அக்கா, நிஜமாகவே போயிட்டாளா? ஸ்ரீ கேட்க, அப்படி தான் தெரியுது ஸ்ரீ என்றாள் தாரிகா.
அக்கா..என்று காயத்ரியை ஸ்ரீ உலுக்க, பாவம் அந்த பொண்ணு. மனசுக்குள்ள இருக்கிறத சொல்லாமலே போச்சுல்ல..
நாம உதவலாமா? ஸ்ரீ கேட்க, அவள் படிப்பை முடித்து தான் காதலை சொல்வேன்னு சொன்னா? ஆனால் இனி இங்க வருவாளான்னே தெரியாதே? காயத்ரி சொல்ல,
வர வைக்கலாம் அக்கா.
அட போம்மா, இவ செஞ்ச அலப்பறையில இங்க யாரும் ஏத்துக்கிறதே கஷ்டம்.
அவ என்ன இங்கேயா இருக்க போறா? வக்கீல் சார் வீட்ல தான இருப்பா.
இது சரியில்லை. அவ விசயத்தை பாருவே பார்த்துக்கட்டும். அவளோட காதல் விசயம் தெரிஞ்சா பாரு ரொம்ப வருத்தப்படுவா? அதனால் அவளுக்கு இது தெரிய வேண்டாம்.
அக்காவுக்கு யாரோட காதல் தெரியக்கூடாது ரூபி வந்தாள். அவளை பார்த்து மூவரும் முறைத்தனர்.
என்னாச்சு? புகழ் காதலிக்கிறாளா? ரூபி கேட்க, அவளை மதிக்காமல் மூவரும் ஒவ்வொரு பக்கமாக சென்றனர்.
நான் என்ன கேட்டுட்டேன் என்று புலம்பிக் கொண்டே குகனை பார்த்து, மாமா..ஒரு நிமிசம் தனியே அழைத்து அவனிடம் கேட்டாள். அவன் அதிர்ந்து..புகழ் காதலிக்கிறாளா?
மாமா, சத்தம் போடாதீங்க. அந்த அக்கா தான் பேசிக்கிட்டு இருந்தாங்க. நான் சென்றதும் பதில் சொல்லாம போயிட்டாங்க.
புகழ் யாரைன்னு உனக்கு தெரியுமா? அதை கேட்டதுக்கு மூவரும் என்னவொரு முறைப்பு காட்டினாங்க தெரியுமா? நீங்களே கேட்டுக்கோங்க என்று அவள் செல்ல, குகன் சிந்தனையுடன் பார்வதியிடம் வந்து நின்றான்.
காயத்ரி, ஸ்ரீ, தாரிகா புகழை விரட்டியது நினைவிற்கு வந்து, காயத்ரியை பார்த்து பாரு..இங்கேயே ஒரு நிமிசம் நில்லேன் என்று அவளிடம் சென்று கேட்டான். அவள் பதில் கூறாமல் இருக்க..உண்மையிலே புகழ் காதலிக்கிறாளா? யார் அது? கேட்டான்.
சாரி சார். என்னால இதை சொல்ல முடியாது. அது தெரியாமல் இருப்பது தான் அனைவருக்கும் நல்லது என்றார். மற்ற இருவரையும் அழைத்து கேட்க, காயத்ரி கூறியதையே அவர்களும் கூற, பேசி வைத்து பேசுறாங்கன்னு புரிந்து கொண்டு அவர்களை விட்டு பார்வதியிடம் வந்தான்.
குகன் தன் தம்பிகள் அனைவரையும் தேடி தேடி நின்றவாறு பார்க்க, உங்களுக்கு என்னாச்சு? யாரை தேடுறீங்க? சோகமாக கேட்டாள் பார்வதி.
பாரு..என்னோட தம்பிக்கள் அனைவரையும் உனக்கு தெரியும்ல..நீ ஒரு நிமிசம் புகழா மாறி அவங்கல்ல யாரை தேர்ந்தெடுப்ப?
புரியலை. புகழுக்கு பிடிக்கிற மாதிரி பையன் யாரும் என் தம்பியா இருப்பாங்களா?
என்ன?
புகழ் காதலிக்கிறாளாம்..
என்ன? பாரு அதிர்ந்தாள்.
உன்னோட ஷாக்கை விட்டு கொஞ்சம் யோசித்து பாரு. அவள் யாரை செலக்ட் பண்ணுவா?
அவள் யாரைன்னா..நல்ல பழகியவங்கல்ல தான் நம்புவா. அழகா இருக்கணும். அவளை சமாளிக்கும் திறன் உள்ளவனாக தான் இருப்பான் என்று அனைவரையும் பார்த்து உங்க தம்பிகள் செட் ஆக மாட்டாங்க என்று சொல்லும் போது தாத்தாவுடன் வரும் ராவணை பார்த்து..ஏங்க..ராவா? வா தான் இருக்கணும் என்று யோசித்தாள். அப்பாவை காரணம் காட்டி பேசியது என இப்ப நடந்த அனைத்தையும் நினைத்துக் கொண்டே, ராவா. நோ…என்று மயங்கி குகன் மீது சரிந்தாள்.
அனைவரும் அவளிடம் வந்தனர். அவளை எழுப்ப..ராவணை பார்த்து அவனை பிடித்து தள்ளினாள் பாரு. அஜய் அவனை பிடித்து விட்டு, பாரு என்ன பண்ற? அஜய் சத்தமிட்டான்.
குகனை பார்த்து, வேண்டாங்க. இருக்கக் கூடாது..என்று அழுதாள். அனைவரும் புரியாமல் பார்த்தனர். அனைத்தையும் பார்த்த அர்ஜூன் பாட்டி முதல்ல பொண்ணை சாப்பிட அழைச்சிட்டு போங்க. அப்புறம் ஓய்வெடுக்கட்டும். உங்க சடங்க அப்புறம் செய்யுங்க என்றார். அவர்களும் ஒத்துக் கொண்டனர்.
ராவணை அழைத்து சென்ற தாத்தா, அவன் தலையில் அடுத்தடுத்து இடியை இறக்கினார்.
ராவா..நம்ம புகழ் கிட்ட இப்படி பேசி இருக்கக் கூடாதுய்யா.. என்று சொல்லி விட்டு அவனை பார்க்க, அவன் கண்கள் கலங்கியது.
சரி..நீ இந்த வீட்டு பேரனாக இல்லாமல் நீ ராவணாக புதிதாக சின்ன மருத்துவமனை ஒன்றில் சேரு. இப்ப நீ பார்க்கும் மருத்துவமனையில் உனக்கான அங்கீகாரம் இல்லை. இந்த ஜமீனை வைத்து தான் உன்னை பாராட்டுகிறார்கள். அதே போல் பெரிய இடத்து ஆட்கள் மட்டுமே பேசண்ட்டாக வருவாங்க. அதனால பணத்தோட அருமை உனக்கு புரியலை. கஷ்டப்படுறவங்களுக்கும் நீ சிகிச்சை செய்தால் தான் குடும்பம் பற்றிய சின்ன சின்ன விசயங்களும் தெரியும்..என்று அவனை பார்க்க, தாத்தா வேண்டாமே? என்றான்.
நீ செய்து தான் ஆக வேண்டும் என்று அவனை பார்த்துக் கொண்டே ரூபியை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா? கேட்க சட்டென நிமிர்ந்து..தாத்தா என்று ஆவேசமானான்.
என்னாச்சு? அத்தை பொண்ணு தான? சின்ன வயசுல இருந்து ஒருவருக்கு ஒருவர் பழக்கம். உனக்கும் வேற பொண்ணு அமைய மாட்டேங்குது.
இப்ப கல்யாணமெல்லாம் வேண்டாமே?
நீ சொல்லு.
எனக்கு புகழை தான் பிடிக்கும் என்றான்.
எப்படி? முன் போல் பொண்ணுங்க பின்னாடியே சுத்துவியே? அது போல தானே? அவன் அப்பா கேட்க,
இல்லப்பா..அவள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனாப்பா. நான் சொன்னதில் தவறுள்ளதா? அவன் பாவமாக கேட்டான். ஆனால் அவன் அப்பாவிற்கு கோபம் வந்தது. சுந்தரம் அவர் கையை பிடித்து நிறுத்தினார்.
தப்பில்லையா ராவா? நீ என்ன சொன்ன? ரோட்டுல வச்சு சாப்பிடுவேல்லன்னு சொன்ன. அதில் பல அர்த்தம் உள்ளது. ஆனால் ஒன்று கூட அவளுக்கு ஏதுவாக இல்லை.
புரியலையே? ஆனால் இதில் ஸ்டேட்டஸ் எப்படி வந்தது தாத்தா?
இருக்குப்பா. நீ இங்க பொண்ணுங்களோட கிளப், குடின்னு இருந்த. ஆனால் புகழ், அக்கா, அப்பா, ப்ரெண்ட்ஸுன்னு கோவில், பூங்கா..என்று இருந்தாள். உன்னோட ப்ரெண்ட்ஸ் பணத்தை பார்த்து பழகுறவங்க. அவளுக்கு பேச்சாலே பழக்கமானவங்க. உனக்கு உதவி என்றால் பணம் கொடுத்தால் தான் வருவாங்க. ஆனால் அவள் குரல் அழைப்பிலே வந்திருவாங்க. அவளுக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம். உனக்கு..சொல்லு என்ன இல்லாமல் இருக்க முடியாது?
அவன் சிந்தித்தும் அவனிடம் பதில் இல்லை.
இப்ப தெரியுதா? அவள் தன் சுயமரியாதைக்காக தன் அக்கா, அவளுக்கு உரிய எல்லாத்தையும் தூக்கி போட்டு போயிட்டா.
உன்னால பணம் வேண்டாம், டாக்டர் வேலை வேண்டாம். யாரும் வேண்டாம்ன்னு போக முடியுமா? தாத்தா கேட்க, தலையசைத்தான். புகழ் செய்த தவறு உன்னை அடித்தது. பின் அந்த அம்மாவிடம் வம்பு வளர்த்தது. அதை கூட டென்சன்ல தான் பண்ணியிருக்கா. அதான் நீ ஏற்படுத்திய டென்சன்.
இப்ப சொல்லு. அவளை போல் உன்னால் இருக்க முடியுமா? இல்லை அவளை உன்னால சமாளிக்க முடியுமா? அவர் கேட்க,
தாத்தா, என்ன கேக்குறீங்க? புகழை எனக்கு?
இல்ல..புகழ் உனக்கு சரிவர மாட்டாள். நீ ரூபியை கட்டிக்கோ..என்றார் தாத்தா.
மாமா..என்று அவன் அப்பா சத்தமிட..பேசும் போது இடையில பேசாதீங்க மாப்பிள்ள என்றார்.
இல்ல புகழை கட்டிக்கணும்ன்னு நினைச்சா..சின்ன ஹாஸ்பிட்டலில் சேர்ந்து உன்னோட திறமையை காட்டி யார் பெயரையும் உபயோகப்படுத்தாமல் முன்னேறி வரணும். அவள் செய்யும் எல்லாத்தையும் கத்துக்கணும். அவளுக்கு ப்ரெண்ட்ஸோட ரோட்டு கடையில கூட சாப்பிடுவா. அதையும் செய்யணும். இன்னும் அவளை பற்றி மருமகளிடம் கேட்டு தெரிஞ்சு எல்லாத்தையும் கத்துக்கணும். இதையெல்லாம் செய்து நீ முன்னேறி வந்தாலும் முக்கியமான விசயம் அவ உன்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க வைக்கணும் என்ற தாத்தா..அதுக்கு வேணும்ன்னா சின்னதா டிராமா பண்ணலாம். நாம என்ன சொன்னாலும் அவள் வரப் போறதில்லை.
அவள் வரணும்ன்னா.. நீ கல்யாண மாப்பிளையாக அமரணும்.
என்ன?
ஆமாய்யா, நீ ரூபிய கட்டிக்கிற மாதிரி செட் பண்ணுவோம். அவ கண்டிப்பா வருவா. அவளை பார்த்தவுடன் சரணடைந்தாவது ஒத்துக்க வை. பொறாமை படுத்த நினைச்ச..இப்ப மாதிரி போயிருவா?
என்ன?
தாத்தா..அவளுக்கு என்னை பிடிக்கணுமே? பிடிக்காமலா உன்னுடன் இம்முறை நன்றாக பேசினாள் தாத்தா சொல்ல அவன் புன்னகைத்து. இதுக்கு நான் ஒத்துக்கிறேன் தாத்தா என்று தான் பேசிக் கொண்டே வெளியே வர வச்சிருப்பாங்க. அனைவரும் சென்ற பின் ஓய்வெடுத்து எழுந்த பாரு..சுற்றி உள்ளவர்களை பார்த்தாள்.
ராவண் அவளிடம் வந்து மன்னிப்பு கேட்டு, ராவண் புகழ் மேலுள்ள காதலை பாருவிடம் கூற, வேண்டாம் ஒரு முறை கோபப்பட்டு நடந்ததே போதும். இதுக்கு மேல அவள் அழுதிருவாள். இதுவரை மனசுல கஷ்டம் இருந்தாலும் வெளிப்படையா சொல்லுவா. ஆனால் இப்ப அவள் காதலை என்னிடம் கூட சொல்லாமல் போயிட்டா.
முதல்ல மாதிரி இல்லாமல் என்று தாத்தா கூறியதை சொல்லி, ஒரு வருடம் தாத்தா எனக்கு நேரம் கொடுத்துள்ளார். அவள் கல்லூரி முடித்து கல்யாணம் பண்ணலாம்ன்னு சொன்னார்.
நீ மாறினாலும் அவளோட கனவை விட்டு கொடுக்க மாட்டாளே?
அவளை விட்டு கொடுக்க யாரும் சொல்லலை. நானும் சொல்ல மாட்டேன். அவள் கல்யாணத்திற்கு பின் அவ்வப்போது தானே செல்வாள். வெளியே தங்குவாள்.
அவள் பசங்களுடன் வேலை பார்ப்பது போல் இருக்குமே?
அண்ணி..புகழ் நெருப்பு மாதிரி. அவள் விருப்பமில்லாமல் பக்கம் கூட செல்லமுடியாது அவன் சொல்ல, சரி நானும் உதவுகிறேன் என்று ஒத்துக் கொண்டாள் பாரு.
அஜய் சார், உங்க வீட்டுக்கா போறீங்க? ஸ்ரீ கேட்க, அர்ஜூன் அவளை முறைத்தான்.
இல்லம்மா. நான் அம்மாவிடம் போனில் பேசினாலே கல்யாண பேச்சை எடுக்குறாங்க. என்னோட பிரகதி பேபி எங்க இருக்காளோ? என்ன செய்றாளோ? அவன் புலம்ப, வீட்டுக்கு போயிட்டு வேலைய கவனிங்க.
நான் போக மாட்டேன். போனா..உடனே ஏதாவது ஒரு பொண்ணை தலையில் கட்டிடுவாங்க என்றான். ஸ்ரீ சிரித்தாள்.
பின் ஒரு வருடம் கழித்து ராவண் முழுவதும் மாறியிருக்க அவர்கள் திட்டத்தை கையிலெடுத்து புகழை வர வைத்தனர். புகழ் இன்னும் வரலையே? ராவண் புலம்ப, வருவாடா..என்றான் நந்து.
அண்ணன்னு மரியாதையெல்லாம் இல்லைல?
இல்ல..இல்ல..என்ற நந்து வாயிலை பார்த்து முகம் மாறியது. அண்ணா..உனக்கு பெரிய வெடியே வச்சுட்டா. நிஜமாலே நீ ரூபிய தான் கட்டிக்க போற என்றான்.
ஏன்டா?
அங்க பாரு என்று அவள் தலையை திருப்பி காட்ட..உயர்ந்த மனிதன் கையை கோர்த்துக் கொண்டு ஜோடியாக வந்து நின்றாள் புகழ்.
பாருவை பார்த்து, அக்கா..என்று ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். யாருடி அவரு?
அவரா? அவரா? என்று வெட்கத்துடன் நிலத்தில் கோலமிட்டு என்னோட பாய் ப்ரெண்டு என்றாள்.
என்ன? என்று ராவண் இதயம் நொறுங்கியது.
அண்ணி..என்று அவன் அழைத்தான்.
என்ன மாமா? மாப்பிள்ளை தனியா இருக்கார். பொண்ணை காணோம் கிண்டலாக கேட்டாள் புகழ். சும்மா இருடி..என்று அவளை தனியே அழைத்து வந்து யாரோ ஒருவனுடன் இப்படி வந்து நிக்குற?
அக்கா..அவரு யாரோ இல்லை? என்னோட பாய் ப்ரெண்டு. திரும்ப சொல்லாதடி. வயசு கூட மாதிரி இருக்கே..அக்கா சும்மா இரு என்று அவள் கையை தட்டி விட்டு, அவனிடம் நின்று கொண்டு மாமா..எங்க ஜோடி பொருத்தம் அம்சமா இருக்குல்ல? கண்ணாடியை போட்டுக் கொண்டு கேட்டாள்.
சூப்பர் அம்சம். அண்ணா. நீ சமோசா தான் விக்க போகணும். நீ கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இவளுக்காகவென தாலி முதற்கொண்டு வாங்கி வச்சிட்ட. ஒண்ணு பண்ணு. அவன் கையில் கொடுத்து புகழ் கழுத்துல கட்ட சொல்லிடு நந்து கேலி செய்தான்
]உன்னை கொன்றுவேன் பார்த்துக்கோ..என்ற ராவண். இப்ப பாரு..நான் என்ன செய்ய போகிறேன் என்று அவள் முன் வேகமாக வந்தான்.
அவள் கண்ணாடியை கழற்றி, டாக்டர் சார், உங்க வொய்ஃப் என்ன செய்றாங்க? கலெக்டரா? கேட்டாள்.
புகழ்..என்று தயங்கினான்.
டியர், உங்களுக்கு தெரியுமா? இவரு தான் ராவண் மாமா. இவரு ரொம்ப பெரிய பணக்காரர். இந்த சொத்துக்கே அதிபதி. அவர் நடக்கவே மாட்டார் தெரியுமா? அவருக்கு ஏசி இல்லாமல் தூக்கமே வராது. அப்புறம்.ஹை லெவல் ரெஸ்டாரண்ட்ல தான் சாப்பிடுவார். அதை விட இவருக்கு பசங்கள பிடிக்கவே பிடிக்காது. எப்போதும் பொண்ணுங்க தான் பக்கத்துல இருக்கணும். உங்கல்ல..பாதியா கூட என்னை சிரிக்க வைக்க முடியாது என்று அவனை பற்றி சொல்ல, அன்று அமைதியாக தலை கவிழ்ந்து நின்றான்.
ஏய், என்ன பேசுற புகழ்? பாரு கோபமாக கேட்க, குகன் அங்கு வந்தான். குகன் மாமா, கங்கிராட்ஸ்..அப்பாவாக போறீங்க போல? சூப்பர் மாமா. எனக்கு ட்ரீட் வேணும். இங்க கூட முருகண்ணா..பானி பூரி ரோட்டு கடை பேமஸாமே? அங்க தான் ட்ரீட் வேணும்? என்றாள்.
நானும் வாரேன் என்றான் ராவண்.
அச்சோ..உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போயிடும்ல்ல. நான் மாமாவுடனும் என்னோட டியருடனும் போய் சாப்பிட்டுப்பேன் என்றாள்.
டியரா? ஆளைப்பாரு ஒட்டகசிவிங்கிக்கு கோர்ட்டு சட்டையை மாட்டி விட்டது போல இருக்கு என்றான்.
ஹலோ..மரியாத..மரியாத..என்றாள் அவள்.
நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன் என்று புகழை நெருங்க..பொண்ணில்லாமல் மாப்பிள்ள ரொம்ப கஷ்டப்படுறார். சீக்கிரம் பொண்ணை அழைச்சிட்டு வாங்க..புகழ் சத்தமிட்டாள்.
புகழ்..நீ தான்..பொண்ணு..என்று அவளை பேச விடாமல் இதழில் முத்தம் கொடுக்க, என்ன பண்றீங்க? சாரி டியர் மாமாவுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு. அதான் இப்படி பண்ணிட்டாரு என்று அவனை முறைத்தாள்.
ஆமா, பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. அன்று அண்ணா திருமணத்தில் பார்த்த போது ரொம்ப சந்தோசமா இருந்தது. ஆனால் என் கோபத்தால் தான் பிரிந்தோம். ஆனால் இன்று உனக்காக நான் எல்லாவற்றையும் மாற்றி புகழுக்கேற்ற ராவணாய் வந்து நிற்கிறேன். எனக்கு உன் மீது தான் பைத்தியம். உன்னை பார்க்கும் இந்த நாளுக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.
என்ன? புகழுக்கேற்ற ராவணா? சரி. எனக்காக கத்துக்கிட்டீங்க? ஆனால் நான் உங்களை கல்யாணம் செய்தால் உங்க எல்லாருக்கும் பிடித்த மாதிரி தானே இருக்கணும். வாய் பேசக் கூடாது. நீங்க சொல்றதை மட்டும் தான் செய்யணும். என்னோட கனவை விடணும். என்னால் என்னை மாற்றி இந்த பணக்கார வாழ்க்கைக்குள் நுழைய முடியாது கத்தினாள்.
இல்ல புகழ், நம்ம கல்யாணம் தாத்தா ஆசைக்காக இங்கே நடத்தலாம். ஆனால் அம்மா, அப்பாவுடன் தான் இருக்கப் போறோம். நான் முன் போல் பெரிய இடத்தில் இருந்தாலும் அது என் உழைப்பால் நடந்தது தான். புரிஞ்சிக்கோ..உன் கை கோர்த்து நடக்கணும், உன்னுடன் சேர்ந்து சாப்பிடணும், உன் அடாவடிதனத்தை ரசிக்கணும். உன்னை இன்னும் அதிகமாக காதலிக்கணும். “வில் யூ மேரி மீ?” என்று ராவண் தாலியை நீட்ட, புகழ் பாய் ப்ரெண்ட் கையை பிடித்து நின்றாள்.
ஏய், என்ன பண்றீங்க? என்ற சத்தத்தில் ஓனர் சார்..ஓடிருங்க என்று அவன் கையை விட்டு ராவண் பின் ஒளிந்து அவனை பார்த்து அவள் தலையில் தட்டி, அங்கிள் என்று ராவண் அப்பா பின் புகழ் ஒளிந்தாள்.
என்னோட புருசனை ..அடிக்கடி பணம் கொடுத்து வாங்கிட்டு போயிடுறா. எங்க இருக்குதுகன்னு தேடுறக்குள்ள போதும் போதும் என்றாகிறது.
கடனா? புருசனையா? பாட்டி கேட்க, யாரிடம் பணம் கொடுத்து இவரை வாங்கிட்டு வர்றா தெரியுமா?
யாரிடம்?
எங்க புள்ளகிட்ட..
புகழ் என்று குகன் சத்தம் கொடுக்க, அச்சோ..அவளை திட்டாதீங்க. அது வந்து காதல்ன்னு அவ பின்னாடி பசங்க சுத்துறனால பண்ணா. இன்று தான் குடும்பம் முன் நடிக்க அழைச்சிட்டு வந்தா?
புகழ் என்ன இது? அஜய் கேட்க, அவள் தோளை குலுக்கினாள்.
எவ்வளவு கொடுத்த?
ஆயிரம் ரூபாய்..அண்ணா..இந்தாங்க இதை வச்சிக்கோங்க என்று ஐநூறை கொடுத்து, எஞ்சாய் அண்ணா என்றாள்.
அப்ப அவன் உன்னோட பாய் ப்ரெண்டு இல்லையா? ராவண் கேட்க, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.
ராவா, புகழுக்கு எல்லாமே தெரியும். உன்னை சரி செய்ய தான் நாங்க இப்படி நாடகமாடினோம் அவன் அப்பா சொல்ல,
ஆமா அவளுக்கு ஏற்கனவே உங்களை பிடிக்கும் தாரிகா கூறினாள்.
அப்ப, வா..கல்யாணம் பண்ணிக்கலாம். அவள் முறைக்க, இப்ப என்ன ஆச்சு?
ஏன் மாமா? உங்களுக்கு போன் செய்யவே தோணலையா?
நீ தான் கோபத்தில் இருந்தேல்ல.
அதுக்கு? இப்ப தாலிய கட்டிய பின் நான் கோபப்பட்டால் விட்டுருவீங்களா?
இல்ல..இனி உன்னை விடவே மாட்டேன்.
அப்ப என்னோட கனவு?
அதை சொல்லலம்மா. வேற பசங்க பக்கம் போக விட மாட்டேன்.
எதுக்கு நல்ல நேரத்தில்? உட்காரு, பாரு சொல்ல இருவரும் அமர்ந்தனர். புகழ் கழுத்தில் ராவண் தாலி கட்ட, புகழ், மாமா என்று அழைத்தாள். அவன் அவளை பார்க்க, நீ கொடுத்ததை உனக்கு கொடுக்கணும்ல்ல..என்று அனைவர் முன்னும் முத்தமிட்டாள். தாத்தா நீ கூட என்னை ஏமாத்திட்டியே? ராவண் மனதினுள் எண்ணினான்.
அஜய் சார் ஆபிஸ்க்கு போறீங்களா? அர்ஜூன் கேட்க, அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. வீட்டுக்கு போறேன் என்றான்.
நாங்களும் வரலாமா? புகழ் கேட்க, ஏய்..நேற்று தான் திருமணம் முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள நீ எதுக்கு வர்ற? உன்னோட மாமா கோவிச்சிக்க போறார் என்றான் அஜய்.
புகழ் வேலைய ஆரம்பிச்சிட்டியா? பாட்டி கேட்க, அவர் காதில் அவள் ஏதோ கூறினாள்.
அவள் கூறியதை தாத்தாவிடம் கூறி அவர் முகத்தை பார்த்தார் பாட்டி. நாங்களும் குடும்பத்தோட வாரோம் என்றார் தாத்தா. அவர் மாறியதால் அவருக்கு மறுப்பு தெரிவிக்காமல் இப்பொழுதே எல்லாத்தையும் எடுத்து வைக்கிறோம் பெண்கள் உள்ளே சென்றனர்.
என்ன ஓரு ஆச்சர்யம்? எல்லாருமே வாறீங்களா? அஜய் கேட்க, ஏன் சார் எங்களை கூட்டிட்டு போக மாட்டீங்களா? குகன் கேட்க, அப்படியில்லை. திடீர்ன்னு எப்படி?
அப்பாவிடம் சொல்லிட்டு வரவா? என்று போனை எடுக்க, அவரிடம் நான் சொல்லிக்கிறேன் என்றார் சுந்தரம்.
சார், நீங்க..அதான் சொல்லிடுறேன் என்று அவர் செல்ல, கமலியும் பாட்டியும் அவனை புன்னகையுடன் பார்த்தனர்.
பாருவிடம் வந்த அஜய், இங்க ஏதோ விசித்தரமா இல்லை பாரு.
ஆமா..சார் அப்படி தான் இருக்கு மலை சொல்லிக் கொண்டே கீர்த்தி தோளில் கையை போட்டான். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. விஜய்யும் ஒரு பொண்ணுடன் இருந்தான்.
வெறுப்பேத்தாத டா அஜய் கோபமாக பேலஸிற்குள் சென்றான்.
போனை எடுத்த அர்ஜூன் பிளான் முடிந்தது. அவரெல்லாம் கண்டிபிடிக்க மாட்டார். அவரை யோசிக்க கூட விட மாட்டோம் என்று தாரி, காரு…போங்க தனியே போறார் என்றான் அர்ஜூன்.
சற்று நேரத்தில் ஜமீன் குடும்பம், சுந்தரம் குடும்பம், வக்கீல் சார் குடும்பம், அர்ஜூன் குடும்பம் என அனைவரும் கிளம்பி, மதிய நேரத்தில் தேவராஜ் வீட்டிற்கு வந்தனர்.
வாழைத்தோரணத்தை பார்த்து, என்ன நடக்குது? என்று அஜய் பதட்டமுடன் காரிலிருந்து இறங்க, சித்தப்பூ..என்று அஷ்வின் அவனிடம் ஓடி வந்தான்.
அசு..நீங்க எப்ப வந்தீங்க?
நேத்தே வந்துட்டோம் சித்தப்பூ..அவன் சொல்ல, அவன் அண்ணியும் அண்ணனும் வந்தனர்.
அண்ணா..என்ன நடக்குது?
முதல்ல உள்ள போ என்று அவன் வந்தவர்களை வரவேற்றான். முறைத்துக் கொண்டே அஜய் அவன் அப்பாவிடம் சென்று கத்தினான்.
எனக்கு தெரியாது. உன்னை விட சின்ன பசங்க எல்லாரும் கல்யாணம் பண்ணிட்டாங்க. உனக்கென்னடா? இதிலிருந்து தப்பிக்க பார்த்த உன்னோட அம்மாவை பிணமா தான் பார்ப்ப..என்று அவன் அம்மா மிரட்ட, அம்மா என்னால பிரகதியை மறக்க முடியாது.
அதெல்லாம் எனக்கு தெரியாது. நாங்க பார்த்த பொண்ண கட்டிக்கிட்டு தான் ஆகணும். இல்ல..என்று சேரை போட்டு ஏறினார்.
அம்மா..என்று கோபமுடன் அவன் அறைக்கு சென்று அழுதான்.
தியாவையும் அவள் பொண்ணையும் பார்த்து இருவரையும் அணைத்து காயத்ரி பேச, மறையும் கண்ணீருடன் அவளை பார்த்தான். தியா சத்யாவை விட்டு பிரிந்து தேவராஜ் வீட்டில் தான் இருந்திருப்பாள். எல்லாம் அஜய் ஏற்பாடு தான். அவளை பார்த்து அனைவரும் திகைத்தாலும்..காரு, அர்ஜூன் பாட்டி அவளிடம் மகிழ்ச்சியுடன் பேசினார்கள்.
பாப்பா, பேர் என்ன? என்று காயத்ரி தியாவிடம் கேட்க, சத்ய நாராயிணி. நாலு வயசாகுது அண்ணி.
பார்த்தீங்களா? பொண்ணு அவ புள்ளைக்கு புருசனோட பெயரையும் அவ மாமானார் பெயரையும் சேர்த்து வைத்திருக்காள் தேவராஜ் சொல்லிக் கொண்டே அவர்களிடம் வந்தார். தியா மகள் அவரை பார்த்து தாவி சென்றாள்.
தியா அனைவரையும் பார்த்து விட்டு அவரை அழைத்தாள்.
அங்கிள்?
என்னம்மா?
பேசணும் அங்கிள்.
வாம்மா. பேசலாம் என்று வெளியே சென்றனர்.
அங்கிள் அவரும் எல்லாரும் வருவாங்க. என்னால ஃபேஸ் பண்ண முடியாது. பயமாகவும், கஷ்டமாகவும் இருக்கு என்றாள்.
அதுக்கு?
அங்கிள், நான் உங்க பண்ணை வீட்ல அவங்க கிளம்புற வரை தங்கிக்கவா? கேட்க, அவர் மனதினுள் இந்த பொண்ணை அவனோட சேர்த்து வைக்கலாம்ன்னு நினைச்சா… சிந்தித்தவர்..
அது முடியாதும்மா. வர்ற எல்லாருமே அங்க தானே தங்குவாங்க.
நான் மட்டும் தானே அங்கிள்.
ரமாவுக்கு உதவ நீ இருப்பன்னு நினைச்சேன்..என்றார் வருத்தமுடன்.
சரிங்க அங்கிள் இருக்கேன்.
தியாம்மா ஒரு விசயம். எல்லார் முன்னும் அவங்கள பார்த்து ஏதும் இப்ப பேசிறாதம்மா. அவன் என்னோட தம்பி. கல்யாண நேரம் கஷ்டமா போயிடும்மா என்றார்.
என்னால எந்த பிரச்சனையும் வராது அங்கிள் என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு வந்து பார்த்தாள். ராக்கி, தியா பொண்ணு, காயூ பொண்ணு, அஷ்வின், அனு விளையாண்டு கொண்டிருந்தனர்.
ஆளாலுக்கு ஒரு வேலைய பாருங்க. நேரமாகுது. ஏழு மணிக்கு நிச்சயத்தட்டு மாத்தணும். சரியா செய்யணும் அஜய் அண்ணன் சொல்லிக் கொண்டிருந்தான்.
அர்ஜூன் தனியே வந்து போனில் சத்யாவிடம், சித்தப்பா…அஜய் சார் மேரேஜூக்கு வர்றீங்கல்ல?
இல்ல அர்ஜூன். இங்க வேலை நிறைய இருக்கு. அம்மா, அப்பா, பாப்பா எல்லாரும் சற்று நேரத்தில் வந்திடுவாங்க. சரியாக திருமண நேரத்திற்கு வந்துடுவேன் என்றான் அவன். தியா ஆசைப்படி கம்பெனியை பெரியதாக வளர்த்திருந்தான்.
சித்தப்பா..அர்ஜூன் பேச்சை நிறுத்தி மறையை பார்த்தான்.
மாமா, சித்தப்பா..? அர்ஜூன் சொல்ல, அர்ஜூன் தேவையில்லாத வேலையை பார்க்காத.
அவர் பொண்டாட்டி தானே மாமா? அர்ஜூன் சொல்ல, சத்யா அதிர்ச்சியுடன் அர்ஜூனை அழைக்க, அவன் போனை பிடுங்கிய மறை சிம்மை எடுத்துக் கொண்டு போனை அணைத்து அர்ஜூன் கையில் கொடுத்தான்.
அர்ஜூன்..போதும். உனக்கு தெரியாதா? அவனால் தான் பாட்டிக்கு கூட இதயம் பலவீனமானது. அதனால் தான் இறந்தாங்க. அவங்க சாவதற்கு முன் அவனிடம் தான் பேசுனாங்க. அவன் ஒரு வார்த்தை அவளை நல்லா பார்த்துக்கிறேன்னு சொல்லி இருந்தா. இப்ப பாப்பா கூட விளையாண்டுகிட்டு இருந்திருப்பாங்க. அவங்களுக்கு எல்லாமே தெரிஞ்சதுன்னு அவனுக்கு தெரியலைன்னாலும் சரின்னாவது சொல்லி இருக்கலாம் என்று மறை கண்கலங்கினார். இதை கவனித்த தியா.. பாட்டிக்கு எல்லாமே தெரியுமா? அவரிடம் பேசுனாங்களா? பின் தான் எங்களை விட்டு போயிட்டாங்களா? என்று கையிலிருந்த மோர் செம்பை கீழே விட்டாள்.
சித்தி..அர்ஜூன் பார்க்க, மறையும் அவளை பார்த்து அவளிடம் ஓடி வந்தான். அண்ணா..என்று தியா மறையை அணைத்துக் கொண்டாள். அர்ஜூனுக்கு என்ன செய்வதென்று புரியாமல் நின்றான்.
மறை கோபமாக, அவனை பத்தி எதுக்கு கேக்குற? நீ இங்கு பாதுகாப்பா இருந்ததால தான் அவனிடம் சாதாரணமாக பேசினேன். உனக்கு அவன் மீது கோபம் இல்லையா? கத்தினான்.
கோபமா? இல்லையே? அவர் கோபத்திலும் அர்த்தம் இருந்தது அண்ணா. அவர் என்னை நம்பவில்லை. நானும் நம்பும் படி இருந்ததில்லையே? கல்யாணத்துக்கு முன் ஜாலியா சுத்தி திரிந்தால் நம் கல்யாண வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகள் வரும் என புரிந்து கொண்டேன். என் மீதுள்ள தவற்றால் தான் அவரும் தவறு செஞ்சிருக்கார். என் தவறு வேற அண்ணா. ஆனால் அவர் என் மீதுள்ள காதலால் தான் இப்படி செய்தார். உடலில் காயத்தை ஏற்படுத்தியதில் எனக்கு காய்ச்சல் வந்ததே அன்று தான் முழுதாக அவரை புரிந்து கொண்டேன். அவர் கோபத்தை பயந்து பார்த்த நான் அவர் அந்த காய்ச்சல் சரியாகும் வரை என்னை தனியாகவே அக்கறையுடன் பார்த்துக் கொண்டார். அதற்கு பின் என்னை காயப்படுத்த பக்கம் கூட வரலை. இதிலே அவர் காதல் தெரிந்தது அண்ணா.
நான் வேறொருவருடன் இருப்பதை தாங்க முடியாமல் தகாத வார்த்தைகளை சினத்தில் கடித்து துப்பினார். அவர் தங்கை முன் சொல்லவும் எனக்கு கஷ்டமா இருந்தது. அப்புறம் தான் நிரூபித்தால் பிரச்சனை முடியும் என்று..அவள் கண்கலங்க போதும்மா. புரியுது..
அவனை வரச் சொல்லவா? மறை கேட்க, வேண்டாம்ன்னா.. எனக்கு பயமா இருக்கு. பாப்பாவை பார்த்து ஏதாவது சொல்லி விட்டால் என்னால தாங்க முடியாது. பாப்பாவுக்கு நாலு வயசாச்சு. அவளுக்கு நாம என்ன சொல்றோம்ன்னு எல்லாமே புரியும். அதனால பார்க்க வேண்டாம் என்றாள்.
தியா..இங்க வா. ரோஸை எங்க வச்சிருக்க? சத்தமிட்டுக் கொண்டே அஜய் அம்மா வந்தார். அவர் முன் கார் ஒன்று வந்து நின்றது.
வந்துட்டேன் அத்தை என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு அவர் பக்கம் செல்ல, காரிலிருந்து சத்யாவின் அம்மா, அப்பா, மூத்தவள் அவள் கணவன், சின்னவள் இறங்கினர்.
அத்தை என்ற பழகிய குரலை கேட்ட..சத்யா அம்மா சட்டென திரும்பி தியாவை பார்த்து, கண்ணீருடன் தியா..இங்க தான் இருக்கியா? என்று ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டார்.
அத்தை..என்று அவளும் அழுதாள். அண்ணி, சித்தப்பா வீட்ல தான் இத்தனை நாள் இருந்தீங்களா? என்று அவளை பார்க்க..
என்ன? மறை கேட்டான்.
தம்பியா? பாப்பாவா? தயங்கினாள்.
கண்ணை துடைத்து பாப்பா என்றாள்.
சாரிடா..அவன் இப்படி செய்வான்னு தெரியாம போச்சு. நீயாவது சொல்லி இருக்கலாம்ல. அவனை பிடிச்சு வச்சிட்டன்னு கோபத்துல தான் உன்னிடம் கோபமா பேசிட்டேன்.
தாரிகா, தியாவை தூக்கிக் கொண்டு வெளியே வர..பாட்டி என்று அஜய் அம்மாவிடம் தவ்வினாள். தியாவின் முகச்சாடை அப்படியே இருக்க..பாப்பக்கா..என்று சின்னவள் தியா பொண்ணை தூக்கிக் கொண்டு அவளிடம் வந்தாள்.
அம்மா என்று குழந்தை அவளிடம் தாவினாள்.
என்னையும் மன்னிச்சிருங்க அண்ணி. நான் அப்படி பேசி இருக்கக்கூடாது என்று தியாவை அணைத்தாள்.
வேலை நிறைய இருக்கு. சீக்கிரம் உள்ள வாங்க என்று மகிழ்வுடன் ரமா அவர்களை அழைத்தார்.
என் மருமக இங்க இருக்கிறத கூட சொல்லையே அக்கா?
நான் சொல்லி அவள் இங்கிருந்தும் ஓடி விட்டால்..என்று தியாவை பார்த்து, எல்லாத்தையும் எடுத்து வைம்மா என்றார்.
பாப்பா பெயரை கேட்ட சத்யா அம்மா, அப்பாவிற்கு மருமகளை பார்த்து பெருமையாக இருந்தது.
ஒரு நிமிசம்..என்று அவர்களிடம் வந்து, அவரிடம் நான் நல்லா பேசியதாக சொல்ல வேண்டாம் பயத்துடன் கூறினாள்.
எதுக்கு அண்ணி? மூத்தவள் கேட்க, மருமக சொல்றால்ல காரணம் இருக்கும் என்றார் அவன் அப்பா.
எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. என்னால அங்க இருக்க முடியலை. அதான் வந்தேன் என்று..சத்து..இவங்க உன்னோட பாட்டி, தாத்தா, அத்தை, மாமா..சொல்ல..
அம்மாவிடம் வந்த பாப்பா, அம்மா..எல்லாரும் வந்திருக்காங்க? ஆனா அப்பா எப்ப வருவாங்க? என்று கேட்க, அவள் கண்கள் கலங்கியது. வருவான் டா என்று தன் பேத்தியை அள்ளி கொஞ்சினார் நாராயணன். தியாவும் மற்ற பெண்களும் வேலையை கவனிக்க சென்றனர்.
அஜய் அறையில் சோகமாக இருக்க, அகில், கவின், இன்பா, இதயா, பிரதீப், தீனா, ஆதேஷ், புவி, ஜானு எல்லாரும் வந்தனர்.
ம்ம்..சொல்லுங்க சார், கோபத்துல..அபி கேட்க, அஜய் சார்..பை..பை..சீக்கிரம் தயாராகி வாங்க என்று கிண்டலாக கூறி விட்டு இன்பா செல்ல..
நமக்கு தெரிஞ்ச பொண்ணா இருக்குமோ? அதான் இன்பா இப்படி சொல் றா? அந்த பொண்ணிடம் பேசிக்கலாம். என்கேஜ்மென்ட் தான.. பார்த்துக்கலாம் என்று நீங்களும் போங்கடா..நான் தயாராகி வாரேன்.
ஓடி போயிட மாட்டேல்ல..பிரதீப் கேட்க, மாமா..நீங்க சாருடன் இருங்க. ஓடுனாலும் ஓடிருவாரு..துகிரா சொல்ல, நான் எங்கும் போகலை. அம்மா மிரட்டியது போதாதுன்னு பேசியே கொல்றீங்க. போங்கடா..என்றான் அஜய்.
சார்..
போங்க. நானே வாரேன் என்று அஜய் சொல்ல, அகிலும் கவினும் அறைக்கு வெளியே நின்றனர்.
பிரதீப்புடன் வந்த சத்யா..வேகமாக வேஷ்டி சட்டையில் உள்ளே நுழைந்தான். அவன் அப்பாவை பார்த்து தியா..எங்க இருக்கா? நான் இப்பவே பார்க்கணும் என்று சுற்றிலும் அவன் கண்கள் அலைந்தது.
அண்ணா..இப்ப வேண்டாம். அண்ணி இப்ப தான் தயாராக போயிருக்காங்க. நிச்சயம் முடியட்டும் பார்த்துக்கலாம். ஏதாவது பேசி கெடுத்துறாத.
ஆமாடா, அமைதியா இங்கேயே உட்காரு. அவர்கள் பேசினாலும் அவன் கண்கள் சுற்றிலும் தன் மனைவியை பார்க்க தான் துடித்தது.
அண்ணா…இங்க பாரு என்று சின்னவள் கூற, சும்மா இரு. நான் அவள் இருக்காளான்னு பார்க்கவாது செய்கிறேனே?
மச்சான் இங்க பாருங்க..என்று மூத்தவள் கணவன் அழைக்க, என்னது மாப்பிள்ள? என்று அவனை பார்த்தான். அவனை எட்டிக் கொண்டு..அப்பா என்று சத்யா காலை பிடித்துக் கொண்டாள் சத்து.
அவளை பார்த்து அதிர்ந்து, அய்யோ..என்று திரும்பிய தியா..அக்கா..மாமா லிப்ஸ்ட்டிக்கெல்லாமா போடுவாங்க? உங்க கன்னத்துல பதிஞ்சு இருக்கு தியா நேராக கூறி விட..
அண்ணா, லிஸ்ப்டிக் யூஸ் பண்றியா? கேட்டுக் கொண்டே அஜய் வர, அவன் பின் கவினும், அகிலும் எட்டி பார்த்தனர்.
அய்யோ..எல்லாரும் போங்க என்று அவன் அண்ணி முகத்தை மூட..தியா சிரித்துக் கொண்டே, சின்ன மாமா..செம்ம பேர் தான் போங்க. நீங்களும் உங்க பொண்டாட்டிக்காக லிப்ஸ்டிக் போடுவீங்களா? கேட்க,
நானே எரிச்சல்ல இருக்கேன். நீங்க வேற..என்று கவினை பார்க்க, என்ன சார் லிப்ஸ்டிக் வேணுமா? அகில் கேட்க,
வாயை மூடுங்கடா என்று அஜய் கத்தினான்.
தியா பயந்து நகர்ந்து அவன் அண்ணியை இடித்து விட, தியா கை அவன் அண்ணி கன்னத்தில் பட்டது.
ஏய்..போச்சு. என்னோட மேக் அப் எல்லாமே கலைந்து போச்சு. உன்னால பாரு. இப்ப உன்னை யாரு இங்க வர சொன்னா? என்று அவள் திட்ட,
புருசன் கூட இல்லாததால அவ எல்லாமே பண்றா? இல்லைன்னா இவ வேலை பார்ப்பாளா? கேட்டு விட, சத்யாவிற்கு கோபம் வந்தது. அவன் கையை அவன் அம்மா பிடித்து, அமைதியாக இரு என்றார்.
ஆமா..இவங்கள மாதிரி வேலை செய்யவெல்லாம் உங்களுக்கு தெரியாதே? நல்லா சாப்பிட தானே தெரியும் அஜய் சொல்ல..எல்லாரும் வேலைய பாக்குறீங்களா? என்று அவன் அண்ணன் தன் மனைவியை முறைத்து விட்டு, சாரிம்மா..அவ டக்குன்னு மனசுல நினைக்கிறத பேசிருவா. சாரி…என்று அவன் சொல்ல
புன்னகையுடன், பெரிய மாமா நேராகுது. முதல்ல எல்லாத்தையும் எடுத்து வண்டியில வையுங்க என்று தியா திரும்ப, சத்யா பாப்பாவை தூக்கிக் கொண்டு முன் வந்தான். அவனை பார்த்து மூச்சடைத்து நின்றாள்.
பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசித்து பேசுங்க என்று தியாவை பார்த்தான்.
மாமா, பாப்பா..என்று திக்கினாள்.
அவள் கோபப்படுவாள் என்று நினைத்த சத்யாவிற்கு குற்றவுணர்ச்சி. இதில் இவர்கள் பேச்சு வேற..
தியா திரும்பி..அஜய்யை பார்த்து நிதானமாகி, அத்தை உங்களை ரொம்ப நேரமா தேடுறாங்க நீங்க கிளம்புங்க என்று அவன் அண்ணனை பார்த்தாள். நானும் கிளம்புகிறேன் என்று அவர்கள் செல்ல, சத்யா அஜய்யை முறைத்துக் கொண்டு நின்றான். மீண்டும் சத்யா அருகே வந்த தியா, பாப்பா..இன்னும் தயாராகலை. நேரமாகுது..என்று அவனிடமிருந்து பாப்பாவை வாங்கினாள். அவன் அவள் கண்ணை பார்த்துக் கொண்டு, என்னை மன்னிச்சிருவியா? கேட்டான்.
அவனை தவிர்த்து சத்து, வா தயாராகலாம்.
அம்மா, அப்பா?
அப்பா தான்டா. ஐந்து நிமிடத்தில் தயாராகணும். பாப்பாவுக்கு புது டிரஸ் வேண்டாமா?
வேணும்.
தயாராகிட்டு அப்பாகிட்ட இருந்துக்கோ என்று அவனை பார்த்து விட்டு பிள்ளையை தூக்கி சென்றாள். செல்லும் அவளையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கணவன்.
மனம் கேட்காமல் பின்னே சென்றான். அவள் உள்ளே சென்று படுக்கையில் பாப்பாவை நிற்க வைத்து விட்டு, “கிவ் மீ எ ஹக் சத்து” என்று கையை நீட்டினாள். பாப்பா ஓடி வந்து அணைத்து,”லவ் யூ அம்மா” என்றாள். அழுது கொண்டே பிள்ளையை அணைத்து அவளை அவளே சரி செய்தாள். சத்யா கண்ணீருடன் தன் தியாவை பார்த்தான்.
அவன் தோளில் கை வைத்த அஜய் அம்மா, எதுக்குப்பா வெளிய நிக்குற? உள்ள போகலாமே? உன்னோட பொண்டாட்டி அறை தானே?
இல்ல பெரியம்மா..அவள்..சரி, இருங்க. நான் பேசிட்டு வாரேன் என்று உள்ளே சென்று, தியாம்மா. பாப்பாவை இன்னுமா தயார் செய்யலை? எல்லாம் என்ன தான் பண்ணுதுகளோ? அவர் திட்டிக் கொண்டிருக்க, சத்யா தங்கையும் கணவரும் அவனிடம் வந்து, வழிய விடு. நீ இங்கேயே இரு..என்று
அண்ணி, வரலாமா? என்று கேட்க, வாம்மா..பாப்பாவை தயார் செய். தியா..நீ என்னுடன் வா என்று அழைக்க, அத்தை ஒரு நிமிசம் என்று பாப்பாவிற்கான ஆடை, அணிகலனை கொடுத்து விட்டு..சமத்தா அத்தையிடம் மாத்திக்கணும். பார்த்துக்கோங்க என்று வெளியே வந்தாள். சத்யாவை பார்த்து அவள் நின்று அவனை பார்க்க,
நேரமாகுது, இங்க வா..என்று தியா கையை பிடித்து அஜய் அம்மா அழைத்து சென்றார். தன் மகள் இருக்கும் அறையை பார்த்து, தியா பின் ஓடினான் சத்யா.