வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-25
238
ஹாய்…ப்ரெண்ட்ஸ்…
அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்
இதோ உங்களுக்கான எபிசோடு 25
கவின் நண்பர்களை தாண்டி வந்தவுடன் தாரிகாவை கீழே இறக்கி விட்டு ஆதேஷ் தாரிகாவை கை தாங்களாக பிடித்துக் கொண்டு வீட்டினுள் நுழைய, இன்பா அர்ச்சுவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள். சைலேஷ், கைரவ், ஸ்ரீ அவர்களை பார்த்த வண்ணமிருந்தனர். தாரிகாவையும் ஆதேஷையும் சேர்த்து பார்த்த ஸ்ரீ ஆர்வமாக சென்று, உனக்கு ஓ.கே சொல்லி விட்டாளா?
ஏய் ஆர்வகோளாறு! வந்து உட்கார். அவளை கவனி. அவள் சோர்வாக இருக்கிறாள் அர்ச்சு கூற, ஸ்ரீ அர்ச்சுவை பார்த்து கழுத்தை வெட்டிக் கொண்டாள். அர்ச்சுவிற்கு ஸ்ரீ புதிதாக தெரிய, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்பாவோ…ம்…நடக்கட்டும்…நடக்கட்டும்….என்றாள். சரியாக கவினும் நண்பர்களும் நுழைய ஆதேஷ் தாரிகா கையை பிடித்துக் கொண்டு கவினை பார்த்து,
தாரி எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறாள் என்றான் சிரித்துக் கொண்டே, கொதித்த கவினோ தாரிகாவை முறைத்த வண்ணமிருக்க.. தாரிகா அதை கண்டு கொள்ளதவளாக,
ஆது…அதை கொண்டு வா…..என்றாள் தாரிகா.
அவன் யாழினி அறைக்கு சென்று ஒரு போனை எடுத்து தாரிகாவிடம் கொடுத்தான். அதை ஆன் செய்து,எனக்கு ஒன்று மட்டும் சொல்வீர்களா அக்கா?
என்ன? என்பது போல் இன்பா அவளை பார்த்தாள்.
எங்களுக்கு தேவையான நேரத்தில் தான் நீங்கள் உடன் இருக்கவில்லை என்றவுடன் இன்பா முகம் வாடியது. சைலேஷ் பேச வர, தாரிகா அவனிடம் கையை காட்டி, நிறுத்துங்கள் என்று விட்டு, இதற்கான உண்மையான விளக்கம் மட்டும் தாருங்கள் என்றாள். இன்பா வருத்தமாக தலையசைத்து தாரிகா அருகே வந்தாள்.
போனை காட்டியவுடன் பேச்சு எழாது கையை பிசைந்தவாறு நின்ற இன்பாவை பார்த்து, இது என்ன? எதற்காக? கேட்டாள் தாரிகா.
சைலேஷும் மற்றவர்களும் இன்பா அருகே வந்து போனை பார்த்து அதிர்ந்தனர். ஏனென்றால் ஸ்ரீ, அர்ச்சுவை தவிர அகில், கவின், நித்தி, யாசு, அபி படம் அதில் இருந்தது. கொஞ்சமல்ல நிறையவே….அனைவரும் இன்பாவை பார்க்க, சைலேஷும் அதிர்ந்து தான் போனான்.
இன்னு……என்ன இது? சைலேஷ் கேட்டான்.
அது வந்து…அவளது கண்கள் கலங்கியது. கூறுகிறீர்களா? இல்லையா?…தாரிகா கோபப்பட, இன்பாவிற்கு நெஞ்சடைத்தது போலிருந்தது.
வந்து……யாழுவிற்கு ஸ்ரீ அம்மா, அப்பாவை நன்றாக தெரியும். அவர்களது கம்பெனியில் தான் வேலைக்கு சேர்ந்தாள். அவளுக்கு எதையும் சரியாக செய்து தான் பழக்கம். ஸ்ரீ குடும்பத்தின் வக்கீல் தான் சந்துரூ. அவர்கள் கல்லூரி வேறாக இருந்தாலும் இருவரும் ஒரு விபத்தில் சந்தித்து பழக்கமாகி காதலானது. ஆழமான காதல் தான். ஸ்ரீ அப்பா தான் உங்கள் அனைவரையும் கவனித்துக் கொள்ள சொல்லி தான் யாழுவை உங்கள் கிராமத்திற்கு அனுப்பினார்கள்.அவள் அங்கு தங்கவில்லை என்றாலும் உங்களை கவனித்துக் கொள்ள தினமும் செல்வாள். நானும் ஒரு முறை என்று அகிலை பார்த்து விட்டு கல்லூரி விடுமுறையின் போது வந்திருக்கிறேன்.கம்பெனியில் ஏதோ பிரச்சனையாம்.அதனால் தான்….
அதற்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?அர்ச்சு கேட்டான்.
இருக்கிறது.ஸ்ரீ விபத்திற்கு பின் அகில் அப்பா சரியாக கம்பெனிக்கு வந்ததில்லை. அவர் கண்டறிந்த புதுவிதமான மருந்தை கொண்டு வர ஸ்ரீ அத்தை வற்புறுத்தியதால்…அவருக்கு விருப்பமில்லாது வராமலிருக்க, அத்தையின் கம்பெனி மார்க்கெட் மொத்தமாக சரிய ஆரம்பித்தது. அந்த மருந்தை அவரிடம் கொடுக்க அகில், ஸ்ரீ இருவரது அப்பாவிற்கும் விருப்பமில்லை. அகில் அப்பாவை கயலால் சந்திக்கவோ, பேசவோ முடியவில்லை. அதனால் உங்கள் அனைவரையும் வைத்து மிரட்டியதால் தான் ஸ்ரீ அப்பா யாழுவை கண்காணித்து போட்டோ அனுப்ப செய்தார். அது தான் இந்த போட்டோ என்றாள் இன்பா.
அப்படியென்றால் அந்த பிரச்சனை? அந்த மருந்து? அகில் கேட்க,அதை பற்றி வேறெதுவும் தெரியாது.
அப்பா காணாமல் போனதிற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? அகில் சிந்தித்தான். கொஞ்சநேரம் அமைதி நிலவ, பின் நாங்கள் கிளம்புகிறோம் அகில் கூற, கைரவிற்கு போன் வந்தது.
என்ன? அதிர்ச்சியோடு அண்ணா! என்றான்.
அண்ணா நாம் இப்பொழுதே கிளம்ப வேண்டும். என்னடா?…
கல்லூரி பிரச்சனை பெரியதாகி விட்டது. நீ வந்த ஒரே நாளில் இரண்டு பிரச்சனை வந்து விட்டது என்றும் உன்னை பதவியிலிருந்து இறக்க போவதாகவும் பேசுகிறார்களாம்…அவன் பதட்டப்பட,…சைலேஷ் நித்தியை பார்த்தான். அவள் ஏதும் பேசாமலிருக்க,இதை கவனித்த இன்பா ,நீ முதலில் பிரச்சனையை கவனி என்று அவனை அனுப்பினாள்.
யாராவது இன்பாவை வீட்டில் விட்டு விடுங்கள். தனியாக அவளை விட வேண்டாம் என்று மீண்டும் நித்தியை ஒரு முறை பார்த்து விட்டு செல்ல, பை காய்ஸ் என்று கைரவும் அவனுடன் சென்றான். பெருமூச்சுடன் இன்பா தாரிகாவிடம் திரும்பினாள்.
நான் தாரிகாவிடம் பேச வேண்டும் என்றான் கவின்.
அதெல்லாம் முடியாது ஆதேஷ் முன் நிற்க, யாரிடமும் நான் கேட்க வேண்டிய அவசியமில்லை என்றான் கவின்.
என்னிடம் கேட்க வேண்டும் என்றான் ஆதேஷ்.
ஆது…வாக்குவாதம் எதற்கு? நான் பேசுகிறேன் என்றும் வீட்டினுள் வேண்டாம் என்று திண்ணைக்கு அழைத்து சென்றாள்.மற்றவர்கள் வீட்டினுள் இருந்தனர்.
டேய், அவளை எதற்காக விட்டாய்? ஸ்ரீ கோபப்பட, அவளை பார்த்து கண்ணடித்தான் ஆதேஷ். ஓய்…என்ன அடி வேண்டுமா? ஸ்ரீ அவனை விரட்ட, ஸ்ரீ மகிழ்ச்சியை பார்த்து அனைவரும் மகிழ்ந்தவாறு இருந்தனர்.
கவின் தாரிகா அருகே சென்று அவளை பார்த்தவாறு உட்கார்ந்திருக்க, எதற்கு இப்படி பார்க்கிறீர்கள் சீனியர்?
இல்லை, நீ தான் அந்த பெண்ணா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.
அவள் முறைக்க,சரிம்மா…..முறைக்காதே!
உன்னை பற்றி தெரியாமல் நான் பேசியது தவறு தான். என்னை மன்னித்து விடு….
அவள் அமைதியாக இருக்க, உன்னை போல் தான் நித்தியும் முறைப்பாள் என்றவுடன் தாரிகா எழுந்தாள். போதும் பேசியது நான் செல்கிறேன் என்று ஓர் அடி எடுத்து வைத்தாள்.அவன் எழுந்து அவளது கையை பிடித்து இழுக்க, அவனது மார்பில் விழுந்தாள். நிமிர்ந்து அவனை அவள் பார்க்க, எனக்கு கொஞ்சம் நேரம் தருவாயா? அவன் கேட்க,யாரோ தாரிகாவை இழுத்து ஓங்கி அறைய, கவின் அதிர்ந்து போனான்.
தாரிகாவின் அம்மா அவளிடம், ஒருவனால் நடந்தது போதாதா?அம்மா அவள் மீதிருந்த கையை எடுக்க அவள் தடுமாற, கவின் அவளை பிடித்தான். மீண்டும் அம்மா கையை ஓங்க, நான் அவளிடம் மன்னிப்பு தான் கேட்டுக் கொண்டிருந்தேன் கத்தினான். அவள் பயந்து அவனை விட்டு விலக, கீழே விழுந்தாள்.அரவம் கேட்டு அனைவரும் வெளியே வந்தனர்.ஆதேஷ் வேகமாக தாரிகாவை எழுப்ப, அவனை பார்த்து அவளது அம்மா அமைதியானார்கள்.
ஆது…. எப்பொழுது வந்தாய்? பேசிக் கொண்டே பின் பார்க்க, வீட்டிலிருந்த அனைவரும் வந்தனர்.
நடந்த அனைத்தையும் கூறி முடித்தான். ஆன்ட்டி அவள் மீதும், இவர்கள் யார் மீதும் தவறில்லை என்ற பின் இன்பா வெளியே வந்தாள். அவளை பார்த்து மெலிதான புன்னகையை உதிர்த்தவர் பின் அமைதியானார்.
இத்தனை நாள் எங்கே சென்றாளாம்? நாம் இருக்கிறோமா? செத்தோமா? என்று கூட பார்க்க வரவில்லை. இன்று எதற்கு வந்தாளாம்?
அம்மா இப்படி பேசாதீர்கள் தாரிகா அம்மா காலை கட்டிக் கொண்டு, நான் வராததற்கு காரணம் உள்ளதும்மா….மூச்சை பிடித்து அழ, தாரிகா அம்மா பரிதவித்து போனார்.அவர் குனிந்து அவளை தூக்கி விட்டு கட்டிக் கொண்டார். இன்பா அழுகை நிற்கவே இல்லை.அவள் உடல் அதிகமாக குலுங்குவதை பார்த்து,
என்ன பிரச்சனைம்மா?
அம்மா…என்றவள் சுற்றி இருந்தவர்களை பார்த்தாள். அம்மா புரிந்து கொண்டு, நீ ஏதும் சொல்ல வேண்டாம்.உள்ளே வாருங்கள் என்றவர் கவினை மட்டும் முறைத்து விட்டு சென்றார்.
சாப்பிடுங்கள் என்று அம்மா கூற அனைவரும் தயங்கினார்கள்.
அட, ஆன்ட்டி சாப்பாடு சூப்பராக இருக்கும். சாப்பிட்டு கிளம்பலாம் என்று ஆதேஷ் கூற, கவினிற்கு கடுப்பாக இருந்தது.அனைவரும் பேசிக் கொண்டிருக்க,அர்ச்சு மட்டும் யோசனையில் இருந்தான். ஸ்ரீ கவனித்து விட்டு நிவாஸிடம் காட்ட, அவன் அர்ச்சுவை அழைக்க சுயம் வந்தவனாக,ஒன்றுமில்லை என்று சமாளித்து வைத்தான்.
சாப்பிட்டு அனைவரும் கிளம்ப, நித்தி இன்பா அருகே வந்து அவரது பிரச்சனை சரியாகி விட்டதா? கேட்டு கூறுங்கள்?தயவுசெய்து நான் கேட்டதாக கூற வேண்டாம்.இன்பா சிறு புன்னகையுடன் கிளம்ப, கவின் தாரிகாவை பார்த்த வண்ணம் இருந்தான்.அகிலிற்கு போன் வர பேசிக் கொண்டே கவினை பார்க்க, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் பயப்படாமல் அம்மாவை தேடுங்கள் என்று போனை வைத்தான்.
கவின் ஒரு பிரச்சனை, அம்மாவை காணோமாம்!என்றான் அகில்.
போச்சு…..எல்லாம் போச்சு….. என்று தலையில் கை வைத்தான்.
வா காரில் செல்லலாம் என்று அர்ச்சு அழைக்க, இல்லை டா…ஊருக்கு வேண்டாம். மாமாவை தான் தடுக்க வேண்டும்.
அம்மா?…அர்ச்சு கேட்க,
அபி பிரதீப் அண்ணாவிடம் அம்மா பற்றி கூறி கண்டறிய சொல்….அர்ச்சு நீ ஸ்ரீயையும், நிவாஸையும் அழைத்து அவர்களது வீட்டில் விட்டு விடு. ஆதேஷ் பெண்கள் விடுதியில் நித்தி, யாசுவை விட்டு விடு, அபி நீ அண்ணாவிடம் பேசி விட்டு, இன்பா மேடமை அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்.நானும் அகிலும் மாமாவை தடுக்கிறோம் என்று சொன்னவன் தாரிகா அம்மாவிடம் கூறி விட்டு அவசரமாக கிளம்பினான் கவின்.
பிரச்சனை என்றவுடன் கவின் திட்டம் செய்த விதம் தாரிகா அம்மாவை கவர தான் செய்தது.அவனது அம்மா…. எங்கே? எதற்கு? தாரிகா அம்மா சிந்தித்தவாறு கேட்டார்.
பிரச்சனையில்லைமா….எங்க பிரதீப் அண்ணா ஊரில் இருப்பவர்களை பற்றி நன்றாக தெரிந்தவர்.அவர் பார்த்துக் கொள்வார்.கவின் அம்மா, அப்பாவிற்கு அடிக்கடி சண்டை வரும் பணத்தால். போதிய வருமானம் இல்லாததனால் நடக்கும். அதனால் அவனும் அவனது அக்கா அகல்யாவும் பகுதி நேர வேலையில் சேர்ந்து அவர்களுக்கு தேவையான செலவை அவர்களே கவனித்து கொள்வார்கள்.விடுமுறை நேரத்தில் அவன் கிடைக்கும் வேலை செய்வான். அவனது அக்கா பணக்கார ஒருவரை காதலிக்க,நிச்சயம் கூட முடிந்து விட்டது. வேலையை விட்டு தான் இங்கே வந்திருக்கிறான்.அம்மா வீட்டில் இல்லாததால் பதறி அகல்யா அக்கா மாமாவிற்கு போன் செய்து விட்டார். மாமாவிற்கு அக்கா மீது மிகவும் பிரியம். குடும்பத்தை பற்றி தெரிந்தாலும் அவர்களது சண்டை பற்றி தெரியாது.அதனால் மாமாவை தடுக்க சென்றிருக்கிறான்.
ஆன்ட்டி தாரிகா கவினை என்று நித்தி ஆரம்பிக்க, எனக்குதெரியும் என்றார் அம்மா.
அம்மா….உங்களுக்கு எப்படி தெரியும்?..தாரிகா தயங்க, தெரியும் என்றார் அவர்.
ஆன்ட்டி…நித்தியும் யாசுவும் அவர்களருகே வர, உன்னையும் தெரியும் என்று நித்தியை முறைத்தவர், தாரிகா போனை எடுத்து வந்து அவளிடம் கொடுக்க முழுவதும் நித்தி கவின் சேர்ந்து இருப்பது தான் அதிகமாக இருந்தது.
அர்ச்சு வேகமாக போனை வாங்கியவன் இருவரும் இருந்த அனைத்தையும் அழித்து விட்டு, தாரிகா கையில் கொடுத்து நீ நினைப்பது தவறு. அவனே உன்னிடம் வருவான் என்று விட்டு அவளது அம்மா பக்கம் திரும்பி, உங்களது மூத்த பெண்ணுக்கு நடந்தது போல் தாரிகாவிற்கு நடக்காது. கவின் முடிவெடுத்தால் மாறவே மாட்டான். அவள் நித்தியை தேர்ந்தெடுத்தது தவறு என்பதை ஓரளவு அவன் உணர்ந்து விட்டான். அவன் மற்ற பெண்களுடன் பழகியதே நித்திக்காக தான். அவள் காதல் வேரொருவர் மீது உள்ளதை புரிந்து கொண்டான். என் நண்பன் தன் குடும்பத்திற்காக எதையும் செய்வான். தாரிகாவையும் நன்றாக பார்த்துக் கொள்வான் அர்ச்சு கூறினான்.தாரிகா மற்றும் நண்பர்கள் கண்ணில் நீர் சுரந்தது. அபி ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டான். ஸ்ரீ நிவாஸ் அவனையே ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.இன்பா அவனை மெச்சும் படி பார்த்தாள்.
எங்களை மன்னித்து விடுடா அர்ச்சு, நித்தி கூறியது போல் எனக்கும் அகில், கவினிற்கும் உன் மீது பொறாமை தான்.அனைவரும் எல்லா விதத்திலும் நீ சரி என்பது தான் நம் நட்பின் விரிசலானது.அது இன்றோடு என்னை விட்டு அகன்றதுடா…..
அர்ச்சு அவனை விலக்கி விட்டு,ஹா…ஹா…..என்று விரக்தியாக சிரித்தான்.
டேய்…..என்னடா? நித்தி அவனது தோளில் தட்ட, உங்களுக்கு பொறாமையா? இல்லடா…..எனக்கு தான்……உங்கள் அனைவர் பக்கமும் இருக்க யாராவது ஒருவராக இருக்கிறார்கள். ஆனால் சிறு வயதிலிருந்து எனக்கு நான் மட்டும் தான்.தனிமை தான் என் வாழ்வு. இப்பொழுது கூட, என்றவன் ஸ்ரீயை பார்த்து கண் கலங்கியவன்.ஸ்ரீ மீதும் என்றான்.
என் மீதா? அவளை அவளே சுட்டிக் காட்டி அர்ச்சு அருகே வந்து கேட்க,ஆம் என்று தலையசைத்து, எப்பொழுதும் உன்னுடன் கூட ஒருவன் இருந்து கொண்டு தான் இருக்கிறான் என்று நிவாஸை பார்த்தான்.