ஸ் என்றான்.
எதற்குடா?
உதவிக்கு…
அட… உங்களுக்காக எதையும் செய்வேன்.
மீண்டும் நிவாஸ் அவனை அணைத்து விட்டு, அவள் நடந்த எதையோ பார்த்து பயந்து இருக்கிறாள் என்றாள்.
என்ன பயம்? அர்ச்சு கேட்டான்.
அது தெரியவில்லை. நீ நினைத்தது போல் கூட இருக்கலாம்.அர்ச்சு புருவத்தை சுருக்கினான்.
அதான் ஆன்ட்டி…என்றான்.
ஆமாம். அவர்களுக்கு என்ன தான் பிரச்சனை உங்கள் மீது? எனக்கு கடுப்பாக உள்ளது என்றான்.
சரியாகும் என்றான் நிவாஸ்.
அவளது திருமணம்? அர்ச்சு கேட்க, அவள் பிடிவாதமாக இருக்கிறாள். நானும் எவ்வளவு சொன்னாலும் கேட்வே மாட்டிக்கிறாள் என்றான் நிவாஸ்.
வருத்தமுடன் பெருமூச்சோடு, வா…கிளம்பலாம். என் வீட்டிற்கு செல்லலாம்.
அம்மாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, ஆன்ட்டி என்றால் ஜிதின் சீனியர் அம்மாவா? அவரால் தான் ஸ்ரீக்கு பிரச்சனையா? தாரிகா கேட்க, இருவரும் ஒருவாறு அவளை திரும்பி பார்த்தனர்.பின் நீ அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம் கோபமாக அர்ச்சு கூற, மற்றவர்கள் திகைத்தனர். இருவரும் அவளருகே இருங்கள் என்று விட்டு பசங்க வெளியே வந்து அர்ச்சு வீட்டிற்கு விரைந்தனர்.
மறுநாள் காலையில் அர்ச்சு வீட்டிலிருந்து நிவாஸ் குழப்பமான மனநிலையில் வெளியேறியவனை கவின் எதிர்கொண்டான்.அவன் அர்ச்சுவை கேட்க,நான் அவரை பார்க்க தான் செல்கிறேன் என்று கூற,இருவரும் அங்கிருந்து கிளம்பி தாரிகா வீட்டை அடைந்தனர். அங்கே அர்ச்சு அவர்கள் வீட்டிற்கு வெளியே உறங்குவதை பார்த்து வண்டியிலிருந்து வேகமாக இறங்கிய கவினும்,நிவாசும் அருகே வரவும் தாரிகாவின் அம்மா கதவை திறக்கவும் சரியாக இருந்தது.
அம்மா அவர்களை முதலில் பார்த்து விட்டு அர்ச்சு அவர் வீட்டிற்கு வெளியே திண்ணையில் உறங்குவதை பார்த்து உறைந்து நிற்க,இருவரும் அர்ச்சுவை எழுப்பினர்.
அர்ச்சு கண்ணை கசக்கியவாறு கவினை பார்த்து, என்னடா? தூக்கக்கலக்கத்தில் கேட்டான்.
நீ இரவு இங்கே தான் உறங்கினாயா? ஆச்சர்யத்தோடு கேட்டான் கவின்.
எழுந்து சுற்றி பார்க்க, நிவாஸ் அவனை முறைத்தவாறு நின்றான்.அர்ச்சு பட்டென்று எழ,அம்மாவையும் பார்த்தான்.
உள்ளே வாருங்கள் அம்மா அழைக்க, உள்ளே வந்தனர்.
தேங்க்ஸ் டா மச்சான் கவின் அர்ச்சுவை கட்டிக் கொண்டு, நானும் உன்னை தவறாக தான் எண்ணிக் கொண்டு இருந்திருக்கிறேன். நீ அவர்களை பிரித்து விடுவாயோ என்றும் உன் மீதுள்ள பொறாமையும் தான் நாங்கள் உன்னை விட்டு விலகி இருக்க காரணம். ஆனால் நீ அதையெல்லாம் பெரியதாக எண்ணாமல் இருக்கிறாய். நாங்கள் தான் உன்னுடைய தோழமைக்கு அருகதை இல்லாதவர்கள் என்று அழுதே விட்டான்.
என்னடா நீ? என்று அர்ச்சு சிரித்தான்.
கவின் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு அர்ச்சுவை பார்க்க, விடுடா…எல்லாவற்றையும் மறந்து விடு. கூல் டா மச்சான் என்று அவனை அணைத்துக் கொண்டான்.
அகிலிடம் என்னை பற்றி பேசுகிறேன் என்று எதையும் கூறி விடாதே! மறுபடியும் பிரச்சனை என்றால் ஸ்ரீ பிரச்சனையை போக்க முடியாது.அவனும் நம் தோழன் தான்டா.அவனை டென்சனாக்கி விடாதீர்கள்! அபியிடமும் கூறி விடு என்று அம்மாவை பார்த்தான்.
அம்மா….அவரை பார்க்க,அவனது தலையில் ஒரு தட்டு தட்டி விட்டு,வந்தவுடன் கதவை தட்டியிருந்தால் நான் திறந்திருப்பேன்ல…
பக்கத்தில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்? அர்ச்சு கேட்க,அம்மா சிறு புன்னகையுடன் நான் மற்றவர்கள் பேசுவதை பெரியதாக எண்ணமாட்டேன். அவரவர் தேவைக்கேற்ப பேசுவார்கள்.அதை கவனித்துக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கை என்ன ஆவது? அப்படி யார் கேட்டாலும் என் மகன் என்று கூறிக் கொள்வேன் என்றார்.
அவன் அவரை பார்த்து புன்னகை சிந்தி விட்டு, அதற்காக மட்டுமில்லை நேற்று வண்டியில் ஸ்ரீயை அழைத்து வரும் போது எங்களை ஒருவன் வண்டியில் விரட்டினான். அவன் மறுபடியும் வந்து விடுவானோ! என்று பாதுகாப்பிற்காகவும் தான் இருந்தேன்.
என்ன? ஸ்ரீ இங்கே இருக்கிறாளா? கவின் கேட்க, அர்ச்சு விளக்கினான்.
நீங்கள் பேசியது போதும் .எனக்கு பதில் வேண்டும் என்று நிவாஸ் அர்ச்சுவிடம் கேட்க, அனைவரும் புரியாது விழித்தனர்.
அந்நேரம் படாரென்று தாரிகா வெளியே வந்தாள் தலையை சரி செய்து கொண்டே,அவள் நேராக நிவாஸ் அருகே வந்து, இது உண்மையா? கேட்டாள்.
அவன் தலையசைக்க, இருவரும் ஒருவாறு அர்ச்சுவை நோக்கினர். கவினை அவள் கண்டு கொள்ளவே இல்லை.
என்ன? என்று புருவத்தை உயர்த்தினான் அர்ச்சு.
நிவாஸ் அவனது போனை காட்ட, அப்பொழுது தான் கவினை தாரிகா கவனித்தாள்.அர்ச்சு வாங்க அம்மாவும் கவினும் அவனருகே வந்து பார்த்தனர். அவனுடைய ரகசிய அறை திறந்து உள்ளே போவது போல் வீடியோ இருக்க, போனை அணைத்து விலகினான் அர்ச்சு.
காட்டுடா அர்ச்சு கவின் அருகே வர, வராதேடா….என்று அர்ச்சு பின்னே சென்றான்.
தாரிகா கவின் அருகே வந்து,அவளது போனை அவனது கையில் கொடுத்து, உங்களது நண்பனை பற்றி கூட தெரியாமல் இருந்திருக்கிறீர்கள் என்றாள்.
அவன் விழித்தவாறு போனை ஆன் செய்ய. அர்ச்சு அதனையும் பிடுங்க வந்தான்.நிவாஸ் அவனை தடுத்து எனக்கு அனைத்தும் தெரிய வேண்டும் என்றான் ஆக்ரோசமாக.
கவின் அம்மா அருகே வந்து வீடியோவை பார்க்க ஆரம்பித்தனர்.அர்ச்சு அமைதியாக சோபாவில் தலை கவிழ்ந்து அமர்ந்து கொண்டான்.
அது அர்ச்சுவின் அறை போலும். அறை முழுவதும் ஸ்ரீயின் சிறுவயது புகைப்படங்கள். இரு சடை போனிடைலில் இருக்கும் அழகான ஸ்ரீயின் உருவம்.நான்கு பக்க சுவற்றிலும் பெரியதாக இருந்த புகைப்படங்கள்.ஒரு இடம் விடாமல் முழுவதும் ஸ்ரீ மட்டுமே. ஒரு புகைப்படம் அகில் நண்பர்களும் மற்றொன்று ஸ்ரீயுடன் அர்ச்சு மட்டும் இருப்பது போல் இருந்தது. இதை பார்த்து கண்கலங்கினர் அனைவரும். அர்ச்சுவை கலங்கிய நிலையில் பார்த்த கவின், அவனது சட்டையை பிடித்து,
ஏன்டா, சொல்லி இருக்கலாமேடா?
என்ன சொல்லடா கவின். அகிலை யோசித்தாயா?
அகிலா? என்னடா அகில்? அவனுக்கு அப்பொழுது அவள் மீது காதல் இல்லைடா. அவள் அந்த பிரகதியுடன் தானே இருந்தான்.
ஆமாம் டா. அது தான் அவன் செய்த தவறு.
என்ன தவறு? நான் அவனை பற்றி பேசவில்லை.
உனக்கு தெரியாது கவின் வேண்டாம் என்றான் அர்ச்சு.
என்னடா தெரியாது? கவின் எகிற,
ஸ்ரீ அகிலை தான் உருகி உருகி காதலித்தாள். அது உனக்கு தெரியுமா? கத்தி விட்டு அர்ச்சு டேபிளை எட்டி உதைத்தான்.. அங்கே நிசப்தம் நிலவ,கவின் ஆதரவாக தோள் கொடுக்க,அர்ச்சு அவனை கட்டிக் கொண்டான்.
எனக்கு முழுதாக உங்கள் அனைவர் பற்றியும் தெரிய வேண்டும் என்றான் நிவாஸ்.
ஆமாம் எனக்கும் தெரிய வேண்டும் என்றாள் தாரிகா. அர்ச்சுவும் கவினும் இருவரையும் பார்த்தனர்.
முடியாது என்று கவின் எழுந்தான். இருவரும் அவனை முறைத்துக் கொண்டு அர்ச்சுவை பார்க்க, கவின் பொறு…என்று கண்ணை துடைத்து விட்டு எழுந்து, தெரிந்து என்ன ஆகப் போகிறது?
உங்கள் காதலுக்கு உதவ….தாரிகா கூறினாள்.
வேகமாக அவளருகே வந்தவன், இந்த விசயம் வெளியே செல்லக் கூடாது மிரட்டினான் அர்ச்சு. அம்மா அவனருகே வர,
ப்ளீஸ்மா, என்னை மன்னித்து விடுங்கள் என்று கவின் உனக்கும் தான்.
எனக்கு புரிகிறது என்று கூறிய கவின், அகிலுக்காக தானே!
அர்ச்சு அவனை முறைக்க, அகில் பற்றி எனக்கு தெரியும்தானே. அவனது கோபமும்…என்றவன் நாங்கள் கூற மாட்டோம்.இப்பொழுதைக்கு மட்டுமே. ஸ்ரீ பிரச்சனை முடியும் வரை என்றான்.
அர்ச்சு வெளியே காலெடுத்து வைக்க, வேண்டாம்….வேண்டாம்….என்ற அலறலை கேட்டவன் வேகமாக ஸ்ரீ இருக்கும் அறைக்கு பாய்ந்தான். அனைவரும் உள்ளே செல்ல, அவள் தாரிகாவை கட்டிக் கொண்டு
பயமாக உள்ளது. என்னை விட்டு செல்லாதே ………துடித்தாள் ஸ்ரீ. வருத்தமாக கண்கலங்க அவளை பார்த்தனர்.