அக்கா..அர்ஜூன் அண்ணா இருக்காங்களா? சக்கரை கேட்க, இல்லை. வெளிய போயிருக்கான் என்றாள்.
எதுக்குடா என் பேரனை கேக்குறீங்க? பாட்டி கேட்டார்.
அதுவா பாட்டி..அண்ணாகிட்ட தான் பேசணும் சக்கரை சொல்ல, அப்படி என்ன அவனிடம் பேசணும்? தாரிகா கேட்டாள்.
உனக்கு ஒரு தடவை சொன்னா கேட்காதா? அர்ஜூனிடம் தான் பேசணும் என்றாள் ஓர் குட்டிப் பொண்ணு. அனுவும் ஸ்ரீ அருகே வந்து நின்றாள்.
ஏய்..நான் உன்னோட பெரியவ..அக்கான்னு சொல்லு தாரிகா அந்த பொண்ணை அதட்ட, உனக்கு மரியாதை கொடுக்கணுமா? நீ அர்ஜூனோட தங்கையாமே? அவனிடம் பேசிட்டு மரியாதை கொடுக்கலாமான்னு யோசிக்கிறேன் அந்த பொண்ணு சொல்ல..
ஏய்..ஆழாக்கு மாதிரி இருந்துட்டு என்ன பேச்சு பேசுற? என்று தாரிகா அவளை விரட்ட அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். அர்ஜூனும் மற்றவர்களும் வந்து நின்றனர்.
அர்ஜூன், அந்த குட்டிப் பொண்ணை பிடி..என்ன பேச்சு பேசுறா பாரேன் என்று தாரிகா எல்லாரையும் பார்த்து விட்டு கவினை பார்த்துக் கொண்டே அர்ஜூனிடம் வந்து அவனை பார்த்தாள்.
என்னடா, ஏதும் பிரச்சனையா? தாரிகா கேட்க, அவன் அமைதியாக எல்லாரையும் பார்த்தான். கௌதம் வெளியே வந்து அர்ஜூனை பார்க்க, அவனும் கௌதமை பார்த்தான்.
அர்ஜூன் அண்ணா..என்று சக்கரை அவனிடம் வந்தான்.
அண்ணாவா?..என்று அந்த குட்டிப் பொண்ணு அர்ஜூனிடம் வந்து, விரலை நீட்டி
அர்ஜூன்..இன்று சத்யா அண்ணா ஃபங்சனுக்கு வர்றீயா? கேட்டாள்.
ஆமா, வாரேன். என்ன? அர்ஜூன் கேட்டான்.
நீ மறை அண்ணா ஃபங்சன்ல அந்த அக்காவிடம் லவ்வ சொல்றேன்னு எங்களது பிரோகிராமை செய்ய விடாமல் பண்ணிட்ட. இன்று சத்யா அண்ணா ஃபங்சன்ல ஏதாவது செஞ்ச பார்த்துக்கோ..என்று விரலை நீட்டி மிரட்ட, அர்ஜூன் புன்னகையுடன் அப்படி என்ன செய்யப் போறீங்க? என்று கேட்டுக் கொண்டே அந்த பொண்ணை தூக்கினான். அனு அர்ஜூனை முறைத்து பார்த்தாள்.
நாங்க செய்றத பார்க்க மட்டும் வர்றதா இருந்தா மட்டும் வா. இல்லை.. அர்ஜூன் உன் மானத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல..என்ற பொண்ணை பார்த்து சிரித்துக் கொண்டே, நான் ஏதும் செய்யும் நிலையில் இன்று இல்லை. நீங்க தாராளமாக கலந்துக்கலாம் என்று அவளை இறக்கி விட, அனு முறைத்துக் கொண்டே அவர்களிடம் வந்து கையை கட்டிக் கொண்டு அழகாக முறைத்துக் கொண்டு நின்றாள்.
ஏய்..அர்ஜூனை எதுக்கு பேர் சொல்லி கூப்பிடுற? அண்ணா..சொல்லு..நான் தான் அர்ஜூன்னு சொல்வேன் அனு சொல்ல..
ஏய் குட்டிப்பொண்ணு, நான் அர்ஜூன்னு தான் சொல்வேன். அர்ஜூன்..அர்ஜூன்..அர்ஜூன்..அர்ஜூன்..என்று சொல்ல..அனு அந்த பொண்ணை தள்ளி விட, இவ்வளவு நேரம் அனுவை ரசித்து பார்த்த அர்ஜூன் கோபமாக அனு சாரி சொல்லு…என்று அதட்டினான்.
அனு அழுது கொண்டே, போடா..என்று ரோட்டருகே ஓட எல்லாரும் அவள் பின் ஓடினர்.
அனு..ஓடாத..வண்டி வரும் என அர்ஜூன் செல்ல, அனுவை நின்று கொண்டிருந்த ஒரு டிராக்டர் இடிக்க வந்தது. அர்ஜூன் வேகமாக சென்று அனுவை பிடிக்க முயன்று தோற்றான். அனுவை டிராக்டர் ஏற்றும் சமயத்தில் அனுவை தாவி பிடித்த கௌதம் அனுவை அணைத்தபடியே கீழே விழுந்தான்.
விழுந்த கௌதமிடம் வந்த அர்ஜூன், கைகள் நடுங்க அனுவை தூக்கினான். கண்ணீருடன் அமர்ந்தான். கௌதம் கைகளில் சிராய்ந்து கன்னத்தில் லேசான கீறலுடன், டேய்..அவனை பிடிங்கடா என கத்தினான்.
வேலுவும் அவன் நண்பர்களும் அவனை விரட்ட, அவன் டிராக்டரில் இருந்து குதித்து வேகமாக ஓடினான். அவனை தவற விட்டனர். சார், வாங்க ஹாஸ்பிட்டல் போகலாமென்று அபியும் கவினும் அழைத்தனர்.
கௌதம் அர்ஜூனை பார்க்க, ஸ்ரீ..எழுந்திரு..எழுந்திரு..என்று சத்தம் கேட்க, எல்லாரும் அங்கே கவனிக்க அர்ஜூன் எழுந்து, டேய்..அவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போங்கடா. கை பெயினா இருக்கு போல என்று சொல்லி விட்டு அர்ஜூன் ஸ்ரீயிடம் ஓடினான்.
காருண்யா கௌதமை பார்த்து கண்கலங்க நின்று அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். புரிந்து கொண்ட கவினும் அபியும்..நாங்க ஃபங்சனுக்கு தயாராகணும். காருண்யா நீ டாக்டருக்கு தான படிக்கிற? நீ போ..
எனக்கு ஒன்றுமில்லை என்று கௌதம் நகர, காருண்யா அவனிடம் வந்து அவன் அடிபட்ட கையை பார்த்து விட்டு, எல்லாரையும் பார்த்தாள். ஸ்ரீயிடம் அனைவரும் இருக்க ஆதேஷை அழைத்து, எனக்கு டிரைவ் பண்ண தெரியாது. கொஞ்சம் கெல்ப் பண்றியா? கேட்டாள்.
சார், கார்ல ஏறுங்க என்றாள் காருண்யா. அவன் பேசாமல் இருக்க..நடந்து போனா..போயிட்டு வர நேரமாகும். நீங்க ஹாஸ்பிட்டலுக்கு வரலைன்னா. நான் வீட்டுக்குள்ளவே போக மாட்டேன் என்றாள். அவனாகவே அவன் அமர்ந்து கொள்ள பெரியத்தை காரில் ஏறினார். அவரை பார்த்துக் கொண்டே காருண்யாவும் ஏறினாள். ஆதேஷ் காரை கிளப்ப மூவரும் மூவரும் கௌதமிற்காக சென்றனர். காருண்யா கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே வர, கௌதம் அவளை பார்த்து, நான் தான் ஒன்றுமில்லைன்னு சொல்றேன்ல கோபமாகவே சொன்னான்.
பெரியத்தை அவனிடம், அவ அழணும்ன்னா அழட்டும். அதுக்கு கோபம் தேவையில்லை. நீங்க அமைதியா வாங்க தம்பி என்றார்.
ஹாஸ்பிட்டலில் சென்று மருந்து போட்டு வந்தான் கௌதம். அடி அதிகமெல்லாம் இல்லை. கீழே விழுந்தால் விழும் அடி தான். அவன் உள்ளே சென்ற போது போன் வர, நர்ஸ் போனை வெளியே இருந்த காருண்யாவிடம் கொடுத்தார்.
அந்நேரம் சுந்தரம் போன் செய்ய..அப்பா..நீங்க சாருக்கு கால் பண்ணி இருக்கீங்க? அழுது தோய்ந்த குரலில் கூற,
என்னம்மா வாய்சே சரியில்லை. என்னாச்சு? கேட்டார் சுந்தரம். அவளுக்கு அழுகை வர, வெளியே வந்த கௌதம் அவளிடம், என்னோட போனை நீ எதுக்கு எடுத்து வச்சிருக்க? திட்டிக் கொண்டே போனை பிடுங்கினான். தன் மகள் அழுகிறாள்? அவளுக்கு ஏதும் ஆகிவிட்டதோ? என்ற பதட்டமுடன் சுந்தரம் கேட்க கௌதமின் கோபமான பேச்சு பதட்டத்தை கோபமாக மாற்றியது.
போனை பார்க்காமலே, எதுக்கு கால் பண்ணிகிட்டே இருக்க? இதுக்கு மேல கால் பண்ணீங்கன்னா. அவ்வளவு தான். இந்த மிரட்டலெல்லாம் என்னிடம் செல்லாது என்று போனை வைத்து விட்டான். அழுது கொண்டிருந்த காருண்யா அவனிடம் வந்து, அப்பா..என்றாள்.
அவன் அதையும் கேட்காது. என்னோட போனை எதுக்கு நீ எடுக்குற? உன்னை அவங்க..என்று அவளருகே இருந்த பெரியத்தையை பார்த்து நிறுத்தினான். அவர் அவனை முறைத்துக் கொண்டிருந்தார்.
நீங்க இப்ப பேசியது நீங்க யாருன்னு நினைச்சு பேசுனீங்களோ? அவன் இல்லை.
கௌதம் காருண்யாவை பார்த்தான். என்னோட அப்பா தான் பேசினாங்க அவள் சொல்ல, செட்..என்றான். சுந்தரம் கோபம் சென்று சிந்தித்து, கௌதமை யாரோ மிரட்டுறாங்க? யாரோ இல்லை குணா தான் என்று மீண்டும் அவனுக்கு போன் செய்தார்.
கௌதம் போனை பார்த்து தயக்கமுடன் எடுத்தான்.
உனக்கு யார் கால் பண்ணா? எங்க இருக்க? கேட்டார். கௌதம் அமைதியாக இருந்தான். சொல்லுன்னு கேட்டேன்..
என்னாச்சு சார்? கேட்டுக் கொண்டே நந்து சுந்தரம் அருகே அமர்ந்தான்.
யாரும் கால் பண்ணலை. நான் தான் கொஞ்சம் டென்சன்ல இருந்தேன் சார். வீட்ல தான் இருக்கோம்..என்று கௌதம் கூற, நர்ஸ் இங்க வாங்க..இந்த பேசண்ட் ரொம்ப மூச்சு வாங்குறாங்க என்று ஒருவர் சத்தம் கொடுக்க, ஷ்..என்று பெருமூச்சு விட்டு அமர்ந்து தலையை அழுத்தமாக கோதினான்.
ஹாஸ்பிட்டல்ல இருக்கீங்களா? பாப்பா அழுத மாதிரி இருந்தது. அவளுக்கு ஏதும் ஆச்சா? கேட்டார்.
காருண்யாவை பார்த்துக் கொண்டே, நோ..சார், யாருக்கும் ஒன்றும் ஆகலை என்று அவனுக்கு அடிபட்டதை தவிர அனைத்தையும் கூறினான்.
அதான் எல்லாரும் நல்லா இருக்காங்களே? எதுக்கு ஹாஸ்பிட்டல்ல இருக்கீங்க? யாருக்கும் ஏதும் ஆகாமல் பாப்பா எதுக்கு அழணும்? என்று சிந்தித்த சுந்தரம் காருண்யா கௌதமை கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டது நினைவு வர,
உங்களுக்கு ஏதும் ஆச்சா? கேட்டார். அந்த பாப்பாவை பிடிக்கும் போது கீழ விழுந்திட்டேன். பெரிய அடியெல்லாம் இல்லை சார். காயம் மட்டும் தான். அதற்கும் மருந்து போட்டாச்சு. இப்ப கிளம்பிடுவோம். இங்க ஏதோ மேரேஜ் இருக்காம். எல்லாரும் வரணும்ன்னு சொன்னாங்க. போய் தயாராகணும். இப்பவே மணி ஐந்தாகப் போகிறது. நான் அப்புறம் கால் பண்றேனே சார்.
சரி..அப்புறம் பேசலாம். ஆனால் உங்களை மிரட்டுபவன் சாதாரண ஆள் இல்லை. நீங்க கவனமா இருங்க. இப்பவே உங்க அம்மா பாதுகாப்புக்கு ஆட்களை அனுப்புகிறேன் என்றார்.
“தேங்க்யூ சார்”.
இன்று கண்டிப்பாக நாம பேசணும். அதனால் எல்லாம் முடிந்து இரவு எவ்வளவு நேரமானாலும் கால் பண்ணுங்க என்றார்.
ஓ.கே சார் என்று போனை வைத்த கௌதம் கிளம்பலாமா என்று பெரியத்தையிடம் கேட்க, காருண்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆதேஷ் அவளிடம் வந்து, சிஸ்டர் கிளம்பலாமா? கேட்டான்.
வாங்க போகலாம் என்று பெரியத்தை சொல்ல..நால்வரும் கிளம்பினர்.
அனுவை அவன் பாட்டியிடம் கொடுத்த அர்ஜூன் ஸ்ரீயை தூக்கி உள்ளே சென்று சோபாவில் கிடத்தினான். அஞ்சனாம்மா…தண்ணீர் எடுத்து வர, அதை வாங்கி கமலி ஸ்ரீ மீது தெளித்தார். அவள் கண்விழித்து பார்க்கும் போது அர்ஜூன் கையில் அனு அழுது கொண்டிருந்தாள். நிவாஸ் பதட்டமுடன் ஸ்ரீயை பார்த்துக் கொண்டிருந்தான்.
அர்ஜூன் ஸ்ரீயை பார்த்து விட்டு குடிக்க தண்ணீர் கொடுத்தான். அனுவின் அழகான சிறு கண்ணிலே கண்ணீர் தேங்கி இருக்க, தாரிகா அனுவை தூக்க..இதோ பாரு பாப்பா ஏஞ்சல் எழுந்திட்டா என்று ஸ்ரீயை காட்ட, அனு ஸ்ரீயிடம் தாவினாள். ஸ்ரீ தலையை பிடித்துக் கொண்டு முடியாமல் மீண்டும் படுத்தாள்.
ஸ்ரீ, என்ன செய்யுது? நிவாஸ் அவளருகே வந்தான்.
ஒன்றுமில்லை நி..நி..நிவி..மெதுவாக கண்களை மூடினாள். அவன் பதட்டமாக அவள் கன்னத்தை அடித்தான்.
தம்பி, நகருங்க என்று பாட்டி கமலியிடம் சாறு ஒன்றை கொடுத்தார். அவர் ஸ்ரீயிடம் வந்து, எலுமிச்சை சாற்றை குடிக்க கொஞ்ச கொஞ்சமாக புகட்டினார். கேரியும் அவன் ஆட்களும் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீ கண்ணை விழித்து, ஆன்ட்டி நான் கொஞ்ச நேரம் தூங்கவா? மெதுவாக கேட்டாள்.
நீ தூங்கு. உன்னை யாரும் தொந்தரவு செய்ய மாட்டாங்க என்றார். ஸ்ரீ அர்ஜூன் அனுவை பார்த்தாள். அனு அழுகை கேட்டு தான் விழித்திருப்பாள். இருவரையும் கண்ணசைத்து அழைத்தாள். அர்ஜூன் அவளருகே வந்து அமர்ந்தான். அனுவை பார்த்த ஸ்ரீ அவள் நெற்றியில் முத்தமிட்டு ஏதும் பேசாமல் அர்ஜூனை பார்த்துக் கொண்டே கண்ணை மூடினாள்.
எல்லாரும் கிளம்புங்க. நான் என் பேத்தியை பார்த்துகிறேன் என்றார் விசாலாட்சி பாட்டி. அனைவரும் பார்த்துக் கொண்டு ஒவ்வொருவராக நகர, அர்ஜூன் அனுவுடன் அங்கேயே இருக்க, நிவாஸூம் ஸ்ரீயை பார்த்துக் கொண்டே நின்றான்.
இருவரையும் பார்த்த தாரிகா நிவாஸை இழுத்து சென்றாள். அர்ஜூன் நீயும் போகணும். பாப்பாவுடன் போயிட்டு வா…
இல்ல பாட்டி. நான் அவளுடன் இருக்கேன்.
போன்னு சொன்னேன் என்று அவர் சத்தமிட, அவனும் அனுவுடன் ஸ்ரீயை பார்த்துக் கொண்டே சென்றான். நிவாஸ் தாரிகாவை திட்டிக் கொண்டிருந்தான். அர்ஜூன் நின்று அவர்களை கவனித்தான்.
அவ தூங்க எழுந்திருவா? அதுக்குள்ள நாம போயிட்டு வந்துடலாம் தாரிகா சொல்ல, நீ என்ன நினைச்ச? எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு. அவள் மயங்கி இருந்தால் எழுந்த கொஞ்ச நேரத்தில் சரியாக இருக்கும். அவள் உடல் சரியில்லை தான். ஆனால் ஸ்ரீ அவள் உடல் நலத்தை பற்றி ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கு என்று அழுதும் கத்தினான் நிவாஸ்.
நீ எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற? அர்ஜூன் அவர்களிடம் வந்தான்.
அர்ஜூன், இதுக்கு முன் அனு அழுதாலே பதறி எழுந்து ஓடுவாள். ஆனால் இப்ப அனு பக்கத்தில் அழும் போது தூக்க கூட முடியவில்லை. அர்ஜூன் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவளுக்கு ஏதும் ஆகாதுல்ல..என்று நிவாஸ் அழுது கொண்டே அவனை அணைத்தான்.
அர்ஜூனும் கண்ணீருடன், அவளுக்கு ஏதும் ஆகாது. ஏதும் ஆக விட மாட்டேன் என்று அவனும் அணைத்தான். தாரிகா இருவரையும் பார்த்து கண்ணீருடன் அவர்களை அணைத்துக் கொள்ள, கௌதமும் மற்றவர்களும் உள்ளே வந்தனர்.
ஸ்ரீயை பார்த்த காருண்யா, இவளுக்கு என்ன ஆச்சு? பதறி வந்தாள். ஒன்றுமில்லைம்மா. மயங்கிட்டா. அவள் ஓய்வெடுக்கட்டும். நீங்க எல்லாரும் தயாராகுங்க என்றார். ஆதேஷ் வந்த வழியே செல்ல. மற்றவர்கள் உள்ளே செல்ல கௌதமும் காருண்யாவும் அர்ஜூன், நிவாஸ், தாரிகாவை பார்த்து நின்றனர்.
தாரிகா அனுவை வாங்கிக் கொண்டு, அர்ஜூன்..எனக்கும் பயமா இருக்கு. நான் உன்னிடம் ஏற்கனவே சொன்னேன்ல. அவ ரொம்ப நேரம் தூங்குறா. சரியா சாப்பிட மாட்டேங்கிறா. இப்ப மயக்கத்தால எழ கூட மாட்டேங்கிறா. ஜூஸ் குடிச்சால்ல எழுந்திருக்கணும்ல. ஒரு நிமிசம் கூட உட்காரலை. உடனே படுத்திட்டா. அர்ஜூன் என்னன்னு பாருங்கடா.
நீ சொன்னதை தேவ் சார் அப்பாவிடம் கேட்டேன் தாரி. மன அழுத்தத்தால் கூட அவள் தூங்க நினைக்கலாம் என்றார்.
இல்ல அர்ஜூன். நிவி சொல்றது சரி தான். எனக்கும் உடல் சோர்வால் மயக்கம் வரும். ஆனால் இந்த அளவு இருக்காதே!
ரெண்டு பேரும் சும்மா இருங்க. என்னை பயமுறுத்தாதீங்க.. அர்ஜூன் தலையில் கை வைத்து அமர்ந்தான். இல்லடா..பயமுறுத்தலை. உனக்கே தெரியும் அவளுக்கு ஏதாவது தோன்றினால் கூட சொல்ல மாட்டாள். எனக்கு பயமா இருக்கு. அதான் சொன்னேன். எனக்கு அவளையும் உன்னையும் விட்டால் யாருமில்லை என்று நிவாஸ் அழுதான்.
ஹே..நிவி. ஸ்ரீக்கு ஒன்றுமிருக்காதுடா. நம்ம கௌதம் சாரை பார்க்க சொல்லலாம். இப்ப அவள் தூங்கட்டும். நாளை பார்க்கலாம் அர்ஜூன் சொல்ல..
அர்ஜூன் நாளைக்கு வேண்டாமே? இப்பவே பார்க்கலாமா? ரொம்ப பயமா இருக்கு அர்ஜூன். எனக்கு பிடிச்ச யாரும் என்னுடன் இருக்க மாட்டேங்கிறாங்க என்று நிவாஸ் அழ, இருவருமே அவனை அணைத்துக் கொண்டனர்.
கௌதம் இவர்கள் முன் வந்து, என்ன பேசுறீங்க? என்று கேட்டான். அர்ஜூன் கௌதமை பார்த்து விட்டு நிவாஸை பார்த்து, நீ உன்னோட அறைக்கு போ நிவி என்றான்
அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளாது கௌதமை பார்த்தவுடன், கண்ணீரை துடைத்து விட்டு கௌதம் கையை பிடித்து ஸ்ரீயிடம் அழைத்து வந்தான். அவனும் நிவாஸ் இழுப்பிற்கு வந்து நின்றான்.
சார், அவளுக்கு என்னன்னு பாருங்க என்று நிவாஸ் சொல்ல, நான் உன்னை தயாராக சொன்னா? என்ன இவளை பார்க்கணும்? தூங்கி எழுந்தால் சரியாகி விடுவாள் பாட்டி கூற,
பாட்டி, சும்மா இருங்க என்று கோபமாக கூறிய நிவி..ப்ளீஸ் சார். என்னோட அக்காவுக்கு என்னன்னு பாருங்க என்று சொல்ல..நிவி அவள் விழிக்கட்டும். பார்க்கலாம் அர்ஜூன் சொல்ல..
அர்ஜூன்..உனக்கு பயமே இல்லையா? நிவாஸ் சத்தமிட, அர்ஜூன் அவனை தனியே இழுத்து சென்றான். கௌதம் ஸ்ரீயை பார்த்து விட்டு, எவ்வளவு நேரம் மயக்கமா இருக்கா? என்று பாட்டியிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவரிடம் பேசி விட்டு அர்ஜூனை பார்க்க வந்த கௌதமும், காருண்யாவும் நிவாஸ் அர்ஜூனை அழுது கொண்டே அடிப்பதை பார்த்து தடுக்க சென்றனர். ஏற்கனவே நிவாஸை தாரிகா அனுவை வைத்துக் கொண்டே சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்.
ஏய்..என்ன பண்ற? காருண்யா நிவாசை திட்டிக் கொண்டே அர்ஜூனிடம் வந்து அவனை பார்த்தாள். அவனும் அழுது கொண்டிருந்தான்.
அர்ஜூன், எதுக்கு அழுற? காருண்யா கேட்க, ஏன்டா.. இத்தனை நாள் எங்கடா போய் தொலைஞ்ச? இப்ப நீ உதவி செஞ்சாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாள் தெரியுமா? அவங்க பக்கத்துல இருந்து அவ கஷ்டப்படுறத என்னால் பார்க்க தான் முடியுது. என்னால ஏதும் செய்ய முடியலை. அவளை என்னால் பார்த்துக்க முடியலை. நீ பார்த்துப்பன்னு நினைச்சா. நீ சாதாரணமா நாளைக்கு பார்க்கலாம்னு சொல்ற? அர்ஜூனை நிவாஸ் அடித்து அழுது தீர்த்தான்.
கதவை அடைத்த கௌதம், நிறுத்து போதும். அவளை நான் பார்க்கிறேன். உன்னோட அக்காவுக்கு ஏதும் ஆகாது. இப்பவே பார்க்கிறேன். அமைதியா இரு. முதலில் இருந்து நடந்த எல்லாத்தையும் சொல்லு. அவள் கோமாவில் இருந்ததும், அவளது இப்பொழுதுள்ள கஷ்டம் மட்டும் தான் தெரியும். சொல்லு எல்லாத்தையும் சொல்லு. அவளை எப்படி ட்ரீட் பண்ணலாம்ன்னு பார்க்கலாம் என்று கௌதம் சொல்ல, நிவாஸ் சிறுபிள்ளை போல் ஓடி வந்து அவனை அணைத்தான். இவனையா நாம் பயன்படுத்த நினைத்தோம்? என்று மனதினுள் எண்ணிய கௌதம் சொல்லு என்று அவனை விலக்கி விட்டு அமர்ந்தான். நிவாஸ் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பிக்க, நிவாஸை நிறுத்திய அர்ஜூன் தாரிகாவிடம் அனுவை வெளிய தூக்கிட்டு போ என்று கையை காட்டினான். அவளும் புரிந்து கொண்டு கண்ணீருடன் வெளியே சென்றாள். நிவாஸ் அனைத்தையும் சொல்ல, ப்ளட் டெஸ்ட் எடுத்தா என்னன்னு தெரியும் என்று எழுந்த கௌதம் காருண்யாவை பார்த்தான்.
சார், நான் யாருக்கும் ஊசி கூட போட்டதில்லை என்றாள்.
வா..என்று அழைத்தான். அர்ஜூனிடம் சில பொருட்களை வாங்கி வர சொன்னான். அவன் வாங்கி வரவும் ப்ளட் எடுத்து அவனே ரிப்போட்டை தயார் செய்கிறேன். ஆனால் இப்ப முடியாது. நாளை தான் ரிப்போர்ட் தர முடியும். வெயிட் பண்ணுவேல்ல நிவாஸிடம் கேட்டான்.
நிவாஸ் தலையை மட்டும் அசைத்து ஸ்ரீ அருகே அமர்ந்து கொண்டு, எல்லாரும் போயிட்டு வாங்க. நான் ஸ்ரீயுடன் இருக்கேன் என்றான்.
இல்லை நிவி. நானும் இருக்கேன் அர்ஜூன் சொல்ல, சாரி அர்ஜூன் கோபத்துல அடிச்சிட்டேன். இதுக்கு காரணமானவன் மட்டும் என்னிடம் சிக்கட்டும் என்று அவன் சொல்ல, யாராக இருந்தாலும் உன்னால கொல்ல முடியுமா? கௌதம் கேட்க, அர்ஜூன் பயத்துடன் கௌதமை பார்த்தான்.
எவனா இருந்தா என்ன? என்னோட குடும்பத்தையே அழிச்சிருக்கான். சும்மா விடுவேனா? அர்ஜூன் தான் யாருன்னே சொல்ல மாட்டேங்கிறான். நான் அவனை சும்மா விட மாட்டேன் என்றான் நிவாஸ்.
அர்ஜூனை பார்த்த கௌதம், நேரமாகுது தயாராகி வா..என்றான். பின் இருவரும் காருண்யாவை பார்த்தனர்.
நானும் உன்னுடன் இருக்கேன்ப்பா. அவனை சும்மா விட கூடாது அர்ஜூன் பாட்டியும் சேர்ந்து கொள்ள மூவரும் உள்ளே சென்றனர்.
பர்வதம் யாரு வந்திருக்கா பாரு என்று ஒரு பாட்டி சத்தமிட, பர்வதம் பாட்டியும் தியாவும் வெளியே வந்து பார்த்தனர். வெற்றியும் மீனாட்சியும் நின்று கொண்டிருந்தனர்.
உள்ள வாங்க..என்று இருவரையும் அழைக்க வெற்றியும் மீனாட்சியும் உள்ளே வந்தனர். காயத்ரிக்கு செய்தது போல் தியாவிற்கும் ஆசி வழங்கினர். தியாவும் தயாராகி இருந்தாள். மீனாட்சி அவளிடம், இதுக்கு முன் நீ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இனி பொறுப்பா நடந்துக்கணும். உன்னுடைய பழைய வாழ்க்கையை தூக்கி போடு. புதுசா வாழ்க்கையை ஆரம்பிம்மா. நீ போற இடத்துல எல்லாருக்கும் உன்னை பிடிக்கும் படி நடந்துக்கோ..என்று அதிகமாக அறிவுரை வழங்க, பாட்டியோ தியா எதிர்த்து ஏதும் பேசி விடுவாளோன்னு பயந்து அவளை பார்த்துக் கொண்டார். அவள் அமைதியாக சரி என்று தலையாட்டிக் கொண்டிருந்தாள். அவள் பாட்டி அவளை ஆச்சர்யமாக பார்த்தார். அவர்கள் சென்றனர். அவளிடம் கேட்டு பழைய படி பேச ஆரம்பித்து விடுவாளோன்னு பர்வதம் பாட்டி அமைதியானார்.
அனைவரும் தயாராகி கீழே வந்தனர். அர்ஜூன் அனுவுடன் வந்தான். காருவை எங்க? இன்னுமா அவள் வரலை கமலி கேட்டுக் கொண்டே படியேறியவர். அவளை பார்த்து அசந்து நின்றார். மஞ்சள் நிற ரவிக்கையுடன் பிங்க் நிற தாவணியில் நகைகளுடன் அழகாக வந்தாள். பக்கத்து அறையிலிருந்து டார்க் பிங்க் நிற சட்டையும் ஜூன்ஸூமாக கௌதம் வந்தான். அவனும் காருண்யாவை பார்த்து..பார்த்துக் கொண்டே நிற்க, இந்த பக்கம் தாரிகா சிம்பிள் மஞ்சள் நிற லெஹெங்காவில் அலங்காரமுடன் வந்து நின்றாள். அவர்களை பார்த்து மகிழ்வுடன் இருக்க, காருண்யா, தாரிகா முகம் சோகமாக இருந்தது.
கௌதம் காருண்யாவை பார்த்துக் கொண்டிருக்க, அவனுக்கு போன் வந்தது. அவளும் அவனை பார்க்க, அவன் போனை எடுத்து, சொல்லுங்கம்மா..என்று கீழே இறங்கினான். ஜோடி நல்லா தான் இருக்கு என்று பாட்டி சொல்ல,காருண்யா அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்.
கமலி அவளிடம் வந்து, காரு..அழகாக இருக்க என்று சீக்கிரம் வாங்க. கிளம்பணும் என்றார். அர்ஜூன் ஸ்ரீயை பார்த்து விட்டு நிவாசை பார்த்தான். அவன் உட்கார்ந்து கொண்டே தூங்க, அம்மா..பாப்பாவை பிடிங்க என்று அனுவை அஞ்சனாவிடம் கொடுத்து விட்டு..நிவாசை தூக்க..
டேய், என்ன பண்ற? பாட்டி கேட்டார்.
அவனை அறையில் விட்டு வாரேன் என்று நிவாசை அர்ஜூன் தூக்க..அவன் விழித்தான். அர்ஜூன் என்ன பண்ற? பதறினான்.
அர்ஜூன் அவனை இறக்கி விட்டு, நீ அறையில போய்..தூங்கு என்றான்.
இல்ல அர்ஜூன். நான் தூங்கலை. அக்காவுடன் இருக்கேன்.
சரி, அவளோட அறையில இருந்து அவளை பார்த்துக்கோ..பாட்டி நீங்களும் கிளம்புங்க என்றான் அர்ஜூன்.
தனியா எப்படி பிள்ளைங்கள விட்டுட்டு வரது? பாட்டி கேட்டார்.
நான் பார்த்துக்கிறேன்ம்மா. நீங்க குடும்பமா போயிட்டு வாங்க என்றார் அவர். அர்ஜூனுக்கு ஒரு மாதிரி ஆனது. அவனுக்கு ஸ்ரீயையும் நிவாசையும் விட்டு போக மனமில்லை. அர்ஜூன் ஸ்ரீயை அவள் அறைக்கு தூக்கி செல்ல..நிவாஸூம் தாரிகாவும் பின்னே சென்றனர். கௌதம் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏதும் பிரச்சனைன்னா உடனே கால் பண்ணு என்று நிவாசிடம் கூறி விட்டு ஸ்ரீயை தொட்டு பார்த்தான்.
அர்ஜூன், நான் பார்த்துக்கிறேன். ஏதுமென்றால் கால் பண்றேன் என்று நிவாஸ் சொல்ல, கைக்கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்த கௌதமும் அவர்கள் அறைக்கு சென்றான். எல்லாரும் அவன் பின் செல்ல..காருண்யாவும் சென்றாள்.
உள்ளே சென்ற கௌதம் நிவாசிடம், இன்னும் அரை மணி நேரத்தில் ஸ்ரீ விழிக்கிறாளான்னு பாரு. இல்லை எனக்கு கால் பண்ணு வாரேன் என்றான்.
ஏம்பா, அவ தூங்கட்டும் அஞ்சனா கேட்க, ஆன்ட்டி மயக்கம் வந்த பின் யாராவது இவ்வளவு நேரம் தூங்கி பார்த்திருக்கீங்களா? அவளுக்கு ப்ளட் எடுத்திருக்கேன். பார்க்கலாம். ஆனால் ஸ்ரீ ரொம்ப நேரம் தூங்குவது நல்லதல்ல. வாங்க நாம கிளம்பலாம்.
என்னப்பா, இப்படி சொல்ற? அவளுக்கு ஒன்றுமில்லையே? கமலி கேட்க, ஒன்றுமிருக்காதுன்னு தான் நினைக்கிறேன் என்று அர்ஜூனை பார்த்தான்.
வாங்க போகலாம் என்று அர்ஜூன் அழைக்க, அர்ஜூன்..ஏஞ்சல் வரலையா? அனு கேட்டாள்.
அனும்மா..ஸ்ரீக்கு காய்ச்சல் அடிக்குதே! தாரிகா சொல்ல, கமலியிடமிருந்து இறங்கி அனு ஸ்ரீயிடம் அமர்ந்து அவள் கழுத்தை தொட்டு பார்த்து, காய்ச்சல் இல்லையே? என்றாள்.
வந்திடலாம் என்ற அர்ஜூன் அவளை தூக்கி வெளியே வர, மற்றவர்களும் வந்தனர். அனைவரும் கிளம்ப பாட்டியும் அவர்களுடன் சேர்ந்து கிளம்பினார்.
ஆதேஷ் வீட்டிற்கு செல்லும் போது மணி ஆறை தொட்டிருக்கும். அவன் டீ சாப்பிட்டு விட்டு அமர, வெற்றியும் மீனாட்சியும் உள்ளே வந்தனர். அவர்களை பார்த்த ஆதேஷ்..எல்லா பக்கமும் பார்த்தான்.
மாமா, ஜானுவ எங்க சத்தத்தையே காணோம் கேட்டான். நான் இருப்பது இவன் கண்ணுக்கு தெரியாது..போன இடத்துல ஏதாவது வாங்கிட்டு வந்திருக்கலாம்ல துகிரா அவனருகே வந்தாள்.
வாங்காமல் வருவேனா? ஜானு வந்த பின் இருவருக்குமே தாரேன் என்றான்.
வெற்றி அவனிடம் வந்து அமர்ந்து, மாப்பிள்ள..ஜானு என் மேல செம்ம கோபத்துல இருப்பா. இன்று நான் அவங்க ஸ்கூலுக்கு போனேன் என்று அவர் கூற, ஆதேஷ் சிரித்தான்.
மாமா, அதனால் எதுக்கு நேரமாக போகுது?
அதனால நேரமாகலம்மா. அவள் புவனாவோட படிக்க போயிருக்கா என்றார்.
படிக்கவா? ஆதேஷ் புன்னகையுடன் துகி வாரீயா? அவள் எப்படி படிக்கிறான்னு பார்த்துட்டு வரலாம் என்று அழைத்தான்.
இல்லை. நீ போயிட்டு வா. நான் அத்தை, மாமாவுடன் இருக்கேன். தீனாவை பார்த்துக்கவும் செய்யணும் என்றாள்.
நீ போகணும்ன்னா போயிட்டு வாம்மா மீனாட்சி சொல்ல, இல்லத்தை நான் போகலை.
நான் வாரேன் என்று ஆதேஷ் அப்பா ஆதேஸூடன் வந்தார்.
அவங்க வீடு சின்னதா இருக்கும். உங்களுக்கு அன்கம்பர்டபுல்லா இருக்க போகுது வெற்றி சொல்ல, நம்ம வீட்டு பிள்ளைகிட்ட இதெல்லாமா பார்ப்பாங்க? என்று ஆதேஷ் அப்பா ஆதேஷை பார்த்தார்.
எனக்கு ஏதும் பிரச்சனையில்லை. நானும் என் சீனியரை பார்க்கணும் என்றான்.
சீனியரை பார்க்கணுமா? ஜானுவை பார்க்கணுமா? துகிரா கேலி உரைக்க, அனைவரும் நகைத்தனர். வாங்கப்பா போகலாம் என்று அவரை இழுத்து சென்றான்.
இருவரும் புவனா வீட்டிற்கு வெளியே நிற்க, தருண் அவர்களை பார்த்து வெளியே வந்தான். வாங்க சார்..அவன் அழைக்க, சீனியர் அமைதியா இருங்க. ஷ்..என்று ஆதேஷ் மெதுவாக உள்ளே சென்று மறைந்து நிற்க, அவன் அப்பாவும் உள்ளே வந்து அவன் பின் நின்றார்.
ஆதேஷ், என்ன செய்றீங்க? தருண் கேட்க, ஷ்..என்ற ஆதேஷ் கையில் போனை எடுத்து ரெக்கார்டு செய்ய ஆரம்பித்தான். புவனாவும் துருவனும் இங்கிலீஸ் புத்தகத்தை வைத்து சொல்லிக் கொண்டிருக்க, ஜானு தூங்கி விழுந்தாள். துருவன் அவள் தலையில் அடியை போட,..டேய்..தூக்கமா வருது. உங்களுக்கு இங்கிலீஸ் புக்கை பார்த்தால் தூக்கம் வரலையா? எனக்கு புத்தகத்தை பார்த்தாலே தூக்கம் வருது. இதுல அப்பா..வேற கோர்த்து விட்டார்.
போச்சி..போச்சி..என்று ஜானு புலம்பிக் கொண்டே புவனா மீது சாய, ஜானு..தூங்கியது போதும்..புலம்புறதுக்கு பதில் படிக்கலாம்ல..
நான் படிக்கமாட்டேன்னா சொன்னேன். புக்கை பார்த்தாலே தூக்கம் வருது புவி. நான் என்ன செய்ய? ஜானு கேட்க,
காலையில இருந்து ஆயிரம் முறையாவது புலம்பி இருப்ப. பிரதீப் அண்ணா..இதை முதல்லே செஞ்சிருக்கணும் என்றான் துருவன்.
ஏன்டா? ஜானு அவன் தலையில் அடிக்க, தலையில் கை வைக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத..கோபப்பட்டான்.
புவி உனக்கு தெரியுமா? ஒருவன் இன்று பள்ளியில் சண்டை போட்டு பிரச்சனை செய்தான்.
துருவா, என்ன பண்ண? புவனா கேட்க, அவன் ஜானுவை முறைத்தான்.
ஜானு, நீ இப்படியே இருந்த ஆதேஷ் அண்ணாவுக்கு உன்னை பிடிக்காமல் போயிடும். அவரும் உன்னை விட்டு போக போறார் பாரு..என்று சினத்தில் சொல்ல, மாமா அப்படில்லாம் போக மாட்டாங்க என்றாள்.
அப்ப துளசி எதுக்கு போனா? துருவன் கேட்க, புவனா, ஜானு பேச முடியாமல் அவனை பார்த்தனர்.
அவள் இருக்கும் போது பேச கூட மாட்ட. இப்ப பாரு அவள பத்தி நினைச்சு நீ எக்சாமை கோட்டை விட போற ஜானுவும் கோபமாக பேசினாள். துருவன் சினமுடன் எழ, இடிக்க போகுதுடா என்று புவனாவும் ஜானுவும் எழுந்து அவன் தலைக்கு மேல் கை வைக்க, ஜானு தலைக்கு மேல் ஆதேஷ் வைத்தான்.
ஜானு அவனை பார்த்து, மாமா..என்று அவனையே பார்க்க, இங்க தான் செல்ப் இருக்குல்ல இங்க எதுக்கு உட்கார்ந்திருக்கீங்க? ஆதேஷ் கேட்டான்.
இது எங்களுக்கு ராசியான இடம் என்று புவனா துருவனை பார்த்தாள்.
நான் கிளம்புகிறேன் என்று தருணையும் ஆதேஷ் அப்பாவையும் பார்த்தான்.
நில்லு, என்ன நடந்தது? தருண் கேட்டான். துருவன் அமைதியாக நின்றான். ஆதேஷை பார்த்துக் கொண்டிருந்த ஜானு தருணிடம் அண்ணா..அவங்க துளசிய பத்தி தப்பா பேசினாங்க. இப்ப துருவனையும் என்று அவனை பார்த்தாள்.
உன்னை யார் கெல்ப்புக்கு பேச சொன்னது? துருவன் கோபப்பட, இவ்வளவு நேரம் நல்லா தான இருந்த துருவா? புவனா கேட்டாள்.
நான் நல்லா இல்லை புவி என்று அவன் நகர்ந்தான். தருண் அவனை நிறுத்தி, எதுக்கு இவ்வளவு கோபம்? என்று துருவனை அணைத்தான்.
துளசிய பிடிச்சிருக்குண்ணா சொல்லிடு. உனக்கு நேரம் இருக்கும் போது.. நீயே உன்னை வீடியோ எடுத்து ஜானுவுக்கு அனுப்பு. ஜானுவுக்கா? பிரதீப் அண்ணாவுக்கா? துருவன் கேட்க,
நான் மாமாவிடம் பேசுறேன். நீ அனுப்பு என்றான் ஆதேஷ்.
அப்படி அனுப்பி என்ன செய்றது? கோபமுடன் கண்கள் கலங்கவும் துருவன் கேட்க, உனக்கு நிம்மதியா இருக்கும் துருவா. காதலை சொன்ன திருப்தி இப்பொழுதைக்கு போதாதா? தருண் கேட்க, சரிண்ணா. நான் கிளம்புகிறேன்.
டேய்..ஓடிப் போயிடு என்று கையிலிருந்த பவுச்சை தூக்கி துருவன் மேல் எறிந்தாள்.
அண்ணா…நாங்க தப்பித்தோம். என்ன புவி? துருவன் அவளை பார்க்க, அவள் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உனக்கு என்னாச்சு துருவா? இப்ப தான் ஜானு மேல கோபப்பட்ட. இப்ப நல்லா பேசுற? புவனா துருவனிடம் கேட்க, நேரமாகுது புவி என்று அவன் வெளியே சென்றான். தருணிற்கு தீனா போன் செய்ய..புவி இந்தா என்று போனை அவளிடம் கொடுத்து விட்டு தருண் செல்ல, அவனுடன் ஆதேஷூம் சென்றான்.
புவனா அருகே வந்து போனை பார்த்த ஜானு புவனாவிடமிருந்து வாங்கி, அண்ணா..துருவன் சரியில்லை அண்ணா என்று ஸ்கூலில் நடந்ததை சொல்ல ஆரம்பிக்க, ஜானு சொல்லாத..என்று புவனா போனை பிடுங்க..கால் வலி இப்ப தான் கொஞ்ச கொஞ்சமாக சரியாகிக் கொண்டு வந்திருக்கும். ஏய்..புவி என்று ஜானு கத்த.. அவள் விழ செல்ல கவின் அவளை பிடித்தான்.
புவனாவை நிமிர்த்தி போனுக்காகவா சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க? புவி இதுக்கெல்லாம் சண்டை போட மாட்டாளே? என்று போனை கொடு..என்று கவின் வாங்க,
ஜானு..புவிக்கு என்னாச்சு? தீனா கத்திக் கொண்டிருந்தார்.
சார், புவிக்கு ஒன்றும் ஆகலை. கீழ விழப் போனா..பிடிச்சிட்டேன். ஒன்றும் பிரச்சனையில்லை. நல்லா இருக்கா கவின் பேச, டேய்..நீ அங்க என்ன பண்ற?
நானா? நான் புவியை தான் பார்க்க வந்தேன்.
அவள எதுக்கு நீ பார்க்கணும்?
சார், பொறுமை. படிக்க நோட்ஸ் கொடுக்க தான் வந்தேன்.
அவ ஸ்கூல் படிக்கிறா? அவளுக்கென்ன நோட்ஸ். ஸ்கூல்லவே கொடுத்திருப்பாங்க.
புவி, நீ சாரிடம் சொல்லலையா? கவின் கேட்டான்.
போனை வாங்க புவனா, சார்..நீங்க தான் “டுவல்த் எக்சாம்” முடியவும் “நீட் எக்சாம்” எழுது பார்த்துக்கலாம்ன்னு சொன்னீங்க. கவின் அண்ணாவும் எழுத போறாங்க. அதான் அவங்க படிச்சதை கொடுக்க வந்தாங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை?
பிரச்சனை இல்லை புவி. திடீர்ன்னு வீட்டுக்கு வந்தானா?எதுக்குன்னு தான் கேட்டேன் என்று சமாளித்த தீனா..உனக்கு ஏதும் அடிபடலையே? கேட்டான்.
அண்ணா தான் விழாம பிடிச்சிட்டாங்களே? என்றாள். தீனா அமைதியாக இருந்தான்.
என்ன? சார் சத்தத்தையே காணோம். ஒன்றுமில்லை. துருவன் என்ன பண்றான்?
அவனா? அவனுக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி நடந்துக்கிறான். அண்ணாவும் ஆதேஷ் அண்ணாவும் சமாதானப்படுத்த போயிருக்காங்க..என்றாள்.
ஜானு போனை வாங்கி..காலை நடந்தது மொத்தத்தையும் கூறினாள். கவின் இதை கேட்டு, புவி இந்தா நானும் அவனை பார்த்துட்டு வாரேன் என்று வெளியே ஓடினான்.
துருவனிடம் தருண் பேசிக் கொண்டிருக்க கவின் அங்கே வந்தான். என்ன துருவா? காலையில ஸ்கூல்ல பசங்கள ஓட விட்டுட்ட போல என்று தருண் அருகே கவின் அமர்ந்தான்.
என்ன பேசுற? என்று தருண் கவினை முறைத்தான். நீங்க பேசிட்டீங்கன்னா..நான் துருவனிடம் பேசலாமா? கேட்டான் கவின்.
முறைக்காத தருண். தப்பா எதுவும் பேசலை. நீங்க கிளம்புங்க. நான் பேசணும் என்று அவர்களை அனுப்பினான் கவின். ஜானுவை அழைத்துக் கொண்டு ஆதேஷ் அப்பாவும் ஆதேஷூம் வீட்டிற்கு கிளம்பினர்.
கவினை பார்த்து விட்டு வேறு பக்கம் திரும்பி அமர்ந்தான் துருவன்.
நான் என்னடா பண்ணேன்? உன் அண்ணன் மேல இருக்கிற கோபத்தை என்னிடம் காட்டாத துருவா. இங்க பாரு என்று அவனை கவின் அவன் பக்கம் திருப்பினான்.
எனக்கு புரியுதுடா. ஸ்ரீ இல்லாமல் அவன் உன்னையும் அம்மாவையும் கவனிக்காம இருந்திருக்கலாம். அவன் ஸ்ரீயிடம் நடந்து கொண்டது உனக்கு அப்ப புரியாம இருக்கலாம். அவன் எப்பொழுதும் அவளை கஷ்டப்படுத்தி தான் இருந்தான். அவனுக்கு அந்நேரம் புரியலை. ஆனால் அவள் இல்லாததில் அவன் அவளை கஷ்டப்படுத்தியதை உணர்ந்தான். ஆனால் மன்னிப்பு கூட கேட்கவில்லை. அந்த நினைவிலே சுற்றி திரிந்ததில் உங்களை விட்டுட்டான்.
அவன் நிலையில் இருந்து பாரு துருவா..துளசி போனதில் உனக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கோ..அது போல தான் ஸ்ரீ போன பின் அகில் ரொம்ப கஷ்டப்பட்டான்.
அவன் தான் ஸ்ரீயை லவ் பண்ணலைல்ல?
ஆமாம் பண்ணலை. அதையும் அவன் உணரவில்லை. மீண்டும் அர்ஜூன் வந்த பின் இப்ப ஸ்ரீ நடவடிக்கை மாறி இருக்கு. நம்ம ஸ்ரீ மாதிரி இல்ல. ஸ்ரீ மீது காதல் இல்லை என்று இப்பொழுது தான் அகில் உணர்ந்தான்.
அப்படின்னா பவி?
எனக்கு சரியா தெரியலை. ஆனால் அவன் இப்ப தெளிவா இருக்கான் துருவா. இப்ப இருக்கிற எல்லார் பிரச்சனையும் அந்த கொலைகாரன் தான்.
எனக்கு அவன் இல்லை. என்னை சுற்றியுள்ளவர்கள் தான் துருவன் கோபமாக எழுந்தான்.
உனக்கு அகில் லவ் பண்றது பிடிக்கலையா? நீ பண்றேல துருவா? கவின் சொல்ல..துருவனுக்கு கோபம் ஏறியது.
துளசி என்ன பக்கத்திலா இருக்கா? கேட்டான்.
இல்லை துருவா. நீயே சொல்லு. அவள் உன்னிடம் காதலிப்பதாக சொன்னாலா?
ஆம் என்று தலையசைத்தான். நீ என்ன செஞ்ச?
நான் மறுத்தேன்.
எதுக்கு?
அம்மாவை பார்த்துக்கணுன்னு?
இது காரணமாடா? கவின் கேட்க, ஆமா..என்றான்.
துளசியை காதலிக்க தான போற. இதுல உன் அம்மா எங்க வந்தாங்க?
ஸ்கூல் தான் படிக்கிறீங்க? ஸ்கூல்ல பார்த்துக்கலாம். வீட்டுக்கு சேர்ந்து வரலாம். ஜானு, புவனாவுடன் சேர்ந்து படிக்கலாம். நீ இருக்கும் இடமெங்கும் அவளே வந்திருப்பாள். நீ..நீ..தானடா பிரச்சனை? நீ பயப்படுற? அவ செல்லமா வளர்ந்த புள்ள..எங்க நம்ம வீட்டுக்கு வந்தா அம்மாவை பார்த்துக்க மாட்டாளோன்னு பயப்படுற?
ஆமா அண்ணா, பயம் தான். நான் என்ன செய்வது?
எல்லாம் முடிந்து, என்ன செய்யன்னு கேட்கிற? என்ற கவின்..துளசியிடம் பேசி இருக்கலாம். துளசி உன் வயசு பொண்ணு தான. எல்லாத்தையும் வீட்ல பழகிக்கோ. அப்ப தான் அம்மாவுக்கு பிடிக்கும் என ஏதாவது பேசி அவளை சரி செய்திருக்கலாம். அதை விட்டு அவளிடம் உன் காதலை மறைத்து அவளும் கஷ்டப்பட்டு நீயும் கஷ்டப்பட்டு இது தேவையா? கவின் கேட்க, துருவன் கவினை கட்டிக் கொண்டு அழுதான். சத்தம் கேட்டு தருணும் புவனாவும் வெளியே ஓடி வந்தனர்.
டேய், என்னடா பண்ண? அழுறான் தருண் கவினை திட்டிக் கொண்டு வந்தான். அண்ணா..அவனிடம் என்ன சொன்னீங்க? புவனாவும் வந்தாள்.
ஷ்..என்ற கவின்..இப்ப நீ ஓ.கே வா? துருவனிடம் கேட்டான். அவனை விலக்கிய துருவன், என் மேல தான் தப்பு. நான் காதலை சொல்லி இருந்தால் துளசி போயிருக்க மாட்டா என்று மேலும் அழுதான்.
துரு..அவளுக்கு தெரியும் என்றாள் புவனா.
தெரியுமா? என்ன தெரியும் புவி? கண்ணை துடைத்து விட்டு புவனாவை பார்த்தான்.
நீ அவளை காதலிக்கிறன்னு தெரிஞ்சு தான் போயிருக்கா. ஆனால் நீ நேரடியா சொல்லி இருந்திருக்கலாம். இப்ப அதனால பிரச்சனை இல்லை. அவள் உன்னை பார்க்க வருவேன்னு சொல்லிட்டு தான் போயிருக்கா. கண்டிப்பா வருவா..
ஜானுவும் இதை தான் புவி சொன்னா..கண்டிப்பா வருவால்ல..கேட்டான்.
நீ எப்பொழுதும் போல் இரு. அவள் செல்லும் முன் வீட்ல எல்லார் முன்னும் உன்னோட அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி தான் வருவேன்னு சொன்னா. அவள் உன்னை விட்டு செல்ல நினைக்கலை. அவள் அவளை தயார்படுத்த போயிருக்கா. எப்ப வருவான்னு தெரியலைன்னாலும்.. கண்டிப்பா உன்னை தேடி வருவா. உன்னோட சேர்ந்து வாழ தான் அவளாக இந்த பிரிவை தேர்ந்தெடுத்தா. நீ அம்மாவையும் அண்ணாவையும் பார்த்துக்கோ என்றாள் புவி.
இல்ல புவி. இது தப்பு. அம்மாவை இவன் பார்த்துக்க முடியாது. அகில் பார்த்துப்பான் என்ற கவின்..துருவனிடம், துளசி சரியா தான் இருக்கா. உன்னோட அம்மாவை சரி செய். அன்று ஹாஸ்பிட்டல்ல உன்னை பார்க்க வந்தப்ப..ஒரு முறை அவளிடம் அம்மா பேசி இருக்கலாம். சண்டையும் கோபமும் தீர்வாகாது..என்ற கவின். நான் ஃபங்சனுக்கு போகணும். கிளம்புகிறேன் என்று சென்றான். துருவனும் வீட்டிற்கு சென்றான்.