வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-99
169
அத்தியாயம் 99
சரியான நேரத்துல வந்தீங்க பிரதர் என்று தேவ் வேலுவை பார்த்து சொல்ல, தலையசைத்தான் அவன். மற்றவர்கள் சண்டையிட..
ஆருத்ரா, நிவாஸ், சுவாதியின் தம்பி சுவாதியிடம் வந்தனர். முதலில் வந்த தம்பியை பார்த்து அஸ்வினி, இவ உனக்கு உயிரோட வேண்டாமா? என்று அவர்கள் குடித்து போட்ட மது மாட்டிலை உடைத்து சுவாதி கழுத்தில் வைத்தாள்.
நிவாஸ் மெதுவாக சுவாதி தம்பி கையை அழுத்த இருவரும் பார்த்துக் கொண்டு ஆருத்ராவை அஸ்வினி மீது தள்ளி விட அவளும் சேர்ந்து அவர்களுடன் விழுந்தாள். உடனே ஓடிய நிவாஸ், சுவாதி தம்பி..ஆருத்ரா, சுவாதியை தன் பக்கம் இழுத்துக் கொள்ள, அதற்குள் அதை சுவாதி கையில் குத்தினாள் அஸ்வினி. அவள் மயங்கி விழ,
ஏய்..சுவாதி என்று நிவாஸூம் ஆருத்ராவும் சத்தமிட்டனர். அக்கா..என்று சுவாதியை வைத்து அழுத அவள் தம்பி அஸ்வினியிடம் ஆக்ரோசமாக சென்று அவளிடம் சண்டை போட அவள் அங்கிருந்த சன்னல் வழியே தப்பித்து ஓடினாள். அந்நேரம் உள்ளே வந்த அபியும், சுவாதி பெற்றோரும் சுவாதியையும் மகனையும் பார்த்து விட்டு,
அவ எங்க? என்று அவர்கள் அப்பா சத்தமிட்டார்.
போய்..பாருங்க உங்க அருமை பொண்ண என்று சுவாதி தம்பி கத்தினான். நிவாஸ் சுவாதியை தூக்கிக் கொண்டு வெளியே வர..இரத்தம் வெளியேறிக் கொண்டே இருந்தது. தேவ் அவனிடம் வந்து சுவாதியை பார்த்து விட்டு, ஹாஸ்பிட்டலுக்கு போகணும் என்று அவளை நிவாஸிடமிருந்து வாங்கி ஓடினான் தேவ். பெற்றோர்கள் அவனை பார்த்து விட்டு அவன் பின்னே ஓடினர். கவின் காரை எடுக்க..தேவ் அவளுடன் காரில் ஏறினான். அவன் பின்னே சுவாதி தம்பி ஏறினான். அவள் பெற்றோர்களும் ஏற, அவர்களை ஏற்றி விட்டு கீழே இறங்கினான்.
சார்..முன்னாடி வாங்க என்று கவின் தேவ்வை ஏற்றிக் கொண்டு கிளம்பினான். ஹாஸ்பிட்டல் வந்து பார்த்தால் பக்கத்து ஊர்க்காரருக்கு டாக்டர்ஸ் சர்ஜரி செய்வதாக சொன்னார்கள். இரு மருத்துவர் அங்கிருக்க..கவினை பார்த்து அவனை அழைக்க..சார் டாக்டர் தான் என்று தேவ்வை காட்டினான் கவின். அவன் சுவாதியுடன் அவர்கள் காட்டிய அறைக்குள் சென்று..அவனாகவே சிகிச்சையை ஆரம்பித்தான். நர்ஸிடம் மருந்துகளை எடுத்து வரச் சொல்லி கட்டிட்டு மருந்தை செலுத்தி விட்டு அமர்ந்தான். அவனையே அங்கிருந்த மருத்துவர், செவிலியர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பரவாயில்லை. பதட்டத்திலும் சரியா செஞ்சுட்டீங்க என்று ஒருவர் பாராட்ட..சார் வெளிய சென்று பேசலாமே என்று அவர்களுடன் வெளியே வந்தான்.
உள்ளிருந்து செவிலியர் ஓடி வந்து சார்..இந்தாங்க குடிங்க என்று தேவ்விடம் தண்ணீரை நீட்ட, அவன் வாங்கி குடித்து விட்டு “தேங்க்ஸ்” என்றான்.
அக்காவுக்கு ஒன்றுமில்லையே அவள் தம்பி டாக்டரிடம் கேட்க, அவள் பெற்றோரும் வந்தனர்.
சார்..தான் பார்த்தார். அவரிடம் கேட்டுக்கோங்க என்று அவனிடம் தேவ்வை காட்ட..அவனிடம் சுவாதி தம்பி வர, அந்த செவிலியர், முகத்தில் அவ்வளவு பதட்டம் இருந்தாலும் கையில் சிறு நடுக்கம் கூட இல்லையே? எப்படி சார்? சொல்லுங்க?
தேவ்விற்கு சுவாதி கூறியது நினைவு வந்து, அவள் இருக்கும் அறையை பார்த்தான். பின் டாக்டர்ஸ் எந்த நிலையிலும் மனதை தளர விடக்கூடாது. மனசு ஸ்ட்ராங்கா இருந்தா..எதையும் நம்ம கட்டுப்படுத்தலாம். என் பதட்டம் சுவாதிக்கு ஏதும் ஆகக்கூடாது என்பது மட்டுமே. ஆனால் அவள் காயத்தை பார்த்ததும் நான் டாக்டராக என் வேலையை செவ்வனே செய்தேன். அவ்வளவு தான்.
பார்த்தேன். ஆனால் அதை விட மயங்கியது தான் எனக்கு பதட்டமாக இருந்தது. காயம் கண்ணில் படவும் என் வேலையாக தான் பார்த்தேன்.
அப்ப அதுக்கு முன்னாடி? கவின் கேட்க, கவின் அண்ணா..சும்மா இருங்க என்று சுவாதி தம்பி தேவ்விடம் வந்து, அக்காவுக்கு ஒன்றுமில்லையே?
கொஞ்சம் ஆழம் தான். பெயின் இருக்கும். மருந்து கொடுத்திருக்கு. ஆனால் ஏதும் ஆகாது. அவளால் அசைக்க முடியலைன்னா தான் பிரச்சனை. எழட்டும் பார்க்கலாம்.
எப்ப எழுந்திருப்பா?
அரை மணி நேரம் தான்.
“தேங்க்ஸ் சார்” என்று தம்பி அவனை நெருங்க தேவ் கையை நீட்டினான். ஆனால் அவன் அணைத்துக் கொண்டு ரொம்ப தேங்க்ஸ் சார்.
அப்புறம்..கொஞ்ச நேரம் அவள பார்த்துக்கோங்க.
நானா?
அண்ணா..சுவாதிக்கு? என்று ஆருத்ரா, நிவாஸ், அபி கேட்டனர். தம்பி அவர்களையும் பார்த்து எல்லாரும் இருங்க என்று அவன் பெற்றோரை பார்த்தான்.
என்ன? ஆருத்ரா கேட்டாள்.
அவன் அக்காவுக்கு காவலுக்கு எல்லாரும் இருக்கணுமாம் கவின் கூற, சார் மறந்துட்டேன் தீனா மாமாவை வரச் சொன்னேன். பார்த்துட்டு வந்துடுறேன்.
அவ வீட்டுக்கு போய் காசை சுருட்டுட்டி எப்பையோ எங்காவது போயிருப்பா? பார்க்க போறாங்களாம் என்றான் சுவாதி தம்பி சினமுடன். அவன் அம்மா அவனை அடித்தார்.
என்னை எதுக்கு அடிக்கிறீங்க? உங்க அருமை மகள் வந்தான்னா..நல்லா கறி விருந்து போட்டு உபச்சாரம் பண்ணுங்க. நானும் அக்காவும் இனி வரவே மாட்டோம் என்றான்.
ஏய்யா..அப்பாவ மறந்துட்ட?
உங்களுக்கு சுவாதிய பிடிக்கும். ஆனால் ஒருநாள் அவளுக்கு துணையா பேசி இருப்பீங்களா? உங்க அஸ்வினிய கட்டிக்கிட்டு அழுங்க. வருவா..உங்களிடம் இருக்கும் எல்லாத்தையும் புடுங்க..கொடுத்துட்டு அநாதையா நடுரோட்ல நில்லுங்க என்று ஆதங்கமுடன் கத்தினான்.
என்ன பேச்சு பேசுறடா? கவின் சத்தமிட, ஏண்ணா..உங்களுக்கு தெரியாத அவளால நானும், சுவாதியும் எவ்வளவு கஷ்டப்பட்டோம். இவங்க அவள் பக்கமிருந்து அவளுடன் சேர்ந்து கஷ்டப்படுத்த தான செஞ்சாங்க.
ஆமா. இதுக்கு மேல என் மவ கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாது. பாதுகாப்பான இடத்துக்கு மட்டும் கூட்டிட்டி போ.
வெளிய எங்க பாதுகாப்பு இருக்கு? தேவ் கேட்டான்.
ஏன் சார் இல்ல. நீங்க பாதுகாப்பான இடம் அவங்களுக்கு ஏற்பாடு செஞ்சு தாங்க என்றான் கவின்.
ஏற்பாடு செய்து கொடுத்திடலாம். ஆனால் இவங்க இருவருமே சின்ன பசங்க. வெளிய போவாங்க வருவாங்க. இதுல பாதுகாப்பு எப்படி இருக்கும்? நீ ஸ்கூல்லுக்கு போகணுமே? தேவ் சீனுவிடம் கேட்டான்.
உங்க ஊர்ல ஸ்கூல்லே இல்லையா?
இருக்குடா. ஆனால் பணம் அதிகம் செலவாகுமே? கவின் சொன்னான்.
நான் தாரேன் என்று அவன் அப்பா தேவ்விடம் அவனை நல்ல ஸ்கூல்ல அப்படியே சேர்த்து விடுறீங்களாப்பா?
சேர்க்கலாம். ஆனால் இவங்க பாதுகாப்பா இருக்க..என்று சிந்தித்தான்.
நீங்க எனக்கு மட்டும் பாருங்க. அக்கா அவங்க காலேஜ்லயே எப்பொழுதும் போல் இருக்கட்டும் என்றான் சீனு.
அது பாதுகாப்பு இல்லை என்று தேவ் அமர்ந்தான்.
சார்..நீங்க புரபஸ்னல் தான? மருத்துவர் ஒருவர் அவன் அருகே வந்து அமர்ந்தார்.
ம்ம்.
சென்னையா?
ம்ம்.
எங்க ஒர்க் பண்றீங்க?
நான் ஆருத்ரா ஹாஸ்பிட்டல்.
சுவாதி பெற்றோரும், சீனுவும் அவனை பார்க்க, ஆருத்ரா தேவ்வை பற்றி கூறினாள்.
அவரை பார்த்து புன்னகைத்து, நீ இப்பவே கிளம்ப முடியாது. சுவாதிக்கு கையில பெயின் இருக்கும் என்றான்.
அக்கா..இங்க இருக்க வேண்டாம். நான் எங்களுடைய பொருட்களை எடுத்து வாரேன். ஆனால் சார் நீங்க..உங்கள பத்தி எதுவுமே சொல்லலை.
அதான் இப்ப தெரிஞ்சிடுச்சுல்ல.
தேவ் பெரிய இடத்து பையனா இருப்பான்னு இவர்கள் நினைக்கலை. இவரிடம் உதவி கேட்டால் தவறாகி விடும் என்று நினைத்து, நான் என் அக்காவை பார்த்துப்பேன். தங்கும் ஏற்பாட்டை நானே அங்கே சென்ற பின் பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டு நிற்காமல் ஓடினான்.
என்னாச்சு இவனுக்கு? இப்ப தான இவனுக்கு மட்டும் தங்க இடம் பார்க்க சொன்னான் தேவ் கேட்டான்.
சார்..நீங்க டாக்டர்ன்னு மட்டும் தான சொன்னீங்க. இப்ப நீங்க வசதியானவங்கன்னு தெரிஞ்சு உதவி கேட்டால் தவறாக இருக்கும்ன்னு தான் அந்த பையன் நானே பார்த்துக்கிறேன்னு சொல்றான்னு செவிலியர் கூறினார்.
தேவ் புன்னகையுடன் சின்ன பையனா இருந்தாலும் ரொம்ப யோசிக்கிறானே? என்றான்.
ஆமாப்பா. அவன் நினைப்பது தவறில்லையே. பொட்ட பிள்ளைய வச்சுக்கிட்டு..என்று சுவாதி அப்பா தயங்கினார்.
நான் என்ன உங்க பொண்ணை எங்க வீட்லயா தங்க வைக்கப் போறேன்?
அண்ணா..இந்த ஐடியா கூட நல்லா இருக்கே என்றாள் ஆருத்ரா.
ஆரு சும்மா இரு. எல்லாரும் கிளம்புங்க. நான் பார்த்துக்கிறேன் என்றான் தேவ்.
ஆமா..நிவி நாம வந்து ரொம்ப நேரமாகுது அர்ஜூன் தேடப் போறான் என்று அபி திரும்பி பார்க்க, வேலுவும் நண்பர்களும் அங்கு இல்லை. அண்ணா..எங்கடா போனாங்க?
நாம இருக்கோம்ன்னு மறை அண்ணாவுக்காக மண்டபத்துக்கு கிளம்பிட்டாங்க என்றான் கவின். வாங்க நாமும் போகலாம் என்று அவர்கள் கிளம்பினார்கள்.
தேவ் வாஷ்ரூம் சென்று முகம் கழுவி விட்டு வந்தான். செவிலியர் வெளியே வந்து அந்த பொண்ணு முழிச்சிட்டாங்க என்றாள்.
அவள் பெற்றோரும், தேவ்வும் உள்ளே வந்தனர். சுவாதி அழுது கொண்டிருந்தாள். அவள் அப்பா அவளிடம் வர, அதற்குள் அவள் அம்மா இடையே நுழைந்து உன்னால பாரு அஸ்வினி போலீஸ்கிட்ட மாட்டிக்கப் போறா..என்று அவளை அடிக்க வந்தார். அவர் கையை தள்ளி விட்டு, வெளிய போங்கன்னு கத்தினான் தேவ்.
நான் எதுக்கு போகணும்? அவ என்னோட பொண்ணு?
பொண்ணா? அவ அழுறா? இப்ப கூட அந்த கேடுகட்டவளை பத்தி பேசுறீங்க? சத்தமிட்டான்.
என் பிள்ளையை என்னடா சொன்ன? தேவ்வை அடிக்க கையை ஓங்கினார். செவிலியர் நகர்ந்து கொள்ள சுவாதி அப்பா..அவரை பிடித்து தள்ளி விட்டு..உன் பிள்ளையால தான் என் புள்ளைங்க கஷ்டப்படுறாங்க? நீ பார்த்துப்பன்னு தான் உன்னை கல்யாணம் செய்து அஸ்வினிய ஏத்துக்கிட்டேன்.
இத்தனை நாள் பொறுமையா இருந்தேன். இதுக்கு மேல் முடியாது. நீங்க எக்கேடும் கெட்டு போங்க என்று கத்தினார்.
அப்பா..என்ன சொன்னீங்க? என்று நிமிர்ந்து அமர்ந்து சுவாதி கேட்டாள்.
அவர் அழுது கொண்டு..உன்னோட அம்மா இவள் இல்லைடா. சீனு பிறந்தவுடனே அவள் நம்மை தனியா விட்டுட்டு போயிட்டா. உன்னையும் அவனையும் கவனித்துக் கொள்ள முடியாமல் சிரமப்பட்டேன். நாம ஏற்காட்டில் தான் இருந்தோம். அங்கு தான் இவளை பார்த்தேன். அவளும் குட்டிப்பொண்ணா..அஸ்வினிய தனியா வச்சு கஷ்டப்பட்டா. உங்கள பார்த்துக்க தான் கல்யாணம் செய்து கொண்டோம். அவள் அதுக்கு பதில் வீட்டை அவள் பெயருக்கு மாற்ற சொன்னாள். ஆனால் அங்கிருந்து வரணும்ன்னு அவள் தான் இந்த ஊரையே செலக்ட் பண்ணா. அங்கிருந்த வீட்டை விற்று இங்கு வீடு வாங்கினோம். மீதி பணத்தை அஸ்வினி பேருக்கு போட சொன்னாள்.
எனக்கு நீங்க பாதுகாப்பா இருக்கணும்ன்னு தான் ஒத்துக் கொண்டேன். நீங்க வளர வளர தான் அவள் சித்தி குணத்தை காட்ட ஆரம்பித்தாள். அதிலிருந்து வீட்டு செலவை தவிர எதற்கும் பணம் நான் கொடுக்கலை. அந்த கோபத்தையும் உங்களிடம் காட்டினாள். நீங்க சிறுசா இருந்தப்ப இவ தான பார்த்துக்கிட்டா..அதனால் வெளிய அனுப்ப முடியலை. ஆனால் இப்ப ரொம்ப எல்லைய மீறீட்டாங்க. இதுக்கு மேல வேண்டாம்மா..சீனு உங்க பொருட்களை எடுக்கப் போயிருக்கான். அவன் வந்தவுடன் கிளம்பிடுங்க.
அப்பா..என்று சுவாதி அழுது கொண்டு, நீங்களும் வந்துருங்க.
இல்லம்மா. என்னால இப்ப முடியாது. பார்த்துட்டு சொல்றேன்ம்மா.
கதவை திறந்து சீனு பையுடன் வந்தான்.
உனக்கு கை ரொம்ப வலிக்குதா? கேட்டான் தேவ். அவனை பார்த்து..வலி இருக்கு சார். ஆனால் ரொம்பலாம் இல்லை என்றாள்.
ஆமாக்கா. எனக்கு எப்பொழுதோ தெரியும். தெரிந்த அன்றே பக்கத்து ஊர் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சென்று நான் நேரம் கழித்து வீட்டிற்கு வருவேன். இரண்டு வருசமா நான் சேர்த்து வச்ச பணத்தை கொண்டு வந்துருக்கேன்.
ஏய்..என்னை மீறி போயிடுவீங்களா? அந்த பொம்பளை சத்தமிட..
அவங்க இனி சென்னையில தான் இருக்கப்போறாங்க? தேவ் கூறினான்.
எதுக்கு? இவள வீட்டுக்கு கூட்டிட்டு போய் வச்சுக்கப் போறியா?
வச்சுக்கலை என்று அவளை பார்த்து விட்டு அவளருகே வந்து, அவளை கட்டிக்கப் போறேன் என்றான் தேவ்.
அனைவரும் அதிர்ந்து பார்க்க, சார்..நீங்க என்ன சொன்னீங்க?
உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னேன்.
சார்..என்றாள்.
உனக்கு விருப்பமிருந்தால்..என்று அவன் கூற, நீ சரின்னு சொல்லிடுவியாடி என்று அந்த பொம்பளை கத்தினாள்.
அக்காவுக்கு இவரை பிடித்திருந்தால் நானும் இவரை மாமாவாக ஏத்துப்பேன் என்றான் சீனு. அவள் அப்பா தேவ்வை பார்த்தார்.
என்னடா சொன்ன? என்று சீனுவை அடிக்க வந்தாள். எழுந்து வந்த தேவ் அவளது கையை பிடித்து, அங்கிள் கொடுத்ததை நீங்களே வச்சுக்கோங்க. நீ இவங்க யாருக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுவாதி அப்பாவை பார்த்து..இருவரும் எப்படி பார்க்க ஒரே மாதிரி இருக்காங்க. அதை கேட்டால் தான் சொல்ல மாட்டிக்கிறாங்க என்றார்.
அந்த பொம்பளையை நெருங்கிய தேவ்..சொல்றீங்களா? இல்லை நீங்களும் உங்க பொண்ணு மாதிரி உள்ள போகணுமா? என்று மிரட்டினான்.
சொல்றேன். பக்கத்து ஊர்ல ஒருவன் நிறைய முகமூடிகளை செய்து கொண்டிருந்தான். தோலுக்கும், முகமூடிக்கும் வித்தியாசமே தெரியாது. அதுக்காக தான் இந்த ஊரை செலக்ட் பண்ணேன் என்றாள்.
அப்படின்னா. அது வெறும் முகமூடி தானா? என்று சிரித்தான்.
பின் செவிலியரை பார்த்து கண்ணசைக்க..அவர் சுவாதியை படுக்க சொல்லி திரையிட்டு ஊசி போட்டார். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சீனுவை பார்த்து, மாலையில் கிளம்பலாம். உங்க அப்பாவுடன் நீங்க பாதுகாப்பாக இருக்க நான் ஏற்பாடு செய்கிறேன். நீ படிக்க ஸ்கூல் அரேஜ் பண்ணி தாரேன்.
சார், எனக்கு அந்த முகமூடி பத்தி தெரியும்? இனி அதை உற்பத்தி செய்ய முடியாது. அதை தயாரித்தவனை தீனா சாரும் போலீஸாரும் கொன்னுட்டாங்க என்று செவிலியர் கூற, நல்ல விசயம் சொல்லி இருக்கீங்க என்று ஆயிரம் ரூபாயை அவரிடம் நீட்டினான்.
தேங்க்ஸ் சார். நீங்க இந்த பொம்பளைய பத்தி தீனா சாரிடம் சொல்லுங்க. அவர் பார்த்துப்பார். உங்களுக்கு எதுக்கு வீண் கஷ்டம் என்றாள் செவிலியர்.
உங்களிடம் நம்பர் இருக்கா?
என்னிடமே இருக்கு என்று சீனு சுவாதி போனை எடுத்து கொடுத்தான்.
தம்பி..விட்டுருப்பா. இனி இவங்கள தொந்தரவு செய்ய மாட்டோம். நாங்க ஏற்காட்டுக்கே போயிடுறோம் என்றார்.
கிளம்புங்க என்றான். சார்..என்று செவிலியர் பதறினார். தேவ் கண்ணை மூடி திறந்தான்.
வெளியே சென்றவுடேனேயே தீனாவிற்கு போன் செய்து பேசினான். அவள் இன்னும் பிடிபடவில்லை என்று தெரிந்தது.
போனை அணைத்து விட்டு அவன் அவள் அப்பாவை பார்த்தான்.
தம்பி..நீங்க உண்மையாக தான் சொன்னீங்களா?
எனக்கு சுவாதியை பிடிச்சிருக்கு. அதான் கேட்டேன்.
அவளை பார்த்துக் கொண்டே உடனே பதில் சொல்ல வேண்டாம். நேரம் எடுத்து பதில் சொல்லுங்க.
தம்பி, உங்க அப்பா ஒத்துப்பாறா?
நானும் ஆருவும் நினைச்சதை முடிச்சு பழக்கமானவங்க. அவ காதலை அப்பா ஏத்துக்கிட்டாரு. நானும் பேசிப்பேன். எனக்கு சுவாதியின் விருப்பம் தான் முக்கியம் என்றான். செவிலியர், சீனு, அப்பா அவளை பார்த்தனர்.
சார்..எனக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியலை.
அதான் நேரம் எடுத்துக்கோன்னு சொன்னேன். ஒன்ஸ் சொன்னா மாத்த கூடாது என்றான். அவள் தலையை ஆட்டினாள்.
மாலை கிளம்பலாம். நீங்க தங்க ஏற்பாடு செய்கிறேன் என்றான்.
சார், நான் மத்த பேசண்டை பார்க்கப் போகிறேன்னு செவிலியர் கிளம்பினார். மூவரும் அமர்ந்தனர்.
அவள எதுப்பா போக விட்டீங்க? அஸ்வினியை பிடிக்க தான்.
பிடிக்கவா? அவங்கள போலீஸ் ஆட்கள் பாலோ பண்றாங்க. பிடிச்சிடுவாங்கன்னு நினைக்கிறேன் என்று போனை எடுத்து கால் பண்ணீங்களா? எங்க இருக்கீங்கன்னு பேசினான். பின் கையை தலைக்கு பின் கட்டி சோம்பல் முறைந்து வாகாக சாய்ந்து கண்ணை மூடினான். மூவரும் அவனையே பார்க்க, கண்ணை திறந்து என்னாச்சு? கேட்டான்.
ஒண்ணுமில்லை என்றான் சீனு. சுவாதியின் கையை பார்த்து விட்டு மீண்டும் சாய்ந்து கண்ணை மூடினான்.
மண்டபத்தில் அர்ஜூனும் ஸ்ரீயும் பதட்டமுடன் இருந்தனர். நிவி பிரச்சனையில் இருப்பானோ? அவன் யோசனையோடு இருக்க, அர்ஜூன்..என்று தாரிகா அவனை தட்டினாள். அவனை மணமக்களுக்கு இடையே அமர வைத்தனர். அவனுக்கு போன் வந்தது. அவன் போனை வாங்கிய தாரிகா..எடுத்தாள்.
ஓ.கே சீனியர்.
யாருக்கும் ஏதும் ஆகலை. சுவாதி கையில் தான் கத்தி பட்டதாம். அஸ்வினி தப்பிச்சுட்டாளாம். தீனா சாரும் அவங்க ஆட்களும் தேடுறாங்களாம். இப்ப நிம்மதியாடா?
அப்பாடா..என்று மூச்சை இழுத்து விட்டான். காயத்ரி அவன் தலையில் தட்டினாள். அக்கா..நீங்க ரொம்ப அழகாவேயில்லை என்று கேலி செய்தான்.
தம்பி..இங்க கவனிங்க என்றார் ஐயர். அவன் எழவும், பெரியத்தை அமர்ந்தார். அவர் எழுந்தவுடன் கவின், அபி அம்மாக்கள் தாலியை கோர்த்தனர். வேலுவும் அவன் நண்பர்களும் வந்தனர்.
மேளம் ஒலிக்க மாலையை மாற்றி காயத்ரி கழுத்தில் தாலி கட்டினான் மறை. பின் அவன் மெட்டி அணிவிக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி. பின் இருவரும் கை பிடித்து அக்னியை வலம் வந்தனர். கல்யாணம் முடிய அனைவரும் வாழ்த்தை கூறி புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.
சாப்பிட்டு முடித்து அனைவரும் அமர்ந்திருக்க, வந்தாள் பர்வத பாட்டியின் பேத்தி தியா.
மறை மாலையை வேலுவிடம் கொடுத்து விட்டு பசங்க பொண்ணுங்களுடன் எடுத்துக் கொண்டு வைக்க அனைவரும் தியாவை முறைத்துக் கொண்டிருந்தனர். பின் காயத்ரியை பார்த்தனர். செம்ம கோபத்துல இருக்கான்னு அவளை பார்த்தாலே தெரிந்தது.
பாட்டி வீட்டுக்கு போ. நாங்க சாப்பிட்டு வந்துடுறோம். ஏய், வா.. காரை எடு என்று மறையிடம் கூற அவன் நகர, அவன் கையை பிடித்து நிறுத்தி எழுந்தாள் காயத்ரி.
உனக்கு என்னம்மா வேணும்?
எனக்கு நீ தான் வேண்டும். உனக்கு அவர் என்ன வேலைக்காரனாடி? ஒழுங்கா இதுகள கூட்டிட்டி கிளம்பிடு.
டியா? என்னையா டி சொன்ன?
ஆமாடி என்று காயத்ரி அவளிடம் எகிற, எம்மா வேண்டாம்மா..எல்லாரும் பாக்குறாங்க மறை சொல்ல, ம்ம் அக்கா சூப்பர் என்று விசிலடித்தான் அர்ஜூன்.
மறையை பார்த்து அவனுடன் கை கோர்த்து, அவர் என்னோட புருசன். நீ எதுக்கு வேலை சொல்ற? ஏன் இவனுக அவங்க பொருளை கூட தூக்க மாட்டாங்களா? எருமை மாதிரி வளர்ந்திருக்கீங்க. தூக்க முடியாதா? என்று அவர்களருகே சென்று,
மண்டைய பாரு பரங்கிக்கா தலையா? தூக்குடா என்றாள்.
வாட்?
“கெட் யுவர் லக்கேஜ் அண்டு கோ தர்” என்றாள்.
வாவ்..சூப்பரா இங்கிலீஸ் பேசுற? அந்த பையன் காயத்ரியிடம் வந்தான்.
நான் சொன்னதை செய்டா. எடுத்துட்டு வெளிய போடா என்றாள்.
டா வா?
விடுடா. அழகான பொண்ணு சொன்னா நல்லா தான் இருக்கு.
இருக்குமே சார். நல்லா தான் இருக்கும் என்று மறை காயத்ரி கையை பிடித்தான்.
இந்த நாட்டுக்கட்டானுக்கு இங்கிலீஸ் பேசுற வொய்ஃபா? தியா கேட்க, “கெட் அவுட் ஆல் ஆஃப் யூ” என்று கத்தினாள் காயத்ரி.
இங்கிருந்து போம்மா. அவள பத்தி உங்களுக்கு தெரியாது..போங்க என்றார் வினிதா அப்பா.
ஆமா..உண்மைய சொன்னா கோபம் வருதோ இவளுக்கு?
காயத்ரி தியாவிடம் வந்து, இதுவரை அவருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரே மாதத்தில் அவரை உன் முன்னாடி இங்கிலீஸ் பேச வக்கிறேன்டி என்றாள்.
அவனுக்கு ஏ,பி, சி, டி யே தெரியாது. இவன் பேசுவானாம் தியா சொல்ல..காயூம்மா வேண்டாம் என்று மறை காயத்ரியிடம் வந்தான். அவள் அவனை முறைக்க..மறை அமைதியானான்.
ஆமா..நானும் என் மச்சானை பேச வக்கிறேன்னு வேலு வர, நானும் மாமாவுக்கு உதவுவேன் அர்ஜூனும் வந்து நிற்க, எனக்கு மேல பேசுறானுகளே என்று காயத்ரி மறையை பார்த்தாள். அவன் பாவமாக நின்றான்.
அவனிடம் சென்று அவன் கையை பிடித்து தியா முன் வந்து, யாரையும் பார்த்து எடை போடாதே?
ஆமா..பார்க்காமல் தான புருசன் செத்து ரெண்டாவது நாளே கல்யாணம் பண்ணி இருக்க. அப்படி வேணும்ன்னா எத்தனையோ பேர் இருக்காங்க உனக்கு ஏற்றவர்களாக. காயத்ரி கண்கள் கலங்கியது. மறை சினத்துடன் தியாவிடம் வர, காயத்ரி அவன் கையை எடுத்தாள். மறை அவன் கையை இறுக்கமாக பிடித்து முன்னேற, அதற்குள் பாட்டி தியாவை அறைந்தார்.
அந்த பொண்ண என்னடி சொன்ன? நீ பசங்களோட வந்துருக்க. அவ பேச எவ்வளவு நேரமாகும்? உன்னால தான் என்னை பார்த்து எல்லாரும் சிரியா சிரிக்கிறாங்க. உன்னை பார்த்தாலே அருவருப்பா இருக்கு.
நீ யார் கூடனாலும் சுத்து. வீட்ல காலை எடுத்து வச்ச வெட்டிருவேன். பார்த்துக்கோ. நீ என்னோட பேத்தியே இல்லை. என்னோட புருசன் போன புறவு பிள்ளைக்காக தான் இருந்தேன். அவனும் போன புறவு உனக்காக தான் உசுற கையில பிடிச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா நீ ஆம்பள பசங்களோட சேர்ந்து ஊர் சுத்தி, ச்சை..என்ன வேலையெல்லாம் பாக்குறியோ? அருவருப்பா இருக்கு. நீ பேசாத அந்த புள்ளைய பத்தி. அவ புருசனோட தினமும் போராடிக்கிட்டு இருந்திருக்கா. உன்னால ஒரு நாள் அவ வாழ்க்கைய வாழ முடியுமா? போயிரு. நான் தனியாவே இருந்து செத்து போரேன் என்று அழுதார்.
ஏய் கிழவி, என்ன பேசுற? இத்தன பேர் இருக்கோம்? உன்னை விட்டுருவோமா? என்று சத்யா கேட்டான்.
இங்க பாருடி. வீட்டுக்குள்ள நீ வரணும்ன்னா..இந்த பயலை கல்யாணம் பண்ணிக்கணும் என்று சத்யாவை காட்டினார் பாட்டி. சொத்த இந்த பையன் பேருல தான் மாத்த போரேன் என்றது.
பாட்டி, யாரோ ஒருவனுக்கு சொத்தை கொடுக்கப் போறேன்னு சொல்ற? உன்னால எப்படி என்னிடம் இப்படி பேச முடியுது?
இந்த மாதிரி பேசி தான என்னை ஏமாத்துற? இதுக்கு மேல ஏமாத்த முடியாது. இவனை கட்டிக்கிட்டு வீட்டுக்கு வா. ஆனால் வேற எந்த பசங்களுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது. நம்ம ஊரை விட்டு போகக்கூடாது முடியாதுன்னா..அப்படியே போயிடு. உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கத்த..
ஓ..இவனை கட்டி வைக்க தான் பேசாம இருந்தீயா? நீ என்ன சொன்னாலும் இந்த மாதிரி ஒன்றுமில்லாதவனை கட்டிக்க முடியாது. மூஞ்சியப் பாரு. இவனை நான் கட்டிக்கணுமா? எனக்கு கொஞ்சமாவது என் பக்கம் நிற்க அருகதை இருக்கா? கேட்க, அவனுக்கு கோபம் வந்தது.
என்ன அருகதை வேணும்? நீ பசங்களோட சுத்துற அதுமாதிரி பொண்ணுங்களோட சுத்தணுமா? இல்லை முடிக்கணுமா? கேட்டான் சத்யா.
டேய்.. அமைதியா இரு வேலு அவனிடம் வந்தான்.
அமைதியாவா? இவ பேச்சுக்கு எப்படி அமைதியா இருக்குறது? என்னை என்ன மறைன்னு நினைச்சியா? அமைதியா சரி சரின்னு சொல்ல..என்று பாட்டியை பார்த்து,
கிழவி..உன்னோட பேத்தி ரொம்ப பேசுறா?
என்னோட பேச்சையே அவ மதிக்கல. நீ என்ன பேசினாலும் நான் அமைதியா தான் இருப்பேன் என்றார்.
பார்த்தேல..உன்னோட பாட்டி என்ன சொல்லுது?
பேசலாமா? இந்த வாய வச்சிக்கிட்டு தான எல்லாரையும் கஷ்டப்படுத்துற மாதிரி பேசுற? என்று தியாவை இழுத்து முத்தமிட்டான்.
பொறுக்கி விடுடா என்று அவனை தள்ளினாள். வேலுவும் இப்பொழுது தடுக்கலை.
என்னை தொட உனக்கென்ன தைரியம்? என்று அடிக்க கையை ஓங்கினாள். அவள் கையை பிடித்து அவன் பக்கம் இழுத்த சத்யா..அவள் இடையில் கையை வைத்து அழுத்தி, நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கணும். உனக்கு எவ்வளவு திமிரு? உன்னோட பாட்டி உசுற விட உனக்கு சொத்து முக்கியமா? கிழவி உனக்காக செஞ்சதெல்லாம் மறந்துட்டு பேசுற? என்று கழுத்தை பிடித்தான். பாட்டி பயந்தாலும் அவள் பேசியதை நினைவுக்கு கொண்டு வந்து அமைதியாக இருந்தார்.
ராஜ்..என்று உடன் வந்தவனை அழைத்தாள். அவனை முறைத்தான் சத்யா.
தியூ..நீ ஏதோ சொத்தை பாட்டி உனக்கே கொடுத்திருவார்ன்னு சொன்ன? அதை வித்துட்டு கிளப் ஆரம்பிக்கலாம்ன்னு சொன்ன? இவன் யாரு? காட்டுமிராண்டி போல என்று அவன் கூற, சத்யா அவளையும் அழைத்துக் கொண்டு அவனருகே வந்து..
அது எப்படி சொத்த வித்து கிழவிய அம்போன்னு விட்டு இவனோட ஓடிப் போய்..கிளப் ஆரம்பிப்பீங்களா? யார் சொத்தை யாருடி விக்கிறது? இனி எல்லாமே என்னுடையது உன்னையும் சேர்த்து.
சரி உனக்காக ஒன்று செய்யலாம். உன் கையில் எதுவுமே இல்லாமல் உன்னை விடுகிறேன். இவன் எவனாது கல்யாணம் பண்ணிப்பானான்னு கேளு? என்று சத்யா அவளை விடுவிக்க..
ராஜ் என்று அவனிடம் வந்தாள் தியா. பாட்டி பயத்துடன் பார்த்தார்.
வா..தியா போகலாம். பாட்டி சொத்து பேத்திக்கு தான்னு நாம கோர்ட்டுக்கு போவோம்.
போகலாமே? நானும் உங்களுடன் வாரேன். கிழவி போகலாமா? என்ற சத்யா, நான் படிக்கலை. ஆனால் சட்டமும் தெரியும். ஊர் உலகத்தை பற்றியும் தெரியும்.
பாட்டியே என் பெயரில் சொத்தை எழுதி வைத்தால் உன்னால் மட்டுமல்ல எவனாலும் ஏதும் செய்ய முடியாது என்றான்.
அந்த ராஜ் தியா கையை விட்டான். ராஜ் என்று அவள் அழைக்க..போடி எதுவுமே இல்லாம உன்னை வித்தா கூட எனக்கு தேவையான பணம் கிடைக்காது என்றான். சத்யா கையை கட்டிக் கொண்டு தியாவை பார்த்தான்.
முகேஷ்..ப்ளீஸ்டா.
சாரிம்மா. உன்னோட பழகுறதுக்கு அம்மா ஏற்கனவே என்னை திட்டிக்கிட்டு இருக்காங்க என்றான் முகேஷ்.
அவள் பொண்ணுங்களை பார்க்க, எதுவுமே இல்லாம எப்படி வாழப் போறாளோ தியா? இவளே பட்டிக்காடு. இவளுக்கு மேல இருக்கான் இவன். இருவரும் தான் சரியான பொருத்தம் என்று அவளை மேலும் பேசினார்கள். மற்றவர்கள் கிளம்பியே விட்டார்கள். தியா மண்டையை பிடித்துக் கொண்டு கத்தினாள்.
அவளுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சுடி என்று அவள் உயிர்த்தோழிகளே சொல்ல, இல்ல ஜீவி நான் நல்லா தான் இருக்கேன். அவனை விடு. நாம போகலாமா? தியா கேட்க,
ச்சீ..கையை தொடாதேடி. உனக்கு ஏதோ நிறைய சொத்துபத்துகள் இருக்குன்னு சொன்ன. நடிச்சே ஏமாத்தி இருக்க. ஏமாத்துக்காரி. இனி அந்த பக்கம் வந்த எல்லா புகைப்படமும் என்னிடம் தான் இருக்கு. எல்லாத்தையும் லீக் பண்ணிடுவேன். என்னை பத்தி உனக்கு தெரியும்ல என்றாள் ஜீவி.
ஜீவி..நான் பணம் வச்சிருக்கேன்.
அப்படியா? எவ்வளவு வச்சிருக்க? உன்னிடம் வேலை பார்த்து சம்பாதித்த பணம் கூட இல்லை என்று முகேஷை பார்த்தாள். அவன் தோளை குலுக்கினான்.
அவள் ஹேண்ட் பேக்கை எடுத்து அவள் பேங்கில் செக் செய்தாள். அதில் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது.
என்னடா பண்ணீங்க? என்று முகேஷ் சட்டையை பிடித்து உலுக்கினாள்.
ச்சீ..போடி என்று அவன் தியாவை தள்ளி விட சத்யா அவளை பிடித்தான். அவனை பார்த்து அவனை தள்ளி விட்ட தியா, என்னோட பணத்தை கொடுடா என்று கோபமாக முகேஷை பிடித்து தள்ளினாள்.
அப்படியா?…தியா செல்லம். உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்காம். உன்னோட தோழிகளே உன்னை ஹாஸ்பிட்டல்ல சேர்க்க சொல்றாங்க. போகலாமா? சத்யா கிண்டலாக கேட்டான். அவள் அழுது கொண்டே அவனிடம் வந்து, நீ தான் எல்லாத்துக்குமே காரணம் என்று அடித்தாள்.
பாட்டி அமைதியா இருங்க மறை அவரிடம் வந்து, ஏற்கனவே இதயம் பலவீனமா இருக்கு. இதுக்கு தான் முதல்லயே ஆப்ரேசன் பண்ணிக்க சொன்னேன். பேத்தி..பேத்தின்னு உசுறயே அவ மேல வச்ச. அவ பாரு கண்டவனிடம் ஏமாந்து நிக்கிறா. இதுல அவளுக்கு அவங்க தான் வாழ்க்கையாம்.
ஏம்மா..எல்லாரும் கிளம்புங்க. ஏய்..நீயும் போயிரு. உன்னால என் ப்ரெண்டோட வாழ்க்கையை பாழாக்க முடியாது என்று சொன்ன மறை…எல்லாரும் கேட்டுக்கோங்க. என் பொண்டாட்டியோட பழைய வாழ்க்கையை பத்தி யாராவது பேசுனீங்க. அவங்க உயிர் உடம்புல இருக்காது. அவளுக்கு புருசன்னா அது நான் மட்டும் தான் என்று சன்னலோரம் இருந்த கத்தியை எடுத்து வீசினான். அது நேராக தியா முன்னிருந்த கதவில் பட்டு கீழே விழுந்தது. அவள் பயந்து விலக அவள் தோழி ஜீவியை இடித்து நின்றாள்.
ச்சீ..என்னை தொடாதே என்று தியாவை கீழே தள்ளி விட்டாள் அவள்.
ம்ம்,..இப்ப சொல்லு. என்ன பண்ணப் போற? சத்யா கேட்டான்.
நான்..என்று கண்ணீருடன் சத்யா அருகே வந்து நின்றாள். என் முடிவுக்காக உன்னை ஏற்றுக் கொண்டதாக இல்லை. எனக்கு பிடிக்கலைன்னா உன்னை விட்டு போயிருவேன் என்றாள் தியா.
ம்ம்..இது போதுமே? ஆனால் சொத்து என் பெயரில் தான் இருக்கும். அதை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். எனக்கு பொண்டாட்டியாக தான் நீ நடந்துக்கணும். வீட்டு வேலையெல்லாம் பார்க்கணும். முக்கியமாக என் குடும்பத்தில் யாரிடமும் திமிறாக இருக்கக்கூடாது என்றான்.
எனக்கு வேலை பார்க்கவே தெரியாது.
அதான் எல்லாருக்கும் தெரியுமே? கத்துக்கோ. நீ செய்ற சாப்பாட்டை தான் நான் சாப்பிடுவேன். அதுக்காக பழி வாங்க நினைக்காதே! நீயும் அதை தான் சாப்பிடணும் என்றான். சரி என்று தலையாட்டினாள்.
ஏய்..கிழவி உன்னோட பேத்தி ஒத்துக்கிட்டா..கல்யாண தேதியை பாருங்க. நாளைக்கு நீ ஆப்ரேசன் பண்ண போகணும்? வேலு நிலத்தை விற்க ஏற்பாடு செய்டா. பாதி பணம் ஆப்ரேசனுக்கு வரும். மீதிய வச்சு ஏதாவது கடை நடத்தலாம். நானும் நிலம் வாங்கி இருக்கேன். அங்கேயே கூட கடையை ஆரம்பிக்கலாம்.
கிழவி, அம்மா ஓ.கே தான? என்று அவன் அம்மாவை பார்த்தான். பாட்டி புன்னகைத்தார். ஏதாவது செஞ்சு தொலை என்று அவன் அம்மா செல்ல, தியா சத்யாவை பார்த்தாள். தியா நண்பர்கள் கிளம்பினார்கள்.
அம்மாவுக்கு உன்னை பிடிக்காது. முடிஞ்சா பிடிக்க வை. நீயே அதை பார்த்துக் கொள் என்றான். அனைவரும் அமர்ந்தனர். ஊரார் ஒவ்வொருவராக வெளியேற, என்னடா சரவணா..நீ வீட்ல உன்னோட ஆளை பற்றி சொல்லலாம்ல? அர்ஜூன் பாட்டி கேட்க, நீங்க வேற அவளே ஓ.கே சொல்லமாட்டேங்கிறா..என்று அவன் புலம்பினான்.
தியா..இங்க வா என்று சத்யா அவள் கையை பிடித்து சாப்பிட அழைத்தான். அவள் தட்டி விட்டு அவன் பின்னே சென்றாள்.